தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



" தீரா ப்ரிய சொற்கள். "

3 posters

Go down

" தீரா ப்ரிய சொற்கள். " Empty " தீரா ப்ரிய சொற்கள். "

Post by Sivajisankar Wed Jan 27, 2010 6:46 pm

நீ என் அத்தைபெண்ணாய் இருப்பதில்
அத்தனை சந்தோசம் எனக்கு.."

வீடுவரை சென்று வலிய வம்பிழுக்கத்தான்.

"இரயில் பயணங்களின் தடதடப்பு சத்தத்தினூடே
பால்யகால நினைவுகள் திரும்பிபார்க்கும்
சருகுஇலை மிதிக்கும் காலடி ஓசைகள்..
அலைசிணுங்கியில் காணாது அழுத அழுகைகள்..
ஜன்னலோர கம்பிகளில் முகமழுத்தி
காளையின் கடவாய்ப்பல்லுணவாய்
அசைபோடுகிறேன்..
ரகசியமான சில ரகசியங்களை..!"

ஆமா பொங்கலுக்கு என்னவாங்கி வருவியாம்?? என்ன வாங்கிவர?..

"உன்னோடு பேசும் மாத்திரம்
என் அலைபேசி
அலைசிணுங்கியாகிவிடுகிறது.."

"தாய்க்கு முதல் முத்தம்.., தந்தைக்கு முதல் மாத சம்பளம்..,
காதலிக்கு என் கனவுகள்.., மனைவிக்கு என் இரவுகள்..,
குழந்தைக்கு என் வருமானம்.., நட்புக்கு என் உயிர்..!"
இவையெல்லாம் சேர்த்து என்னை தருவதே உனக்கு உசிதம்.. சிரித்தாய்..

பயணத்தில் அழைப்பு துண்டிக்கப்பட்டு தொடர்பு எல்லைக்கு அப்பால் என்றது..

நாம் கொண்டதொடர்புக்கு எல்லை இருக்கிறதாஎன்ன?

மீண்டும் உன் அழைப்பு...

பாதிபயணம் பேசியே போயிருக்கும்..

"உன்னோடு பேசும்போது..
செல்போனில் ஜார்ஜ் தீரக்கூடும்..
இருந்தாலென்ன.,?
என் செல்களில் ஜார்ஜ் ஏறி இருக்கிறதடி"

காலையில் உன் வீடு கடந்தே என் வீடு செல்லவேண்டும்.. எனக்குப்பிடித்த மாம்பழ கலர் தாவணியில் எதிபார்க்கிறேன் உன்னை..

நினைத்தது போலவே வந்தாய்..

போன மொற வரும் போதும் இதே டிரஸ் தான் போட்டுருந்த? என்ன குளிக்கலியா??.. ஏய்.. உனக்கு இதான் பிடிக்குமுன்னு சொன்னியே.. அதான்..

"கோபம் கழித்த புன்னகை
உன்னிதழில்..
பனிக்கட்டி நீராவதைப்போல..."

பேண்டிலிருந்து கைலிக்கு மாறி உன்வீடு வருகிறேன்..

ஆமா பொங்கலுக்கு என்ன ஸ்பெசல்.?? ம்ம்ம் கரும்புச்சர்க்கரை என்றேன்..

புருவம் உயர்த்தி என்னவென்றாய்..

" உன் இடைகரும்பு இதழ் சக்கரை " என்றேன்.. அடிதான் விழும் ஓ

கைகளால் மறைத்துக்கொண்டாய் உன் வெட்கத்தை

" இத்தனை நாளாய் எங்கு தான் வைத்திருந்தாயோ..??
இத்தனை கிலோ வெட்கத்தை..?"

"உதட்டுமேல் பூத்திருக்கும் பூனைமுடிகளை
கிண்டல் செய்கிறேன் நீ கோபிப்பாயென"
திரவ நட்ச்சத்திரம் தேங்கிய கண்களில் இடைவெளிவிட்டு புன்னகைக்கிறாய்..

"என் காதை திருகு.. என் கன்னம் கிள்ளு..

என் தலையில் குட்டு.. என்னை செல்லமாய் கடி..
அதற்கேனும் கோபிக்கிறேன் உன்னை.."

" உன் பற்களின் இறுக்கம் உன் முகத்தில் தெரிகிறது.."

உன் இறுக்கம் தளர்த்த.. வெண் பொங்கலுக்கும் சக்கரைப் பொங்கலுக்கும் என்ன வித்தியாசம்.? என்றேன்
உன் உதட்டுப்பிதுக்கல் தெரியாது என்று உணர்த்தியது..

" உன் விரல் பட்ட பொங்கல் வெண்பொங்கல்
உன் இதழ் பட்ட பொங்கல் சக்கரைப்பொங்கல்.." என்றேன்.. சிரித்தாய்..

"நெருக்கித்தொடுத்த உன் சிரிப்பை
கடன் பெற்று செல்கின்றன
மன்மதன் அனுப்பிய தேவதைகள்.. "

சிறப்பு நிகழ்ச்சி மாற்றிகொண்டுந்த என் கரங்களில் ரிமோட்டை பிடுங்கி கரும்பை தின்னக்கொடுத்தாய்..

தெரியுமா?

" உன் நாவுறிஞ்சும் சாறுக்கு சொர்க்கம்
உன் இதழ் துப்பும் சக்கைக்கு நரகம் " என்றேன்....

அச்சச்சோ.. அப்போ சக்கை எல்லாம் நரகத்துக்கு போகுமா??

உன் குவித்த உதடுகளில் கருணை கண்கள்..

இல்லையடி என் செல்லமே..

" உன் பற்களில் சிக்குண்ட சக்கையும்
சொர்க்கம் சேரும்.."

ம்ம்ம்.. அப்படியா என்கிறாய்..

" எச்சிலோடு சேர்த்து பரியச்சொற்களையும் தின்னத்தரும்
எட்டுவயது சிறுமியாக தெரிகிறாய் இன்னும் எனக்கு.."


(இனி )

[You must be registered and logged in to see this link.]
Sivajisankar
Sivajisankar
மல்லிகை
மல்லிகை

Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai

Back to top Go down

" தீரா ப்ரிய சொற்கள். " Empty "தீரா ப்ரிய சொற்கள்.. II "

Post by Sivajisankar Tue Feb 02, 2010 7:34 pm

நீ என் அத்தைபெண்ணாய் இருப்பதில்
அத்தனை சந்தோசம் எனக்கு.. (பகுதி-II)


**
இது எனக்கு பிடித்தமான பொங்கல் என் பிரியத்துடன்....
வாவென கோவிலுக்கு அழைத்தாய்...

உன்னோடு கோவிலுக்கு வரும் மாத்திரம்
நம்புகிறேன் கடவுள் இருப்பதை..!

கொன்றை நாகரையும்,அரசமர பிள்ளையாரையும்
சுற்றி வருகிறாய்... நான் உன்னை..!

நீ அடிப்ரதிட்சை செய்கிறாய்
நான் உன்னை அடிக்கொரு பிரதிட்சை செய்கிறேன்...

தொடாமலே தொடர்ந்து வருகிறேன் உன்னை...
இதழுக்கும் புல்லாங்குழலுக்குமான இடைவெளியில்,

என் சட்டை பின்புறம் பிடித்து “கூ....” என ரயில் வண்டி ஒட்டிய ஞாபகம் என்றேன்...

உன் இதழோரத்தில் புன்னகையும், உன் இமையோரத்தில் வெட்கமும்...

முன்போல நீ இப்போது இருப்பதில்லை.,

முன்பெல்லாம் சிரிப்பாய்
இப்போது புன்னகைக்கிறாய்... என்றேன்....

என் மீசையின் கண்கள் அறியும்
உன் பூப்பெய்திய புன்னகை வெட்கத்தை..!

நாளை ஊருக்கு கிளம்பியாகவேண்டும்.. என்றேன்.

மௌனம் பூட்டிக்கொண்டிருந்தது உன் நாவை.
எழுத்துக்கூட்டி பேசத்துவங்கி பின்
புரியாத ஹச்டிஎம்ல் கோடாய்
மழலையில் முனங்கி முடித்தாய்...

பிடித்தமானவரை அழவைத்து பார்ப்பது உன் பொழுது போக்கா என்ன???
இப்போ என் அத ஞாபகப்படுத்துற..?

எனக்கும் உன்னை அழவைத்து பார்க்க ஆசையா என்ன.? ஆனால் அதானே நிசம்..

காம்புடைத்த கள்ளிச்செடியாய்
சட்டென உதிர்த்தாய் உன் கண்ணீரை..
என் கண்ணிலும் உண்டடி உணர்வுகள் உதிர்க்கும்
உறவுத்திரவம்.!

மரத்தடி நிழலில் அமர்ந்தாய் அருகில்...
உன் தலை என் தோள் சாய்ந்தது..
உன் கம்மலின் மொட்டுகள் காதை அழுத்தி இருக்கும்.,
என் தொடையோடு தலை சேர்த்து தொடர்ந்தாய்...
கண்ணீர் நனைத்து நைந்த வார்த்தைகள் உன் வாயிலிருந்து..

என் தாயின் கதகதப்பை உணர்கிறேன்..
உன் சின்ன கோபத்தில் தாயாகிறேன்...
என் பிறப்பில் இது புதிது...

என் மீசை முடிகள் உதிருதடி.,
என் மாரிலும் பால் சுரக்குதடி.,
பெண்மை உணர்கிறேனடி..
பெண்ணே உன்னாலடி..!

கண்டிப்பா போய் ஆக வேணுமா.?

பணம் என் தேவையாய் இருக்கிறது.
தங்கம் பொதிந்த வைரமணிகள் இல்லையெனினும்,
என் பேர் சொல்லி சுமக்க தாலிச்சரடுக்கேனும்...
இந்நாளில் காதலியான என் மனைவிக்கும்,
நாளை மனைவியாகும் என் காதலிக்கும்,
பணம் என் தேவையாய் இருக்கிறது..

செலவீனம் நடுத்தர வர்கத்தின் பலவீனம்...

ம்ம்ம்.… என்றாய் புரிந்து கொண்டவளாய்...

நீர்க்கூட்டுப் பொத்தல் உதிர்த்த
உன் கண்ணிருந்து குழிந்த என் கையகம்
நிரம்பி வழிகிறது கண்ணாடி நிற திரவம்...

அழுகை, தற்காலிக ஆறுதல்..
அழுகை, உயிரியின் முதல் உணர்ச்சி..
கண்ணீர், துக்கம் கரைக்கும் அமிலம்..

சம்மட்டி அடித்த உளித்தலையாய்
நசுங்கிக்கிடக்கும் உன் முகத்தில் புன்னகை...

என் இதயமென இறுக்கிய உன் கரங்கள் தாமரை..
ஒவ்வொரு இதழாய் திறந்தேன்..
ஒவ்வோர் விரலாய் அழுத்தி
"பருப்பு, பாயாசம், சாம்பார், வடை...
அப்பாவுக்கு கொண்டுபோற வழி எங்கே...
அம்மாவுக்கு கொண்டுபோற வழி..
அப்பறம் எனக்கு... எனக்கு.."
உன் அக்குளில் கூச்சம் செய்த என் விரல்களால்
சிரித்தாய்.. சிலிர்த்தாய்..
கீரைத்தண்டாய் வளைந்தாய்.!
வாழைத்தண்டாய் ஓடிந்தாய்.!

சிரி..
ஒவ்வோர் செல்லிலும் சிரி..
ஒவ்வோர் பற்களாய் புன்னகை செய்...
சிரிப்பு நர வாழ்வின் கொடை..
ஆறறிவின் அற்புதம்..
குலுங்கச்சிரி..

நீ சிரித்த இடங்களில் சிதறிக்கிடக்கின்றன
சில்லறைகள் இன்னும் சிரி..,
என் பயண செலவுக்கு ஆகும் என்றேன்..

ம்ம்க்கும்… போதும் உன் சிரிப்பு.. வா போகலாம் என்று என் கரம் பற்றி அழைத்து சென்றாய்..

ஹெர்பேரிய பூக்களாய் உன் இதழ் பதியமிட்ட
உன் கைக்குட்டையை எடுத்துக்காட்டினேன்..

வில்லாய் வளைத்த உன் புருவங்களில் சோளப்புன்னகை...

இத இன்னும் வச்சிருக்கியா.? என்றாய்...

ம்ம்ம்... என்றேன்..

ம்ம்ம்ம்..

ஊருக்குப்போனா என்ன மறந்து விட மாட்டியே.? என்றாய்..

மரித்தால் மட்டுமே சாத்தியம்
உன்னை மறப்பதென்றால்..!


என் கணிப் பொத்தான்களில் கடவுச்சொல்லாய்
இருக்கும் உன்னை எப்படி மறக்க?

இல்லையடி என் செல்லமே..
நான் உன்னை விடப்போவதும் இல்லை..
விட்டுத்தரப் போவதுமில்லை..

இனி என் சகோதரிக்கும் விட்டுத்தர மாட்டேன்,
உன் கழுத்திலேரும் மீதமிரு முடிச்சுகளை..! என்றேன்...

சுட்ட மண்ணில் பட்ட நீராய் ஓடி ஒளிந்தாய்..


“யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே”

(குறுந்தொகை, குறிஞ்சித்திணை, தலைவன் கூற்று, பா- 40, செம்புலப் பெயல்நீரார்)
விளக்கம் :-
என் தாயும் உன் தாயும் யாரோ? எவரோ?
என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையில் உறவினர்?
நீயும் நானும் தான் எந்த வகையில் அறிமுகமாகியிருந்தோம்?
செம்மண்ணில் விழுந்த மழைநீர்போல
நம்நெஞ்சங்கள் அன்பினால் இரண்டறக் கலந்துவிட்டன.

வெட்கத்தில் துவங்கி சோகம் கடந்து
பின்னும் வெட்கத்தில் முடிந்தது,
மாலையும் இரவும் காலையும் உன் போலவே.!

இருட்டறையின் சன்னல் கம்பிவழி
வந்து விழுந்தன சூரியத்துண்டுகள்.
சுடோகு கட்டங்களாய்..!

தாவணி முடிப்பவிழ்த்து நெற்றியில்
திருநீற்றுப்பொட்டு வைத்தாய்..

பத்து முறை சொல்லியாயிற்று,
மீண்டும் ஒரு முறை..

நல்ல சாப்பிடு, நல்லா தூங்கு.,
பத்திரமா போய்ட்டுவா, மறக்காம போன் பண்ணு...

நீ சொன்ன பின் தான் ஐயம் எனக்கு..
இனி உண்ணுவேனா., உறங்குவேனாவென.…

ப்ரியச்சொற்கள் பிசினைப் போல
உலராத நாவினுள் ஒட்டிக்கிடக்கும்..

அடைக்கப்பட்ட கூண்டுக்குள்
சிறகு வெட்டப்பட்ட கிளி நீ..

கதவிடுக்கு வழி எட்டிப்பார்த்த விரல்களால்
டாட்டா என்றாய்...

வரும் போதைவிட இப்போது
அதிகம் கனக்கிறது என் கைப்பை..
உள்ளூற உன் நினைவுகளால்..!

அப்பர் பெர்த்தில் சில லக்கேஜ்களுடன்
தூங்குகிறது என் உடல்.,
அது வெறும் உடல் மாத்திரமே..


[You must be registered and logged in to see this link.]


Last edited by Sivajisankar on Wed Mar 17, 2010 3:38 pm; edited 1 time in total
Sivajisankar
Sivajisankar
மல்லிகை
மல்லிகை

Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai

Back to top Go down

" தீரா ப்ரிய சொற்கள். " Empty Re: " தீரா ப்ரிய சொற்கள். "

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Feb 13, 2010 5:54 pm

அருமை வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

" தீரா ப்ரிய சொற்கள். " Empty Re: " தீரா ப்ரிய சொற்கள். "

Post by jeba Sat Feb 20, 2010 5:22 pm

படிக்க படிக்க இன்டிரஸ்டாக உள்ளது. அருமை நண்பரே.
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

" தீரா ப்ரிய சொற்கள். " Empty Re: " தீரா ப்ரிய சொற்கள். "

Post by Sivajisankar Thu Feb 25, 2010 12:16 pm

நன்றி தமிழ் பார்க்ஸ்., இது எனக்கு அதிக வாசகர்களை பெற்று தந்த காதை...
நன்றி ஜெபா... என்ன கொஞ்ச நாளா காணோம்//???
Sivajisankar
Sivajisankar
மல்லிகை
மல்லிகை

Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai

Back to top Go down

" தீரா ப்ரிய சொற்கள். " Empty Re: " தீரா ப்ரிய சொற்கள். "

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 25, 2010 1:23 pm

ஓ அப்படியா இன்னும் தொடர்ந்து எழுதலாமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

" தீரா ப்ரிய சொற்கள். " Empty Re: " தீரா ப்ரிய சொற்கள். "

Post by jeba Thu Feb 25, 2010 3:08 pm

ஆம் நண்பரே சிறிது நாட்கள் வர முடியவில்லை.இனி தினமும் ஒரு முரையாவது தோட்டத்திற்க்கு வர பார்க்குறேன்.என்னை தேடிய நல் உள்ளத்திற்க்கு நன்றி.
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

" தீரா ப்ரிய சொற்கள். " Empty Re: " தீரா ப்ரிய சொற்கள். "

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 25, 2010 3:10 pm

என்ன ஒருமுறை தானா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

" தீரா ப்ரிய சொற்கள். " Empty Re: " தீரா ப்ரிய சொற்கள். "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum