தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
[b]சிங்கப்பூர் மேல் தொடக்கநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்கேம்பர்(Scamper) உத்தியைப் பயன்படுத்தி வாசிப்போடு எழுதுதல் திறனை வளர்த்தல் (கதை) பாடத்தை நடத்துதல்.
2 posters
Page 1 of 1

சிங்கப்பூர் மேல் தொடக்கநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்கேம்பர்(Scamper) உத்தியைப் பயன்படுத்தி வாசிப்போடு எழுதுதல் திறனை வளர்த்தல் (கதை) பாடத்தை நடத்துதல்.
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
எழுத்து
டாகடர் மா.தியாகராசன்
துணைப்பேராசிரியர்
ஆசிய மொழிகள் மற்றும் பண்பாட்டுத் துறை
தேசியக்கல்விக்கழகம்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்
சிங்கப்பூர் 677616
drthyagarajan2010@gmail.com
சிங்கை மாணவர்களின் நலனையும் சூழ்நிலையையும் கவனத்திற்கொண்டு, சிங்கப்பூரில் அவ்வப்போது பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுவது போன்று பாடம் கற்பித்தலிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஆசிரியர் வகுப்பில் முதன்மைப்படுத்தப்பட்ட (Teacher Centre) பாடம் கற்பித்தல் முறை மாறி மாணவர்கள் முதன்மைப்படுத்தப்பட்ட (Student Centre) பாடம் கற்பிக்கும் முறை இக்காலக்கட்டத்தில் சிங்கப்பூரில் அதிகமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதை
முன் வைத்துப் பல்வேறு கற்பித்தல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது ‘ஸ்கேம்பர்’ முறை அறிமுகம் கண்டுள்ளது. இது மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்ப்பதோடு, அவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் மொழிப்பாடத்தையும் இலக்கியப்பாடத்தையும் கற்க உதவுகிறது
மாணவர்கள் ஒரு பாடத்தில் நாட்டம் ஏற்பட வேண்டுமென்றால், அப்பாடம் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைய வேண்டும். ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் ஒரே அணுகுமுறையை மட்டும் பயன்படுத்தாமல், வெவ்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தி, மாணவர்களுக்குப் புதுப்புது நடவடிக்கைளில் ஈடுபாடு கொள்ளச் செய்ய வேண்டும். அதனால், மாணவர்கள் மகிழ்ச்சியான சூழலில் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
கொடுக்கப்படும் பாடநூல்கள், பயிற்சிநூல்கள் போன்றவற்றோடு ஆசிரயர்கள் சில கற்பித்தல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தினால், வகுப்பை மேலும் சிறப்பாக நடத்தலாம். மாணவர்களும் அதிகமாகப் பயன் அடைவர். இப்படிப் பயன்படும் அணுகுமுறைகளில் ஸ்கேம்பர் அணுகுமுறையும் ஒன்றாகும்.
ஒரு மாணவனின் புத்தாக்கச் சிந்தனையையும், சிந்தனைத் திறனையும் மேம்படுத்த உதவும் பல அணுகுமுறைகளில் ஸ்கேம்பர் அணுகுமுறையும் ஒன்று. புதுமையான முறைகளில் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வழிகளில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க உதவுகிறது ஸ்கேம்பர். ஒரே பாடத்தில் பல மாற்றங்களைச் செய்து புதுமையான ஒன்றை உருவாக்க இந்த அணுகுமுறை மாணவர்களுக்கு உதவுகிறது.
ஸகேம்பர் உத்தி என்றால் என்ன?
ஸ்கேம்பர் உத்தி என்பது, படைப்பாற்றல் சிந்தனைத் திறனைப் பயன்படுத்தி ஒரு பொருளை அல்லது செயலை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த முறை. இம்முறையை பொப் எபர்ல் ( Bob Eberle) என்பவர் அறிமுகப்படுத்தினார். ஸ்கேம்பர் என்னும் சொல்
S –Substitute – பதிலீடு செய்தல்
C –Combine இணைத்தல் / சேர்த்தல்
A -Adapt பொருந்தச் செய்தல்
M –Modify வேறுவடிவம் தருதல் / பெரிதாக்குதல்
P -Put to other use, வேறு பயன்பாடுகளைக் கண்டு பிடித்தல்
E -Eliminate நீக்குதல் / சிறிதாக்குதல்
R -Re-arrange, ஒழுங்கு /வரிசைமுறையை மாற்றி அமைத்தல்
என்னும் ஏழு ஆங்கில சொற்களின்/ சொற்றொடரின் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
ஒரு பொருள் அல்லது ஒரு செயலுக்கு மாற்றாக வேறு பொருளையோ அல்லது செயலையோ சேர்த்தல் என்பது பதலீடு செய்தலைக் குறிக்கிறது. படிக்கப்பட்ட கதையுடன் வேறு புதிய கற்பனைகளைச் சேர்ப்பது இணைத்தலைக் குறிக்கிறது. ஒரு பகுதிக்கு எந்தப் பொருள் அல்லது செயல் பொருத்தமாக இருக்கும் என்பதை அறிவதையே பொருந்தச் செய்தல் என்ற கூறு விளக்குகிறது. ஒரு பொருளையோ அல்லது ஒரு செயலையோ எவ்வாறு மேம்படுத்திச் சிறப்பிக்க முடியும் என்பதை அடுத்த கூறு புலப்படுத்துகிறது. ஒரு பொருளை எவ்வாறு மாற்றி வேறு செயலுக்குப் பயன்படுத்துவது என்பதை வேறு பயன்பாடுகளைக் கண்டுபிடித்தல் என்ற கூற்று விளக்குகிறது. ஒரு பொருளையோ அல்லது அவசியமில்லாத கருத்தையோ வெளியேற்றுவது நீக்குதலைக் குறிக்கிறது. இறுதியாக ஒரு பொருளையோ அல்லது ஒரு செயலையோ, ஒழுங்கு முறையை மாற்றிப் புதிதாக ஒன்றை உருவாக்குதல் ஒழுங்கு /வரிசை முறையைப் பற்றிக் கூறுகிறது.
ஸ்கேம்பர் உத்தியைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்போது அவர்களின் சிந்தனை ஆற்றலை வளர்ப்பதோடு ஆசிரியர்களும் புதுமையான முறையில் பாடங்களைக் கற்றுக் கொடுக்கலாம். கீழே நரியும் நாரையும் என்ற ஒரு கதை உள்ளது.
நரியும் நாரையும் கதை (தேர்வு செய்த கதைப்பகுதி)
ஒரு காட்டில் நரியும் நாரையும் நீண்ட நாள் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், நரி தனது நண்பனாக இருந்த நாரைக்குத் தனது குகைக்குள் விருந்து படைத்தது. அப்போது நரி தனக்கும், நாரைக்கும் இரண்டு தட்டுகள் நிறைய மீன்களை வைத்துக் கொடுத்தது. நரி மீன்களை நன்றாகச் சுவைத்து உண்டது. ஆனால், நாரையால், தன் அலகு நீளமாய் இருந்ததால், அது அந்தத் தட்டிலிருந்த மீன்களை உண்ண முடியாமல் தவித்தது. நரி, நாரை தவித்ததைக் கண்டும் அதைப் பொருட்படுத்தவில்லை.
அடுத்த நாளே, நாரை நரியைத் தனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தது. நாரை நரியைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று நினைத்தது. அதனால், இம்முறை நாரை தனக்கும் நரிக்கும் கூஜாவில் மீன்களை வைத்துப் படைத்தது. இதைப் பார்த்த நரி, தான் நேற்று செய்த தவற்றை எண்ணி வருந்தியது. நாரையிடம் மன்னிப்பும் கேட்டது.
இக்கதையை நம்மில் பலரும் சிறு வயதில் இருக்கும்போதே படித்திருப்போம். பல வருடங்களாகவே இக்கதையைப் பெரியவர்கள் தங்களின் சிறு குழந்தைகளுக்குக் கூறி வருகின்றனர். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நாம் அதே கதையைச் சிறுவர்களுக்குச் சொல்லப்போகிறோம்? ஏன்? அதை மாற்றினால்தான் என்ன?
இக்கதையில் ஸ்கேம்பர் உத்தியைப் பயன்படுத்திப் பல மாற்றங்களைச் செய்ய இயலும். கதையின் கருப்பொருளை மாற்றாமல் கதையில் நிகழும் நிகழ்வுகள் சிலவற்றை மாற்றினாலேயே ஒரு கதையை நம்மால் உருவாக்க முடியும். இதன் வழி மாணவர்களின் ஆர்வத்தையும் நம்மால் ஈர்க்க முடிகிறது. ஸ்கேம்பர் உத்தியைப் பயன்படுத்தி மாற்றம் செய்யப்பட்ட அதே நரியும் நாரையும் என்ற கதை கீழ் வருகிறது.
நரியும் நாரையும் - மாற்றம் செய்யப்பட்ட கதைப்பகுதி
ஒரு நாள், நரி ஒன்று தனது நண்பனாக இருந்த நாரைக்கு தனது குகைக்குள் விருந்து படைத்தது. அப்போது நரி தனக்கும், நாரைக்கும் இரண்டு தட்டுகள் நிறைய மீன்களை வைத்து கொடுத்தது. நரி மீன்களை நன்றாகச் சுரைத்து உண்டது. ஆனால், நாரையால், தன் அலகு நீளமாய் இருந்ததால், அது அந்தத் தட்டிலிருந்த மீன்களை உண்ண முடியாமல் தவித்தது. நரி, நாரை தவித்ததைக் கண்டும் அதைப் பொருட்படுத்தவில்லை.
அடுத்த நாளே, நாரை நரியை தனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தது. ஆனால் இம்முறை நாரை தனக்கு நீண்ட கூஜாவில் மீன்களையும், நரிக்கு, பலவிடங்களில் தேடி அலைந்து ஒரு தட்டையும் கண்டெடுத்து, அதில் மீன்களை வைத்து விருந்து படைத்தது. இதைப் பார்த்த நரி, தான் நேற்றுச் செய்த தவற்றை எண்ணி வருந்நியது. விருந்தோம்பலைப் பற்றி நரி அறிந்து கொண்டது. மேலும், தன் நட்பு நிலைத்திருக்க வேண்டும் என்றால், பழிவாங்கும் உணர்ச்சி நண்பர்களுக்கிடையில் வரக்கூடாது என்றும் நாரை நரிக்குச் சொல்லாமல் சுட்டிக்காட்டியது.
இக்கதையை மாற்ற பதிலீடு செய்தல், இணைத்தல், வேறு வடிவம் தருதல் ஆகிய ஸ்கேம்பர் கூறுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதல் கதையில் நாரை தனக்கும் நரிக்கும் கூஜாவில் மீன்களை வைத்துப் படைத்தது. ஆனால், மாற்றம் செய்யப்பட்ட கதையிலோ நாரை தனக்கு நீண்ட கூஜாவில் மீன்களையும், நரிக்கு, எங்கெங்கோ தேடி அலைந்து ஒரு தட்டையும் கண்டெடுத்து, அதில் மீன்களை வைத்து விருந்து படைத்தது. ஆகையால், இரண்டாம் கதையில் கூஜாக்குப் பதிலாக ஒரு தட்டு சேர்க்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, முதல் கதையில் தன் தவற்றை உணர்ந்த நரி நாரையிடம் மன்னிப்புக் கேட்கிறது. அதோடு கதை ஒரு முடிவுக்கு வருகிறது. ஆனால், மாற்றம் செய்யப்பட்ட கதையில் தன் தவற்றை அறியும் நரி விருந்தோம்பலைப் பற்றியும், நட்பு நிலைத்திருக்க வேண்டும் என்றால், பழிவாங்கும் உணர்ச்சி நண்பர்களுக்கிடையில் வரக்கூடாது என்பதையும் உணர்கிறது. கதையில் இக்கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது விருந்தோம்பல் என்ற தமிழ்ப் பண்பாட்டை உணர்த்துகிறது.
இக்கதையின் முடிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நரி தன் தவற்றை மட்டும் உணர்ந்து கொள்ளாமல், சில நீதிகளையும் கற்றுக் கொள்கிறது. இது வேறு வடிவம் தருதல் என்ற கூற்றைக் குறிக்கிறது. முடிவை மாற்றி வேறு கருத்தையும் சேர்ப்பதையே இது புலப்படுத்துகிறது.
மாற்றம் செய்யப்பட்ட கதையில் ஸ்கேம்பர் உத்தியின் பங்கு.
இக்கதையின் உண்மையான முடிவை மாற்றி, இதற்குப் புதிய முடிவினை அளித்துள்ளதால், இதில் நான் ஸ்கேம்பர் உத்தியைப் பயன்படுத்தியுள்ளேன். ஸ்கேம்பர் உத்தியில் உள்ள பதிலீடு செய்தல். இணைத்தல்,வேறு வடிவம் தருதல், நீக்குதல் ஆகிய கூறுகளைப் பயன்படுத்தியுள்ளேன்.
1. உண்மையான கதையின் முடிவுக்குப் பதிலாக நான் வேறு ஒரு முடிவை அளித்திருப்பதால், இந்தப் பதிலீடு செய்தல் இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
2. இக்கதையின் முடிவில் பண்பாட்டுக் கூறுகளைப் பற்றியும் விருந்து உபசரிப்பைப் பற்றிய கருத்துக்களையும் இதில் இணைத்துள்ளதால், இணைத்தல் என்ற உத்தியைப் பயன்படுத்தியுள்ளேன்.
3. மேலும் மாணவர்களுக்குப் பிறரை மன்னிக்கும் குணத்தை (நீதியை) அவர்களது மனத்தில் நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக, இக்கதையில், நாரை நரியை மன்னித்து ஏற்றுக்கொண்ட படி கதையின் முடிவை மாற்றியுள்ளேன். ஆதலால் இங்கு வேறு வடிவம் தருதல் என்னும் உத்தியைப் பயன்படுத்தியுள்ளேன்.
ஆகவே ஸ்கேம்பர் உத்தியைப் பயன்படுத்தி, நாம் எவ்வாறெல்லாம், ஒரு கதைக்லோ அல்லது ஒரு பாடத்திலோ சுவாரசியமான மாற்றங்களைச் செய்யலாம் என்பதை இப்பயிற்சியின் வழி நாம் கற்றுக்கொண்டோம்.
ஆகையால், ஸ்கேம்பர் உத்தி எவ்வளவு பயனுடையது என்பதை இது விளக்குகிறது. ஸ்கேம்பர் உத்தியின் முக்கியத்துவத்தையும், பயன்பாட்டையும் இதன் மூலம் அறிய முடிகிறது.
கற்பிக்கும் முறை
ஆசிரியர் இந்தப் பாடத்தை நடத்துவதற்கு முன்பே நரியும் நாரையும் என்ற படத்தொடர்களாக அமைந்த கதைத்துண்டுகளைப் பயன்படுத்திக் கதை எழுதக் கற்பித்திருப்¡ர். கீழ்த் தொடநிலை வகுப்புகளில் மாணவர்களை இப்படத்தொடரைக் கொண்டு கதை அமைக்க கற்றிருப்பர், ஆதலால் இந்தக் கதைப்பகுதி ஏற்கனவே மாணவர்கள் அறிந்த ஒன்றாகும். மேல் தொடக்கநிலை வகுப்பிற்கு மாணவர்கள் வந்தவுடன் முதலில் ஆசிரியர் தயரித்து வைத்திருக்கும் நரியும் நாரையும் கதைப்பகுதியை மாணவர்களிடம் கொடுப்பார். மாணவர்கள் வாயக்குள் படிக்க வேண்டும். அதன் பிறகு வாய்விட்டுப் படிக்க வேண்டும். மாணவர்களில் ஒரு சிலரை இக்தைப்பகுதியைச் சுருக்கிக் கூறச் செய்யலாம். மாணவர்கள் கதையைச் சுருக்கிக் கூறியவுடன் இந்தக் கதையை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்று கேட்கலாம். இப்போது மாணவர்களை நான்கு பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் வேறுபட்ட மாறுபட்ட கதை வடிவம் வரும். இவ்வாறு மாணவர்களின் சிந்தனையைத் தூண்டிப் புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கலாம். இக்கதையில் அமைந்துள்ள சிறந்த நீதிக் கரத்துக்கள் அல்லது பண்பாட்டுக் கூறுகள் உள்ளனவா? என்று வினா தொடுத்து அதற்காள வி¨டயையும் வரவழைக்கலாம்.
முடிவுரை
ஓர் ஆசிரியர், தனது பாடங்களைக் கற்பிக்கும் போது சில மாற்றங்களைப் பயன்படுத்திக் கற்பித்தால் தான், அந்தப் பாடம் சுவாரசியமாக இருக்கும். மேலும் மாணவர்கள் அப்பாடத்தில் கவனம் செலுத்தவும் உதவும். ஆதாலால், ஆசிரியர்கள் பலவிதமான உத்திகளைக் கையாண்டு கற்பிப்பது மிகவும் அவசியமானது: சிறந்தது. ஆதலால் ஸ்கேம்பர் உத்தி என்பது கேட்டல் திறனையோ, பேசும் திறனையோ, எழுதும் திறனையோ, வாசிக்கும் திறனையோ சிந்திக்கும் திறனையோ தனியே வளர்க்கும் ஓர் உத்தியில்லை. தனி மனிதன் திறனில் பல்வேறு கூறுகளை ஒரு சேர வளர்க்கும் ஆற்றல் வாய்ந்தது.
###########################முற்றும்######################
மேற்கோள் நூல்கள்
• க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) ஜூன் 1992,
எண் 268, ராயப்பேட்டை சாலை, சென்னை 6000014
• உயர்நிலைப்பள்ளிப் பாடத்திட்டங்கள் 2002, தமிழ் இரண்டாம் மொழி, கல்வி
அமைச்சு, சிங்கப்பூர்
• தமிழ் பயிற்றும் முறை , டாக்டர் ந.சுப்பு ரெட்டியார், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, சிதம்பம், டிசம்பர்2000
• நற்றமிழ் கற்பிக்கும் முறைகள், வி.கணபதி, சந்திரிகா ராஜமோகன் சாந்தா
பப்ளிஷ்ர், சென்னை, 2002
• கார்த்திகேயன் கம்பெனி, (1970), கற்பித்தல் பொது முறைகள், ஏசியன் பிரிண்டர்ஸ் சென்னை
******* முற்றும் ********

Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Similar topics
» [b]மரபுத்தொடர்கள் பாடத்தின் வழி மாணவர்களின் சிந்தனையைத் தூண்டிப் படைப்பாற்றல் திறனை வளர்த்தல்
» விஐடியில் பயிலும் வெளி மாநில மாணவர்களுக்கு தமிழ் கற்றுத் தரப்படும்-வேந்தர் விஸ்வநாதன்
» குளிப்புக் கடமையானவர் மறதியாக மக்களுக்கு தொழுகை நடத்துதல்
» திறன் வளர்த்தல் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
» பிளாஷ் டிரைவ்வை பயன்படுத்தி வைரஸ் பெருகுவதை தடுக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum