தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm

» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) -    கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm

» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm

» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm

» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm

» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm

» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm

» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm

» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm

» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm

» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm

» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm

» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm

» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm

» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm

» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am

» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am

» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am

» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am

» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm

» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm

» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm

» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



]மாணவர்களிடம் கவிதை எழுதும் படைப்பாற்றல் திறனை உருவாக்குவது எப்படி?

2 posters

Go down

]மாணவர்களிடம்  கவிதை எழுதும் படைப்பாற்றல் திறனை உருவாக்குவது  எப்படி? Empty ]மாணவர்களிடம் கவிதை எழுதும் படைப்பாற்றல் திறனை உருவாக்குவது எப்படி?

Post by Dr Maa Thyagarajan Mon Jun 20, 2011 6:46 pm


மாணவர்களிடம் கவிதை எழுதும் படைப்பாற்றல் திறனை உருவாக்குவது எப்படி?
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்


எழுத்து
டாகடர் மா.தியாகராசன்
துணைப்பேராசிரியர்
ஆசிய மொழிகள் மற்றும் பண்பாட்டுத் துறை
தேசியக்கல்விக்கழகம்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்
சிங்கப்பூர் 677616
drthyagarajan2010@gmail.com




"கலை கலைக்காகவே" என்பாரும், கலை மக்களுக்காகவே என்பாரும் கலையை நன்றாக அறிந்தவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவ்வாறே "கவிதை கவிதைக்காகவா? அல்லது மக்களுக்காகவா?" எனில் மக்களுக்காக என்று கூறலாம். கவிதை என்பது மொழியின் வளர்ச்சி என்றும் மொழியின் நாகரிகம் என்றும் கூறலாம். ‘கவிதை' என்பது காலத்தை வென்று நிற்பது; காலத்தின் அடையாளமாக நிற்பது; கடந்த காலச் சமுதாயத்தின், நாகரிகத்தின், கலாச்சாரத்தின், பண்பாட்டின் பிரதிபலிப்பாக விளங்குவது. கவிதையின் வடிவங்கள் காலந்தோறும் மாறிக் கொண்டே இருக்கிறது. கவிதையின் கருப்பொருட்கள் சமுதாய அக்கறை கொண்டதாக விளங்குகிறது. சமூகச் சீர்கேடுகளைத் தகர்த்தெறியும் கூரிய ஆயுதமாக விளஙகுகிறது.

மரபுக்கவிதை, புதுக்கவிதை என்று இருகூறுகளாக மட்டும் கடந்த நூற்றாண்டுகள் வரை பாகுபாடு செய்யப்பட்டிருந்தன. தற்போது அறிவியல் யுகத்தின் மொழியியல் வளர்ச்சி வேகத்தில் நவீன உள்ளடக்கங்களை ஏந்தி வருகின்ற கவிதைகள், புதுக்கவிதை என்றும் நவீனம் என்றும் ஹைக்கூ என்றும் பல்வேறு பெயர்களையும், வடிவங்களையும் தாங்கி வருகின்றன.
கவிதை என்பது மாணவர் சமுதாயத்திற்கு என்ன நன்மையைத் தருகிறது? கவிதை எழுதுகின்றவர்களால் எதைச் சாதிக்க முடிகின்றது? கவிதை ‘படைப்புத் திறனை' மேம்படுத்தி மொழியின் ஆற்றலை வளர்த்து வாழ்வியலை உணர்த்துகிறது என்பதைப் பதிலாகக் கொள்வது பொருந்தும்.

தொடக்கநிலையில் உள்ள மாணவர்கள் கவிதை எழுதக் கற்றுக் கொள்வது எப்படி?

பொதுவாக அக்காலப்புலவர்கள் மொழி ஆற்றலினாலும் சமூகப் பார்வை கொண்டதனாலும் இயல்பாகவே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர்களாக விளங்கினார்கள். தேசிய மகாகவி பாரதி கூடச் சிறுவயதிலேயே கலைமகள் அருளால் கவிதை இயற்றினார் என்பதைக் கூறக் கேட்டிருக்கிறோம். இவ்வாறு சுயமாகக் கவிதை இயற்றுகிறவர்களுக்கு ‘வரகவி' என்ற சிறப்பும் உண்டு.
எவரும் கருவிலேயே திருவுடையவராக விளங்குதல் என்பது அரிது. கவிதை எழுதத் தொடங்குவதற்கு முன்பு மொழி அறிவு நிரம்ப இருத்தல் அவசியம். ஆனால் மொழியின் ஆழம் கண்ட பின்பு தான் கவிதை எழுதத் துவங்க வேண்டும் என்று எல்லாரும் கருதி விட்டால் யாராலும் கவிதை எழுத முடியாது. ஏனென்றால் மொழி கடலை விடப் பெரியது. சரி பிறகு என்னதான் செய்ய வேண்டும்? அப்படிக் கேளுங்கள். இதோ ஒரு அறிஞர் கவிதை என்ற சொல்லை எடுத்துக் கொண்டு அதற்குள்ளேயே கவிதைக்கான விளக்கத்தைத் தருகின்றார்.
கவிதை இதில் முதல் எழுத்தையும் இரண்டாம் எழுத்தையும் சேர்த்தால் கவி. இது கவிஞனைக் குறிக்கும். இரண்டாம் எழுத்தையும் மூன்றாம் எழுத்தையும் சேர்த்தால் விதை. அதாவத கவிதைக்குக் கருவான விதையைக் குறிக்கிறது. முதல் எழுத்தையும் மூன்றாம் எழுத்தையும் சேர்த்தால் கதை. கவிதையின் பொருளைக் குறிக்கிறது என்றார்.

மரபுக்கவிதை

மரபுக்கவிதை என்பது இலக்கண வரையறைகளைக் கொண்டது. இலக்கணத்திற்காக இலக்கியமா? அல்லது இலக்கியத்திற்காக இலக்கணமா? என்றால் இலக்கித்திற்காகத் தான் இலக்கணம். சங்ககாலக் கவிதைகள் இலக்கணம் அறிந்த புலவர்களால் இயற்றப்பட்டது. இலக்கண விதிகளை நன்றாக அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு கவிதை எழுதுவது என்பது ஒரு வகை. இலக்கண விதிகளை மீறித் தன் உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளுக்கு ஏற்றவாற வார்த்தைகளை வடிவமைப்பது என்பது ஒருவகை. இதில் எதையும் தவறு என்று கூறி ஒதுக்கிவைத்து விடமுடியாது. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பாவின் வகைககளைப் பாகுபடுத்தியுள்ளனர்; ஒவ்வொரு பாவிற்கும் எத்தகைய இலக்கணம் பொருந்தி இருக்க வேண்டும் என்ற விதிப்படி எழுதுவது மரபுக் கவிதையாகும்.

கவிதை என்றால் என்ன?

உள்ளத்தில் உள்ளது கவிதை என்பதும் உணர்வுகளின் வெளிப்பாடுதான் கவிதை என்பதும் கவிதைக்கு அறிஞர்களின் விளக்கம் தரபட்டுள்ளது. அதன் அடிப்பனடயில் உள்ளத்தில் நிறைய கருத்தும் கற்பனையும் இருந்தால்தான் அது உணர்வின் வடிவமாகக் கவிதையாக மலரும்.
‘ சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’ என்பது உண்மை அல்லவா? எனவே ‘மனம்’ என்ற சட்டியில் மொழி என்ற உணவு குறையாமல் இருந்தால்தான் அமுத சுரபி போல எடுக்க எடுக்கப் பெருகி வரும்.

கவிதைக்கு பொருள் எது?

வானத்தின் கீழ் உள்ள பொருட்கள் யாவுமே கவிதைக்குக் கருப் பொருள்தான். கவிதைக்கு என்று கருப்பொருள் எதுவும் தனியாக கிடையாது. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை வானத்தைப் பார்த்து இருக்கின்றோம். ஆனால் அது கவிஞர்களின் பார்வையில் எத்தனை அழகாக இருக்கின்றது. – இதோ ஒரு அழகிய கற்பனைக் கவிதை

நட்சத்திர தோழிகள்
சூழ்ந்து வர
நிலவு மங்கை
‘இரவு’ ஊர்வலம் போகிறாள்.
இக்கவிதையில் தெரியும் கற்பனையைச் சிந்திக்க வேண்டும். தினந்தோறும் உலகில் உள்ள மக்கள் அனைவரும் நிலவைக் காணுகிறார்கள். ஆனால் அது கவிஞனின் கண்களுக்கு மட்டும் ஊர்வலமாகத் தெரிகிறது. அது ஒரு மங்கையின் ஊர்வலமாகத் தெரிகிறது. அதனால் ஒரு கவிதையே பிறந்து இருக்கின்றது. இப்படித்தான் எண்ணங்களைச் சிந்தனைச் சிறகுகளால் கற்பனை உலகில் பறக்கத் தெரிந்தால் கவிதை என்பது தானாக வரும். எந்தவொரு பொருளையும் புதிய சிந்தனையோடு பார்த்துப் பழகுதலே கவிதை எழுதத் தொடங்குவதற்கு அறிகுறியாகும்.




‘அன்பு’ என்பது
வேரினைக் காக்கும்
நீரினைப் போன்றது
நீர் ஓடிப் போனால்
‘வேர்’ வாடிப் போகும்.

இக்கவிதையில் இருக்கும் பொருள் மிக விரிவானது. ஆனால் நான்கே வரிகளில் மிக அழகான உவமையோடு விளக்கப்பட்டு இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் அன்பு கொண்டு பழகும் படியும் உயிர் வாழ்வதற்குத் தேவையான நீர் போன்றது, எனவே அத்தகய நீர் இல்லாமல் போனால் உயிர்களின், ‘உயிர்த்’ தன்மை இல்லாமல் போய்விடும், அவ்வாறே மனித வாழ்க்கையும் அன்பு இல்லாமல் போனால் பயன் அற்றதாகிவிடும். இக்கருத்து மேற்கண்ட கவிதையில் எளிய நடையில் அனைவருக்கும் புரிகின்ற வகையில் சொல்லப்பட்டு இருப்பதை புதிதாகக் கவிதை எழுத முனைகின்றவர்கள் கவனிக்க வேண்டும்.

மரபுக்கவிதை

மரபுìகவிதையில் எதுகை, மோனை, சந்தம், அசை, சீர் தளை,அடி முதலிய இலக்கணங்கள் இருக்க வேண்டும். பெரும்பாலும் சங்க காலக் கவிதைகள் மட்டுமே அவ்வாறு எழுதப்பட்டது. அவ்வாறு மரபுக் கவிதைகள் எழுதுகின்றவர்கள் குறைவாகவே உள்ளனர். காரணம் மரபுக் கவிதையை ஆர்வமுடன் படிப்பவர்கள் குறைவு. இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களைப் புதுக்கவிதைகள் தான் ஈர்த்து வருகிறது, எனவே அத்தகைய புதுக்கவிதையின் மூலம் சமூக மாற்றம் நிகழ்வதைக் கூட நாம் மறுக்க முடியாது. இன்றைய மாணவர்கள் புதுக்கவிதைக்கு அதாவது புதுகவிதை எழுதத் தங்களைத் தயார் செய்து கொள்வதற்கு முன்பு ஒரு சிலவற்றைக் கவனிக்க வேண்டும்.

புதுக்கவிதை

புதுக்கவிதை பற்றி ஒரு கவிஞர் இவ்வாறு கூறி இருக்கின்றார். புதுக்கவிதை என்பது வானத்தில் இருந்தாலும் பூமியைப் பார்க்கும் ஆகாயம். மரபுக்கவிதை என்பது பூமியில் இருந்தாலும் ஆகாயத்தைப் பார்க்கும் மலர் வளையங்கள், என்பதுதான். ஆகாயத்தில் இருந்து பார்ப்பது என்றால் பரந்து விரிந்த சமூகப் பார்வை, என்பதுதான் பொருளாகும். அப்படி விரிந்த பார்வையைக் கவிஞர்கள் கொண்டு இருக்க வேண்டும்.

( வாழ்க்கையை ஒரு கவிஞர் இப்படிக் கூறுகினறார்)

வாழ்க்கை
இட்லி
தோசை
பூரி
இல்லை
‘இடியாப்பம்’ என்ற கவிதையில்

வாழ்க்கை சிக்கலானது என்பதைச் சிங்கைக் கவிஞர் டாக்டர் மா.வீ.தியாகராசன் சாதாரண வார்த்தைகளில் வாழ்க்கையின் சிக்கலுக்கே விடை கண்டு இருக்கிறார் இது புதுகவிதையின் வெற்றி,

(மகாகவியைப்பற்றிய கவிதை)

பாரதி அன்று
எட்டய புரத்தில்
‘இரட்டைப்’ பிரசவம்
ஒன்று தமிழ்
மற்றொன்று பாரதி..

இக்கவிதையில் பாரதி பிறந்ததால் தமிழ் உயர்ந்தது என்பதைக் கவிஞர் சொல்லி இருக்கிறார். இந்தச் சிந்தனையைத் தமிழ்ப்பற்று உடையவர்கள் கவிதை நடையில் எளிதாக வெளிபடுத்த முடியும். இப்படிச் சின்னச் சின்ன உத்திக ளப் புதுக்கவிதை எழுதத் தொடங்குகின்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

புதுக்கவிதை எழுதும் மாணவர்களே...

புதுக்கவிதை எழுத மாணவர்களுக்கு இயல்பாகவே படைப்பு ஆற்றல் இருக்க வேண்டும், காணுகின்ற பொருளை எல்லாம் கவிதையோடு காண வேண்டும் ஒரு முறை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழை மரம் குலை தள்ளி இருப்பதைக் கண்டு, ... இருக்கும் வாழை மொட்டைப் பார்த்து யானையின் துதிக்கை போல இருக்கிறதல்லவர் என்று தன்னுடைய நண்பரிடம் கூறியதாக ஒரு செவி வழிச் செய்தி உண்டு. சாதாரணமாக நமது கண்களுக்கு வாழை மரம் இத்தகய உவமையைக் காட்டி இருக்கிறதா? என்பது தெரியாது, ஆனால் பார்வேந்தருக்கு அப்படித் தோன்றியிருக்கிறது. இதோ இன்னோரு செய்தி, பொதுவாகப் பகல்பொழுது மறைந்து இரவு வருவது தினசரி நிகழ்வு - இதைக் காணுகின்ற கவிஞர் வைரமுத்து அவர்கள்,
‘வானமகள்’
நாணுகிறாள்
வேறு உடை
பூணுகிறாள், என்று கவிதை வடிக்கிறார்.

புதிதாகக் கவிதை எழுதத் தொடங்கும் கவிஞர்கள் இதை எண்ணில் பார்த்தல் வேண்டும்.

செந்தமிழும் நாப்பழக்கம்

செந்தமிழும் நாப்பழக்கம் என்பது பழமொழி. எதையும் ஒரு முறைக்குப் பலமுறை செய்து பார்ப்பதன் மூலம் இயல்பாகவே திறமைகள் கைகூடி வர வாய்ப்புள்ளது.



புதுக்கவிதை எழுத யுத்திகள் - யோசனைகள்

1) சிறந்த கவிஞர்களின் கவிதைகளைப் படித்தல்
2) தினந்தோறும் ஏதேனும் ஒரு தலைப்பில் புதிய வடிவில் சிந்தித்து இரண்டு மூன்று வார்த்தைகளில் கவிதையாக எழுதிப்பார்த்தல்.


அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும் (குறள் – 71)
இக்குறட்பாவின் கருத்து - அன்பினை யாராலும் கதவு இட்டு அடைக்க முடியாது என்பது கருத்தாகும். அவ்வாறு அடைக்க முடியாத அன்பை உள்ளுணர்வில் எழுகின்ற அன்பின் வெளிப்பாடாகிய கண்ணீர் வெளிப்படுதிவிடும் என்பது தெளிவான கருத்தாகும்.

இதனை நன்றாக உள்வாங்கிக்கொண்டு இப்படி எழுதலாம்,
இதயக்கதவு
மூடினாலும்
இமைகளில்
கண்ணீர் ஓடியது
ஒ..இது
அன்பின்.. அடையாளம் !
அதாவது இதயத்தைத் திறந்து பேசமுடியாத வார்த்தைகளைக் கண்களில் பணிக்கும் கண்ணீர்த் துளிகள் வெளிப்படுத்துகின்றதை இவ்வாறு எழுதத் தொடங்குவது நல்லது.
நட்சத்திர
புள்ளிககள் நடுவே
நிலா - ஓ ..
அவள்
கோலம் போடுகிறாள்.
இதில் நிலவு போன்ற அழகான முகம் கொண்ட பெண் வாசலில் கோலம் போடுகிறாள். என்னும் கருத்து அழகிய கவிதையால் சுட்டப் பட்டிருக்கிறது.

இவ்வாறு நமது கற்பனையை நம் கண் முன்னே நிகழும் நிகழுவுகளைப் பற்றியதாக்கி எழுதத் தொடங்குவதன் மூலம் மிகச் சிறந்த கவிஞராக உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.

திருக்குறளைப்பற்றிய கருத்து ஒன்று இவ்வாறு கூறுகிறது அதாவது
"எல்லாப் பொருளும் இதன் பாலுள்ளது" என்பதாகும் எனவே மாணவர்கள் கவிதை எழுதத் தொடங்குவதற்கு முன் திருக்குறளை நன்றாகப் படித்துப் பொருளுணரும் பயிற்சியைப் பெறுதல் நன்று. திருக்குறள் பொருளைக் கவிதையாக்குவது எப்படி? எல்லா துறைகளிலும் அதன் முன்னோடிகள் செய்துள்ள சாதனையைத்தான் பின்வருபவர்கள். அடிப்படையாகக் கொண்டு சாதனை படைத்து வருகிறார்கள், கவிதைத் துறையும் அவ்வாறுதான். திருக்குறள் கருத்தினைப் பின்பற்றிக் கவிதை எழுதப் பழகுதல் என்பது திருகுறள் கருத்தை அப்படியே மொழி பெயர்ப்பது அல்லது காப்பி(Copy) அடிப்பது என்று பொருளல்ல, மாறாக அதன் பொருளில் நின்று நாம் புதிதாகச் சிந்தித்தல் ஆகும்.
எ.கா
பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று ( பொருள் செயல்வகை, குறள்- 753)

இக்குறட்பாவின் கருத்து இதோ, பொருள் என்னும் அணைய விளக்கு எண்ணிய இடங்களுக்கு எல்லாம் சென்று இருள் என்னும் உறுமையினைப் போக்கும், என்பதாகும் இதனை அப்படியே உள்வாங்கிக் கொண்டு இதன் அடிப்படையில் புதிய சிந்தனையோடு எழுதுவது எப்படி?











மாணவர்கள் இவ்வாறு எழுத பழகும் போது மேலும் புதிய சிந்தனைக்ள வளரும்.
பாரதி, பாரதிதாசன் முதலிய முன்னணிக் கவிஞர்களின் கவிதைகளையும் தற்போதுள்ள சிறந்த புதுக்கவிஞர்கள் ஹைகூ கவிஞர்களின் கவிதைகளையும் நன்றாகப் படிக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று என்பதை மறந்து விடக்கூடாது. நீச்சல் கற்ற்க் கொள்ளத் தரையில் இருந்து கொண்டே சில யோசனைகள் பெற்றுக் கொண்டு, தண்ணீரில் குதித்து நீந்த வேண்டும், அவ்வாறே கவிதை எழுதப் பயிற்சி பெறுவதைவிட முயற்சி செய்வது நலம் தரும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பார்வை நூல்கள் விவரம்

• தமிழ் பயிற்றும் முறை , டாக்டர் ந.சுப்பு ரெட்டியார், மெய்யப்பன்
தமிழாய்வகம் வெளியீடு, சிதம்பம், டிசம்பர்2000

• நற்றமிழ் கற்பிக்கும் முறைகள், வி.கணபதி, சந்திரிகா ராஜமோகன் சாந்தா பப்ளிஷ்ர், சென்னை, 2002

• கார்த்திகேயன் கம்பெனி, (1970), கற்பித்தல் பொது முறைகள், ஏசியன் பிரிண்டர்ஸ் சென்னை.

Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

]மாணவர்களிடம்  கவிதை எழுதும் படைப்பாற்றல் திறனை உருவாக்குவது  எப்படி? Empty Re: ]மாணவர்களிடம் கவிதை எழுதும் படைப்பாற்றல் திறனை உருவாக்குவது எப்படி?

Post by jeba Mon Jun 20, 2011 7:28 pm

எனக்கும் கவிதை எழுத தெரியாது. இனி முயற்சி செய்து
பார்க்கிறேன்.
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 36

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum