தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Go down

உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்  Empty உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Post by RAJABTHEEN Wed Dec 22, 2010 3:12 am

உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்




நம் ஒவ்வொருவருக்கும் கை முஷ்டி அளவு இரண்டு பழுப்பு கலந்த கறுஞ்சிவப்பு நிறத்தில் சிறுநீரகங்கள் அதனுள் சுமார் 20 லட்சம் நெஃப்ரான்கள் எனப்படும் நுண்ணிய ஜல்லடை போன்ற உறுப்புக்களும், சுமார் 200 மைல் நீளத்திற்கு மயிரிழையிலும் நுண்ணிய குழாய்களும், நுண்ணிய இரத்தக் குழாய்களும் உள்ளன. இவை இரண்டிற்கும் இதயத்திலிருந்து வரும் முக்கிய இரத்தக் குழாயிலிருந்து நேரடியாக பெரிய சிறுநீரக இரத்தக் குழாய்கள் மூலம் நிமிடத்திற்கு சுமார் 1,200 மி.லி. இரத்தம் பாய்கின்றது.

நெஃப்ரான்-சிறுநீரகத்தின் அடிப்படை சுத்திகரிப்பு அலகு-உறுப்பெருக்கியின் மூலம்









சிறுநீரகங்களில் உள்ள நுண்ணிய ஜல்லடை உறுப்புகள்-நெஃப்ரான்கள் தினமும் சுமார் 180 லிட்டர் ஊணீரை இரத்தத்திலிருந்து திரவமாக பிரித்தெடுக்ககின்றன. இதனை மற்ற நுண்ணிய குழாய்கள் வெறும் 1.5 லிட்டர் கழிவுப்புக்கள் மட்டும் உள்ள சிறுநீராக மாற்றி உள்சிறுநீர்க்குழாய் எனப்படும் இரண்டு ட்யூபுகள் மூலம் சிறுநீர்ப்பைக்கு சொட்டு, சொட்டாக அனுப்புகின்றன. சிறுநீர்ப்பையில் சிறுநீர் 300-500 மி.லி சேர்ந்தவுடன் சிறுநீர் கழிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தவுடன் சிறுநீர் வெளிசிறுநீர்க் குழாய் வழியாக வெளியேற்றப்படுகின்றது.

சிறுநீரகங்கள், அவைகளின் இரத்தக் குழாய்கள், இரண்டு உள்சிறுநீர்க் குழாய்கள், சிறுநீர்ப்பை, வெளிசிறுநீர்க் குழாய், சிறுநீரை சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர்ப்பைக்கு கொண்டு வருதல், அதனுள் சேமித்து வைத்தல், பின்னர் கால நேரம் பார்த்து வெளியேற்றுதல் ஆகியவற்றை கட்டுபடுத்தும் சில பிரத்யேக நரம்புகள் அவைகளின் கட்டுபாட்டில் இயங்கும் தசைகள் ஆகியன இவை அனைத்தும் அடங்கியதே சிறுநீரக மண்டலம் என்பது. எனவே சிறுநீரக வியாதி என்ற சொல் இந்த சிறுநீரக மண்டலத்தின் பல்வேறு பகுதிகளை வெவ்வேறாக பாதிக்கும் பலவித பாதிப்புக்களை குறிக்கும் பொதுவான வார்த்தையாகும். 1000த்தில் ஒருவர் ஒரே ஒரு சிறுநீரகத்துடன் பிறப்பது உண்டு. இவர்களில் அநேகமாக அனைவரும் பிரச்சனையும் இன்றி (தங்களுக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே உண்டு என்பதையே கூட அறியாமல் கூட) தங்கள் முழு வாழ்நாளையும் கழித்து விடுகின்றனர்.

(பார்க்க - ஒரே சிறுநீரகத்துடன் வாழ்க்கை)

சிறுநீரகங்கள் என்னென்ன பணிகளை நம் உடலில் செய்கின்றன?

1. நம் உடல் என்ற இரசாயன உயிர் இயந்திரம் தடையின்றி இயங்க நம் இரத்தத்திலும் மற்ற திரவங்களிலும் உள்ள பல்வேறு இரசாயனங்களின் அளவுகள் (உதாரணங்கள் க்ளுகோஸ், சோடியம், பொட்டாசியம், பாஸ்பேட், கால்சியம், பை-கார்பனேட், யூரிக் ஆசிட் போன்றவை) ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் இருக்க வேண்டியது அவசியம். இதில் மிகப் பெரும்பாலான இரசாயனங்களின் அளவுகளை கட்டுப்படுத்தி சரியான வரையறைக்குள் வைக்கும் இரசாயன கட்டுப்பாட்டு கேந்திரமாக சிறுநீரகங்கள் இயங்குகின்றன.

2. நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு உடலிருந்து வேர்வையாக வெளியேறும் நீரின் அளவு இவைகளை கணக்கிட்டு சிறுநீரின் அளவை கட்டுப்படுத்தி நம் உடலின் மொத்த தண்ணீரின் அளவை எடையில் 60% ஆக வைத்திருப்பதும் சிறுநீரகங்கள்தான்.



3. நாம் உடலின் இயக்கங்களுக்கு சக்தி அளிப்பது, திசுக்களின் வளர்ச்சி, ஆரோக்யம், பழுது பார்ப்பு, பல்வேறு ஹார்மோன்கள், ஜீரண நீர் உற்பத்தி ஆகியவற்றிக்கு உணவு அவசியம். இந்த உணவு செரிமானத்திற்கு பின்னர் பலவகையான செலவு செய்யப்படுகின்றது. இதில் பல்வேறு விதமான கழிவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த கழிவுப் பொருட்கள் இரத்தத்திலிருந்து சிறுநீரகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தனியாக பிரித்தெடுக்கப்பட்டு சிறிது தண்ணீரில் கலந்து சிறுநீராக பிரித்து அனுப்படுகின்றன. எனவே சிறுநீரகங்கள் நம் உடல் உயிர் இரசாயன இயந்திர தொழிற்சாலையின் துப்புறவுத் பாகமாக பணியாற்றுகின்றன. இவ்வாறு சுத்தப்படுத்தும் போது இரத்தத்திலுள்ள முக்கிய சத்துக்களான அல்புமின், க்ளோபுலின், இரத்த அணுக்கள் ஆகியன வெளியேறி வீணாகாமலும் பார்த்துக் கொள்கின்றன. யூரியா, கிரியேட்டினின் எனத் தொட்டு பலவகையான கழிவுப் பொருட்கள் இப்படி உற்பத்தி ஆகின்றன. இரத்தத்தில் யூரியா கிரியேட்டினின் இவற்றின் அளவை அறிந்து கொள்வதன் மூலம் சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

4. நாம் வேறு நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள், உணவுகளில் உள்ள நமக்கே தெரியாத விஷப் பொருட்கள் ஆகியவற்றை வெளியேற்றுவதும் சிறுநீரகங்கள் தான்.

5. இது மட்டுமின்றி சிறுநீரகங்கள் சில முக்கியமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் மையமாகவும் விளங்குகின்றன. நம் உடலிலபு எலும்ப மஜ்ஜையில் இருந்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் அணுக்களை தூண்ட எரித்ரோபாய்ட்டின் (Erythropoietin) என்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. இதனால் தான் சிறுநீரக செயலிழப்பில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைந்து இரத்த சோகை ஏற்படுகின்றது. (பார்க்க-சிறுநீரக செயலிழப்பில் இரத்த சோகை) நம் இரத்தத்தில் கால்சியம், பாஸ்பேட் சத்துக்களை சீராக வைத்திருந்தது அதன் மூலம் எலும்புகளை பல முள்ளதாக வைக்க கால்சிட்ரியால் (Calcitriol) என்ற ஹார்மோன் தேவை. சிறுநீரக செயலிழப்பில் இதன் அளவு குறைவதால் எலும்புகள் பலமிழந்து எலும்புகளில் வலி, எளிதில் எலும்பு முறிவு ஏற்படுகின்றது. தவிர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ரெனின் (Renin) என்ற ஹார்மோன் சிறுநீரகத்திலிருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றது. பெரும்பாலான சிறுநீரக பாதிப்புகளில் அதிக ரெனின் உற்பத்தி செய்யப்படுவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகின்றது.

நமது சிறுநீரகங்கள் பலவித நோய்களால் பலவிதமாக பாதிக்கப்படலாம். சிறுநீரக செயலிழப்பு (கிட்னி ஃபெயில்யர்) என்பது சிறுநீரகங்களின் கழிவுப்புக்களை சுத்தப்படுத்தும் பணி பாதிப்பதால் வரும் நிலையாகும். இது அதிக பட்ச பாதிப்பாகும். இதற்கு முன்பு வரும் வகை பாதிப்புகளால் உடலில் தண்ணீர் தங்குதல், சிறுநீரில் புரதம் வீணாகுதல், உயர் இரத்த அழுத்தம் ஆகியன மட்டும் கூட உண்டாகலாம். இதைப் பற்றி விவரமாக அறிய அதற்குரிய பகுதிகளில் காணுங்கள்.








RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum