தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தொல்காப்பியம் காட்டும் மகளிர் ஆளுமை ! நூல் ஆசிரியர் : பேராசிரியர், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

தொல்காப்பியம் காட்டும் மகளிர் ஆளுமை !  நூல் ஆசிரியர் : பேராசிரியர்,   தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !      நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Empty தொல்காப்பியம் காட்டும் மகளிர் ஆளுமை ! நூல் ஆசிரியர் : பேராசிரியர், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Thu Oct 01, 2020 10:30 pm

https://www.tamilauthors.com/04/550.html

-- தொல்காப்பியம் காட்டும் மகளிர் ஆளுமை !

நூல் ஆசிரியர் : பேராசிரியர், 
தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !


  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 

வெளியீடு : அரசி பதிப்பகம், 78/1, ஆழ்வார் நகர், நாகமலை, மதுரை-625 019.
 பக்கங்கள் : 182, விலை : ரூ. 180.  பேச : 95975 34084

******
நூலாசிரியர் பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க செந்தமிழ்க்கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். காந்தி கிராமியப் பல்கலைக்-கழகத்தில் தகைசால் பேராசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழக அரசின் 2015ஆம் ஆண்டிற்கான இளங்கோஅடிகள் விருது பெற்ற முதல் பெண்மணி.

பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில் மாணவர்களுக்கு தொல்காப்பியம் பற்றி எடுத்து இயம்பிய அனுபவம் துணை நிற்க தொல்காப்பியம் பற்றிய ஆய்வு நூலை வடித்துள்ளார்கள்.

தமிழில் மிகவும் தொன்மையான நூல் தொல்காப்பியம். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று அதிகாரங்களால் ஆனது. பலாச்சுளை போன்றது தொல்காப்பியம். வெளியே கரடுமுரடாகவும், உள்ளே இனிக்கும் சுளையாகவும் இருக்கும். படித்த பண்டிதர்கள், புலவர்கள் இவர்களுக்கு மட்டுமே விளங்கிடும் தொல்காப்பியத்தின் வைர வரிகளை எளிமைப்படுத்தி எல்லோருக்கும் புரியும்வண்ணம் இனிக்கும் பலாச்சுளையாக வழங்கி உள்ளார்.

“பெண்ணியம், பெண்ணுரிமை, பெண் விடுதலை என்றெல்லாம் குரல் எழுப்பப்படும் இன்றைய சூழலில் தொல்காப்பியம் காட்டும் மகளிரின் ஆளுமைத் தன்மைகளைப் புலப்படுத்துவது இந்நூலின் நோக்கம் ஆகும்”.

நூலாசிரியர் தன்னுரையில் நூல் எழுதியதன் நோக்கத்தை நன்றாக உணர்த்தி உள்ளார். மதுரையில் இலக்கிய இணையர் என்று பாராட்டுப் பெற்றவர்கள் தமிழ்த்தேனீ இரா.மோகன் – தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன். அய்யாவின் தாக்கம் அம்மாவிடம் உள்ளது. அய்யா போலவே பாடல் எண், பக்க எண், அடிக்குறிப்புகள், உதாரண நூல்கள் என அனைத்தையும் குறிப்பிட்டு மிக நுட்பமாக நூலை வடித்துள்ளார். பாராட்டுக்கள்.

தலைவியின் அருமை பெருமையை தொல்காப்பிய பாடல்கள், எந்த எந்த இடத்தில் சொல்கின்றன. தலைவன் கூற்றாகவும், தலைவி கூற்றாகவும், தலைவியின் தாயின் கூற்றாகவும், தலைவியின் தோழி கூற்றாகவும் எவ்வாறு சிறப்பித்துள்ளார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பெண்களுக்கு தொல்காப்பியர் எந்த அளவிற்கு மதிப்பு வழங்கி உள்ளார். ஆளுமைத் திறனை விளக்கி உள்ளார் என்பதை ஆய்வு நூலாக, அற்புத நூலாக வழங்கி தமிழ் விருந்து வைத்துள்ளார். தமிழாசிரியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

தொல்காப்பியத்தின் சிறப்பு மட்டுமல்ல. பொருத்தமான இடங்களில் சங்க இலக்கியங்கள் நற்றிணை, திருக்குறள் போன்ற இலக்கியங்களையும் மேற்கோள் காட்டி உள்ளார்.

தலைவி, தலைவனுக்காக மோர்க்குழம்பு வைக்கும் பாடல், அதன் பொருள் அனைத்தும் நூலில் உள்ளது. மோர்க்குழம்பு என்பது இன்று நேற்று வந்ததல்ல. பழங்காலத்திலிருந்து தொடர்கிறது என்பதை உணர் முடிந்தது. நூலாசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள், பல்லாயிரம் பட்டிமன்றங்களும் பேசியவர். இப்பாடலை மேடையில் கூறியபோதும் கேட்டுள்ளேன்.

தலைவியின் கோபத்திற்கு தலைவன் அஞ்சுவது, தலைவியின் கடமை, இப்படி பல வாழ்வியல் கருத்துக்கள், பண்புகள், மரபுகள் உள்ளது. எடுத்து எழுதி உள்ளார். தொல்காப்பியம் என்ற பெருங்கடலில் மூழ்கி நல்முத்துக்களை எடுத்து வந்து தொடுத்து முத்துமாலையாக இந்நூலை வழங்கி உள்ளார்.

தொல்காப்பியம் தொடர்பாக வந்திட்ட அனைத்து நூல்களையும் வாசித்து யோசித்து ஆய்ந்து ஆராய்ந்து இந்நூலை வழங்கி உள்ளார்.

தொல்காப்பியம் படித்திராதவர்களுக்கு பயனளிக்கும் நூல். படித்தவர்களுக்கு அசைபோட உதவிடும் நூல். தொல்காப்பியம் இலக்கணம் மட்டுமல்ல. இலக்கிய வளமும் மிக்க நூல். அறம், புறம் இரண்டு, ஐந்திணைகள் இப்படி எல்லாம் உள்ளது. தொல்காப்பியத்தில் என்று எடுத்தியம்பிடும் நூல்.

தொல்காப்பியம் குறித்து இதுவரை வந்த நூல்களில் இந்நூல் குறிப்பிடத்தகுந்த நூல். இந்நூலிற்கு பரிசும் பாராட்டும் விருதும் வந்து சேரும். நூலாசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது.

இன்றைக்கு ஆணவக் கொலைகள் நடந்து வருவது வெட்கக்கேடு.  தொல்காப்பியம் காலத்திலேயே காதல் இருந்துள்ளது. தலைவன் தலைவி காதல் அங்கீகாரம் வழங்கி மணமுடித்தல் நடந்துள்ளது. காதலுக்கு தோழி உதவி உள்ளார்.

தமிழ்ச்சமூகம் தொல்காப்பியம் காலத்திலேயே நாகரிகம் மிக்க சமுதாயமாக அறிவுத்திறன் மிக்க பெண்கள், வலிமை மிக்க ஆண்கள், பண்பு, மனிதநேயம், பெண்களை மதிக்கும் சமுதாயமாக வாழ்வாங்கு வாழ்ந்து உள்ளனர் என்பதை தொல்காப்பியப் பாடல் வரிகளின் மூலம் நன்கு எடுத்தியம்பி உள்ளார். தமிழன்னைக்கு அணிகலன் வழங்கி உள்ளார். பாராட்டுக்கள்.
.


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[url=https://tamil.pratilipi.com/search?q=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D %E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE .%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF]https://tamil.pratilipi.com/search?q=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%20.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF[/url]
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் ! பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வேரும் விழுதும்! நூல் ஆசிரியர்கள் : ‘தமிழ்த்தேனீ’ பேராசிரியர் இரா. மோகன் ! ‘தமிழ்ச்சுடர்’ பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» படித்தாலே இனிக்கும் ! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum