தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



[b]மரபுத்தொடர்கள் பாடத்தின் வழி மாணவர்களின் சிந்தனையைத் தூண்டிப் படைப்பாற்றல் திறனை வளர்த்தல்

2 posters

Go down

[b]மரபுத்தொடர்கள் பாடத்தின் வழி மாணவர்களின் சிந்தனையைத் தூண்டிப் படைப்பாற்றல் திறனை வளர்த்தல் Empty [b]மரபுத்தொடர்கள் பாடத்தின் வழி மாணவர்களின் சிந்தனையைத் தூண்டிப் படைப்பாற்றல் திறனை வளர்த்தல்

Post by Dr Maa Thyagarajan Mon Jun 20, 2011 6:52 pm

மரபுத்தொடர்கள் பாடத்தின் வழி மாணவர்களின் சிந்தனையைத் தூண்டிப் படைப்பாற்றல் திறனை வளர்த்தல்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

எழுத்து
டாகடர் மா.தியாகராசன்
துணைப்பேராசிரியர்
ஆசிய மொழிகள் மற்றும் பண்பாட்டுத் துறை
தேசியக்கல்விக்கழகம்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்
சிங்கப்பூர் 677616
drthyagarajan2010@gmail.com



சிங்கப்பூர் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் கற்கும் நோக்கங்களுன் ஒன்று பள்ளிப் படிப்பை முடித்து வெளியாகும் போது பள்ளியிலும் பள்ளிக்கு வெளியிலும் தமிழ் மொழியைச் சரியாகவும் பொருத்தமாகவும் பயன்படுத்தும் மொழியாற்றலைப் பெற்றவர்களாக லிளங்க வேண்டும் என்பதே ஆகும். இந்நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சிங்கப்பூர் கல்வி அமைச்சால் தமிழ் மொழிப்பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இந்த மொழிக்கூறுகளைப் பயன்பாட்டுச் சூழலுக்கு ஏற்பப் பயன்படுத்த அறிந்திருக்க வேண்டும் என்பது பொதுவான கொள்கையாகும். உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சூழல்களைத் தீர்மானிப்பதற்கும், பொருத்தமான நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும், தேவையணு¡ன கற்பித்தல் துணைப்பொருள்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் அதனை மையமாகக் கொண்டு நான்கு வகை மொழித்திறன்களைத் தக்கவாறு ஒருங்கிணைத்து நடத்துவதற்கும் ஏற்றவாறு கல்வி அமைச்சால் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மாணவர்களின் சிந்தனையாற்றலைத் தூண்டிப் புதிய முறையில் பாடத்தைக் கொண்டு செல்தற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆதலால் இக்கட்டுரையில் மொழிப்பயிற்சி பாடத்தின் வழி மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக் கொணரவதே நோக்கமாகும்.

உயர்நிலை ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை, மாணவர்கள் அறிய வேண்டிய, தமிழ்ப் பாடத்திட்டத்திலுள்ள மரபுத்தொடர்கள், பல உள்ளன. இவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ளும் முன், முதலில் மரபுத்தொடர் என்றால் என்ன என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மரபுத்தொடர் பாடத்தை எவ்வாறு அறிமுகம் செய்வது, மரபுத்தொடர்ச் சொற்களை எப்படிக் கற்றுப் பொருளை விளங்கிக் கொள்வது என்பதைப் பற்றிய ஒரு புதிய அணுகுமுறையைத் தான் இக்கட்டுரை விளக்குகிறது. ஆதலால் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் சிங்கப்பூர்ச் சூழலில் அமைந்த ஒரு மாதிரி மரபுத் தொடர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கதையை முதலில் மாணவர்களிடம் கொடுக்கவேண்டும். அதன் பிறகு படைப்பாற்றல் திறன் என்றால் என்ன என்பது பற்றி ஒரு சிறு விளக்கம் கூற வேண்டும். மொழிப்பயிற்சி பாடத்தைக் கொண்டு மாணவர்களின் சிந்தனை ஆற்றலைத் தூண்டி அவர்களிடம் அமைந்துள்ள படைப்பாற்றல் திறனை வெளிக் கொணர வேண்டும்.

"மரபு" என்ற சொல்லை எப்படி மாணவர்களிடமிருந்து வரவழைப்பது?
முதலில் பாட அறிமுகமாகக் கணினியின் மூலம் சில மிருகங்களின் பறவைகளின் படங்களை ஒவ்வொன்றாகக் காட்ட வேண்டும். முதலில் ஒரு குரங்கின் படத்தைக் காட்ட வேண்டும். பிறகு மாணவர்களிடம் இது என்ன என்று கேட்க வேண்டும் அப்போது அவர்கள் குரங்கு என்று பதில் கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து இந்தக் குரங்கிற்குப் பிள்ளை பிறந்தால் என்னவென்று அழைப்போம் என்ற வினாவைக் கேட்க வேண்டும் அனைவரும் குரங்குக் குட்டி என்று பதில் கூறுவர் என எதிர்பார்த்தல். அடுத்ததாகப் பசு ஒன்றின் படத்தைக் காட்ட வேண்டும். பிறகு மாணவர்களிடம் இது என்ன என்று கேட்க வேண்டும் அப்போது அவர்கள் பசு என்று பதில் கூறுவர். அதனைத் தொடர்ந்து இந்தப் பசுவிற்குப் பிள்ளை பிறந்தால் என்னவென்று அழைப்போம் என்ற வினாவைக் கேட்க வேண்டும் அனைவரும் கன்று என்று பதில் கூறுவர் என எதிர்பார்த்தல். அடுத்ததாக யானையின் படத்தைக் காட்டவேண்டும். பிறகு மாணவர்களிடம் இது என்ன என்று கேட்க வேண்டும் அப்போது அவர்கள் யானை என்று பதில் கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து இந்த யானைக்குப் பிள்ளை பிறந்தால் என்னவென்று அழைப்போம் என்ற வினாவைக் கேட்க வேண்டும் அனைவரும் யானைக்கன்று, யானைக்குட்டி என்று பதில் கூறுவர் என எதிர்பார்த்தல். அடுத்ததாகச் சிங்கம் ஒன்றின் படத்தைக் காட்ட வேண்டும். பிறகு மாணவர்களிடம் இது என்ன என்று கேட்க வேண்டும் அப்போது அவர்கள் சிஙகம் என்று பதில் கூறுவர். அதனைத் தொடர்ந்து இந்தக் சிங்கத்திற்குப் பிள்ளை பிறந்தால் என்னவென்று அழைப்போம் என்ற வினாவைக் கேட்க வேண்டும் அனைவரும் சிங்கக் குட்டி என்று பதில் கூறுவர் என எதிர்பார்த்தல். அடுத்ததாகக் கிளியின் படத்தைக் காட்டவேண்டும். பிறகு மாணவர்களிடம் இது என்ன என்று கேட்க வேண்டும் அப்போது அவர்கள் கிளி என்று பதில் கூறுவர். அதனைத் தொடர்ந்து இந்தக் கிளிக்குப் பிள்ளை பிறந்தால் என்னவென்று அழைப்போம் என்ற வினாவைக் கேட்க வேண்டும் அனைவரும் கிளிக்குஞ்சு என்று பதில் கூறுவர் என எதிர்பார்த்தல். அடுத்ததாகக் கோழியின் படத்தைக் காட்டவேண்டும். பிறகு மாணவர்களிடம் இது என்ன என்று கேட்க வேண்டும் அப்போது அவர்கள் கோழி என்று பதில் கூறுவர். அதனைத் தொடர்ந்து இந்தக் கிளிக்குப் பிள்ளை பிறந்தால் என்னவென்று அழைப்போம் என்ற வினாவைக் கேட்க வேண்டும் அனைவரும் கோழிக்குஞ்சு என்று பதில் கூறுவர் என எதிர்பார்த்தல். அடுத்ததாகக் ஒரு மனிதனின் படத்தைக் காட்டவேண்டும். பிறகு மாணவர்களிடம் இது என்ன என்று கேட்க வேண்டும் அப்போது அவர்கள் மனிதன் அல்லது ஓட்டப்பந்தய வீரன் என்று பதில் கூறுவர். அதனைத் தொடர்ந்து இந்தக் மனிதனுக்குப் பிள்ளை பிறந்தால் என்னவென்று அழைப்போம் என்ற வினாவைக் கேட்க வேண்டும் அனைவரும் குழந்தை, பிள்ளை என்று பதில் கூறுவர். இவ்வாறு அவர்கள் கூறி முடித்தபின் ஏன் மனிதனுக்கு மட்டும் பிறக்கும் பிள்ளையைக் குழந்தை என்கிறோம்? என்ற வினாவைக் கேட்க வேண்டும். அதோடு சிஙகத்திற்குப் பிறப்பதைச் சிங்கக் குட்டி என்கிறோம், கோழிக்குப் பிறப்பதைக் கோழிக் குஞ்சு என்கிறோம், பசுவிற்குப் பிறப்பதைக் கன்று என்கிறோம். ஏன் இவற்றை மாற்றிக் குழந்தைப்பசு, கோழிக்கன்று, சிங்கக்குஞ்சு என்று மாற்றிக் கூறக்கூடாதா? என்ற வினாவைக் கேட்க வேண்டும். அப்போது மாணவர்கள் இல்லை சார் இது முன்னோர்கள் வைத்த பெயர் என்று கூறுவர் ஒரு சிலர் காலங்காலமாக வழிவழியாக நாம் இப்படித்தான் கூறி வருகிறோம் என்று கூறுவர். ஆம்! காலங்காலமாக வழிவழியாகக் கூறி வருவதை நாம் எப்படி அழைப் போம் என்ற வினாவை மாணவர்களிடம் கேட்க வேண்டும். அப்போது யாராவது ஒரு மாணவன் கண்டிகப்பாக மரபு மரபாக என்ற பதிலைக் கூறுவான் என்று எதிர்பார்க்க வேண்டும். அப்படி அவர்கள் கூறியவுடன் ஆம் இன்று நாம் மரபுத் தொடர்கள் என்ற பாடத்தைப் பார்க்க இருக்கிறோம் என்று கூறிப் பாடத்தைத் துவங்க வேண்டும். பாடஅறிமுகம் முடிந்தவுடன் அதனைத் தொடர்ந்து மரபுத் தொடர்கள் என்றால் என்ன என்பதன் விளக்கத்தை மாணவர்கள் மனங்கொள்ளுமாறு ஒரு சில எடுத்துக் காட்டுக்களைக் கூறி விளக்க வேண்டும்.

மரபுத்தொடர்கள் என்றால் என்ன?
சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ள முடியாததும் முற்றிலும் வேறுபட்ட பொருளில் வழங்கி வருவதுமான தொடர். ( பக்கம் 810 ) என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி மரபுத்தொடர் என்றால் என்பதற்கு விளக்கம் கூறுகிறது. இதை Idiom என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.
மரபுத்தொடர் என்றால் என்ன என்பதற்கு எளிய விளக்கம்
"முற்காலத்தில் பெரியோர்கள் எப்படி? எவ்வாறு? ஒரு பொருளை அழைத்தார்களோ அதுபோல் நாமும் அப்பொருளை அதே சொல்லால் மாற்றமில்லாமல் அப்படியே அழைப்பது மரபு (பழக்கம்) ஆகும். நேரடிப் பொருள்(Direct Meaning) கொடுக்காமல் மறை பொருளைக் (Inner Meaning) கொடுப்பது மரபுத்தொடர் ஆகும் என்று எளிய விளக்கம் கூறி மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து சில எடுத்துக்காட்டுக்களைக் கூறி இன்னும் மாணவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கலாம்.

எடுத்துக்காட்டுக்கள்
கை நனைத்தான்
நேரடிப்பொருள்
கை நனைத்தான் = கையைக் குழாயைத்திறந்து நனைத்தல் அல்லது நீரில் கையை நனைத்து ஈரமாக்குதல்

மறைபொருள்
கை நனைத்தான் =
(ஒருவர் வீட்டில் உறவை நிலை நாட்டும் அல்லது உறுதிப் படுத்தும் முறையில்) உணவைத் தொடுதல் உணவை உண்ணுதல்

காதுகுத்துதல்
நேரடிப்பொருள்
காது மடலில் துளையிடுதல் என்னும் சடங்கு


மறைபொருள்
(ஒன்றைப் பற்றித் தெரிந்தவரிடம் அது அவருக்குத் தெரியாது என்ற எண்ணத்தில் அதற்கு) மாறான செய்தியைச் சொல்லுதல்

கம்பி நீட்டினான்
நேரடிப்பொருள்
வளைந்த கம்பியைச் சிரமம்பட்டு நீளமாக நிமிர்த்தினான்; சரி செய்தான்

மறைபொருள்
காவலர்களை ஏமாற்றி விட்டுச் சிறைச்சாலையிலிருந்து தப்பினான்

மரபுத்தொடர்கள் மாதிரி வாக்கியங்கள்
1. முருகையா தன் நண்பனிடம் மனவருத்தாம் கொண்டதால் அவனுடைய வீட்டில் கைநனைக்க விரும்பவில்லை.

2. ரகு தன் தாயார் மருத்துவமனையில் இருப்பதாக ஆசிரியரிடம் காதுகுத்திவிட்டுத் திரைப்படம் பார்க்கச் சென்றான்.

3. பலத்த கட்டக்காவல்கள் இருந்தும் கைதி சிறைக்கூடத்திலிருந்து
கம்பிநீட்டியது சிறை அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியது.

இதைப் போன்ற மரபுத்தொடர் மாதிரி வாக்கியங்களைக் காட்டவேண்டும். அதன் பிறகு மாணவர்களை உற்சாகப்படுத்தி ஆர்வத்துடன் அதே போன்று வேறு சில மாதிரி வாக்கியங்களை எழுதச் சொல்ல வேண்டும். இப்போது மாணவர்களைச் சிறு குழுக்களாகப் பிரித்து எழுதச் சொல்ல வேண்டும். சுமார் பத்துநிமிடங்கள் கழித்துத் தங்கள் குழுவினர் எழுதிய மரபுத் தொடர்களை வகுப்பின் முன் ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரை வந்து படைக்கச் சொல்ல வேண்டும். இவ்வாறு படைக்கும் போது ஏதாவது பிழைகள் இருந்தால் அதை மற்றொரு குழு மாணவர்கள் திருத்த வேண்டும். ஆசிரியர் இவற்றையெல்லாம் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இறுதியாக ஆசிரியர் அனைத்துக் குழுவினர் எழுதிய மரபுத் தொடர்களைச் சரி பார்த்துத் தவறின்றி எழுதிய குழுவினரைப் பாராட்டி உற்சாகப்படுத்தலாம். இதைத்தொடர்ந்து படைப்பாற்றல் திறன் என்றால் என்பது பற்றிச் சிறு விளக்கத்தை மாணவர்களிடம் கூறி விளக்க வேண்டும்.

படைப்பாற்றல் திறன் என்றால் என்ன?
புதுமையாக, தனித்தன்மையுள்ளவற்றை புனையும் திறனைப் படைப்பாற்றல் திறன் எனலாம். கலைஞனோ, விஞ்ஞானியோ உலகில் மிகப்புதுமையான ஒன்றைத் தயாரிக்கும் போது தனது ஆக்கத் திறனை வெளிப்படுத்துகிறான். தன் அனுபவங்களையும், தான் அறிந்த தகவல்களையும் மாற்றியமைத்துப் புதியதாக ஒன்றைத் தயாரிக்கவோ, கண்டுபிடிக்கவோ அவனிடம் திறமை உள்ளது. படைப்பாற்றல் திறன் மிக்க நம் முன்னோ¡ர்கள் பீத்தோவான், மகாகவி பாரதி ,சர்.சி.வி.ராமன், ஐன்ஸ்டைன், ரைட்ஸ் சகோதரர்கள், தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோராவர். இவர்கள் மட்டும் இல்லையென்றால் இசைத்துறையிலும் கவிதைத் துறையிலும் அறிவியல் துறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்காது என்று கூறி விளக்கம் கூறலாம். ஆதலால் மாணவர்களாகிய நீங்கள் இளம் வயது முதலே கதை எழுதும் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று ஆர்வமூட்ட வேண்டும்.

மாணவர்களிடம் படைக்கும் திறனை உருவாக்குதல்
படைப்பாற்றல் திறன் என்றால் என்ன என்பதை நன்கு விளக்கிய பின் மரபுத் தொடர்களைக் கொண்டு எழுதிய ஒரு மாதிரிக் கதையை அவர்களிடம் கொடுக்க வேண்டும். இப்போது மாணவர்களை மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட குழுவாகப் பிரித்து ஒவ்வொரு குழுவினருக்கும் அதே மரபுத்தொடர்கள் அமைத்து எழுதிய கதையைக் கொடுத்து மெளனமாக வாசிக்கச் சொல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து அவர்களிடம் இதைப் பற்றிக் கலந்துரையாட வேண்டும். மாணவர்கள் நன்கு மரபத்தொடர்களை அமைத்து எழுதிய கதையை நன்கு புரிந்து கொள்ளும் வரையில் கலந்துரையாட வேண்டும். பிறகு ஆசிரியர் தயாரித்து வைத்திருக்கும் (சிங்கப்பூர்ச் சூழலில் அமைந்த ஒரு முன்னுணர்வுக் கருத்தறிதல் பத்தியைக் மரபுத் தொடர்கள் அடங்கியது) (பின்னிணைப்பு-1) கொடுத்துப் படிக்கச் சொல்ல வேண்டும். அதன் பிறகு மற்றொரு முன்னுணர்வுக் கருத்தறிதல் பகுதியை மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் கொடுத்துப் படித்துக் காலியான இடங்களை நிரப்பச் சொல்ல வேண்டும். (பின்னிணைப்பு-2) இப்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் மரபுத்தொடர்களைப் பயன்படுத்தி நிறைவு செய்யச் சொல்ல வேண்டும். இறுதியாக ஆசிரியர் மாணவர்களிடையே தாங்கள் எழுதிய தாளை மாற்றிக் கொள்ளச் சொல்லிச் சரியான விடைகளை ஆசிரியர் கூறவேண்டும். இறுதியாக மாணவர்களிடம் பள்ளியில் நேரமிருந்தால் வகுப்பிலேயே தனித்தனியாக ஒவ்வொரு மாணவரும் ஒரு கதையை எழுதும்படிக் கூறவேண்டும் அல்லது வீடடிற்குச் சென்று அடுத்த வகுப்பிற்கு வரும் பொழுது சிங்க்பூர்ச் சூழலில் கதை எழுதி வரச் சொல்ல வேண்டும். ஆசிரியர் அன்றைய பாடமாகக் கொடுக்கும் அல்லது ஏற்கனவே மாணவர்கள் கலந்துரையாடிய மரபுத்தொடர்களைக் கொண்டு அவர்களைத் தனித்தனியாகக் கதை எழுதச் சொல்வது நல்லது. இவ்வாறு நாம் மரபுத்தொடர்கள் பாடத்தின் வழி மாணவர்களின் சிந்தனைத்திறனைத் தூண்டி படைப்பாற்றல் திறனை வளர்க்கலாம்.

இக்கற்பித்தல் முறையால் மாணவர்கள் அடையும் திறன்கள்

1) மாணவர்கள் மரபுத்தொடர்கள் என்றால் என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்கின்றனர்.
2) மரபுத்தொடர்களுக்கும் சாதரணத் தொடர்களுக்கும் உள்ள வேறுபாட்டை எளிதில் கண்டுணர முடிகிறது. அதாவது நேரடிப் பொருள் கொடுக்காமல் மறைபொருளைக் கொடுப்பது தான் மரபுத் தொடர் என்பதை மாணவர்கள் அறிந்து கொள்கின்றனர்.
3) மரபுத் தொடர்களைப் பொருள் விளங்கும் வண்ணம் வாக்கியத்தில் அமைப்பது எப்போதும் நடைபெற்று வரும் ஒன்றாகும். இம்முறையால் மாணவர்கள் மரபுத்தொடர்களைக் கொண்டு உள் நாட்டுச் சூழலில் கதை எழுதும் திறனைப் பெறுகின்றனர். மாணவர்களிடம் மறைந்திருக்கும் படைப்பாற்றல் திறனை வெளிக் கொண்டு வரத் துணைபுரிகிறது.
4) மரபுத்தொடர்களைக் கொண்டு வாக்கியம் அமைத்த பின்னும் அதே மரபுத் தொடர்களைக் கொண்டு குழுக்களாகப் பிரிந்து உள்நாட்டுச் சூழலில் கதை எழுதிய பின்பும் ஒரு குழு மற்றொரு குழு எழுதிய கதையைப் படித்துத் திருத்தும் போது தாங்களே பிழைகளைக் கண்டறியும் திறனையும் திருத்திக் கொள்ளும் திறனையும் பெறுகின்றனர்.
5) படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்கின்றனர். மரபுத்தொடர்கள் பாடத்தின் வழி மாணவர்களின் சிந்தனையைத் தூண்டிப் படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்ள இம்முறை துணைபுரிகிறது.


பின்னிணைப்பு – 1
குறளரசனின் உயர்நிலைப்பள்ளி முதல் நாள் அனுபவம்
தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத்தேர்வு முடிவுகள் வந்து ஒருமாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. குறளரசன் என்பவன் இந்த ஆண்டு உயர் நிலை ஒன்றில் படிக்கப் போகும் மாணவன். அவனுக்குச் சிங்கப்பூரில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் படிக்க இடம் கிடைத்தது. ஒரு மாத விடுமுறையில் நன்றாக உறங்கித் தாமதமாக எழுவது அவனுடைய வழக்கமாக இருந்தது. பள்ளி விடுமுறை முடிந்தது; பள்ளிக்கு முதல் நாள் செல்லவேண்டியதை மறந்து விட்டு குறளரசன் நன்றாக உறங்கி விட்டான். அவன் கண்விழித்துப் பார்த்த போது நேரம் ஏழு முப்பதைத் தாண்டிக் கொண்டு இருந்தது. அவன் மிகவிரைவாகத் தன் காலைக் கடன்களை முடித்து விட்டுப் பேருந்து நிலையத்தை அடைந்த பொழுது பெரிய முள் பன்னிரண்டையும் சிறிய முள் எட்டையும் தொட்டது. பேருந்தில் இருந்து இறங்கிச் (சிட்டாய்ப்பறந்து) தன் புதுப்பள்ளியை அடைந்தான். வகுப்பிற்குச் சென்ற பொழுது அங்கே பள்ளி முதல்வர் பள்ளியின் அருமை பெருமைகளை மாணவர்களின் (உச்சிகுளிவரும்) வண்ணம் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
மாணவர்கள் அனைவரும் பள்ளி முதல்வரின் உரையைச் (செவி சாய்த்தனர்.) குறளரசனைக் கண்ட உடன் ஓ நீ முகிலரசனின் தம்பியா? முகிலரசனை அப்படியே (உரித்து வைத்து) இருக்கின்றாயே என்று கேட்டு விட்டு நீயும் முகிலரசனைப் போன்று தலை சிறந்த மாணவனாகத் திகழ வேண்டும் என்று முதுகில் தட்டிக் கொடுத்தார். பள்ளி முதல்வரின் அன்பான வார்த்தைகளைக் கேட்டதும் குறளரசனின் மனம் நிம்மதி அடைந்தது. பள்ளி முதல்வரின் உரை முடிந்தவுடன் மாணவர்கள் அனைவருக்கும் கருத்துச் சேகரிப்புப் படிவம் (feed back form) வழங்கப்பட்டது. அதனைப் பெற்ற முகிலரசன் (ஆறவமர) படித்துப் பார்த்து அதனை நிறைவு செய்தான்.
பள்ளியின் இடைவேளை மணி ஒலித்தது. மாணவர்கள் அனைவரும் பள்ளி உணவகத்தை அடைந்தனர். உணவையும், சுவை பானங்களையும் வாங்கிய மாணவர்கள் தன் நண்பர்களுடன் ( வெட்டிப் பேச்சுப் ) பேசிக் கொண்டே உணவை உண்டனர். மற்ற மாணவர்களைப் போல முன்பே அறிமுகமான நண்பர்கள் தனக்கு இல்லாததனால் சற்றுத் தாமதமாகப் பள்ளிக்குச் சென்றாலும் அவன் உள்ளத்தில் தொடக்கப் பள்ளியின் இறுதிநாள் நினைவுகள் நிழலாடிக் கொண்டே இருந்தன. குறளரசன் உணவை வாங்கினான் உணவை அவனால் முழுமையாக உண்ண முடியவில்லை; காரணம் தன்னிடம் நகமும்சதையுமாகப் பழகிய அருட்கொடையரசன் தன் குடும்பத்துடன் இந்தியாவுக்குச் சென்று அங்கேயே தன் படிப்பைத் தொடரப் போகின்றேன் என கூறிச்சென்றதைத் தன் மனதில் அசைபோட்டுக்கொண்டு இருந்தான். பள்ளி இடைவேளை முடியும் மணி ஒலி கேட்டவுடன் சுயநினைவிற்கு வந்தான்; உடனே எழுந்து வகுப்பறையை நோக்கி நடந்தான்.
தன் உயிர் நண்பனின் இடத்தை யாரலும் ( ஈடுகட்ட) இயலாது என்று எண்ணிக்கொண்டு இருக்கும் பொழுது தமிழாசிரியரின் குரல் அவனைத் தட்டி எழுப்பியது. மாணவர்கள் ஒவ்வொருவராகத் தங்களை அறிமுகபடுத்திக் கொள்ளுங்கள் என்று ஆசிரியர் கூறியவுடன், குறளரசன் எழுந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

******* முற்றும் ********

பின்னிணைப்பு – 2
திருந்திய உள்ளம்
குறளரசி ஒரு ஓட்டப்பந்தைய வீராங்கனை. அவள் தன் பள்ளியைப் பிரதிநிதித்துப் பல ஒட்டப்பந்தயப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறாள். ஓட்டப்பந்தயம் என்றால் அவள்¬¬¬------------------விடுவாள். படிப்பிலும் அவள் மிகவும் கெட்டிக்காரி. இதனால், பள்ளி முதல்வரும் , ஆசிரியர்களும் அவள் மீது நல்ல நம்பிக்கை வைத்திருந்தனர். எனவே, பள்ளியில் குறளரசி மிகவும் புகழ் பெற்றிருந்தாள். இப்புகழ் அவள் தோழிகளில் சிலர் அவள் மேல் பொறாமை கொள்வதற்குக் காரணமாகிவிட்டது. பள்ளியில் குறளரசிக்கு இருக்கும் நல்ல பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக அவளுடைய தோழி மீனா,---------------- கள் கூறிக் குறளரசியைப் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கினாள்.
நல்ல பெண்ணாக இருந்த குறளரசி, நண்பர்களால் தீயவழியில் சென்று கெட்டுப் போனாள். இந்தச் செய்தி குறளரசியின் பெற்றோர்களின் காதில் விழுந்தது. தங்கள் மகளின் மீது உள்ள அளவற்ற நம்பிக்கையால், குறளரசியை விரைவிலேயே திருத்திவிடலாம் என்று அவர்கள் சற்று ----------- இருந்தார்கள். ஆனால், நாளுக்கு நாள் குறளரசியின் நிலைமை மோசமானது. போதைப் பொருளே உலகம் என்ற நிலைக்கு மாறினாள். பள்ளிக்கு ஒழுங்காகச் செல்வதில்லை; அவளுடைய இந்தப் போக்கையறிந்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பெற்றோர்கள் எவ்வளவுதான் கண்டித்தாளும், குறளரசி அவர்கள் சொல்வதற்கெல்லாம் ---------------------யாகவே பேசுவாள். குறளரசிக்கு மற்றும் ஒரு நெருங்கிய தோழி இருந்தாள். அவள் பெயர் கோகிலா. கோகிலாவும் குறளரசி திருந்துவதற்கு எடுக்காத முயற்சிகளில்லை. பொறுமை இழந்த கோகிலா, வகுப்பாசிரியரிடம் குறளரசியின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என்பதை ----------------------வின்றி விளக்கினாள். மீனாவை தண்டிக்க வேண்டும் என ஆசிரியர் நினைத்தார். ஆனால் அவளும் போதைப பழக்கத்திற்கு அடிமையாகியிருந்ததால் தண்டித்துப் பயனில்லை; திருத்துவதற்குத் தான் முயற்சி செய்ய வேண்டும் என ஆசிரியர் முடிவு செய்தார். எனவே குறளரசியும் மீனாவும் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்கள். அந்நிலையம் உண்மையிலேயே அவர்களுக்கு மறுவாழ்வை அளித்தது. இருவரும் திருந்தினார்கள்; அக்கொடிய பழக்கத்திலிருந்து மீண்டார்கள். மீனா தான் செய்ததெல்லாம் தவறு என்பதை அறிந்து, குறளரசியிடம் மன்னிப்புக் கேட்டாள். குறளரசி அவளை மன்னித்து, மீண்டும் ஒரு சிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனையாக வேண்டும் என்ற முயற்சியில் முழுமூச்சாக இறங்கினாள்.

உதவிச்சொற்கள்
ஒளிவுமறைவு சிட்டாய்ப்பறந்து
ஆசை வார்த்தை ஒருகைபார்த்துவிடுதல்
ஏட்டிக்கப் போட்டி ஆறவமர
குரங்குப்பிடி கங்கணம் கட்டி

மேற்கோள் நூல்கள்
• க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) ஜூன் 1992,
எண் 268, ராயப்பேட்டை சாலை, சென்னை 6000014
• தற்காலத் தமிழ் மரபுத்தொடர் தி 1997, 9/1 24 கிழக்குத்தெரு, மொழி,
மொழி கலபச்சார வள ம்மபாட்டு அறக்கட்டளை, சென்னை 6000041
• உயர்நிலைப்பள்ளிப் பாடத்திட்டங்கள் 2002, தமிழ் இரண்டாம் மொழி, கல்வி
அமைச்சு, சிங்கப்பூர்

• தமிழ் பயிற்றும் முறை , டாக்டர் ந.சுப்பு ரெட்டியார், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, சிதம்பம், டிசம்பர்2000

• நற்றமிழ் கற்பிக்கும் முறைகள், வி.கணபதி, சந்திரிகா ராஜமோகன் சாந்தா
பப்ளிஷ்ர், சென்னை, 2002

• கார்த்திகேயன் கம்பெனி, (1970), கற்பித்தல் பொது முறைகள், ஏசியன் பிரிண்டர்ஸ் சென்னை


******* முற்றும் ********
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

[b]மரபுத்தொடர்கள் பாடத்தின் வழி மாணவர்களின் சிந்தனையைத் தூண்டிப் படைப்பாற்றல் திறனை வளர்த்தல் Empty Re: [b]மரபுத்தொடர்கள் பாடத்தின் வழி மாணவர்களின் சிந்தனையைத் தூண்டிப் படைப்பாற்றல் திறனை வளர்த்தல்

Post by jeba Mon Jun 20, 2011 7:25 pm

இலக்கணம் சொல்லி தந்தமைக்கு மிக்க நன்றி. இன்னும் உங்களது படைப்புக்களை மலர விடுங்க்கள்.
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

Back to top

- Similar topics
» ]மாணவர்களிடம் கவிதை எழுதும் படைப்பாற்றல் திறனை உருவாக்குவது எப்படி?
» [b]சிங்கப்பூர் மேல் தொடக்கநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்கேம்பர்(Scamper) உத்தியைப் பயன்படுத்தி வாசிப்போடு எழுதுதல் திறனை வளர்த்தல் (கதை) பாடத்தை நடத்துதல்.
» திறன் வளர்த்தல் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
» உங்கள் கண் பார்வை திறனை சோதித்துக்கொள்ளுங்கள்
» உங்களது மூளையின் திறனை மதிப்பாய்வு செய்வதற்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum