தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
டூ இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
3 posters
Page 1 of 1
டூ இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
டூ
இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன்
இசை அபிஷேக்
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
காதலர்கள் உதட்டளவில் டூ விட்டாலும் மனதளவில் இணைந்தே இருப்பார்கள் என்று உணர்த்தும் படம் .சே போடும் போது விரல்கள் பிரிந்து இருக்கின்றன டூ போடும் போது விரல்கள் சேர்ந்து இருக்கின்றன ஏன்?என்ற என் நெடுநாள் கேள்விக்கு விடை சொல்வதாக படம் இருந்தது . இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன் இன்றைய காதலை மிக எதார்த்தமாக படமாக்கி உள்ளார் பாராட்டுக்கள் .இசை அபிஷேக் பாடல்களை விட பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தி உள்ளார் சிறப்பாக உள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் மிகச் சிறப்பாக உள்ளது.
பள்ளிப் பருவத்தில் மாணவி காதலை மறுக்கிறாள் .வேலை கிடைத்து சுய சம்பாத்தியம் வந்ததும் காதலை ஏற்கிறாள் .காதலிக்கிறார்கள் காதலர்களின் ஊடல் ,கூடல் படமாக்கி உள்ளனர் .அம்பிகாபதி அமராவதி போல காவியம் போல அல்லாமல் ,நாட்டு நடப்பை எதார்த்தத்தைக் காட்டுகின்றனர் .ரசிக்கும் படி படமாக்கி உள்ளனர் .நண்பர்களின் அரட்டை நல்ல நகைச்சுவை ,பங்களா என்ற பெயரில் வரும் குண்டு நண்பர் எப்பொதும்
சாப்பிட்டுக் கொண்டே இருப்பது நல்ல நகைச்சுவை.
காதலிக்கும் கதாநாயகி பாத்திரப்படைப்பு மிக அருமை .காதலன் முதன்முதலாக நாயக் குட்டி பரிசளிக்கிறான் .காதலி வாங்க மறுக்கிறாள் .எனக்கு நாயக் குட்டி பிடிக்காது என்று வெளிப்படையாக சொல்லி விடுகிறாள் .காதலன் கோபப்படுகிறான் .அடுத்து காதலன் நீல நிற சுடிதார் பரிசளிக்கிறான்.காதலி தனக்கு நீல நிறமே பிடிக்காது என்று சொல்லி வாங்க மறுக்கிறாள் .காதலன் கோபப்படுகிறான் .இப்படி அடிக்கடி சண்டை காதலி பாத்திரம் மிகச் சிறப்பாக உள்ளது .உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசத் தெரியவில்லை .காதலன் அம்மாவிற்காக பக்திப் பழ மாகவோ,சமையல் ராணியாகவோ என்னால் மாற முடியாது என மறுத்து விடுகிறாள் .நான் நானாக இருக்க வேண்டும் .யாருக்காவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது என்று தெளிவாகக் கூ றி விடுகிறாள் .
காதலன் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பனிப் புரிகின்றான் .
காதலன் தன் நண்பன் திருமணத்திற்கு காதலியை பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு அழைகின்றான்.வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருந்து விடுகிறாள் காதலி .காத்திருந்து பார்த்துவிட்டு திருமணம் முடித்துவிடுகின்றனர் . காதலன் கோபப்படுகிறான்.ஏன் ?வரவில்லை என்கிறான் பிடிக்கவில்லை என்கிறாள் .எது ?பிடிக்கவில்லை காதலா ?திருமணமா ?என்கிறான் உன் நண்பன்.பெற்றோருக்கு தெரியாமல்நடத்தும் முறை பிடிக்க வில்லை என்கிறாள் .பதிவு அலுவலகத்தில் பணி புரியும் உனக்கு பெற்றோர் வலி தெரியவில்லை .உன் வாசல் வரும்போது புரியும் என்கிறாள் காதலன் கோபப்படுகிறான்.காதலன் தங்கை ஒருவனைக் காதலித்து திருமணதிற்கு தன் அலுவலகம் வந்தபோது காதலி சொன்ன வலியை உணர்கின்றான் .
காதலுக்காக நண்பர்கள் பார்ட்டி கேட்கின்றனர் .காதலி பார்ட்டி தர வேண்டும் நீ வா என்று காதலனை கூப்புடுகின்றாள்.காதலன் வருகிறான் அவன் அம்மாவிடம் இருந்து செல் அழைப்பு வருகின்றது .நண்பனுடன் இருப்பதாகப் போய் சொல்கிறான் .உடன் செல்லை வாங்கி காதலி உங்கள் மகன் போய் சொல்கிறார் .என்னுடன்தான் இருக்கிறார் என்கிறாள்.காதலன் கோபப்படுகிறான்.நான் உன் அம்மாவிடம் பேசக்கூடாதா ?
என்கிறாள் .இன்று என் அப்பாவின் முதல் வருடத் திதி அதை விட்டுவிட்டு நீ கூப்பிடதும் வந்தேன் பாரு எனக்கு தேவைதான் என்று
காதலன் கோபப்படுகிறான்.என்னிடம் நீ முதலில் சொல்லி இருந்தால் பார்ட்டியைத் தள்ளி வைத்து இருக்கலாமே என்கிறாள்.இப்படி சின்னச் சின்ன ஊடல் படம் முழுவதும் நடக்கின்றது.படம் பார்க்கும் போது பார்ப்பவர்களுக்கு அவரவர் காதலின் மலரும் நினைவுகளை உருவாக்கி இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்.வெற்றி பெறுகின்றார் .
காதலன் காதலி இருவரும் நமக்குள் அடிக்கடி சண்டை வருகின்றது .திருமணம் ஆனாலும் மணவிலக்கு நேரும் எனவே இருவரும் பிரிந்து விடுவோம் என்று முடிவெடுத்துப் பிரிகின்றனர். பிரிவோம் என்று உதடுகள் சொன்னாலும் உள்ளம் சொல்ல மறுக்கின்றது.கடைசியில் இருவரும் இணைகின்றனர். விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் காதல் .முரண் பாடு வேறுபாடு உள்ள வாழ்க்கைதான் ருசிக்கும் .ஒத்த கருத்துள்ள ஜோடிகளின் வாழ்க்கை ருசிக்காது என்ற வாழ்வியல் கருத்துக்களை உணர்த்தும் நல்ல படம் .ஆபாசம் இல்லாத காதல் படம் .புதுக் கவிதையாக எழுதி உள்ளார் இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: டூ இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
-
விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் காதல் .
முரண் பாடு வேறுபாடு உள்ள வாழ்க்கைதான் ருசிக்கும் .
ஒத்த கருத்துள்ள ஜோடிகளின் வாழ்க்கை ருசிக்காது
என்ற வாழ்வியல் கருத்துக்களை உணர்த்தும் நல்ல படம் ...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» டூ இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன் இசை அபிஷேக் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தங்க மீன்கள் ! இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» வன யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .
» காஞ்சனா முனி 2 இயக்குனர் ராகவா லாரன்ஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» பாலை திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum