தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தனக்கு வந்தால் தெரியும்! பாப்பா மலர்!
3 posters
Page 1 of 1
தனக்கு வந்தால் தெரியும்! பாப்பா மலர்!
தனக்கு வந்தால் தெரியும்! பாப்பா மலர்!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
தனக்கு வந்தால் தெரியும்!
கிருஷ்ணாவரம் என்ற சிற்றூரில் கோபு என்ற
சிறுவன் வசித்து வந்தான். அந்த ஊரில் உள்ள பள்ளியில் படித்து வந்த அவனிடம்
கெட்டபழக்கம் ஒன்று இருந்தது. நல்ல பழக்கங்கள் ஒருவனை உயர்த்திவைக்கும் மாறாக
தீயபழக்கங்கள் ஒருவனிடம் குடி கொண்டால் அவனை வீழ்த்திவிடும் அல்லவா? ஆனால்
நல்லவனான கோபுவிடம் எப்படியோ இந்த தீயபழக்கம் குடி கொண்டு விட்டது.
அந்த பழக்கம் எது என்று கேட்கிறீர்களா? மற்றவர்களின் உடைமைகளை ஒளித்து
வைத்து அவர்கள் தேடும்போது மகிழ்ச்சி அடையும் குணம் தான் அந்த தீய குணம்.
மற்றவர்கள் பொருட்கள் காணாமல் தவிக்கும் போது துள்ளி குதிக்கும் அவனது உள்ளம்.
அவர்கள் படும் அவஸ்தைகளை ரசித்துவிட்டு சாவதானமாக பொருட்களை கண்டெடுப்பது போல
நடித்து அவர்களிடம் ஒப்படைப்பான் கோபு.
இது அவர்களுக்குத் தெரியாது பொருட்களை
தேடித் தந்தமைக்கு பாராட்டிச் செல்வார்கள் பொருள் கிடைத்தவர்கள் உள்ளூர
மகிழ்ந்துகொள்வான் அவன். இந்த விளையாட்டு விபரீதமானது என்று அவன் உணரவில்லை. அவனது
நண்பன் மணி இந்த விளையாட்டை கண்டித்தான்.
அடப் போடா வாழ்க்கையில ஒரு த்ரில் வேணும்டா! நான் தான் பொருளை
எடுத்துக்கிறது இல்லையே திருப்பிக் கொடுத்துவிடுகிறேனே! திருடினாத் தான் தப்பு!
ஒளிச்சு விளையாடினா ஒண்ணும் தப்பில்லை! போடா நீயும் உன் அட்வைசும்! என்று அவனை
கிண்டலடித்து கேலி செய்தான் கோபு.
டேய் கோபு ஒருநாள் நீ கட்டாயம் அவஸ்த்தை படுவே நீ அப்ப நான் சொல்றது உனக்கு
புரியும் என்று கழன்று கொண்டான் மணி. ஆனால் அவனையும் விடவில்லை கோபுவின்
விளையாட்டு!
முக்கியமான கணக்கு பாடவேளையில் மணியின் பென்சிலைஎடுத்து ஒளித்து வைத்து
விட்டான். கணக்காசிரியர் பென்சிலையும் நோட்டையும் எடுக்கச் சொன்னபோது பென்சிலை
காணாது தவித்தான் மணி. அவனை அடித்து துவைப்பதை மகிழ்ச்சியுடன் ரசித்துக்
கொண்டிருந்த கோபு பின்னர் மணியிடம் பென்சிலை தந்தான்.
கோபு நான் அடிவாங்குவது உனக்கு என்ன அவ்வளவு சந்தோஷமா? நீ திருந்தவே மாட்டாயா?
என்றான் மணி! அடப் போடா! நீ அடி வாங்கறப்ப எவ்வளவு ஜாலியா இருத்தது தெரியுமா?
என்று சிரித்தான் கோபு.
தம்மை அழவைத்த கோபுவை எப்படியாவது திருத்த முடிவு செய்தான் மணி. அதற்கான
நேரம் வந்தது. பள்ளியின் அரையாண்டுத் தேர்வு துவங்கியது. தேர்வுக்கு முன் தினம் கோபுவின்
தமிழ் புத்தகத்தை எடுத்துஒளித்துவைத்துவிட்டான் மணி. தேர்வுக்கு முந்தின தினமே
படிக்கும் வழக்கமுள்ள கோபு புத்தகத்தை காணாது தவித்தான். நாளை தேர்வுக்கு என்ன
செய்வது? ஒன்றுமே படிக்கவில்லையே? தமிழில் பெயிலானால் அதைவிட அவமானம் வேறு ஒன்றூம்
இல்லையே? ஆசிரியர் அடிப்பது இருக்கட்டும் வீட்டில் அப்பாவிற்கு என்ன பதில் சொல்வது
என்று பல்வேறு கேள்விகள் அவனைத் துளைத்து எடுத்தது.
எங்கு தேடியும் புத்தகம் கிடைக்க வில்லை. இரவலும் யாரும் கொடுக்க முன்
வரவில்லை! அழுதே விட்டான் கோபு. அப்போது அங்கு வந்த மணி ஒன்றும் தெரியாதவன் போல
கோபு ஏன் அழுகிறாய்? பிறரை அழவைக்கும் நீ இன்று அழுதுகொண்டு இருக்கிறாயே? என்று
கேட்டான்.
மணி நீ வேறு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறாயா? நான் என் புத்தகம்
காணாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் ஒன்றுமே படிக்கவில்லை! நாளைக்கு தமிழ் தேர்வு
என் நிலையை நானே நொந்து கொண்டிருக்கிறேன் என்றான் கோபு.
இப்படித்தானே கோபு பொருள்களை தொலைத்தவர்கள் மனம் வேதனைப் பட்டிருக்கும்!
அப்போது நீ எப்படி கைகொட்டி சிரித்து மகிழ்ந்தாய்! இப்போது உன் பொருள் காணாததும்
துடிக்கிறாயே! என்று ஊசியாய் குத்தினான் மணி.
கோபு தலை குனிந்தான். ஆம் மணி இப்போதுதான் என் தவறு எனக்கு உரைக்கிறது.
அவர்கள் இட்ட சாபம்தான் இன்று என்னை பிடித்துவிட்டதோ? நாளை நான் எப்படி தேர்வு
எழுதுவேன்! என்று விசும்பினான் கோபு.
இந்தா கோபு உன் தமிழ் புத்தகம்! நீ திருந்தவே நான் இவ்வாறு செய்யும் படி
ஆயிற்று! இனி பிறர் பொருளை ஒளித்து வைக்க மாட்டாயே? என்று அவனிடம் புத்தகத்தை
தந்தான் மணி.
எல்லாம் உன் வேலைதானா? இன்று எனக்கு புத்தி வந்தது! இனி இந்த தவறை
ஒருபோதும் செய்ய மாட்டேன்! என்னை திருத்திய நீதான் என் நல்ல நண்பன் என்று அவனை
அணைத்துக் கொண்டான் கோபு.
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: தனக்கு வந்தால் தெரியும்! பாப்பா மலர்!
:héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தனக்கு வந்தால் தெரியும்! பாப்பா மலர்!
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» ஏதுடா பட்டாசு?! பாப்பா மலர்!
» பேனாவைக் காணோம்! பாப்பா மலர்!
» தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!
» வேண்டாமே பொறாமை! பாப்பா மலர்!
» பீமனின் கர்வம்! பாப்பா மலர்!
» பேனாவைக் காணோம்! பாப்பா மலர்!
» தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!
» வேண்டாமே பொறாமை! பாப்பா மலர்!
» பீமனின் கர்வம்! பாப்பா மலர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum