தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்!

3 posters

Go down

முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்! Empty முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்!

Post by அரசன் Mon Jan 31, 2011 7:14 pm

அன்புள்ள முதல்வருக்கு(?!),
ஒரு அப்பாவி மீனவனின் கடிதம், நீங்கள் நலமா என்று கேட்க்கப்போவதில்லை, உங்கள் நலம் மற்றும் உங்கள் குடும்ப நலம் ஊரே அறியும்! நாங்கள் நலம் என்றும் சொல்லப்போவதில்லை, எங்கள் நாதியற்ற வாழ்க்கையை நாடே அறியும், உங்களுக்கும் உங்கள் அன்னையையும் தவிர்த்து! நீங்கள் எழுதும் கடிதங்களுக்கு மத்திய அரசில் என்ன மரியாதை கொடுப்பார்களோ அந்த மரியாதையை இந்த கடிதத்திற்கு கொடுக்க வேண்டாம்! அது உங்கள் பதவியை காப்பாற்ற எழுதுவது! இது எங்கள் உயிரை காப்பாற்ற எழுதுகிறோம்! தேர்தல் நேரம் வேறு, உங்களுக்கு கூட்டணி பற்றி பேசவும், தொகுதி பங்கீடு பற்றி பேசவுமே நேரம் சரியாக இருக்கும், எங்கள் உயிரை பற்றி உங்களுக்கு கவலைப்பட நேரமிருக்காது! இருந்தாலும்.....எங்களில் ஒருவன் இறந்தால் உங்கள் ஓட்டு கணக்கில் ஒன்று குறையும், அதற்க்காகவாது கவலைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன்!

ஐநூறு மீனவர்களை சுட்டதர்க்குகூட டெல்லி செல்லாத நீங்கள் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு டெல்லி செல்லப்போவதாக கேள்விப்பட்டேன்! நல்லது....அப்படியே உங்கள் அன்னையிடம் எங்களைப்பற்றியும் சொல்லுங்கள்! பிரான்சில் சிங்கின் தலைப்பாகைக்கு வரிந்து கட்டி பேசிய மன்மோகனிடம் சொல்லுங்கள், இங்கு தமிழ் மீனவனின் தலையே போய்க்கொண்டிருக்கிறது என்று! இலங்கைத்தமிழன் சாகும்போதுதான் இந்திய இறையாண்மை தடுத்தது! இப்பொழுது இந்திய மீனவனே செத்துக்கொண்டிருக்கும் பொழுது எந்த இறையாண்மை தடுக்கிறது என்று கேட்டுச்சொல்லவும்,


ஆஸ்திரேலியாவில் ஒரு வட இந்தியன் தாக்கப்பட்டால் கொதித்து எழும் இந்திய பத்திரிக்கைகள் இத்தனை மீனவன் இறந்த பின்னும் மௌனம் காப்பது நாங்கள் இந்தியர் இல்லை என்பதாக அர்த்தமா?! அதுசரி....நாங்கள் தேர்ந்தெடுத்த உங்களுக்கே எங்களைப்பற்றி அக்கறை இல்லை..அவர்களிடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?! ரெம்ப நாளா உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்...எங்களுக்கென்று ஒரு அமைச்சரை நியமித்தேர்களே...அவர் யார் என்ன பெயர் என்று சொல்லமுடியுமா? இத்தனை நடந்த பிறகும் ஒரு கண்டன அறிக்கை கூட விடாமல் உங்கள் பின்னால் பதுங்கிக்கொள்ளும் அவரை பார்க்கவேண்டும்!


எங்கள் உயிரின் மதிப்பு உங்களுக்கு ஐந்து லட்ச்சத்தோடு முடிந்துவிடுகிறது! என்ன செய்வது உயிரோடு இருந்தால் உங்கள் ஓட்டு கணக்கு அதைவிட கம்மிதான்! இதை மனதில் வைத்தாவது நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும்! தமிழின தலைவர் என்று சொல்லியே ஒரு பக்கம் தமிழினத்தையே ஒழித்தாகிவிட்டது! அந்த வெறி பிடித்த வேட்டை நாய்களுக்கு இன்னும் ரத்த வெறி அடங்காமல் இப்பொழுது நாடு தாண்டி நாட்டாமை செய்கின்றது! இங்கு உள்ள தமிழர்களையும் அழித்து விட்டால் உங்கள் வாரிசுகளை எங்கு கொண்டு போய் முதலமைச்சர் ஆக்குவது?! உங்களுக்கு கவலைப்படவேண்டிய விசயந்தான்....யோசிங்க ஐயா! கனிமொழியின் மகன் தலைவராகும் காலத்திலும் கூட வோட்டு போட நாங்கள் வேண்டும்! இந்த படித்தவர்களை நம்ப்பாதீர்கள்! நீங்கள் செய்த ஊழலும், அடித்த கொள்ளையும் தெரிந்துவிட்டால் வோட்டை மாற்றிப்போடும் அபாயம் உண்டு! ஆனால் நாங்கள் மட்டும்தான் ஒரு ரூபாய் அரிசிக்கும் இலவச டிவிக்கும் எப்போதும் மாறாமல் இருப்போம்!


முடிவாக ஒன்று ஐயா....இது முடியாத தொடர்கதை என்று எங்களுக்கும் தெரியும்! அதானால் அவர்களிடம் கேட்டு சொல்லுங்கள், யார் சாவது என்று தெரியாமலே கடலுக்கு செல்வதை விட...வாரம் ஒருவரை நாங்களே தேர்ந்தெடுத்து அனுப்பிகிறோம்! அவர்கள் வெறி அடங்கும் வரை சுட்டுக்கொல்லட்டும்! மகாபாரத்தில் வருமே அதுபோல! எங்களுக்கும் ஒரு பீமன் வராமலா போவான்?!! அதுவரை உங்கள் கடிதங்கள் தொடரட்டும்! அதுவரை உங்கள் வசனத்தை நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்! "வாழ்வது நானாக இருக்க, சாவது தமிழனாக இருக்கட்டும்!"


இப்படிக்கு,
உங்கள் ஓட்டு வங்கியில் ஒரு அப்பாவி மீனவன்


நன்றி : வைகை அவர்களின் பதிவு .... [You must be registered and logged in to see this link.]
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்! Empty Re: முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்!

Post by சிசு Mon Jan 31, 2011 7:33 pm

நியாயமான கடிதம். ஆதங்கம் மிக்க கேள்விகள் நிறைய கேட்டிருந்தாலும் ....

//எங்களுக்கென்று ஒரு அமைச்சரை நியமித்தேர்களே...அவர் யார் என்ன பெயர் என்று சொல்லமுடியுமா?//

இந்த கேள்விக்கு விடை ????? மெய்யான கேள்வி.

//மகாபாரத்தில் வருமே அதுபோல! எங்களுக்கும் ஒரு பீமன் வராமலா போவான்?!! //

வரணும்...

நல்ல பகிர்வு அரசன். நன்றி.
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்! Empty Re: முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்!

Post by அரசன் Mon Jan 31, 2011 7:43 pm

நன்றிங்க நண்பா ... இதை படிதவுடன் மனது ஒரு மாதிரி ஆகிவிட்டது
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்! Empty Re: முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்!

Post by கவிக்காதலன் Mon Jan 31, 2011 11:48 pm

கூட்டணி பற்றி பேசவும், தொகுதி பங்கீடு பற்றி பேசவும், அமச்சர் பதவி வாங்கவும் தான் போறார்...! இவர் தமிழின தலைவர்... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

//நாங்கள் மட்டும்தான் ஒரு ரூபாய் அரிசிக்கும் இலவச டிவிக்கும் எப்போதும் மாறாமல் இருப்போம்!//

இனியாவது திருந்தினா சரி...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்! Empty Re: முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்!

Post by அரசன் Wed Feb 02, 2011 2:24 pm

திருந்தட்டும் நண்பா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்! Empty Re: முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum