தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பீமனின் கர்வம்! பாப்பா மலர்!

2 posters

Go down

பீமனின் கர்வம்! பாப்பா மலர்! Empty பீமனின் கர்வம்! பாப்பா மலர்!

Post by thaliranna Thu Dec 15, 2011 6:34 pm

பீமனின் கர்வம்!


[You must be registered and logged in to see this link.]
பாண்டவர்கள்
ஐவரில் தான் தான் பலசாலி என்ற எண்ணம் பீமனுக்கு மேலோங்கியது. தன்னை வெல்ல
உலகில் யாரும் இல்லை! தன்னால் முடியாதது எதுவும் இந்த பூமியில் இல்லை என்று
மிகவும் ஆணவம் கொண்டான் அவன்.மற்ற சகோதரர்களின் கருத்துக்களை ஏற்றுக்
கொண்டாலும் இளையவனாக பிறந்ததால் இவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டியுள்ளதே
என்று வருத்தப்பட்டுக் கொள்வான்.தன்னுடைய உடல் பலத்தில் அசாத்திய நம்பிக்கை
கொண்டிருந்தான் பீமன்.

ஒருநாள்
அவன் காட்டு வழியே சென்று கொண்டிருந்தான்.தான் பலசாலி என்று நிரூபிக்கும்
வண்ணம் எதிர்பட்ட செடி கொடிகளை எல்லாம் பிடுங்கி எறிந்து கொண்டே வந்தான்.
அப்போது அவனது கால் இடறியது. தடுக்கியது வேர் என்று மகா பலசாலியான என்னையே
தடுக்கிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார் என்று அந்த வேரை பிடுங்க
முற்பட்டான்.

பலமாக
முயன்றும் அவனால் முடியவில்லை! வேர்த்து வழிய நின்றவன். இது ஏதோ
சூழ்ச்சியாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டான் இது கண்டிப்பாக வேர்
இல்லை! வேறு ஏதோ என்று வேரின் மூலத்தை தேடினான். தொலைவில் ஒரு குரங்கு
ஒன்று அமர்ந்து கொண்டிருந்ததை கண்டான். அந்த குரங்கின் வால்தான் பீமனை
தடுத்தது.

பீமன்
ஆணவத்துடன் ஏய் குரங்கே வாலைச் சுருட்டிக் கொண்டு உட்காரக்கூடாதா? இப்படி
வழியில் வாலை போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறாயே யாராவது மிதித்து
தொலைத்தால் செத்து விடுவாயே என்று எரிந்து விழுந்தான்.
குரங்கோ வீரனே நானொ வயதானவன்! என்னால் வாலை நகர்த்த முடியவில்லை! நடக்க
முடியாமல் அப்படியே அமர்ந்துவிட்டேன்! நீதான் கொஞ்சம் வாலைத் தூக்கி
சுருட்டி ஓரமாக வைத்துச் செல்லேன்! என்றது.

அதிர்ந்து
போன பீமன்! இது தன் வீரத்திற்கு சவால் என நினைத்து மீண்டும் வாலைத் தூக்க
முயற்சித்தான்.அவனால் இம்மி அளவு கூட வாலை அசைக்க முடியவில்லை! குரங்கு
ஏளனம் செய்தது.ஏம்பா பார்த்தால் மிகப்பெரிய பலசாலியாகத் தெரிகிறாய்! வீரன்
போல பேசினாய்!கேவலம் ஒரு குரங்கின் வாலைக் கூட உன்னால தூக்க முடியவில்லையே
என்றது.

உடனே
பீமன் நான் மலையைக் கூட பெயர்த்துவிடுவேன்!என்று தன் இரு கைகளாலும் வாலை
நகர்த்த முனைந்தான்.அவன் உடல் துடித்தது. பெருமூச்சு விட்டான்! இருந்தும்
இம்மிக்கூட வால் நகரவில்லை!

அப்போதுதான்
அவனது அகந்தை அழிந்தது! குரங்கை வணங்கினான்! சுவாமிதாங்கள் யார்? நீங்கள்
கண்டிப்பாக பெரும் பலசாலியாக இருக்க வேண்டும் என் கர்வம் அழிந்தது! என்று
வணங்கி நின்றான்.

குரங்கு
அனுமனாக மாறியது. பீமன் அனுமனின் கால்களில் சரணடைந்தான்.உடனே அனுமன், பீமா
எழுந்திரு! உன்னை திருத்தவே இந்த நாடகம்! கர்வம் மனிதனை மிருகமாக
மாற்றிவிடும்! ஒரு போதும் கர்வம் அடையக் கூடாது! வல்லவனுக்கு வல்லவன்
வையத்தில் உண்டு! கர்வத்தை விட்டொழிப்பாயாக! புகழ் அடைவாயாக என்று
வாழ்த்தினார்.

சுவாமி
என்னை மன்னியுங்கள்! இனி அகம்பாவம் கொள்ள மாட்டேன்! அனைவரிடமும் பணிவாக
நடந்து கொள்வேன்! என்னை ஆசிர்வதியுங்கள் என்று வணங்கினான் பீமன்!

அனுமன் ஆசி அளித்துவிட்டு மறைந்தார்!.
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

பீமனின் கர்வம்! பாப்பா மலர்! Empty Re: பீமனின் கர்வம்! பாப்பா மலர்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 17, 2011 1:02 pm

அருமையாக உள்ளது பாராட்டுக்கள் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum