தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தண்டனை பெறாத வில்லன்

3 posters

Go down

தண்டனை பெறாத வில்லன்  Empty தண்டனை பெறாத வில்லன்

Post by RAJABTHEEN Sat Jan 29, 2011 12:31 am









தண்டனை பெறாத வில்லன்



தண்டனை பெறாத வில்லன்  IdiAmin_468x357


இவர் பிறந்த ஆண்டு தொடர்பில் சரியான தகவல்கள் உறுதிப் படுத்தப்படவில்லை.
1924 அல்லது 1925 இல் பிறந்திருக்கலாம்; மே 18, 1928 இல் பிறந்திருக்கலாம்
என்ற கருத்தும் உண்டு. இவரது ஆட்சி பற்றிய விபரங்கள் பல பயங்கரமானவை ஆகும்.
இடி அமீன் (Idi Amin Dada) உலகின் அதிபயங்கர கொடுங்கோலன், கொலைகாரன்,
காமுகன், சுகபோகத்தின் உச்சத்தில் வாழ்ந்தவர், இவர் செய்யாத அராஜகங்களே
இல்லை.

இந்த அராஜகம் அதன் அதிகபட்ச சாத்தியங்களைத் தொட்டபோதும் உகாண்டா மக்கள்
அவரைக் கேள்வி கேட்காமல், நமக்காகத்தானே செய்கிறார் என்று
உற்சாகப்படுத்தியதுதான் அவர்களது விதியாக அமைந்தது. அமின், தம் சொந்த
மக்களே கற்பனை செய்ய முடியாத கொடூர எல்லைகளுக்குச் செல்லத் தொடங்கினார்.
எண்ணற்ற கொலைகள், கணக்கற்ற மூடிமறைப்புகள்.

முகமூடிக் கொள்ளைக்காரர்கள் செய்யவேண்டியதையெல்லாம் ஓர் அதிபரே வெளிப்படையாகச் செய்த அசிங்கங்கள் உகாண்டாவில் நடைபெற்றன.

இடி அமின் செய்துகொண்டிருந்தது சீர்திருத்தமா, சீரழிவா என்பதை உகாண்டா
மட்டுமல்ல உலகமும்கூட நீண்ட காலத்துக்குப் புரிந்துகொள்ளவில்லை. உண்மை
தெரிய வந்தபோது, நிலைமை கைமீறியிருந்தது. ஒரு தேசம் அங்கே
அழிந்துபோயிருந்தது.

இடி அமின் கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து
ஐந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். ரத்தம் குடிப்பார்,
மனித உடல் பாகங்களைத் தின்பார் என்பதில் தொடங்கி பல உறைய வைக்கும்
குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. கொன்ற உடல்களை
நீர்வீழ்ச்சியில் வீசி முதலைகள் பசியாற வைப்பார் என்று அவர் உதவியாளர்
சாட்சியம் அளித்திருக்கிறார்.
தண்டனை பெறாத வில்லன்  Idi-amin

இடி அமின் குறித்த வதந்திகளும் கட்டுக்கதைகளும் அதிகம். என்றாலும்,
உகாண்டாவின் சர்வாதிகாரியாக அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் அரங்கேறிய
அரசியல் அராஜகங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் மனித உரிமை
மீறல்களுக்கும் வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. எதிர்ப்பவர்களை
மட்டுமல்ல, எதிர்க்க நினைப்பவர்களையும் அமின் அழித்திருக்கிறார்.

உகண்டாவில் கொபேகோ எனும் இடத்தில் காக்கவா பழங்குடி இனத்தில் அவர்
பிறந்தார். இந்த இடம் கொங்கோவுக்கும் சூடானுக்கும் அருகில் உள்ளது.
இடிஅமீனை பராமரிக்க அவரது தந்தை மறுத்துவிட்டார். இதனால் தாயாரிடம் அவர்
வளர்ந்தார். பிரிட்டிஷ் படையான ஆபிரிக்கன் ரைபிள்ஸ் படையில் சேர்ந்து
சேவகம் புரிந்தார். இளம் வயதிலேயே முஸ்லிம்மதத்துக்கு இடிஅமீன் மாறினார்.

1952 - 56 இல் கென்யாவில் "மாவ் மாவ்" புரட்சியை ஒடுக்கச்சென்ற பிரிட்டிஷ்
இராணுவத்தில் அவர் ஆபிரிக்கன் ரைபிள்ஸ் படைசார்பில் பங்கேற்றார். அப்போது
அவர் சிறப்பாகப் பணிபுரிந்ததால் மகிழ்ந்த பிரிட்டிஷ் அரசு அவருக்கு
லெப்டினன்ட் பதவி வழங்கியது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தண்டனை பெறாத வில்லன்  Empty Re: தண்டனை பெறாத வில்லன்

Post by RAJABTHEEN Sat Jan 29, 2011 12:31 am

20ஆம் நூற்றாண்டின் மோசமான சர்வாதிகாரிகளில் இடிஅமீன் மறக்க
முடியாதவர்.உகண்டாவில் அவரது ஆட்சிக்காலத்தில் பழங்குடிமக்களை பழிதீர்த்த
கோரச்சம்பவங்களை நினைத்தால் இன்றைய தலைமுறையினரையும் குலைநடுங்கவைக்கும்.
பதவிவகித்த எட்டு ஆண்டுகளில் ஏறத்தாழ 5 லட்சம் பேரை அவர் கொன்றொழித்தார்.

1896இல் பிரிட்டன் உகண்டாவைக் கைப்பற்றியது. அதைச்சுற்றியிருந்த
அரசுகளையும் அதனுடன் சேர்த்து பிரிட்டன் தனது ஆட்சிக்குக்கீழ்
கொண்டுவந்தது. 1914 இல் அதற்கான எல்லைகளும் வகுக்கப்பட்டன. அதன் பின்னர்
1962 இல் அமைதியான முறையில் உகண்டாவுக்கு சுதந்திரம்
அளிக்கப்பட்டது.. ஆனால், நாட்டின் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள்
கலவரத்தில் ஈடுபட்டதால் நாடு அமைதி இல்லாமல் இருந்தது. பிரதமர் மில்டன்
ஒபோடே, புதிய அரசமைப்பை வகுத்து அதற்கு தானே அதிபர் என்று பிரகடனம்
செய்துகொண்டார். அதன்படி நாட்டில் ஆங்காங்கு இருந்த குட்டி மன்னர்கள்
அதிகாரம் இழந்தனர். இனப்பிரச்சினை தலைதூக்கியது. அந்த நாட்டின் பிரதமர்
ஒபோட்டேக்கும் ஜனாதிபதி கபாகாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒபோட்டே
வெற்றி பெற்றார்.

தண்டனை பெறாத வில்லன்  2
Milton Obote
கபாகா
லண்டனுக்கு தப்பி ஓடினார்.ஜனாதிபதி கபாகாவை ஒபோட்டே லண்டனுக்கு
விரட்டியதற்கு துணை புரிந்தவர்தான் ராணுவத் தளபதி இடி அமீன். இடி அமீன் ஒரு
வஞ்சக நரி. அவரை நம்ப வேண்டாம் என்று ஒபோட்டேக்கு பலரும் எச்சரிக்கை
செய்தனர். ஆனால், அவற்றை எல்லாம்
காதில் போட்டுக் கொள்ளாமல் இடி அமீனுக்கு பல அதிகாரங்களை ஒபோட்டே அளித்தார்.

உகண்டாவைச்சேர்ந்த உள்ளுர் படையினரில் லெப்டினன்ட் ஆனோர் இருவர் மட்டுமே.
அவர்களில் இடிஅமீனும் ஒருவர்.இடிஅமீன் 1951இல் உகண்டாவின்
அதிபாரக்குத்துச்சண்டைவீரர் ஆனார். 1960 வரை அந்த இடத்தை வேறுயாரும்
அவரிடம் இருந்து மீட்கமுடியவில்லை.1962 இல் பிரதமர் மில்டன் ஒபோடேயுடன்
ஒட்டிக்கொண்டு அவரது தீவிர ஆதரவாளர் ஆனார். இடிஅமீன் மீதான
குற்றச்சாட்டுக்களை பிரதமர் கேள்விப்பட்ட போதும் தனது ஆதரவாளர் என்பதால்
அவருக்கு படிப்படியாக பதவி உயர்வு அளித்தார். 1963இல் கேர்ணலாகவும் 1964இல்
துணை கொமாண்டராகவும் இடிஅமீனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

1966 இல் பிரதமர் ஒபோடோவுக்கு எதிராக பொதுமக்களிடம் இருந்து
குற்றச்சாட்டுகள் எழுந்தன.ஒபோடே அரசமைப்பை நிறுத்தி வைத்து அடிப்படை
உரிமைகளை இல்லாமல் செய்தார். அப்படி இருந்தும் இடிஅமீன் ஒபோடேவுக்கு ஆதரவு
தெரிவித்தார்.அதன்பின்பு புதிய அரசமைப்பை ஒபோடே ஏற்படுத்தி அதற்குத்தானே
அதிபர் என்றும் அறிவித்தார்.இந்நேரத்தில் இடிஅமீன் இராணுவப்படை மற்றும்
விமானப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1970 வரை இப்பதவியில் அவர்
தொடர்ந்தார்.இராணுவத்துக்கு தலைவரானவுடன் அவரது "காக்வ" பழங்குடி மக்களை
இராணுவத்தில் புகுத்தினார்.தனக்கு ஆதரவு அளிக்கும் இளைஞர்களை முன்னுக்குக்
கொண்டுவந்தார்.இதனால் அதிபர் ஒபோடேவுக்கும் இவருக்கும் இடையில் இடைவெளி
அதிகரிக்கத் தொடங்கியது.

இராணுவத்தில் அமீனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் எல்லோரும்
கொல்லப்பட்டனர். இதனால் ஒபோடே அவரை இரலணுவத்தலைவர் பதவியில் இருந்து நீக்கி
நிர்வாகப்பதவிக்கு மாற்றினார். 1970 இல் இராணுவ நிதியை தவறாகப்
பயன்படுத்தியதற்காக தன்னைக் கைதுசெய்ய அரசு முயற்சிக்கிறது என்று இடிஅமீன்
உணர்ந்தார். 1971 ஜனவரி 25இல் அதிபர் ஒபோடே நாட்டில்
இல்லாத சமயத்தில் உகண்டாவில் இராணுவப் புரட்சி மூலம் தனது ஆட்சியை அவர் நிறுவினார்.
(ஒபோடே காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அப்போது சிங்கப்பூர் சென்றிருந்தார்).
தண்டனை பெறாத வில்லன்  Idi-amin1

உகண்டாவுக்கு தானே அதிபர் என்றும் முப்படைகளுக்கு தானே தளபதி என்றும்
இடிஅமீன் அறிவித்தார். ஒபோடேயின் இராணுவ ஆதரவாளர்கள் அனைவரையும்
ஒட்டுமொத்தமாக இடிஅமீன் தூக்கிலிட்டார். தன்னை உகண்டாவின் ஆயுட்கால அதிபர்
என்று அறிவித்துக்கொண்டார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தண்டனை பெறாத வில்லன்  Empty Re: தண்டனை பெறாத வில்லன்

Post by RAJABTHEEN Sat Jan 29, 2011 12:32 am

உகாண்டாவில் ராணுவப் புரட்சி நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார் இடி
அமீன். தனக்கு எதிராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மந்திரிகள்
எல்லாரையும் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றார். அதற்கு மேல் பெண்கள்
நிலையோ மிகவும் மோசமாகி விட்டது. அழகான பெண்களை கண்டால் விடவேமாட்டார்.
பெண்கள் உகாண்டாவில் நடமாடவே அஞ்சினர்.

ஒரு பெண் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் வஞ்சம் தீர்ப்பதற்காக
டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும், தொழில் நுட்ப வல்லுநர்களாகவும்
பணியாற்றிய 50 ஆயிரம் ஆசியாக்காரர்களை நாட்டை விட்டு வெளியேற்றினார் இடி
அமீன்.

அதாவது மத்வானி என்று ஒரு பிரபல இந்திய தொழிலதிபர் உகாண்டாவில் குடியேறி பல
தொழில் நிறுவனங்களை நடத்தி வந்தார். இவருடைய மகன் மயூர் மத்வானி இந்தி
நடிகை மும்தாஜை மணந்து கொண்டு உகாண்டாவில் குடியேறி வசித்து வந்தார்.

மத்வானியின் மூத்த மகள் ஒரு விதவை. அவள் மீது ஆசை கொண்டார். இதனை அறிந்த
மத்வானி லண்டனுக்குச் சென்றிருந்த தன்னுடைய மகன் மயூர் மத்வானியிடம்
தன்னுயை விதவை மகளைப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டார். இதனை அறிந்து மிகுந்த
சினம் கொண்டார் இடி அமீன்.

மத்வானியின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்தார். அத்துடன் சினம்
அடங்காமல் உகாண்டாவில் இருக்கும் ஆசியாக்காரர்கள் அனைவரையும்
வெளியேற்றினார்.
தண்டனை பெறாத வில்லன்  Idi_amin_dada

அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் கடுமையான சவால்களை இடிஅமீன் விடுத்தார்.
பாலஸ்தீனத்துக்கும் லிபியாவுக்கும் அவர் நேரடியாக ஆதரவு தெரிவித்தார்.
பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் விமானத்தைக் கடத்தியதில் நேரடியாக இடிஅமீன் அங்கு
பங்குகொண்டார்.

நூற்றுக்கணக்கான பயணிகளுடன் 1976ல் ஏர்பிரான்ஸ் விமானம் தீவிரவாதிகளால்
கடத்தப்பட்டபோது இடி அமீன் தீவிரவாதிகளுக்கு உதவி புரிந்தார். ஆனால்,
இஸ்ரேலிய கமாண்டோ படையினர். ஒரு விமானத்தில் வந்து அதிரடித் தாக்குதல்
நடத்தி பயணிகளைக் காப்பாற்றினர்.

அதுபற்றி ஒரு சிறு கண்ணோட்டம்

ஆபரேஷன் என்டெர்பே

இஸ்ரேலில் இருந்து ஏதென்ஸ் வழியாக சென்றுகொண்டிருந்த பாரிஸ்
சென்றுகொண்டிருந்த ஏர் ஃப்ரான்ஸ் விமானத்தை 2 பாலஸ்தீனிய தீவிரவாதிகள்
உகாண்டாவிற்கு கடத்திச்சென்றனர். அதை இஸ்ரேல் சமாளித்தவிதம் ஒரு த்ரில்லர்
திரைப்படத்திற்கு இணையானது.


ஏர் ஃப்ரான்ஸ் 139 விமானம் இஸ்ரேலில் இருந்து ஜூன் 27, 1976ல் பாரிஸ்
கிளம்பியது. 246 பயணிகளும் 13 விமானக்குழுவும் இருந்த அந்த விமானம்
இஸ்ரேலில் இருந்து கிளம்பியதும் கடத்தப்பட்டது. இந்தியா என்றால் பாகிஸ்தான்
என்பது போல், இஸ்ரேல் என்றால் பாலஸ்தீனர்கள்.


இந்த விமானத்தை கடத்தியதும் 2 பாலஸ்தீனர்கள் மற்றும் 2 ஜெர்மானியர்கள்
அடங்கிய ஒரு குழு. இந்த கடத்தலுக்கு உகாண்டா அதிபர் இடி அமின் உடந்தையாக
இருந்திருக்கிறார்.


கடத்திய விமானம் முதலில் லிபியா கொண்டு செல்லப்பட்டது. அங்கு சுமார் 7
மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. லிபியாவில் விமானத்திற்கு தேவையான
எரிபொருள் நிரப்பி உகாண்டா செல்ல ஆயத்தமானது விமானம். இதற்கிடையில் ஒரு
பெண் தான் கருவுற்றிருப்பதாகவும் அது

கலைந்துவிட்டதாகவும் கூறி லிபியாவிலேயே இறங்கி தப்பித்ததும் நடந்தது.

பின் உகாண்டா சென்று சேர்ந்தது ஏர் ஃப்ரான்ஸ் விமானம். பிறகுதான்
கட்த்திய தீவிரவாதிகள் தங்கள் வேலையைக் காட்டத்துவங்கினர். எதிர்பார்த்தபடி
பணயத்தை அறிவித்தார்கள். ஆனால் அது கிட்டத்தட்ட நடக்க இயலா விஷயமாகவே
இருந்தது. அவர்கள் கேட்டது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தண்டனை பெறாத வில்லன்  Empty Re: தண்டனை பெறாத வில்லன்

Post by RAJABTHEEN Sat Jan 29, 2011 12:32 am

•இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 40 பாலஸ்தீனர்களை விடுவித்தல்

•கென்யா, ஃப்ரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளில்

அடைத்துவைக்கப்பட்டுள்ள 13 தீவிரவாதிகளை விடுவிப்பது

இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளாவிடில், ஜூலை 1 முதல் பயணிகளை
கொன்றுவிடப்போவதாக அறிவித்தனர். இடையில் உள்ள நாட்கள் 3. ஆனால் இதில்
எதிர்பார்க்காத மற்றொரு முகத்தையும் காட்டினர். கடத்திய தீவிரவாதிகள்.
யூதர்களையும், யூதர் அல்லாதவர்களையும் தனியாக பிரித்தனர்.


சில பேச்சுவார்த்தைகளின் பின்னர் சில பயணிகளை விடுவிக்க தீவிரவாதிகள்
ஒப்புக்கொண்டனர்.ஆனால் யூதரல்லாதவர்களையும் விமானக்குழுவையும் மட்டும்.


என்டெபியில் இதற்கென தயாராக இருந்த மற்றொரு ஏர் ஃப்ரான்ஸ் விமானத்தில்
இவர்களை ஏற்றிச்செல்ல முடிவெடுத்தனர். விமானததின் கேப்டன் மைக்கேல் பகோஸ்,
“இந்த விமானத்தின் அனைத்து பயணிகளும் என் பொறுப்பு. அவர்களின்றி நான் செல்ல
மாட்டேன்” என்றார். மற்ற விமானக்குழுவினரும் இதை ஆமோதித்தனர். ஒரு
ஃப்ரெஞ்சு கிறிஸ்தவ

கன்னிகாஸ்திரியும் செல்ல மறுத்து தனக்கு பதிலாக வேரொறுவரை
வெளியேற்றுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் உகாண்டா வீரர்கள் அவரை
வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.


இப்போது விமானத்தில் இருந்தது 80 யூதப்பயணிகளும் 20 மற்றவர்களும்.
இதற்கிடையில் இஸ்ரேல் அரசு வேறொரு வேலையில் மும்முரமாக இருந்தது. ஜூலை
1ம் தேதி நெருங்கிவிட்டதால், இஸ்ரேல் அரசு இன்னும் கொஞ்சம் அவகாசம்
கேட்டது. அதாவது ஜூலை 4 வரை ஒத்திவைக்குமாறும், தாங்கள்
பரிசீலித்துக்கொண்டிருப்பதாகவும் கூறியது. இந்த நேரத்தில் உகாண்டா அதிபர்
இடி அமினும் ஒரு அரசுமுறைப்பயணமாக மொரீஷியஸ் வரை செல்ல வேண்டி

இருந்ததால் அவர், அந்த தீவிரவாதிகளை ஒத்திவைக்கும்படி
கேட்டுக்கொண்டார். கிடைத்த இந்த 3 நாட்களை கொண்டு ஒரு ஆபத்தான திட்டத்தில்
இறங்கியது இஸ்ரேல்.


இஸ்ரேல் ராணுவத்தின் Yekutiel “Kuti” Adam, Matan Vilnai, ,Brigadier
General Dan Shomron அடங்கிய படை ஒன்று திரட்டப்பட்டது. அந்த படை தீட்டிய
திட்டம் ஆபரேஷன் என்டெபே. திட்டம் என்னவென்றால் இஸ்ரேல் ராணுவ விமானங்கள்
திருட்டுத்தனமாக உகாண்டாவின் என்டெபேக்குள்

நுழைந்து பணயக்கைதிகளை காப்பாற்றுவது. இது கிட்டத்தட்ட அசாத்தியமான ஒரு விஷயம்.
தண்டனை பெறாத வில்லன்  En

ஏனென்றால் இஸ்ரேலுக்கு கிடைத்த உதவிகள் அப்படி.

•இஸ்ரேல் தனக்கு அருகாமையில் இருக்கும் அனைத்து நாடுகளுடனும் சண்டையில் இருந்தது.

நல்ல காலத்திலேயே அண்டை நாடுகள் எப்போதும் உதவுவதில்லை. இதில் பிரச்சினையில் இருக்கும்போது கேட்கவே வேண்டாம்.

•எனவே இஸ்ரேலின் முதல் சவால், அண்டை நாடுகளின் வானத்தை விமானப்பயன்பாட்டுக்கு உபயோகிக்காமல் இருக்கவேண்டும்.
•அவ்வளவு தூரம் சென்று மீண்டும் இஸ்ரேல் திரும்ப எரிபொருள் கட்டாயம்
போதாது. எந்த நாடும் எரிபொருள் நிரப்ப அனுமதிக்காது. மேலும் இந்த ஆபரேஷன்
ஒரு மிக ரகசியமான ஒரு விஷயம்.


•என்டெபேயில் விமான ஓடுதளத்தை அவர்கள் உதவியின்று பயன்படுத்த வேண்டும்.
என்டெபே விமானநிலையம் ராணுவத்தால் பாதுகாக்கப்பட்டதால் இதுவும் அவ்வளவு
எளிதல்ல.


இத்தனை சவால்களையும் மீறி விமானநிலையத்துக்குள் நுழைந்தாலும், அவர்களை
எப்படி தேடுவார்கள் என்கிறீர்களா? அங்குதான் இருந்தது ஒரு அல்வாத்துண்டு
போன்ற ஒரு விஷயம்.


உகாண்டாவின் என்டெபே விமான நிலையத்தை வடிவமைத்து கட்டியது ஒரு இஸ்ரேலிய
கம்பெனி. இது போதுமே, அனைத்தையும் முடிக்க. கிட்டத்தட்ட அந்த கம்பெனியிடம்
இருந்து வடிவமைப்பைப் பெற்றுத்தான் இந்த திட்டமே தீட்டப்பட்டது எனலாம்.
அந்த வடிவமைப்பைக்கொண்டு இஸ்ரேலில் ஒரு மாதிரி அமைத்து அங்கு ஒரு சோதனை
செய்து பின்னரே களத்திற்கு கிளம்பினர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தண்டனை பெறாத வில்லன்  Empty Re: தண்டனை பெறாத வில்லன்

Post by RAJABTHEEN Sat Jan 29, 2011 12:32 am

முதல்கட்டமாக அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை, கிட்டத்தட்ட 100
அடிக்குள்ளான உயரத்தில் செங்கடல் வழியாக எகிப்து, சூடான் மற்றும் சவுதி
அரேபியாவின் ரேடார் பார்வையில் இருந்து தப்பித்தது. பின் செங்கடல்
இறுதியில் வலதுபுறம் திரும்பி ஏடென் வழியாக கென்யாவின் நய்ரோபி
விமானநிலையத்தை வந்தடைந்தன இஸ்ரேலிய ராணுவ விமானங்கள். அங்கிருந்து
விமானங்கள்

நேரடியாக என்டெபேயை நோக்கி புறப்பட்டன.

என்டெபேயில் கடைசியாக ஒரு மெகா நாடகத்தை நடத்தியது. என்டெபேயில்
முதலில் ஒரு விமானத்தை தரை இறக்கியது. சற்று முன் தரை இறங்கிய வேறு ஒரு
விமானத்திற்காக போடப்பட்ட ஓடுபாதை விளக்குகளை பயன்படுத்தி இஸ்ரேலிய விமானம்
இறங்கியது.


மொரீஷியஸ் சென்றிருந்த இடி அமின் வந்துவிட்டதைப்போல் ஒரு தோற்றத்தை
ஏற்படுத்த, அவர் எப்போதும் பயன்படுத்தும் கருப்பு நிற மெர்சிடிஸ் கார்
ஒன்று விமானத்தில் எடுத்துச்செல்லப்பட்டிருந்தது. அந்த காரை விமானத்தில்
இருந்து தரை இறக்கி, அதில் இடி அமின் போல தோற்றம் கொண்ட ஒரு இஸ்ரேலிய
கமாண்டோவை இருக்க வைத்து, பின்னால் சில கார்கள் புடைசூழ விமான நிலையத்தில்
நுழைந்தது கார். உள்ளே இருந்த ராணுவம் இடி அமின் வருவதாக நினைக்க
வைக்கவும், அவர்களுக்கு சுதாரிக்க நேரம் கொடுக்காமலும் இருக்க இந்த
நடவடிக்கையை செய்தது இஸ்ரேல்.


ஆனால் விதி வேறு விதமாய் இரண்டு பாதுகாவலர்கள் ரூபத்தில்
காத்திருந்தது. இஸ்ரேல் எடுத்து வந்திருந்தது கருப்பு நிற கார். ஆனால் மிக
சமீபத்தில் இடி அமின் தனது காரை வெள்ளையாக மாற்றி இருந்தார். மேலும் தன்
காருக்கு பின்னால் கார்கள் ஏதும் வரவேண்டாம் என்றும் உத்தரவிட்டிருந்தார்.


இதை நன்கு அறிந்த அந்த பாதுகாவலர்கள், வந்த காரை நோக்கிச்சுட்டனர்.

இது மற்றவர்களை உசுப்பிவிடாமல் இருக்கும் பொருட்டு, இஸ்ரேல் ராணுவம்
உடனடியாக களத்தில் இறங்கியது. அவர்கள் முன்னரே போட்டு வைத்திருந்த
திட்டப்படி அனைவரையும் அடித்து நொறுக்கி 30 நிமிடங்களில் அனைத்து
பணயக்கைதிகளையும் காப்பாற்றி, விமானம் மீண்டும் கிளம்பி இஸ்ரேல் சென்றது.
வழியில் முன்புபோல் கென்யாவில் இரு நிறுத்தம் போட்டுவிட்டு
சென்றது.
தண்டனை பெறாத வில்லன்  Shomronentebbe%25209
இந்த மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள்

இந்த மீட்புப்பணியில் ஒரே ஒரு இஸ்ரேலிய கமாண்டோ மட்டும் உயிரிழந்தார். பணயக்கைதிகளில் 3 பேர் இறந்தனர்.

உகாண்டா தரப்பில் 45 ராணுவ வீரர்கள் பலியாயினர். மேலும் 15 மிக் 17 ரக விமானங்களும் வீழ்த்தப்பட்டன.

இதனைக் கண்டு ஒட்டு மொத்த உலக நாடுகளும் இடிஅமீனை கண்டித்தன. அமெரிக்கா,
பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்தன.

இன ரீதியாக எதிரிகளை அழிக்க இடிஅமீன் முயற்சி மேற்கொண்டார். சிவில்
சட்டத்தை விட இராணுவ சட்டம் அதிக அதிகாரம் படைத்ததாக அறிவிக்கப்பட்டது.
படையினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. காக்வா இனத்தினர் தவிர பிற உகண்டா
இனத்தினர் அநியாயமாக படுகொலை
செய்யப்பட்டனர்.இடிஅமீனின் கொடூரங்களுக்கு மூன்று இலட்சம் பேர் பலியாகி
இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இராணுவ அதிகாரிகள் அரசுப் பணியில்
நியமிக்கப்பட்டனர்.அமைச்சர்கள் இராணுவத்துக்கு கட்டுப்படவேண்டும் என்று
உத்தரவிடப்பட்டது. இதனால் உகண்டாவின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி அழிவுப்
பயணத்தைத் தொடங்கியது.

1978 இல் உள்நாட்டுக்குழப்பங்களை அவர் மறைப்பதற்காக தான்சானியா மீது
தாக்குதல் தொடர்ந்தார்.இடிஅமீனினால் விரட்டப்பட்டதால் பயந்து
தான்சானியாவில் தஞ்சம் புகுந்திருந்த உகாண்டா படையினர் தான்சானியா
படையினருடன் இணைந்து உகண்டாவுக்குள் புகுந்தனர்.

1979 ஏப்ரல் முதலாம் திகதி இப்படையினர் உகண்டா தலைநகர் கம்பாலாவைக்
கைப்பற்றினர். இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று கருதிய இடிஅமீன்
லிபியாவில் தஞ்சம் அடைந்தார்.

தஞ்சம் அடைவதற்கு முன்புவரை எதிரியாக நினைக்கும் மக்களை அழிப்பதிலேயே அவர்
முழுக்கவனம் செலுத்தினார்.லிபியாவிலிருந்து ஈராக்கிலும் இறுதியாக
சவூதிஅரேபியாவிலும் அவர் தஞ்சம் அடைந்தார்.

இடிஅமீன் முஸ்லிம் என்பதால் அவருக்கு இந்த நாடுகள் தஞ்சம் வழங்கின.
சவூதிஅரேபிய அரசு இடிஅமீனின் மாதாந்தச்செலவுக்கு பெருந்தொகைப்பணத்தை
அளித்தது. இதனால் அவர் தனது 4 மனைவிகளுடன் சந்தோஷமாக இருந்தார்.1989 இல்
இடிஅமீன் மீண்டும் உகண்டாவுக்குத் திரும்ப முயற்சி செய்தார். ஆனால்,
கொங்கோவில் அவர் அடையாளம் காணப்பட்டு மீண்டும் சவூதிக்கு அனுப்பி
வைக்கப்பட்டார். 2001இல் மீண்டும் உகண்டாவுக்கு திரும்பவேண்டும் என்று அவர்
அளவுகடந்த ஆசையை மனதில் வைத்திருந்தார்.

லட்சக்கணக்கானோர் வாழ்க்கையை இருளாக்கிய இடிஅமீன் போன்ற சர்வாதிகாரி இனி
பிறக்கக்கூடாது என்பதே உகண்டா மக்களின் இன்றைய ஆசை. ஒரு வில்லன் நியாயப்படி
பெறவேண்டிய எந்தத் தண்டனையும் இறுதிவரை அவருக்குக் கிட்டவில்லை என்பது ஒரு
வியப்பு.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தண்டனை பெறாத வில்லன்  Empty Re: தண்டனை பெறாத வில்லன்

Post by RAJABTHEEN Sat Jan 29, 2011 12:33 am

இது ஓர் இயற்கை மீறலும் கூட. ஆளும்வரை அவரை இனம் காப்பாற்றியது. ஆட்சி போனதும் மதம் காப்பாற்றியது.

ஆனால் அமின்தான் காப்பாற்றப்பட்டாரே தவிர உகாண்டா மக்கள் அல்ல. இன்றுவரை
உகாண்டாவில் தொழில் தொடங்க வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தாலும் யாரும்
போவதில்லை போவதற்கும் தயாரில்லை. இதனாலேயே எல்லா வளங்களும் இருந்தும்
அத்தேசம் உருப்படாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இரத்தக்கொதிப்பு மற்றும் சிறுநீரகக்கோளாறால் பாதிக்கப்பட்ட இடிஅமீன், ஜுலை
18ஆம் திகதி ஜெட்டாவில் உள்ள கிங்பைசல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி இடிஅமீன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தண்டனை பெறாத வில்லன்  Empty Re: தண்டனை பெறாத வில்லன்

Post by rajeshrahul Sat Jan 29, 2011 12:52 am

நல்லா பதிவு நன்றி நண்பா
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

தண்டனை பெறாத வில்லன்  Empty Re: தண்டனை பெறாத வில்லன்

Post by கவிக்காதலன் Sat Jan 29, 2011 7:20 pm

//இடி அமின் கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து
ஐந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். //

நம்ப முடியவில்லை... என்ன மனுஷன்யா இவன்..
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தண்டனை பெறாத வில்லன்  Empty Re: தண்டனை பெறாத வில்லன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum