தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

2 posters

Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 31, 2013 8:17 pm

1.   திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்காக ரா. மகாலட்சுமி அவர்கள்  வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் செய்து முடித்துள்ளார். வித்யாசாகர் அவர்களிடம் பெறப்பட்ட நேர்காணல் இது.


இன்றைய குடும்ப அமைப்புகளில் பெருகிவரும் பிரச்சினைகள் குறித்து தங்கள் 
கருத்து? தீர்வு எதுவாக இருக்க முடியும்?
வீட்டுக்கூரையில் பற்றியுள்ள சிறு தீக் குறித்து வருந்துவதன்றி வேறென்ன செய்ய. எனினும் அதில் நீரூற்றி அணைக்கும் வித்தைஎனில் அது அன்பு ஒன்றே. அன்பைப் பகிர்தல் என்பது குடும்பத்தின் ஒற்றுமைக்கான ஒட்டுதலுக்கான உயிர்நாடி போன்றது. அன்பு இல்லாத வறண்ட இல்லங்களே வெடித்துப் போகிறது. அன்பு இருப்பின் அக்கறைக் கூடும், அக்கறைக் கூடின் பரிவு பாசம் வெளிப்படும், பரிவின்பால் பரஸ்பர நெருக்கம் கூடும் நெருக்கத்தின் பொருட்டு விரிசல் குறையும். அன்பொன்றே குடும்பத்தின் உயிர்நாடி. அன்பிருக்கும் வீட்டின் பிரச்சனைகள் நீற்குமிழிகளைப் போல வரும் வேகத்திலேயே இருக்கும் இடமறியாது போய்விடுகிறது. அங்கே புரிதல் மிகுதியாகவும், சில இடங்களில் புரிதலே இன்றி கண்மூடிக் கொள்ளவும், மன்னிக்கவும் விட்டுத் தரவும் அன்பு வழியை சமைத்துத் தருகிறது. குறிப்பாக அன்புள்ள வீடுகளில் எழும் பிரச்சனைகள்  தெருவிற்கு வருவதில்லை..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty Re: வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 31, 2013 8:23 pm

சமுதாய வளர்ச்சியில் முதியோர் இல்லங்கள் பெருக்கம் என்பது நன்மையா? தீமையா? முதியவர்கள் இன்று நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகக் கருதுகிறீர்களா?

காவல்துறை பெருகுவதன் மறைமுக அர்த்தம் திருடர்கள் கூடுகிறார்கள் என்பதல்லவா? பின் முதியோர் இல்லங்கள் கூடுகிறது என்றாலும் நன்றிகெட்டவர்கள் நாம் பெருகிப் போகிறோம் என்பது தானே அர்த்தம்? நம் தலைக்கு நாமே இடும் கொல்லி எப்படி நன்மையில் சேரும் ? பெற்றோர் பிள்ளைகளை காப்பது எப்படிக் கடமையோ அப்படி பிள்ளைகள் பெற்றோரைக் காப்பதும் தாழாதொரு மனிதத்தின் உச்சபட்ச உதாரணம் தானே? 

எனை வளர்த்த கைகளுக்கு நாம் போடும் சோறுமட்டுமே நாளை நமக்கும் கிடைக்கும் என்பதை மறந்தோர் செயலே முதியோரில்லத்தில் தன் பெற்றோரை விடும் செயலுமென்பதை நாம் புரிதல் வேண்டும்.

பொதுவில், முதியோர் இல்லங்கள் பெருகிவருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று சமுதாயம் குறித்த பொதுநல அக்கறை பரவலாக அதிகப் பேருக்கு வந்துள்ளது;

இரண்டு, குடும்பம் பற்றிய புரிந்துணர்வு வெகுவாகக் குறைந்துப் போகிறது. உண்மையில் நமது வாழ்க்கைமுறையை நாமே வெகுவேகமாக மாற்றிக்கொண்டு நம் கண்ணில் நம் கைவைத்தே குத்திக்கொள்ளும் ஒரு குரூரம்தான் தனைப் பெற்றுவளர்த்த அம்மாவையும் அப்பாவையும் தனித்து எங்கோ ஒரு காட்டில் விடுவதற்குச் சமமாய் வேறொரு வீட்டில் விடுவதும்.

சிந்தித்துப் பாருங்கள்; இன்று அது அவருக்கான இல்லம் அனுசரணை தர மறுத்து வெறும் பெருகும்கருனையைக் காட்ட அனாதை இல்லம் கட்டிக் கொடுக்கிறோம், நாளை அது நமக்கானதாக மாறுகையில், நம் கண்களில் குத்தும் கை நமதாகத் தானே இருக்கிறது?

அதின்றி, முதியோர் இல்லத்தில் அடைபட்டுக் கிடப்பதை அத்தனை நிம்மதி என்று சொல்வதற்கில்லை. சற்று தூரம் கடந்து நம் வீட்டை விட்டு அடுத்தத் தெருவில் ஒரு வாரம் போய் நம்மால் தங்கியிருக்க முடியுமா? நிம்மதி என்பது நம் வீடு. நம் வீட்டில் எனது தோட்டத்தில் அசையும் இலைகளும், எனது வீட்டில் கேட்கும் பால்காரனின் குரலும், வாசலில் வந்துவிழும் தினசரியும் தன் பிள்ளைகள் தனக்குப் போடும் ஒரு உண்டைச் சோறும் தான் நிம்மதி. 

பசியை நிறுத்த
எரியும் வயிறு சில்லிட
ஒரு குவளை மோரோ அல்லது கையளவு சோறோ போதும்தான், அதில் அன்பின்றி அது கடமைக்காய் கொடுக்கப்ப்படுமெனில் பின்பு வாழ்வதன் அவசியம் தானென்ன? அதைக் காட்டிலும் மரணம் பெரிய ருசியன்றோ(?)!!

பேருக்குவேண்டுமெனில் சொல்லலாம்; முதியோர் இல்லங்கள் அங்கு வருவோரை நன்றாகப் பார்த்துக்கொள்வதாகவும், நேரத்திற்குச் சோறு தருவதாகவும், சுகாதாரம் காப்பதாகவும் நிறையச் சொல்லலாம், ஆனால் அவைகளால் காக்கப்படும் உடம்பினைக்கொல்லும் பிரிவின் வேதனையை யாரால் தீர்க்கமுடியும்..? பெற்ற பிள்ளைகள் தாராத அன்பைக் காட்டிலும் கொல்லும் தனிமை கொடிதில்லையா? 

தான் பெற்ற பிள்ளையோடுச் சேர்த்து வேறொன்றும் பிறந்துவிட்டால் என்ன  செய்திருப்போம் நாம், இரட்டைப் பிறப்பென்றுக் கொண்டாடியிருக்கமாட்டோமா? அதைவிடுத்து கழுத்தை நெரித்தா கொன்றுபோட்டிருப்போம்? அப்படி யொரு குழந்தையைப் போலெண்ணி பெற்றோரையும் காத்துக் கொள்வது பிள்ளைகளின் கடமை என்பதைப் புரியச் செய்ய; புரிதலோடு பேசி, பேச்சின் நடுவே அன்பு காட்டி, பரிவோடு, அக்கறையோடு, பாசத்தோடுப் பழகும் குணத்தையும் சிறுவயதிலிருந்தே குழந்தைகளிடத்தில் ஏற்படுத்துவதன் மூலம்; வளர வளர அவர்கள் வைத்திருக்கும் தனது பெறோரின் மீதான அன்பினைக் கொண்டு நாளைய முதியோர் இல்லங்களை வெகுவாகக் குறைத்துவிடலாம். அதுமட்டில் ஆதரவற்றிருக்கும் பெரியோரைக் காக்க பொது அக்கறைக் கொள்ளும் நல்லுள்ளங்கள் மதிக்கத் தக்கவர்கள் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty Re: வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 31, 2013 8:23 pm

3. மனித நேயம் இன்று வளர்ந்துள்ளதா? குறைந்து வருகின்றதா? மனித நேயத்தின் தேவை என்ன?
மனிதநேயம் பொதுவாக வளர்ந்துள்ளது, என்றாலும் மனிதநேயத்தின் மகத்துவம் புரிந்தோர் குறைந்துப்போயுள்ளனர் என்பதும் உண்மை. மனிதநேயம் என்பது கையில் அடிபட்டதும் உடுத்திய சேலை கிழித்து கட்டிவிடுவதல்ல; இது பேசினால் இவருக்கு வலிக்குமென்றுப் புரிவது, இது செய்தால் அங்கே உயிர்கள் மடியுமோ என்று அஞ்சுவது, எதன் பொருட்டு எவ்வுயிரையும்  வருத்தாது காப்போமோயென அனைவரின் நன்மையினைக் குறித்தும் சிந்திப்பதும் பின் அதன்வழி நடத்தலுமே மனிதநேயம்.

ஒரு பூனைக்கு ஒரு மீன் கிடைத்தால் அது மீனை உயிர்போக அடித்தோ அல்லது தலைகிள்ளியோ தின்னும். அது அதன் இயல்பு. மனிதனுக்குக் கிடைத்தால் அதன் துள்ளலை ரசிப்பான், வண்ணம் கண்டு வர்ணிப்பான், நீந்துவதைப் பார்த்து கப்பல் செய்வான், மேலும் அதன் நன்மைக் கருதியே தனது வாழ்வை அமைப்பான். சற்று அதன் தோள் அறுபட்டாலோ துடுப்புகள் ஓடிந்துவிட்டாலோ ஐயோ பாவமென்று வருந்துவான். வருந்துவதே மனிதநேயம். பிறர்சார்ந்து சிந்தித்தலும், பிறரின் நன்மை குறித்து தனது வாழ்க்கைதனைக் கட்டமைத்துக் கொள்பவனுமே மனிதனுமாவான்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty Re: வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 31, 2013 8:24 pm

4. அஃறிணையின்பால் நேயம் கொள்வதின் நோக்கம் என்ன? 
நம் வாழ்க்கை என்பது ஒரு சங்கிலிக்குள் முடையப்பட்ட ஒன்று. அதில் ஒரு முடுச்சி அவிழ்ந்துவிட்டாலும் வாழ்தலின் திசைமாறிப் போகும் சாத்தியங்கள் அதிகமாக உண்டு. அப்படி பல இடங்களில் நாம் திசைமாறிப் போனதன் காரணம் தான் இன்று மனிதனை மனிதன் மறித்தப் பிறகும், எரித்தும்கூட எடுத்துத் தின்னப் பழகிப்போயிருக்கிறோம். உண்மையில் மனிதனால் காக்கப்படவேண்டிய உயிர்களே மனிதனால் கொல்லப்படுவதென்பது கொடுந்துயரம்; பெருந்தவறினில் ஒன்றில்லையா.. ?

சாமிக்குச் செய்யும் பூஜையைவிட குழந்தைக்கு ஊட்டும் சோறு முக்கியம் என்பாள் அம்மா. எனில் குழந்தை வேறு தனைக் காத்துக்கொள்ள இயலாது நம்மால் மடியும் விலங்கினம் வேறா? விலங்குகள் காக்கப்டுமெனில் இயற்கைச் சிதைவு குறையும், இயற்கைச் சிதைவு குறையுமெனில் இயற்கையினால் ஏற்படும் சீர்கேடுகளும் பெரும்பாலும் நீங்கும். பின், இயற்கையை காத்தல் வேண்டும் எனில்; இயற்கைச் சீற்றத்தைக் குறைக்க மனிதர் விலங்குகளைக் காத்தலும் கடமையில்லையா ? 

உண்மையில் எனக்கு வலிப்பதுண்டு. வலிப்பதையே எழுதுவது என் வழக்கம். அங்ஙனம் எனக்கு இலை பறிக்கையில் வலித்ததையும் மலர் கொய்கையில் நொந்ததையுமே இதுவரை எழுதியுள்ளேன். உண்மையில் விலங்கினம் குறித்த அக்கறையும் மனிதர்க்கு வேண்டும். மனிதம் இருப்பதன் வெளிப்பாடு பிறஉயிர்களினிடத்துச் செய்யும் அன்பும் எல்லோரிடத்தும் இயன்றவரை சமமாகக் காட்டும் பரிவுமாகும்..

கூடுதலாக, ஒரு பொருளை அழிப்பது என்பது எளிது. உருவாக்குவதென்பதே கடினம் என்பது புரிகையில் அனைத்தின் மீதான அக்கறையும் அனைத்துயிரின் மீதான நேசமும் எல்லோரின் மீதும் தானாகவே யெழும். எழுதல் அவசியம்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty Re: வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 31, 2013 8:25 pm

5. இயற்கை சார்ந்த தங்களின் அழகுணர்வு குறித்துச் சொல்லுங்களேன்?

இயற்கையில் எது அழகில்லை? பார்க்கும் பார்வைச் சற்று நகர்தலில் மாறுபடுகையில் அழகும் அசிங்கமும் வெவ்வேறு இடத்துள் அங்கம் வகித்துவிடுகிறது என்பது உண்மை என்றாலும் கூட, கொட்டும் மழையும், கூடும் பறவைகளும், நகரும் மேகக் கூட்டமும், நெற்றியில் சுழலாத பொட்டினைப்போல வட்டமாய் நகரும் நிலவும், காற்று தடவத் தடவ இலைகளோடு அசையும் விலகும் இருட்டும், கண்கூச மூடும் விரல்களின் இடுக்கில் தெரியும் காலை மஞ்சள் வெய்யிலின் கதிரும், காற்றாட ஆட ஆடும் மரங்களும், பேசும் மலர்க் கூட்டமும், வாசம் நோக்கிவரும் மனிதரும், விலங்கினமும், குழந்தையும், குமரியும், வயோதிகரும், மின்னலும், மின்னும் வானமும், வானத்தின் கீழ்வந்து முட்டும் கடலும், கரைமோதும்  அலைகளும், அலையிநூடாக கரைவந்து மணல்புகும் கிளிஞ்சளும், மீண்டும்; மீன்களோடு இன்னொரு உலகமாக நீருக்குள் வாழும் எண்ணற்ற உயிர்களும், செடிகளும், மரமும், மீசையும், முதலில் விழும் நரையும், விவேகப் பார்வையும், பளிச்சிடும் கண்களும், செவ்விதழும், பாதி சிரிக்க உதிரும்  மெல்லியப் புன்னகையும், சிணுங்கும் மனைவியும், சிங்கார வீட்டுத் தோட்டத்தின் நடுக் கிணறும், நதியும், அருவியும்.., வயல்வெளிகளும்.. ஆஹா; அஹா; எது அழகில்லை? எல்லாவற்றையும் பாட வார்த்தைகளெங்கே வார்த்தைகளெங்கே..(?) இயற்கையை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. வார்தையினைத் தேடினால் கடலலையும் கடக்கும் காலத்தையும் தாண்டும்..

என்றாலும், அதற்கு நாம் நட்ட நவீனப் பற்கள் தான் நம்மை அவ்வப்பொழுது கடித்தும் குதறியும் மென்றும் துப்புகிறதேயொழிய இயற்கை இயல்பில் எரிமலையாகக் கண்டாலும் அழகுதான்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty Re: வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 31, 2013 8:26 pm

6. காதலில் கொலைகள், தற்கொலைகள் குறித்த தங்களின் சமுதாயப் பார்வை என்ன?

காதலில் கொலைக்குக் காரணம் நீங்களும் நானுமான இச்சமூகமே. காதல் என்பது இரு உயிர்களின் இதயமுடுச்சி. அதை அவிழ்ப்பது மரணமகவே இருக்கும். இது புரிகையில் காதலிப்போருக்கும் காதலைத் தடுப்போருக்குமான எச்சரிக்கையுணர்வு தானாக வலுக்கும்..

காதலித்தலை கடைப் பொருளாக்கிய ஊடகம், ஊடகத்தை ஊறு மறந்து வீட்டிற்குள் வரவழைத்துக்கொண்ட நம் வீடுகள், நேரம் மறந்து அதில் கிறங்க வீட்டில் இடமளித்தப் பெற்றோர், வீடுகளில் சக உறவின் தன்மையைப் புரிந்துக்கொள்ளாத, புரிந்துணர்வை அதிகப் படுத்தும் வாழ்வமைப்பை வைத்துக்கொள்ளாது வளர்ந்தப் பிள்ளைகளென நம் அனைவரின் ஒட்டுமொத்த அசாதாரனங்களும், வெகுவேக நாகரீக மாற்றமும், அதிசுலபமாக அல்லது மலிவாகப் பகிர்ந்துக்கொண்ட உணர்வுகளின் கட்டுப்பாடற்றத் தன்மையும், முழுமை ஏற்படாதத் தருணத்துப் புரிதல்களும், அவைகளை எளிதாக இடம் மாற்றித் தந்த தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பமுமென நமது மொத்தப் பங்கும் காதல் கொலைகளுக்குக் காரணம். 

அது மாறவேண்டுமெனில் முதலில் நாம் நம் முகங்களில் பூசிக்கொள்ள விரும்பும் வெட்டி கௌரவத்தை கைவிடவேண்டும். ‘வாழ்தல் சுலபமானது சுகமானது பிறருக்காகவும் வாழ்க்கையில்’ என்பதை எல்லோரும் புரிந்துக் கொண்டால் தனக்கான ஆடம்பர உணர்வு அல்லது அந்த மிகைப் படுத்திக் கொளல் விட்டுப் போகும். மிகைப் படுத்திக் கொள்ளாது இருப்பதில் இன்பம் வருமென்று அறிய முடியுமின் தனக்கானது தனக்குக் கிடைத்தால் போதுமென்று எண்ணம் வரும். தனக்கானது போதும் எனில் தன் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் கூட அவர்களுக்கானவைகளாக இருப்பதையே மனசும் விரும்பும்.. 

இப்போது காதலை எதிர்ப்பது எது பெற்றோரின் மனசா? இல்லையே, ஐயோ பிறர் என்ன எண்ணுவார்களோ, ஊரெப்படிப் பேசுமோ எனும் பயம் தானே? பெற்றப் பிள்ளையின் ஆசையில் மரணத்தை பரிசாக இடவோ ஏமாற்றத்தை எரியும் மனதுள் நிரைக்கவோ எவருக்கிங்கே விருப்பம்? எல்லாமே அக்கம்பக்கம் குறித்தும் பார்ப்போர் பேசுவதற்கு அஞ்சியும் தானே நடக்கிறது நம் மண்ணில். அவைகளை களையவேண்டும் எனில் தனக்காக முதலில் தான் வாழப் பழக வேண்டும். பழக்கத்தை குழந்தையிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். நல்லதை இப்படி வளையாது நிற்கும் சமூகத்தின் முதுகில் வைத்து இனிப் பயனில்லை. வளரும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது ஒன்றே வழி. 

குறிப்பாக காதல் பொருத்தவரை அது ஈர்ப்பு சார்ந்தது, மனதின் நெருக்கத்தைக் கொண்டது, ஏக்கத்தை ஏற்படுத்தும், எளிதில் கட்டுப்படுத்திக் கொள்ளவோ மறந்துவிடவோ இயலாது, வலி மிகுந்தது, நிதானமாகச் சிந்தித்து புரிதலை ஏற்படுத்திக் கொள்ளும் மனங்களுக்கு ஒத்தது, விட்டுக் கொடுத்தல்’ பழியேற்றல்’ பிறரை வருத்துதல் தனைத் தானே விட்டொழித்தல் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் கொண்டது என்பதை நாம் குழந்தைகளுக்கு புரியுமாறே வளர்த்தல் வேண்டும். 

அதன் மேலும் ஏற்படும் காதலின் சிக்கல்களை எடுத்துச் சொல்லலாம், எதையும் ஏற்கத் தயாரெனில் ஏற்றுக் கொள்ளலாம், எதுவாயினும் இது அவர்கள் சம்மந்தப் பட்ட வாழ்க்கை, எனதோ எனது ஊர்குறித்தோ மானம் குறித்தோ பாதிக்கத் தக்கது அல்ல, பார்த்துப் பார்த்து வளர்த்தக் குழந்தையை தானே கொள்ளல் தீது, தன் பிள்ளையை தானே வருத்துதல் பாவம், தெரிந்தே உயிர்களைப் பிரித்தல் சாபத்தையடையுமென பெரியோர் அறியத் துவங்கிவிட்டால், அடுத்தத் தலைமுறைக்கு காதல் எதுவாக இருக்கிறதோ அதுவாகப் புரியவும் துவங்கும். வாழமுடியுமெனில் வாழவும் வழியில்லா பட்சத்தில் மறுக்கவுமான மனதின் கதவுகள் இளைஞர்களுக்கானதாகவே திறக்கும்.  அப்படித் திறக்கும் கதவுகளிலிருந்து வெளிப்படும் இளைஞர்களுக்கு காதலும் காதலின் அவசியமும் காதலின் சாசுவதமும் புரியும், காதல் மனதுள் எளிதாக எரியும் தீயென்றும் இயற்கையாக அரும்பும் உணர்வென்றும் புரியப் புரிய மறுப்பு குறையும். மறுப்பு குறைய குறைய அன்பு அதுவாகப் பெருகும், அன்பு நிறையுமிடத்தில் மனிதம் நிலைக்கும், மனிதம் நிலைக்க நிலைக்க ஜாதிகளின் மதங்களின் அவசியம் கூட எதுவரைத் தேவையென்றும் புரிந்துப் போகும் புரிதலில் தான் மரணம் மாயும், தற்கொலை தடைபடும், சாவும் வாழ்வும் காதலால் காதலுக்குப் பின்னேயே யாக மாறும்.. மாறனும்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty Re: வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 31, 2013 8:28 pm

8. காதலில் விட்டுக்கொடுத்துவிட்டு பிரிவதும் பின்னர் வருந்தவதும் ஏற்புடையதா? 
ஏற்க இலகுவானதல்ல. விட்டுக்கொடுப்பது என்பது அப்போதைய சூழலில் ஏற்படும் புரிந்துணர்விற்கு ஏற்ப தனது ஆசைகளை எதிர்பார்ப்புக்களை கனவுகளை விட்டுதறிவிடுவது. பின்னர் காதலை எண்ணி வருந்துவது என்பது இயல்பிற்குட்பட்டது. அடிபட்டாலென்ன அல்லது தானே அடித்துக் கொண்டாலென்ன வலிகொண்ட மனசு வருந்தத் தானே செய்யும்..?

ஆனால் இதற்கொரு பொதுத் தீர்வினை நல்லதொரு நட்பு நிறையும் சூழலாலோ அல்லது  மனதைப் புரிந்து நமை நல்வழிப்படுத்தும் குடும்பத்து உறவுகலாளோ தர இயலும். 

முதலில் எந்த நமது காரியத்திலும் உள்ளடக்கமாக உள்ள காரணிகளைப் புரிந்து அதன் விரிவுத் தன்மைகளை ஆராயவேண்டும். ஒரு செயல் மனதைப் பாதிக்கிறது எனில் ஏன் எப்படி எதனால் எனும் ம்ப்ப்லாதரக் கேள்விகளைத் தொடுத்து பதில்கள் நியாயத்தின் புறம் இருக்கையில் பிறகு வருத்தப்படுவது தவறென உணர்கையில் வருத்தம் தானே விலக வாய்ப்புள்ளது. 

ஆயினும், குறிப்பாக, காதல் போன்ற விவகாரங்களில் இந்த விட்டுக்கொடுத்தல் என்பது ஒரு கழிவிரக்கத்தின் முதலெழுத்தாகவும் இருப்பதை இளைஞர்கள் தவிர்க்கவேண்டும். கல்லூரியின் வாசலில் தாடியோடு வரவும், காதல் தோல்வியில் எழுதப்படும் கவிதைகளை மெச்சுவதாலும் அதன் நீட்சியை விரும்பும் மனசு காதலின் எதிர்கால வலி தெரியாமல் போலித்தனமான விட்டுக்கொடுத்தல்களுக்கு ஆட்பட்டு விடுகிறது. ஏதோ நானும் காதலிக்கிறேன் என்று காதலிப்பதும், பின் வீட்டிற்காக விட்டுக்கொடுத்து மகாத்மா ஆவதுமென இதில் கழிவிரக்க வகைகள்  நீள்கின்றன. 

முதலில் விட்டுக்கொடுத்தல் என்பது புரிய காதல் புரியவேண்டும். காதலின் ஆக்கப்பூர்வமான வலிமையினை எடுத்துரைக்கும் பாங்கில் பெற்றோரின் அரவணைப்பு எடுத்துரைப்பு என எல்லாம் சரிவர இருக்கவேண்டும். அதையெல்லாம் மீறி காதலில் விட்டுக்கொடுப்பதும் நேரும் எனில்; வருத்தமும் இருக்கத் தான் செய்யும். சாதாரண சதைகளாலான வலிக்கும் மனசுதான் காதளுள் புதைந்துப் போகிறது; பிறகேன் வலிக்கும் மனதைக் கேள்விகளால் துளைப்பானேன், ஆதரவாய் கரம் நீட்டுவோம்’ இளைஞர்களின் வலிமையால் வாழ்வின் துயரங்களை எளிதில் போக்குவோம்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty Re: வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 31, 2013 8:31 pm

9. சாதியை இன்றைய அரசியல் கட்சிகள் வளர்தெடுப்பதாகத் தோன்றுகிறது… சாதியின் நன்மை, தீமை என்ன?
சாதியின் நன்மை என்று பெரிதாக சொல்வதற்கில்லை. இந்தத் தொழிலைச் சார்ந்தவர் இவரென்பதைத் தான் இந்தச் சாதி குறிப்பிட முற்படுகிறது எனில், அதாவது இவர் இந்த வகையினர், இவரை இங்ஙனம் அணுகலாம், இவர்கள் வாழ்க்கைமுறை பெசுமுறை நடத்தைகள் இங்ஙனம் அவர்களின் வழக்கம் சார்ந்து தொழில்முறை சார்ந்து இருக்கும் என்பதைத் தான் சாதி குறிக்குமெனில், அது மீண்டும் பின்னாளில் அவரவர் திறமைக்கொப்ப மற்றும் வாழ்வாதார மாற்றத்திற்கிணங்க மாறியும் போகுமெனில் அதில் ஒருவரைப் புரிந்து அவரின் நன்மைக்கு ஏற்பவோ அதோடு அவரின் மனம் கோணாது அவருடன் புழங்கவோ மட்டும் இந்தப் பிரிவுமுறை அதாவது ஜாதிமுறை உதவலாம். 

மற்றபடி, இதன் புரிந்துணர்வைக் கூட சரிவர கொள்ளாது, மாட்டுத் தொட்டியில் புண்ணாக்கை வைத்தாலும் ஓடி, கழிவுநீரை கொட்டினாலும் ஓடி எது நமக்குக் கொடுக்கப் படுகிறதேன்றே தெளிவுகொள்ள இயலாமல் முண்டியடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டுப் போகும் கால்நடைகளைப் போல நடந்துக் கொண்டு, தொட்டிக்கு அருகே சென்றதுமே, ச்சே இவண் வேறென்னவோ கொடுத்துள்ளானே என்று மூக்கைக் கூட நுழைக்காமல் வந்தவேகத்திலேயே தூரம் விலகி நிற்கும் மாடுகளுக்கு இணைத்த திறன் கூட இல்லாது அரசியல்வாதி கைகாட்டும் இடமெல்லாம் விழுந்து வீணாய்ப் போகும் பள்ளங்களாகவே ஜாதி இருப்பதும். நம் கண்களை தனது வெட்டி கௌரவம் கொண்டு மூட சாதிகளைப் பயன்படுத்திக் கொள்வதும், ஒரு இயலாமைக் கடந்து எங்களால் இனைந்து அனுசரித்து வாழ்ந்துக்கொள்ள முடியும் என்று கெஞ்சும் மனங்களைக் கூட சாதிக் கத்தி வைத்து அறுப்பதும், எல்லாவற்றிற்கும் மேலாக, அன்று இந்த சாதி எனில் அவர் இதைச் செய்பவராகத் தான் இருந்தார், அன்று மனிதரை கீழுள்ளோர் மேலுல்லோர் என்று மனிதம் மழுங்கி கத்தி கொண்டு அறுத்து வைத்திருந்தோம் மனிதர்களை, இன்று அதையெல்லாம் கடந்துவிட்டோம், இன்று சாதி வெறும் சொல்லிக்கொள்ளவும், மறக்கையில் நினைவுபடுத்திக் கொள்ளவுமே இருக்கிறது. பின்னர் அதைக் கொண்டு நம்மால் மனங்களையோ மனிதர்களையோ துளைக்க முடியுமெனில் சாதியை தொலைத்துவிட்டுப் போ; அது ஒரு வெறி, அதொரு கண்மூடித் தனம். 

குலமறிந்து பிச்சையெடு; கோத்திரமறிந்துப் பெண் கட்டு” என்பார்கள் அதை நான் ஏற்கிறேன். எனக்கு கடவுளில் பாகுபாடில்லை. கடவுள் பற்றிய எல்லாம் தேடலும் ஒரேயிடத்திற்கான பாதைகள் தான். ஆனால் என்னைப் போல் என் குடும்பமோ எனது சுற்றமோ இந்த உலகோ முற்றிலுமாய் அந்நேர மாற்றத்தை ஏற்றோ மாற்றத்தின் அவசியத்தைப் புரிந்தோ இருப்பதில் யார் மனமும் நோகாது இன்பமடையத் தயாராகயில்லை. இன்றைய வாழ்க்கை முறையில் மகிழ்ச்சி என்பதே உறவுகளின் கூடல் தான், உறவுகளின் அரவணைப்பு, அவர்களின் ஆம் இல்லை தான். ஆக அந்த உறவுகளின் கூடு இருக்கிறதில்லையா அதில் மகிழ்ச்சி என்பதே மிக சாதாரண சின்ன சின்ன விஷயங்களாகவேயுள்ளன. உன்னைப் பார்த்து அழகு என்பதும், எனக்கு உன்னை மிகப் பிடிக்கும் என்பது, உனக்காக வாங்கினேன் என்பது உனக்காக வாழ்கிறேன் என்பதும், ஆக கூட்டாகப் பகிர்ந்து புரிந்து விட்டுக்கொடுத்து விட்டு விலகி வாழ்வதில் ஒரு ஒற்றுமை ஏற்பட்டு விடுகிறது. அன்பு மனதிற்குள் ஆழமாக முளைவிட்டுப் பதிகிறது. அப்படி இங்குமங்குமாய் விட்டுக்கொடுத்து இணங்கி நெருங்கியிருக்க அந்த பிடித்தல்கள், எதிர்பார்ப்புகள், நாக்கு ருசி, உடுத்தும் முறை, புழங்கும் வகை கொஞ்சமேனும் ஒத்துப் போக வேண்டியுள்ளது. எங்கனா வெளிநாட்டிற்கு போறோம், ஒரு இந்தியனைக் கண்டால், ஒ என் நாட்டுக் காரனென்று எண்ணவில்லையா ? ஒரு அவசர வேலை சம்மந்தமாக வடநாட்டிற்குச் செல்கிறோம், அங்கு பேசும் மொழி புரியவில்லை, வாழும் முறையில் ஏற்பில்லை, உண்ணும உணவில் உடன்படவே முடியவில்லை அப்போது அங்கே நம் முறைகளோடு வாழுமொரு தமிழரைக் கண்டால் ஒரு பெருமூச்சு வெளிவருகிறது இல்லையா அப்படி, என் ஊரில் இருந்து அடுத்த ஊர் செல்கையில் அங்கே தன்னுடைய ஊர் காறனைக் கண்டதும் கைகுலுக்கும் மனதின் சந்தோசத்தைப் போல, ஒரு எங்கோ பிறக்கும் இருவர் சேர்ந்து வாழ இணை பொருத்தம் பார்க்கையில் பார்க்கலாம், இவர் எந்த வழிபாட்டினைக் கொண்டவர், எந்த வாழ்க்கைமுறையக் கொண்டவர், எந்த மொழியைச் சார்ந்தவர் என்று சிலதை வாழ்க்கைக்கு உதவுமெனில் பார்க்கலாம். அதுபோல் உன்னுகையில் பார்க்கலாம்; எது நமக்குப் பொருந்தும் வெறும் தேங்காய் போட்டால் பிடிக்குமா? அல்லது மிளகாய் மட்டும் வைத்து அரைத்தால் ஆச்சா? எண்ணெயில் கடுகெண்ணெய் ஊற்றி சமைத்தால் உள்ளிறங்குமா? இறங்காதெனில் இதுபோன்ற உண்ணுமிடத்தில் வகைகளைப் பார்க்கலாம். 

குலமறிந்து பிச்சையெடு; கோத்திரமறிந்துப் பெண் கட்டு” என்பதை நான் இந்தளவில் போதுமானதகப் பார்க்கிறேன். அந்தளவில் மட்டுமே அந்தக் கருத்தோடு ஒத்துப் போகிறேன். அதே நேரம் நாளை என் மகன் வந்து ‘அப்பா நான் ஒரு இஸ்லாமியப் பெண்ணை விரும்புகிறேன், அவள் அரபு மொழியைச் சார்ந்தவள், வேறு நாட்டுப் பெண், ஆனால் புரிந்து வாழ்வோம், இங்ஙனம் எங்கள் வாழ்க்கையை நலமாக அமைத்துக் கொள்வோம். இதனால் எதிர்காலத்தில் எங்கள் குடும்பம் தளர்ந்துப் போகாது நம்பிக்கையோடு கைகோர்கிறோம் என்று சொல்வானெனில்; அதில் இடைமறித்து நெஞ்சு நிமிர்தவும் எனக்கு எந்த சாதி வெறியும் அவசியமும் கூட இல்லை. 

எனது அண்ணன் காதலித்தார், திருமணம் செய்து வைத்தோம், எனது இரண்டு தம்பிகள் காதலித்தனர் வீட்டார் பேசி நாங்களே திருமணம் செய்து வைத்தோம், இதுவரை எங்களுக்கு எங்களின் வீட்டு குலவிலக்குகள் பிறந்த சாதி என்னவென்று சரிவரத் தெரியாது. காரணம் அது கேட்கும் பொருளாக எங்களுக்கு மத்தியில் இல்லை. 

ஆக, இப்படியொரு வெகு சாதாரண புரிந்துணர்வைக் கொள்ளவேண்டிய இடத்தில் சாதியை, நஞ்சாக ஊற்றுவதும், அமிலகமாகக் கொட்டி எரிப்பதும், கத்திகளாகக் கூர்தீட்டுவதும் முட்டாள்களின் வேலையேயொழிய தெளிந்தவர்களின் தெரிவு அல்ல சாதிவெறி. 

குறிப்பாக, இன்றைய நம் நாட்டின் அரசியல் போக்கைப் பார்த்தால், நாமெல்லாம் தன் கையாலேயே தன் கழுத்தை அறுத்துக் கொண்டு செத்துவிடலாம். ஆம் அத்தனைக் கேவலமாக நமது அரசியல் வாதிகளை செயல்படுத்துகிறோம் நாம். அரசியல்வாதி எனில் யார் ? நாம் உருவாக்கியவர்கள், நம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். பிறகு நாமே அவர்களைச் சரியில்லை என்று சொல்லி பயனில்லை, அதனால் தான் நம்மைநாமே அருத்துக்கொள்ள வேண்டும் என்றேன். 

அல்லது அவர்களின் கொட்டத்தை அறுக்கவேண்டும். அதற்கு அரசியல் அறிவு வேண்டும். அரசியலை ஒரு நாட்டின் அதிமுக்கியப் பொறுப்பாகக் கருதி இளைஞர்களுக்குப் போதிக்கவேண்டும். குழந்தை வளரும்போதே கொஞ்சம் மருத்துவம், கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் எந்திரவியல், கொஞ்சம் கலைகள், கொஞ்சம் தற்காப்புக் கலைகள், கொஞ்சம் வீரம், கொஞ்சம் காதல், இவைகளோடு கொஞ்சம் அரசியல் அறிவையும் புகட்டவேண்டும்.

அரசியல் தெரியாததனால் தான் ஆளக் கேட்பவனின் கையிலெல்லாம் கோடாரியைக் கொடுத்துவிட்டு வெட்டுவதற்குத் கழுத்தையையும் காட்டிநிற்கிறோம். ஒரு நாடு வளம்பெற வேண்டும் எனில் அந்நாட்டில் காவலாளிகள் சரியாக இருக்கவேண்டும். காவலாளிகள் பொறுப்பாக இருக்க அரசியல் சட்டம் அத்தனை முனைப்பாக இருத்தல் வேண்டும். அரசியல்சட்டம் திருத்தமாக இயற்றப் பட்டிருக்குமெனில் அதைவைத்து ஆளும் அரசியல்வாதிகளும் மனிதம் மிக்கவர்களாக, நாடு பற்றிய அக்கறை உள்ளவர்களாக,  மக்களின் நன்மை குறித்து ஆலோசிப்பவர்களாக, சுயநல போதையறுக்கப் பட்டவர்களாக இருத்தல் எவ்ண்டும். அப்படி இருக்கிறார்களா? நம் அரசியல் வாதிகள்? பிறகு அவர்களுக்கு சாதி அக்கறை மட்டும் வருகிறது எனில் அது எங்கிருந்து வரும்? பிறகு அவர்களின் சுயநல வெறிக்கு கடித்துத் துப்ப நமது தலைகளும், தலையைக் கிள்ளியெறிய வளர்க்கும் அழுக்குபிடித்த நகங்களாக சாதியும் இருக்குமெனில் அதை உடனே வெட்டியெறிய வேண்டியது நம் தலையாயாக் கடமைகளில் ஒன்று என்று புரிவோம். 

சாதியால் வீடு சிரிக்கும் எனில் அதை பேருக்குப் பின்னல்ல முன்னரே கூடப் போட்டுக் கொள்வோம். அதே வீடு சாதியால் ரெண்டு படுமெனில் சாதியொழிப்போம் வீடு சிரிக்கட்டும்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty Re: வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 31, 2013 8:32 pm

10. முதிர்கன்னிகள் குறித்து தாங்கள் அதிகம் சிந்திக்கக் காரணங்கள் என்ன? அவர்களுக்கான மறுவாழ்வு குறித்து தங்கள் கருத்து என்ன?
வீட்டுக்கூரை விரிசல் கண்டுள்ளதெனில் அதை மாற்றி வீட்டைக் காப்பது எனது கடமையில்லையா? பசி குறித்து எழுத முடிகையில், ருசி குறித்துப் பேச முடிகையில், உடல் குறித்து அழுமொரு முகத்தைக் காண அச்சப்பட வேண்டியுள்ளதும் அவசியமில்லையா? வளைய வளைய வளைக்குமொரு சமுதாயத்தால் கண்முன்னே பல இதயங்கள் தனது பிறப்பை எண்ணி அழுகிறதெனில் அதனால் பெருகும் கண்ணீரைத் துடைக்கும் கரமாக எனது எழுத்து நீள்வது அவசியமெனில்; அவர்களைப் பற்றி எழுதுவதையும் எனது கடமைகளில் ஒன்றென்றேக் கருதுகிறேன்.

வாசல்பிடித்து ஏங்கி நிற்கும் பார்வையின் வலியினுடைய கனத்தை காலம் கடந்தும் தாங்க மறுக்கிறேன். பார்த்து பார்த்து வளர்த்த மகள் தனது பாரமாக இளமையைத் தாங்கி நிற்கிறாள் எனில் அதை எண்ணிப் பதறவேண்டியக் கடமை எனக்கும் முதலாவதாக இருப்பதில் பெருங்கருணை யொன்றும் தென்பட்டுவிடவில்லை. அதற்குமாறாக நாம் நம் சமுதாயத்தை இத்தனை இழிவாக மனிதமற்று சமைத்துவைத்துள்ளோமே எனும் கவலையே பெருகி நிற்கிறது. அப்படிப் பெருகிய இடங்களில் முதிர்க்கன்னிகளுக்கான கவிதைகளும் பிறந்திருக்கலாம்..

அப்படிப்பட்ட முதிர்கன்னிகளின் நல்வாழ்விற்க்கான மனமாற்றத்தை இளைஞர்களிடமிருந்தே  எதிர்ப்பார்க்கிறேன். இன்றிருக்கும் முதிர்கன்னிகளை இளைஞர்களே மணந்துக் கொள்ளுங்கள் அல்லது இளைஞர்களே வரதட்சணை வாங்காதீர்கள் என்று சொல்லிப் பயனில்லை. அவர்களின் வாழ்வின் தீர்வுகள் நேற்றைய இளைஞர்களின் கைக்குள் அடக்கமகிவிட்டது. அவர்களை வலைக்கிறேன் என்று சொல்லி உடைத்துவிடுவதைக் காட்டிலும் நாளையப் பெற்றோரை மாற்றிவிடுவதன் மூலம் எதிர்காலம் முதிர்கன்னிகளை மறந்துப்போய்விடக் கூடும் என்று எண்ணுகிறேன். 

அதுதவிர, மீண்டும் மீண்டும் எங்கு சுற்றினாலும் மருந்து அன்பிடமிருந்தே கிடைக்கத் துவங்குகிறது. அன்பிருப்பின் கருணை வரும் கருணையுள்ளம் காசு பார்க்காது காசுபணம் பெரிதில்லை மனசு பெரிது, மனது வலிக்காமலிருத்தல் பெரிது என்றுப் புரிந்துவிட்டால் இக்காலத்திலும் சரி எக்காலத்திலும்; திருமணமாகாமல் வலிக்கும் பெண் மனதும் புரிந்துப் போகும் அதைத் தாங்கமுடியாமல் தவிக்கும் பெறோரின் வலியும் புரிந்துப் போகும். எனவே எங்கும் நிறைந்த சம அன்பினை மனிதர்கள் மனதுள் தேக்கி வைத்திருத்தல் ஒரு மறைமுக நர்சூழலை எவ்விடத்தும் ஏற்படுத்தும் என்பதும் எனது நம்பிக்கை.. 

தவிர, முதிர்கன்னிகள் பெருகுவதற்கு, வரதட்சணை, திருமணம் கட்டித் தர வசதியின்மை, பிற குலம் பற்றிய இழிவானப் பார்வை, தன் மகள் வாழாவிட்டாலென்ன என் கௌரவம் முக்கியம் எனும் மனப்போக்கு, இதெல்லாம் கடந்து வீட்டில் பெண் மரம்போல வளர்ந்திருக்க ஊர்சுற்றும் மாடுபோல பலர் குடித்துக்கொண்டும் வெட்டிக் கதை பேசிக்கொண்டும் ஊர்வாயைப் பார்த்து நடந்தும் தெரிகிறார்கள். அவர்களுக்கெல்லாம் தனது மகள் பற்றிய கவலையும் ஒரு பொதுவான பெண்மகள் குறித்த அவஸ்தையும் மனதுருத்த வேண்டும். 

சில வீடுகளில் ஆண்களும் சரி பெண்களும் சரி ஏதோ ஒரு குறிக்கோளினைக் கையிலெடுத்துக் கொண்டு அதை செய்துமுடிக்கும்வரை ஓயமாட்டேன், திருமணமெல்லாம் எனது லட்சியம் நிறைவேறியப் பின்புதான், நான் ஒரு தகுதிக்கு வந்தப்பிறகே எனக்கு திருமணம் நடக்கும் என்றெல்லாம் இருக்கிறார்கள். என்னைக் கேட்டால் திருமணம் என்பது ஒரு சாபம்மெனும் எண்ணம் முதலில் மாறவேண்டும். 

திருமணம் என்பது’ தெருவில் செருப்பின்றி நடக்கும் ஒருவனுக்கு செருப்பாக நடக்க தனது கைகளை நீட்டும் ஒருத்தியை, ஒரு துணையை ஒரு பலத்தை அடைவதற்கு சமமென்றுப் புரியவேண்டும். 

வாழ்க்கைத்துணை என்பது சாதாரண உறவல்ல. கொஞ்சம் தாய்மை இன்னும் கொஞ்சம் தந்தையின் பற்று, சகோதரர்களின் பலம், சகோதரிகளின் அன்பு, தோழியின்  சினுங்கள், காதலியின் கோபம், குழந்தையின் சிநேகம், மூத்தோரின் அரவணைப்பு, கோவிலின் பக்தி, கொஞ்சம் மிருகம், நிறைய மனிதமென கேட்கக்கேட்க கிடைக்கத்தகும் வாழ்வின்’ வெற்றியின்’ மகிழ்ச்சியின்’ ஆரவாரத்தின்’ அடிநாதமும் உச்சமும் ஆகும். அதை தவிர்த்தலில் லாபமென்ன? எங்கோ திருமணம் முடிந்து வாழவேண்டிய ஒரு பெண்ணோ ஆணோ தனித்து தாகத்தில் கிடப்பதைத் தவிர வேறு பெரிய நிகழ்வொன்றும் நிகழப் போவதில்லை. ஆனால் - 

பிரம்மச்சரியம் என்பது வேறு. அது தோட்டத்திலிருந்துக் கொண்டு கணியுண்ணாதவருக்கின்னும் எளிதாகக் கைவசப் பட்டுவிடுகிறது..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty Re: வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 31, 2013 8:33 pm

11. மரணம் குறித்த தங்களின் அகவயப் பார்வையை விளங்குங்களேன்?
மரணத்தோடு பிறப்பவர்கள் நாம். மரணத்தை மறுப்பதற்கில்லை. ஏற்பதற்கும் ஆனதில்லை. இறக்க தயாராக இருத்தல் என்பது ஒரு நிறைவு. அந்த நிறைவை அடைய வாழ்வை சீராக்கிக் கொள்ளுதல் அவசியம். வாழும் தருணத்தை சுயநலமின்றி வாழ்பவருக்கு வாழப் பழகிக் கொள்வோருக்கு மரணம் ஒரு இடைநிறுத்தம் என்பதே என் எண்ணம். எனவே பொதுநல வாதிகள் யாரும் முழுமையாக இறப்பதில்லை மீண்டும் பிறப்பார்கள் என்பதல்ல இதனர்த்தம். 

சுயநலம் பாராதோரின் வாழ்க்கையும் கனவுகளும் அவரோடு முடிவதில்லை, அது இன்னொரு விதையாகவும் முளைத்து விடுகிறது. நல்லதை விதைத்துச் செல்பவருக்கான மரணம் அவரின் உடலை மட்டுமே எரிக்கவோ புதைக்கவோ செய்கிறதேயொழிய அவரின் எண்ணங்களையோ அவரெடுத்த முயற்சிகளையோ அழிப்பதில்லை. 

மரணத்தின் பூரணத்துவம் என்பது மீண்டும் பிறப்பது. மீண்டும் மீண்டும் இருப்பது. எக்காலத்தும் நிலைப்பது. அப்படி நிலைக்க வாழுங்காலத்தில் நன்மையை விதைப்போர் மரணத்தை வெல்லத் தக்கோராவர். 

இதலாம் கடந்து மரணம் இன்னொரு முகத்தைக் கொண்டுள்ளது, அது நினைவுகளுள் முற்களாய்ப் பிறக்கும் முகம்.  ஒரு தட்டில் உண்டு ஒரு படுக்கையில் உறங்கி ஒரு இதயத்துள் ஒன்றாய் நிறைந்து வாழ்வோர் பிரியும் வலி மரணத்தைக் காட்டிலும் கொடிது. அதை மறுப்பதற்கில்லை. எங்கு வந்தோம் எப்படிச் செல்கிறோம் என்றேதுமே அறியாமல் உயிரின்றிப் பிணமாய் கிடக்கும் ஒரு உறவு நட்பானாலென்ன, உடன்பிறந்தாலென்ன, உடன்வாழத்தான் வந்தாலென்ன எதுவாயினும் மரணமென்பது எத்தனை தனக்கான நிறைவோ அத்தனை பிறருக்கான தீரா வலியும்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty Re: வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 31, 2013 8:35 pm

12. தங்களின் அகவயம் குடும்பப் பாசத்தையும் அன்பையும் சார்ந்து இயங்குவதாகக் கவிதைகளின் வழியே அறிய முடிகிறது. அயல்நாட்டில் வேலை செய்வதின் பாதிப்பு என்று எடுத்துக்கொள்ளலாமா?
முள்மேல் படுத்திருப்பவனுக்கு உடல்வலி இல்லாமலா இருக்கும்? பிரிவின் கொடுமையை அணுவணுவாய் தாயிலிருந்து அனுபவித்து, தந்தை தமக்கை தங்கையென்று தொடர்ந்து, அண்ணன் தம்பி நண்பர்களிடமும் முடியாமல், மனைவி குழந்தைகள் சுற்றமென ஊரின் உறவுகளின் மொத்த அன்பையும் அரவணைப்பையும் சந்தோசங்களையும் வாழ்வின் நன்மைதீமைகளையும் கடிதங்களின் வழியேவும்’ மின்னஞ்சல்களின் ஊடாகவும்’ தொலைபேசியழைப்பின் மூலமும்’ திரைப்படங்களைக்கொண்டும் பார்த்து ஏங்கி தவித்து தலையணை நனைந்த ஈரத்தில் வாழ்க்கையை அனுபவித்துக்கொள்ளும் பலரில் நானும் ஒருவனாக வாழ்ந்து வருகையில் அதன் ஏக்க முட்கள் இதயத்தைத் தைக்காமல் இருக்காது; அது வேறு.. 

வெறும் அது மட்டுமே காரணமென்றும் சொல்வதற்கில்லை. காரணம் எனது எழுத்துகள் வெறும் மனதின் நிறைவேறா ஆசைக்கு பதிலாகப் பொங்கும் ஈர உணர்வுகக்ளைக் கொட்டித் தீர்க்கும் வடிகால்தனைத் தேடி வந்தவையல்ல, பிறரின் நல்வாழ்விற்கு வழிகாட்ட தவம் கிடப்பவை.  

அங்ஙனம் ஒருவருக்கு நல்ல வழிகாட்ட முற்படுவதெனில்; முதலில் அவருக்கு உயிர்களிடத்தில் பொதுவான அன்பு செய்தலைப் போதித்து விடுதல் என்பது ஞானத்தைக் கொடுக்க ஒரு துளியிலிருந்து ஆரம்பித்துவிட்டதற்குச் சமமாக; உணர்வுகளை சமன்செய்து எண்ணங்களை நல்வழியில் தூண்டி வெற்றியின் வழியில் பயணிக்க ஒவ்வொரு மனிதரையும் பண்படுத்துகிறது அன்பென்னும் பெருமந்திரம்..

அதோடு நில்லாமல், பரிசுத்தமான அன்பு என்பது தன்னலம் மறந்து பிறர்னலத்தின்கண் சிந்திக்கவள்ளது. இன்றைய அரும்பெருங் கொடுமைகள் நிகழ்வதற்கான அத்தனைக் காரணமுமே சுயநலத்துள் புழுத்துக் கிடந்து வந்தவைகள் தான். தனக்கே கிடைக்கவேண்டும், தான் வாழவேண்டும், தனக்கானதை மட்டுமே பாதுகாக்க வேண்டும், தனக்கென்றே போராட வேண்டும், தன்னாசை பெரிது, தன்னால் மட்டுமே எதுவும் முடியும், தனக்கே உரியது அது, தன் வயிற்றைத் தான் முதலில் நிரப்பவேண்டும், தன் ஜாதி பெரிதாக நிற்றல் வேண்டும், தன் குடும்பம் தனது ஊர் தனது நாடு என அத்தனையிலும் தனது எனும் நான் என் தான் முதலில் இருக்கிறது. அதை அகற்றவேண்டும் எனில் பிறரைப் பற்றியும் நினைக்கவேண்டும் எனில் பிறர் மீதும் பிற உயிர்களின் மீதும் அன்பு செய்தல்வேண்டும். அன்பினால் இவ்வுலகமே வெல்லக் கிடைக்கும் என்பது எனது இதயம் பதிந்த நம்பிக்கை. பதிந்தப் பெருமை எனது தாயன்பையும் தந்தையின் நன்னடத்தையையுமேச் சேரும்..,
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty Re: வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 31, 2013 8:36 pm

13. பொதுவாக… வாழ்க்கை தத்துவமாக எதனை குறிப்பிட விரும்புகிறீர்கள்?
உண்மையே நமக்கான ஒளிவட்டம். ஒருவன் உண்மையாக இருப்பதை கடைபிடிக்கத் துவங்கிவிட்டால் எவ்விடத்தும் பொய் கூறவோ தவறை மறைக்கவோ இயலாது. உண்மைப் பேசுபவன் தவறிற்கும் பிற உயிர்களை வருத்தும் செயலுக்கும் அஞ்சி முறையாக இருக்கும் இடத்தின் மேன்மைக்குத் தக சிறந்தே வாழ முற்படுவான். 

ஒருவேளை அவனையும் மீறி சூழ்நிலைக் குறித்து தவறே நேர்ந்தாலும் அதை மறைக்காமல் ஒப்புக் கொள்ளும் மனநிலை உண்மையாக வாழ்பவருக்கு ஏற்படும். அங்ஙனம் தன் தவறை மறைக்காமையால் அடுத்து அந்த தவறு நிகழாமல் நடக்கப் பக்குவப்படுவதோடு நடந்த தவறுக்கு ஏற்ப நன்மையை செய்தாற்றுவது பற்றியும் ஆலோசிக்க எண்ணம் ஏதுவாகும். ஆக நாள்பட நாள்பட கண்ணியமும் நேர்மையும் ஒழுக்கமும் உண்மையின் கண் ஒருவருக்கு வாய்க்க ஞானவொளி கண்களில் பரவும். உண்மை ஒளிவட்டமாக இருந்து எங்கு செல்லினும் அவரைக் காக்கும்.. 

அவர் காக்கப்படுதல் கண்டு அங்ஙனம் வாழ பிறருக்கும் ஆசை வரும். ஒருவரால் நான்குப் பேர் மாற, நால்வரால் நூறுபேர் மாறுவர், நூறு ஆயிரம் ஆகும் ஆயிரம் கோடியில் கூடி உண்மையின் கண்ணியத்தை உலகெங்கும் பரப்பி நாளையை நல்வழிபடுத்த இன்றிலிருந்தே இப்போதிலிருந்தே உண்மையாக வாழப் பக்குவப் படுங்கள். உண்மையாக இருத்தலே நம் வாழ்வினைச் சிறப்பிக்கும் எளிய தத்துவமாகும்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty Re: வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 31, 2013 8:39 pm

14. வரதட்சிணை குறித்து தங்கள் கருத்துகள் என்ன? 
வரதட்சணை ஒரு குற்றமல்ல. ஜாதி மதமெல்லாம் எப்படி நமக்குள் நன்மையைப் பயக்கும் என்று ஆரம்பித்துப் பின் மனிதனால் மனிதனைக் கூறுபோட்டுக் கொள்ள ஜாதியும் மதமும் தீராப் பிணியாகிப் போனதோ; அப்படி வரதட்சைனை என்று கேட்டாலே பெண்களைப் பெற்றெடுத்த வயிறுகளிலெல்லாம் விஷம் வார்க்கும் செயலாக வரதட்சனை கொடுத்தல் மாறிப் போனது நிச்சயம் சரிசெய்துக்கொள்ளவேண்டிய ஒரு சம்பிரதாயமாகத் தான் இருக்கிறது..

முதலில் இதையெல்லாம் ஒரு சம்பிராதயமாக; திருமணத்தின் கட்டாயப் பொறுப்புகளுள் ஒன்றாக உள்ளதை மாற்றல் வேண்டும். தன் மகளை கனவன் வீட்டிற்கு அனுப்பும் காலத்தில் அவளை பெருமதிப்பாக அனுப்புவதாக மகிழ்ந்து போகுமிடத்தில் உயர்வாக வாழ்வாள் மகள் என்று நம்பியப் பெற்றோர்கள் தன்னால் இயன்றதைச் செய்தனுப்பியது அக்காலத்தின் திருமண முறைகளுள் ஒன்றாக இருந்தது. இப்போது, பெண்களுள் அதிகமானோர் படித்தும் பட்டங்கள் பலதை வென்றும் விண்வெளியிலிருந்து எந்திர ஆய்வு வரை படையெடுத்தும் நடைபோடத் துவங்கியப் பொழுதில், படிப்பை பாதியில் நிறுத்துவிட்டு மூன்று முடுச்சிகளுள் அடங்கிப் போகும் நிலையும் சிலப் பெண்களுக்கு வாய்க்கமலில்லை. 

அதற்கு ஆண் பெண் என இருவரும் எவ்விதத்திலும் குறையாத காரணமாக இருந்தாலும் பொதுவாக பெண்களுக்கு இழைக்கப்படும் பல அநீதிகளை அகற்றி அவர்களை அவர்களின் நிலையில் வாழவிட தனை சரிசெய்துக்கொள்ளும் பல பொறுப்புகள் ஆண்களிடத்தில் அறியப்படாமலேயுண்டு. 

ஆண்டாண்டுக் காலமாக கட்டளையிட்டே வாழ்ந்துவிட்ட ஒரு வர்க்கத்தின் நீட்சியாகவே பெண்களின் தற்போதைய பல மாறுதல்களும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களும் நடந்துவருகிறது. அவைகள் மாறி சரிநிகர் பொதுநிலை அமைய இருபாலரிடத்திலும் நட்பு வலுத்து கண்ணியம் பெருகி காதல் ஊற’ காதல் புரிய’ காதல் பெருக’ வாழ்க்கை அவரவர்களுக்கானதாய் அவரவருக்கு சாசுவதப் படலாம். அதற்குப் பின் வரதட்சணை கொடுத்தல் வாங்கலெல்லாம் அவசியமற்றும் போகலாம்.. 

பொதுவாக தற்போதைய நிலைப்படி உடனடியாக செய்யவேண்டுவது வரதட்சனையை கட்டாயமாக தவிர்த்தல் வேண்டும். சட்டப்படியே அது குற்றம் என்று ஆனபிறகும் வெற்றிலைக்கு கீழ்வைத்து பொருள் மாற்றும் நிகழ்வு போல இது இன்றும் மிக நாகரீகமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. சிலர் முரணாகப் பேசுவதாக எண்ணிக்கொண்டு அதலாம் அந்தக் காலமுங்க இப்போ எங்கங்க வரதட்சணை கொடுமையெல்லாம்னு பேசுறாங்க. அவர்களுக்குத் தெரியாமல் ஆங்காங்கே எரியும் குடும்பங்கள் எரிந்தும் வாழ்க்கை விடியாப் பெண்கள் முதிர்க்கன்னிகளாகத் திரிந்துக்கொண்டும் தான் இருக்கிறார்கள். அந்நிலை முழுமையாய் மாறவேண்டும். 

தன் மகளுக்கு தான் விரும்பிச் செய்யும் எதையும் தவிர இதைக் கொடுங்கள் இதைப் போடுங்கள் என்று நாக்கூசாமல் கேட்போர் வீட்டில் திருமணத்தையே நிச்சயிக்கக் கூடாது. பத்து வீடு அங்ஙனம் மறுக்கத் துவங்கினாள் அது பற்றியதொரு பெரிய விழிப்பு பொதுவில் ஏற்பட வாய்ப்புண்டு.

நல்ல குணமும், போதிய அழகும், பொருந்தும் பண்பும், தீரா அன்பையும் தவிர வேறெந்த பொருளோ நகையோ பணமோ சொத்தோ ஒரு சிறு புன்னகையைக் கூட மனதால் நகைக்கத் தராது. ஒருவரின் உழைப்பு இன்னொருவரை தாங்குமென்றால் அது உழைத்தவரின் சம்மதத்தோடு மட்டுமே தாங்குவதாக இருத்தல் நலம். அல்லாது அது பாவம், பெருங்குற்றம். குற்றத்தைத் தவிர்ப்போம். நம் குலப் பெண்களை நம்மிடமிருந்து முதலில் காப்போம்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty Re: வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 31, 2013 8:39 pm

15. படித்த பெண்களும் இன்று இல்வாழ்க்கையில் முரணாக நடந்து கொண்டு விவாகரத்து கோருகிறார்களே… கல்வியின் நிலை குறித்து தங்கள் பார்வை என்ன?

சோற்றில் உப்பிட்டுவிட்டு பின் கரிப்பதாகக் குற்றம் சொன்னால்; அது போட்டவரின் பழியன்றி வேறென்ன? எதையும் திருந்தச் செய்யும் பழக்கமொழிந்துப் போனோம்.  அடிப்படையில் இருந்து வரவேண்டிய ஒழுக்கங்களை எல்லாம் பாதியாக வைத்துக் கொண்டு மேலுக்கு அடிக்கும் வெள்ளையை மட்டும் பளிச்சென்று அடித்த வீட்டைப் போன்றே நமது எண்ணற்ற செயல்பாடுகள் இன்றுண்டு. நல்ல திறமையாக வளர்க்கும் குழந்தைகளை அறிவோடும் தெளிவோடும் வளர்க்க அத்தனை நாம் முழுமையான பிரயத்தனம் செய்வதில்லை. இதைக் கத்துக்கோ அதை கத்துக்கோ முதலா இரு வாழ்க்கையை ஜெயி அளவா சாப்பிடு வாக்கிங் போன்னு சொல்லும்போதே பண்பைக் கற்றுத் தரவும், அன்பைப் பகிர்ந்து பிள்ளைகளை ஈர்ப்போடு வளர்க்கவும் இன்று எத்தனைப் பெற்றோர்கள் நாம் நமது நேரத்தை குழந்தைகளுக்காகவும் அவர்களின் எதிர்காலம் நன்னடத்தைகளோடு அமையவும் அக்கறைக் கொண்டிருக்கிறோம். அதற்காக நான் ஒட்டுமொத்த பெற்றோரையும் குறை சொல்லவோ எல்லோருமே குற்றவாளி என்றோ கூற வரவில்லை. நமது வாழ்க்கை முறை அங்ஙனம் ஆகிப் போகிறது. நாம் தான் நம் பிள்ளைகளை வளர்க்கிறோம். நாம் தான் அவர்களுக்கு உலகத்தைக் காட்டுகிறோம். நாம் தான் அவர்களுக்கான அத்தனையையும் செய்கிறோம். இன்றையப் பிள்ளைகளும் சரி நமது வீடுகளும் சரி நாடும் சரி நம்மால் செய்யப்பட்டது. எனவே நமக்கான அத்தனை அநீதி கொடுமைகளுக்கும் நாமே பொறுப்பு என்பதையே முன்வைக்க எண்ணுகிறேன். எனவே நம் சமுதாயக் கேடுகளுக்கான நல்மாற்றத்தையும் நமது பிள்ளைகளின் வழியே, பின்னான நமது நடத்தையின் மூலமுமே நம்மால் சரிசெய்துக்கொள்ள முடியும்..

அதுபோல் விவாகரத்து ஒன்றும் தொட்டும் ஒட்டிக்கொள்ளும் தீது ஒன்றுமல்ல. அது ஒரு இருட்டின் கதவுகளைத் திறந்து புது வாழ்வின் வெளிச்சத்தைக் காட்டும் வழி. திருந்தாத ஜென்மங்கள் இருபாலரிடையேயும் நிறைய உண்டு. எனக்குத் தெரிந்து ஒரு தங்கையை அப்படி நயமாகப் பேசிக் கட்டிச் சென்ற ஒருவன் இன்று செய்யும் கொடுமைகளுக்கு அளவேயில்லை. திரும்பினால் குற்றம் நின்றால் குற்றம் எழுந்தால் குற்றமென அத்தனைக் குற்றம் சாற்றும் அவன் குடிக்காத நாளில்லை அவளை அடிக்காத நாளில்லை. இப்போது அவள் எங்களை யாரையுமே வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு அவன் மட்டும் போதுமென்று வாழ்கிறான். அவளின் நன்மைக்கென்று எண்ணி நாங்களும் அதை சம்மதிக்கிறோம். அவன் அவனின் குடும்பத்தொரு உறவுகளோடு இருக்கிறான். தங்கை மட்டுமொரு தனிக்காட்டில் எங்களின் வார்த்தைகளைச் சுமந்துக் கொண்டு பிரிவில் தவிக்கிறாள். எனக்குக் கோபம் அவன் மீதல்ல. அவனின் பின்னாலிருக்கும் நாம் கட்டிவைத்திருக்கும் அடிமைத்தன மூட்டை மீதுதான் எனக்குக் கோபம். அவன் சரியாக இருப்பதாகவும் அவளும் சரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு ஆணுக்கு மத்தியில் அவனுக்குத் துணையாக இருக்கும் அவனின் அம்மா அக்காள் உறவுகள் எனும் பெண்களுக்கு மத்தியில் எது நாளிடறிக் கிடக்கிறது? நம் சமூகம் தானே? அந்த சமூகச் சாக்கடைமீது காரி உமிழ ஒரு ஆயுதம் அந்த அபலைப் பெண்ணிற்குத் தேவையிருக்கிறது. அதுபோன்ற பெண்களுக்கும் அப்படிசில் வேறு கோணத்தில் சிக்கித் தவிக்கும் ஆண்களுக்கும் ஒரு ஆயுதமாக இந்த விவாகரத்து இருப்பது ஏற்புடைய ஒன்றேயொழிய முழு மருப்பினைக் கொண்டதல்ல. 

ஆனால், இங்கு பிரச்சனை என்னவென்றால், உறவுகளை ஒரு வார்த்தைக்குள் முறித்துக் கொள்வதே பிரச்சனை. கத்தி மரம் வெட்டவெனில் அதையேடுத்து செடி கொடிகளை எல்லாம் சீவிப் போடும் சிறுவர்களைப் போல இந்த விவாகரத்தைப் பயன்படுத்துவது நாளைக்குப் பின் வேறொரு கொடூர நாகரிகத்தை வளர்த்துவிட வாய்ப்புள்ளது. 

பிரச்சனைகளை அனுசரிக்கவும், பிரச்சனை குறித்து தெளிவுற சிந்திக்கவும், பிரச்சனை பிரச்சனை என்று உறவுகளை அறுத்துக் கொள்ளாதிருக்கவும், எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த இரு ஆண் பெண் உறவுகளில் பல வேறுபாடுகள் கருத்துமாற்றங்கள் வரவேச் செய்யும் அதை ஸ்நேகத்தால் அணுகி ஒருவருக்கொருவர் வலிக்காமல் வாழ்க்கையை இருபாலருக்கும் இரு வீட்டாருக்கும் பிடித்தமானதாக அமைத்துக்கொள்ளவும் நாம் தான் நம் பிள்ளைகளுக்கு சுதந்திர மனப்பான்மையோடு வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு நகர்தல் குறித்து சொல்லித்தரவேண்டும். 

அதிலும் காய்ந்த மண்ணில் வந்துவிழும் நீரை மண் வெகுவேகமாக உரிந்துக்கொள்வதைப் போல, அடங்கியே இருந்துப் பழக்கப்பட்டப் பெண்கள், ஒடுங்கியேக் கிடந்து வலித்துப் போன மனங்கள் இன்று தனித்துப் பறக்கப் பழகிக் கொண்டுள்ளன. எங்கும் சிறகடிக்கத் தக்கவாறு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளன. ஏய் என்றால் ஏனென்று சிந்திப்பதற்கும் முன் ஏய்ய்ய்.. என்று வீரியத்தோடு கத்துவதையே சரி என்று எண்ணிக்கொள்ளும் அளவிற்கு முதுகில் வாங்கிய அடிகள் ஏராளமாய் அவர்களுக்கு வலிக்கிறது. என்றாலும், இது ஒரு மரத்தை வெட்டி எதிர்ப்பக்கத்தில் சாய்ந்துக் கிடக்க அதையேடுத்து மீண்டும் மறுபக்கம் சைப்பதர்குச் சமமாகவே இருந்தாலும் குறைந்தபட்சம் அவர்கள் எழுந்தேனும் நிர்கட்டுமே பிறகு யாருக்கு வலிக்கிறது என்று பார்பபோமென்றே பொது நியாயமொன்று உள்ளத்துள் எழுகிறது. 

எனவே எதையும் அலசி சரிபார்த்து மிக எச்சரிக்கையாக இருந்தே நம் சமூகத்தை பட்டைதீட்டும் நிலையில் இருக்கும் நாம் யாரையும் கைகாட்டி நீ குற்றவாளி என்றுப் பெண்ணையோ அல்லது நீதானென்று ஆணையோகைகாட்டி குர்ரப்படுத்தும் சூழலில் இல்லை. நாமெல்லோருமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து நமக்கான ஒரு ஒழுக்கத்தை ஒரு சமதர்மத்தை ஆண் பெண் சார்ந்த வாழ்க்கைக்குள் ஏற்படுத்த வேண்டும். அதற்கெல்லாம் வேகுனாலாகும் என்பதால் இப்போதைக்கு உடனடி மருந்தாக நாம் அன்பு செய்வதன்றி விவாகரத்தைக் குறைக்கவோ குடும்பப் பிரச்சனைகளை ஒழிக்கவோ வேறு அதிக வழியில்லை. அன்பை ஒழுக்கத்தை நற்பண்புகளைத் தரக்கூடிய  உண்மை நிலையை யொழித்து வேறு பெரிய ஆயுதங்களில்லை..

குழந்தைக்குச் சோறூட்டும் போதே தாயும் தகப்பனும் ஒரு நல்ல ஆசிரியர்களாகவும், ஆசிரியர்களிடம் வரும் பிள்ளைகளை அவர்கள் தனது பிள்ளைகளைக் காக்கும் பெற்றோரைப் போலவும் வழிநடத்துமொரு கல்வி நம் பிள்ளைகளுக்கு வேண்டும். திறமைகளுக்கு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் கதவுகளை பாதி பங்கிற்கு அடைத்துவிட்டு, அறிவுக்கு வழிகாட்டும் ஆசான்கள் பள்ளிக்கூடங்களில் மீதிப் பங்கிற்காய் வேண்டும். வெறும் ஆங்கிலம் பேசிவிட்டால் பிறமொழிகளைக் கற்றுக் கொண்டால் பாடவும் ஆடவும் தெரிந்துவிட்டால் வாழ்வின் பாதைகள் தெளிவுற புலப்பட்டுவிடுவதில்லை. நற்பண்புகளைக் கற்கவேண்டும். பிறர் மனம் வலிக்காது நடத்தல் உள்ளூர வேண்டும். எதுவாக வேண்டுமோ அதுவாகமுடியுமெனும் நம்பிக்கையை நாம் நம் வருங்காலத்திற்கு ஏற்படுத்தத் தக்கதொரு கல்வி வேண்டும். பாலினம் பற்றி காதல் பற்றி அன்பு பற்றி சமுதாயம் பற்றி ஆன்மிகம் பற்றியெல்லாம் அவர்கள் வளர்ந்துவரும் போதே அறிந்து புரியப் புரிய வளரவேண்டும். இங்ஙனம் ஒரு விதையை ஊன்றும் போதே உரத்தொடு ஊன்றுவதைப் போல ஒரு குழந்தையை வளர்க்கும் போதே முறையாக சரியாக வளர்த்தலின் பொருட்டு மட்டுமே இல்வாழ்க்கையின் முரண்களைக் களைந்து அவசியமற்ற விவாகரத்தினையும் ஆண் பெண் இருபாலரிடத்திருந்தும் முழுமையாக அகற்றிட முடியும், நல்லதொரு மாற்றத்தினை நம் சமூகத்துள் கல்வியைக் கொண்டும் நிகழ்த்திட முடியுமென்பது எனது நம்பிக்கை..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty Re: வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 31, 2013 8:40 pm

16. திரைப்படம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இன்று மக்களிடம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

ஊடகங்களுக்கும் நமக்குமிடையே ஆர்வமென்னும் ஆசையென்னும் ஆடம்பரமெனும் இயல்பிற்கு முழுதும் ஏற்புடையதாக இல்லாத கண்ணாடித் துண்டுகள் பல கொட்டிக் கிடக்கிறது. அந்தக் கண்ணாடிகளின் வழியே அவர்கள் அவர்களைப் பார்க்கிறார்கள், நம்மைப் பார்த்ததாக எண்ணி எதையோ செய்கிறார்கள். நாமும் மீண்டும் அதே கண்ணாடிகளைப் பார்க்கிறோம், அது மீண்டும் நம்மையே அவர்களின் முகத்தோடு சேர்த்துக் காட்டுகிறது, நாமும் அதை நம் முகமேன்று நம்பி அதன்பின் போகிறோம். இப்படி நாமென்று நம்பி அவர்களும் அவர்களைக் கண்டுவிட்டு நம் முகத்தைக் கண்டதாக நாமும் இன்று இங்குமங்குமாய் நிறைய மாறிப் போய்க் கிடப்பதே ஊடகம் செய்த பெரிய புரட்சியின் பலன். 

உண்மையில் இன்றைய திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் ஏற்படுத்தியுள்ள முதல் பாதிப்பு நேரவிரயம். இரண்டாவது உணர்சிவயப்படல். மூன்றாவது ஒரேயடியாக கொதித்தடங்கி வீழ்தல். மீண்டும் நமை உசுப்ப இன்னொரு திரைப்படமோ தொலைக்காட்சியோ வசனமோ வரும்வரை முடங்கிக் கிடத்தல். குறிப்பாக காதலைக் கற்குமளவிற்கு வேறெதையும் எளிதாக கற்க இயலாதவர்களாக நமை மாற்றிக் கொண்டுவரும் அபாயம் இந்த இரண்டுத் திரைக்குள்ளும் பதுக்கப் படுகிறது. 

லஞ்சத்தை எதிர்க்கச் சொல்லித் தருவது என்றாலும் திரைப்படம் வழியாகத் தான் சொல்லவேண்டும். நூறு புத்தகம் எழுதி சொன்னது போகாத இடத்தில் ஒரு பாட்டு சென்று அமர்ந்துக் கொள்ளும் அளவிற்கு திரைப்படங்களால் மோகித்துப் போயிருத்தல் அத்தனை நல்ல சூழலில்லை. எதைக் காணினும் கேட்பினும் படிப்பினும் செய்பவர்கள் நாமாக இருத்தல் வேண்டும். அதற்கு நம் வாழ்க்கையை நாம் முழுமையாக நமது பிறப்போடு சேர்ந்த உரிமையோடு வாழ்தல் அவசியமாக இருக்கிறது. 

இருக்கு என்று சொன்னால் ஆம் என்று சொல்ல ஒரு குழுவும், இல்லை என்று சொன்னால் ‘இல்லையா’ ஆம் இல்லை இல்லை என்று சொல்ல ஒரு குழுவாகவும் நாம் பிரிதல் ஆபத்து. ஆனால் அந்தப் பிரிதலில் உள்ளூறும் குழு மனப்பான்மையை ஊடகங்கள் நிறையத் தருகிறது. ஒரே ஒரு மணி நேரத்திற்குள் ஒரே ஒரு தொலைக் காட்சிக்குள் ஒரே ஒரு நிகழ்ச்சியின் ஊடாக பத்து தேயிலைத் தூளும் இருபது உடம்புத் தேய்த்துக் குளிக்க சோப்பும் தரமாக உள்ளதாக காசுக்கு ஏற்ப விளம்பரம் செய்யும் ஊடகத்து தொழில் தர்மத்தை அங்கீகரிக்கும் மக்களாக நம்மை மாற்றியது யார்? அந்த மாற்றத்தை சுவையுற ஒரு ஊடகம் செய்கிறது எனில் அதை விட்டுவிலகாத அல்லது ஒரு மாற்றத்தையேனுமங்கே ஏற்படுத்தாத நாம் என்ன ஒரு சமநிலைப் புரிதலை அந்த ஊடகங்கள் வழியே நமக்குள் ஏற்படுத்திக் கொள்ளப் போகிறோம்? 

வெறும் உழைப்பதும் சலிப்பதும் அல்ல வாழ்க்கை. பொழுதுபோக்கு வேண்டும். ஆனால் அது ஆடற் கலையின் வழியும், பாடல் கலையின் வழியும்,  சித்திரக் கலையாகவும், தற்காப்புக் கலையாகவும், விளையாட்டாகவும் உடற்பயிற்சியகவும் மூளையையும் திறமையையும் தனக்குள் தோன்றியதைக் கொண்டுவருவதாகவும் இருத்தல் வேண்டும். இடையே நாம் நம்மை முகம் பார்த்துக் கொள்ள ஊடகங்களை வைத்துக் கொள்ளலாம். நாம் செய்வதைப் பகிர்ந்துக் கொள்ள ஊடகங்கள் உதவலாம். நாம் என்னவாக இருக்கிறோமோ அதை அதை மட்டுமே ஊடகங்கள் காட்டலாம். லட்சியமென்பது இமையமலையின் மீது ஏறுவதாக இருத்தல் வேண்டும்.  அதைக் காட்டுவதே கற்பனையாக அமைதல் வேண்டும். இமையமலையை எட்டித் தொடுவதாக காண்பிப்பதும் எண்ணுவதும் அத்தனைச் சரியான கற்பிதமோ கற்பனையோ அல்ல..

அதற்காக இந்நிலை உடனே, ஒன்றை நிறுத்திவிட்டு இன்னொன்றை ஏற்றிவைத்துவிடக் கூடிய விளக்கைப் போன்று அணைந்தோ எரிந்தோவிடும் நிலையல்ல. இது அதுவாக மாறிய காலப்போக்கு. இனி அதுவாக மாறும். மாறுகையில் நல்ல மாற்றத்தோடு நம் சமூகம் மாறக்கருதி நாமெல்லோரும் நமக்குள் நன்மைகளை விதைத்துக் கொள்ளல் நலம் தரும்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty Re: வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 04, 2013 11:09 am

பகிர்வுக்கு நன்றி பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty Re: வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Nov 04, 2013 8:44 pm

மகிழ்ச்சி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல் Empty Re: வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் - நேர்காணல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum