தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஏதுடா பட்டாசு?! பாப்பா மலர்!

3 posters

Go down

ஏதுடா பட்டாசு?! பாப்பா மலர்! Empty ஏதுடா பட்டாசு?! பாப்பா மலர்!

Post by thaliranna Fri Oct 21, 2011 8:41 pm


[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this link.]







ஏதுடா பட்டாசு?!
[You must be registered and logged in to see this link.]


தீபாவளிப்
பண்டிகைக்கு இன்னும் இரண்டே நாள்தான்! ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.
எங்கும் பட்டாசு சத்தங்கள்! பள்ளியில் மாணவர்கள் தங்களுக்கு புது டிரஸ்
வாங்கியது பற்றியும் நிறைய பட்டாசுகள் வாங்கியது பற்றியும் பெருமைப்
பேசிக்கொண்டார்கள்.ஆனால் சங்கர் அதில் எல்லாம் நாட்டம் இல்லாதவனாய் ஒரு
மூலையில் சோகமாக அமர்ந்து இருந்தான்.

அப்போது
அவனது பள்ளித்தோழன் மகேஷ் வந்தான். என்னடா சங்கர் டல்லா இருக்கே?
தீபாவளிக்குத் துணியெல்லாம் எடுத்தாச்சா? என்றான்.மகேஷின் திடீர்
கேள்வியில் சகஜநிலைக்குத் திரும்பிய சங்கர் சமாளித்துக் கொண்டு ஓ
எடுத்தாச்சே! புதுசா சபாரி சூட் எடுத்திருக்கேன் என்று அவசரமாக பதில்
சொல்லிவிட்டு மகேஷ் அடுத்த கேள்வி கேட்கும் முன் அவ்விடத்தை விட்டு
அகன்றான்.

சங்கரின்
குடும்பம் ஏழ்மையான குடும்பம். தந்தையை இழந்த சங்கருக்கு தாய் வள்ளிதான்
எல்லாம்.ஏதோ நாலு வீடுகளில் வேலை செய்து சங்கரை படிக்க வைக்கிறாள்
வள்ளி.வேலை செய்யும் வீடுகளில் கொடுக்கும் பலகாரமும் பழைய துணியும் தான்
அவர்களுக்கு தீபாவளி புது துணியும் பலகாரமும்!இத்தனை வருடங்கள் சங்கருக்கு
இதில் எந்த சங்கடமும் ஏற்பட்டதில்லை! இந்த முறை வயது சற்று கூடியதால்
மற்றவர்களைப் போல் நாமும் தீபாவளி கொண்டாட முடியவில்லையே என்ற
ஏக்கம்!ஊரெல்லாம் தீபாவளி கொண்டாடும் போது நாம் மட்டும் பழைய துணியை
போட்டுக் கொண்டு மீந்த பலகாரங்களை திண்ண வேண்டுமே என்று தன் ஏழ்மையை
நினைத்து வருத்தப்பட்டான் சங்கர். அப்போதுதான் மகேஷ் வந்தான். தன்னுடைய
தாழ்ந்த நிலையை மகேஷிடம் சொல்ல மனமின்றி புதுத் துணி எடுத்தாகிவிட்டதாக
பொய் கூறினான். அந்த பொய்யை மேலும் வளர்க்க மனமின்றிதான் அங்கிருந்து
அவசரமாக நகர்ந்தான்.

தீபாவளிக்கு
முன் தினம் மாலை! பட்டாசு வெடிக்கத் தான் முடியலை! வேடிக்கையாவது
பார்ப்போமே! என்று தெருவில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சென்றான் சங்கர்.
அப்போது மகேஷ் தன் வீட்டு வாசலில் பட்டாசுகளை குவித்து வைத்துக் கொண்டு
வெடித்துக் கொண்டிருந்தான். என்ன சங்கர் இந்த பக்கம் என்று மகேஷ் கேட்டான்.
அம்மா கடைக்கு அனுப்பிச்சாங்க! வழியிலே நீ பட்டாசு வெடிக்கிறதை பார்த்து
நின்னுட்டேன் என்றான் சங்கர்.

வா
சங்கர் சேர்ந்து வெடிக்கலாம்! என்று ஒன்றிரண்டு பட்டாசுகளை மகேஷ்
சங்கரிடம் வெடிக்கும் படி தந்தான். சங்கருக்கு பொறாமையாக இருந்தது. இவ்வளவு
பட்டாசுகளா? அடேயப்பா! என்று மலைத்து நிற்க மகேஷ் கொஞ்சம் உள்ளே வாயேன்
என்று மகேஷின் தாய் அழைத்தாள். சங்கர் நீ வெடிச்சிண்டிரு! நான் இதோ
வந்திடறேன்! என்று மகேஷ் உள்ளே சென்றான்.

சங்கரின்
மனதில் ஒரு திடீர் சபலம்! இவ்வளவு பட்டாசு இருக்கே? ஒவ்வொரு தினுசுல
ஒண்ணொன்னு எடுத்துகிட்டாத் தெரியவாப் போகுது! நாம நம்ம வீட்டுல வெடிக்கலாம்
என்று நினைத்தது மனது. அவசர அவசரமாக சில பட்டாசுகளை எடுத்து கால்சட்டைப்
பையில் திணித்துக் கொண்டான். மகேஷ் திரும்பவும் அம்மா தேடுவாங்க!
நேரமாயிடுச்சு! நான் கிளம்பறேன் என்று விடைபெற்றுக் கொண்டான்.

சங்கர்
தன் வீட்டினுள் நுழைந்து பாக்கெட்டிலிருந்து பட்டாசுகளை எடுக்கவும் அவன்
தாய் வள்ளி வீட்டினுள் நுழையவும் சரியாக இருந்தது. பட்டாசுகளை
பார்த்துவிட்டு வள்ளி திகைத்தாள். ஏதுடா உனக்கு இவ்வளவு பட்டாசு? எங்க
வாங்கின? இல்லெ திருடினியா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க சங்கர்
வெலவெலத்தான்.திருதிருவென முழித்தான். என்னடா முழிக்கிறே? உனக்கு பட்டாசு
வாங்க காசு ஏது? பதில் சொல்லு என்றாள் வள்ளி. அ.. அது வந்து ம..மகேஷ் வீட்டுல .. என்று தயங்கினான் சங்கர்.

அப்போது
நான் தான் கொடுத்தேன் ஆண்ட்டி! என்று சொல்லியபடி உள்ளே வந்தான் மகேஷ்.
சங்கரின் விழிகள் அகலமாயின. நான் தான் சங்கர் கிட்டே பட்டாசு கொடுத்தேன்
ஆண்ட்டி! அவனா கேட்கலை! நானாத்தான் கொடுத்தேன்! அம்மா திட்டுவாங்கன்னு
வேண்டாம்னு சொன்னான் ஆனா நான் வற்புறுத்தி கொடுத்து அனுப்பிச்சேன்! ஸ்வீட்
தரனும்னு நினைச்சேன் மறந்துட்டேன் அதான் எடுத்துகிட்டு வந்திருக்கேன்.
இந்தா சங்கர் இதுல ஸ்வீட்டும் கொஞ்சம் பட்டாசும் இருக்கு! ஹேப்பி தீபாவளி!
நான் வரேன் ஆண்ட்டி! வரேன் சங்கர் என்று வெளியேற பின்னாலேயே ஓடினான்
சங்கர்.

மகேஷ்
மகேஷ்! நில்லுடா! என்னை மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லுடா! உனக்குத்
தெரியாம பட்டாசு எடுத்து வந்த என்னை எங்கம்மாகிட்டே காட்டி கொடுக்காம நான்
தான் கொடுத்தேன்னு பொய் சொல்லி காப்பாத்திட்டியேடா! உன் பெருந்தன்மைக்கு
முன்னாடி என்னோட செயலை நினைச்சா? அதுஎவ்வளவு சின்ன தனமானது! என்னை
மன்னிப்பாயா மகேஷ் என்று விக்கித்தான் சங்கர்.

சங்கர்
அழாதே! அன்னிக்கு நீ சோகமா இருக்கறப்பவே என்ன காரணம்னு யோசிச்சேன்!தீபாவளி
கொண்டாட முடியாததும் அதை நீ என்கிட்ட மறைச்சதும் எனக்கு நல்லாவே
புரிஞ்சிடிச்சு! அப்பவே உனக்கு பட்டாசும் ஸ்வீட்டும் வாங்கிதரணும்னு
நினைச்சேன். நீ வீட்டுக்கு வந்தப்ப கூட கொடுத்து விடலாம்னு நினைச்சேன்.
அம்மாதான் நீயே அவங்க வீட்டுக்கு கொண்டுபோயி கொடுக்கிறதுதான் முறைன்னு
சொல்லிட்டாங்க! நீயே பட்டாசு எடுத்துகிட்டா என்ன? நானே கொடுக்க
நினைச்சதுதானே! அதுல ஒரு தப்பும் இல்லே! எனக்கு உன் மேல எந்த வருத்தமும்
இல்லே! நீ சந்தோஷமா தீபாவளிக் கொண்டாடனும் அதுதான் என் விருப்பம் என்றான்
மகேஷ்.

மகேஷ்
என்ன இருந்தாலும் உன்னை கேட்காம உன் பொருளை எடுத்தது என் தப்புதான்! ஆசை
கண்ணை மறைச்சிடுச்சு! என்னை மன்னிச்சுடு மகேஷ் என்றான் சங்கர்.

சங்கர்!
செய்த தவறை ஒருத்தன் உணர்ந்தாலே அவன் திருந்திட்டதா அர்த்தம் அப்புறம் ஏது
குற்றம்? நீ உன் செய்கையை நினைத்து வருத்தப்பட்ட உடனேயே உன் குற்றம்
விலகிடுச்சு! குழப்பிக்காம போய் தீபாவளிக் கொண்டாடு! ஹேப்பி தீபாவளி என்று
விடைபெற்றான் மகேஷ்.

சங்கர் தெளிந்த மனதோடு ஆனந்தமாய் தீபாவளி கொண்டாடினான் என்று சொல்லவும் வேண்டுமோ?
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஏதுடா பட்டாசு?! பாப்பா மலர்! Empty Re: ஏதுடா பட்டாசு?! பாப்பா மலர்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 8:43 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஏதுடா பட்டாசு?! பாப்பா மலர்! Empty Re: ஏதுடா பட்டாசு?! பாப்பா மலர்!

Post by நிலாமதி Fri Oct 21, 2011 9:21 pm

இக்காலத்தில் இப்படியான குழந்தைகளை காண்பது அரிது ......பாடம் சொல்லும் பகிர்வு . :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

ஏதுடா பட்டாசு?! பாப்பா மலர்! Empty Re: ஏதுடா பட்டாசு?! பாப்பா மலர்!

Post by thaliranna Fri Oct 21, 2011 9:35 pm

[You must be registered and logged in to see this image.]
nilaamathy wrote:இக்காலத்தில் இப்படியான குழந்தைகளை காண்பது அரிது ......பாடம் சொல்லும் பகிர்வு . [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஏதுடா பட்டாசு?! பாப்பா மலர்! Empty Re: ஏதுடா பட்டாசு?! பாப்பா மலர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum