தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விடுதலைச் சிறுத்தைகள் 10 இடங்களிலும் அதிர்ச்சித் தோல்வி!
2 posters
Page 1 of 1
விடுதலைச் சிறுத்தைகள் 10 இடங்களிலும் அதிர்ச்சித் தோல்வி!
சென்னை: பத்து இடங்களில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகளுக்கு இந்தத் தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகளுக்கு கிடைத்துள்ள இந்தத் தோல்வி தமிழ் உணர்வாளர்களுக்கு சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின்
தலித் சக்தியா, தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக இருப்பவர் தொல்.
திருமாவளவன். திமுக கூட்டணியில் இடம் பெற்று விட்ட ஒரே காரணத்திற்காக, ஈழத்
தமிழர் பிரச்சினையில் உலகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸை
எதிர்த்து கடுமையாகக் கூட குரல் கொடுக்க முடியாத இக்கட்டான நிலைக்குத்
தள்ளப்பட்டவர்.
ஈழம் பற்றி எறிந்தபோது இவர் கொதித்தெழுந்து குரல்
கொடுத்தபோதெல்லாம், திமுக மூலமாக அவரை அடக்கி வைத்தது வீணாய்ப் போன
காங்கிரஸ். இவரை எம்.பியாகக் கூட ஆரம்பத்தில் காங்கிரஸ் அனுமதிக்கவில்லை.
கடுமையாகப் போராடித்தான் எம்.பி தேர்தலில் போட்டியிடவே முடிந்தது
திருமாவளவனால்.
ஈழத்தில் என்ன நிலை காணப்படுகிறது என்பதை
அறிவிதற்காக காங்கிரஸ் தரப்பில் இலங்கைக்கு திமுக கூட்டணி கட்சிகளின்
எம்.பிக்கள் அனுப்பப்பட்டபோது அதில் திருமாவளவனும் இடம் பெற்றிருந்தார்.
அப்போது அங்கு எதுவுமே பேசக் கூடாது என்று கண்டிஷன் போட்டு திருமாவளவனையும்
அழைத்துச் சென்றது காங்கிரஸ்.
அங்கு போய் சர்வாதிகாரி ராஜபக்சேவை
சந்தித்தபோது, நீங்கள் பிரபாகரனுடன் இருக்கவில்லை. இல்லையென்றால் செத்துப்
போயிருப்பீர்கள் என்று அந்த தமிழ் ரத்தங்களைக் குடித்த ராஜபக்சே
முழங்கியபோது ஒரு காங்கிரஸ் எம்.பியும், திமுக எம்.பியும் கூட ராஜபக்சேவைக்
கண்டித்துப் பேசவில்லை.
இப்படி திமுகவுக்கும், கருணாநிதிக்கும்
இக்கட்டு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக அத்தனையையும் பொறுத்துக் கொண்ட
திருமாவளவன், இந்த தேர்தலில் கூட சீட்டுக்காக திமுகவை அதிகம்
நெருக்கவில்லை.
நிறைய சீட்கள் கேட்டார் என்றாலும் கிடைத்தது
பத்துதான். இருந்தாலும் அதிலும் திருப்திப்பட்டுக் கொண்டு வேட்பாளர்களை
நிறுத்தி மிகத் தீவிரமாக திமுகவுக்காகப் பிரசாரம் செய்தார் திருமாவளவன்.
ஆனால்
என்ன புண்ணியம், ஒரு இடத்தில் கூட திருமாவுக்கு வெற்றி கிடைக்கவில்லையே.
இது தலித் மக்களுக்கு மட்டுமல்ல, ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும்
தமிழ் உணர்வாளர்களுக்கும் கூட பெரும் ஏமாற்றம்தான்.
நிச்சயம்
திருமாவளவனின் வாக்கு வங்கியில் குறைபாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினர், கண்டிப்பாக
சிறுத்தை வேட்பாளர்களுக்காக வேலை பார்த்திருக்க மாட்டார்கள். இதுதான்
திருமாவளவன் கட்சியினர் தோல்வியடைய முக்கியக் காரணமாக இருக்க முடியும்.
மேலும்
ஈழத் தமிழர் பிரச்சினையில் ஆரம்பத்தில் காட்டிய வேகத்தை திருமாவளவன்
குறைத்துக் கொண்டதும் கூட அவருக்கு எதிராக வாக்குகள் திரும்பியிருக்கக்
காரணமாக இருக்கலாம்.
எப்படியோ, தமிழக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட,
தமிழ் உணர்வுள்ள மக்களின் பிரதிநிதியாக இருந்து வரும் விடுதலைச்
சிறுத்தைகளுக்கு இந்த தோல்வி பேரிடிதான்.
நன்றி தேட்ஸ் தமிழ்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: விடுதலைச் சிறுத்தைகள் 10 இடங்களிலும் அதிர்ச்சித் தோல்வி!
பதவி என்று வந்தால் மக்கள் பிரச்சனைகள் எல்லாம் இவர்களுக்கு இரண்டாம்பட்சம் தான்....திமுக கூட்டணியில் இடம் பெற்று விட்ட ஒரே காரணத்திற்காக, ஈழத்
தமிழர் பிரச்சினையில் உலகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸை
எதிர்த்து கடுமையாகக் கூட குரல் கொடுக்க முடியாத இக்கட்டான நிலைக்குத்
தள்ளப்பட்டவர்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» உலக பசி தினம்: போதிய உணவு கிடைக்காததே 50 சதவீத குழந்தைகளின் இறப்புக்கு காரணம் - அதிர்ச்சித் தகவல்
» இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» 2ஜி அலைக்கற்றை விவகாரம்: தொலைபேசி உரையாடலில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
» ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் மண்ணில் புதைகிறது ஆய்வுக் குழுவின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
» உயரமான பாதணி அணியும் பெண்களே கவனம்! ஆய்வு முடிவில் அதிர்ச்சித் தகவல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum