தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கட்டுரை (3): வியாபாரம் – இஸ்லாத்தின் பார்வையில்...

3 posters

Go down

கட்டுரை (3): வியாபாரம் – இஸ்லாத்தின் பார்வையில்...  Empty கட்டுரை (3): வியாபாரம் – இஸ்லாத்தின் பார்வையில்...

Post by abuwasmee Tue Nov 22, 2011 8:19 pm

ஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,)

http://abuwasmeeonline.blogspot.com

வியாபாரம் தோன்றிய நோக்கம்:

மனிதன் தனக்கு தேவையான ஒன்று பிறரிடம் இருக்கும் போது அதை அவனிடம் கேட்கிறான். பேரம் பேசுகிறான். அதற்கு ஈடாக தன்னிடம் உள்ளதை கொடுக்கிறான். இப்படி உருவானதுதான் வியாபாரம். ஆதிகாலத்தில் பண்ட மாற்றமாக அதாவது பொருளுக்கு பொருள் என்று இருந்துவந்த வியாபாரம் காலப்போக்கில் பணத்திற்கு பொருள் என்ற வியாபார முறைக்கு மாறிவிட்டன. பணம் இருந்தால் போதும் எதையும் வாங்கலாம் என்ற அளவுக்கு பணம் வியாபாரத்தில் முக்கியத்துவம் பெற்று விட்டன. இதனால் வியாபார முறைகளும் மாறிவிட்டன. மாறிவிட்ட வியாபார முறைக்கு ஏற்ப மனிதனும் மாற்றிக்கொள்ள முயற்சிகிறான். வியாபாரத்தைப் பற்றி திருமறை: வியாபாரத்தைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் 2:275 வசனத்தில் குறிப்பிடுகிறான்: அல்லாஹ் உங்களுக்கு வியாபாரத்தை அனுமதித்திருக்கிறான். ஆனால் அல்லாஹ் கூறும் வியாபாரத்தில் அளவை நிறுவையில் மோசடி, பொய்யான வாக்குறுதி, பொருள் கலப்படம், குறையுள்ள பொருள் விற்பனை, வாங்குபவரை ஏமாற்றுதல், பொருள் விற்பனைக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்தல், பொருளை பதுக்குதல், கொள்ளையடித்தில், திருடுதல், அல்லாஹ் ஹராமாக்கிய பொருளை விற்பனை செய்தல் அல்லது வாங்குதல், வாங்கிய பொருள் கைக்கு வருவதற்கு முன் விற்பனை செய்தல் போன்ற எண்ணற்ற குறைபாடுகள் கிடையாது. ஆனால் இன்றைய வியாபாரத்தில் இவையெல்லாம் வியாபார நுணுக்கங்களாக தலை தூக்கிவிட்டன. பலர் எந்த வியாபாரம் ஹலாலானது, எந்த வியாபாரம் ஹரமானது என்பதை அறியாமலேயே வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால்தான் வியாபாரியாக இருந்து வாழ்க்கையை நடத்தும் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பற்கு இஸ்லாம் சில வரையறைகளை விதிக்கிறது.

அளவையிலும், நிறுவையிலும் மோசடி கூடாது!

சில வியாபாரிகள் தாங்கள் விற்கக் கூடிய பொருட்களுக்கு அதிக லாபம் வரவேண்டும் என்பதற்காக ஒரு வழிமுறையைப் பின்பற்றுவார்கள். விற்கக் கூடிய பொருட்களில் “அளவையிலும், நிறுவையிலும் மோசடி” செய்வார்கள். இப்படி மோசடி செய்பவர்களைக் குறித்து அல்லாஹ் தன் திருமறையில் 83:1-3 வசனங்களில் கடுமையாக எச்சரிக்கின்றான்: அளவையிலும் நிறுவையிலும் யார் மோசடி செய்கிறார்களோ அவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் இருந்து அளந்து வாங்கினால் நிறைய அளந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும் போது குறைத்து விடுவார்கள். அளவையிலும் நிறுவையிலும் குறைத்து வியாபாரம் செய்வது வியாபார நுணுக்கமாக சில வியாபாரிகள் நினைக்கின்றனர். ஆனால் இது ஒரு மாபெரும் மோசடி. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(அளவை, நிறுவை என) இரண்டு விஷயங்களில் பொறுப்பேற்றுள்ளீர்கள். இதில்தான் உங்களுக்கு முன் இருந்த சமுதாயத்தினர் அழிந்தனர்” என்று எச்சரித்தார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) – திர்மிதீ). நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் சொன்ன அந்த அழிந்து போன சமுதாயத்தினர் யார் தெரியுமா? ஷுஐப் நபியின் சமுதாயத்தினர். மத்தியன்வாசிகள் அதாவது தோப்புகளில் வசித்தவர்கள் என்று அழைக்கப்படும் அந்த சமுதாயத்தினர். இந்த மத்தியன்வாசிகள் அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்தனர். இம்மக்களைத் திருத்துவதற்காக அல்லாஹ் ஷுஐப் நபியை தன் தூதராக தேர்ந்தெடுத்து அச்சமுதாயத்திற்கு அனுப்பினான். ஷுஐப் நபி அல்லாஹ் காட்டித்தந்த ஏகத்துவக் கொள்கையை விளக்கி, அவர்கள் செய்துவரும் அளவை நிறுவை மோசடியை விட்டுவிடுமாறு எச்சரித்தார்கள். ஆனால் அம்மக்கள் அவரைப் பின்பற்றவில்லை. எனவே அல்லாஹ் அச்சமுதாயத்தை அழித்தான். ஷுஐப் நபி தன் சமுதாயத்தை எச்சரித்தைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் (7:85) மற்றும் (26:181-183) ஆகிய வசனங்களில் குறிப்பிடுகிறான்: அளவையும், நிறுவையையும் நிறைவாக கொடுங்கள். மக்களுக்கு அவர்களின் பொருட்களை குறைத்துவிடாதீர்கள் என எச்சரித்தார். ஆனால் அம்மக்கள் அவருடைய பேச்சை கேட்கவில்லை. அச்சமுதாயத்தில் அல்லாஹ்வை ஏற்கமறுத்தவர்கள் கூறினார்கள். ஷுஐபைப் பின்பற்றினால் நீங்கள் உங்கள் வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிடுவீர்கள். அவரைப் பின்பற்றாதீர்கள் என்று கூறினார்கள். அவர்கள் செய்துவந்த இந்த அளவை நிறுவை மோசடிக்காக அல்லாஹ் அவர்கள் மீது பூகம்பத்தை ஏற்படுத்தி அழித்துவிட்டான். அளவை நிறுவை மோசடி செய்யும் வியாபாரிகள் இந்த சமுதாயத்திற்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கு ஏற்பட்டால் என்னவாகும் என்பதை உணரவேண்டும்.

வாங்குபர்களை ஏமாற்றுவது கூடாது!

அடுத்து வியாபாரிகள் லாபம் பெறுவதற்கு கையாளும் வழிமுறை “வாங்குபர்களை ஏமாற்றுவது”. இறையச்சம் இல்லாத எத்தனையோ வியாபாரிகள் தங்களுடைய பொருட்களின் குறைகளை மறைப்பதற்காக பல வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள். சிலர் குறையுள்ள இடத்தில் லேபிள்களை ஒட்டிவிடுவார்கள். சிலர் அதை பெட்டியின் அடிப்பாகத்தில் வைத்து மறைத்துவிடுவார்கள். சிலர் எக்ஸ்பைரியான பொருளின் தேதியை மாற்றுவார்கள் அல்லது அந்த இடத்தில் பேனாவால் அடித்துவிடுவார்கள். எப்படியாவது வாங்குபர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க முயற்சிப்பார்கள். இப்படிப்பட்ட வியாபார முறைக்கு நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஓர் உணவுக் குவியலைக் கடந்து சென்ற போது அதிலே தன் கையை விட்டவுடன் அவர்களுடைய விரல்களில் ஈரம்பட்டது. அப்போது அக்கடைகாரரைப் பார்த்து: “இது என்ன ஈரம்?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் இதில் விழுந்துவிட்டது” என்றார். அதற்கு நபியவர்கள், “மக்கள் பார்க்கும் விதமாக உணவு பொருளுக்கு மேலே அதை வைத்திருக்கக் கூடாதா?” என்று கூறிவிட்டு, “யார் மோசடி செய்கிறாரோ அவர் நம்மச்சார்ந்தவர் அல்ல!” என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்). இப்படி எடை போட்டு நிறுத்து வாங்கப்படும் பொருள் ஈரமாக இருந்தால், எடை கூடும். வாங்கும் நபர் அப்பொருளை வீட்டிற்கு கொண்டு போகும் முன்பே காய்ந்துவிட்டால், காய்ந்த அப்பொருளை மீண்டும் நிறுத்துப்பார்த்தால், அதன் எடை குறையும். இந்த மாதிரியான வேலை இன்று அதிகமாக ரேஷன் கடைகளில் நடைபெறுகிறது. இப்படி உண்மையை மறைத்து வியாபாரம் செய்வதை அல்லாஹ் தன் திருமறையில் (2:42) வசனத்தில் கடுமையாக கண்டிக்கின்றான்: நீங்கள் தெரிந்துகொண்டே நல்லதுடன் கெட்டதை கலக்காத்தீர்கள். உண்மையை மறைக்காதீர்கள். வாங்கும் போதும், விற்கும் போதும் அல்லாஹ்விற்கு பயந்து செயல்பட வேண்டும். இப்படி ஒருவர் நடந்தால் அவருக்கு கிடைக்கும் நனமை என்ன தெரியுமா? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வாங்கும் போதும், விற்கும் போதும், வழக்குரைக்கும் போதும் பெருந்தன்மையுடன் நடக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!” என்று கூறினார்கள். (ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) புஹாரி). அல்லாஹ்வின் அருள் மட்டும் கிடைத்தால் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் வெற்றிபெற்றுவிடுவான் என்பது உறுதி.

வியாபாரத்தில் பொய்ச்சத்தியம் கூடாது!

அடுத்து வியாபாரிகள் லாபம் பெறுவதற்கு கையாளும் வழிமுறை “வியாபாரத்தில் பொய்ச்சத்தியம் செய்தல்”. வியாபாரத்தில் வியாபாரியின் நலன் அவனது லாபம் ஒருபுறம் இருந்தாலும், அந்த பொருளை வாங்கும் நுகர்வோர் நலன் மிக முக்கியம் என இஸ்லாம் கூறுகிறது. ஒரு பொருளை விற்பவன் அந்த பொருளின் பயன், அதன் தன்மை, அதன் உழைப்பு போன்றவற்றைக் கூறி விற்கலாம். அதே சமயம் அந்த பொருளின் தகுதிக்கு மீறியவற்றைக் கூறி, அதை நம்பவைப்பதற்காக இறைவன் மீது சத்தியம் செய்யும் நிலை இன்று பரவலாக பல வியாபாரிகளிடம் காணப்படுகிறது. வியாபாரத்தின் அடிப்படையே விளம்பரம்தான். ஆனால் அந்த விளம்பரமே பொய்யாகவும், தகுதிக்கு மீறிய புகழாகவும் அமைவதன் நோக்கம், எப்படியாவது பொருளைவிற்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோள்தான். விளம்பரத்தைப் பார்த்து, பொய்யான வார்த்தைகளை உண்மையென நம்பி பொருளை வாங்கிச்செல்லும் கூட்டம் பெருகலாம். இதனால் அதிகளவில் பொருள் விற்கவும் செய்யலாம். ஆனால் அதிக விற்பனை காரணமாக கிடைக்கும் லாபத்தில் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் (பரக்கத்) இருக்குமா? என்றால் 100 சதவீதம் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் லாபம் கூட அழிந்துபோகும். இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள். “(வியாபாரத்தில்) சத்தியம் செய்வது, சரக்கை விற்கச் செய்திடும். (ஆனால்) லாபத்தை அழித்துவிடும்” என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம், நஸாயீ, அஹ்மத், அபூதாவூத்). இவ்வாறு விற்கும் பொருளில் இல்லாததை இருப்பதாக பொய்ச்சத்தியம் செய்து விற்றால் மறுமை நாளில் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “மறுமை நாளில் மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான், அவர்களைத் தூய்மைப் படுத்தமாட்டான், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறினார்கள். அந்த மூவரில் ஒருவன் தனது வியாபாரப் பொருளில் இல்லாததை இருப்பதாக கூறி சத்தியம் செய்தவன்.” (அபூஹுரைரா (ரலி) புஹாரி). இன்றைய வியாபாரத்தில் பொய்ச்சத்தியம் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. எதற்கெடுத்தாலும் இறைவன் மீது பொய்ச்சத்தியம் செய்யும் பழக்கம் வியாபாரிகளிடம் பெருகிவிட்டது. ஒரு முஸ்லிம் வியாபாரத்தில் பொய்ச்சத்தியம் செய்து அதன் மூலம் வாங்குபரின் பணத்தை அல்லது அவரின் சொத்தை அபகரித்தால், மறுமையில் அவன் மீது கோபமாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவன் ஒரு சத்தியம் செய்து அதன் காரணமாக மற்றொரு முஸ்லிமுடைய சொத்தைப் பறித்துக் கொண்டு, அதில் அவன் பொய்யனாக இருப்பின், மறுமையில் அவன் மீது கோபமாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அஷ் அஸ் இப்னு கைஸ் (ரலி)புஹாரி, முஸ்லிம்). ஒருவருடைய பணத்தை அநியாயமாக பொய்ச்சத்தியம் செய்து சாப்பிடுவதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். இது பற்றி அல்லாஹ் தன் திருமறையில் (2:188) வசனத்தில் குறிப்பிடுகிறான்: உங்களுக்கிடையே (ஒருவருகொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! என்று கூறுகிறான்.

வியாபாரத்தில் போட்டி, பொறாமை கூடாது!

அவரவர் தன் குடும்பத்திற்குத் தேவையானதை பெற்றுக் கொள்ளவும், பணத்தைப் பெருக்கிக் கொள்ளவும் உதவியாக அமைவதுதான் வியாபாரம். ஆனால் சில சமயங்களில் தங்களுடைய வியாபாரத்திற்குப் போட்டியாக வரும் சக வியாபாரிகளை எதிரிகள் போல் பார்ப்பார்கள். இன்னொரு வியாபாரியின் வளர்ச்சியினை அழித்துத் தான் மட்டும் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளாக செயல்படுவார்கள். உதாரணமாக ஒரு பொருளின் விலை 10 ரூபாயாக இருக்கும். அடுத்தவருடைய வியாபாரத்தைக் கெடுப்பதற்காக அந்த பொருளை 8 ரூபாயிக்கு விலையைக் குறைத்து விற்பனை செய்வார்கள் அல்லது ஒருவர் ஒரு பொருளை விலை பேசிக்கொண்டிருக்கும் போதே மற்றொருவர் தலையிட்டு அந்தப் பொருளை பேரம் பேசுவார். முதலில் பேசியவர் ஒரு லட்சத்திற்கு கேட்டால், இவர் ஒன்றரை லட்சத்திற்கு கேட்பார். தன் வியாபார எதிரி அழிய வேண்டும் என விலையை ஏற்றி விடுவது அல்லது வாங்க விடாமல் கெடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர். வியாபாரத்தில் ஏற்படும் பொறாமையின் காரணமாக அந்த இருவருக்கும் இடையே வீண் சச்சரவு ஏற்பட்டு இருவருமே பாதிக்கப்படுவார்கள். மேலும் கடும் பகைவர்களாக மாறிவிடுவர். இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். “ஒரு மூமின் மற்றொரு மூமினின் சகோதரர் ஆவார். தன் சகோதரரின் வியாபாரத்தில் தலையிட்டு வியாபாரம் பேச ஒரு மூமினுக்கு அனுமதியில்லை” என்று கூறினார்கள். (உக்பா இப்னு ஆமிர் (ரலி) இப்னுமாஜா, அஹ்மத்). இதேபோன்று மற்றொரு ஹதீஸில் “உங்களில் ஒருவர் தன் சகோதரன் செய்யும் வியாபாரத்தில் (குறுக்கீடு செய்து) வியாபாரம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்கள். (இப்னு உமர் (ரலி) புஹாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸாயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்). பொதுவாக வியாபாரத்தில் போட்டி இருந்தால் கூட பெரும் இழப்பு ஏற்படாது. ஆனால் வியாபாரத்தில் பொறாமை இருந்தால் இழப்பு அதிகமாக இருக்கும். சிலபேர் வாங்கும் நோக்கமில்லாமல், தன்னுடைய வியாபாரத்தின் எதிரி கூடுதலாக விலை கொடுத்து ஏமாறட்டும் என்ற நோக்கில் விலைபேசும் அற்ப புத்திக்காரர்கள் உண்டு. சிலர் விற்பனை பொருளின் விலை மதிப்பை அதிகப்படுத்தி விற்பனை செய்யும் எண்ணத்தில் தாமாக ஒரு ஆளை ஏற்பாடு செய்து அவனை விலை பேசும் இடத்தில் நிற்கச் செய்து அந்தப் பொருளின் விலையை கூடுதலாக கேட்கவைப்பான். ஏலம் போடும் இடங்களில் இதை நாம் பார்க்கலாம். ஏலம் போடுபவனைச்சுற்றி அவனது ஆட்களே நின்று கொண்டு கூடுதல் விலைக்கு ஏலம் கேட்பார்கள். (வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்திடும் நோக்கில்) விலையை கூடுதலாக்கிட முயல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். (இப்னு உமர் (ரலி) புஹாரி, முஸ்லிம், நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்).

பதுக்கல் வியாபாரம் கூடாது!

சில வியாபாரிகள் தங்களின் லாபத்தை பெறுக்குவதற்கு கையாளும் வழிமுறை வியாபாரப் பொருளை பதுக்கல் செய்தல். மக்களுக்குத் தேவையான பொருளை உரிய நேரத்தில் மார்க்கெட்டிற்கு கொண்டு வராமல் பதுக்கி வைத்துவிட்டு, விலை ஏறும்போது மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து அதிக விலையில் விற்று லாபம் அடைகிறார்கள். இந்த பதுக்கல் தன்மை மனிதனை இரக்கமற்றவனாக மாற்றிவிடும். பதுக்கல் செய்தவன் சாபத்திற்கு ஆளாகக் கூடியவன் என்று இஸ்லாம் கூறுகிறது. இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தேவையான பொருளைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தவனாவான். மேலும் அல்லாஹ் அவனுக்கு வாழ்வாதாரங்களையும் வழங்குவான். இன்னும் அவற்றை பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்” என்று கூறினார்கள். (உமர் (ரலி) இப்னுமாஜா). அதிக லாபம் கிடைக்கவேண்டும், தானும் தன் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும், மற்றுவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று எண்ணி சிலர் வியாபாரிகள் பதுக்கிவைக்கிறார்கள். பதுக்கல்காரர்களால் இந்தச் சமுதாயத்திற்கு பெரும் பாதிப்பும், பணவீக்கமும் ஏற்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பாவியைத்தவிர வேறு யாரும் உணவுப் பொருளைபதுக்கமாட்டார்கள்.” என்று கூறினார்கள். (மஃமர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) முஸ்லிம்). பதுக்கல்காரன் என்பவன் பாவி. நாட்டிலுள்ள அனைவரும் குறைந்த விலையை எதிர்ப்பார்ப்பார்கள். எப்போது தங்கம் விலை இறங்கும். எப்போது குறைந்த விலையில் உணவுபொருட்கள், துணிமணிகள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் என்று பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால் பதுக்கல்காரன் எப்பொழுது பொருளின் விலை உயரும் என்று எதிர்ப்பார்ப்பான். ஒரு பொருளின் விலையில் சரிவு ஏற்பட்டால் முதலில் வருத்தப்படுபவன் பதுக்கல்காரன்தான். அதேப் போன்று ஒரு பொருளின் விலையில் உயர்வு ஏற்பட்டால் முதலில் சந்தோஷப்படுபவன் பதுக்கல்காரன்தான். இந்தப் பதுக்கல்காரனைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தேவையான பண்டங்களைப் பதுக்கி வைப்பவன் எவ்வளவு கெட்டவனாக இருக்கிறான். அல்லாஹ் பொருளின் விலையை மலிவாக்கி விட்டால் இவன் வருத்தப்படுவான். விலை ஏறிவிட்டாலோ மகிழ்ச்சிகொள்கிறான்.” என்று கூறினார்கள். (முஅத் (ரலி) பைஹகீ).

கூட்டு வியாபாரத்தில் சகதோழரை ஏமாற்றுவது கூடாது!

சில வியாபாரிகள் கூட்டாக வியாபாரம் செய்வார்கள். அதில் அதிகம்பேர் தன்னுடைய சகதோழருக்கு மோசடி செய்துவிடுவார்கள். சில நேரங்களில் லாபத்தில் மட்டும் பங்குபெறுவார்கள். நஷ்டம் ஏற்படும் போது இது உன்னால் தான் வந்தது என்று கூறி அக்கூட்டுவியாபாரத்தை முறித்துவிடுவார்கள். இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். “வியாபாரம் போன்ற வணிகத்தில், இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை அவர்களுடன் மூன்றாவது கூட்டாளியாக அல்லாஹ் இருப்பான் ” என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) அபூதாவூத்). இது பற்றி அல்லாஹ் தன் திருமறையில் (38:24) வசனத்தில் குறிப்பிடுகிறான்: நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர, உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்கின்றனர்.

விற்கும் பொருளில் கலப்படம் கூடாது!

சில வியாபாரிகள் தங்களின் லாபத்தை பெறுக்குவதற்கு அடுத்து கையாளும் வழிமுறை விற்கும் பொருளில் கலப்படம் செய்தல். தரமான பொருளுடன் தோற்றத்தில் ஒன்றுபோல் இருக்கும் பொருட்களை அல்லது வேறுபொருளை அதனுடன் கலப்படம் செய்து விற்பார்கள். இன்றைய காலகட்டத்தில் அன்றாடம் தேவைப்படும் உணவுப்பொருட்களில் உடலுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்கக்கூடிய செயற்கையான நிறங்களை உணவுப் பொருட்களில் கலப்படம் செய்து விற்பனை செய்கிறார்கள் சில இரக்கமற்ற வியாபாரிகள். குழந்தைகளின் உணவிலிருந்து பெரியவர்களின் உணவு வரை இந்த கலப்படம் இருக்கிறது. இந்த கலப்படபேர்வழிகள் சாதாரண பிளாட்ஃபார்மிலிருந்து ஓட்டல், மளிகைகடை மற்றும் பெரும் வியாபாரிகள் வரை இந்த மனித இரத்தத்தை பணமாக உறிஞ்சும் கலப்படம் விரிகிறது. நாம் நினைத்துப் பார்க்காத பொருட்களில் எல்லாம் கலப்படம் நிறைந்து காணப்படுகிறது.

வியாபாரத்தில் ஹலால் - ஹராம் பேணுவதை கைவிடல் கூடாது!

சிலர் வியாபாரத்தில் எது ஹலால்? எது ஹராம்? என்ற விளக்கம் இல்லாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். இக்காலத்தில் மதுபானங்களையும், பீடி, சிகரெட், போதை தரக்கூடிய பாக்கு வகைகள் மற்றும் உடலுக்கு கெடுதல் தரக்கூடிய பொருளை லாபநோக்கோடு விற்பனை செய்கிறார்கள். மதுபானத்தினால் சீரழிந்து கிடக்கும் எத்தனையோ குடும்பங்களை கண்ணால் பார்க்கிறோம். தன் குடும்பம் சொகுசாக வாழவேண்டும் என்று எண்ணி ஹராமாக்கப்பட்ட பொருளை விற்று அந்த ஹராமான பொருளின் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து, உண்பது, பருகுவது, ஆடைகளை அணிவது, ஆடம்பரமாக வீடுகளை கட்டுவது, கார் வாங்குவது இன்று பெருகிவிட்டது. இதனால் அவர்களின் உடலிலும், அவர்களைச் சுற்றிலும் ஹராம் நிரம்பி இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! என்று மூன்று முறை கூறிவிட்டு, நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது கொழுப்பை ஹராமாக்கினான். அவர்களோ அதை விற்பனை செய்து அதன் பணத்தில் சாப்பிட்டார்கள். அல்லாஹ் ஒரு சமுதாயத்தின் மீது எதை உண்ண ஹராமாக்கினானோ அதனுடைய பணமும் ஹராமாக்கிவிட்டான்” என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத்). ஒரு வியாபாரிக்கு அல்லாஹ் தடுத்த ஹராமான வியாபாரத்தினால் வரும் வருமானத்தில் இவ்வுலகிலும் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் (பரக்கத்) இருக்காது, மறுமையிலும் அதற்கு தண்டனையாக சொர்க்கமும் கிடைக்காது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஹராமின் மூலம் வளர்ந்த சதைக்கு நரக நெருப்பே தகுதியானது” என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) தப்ரானீ).

உதாரணமாக ஒரு மனிதர் ஹராமான வழியில் கிடைத்த பொருளில் சாப்பிட்டு, அந்த ஹராமான உணவின் மூலம் அவரது உடல் சதையில் சுமார் 1 மில்லி கிராம் எடையுள்ள சதை கூடிவிடுகிறது என்று வைத்துக்கொண்டால், இந்த 1 மில்லி கிராம் எடையுள்ள சதை சொர்க்கம் போக முடியாது. இது ஹராமான உணவின் மூலம் உருவானதால் இந்த 1 மில்லி கிராம் எடையுள்ள சதை நரகம் போக வேண்டும். இந்த 1 மில்லி கிராம் எடையுள்ள சதை நரகம் போக வேண்டுமென்றால் அந்த மனிதன் நரகம் போக வேண்டும். அப்பொழுதுதான் அந்த 1 மில்லி கிராம் எடையுள்ள சதை நரக நெருப்பில் எரிந்து அதற்குரிய தண்டனை பெறமுடியும். ஒரு மனிதன் அனைத்திலும் வெற்றிப்பெற்று, ஆனால் அந்த 1 மில்லி கிராம் எடையுள்ள சதை காரணமாக அவனால் முன்கூட்டியே சொர்க்கம் போகமுடியவில்லை. எனவே ஹராமின் மூலம் வளர்ந்த சதைக்கு நரக நெருப்பே தகுதியானது. நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: “ஒரு காலம் வரும். அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா?ஹராமா? என்பதை பொருட்படுத்தமாட்டார்கள்” என்று கூறினார்கள் (அபூஹுரைரா (ரலி) புஹாரி). நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த காலத்தில்தான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்று ஒரு மனிதன் தான் எந்த வழியில் சம்பாதிக்கிறோம் என்பதை பார்ப்பதில்லை. அவனுடைய நோக்கம் பணம் மட்டும்தான். பணமென்றால் அனைத்தையும் இழக்கத்தயாராகிவிடுகிறான்.

ஏன் நமது துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை?

சிலருக்கு என்னடா! நாம் அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். ஆனால் நம்முடைய துஆ இதுவரை அல்லாஹ் அங்கீகரிக்கவில்லையே? என்று எண்ணம் தோன்றலாம். அதற்கு என்ன காரணம் தெரியுமா? நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: “ஒருவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது, அவனது துஆ எவ்வாறு அங்கீகரிக்கப்படும்?” என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்). நாம் ஹராமான முறையில் சம்பாதித்துவிட்டு பிறகு நமது தேவைக்காக அல்லாஹ்விடம் துஆ செய்தால் அந்த துஆவிற்கு பதிலும் இருக்காது, பலனும் இருக்காது.

நேர்மையான வியாபாரிகளின் நிலை என்ன?

சரி! நேர்மையான வியாபாரிகள் இருக்கிறார்களே, அவர்களுடைய நிலை என்ன? ஒரு வியாபாரி உண்மையுடனும், நேர்மையுடனும் வியாபாரம் செய்தால் அவருக்கு மறுமையில் மிகப்பெரிய அந்தஸ்து இருக்கிறது. அது என்ன தெரியுமா? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உண்மை பேசி, நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள் ஆகியோருடன் இருப்பார்” என்று கூறினார்கள். (அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) திர்மிதீ).

வியாபாரம் செய்யும் போது இடையிடையே தர்மம் செய்ய வேண்டும்!

கொஞ்சம் எடையில் கூடுதலாக போவதால் ஒன்றும் பெரிய இழப்பு ஏற்படபோவதில்லை. உங்களையும் அறியாமல் வியாபாரத்தின் போது செய்த தவறுக்கு இந்த தர்மம் பரிகாரமாக அமையும். இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வியாபாரிகளே! ஷைத்தானும் பாவமும் வியாபாரத்தின் போது ஆஜராகி வருவதால், உங்கள் வியாபாரங்களுடன் தர்மத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (பரா பின் ஆஸிப் (ரலி) திர்மிதீ, அபூதாவூத்).

இறுதியாக!

அன்பான வியாபாரிகளே! நீங்கள் மக்களின் அன்றாடம் தேவைகளை விற்பனை செய்கிறீகள். ஆனால் உங்கள் வியாபாரத்தில் மோசடி செய்யாதீர்கள்! எது ஹராம்? எது ஹலால் என அறிந்து வியாபாரம் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீது பொய்ச் சத்தியம் செய்து பொருளை விற்பனை செய்யாதீர்கள்! விற்பனை பொருளை பதுக்கல் செய்யாதீர்கள்! விற்பனை பொருட்களில் கலப்படம் செய்து அப்பாவி மக்களின் உயிர்களை குடிக்காதீர்கள்! அடுத்தவரின் வியாபாரத்தில் குறுக்கீடு செய்து, பொறாமை கொள்ளாதீர்கள்! கூட்டுத்தொழிலில் சகதோழரை ஏமாற்றாதீர்கள்! உங்களின் வியாபாரங்களுக்கு மத்தியில் அதிகம் தர்மம் செய்யுங்கள்!

உங்களின் வியாபாரம் செழிக்க அல்லாஹ் போதுமானவன்..!

ஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,)
abuwasmee
abuwasmee
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 53
Points : 146
Join date : 22/07/2011

Back to top Go down

கட்டுரை (3): வியாபாரம் – இஸ்லாத்தின் பார்வையில்...  Empty Re: கட்டுரை (3): வியாபாரம் – இஸ்லாத்தின் பார்வையில்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 22, 2011 8:26 pm

சியர்ஸ்
//அன்பான வியாபாரிகளே! நீங்கள் மக்களின் அன்றாடம் தேவைகளை விற்பனை செய்கிறீகள். ஆனால் உங்கள் வியாபாரத்தில் மோசடி செய்யாதீர்கள்! // அன்பு மலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கட்டுரை (3): வியாபாரம் – இஸ்லாத்தின் பார்வையில்...  Empty Re: கட்டுரை (3): வியாபாரம் – இஸ்லாத்தின் பார்வையில்...

Post by RAJABTHEEN Tue Jun 05, 2012 12:52 am

மிகவும் சிறப்பான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கட்டுரை (3): வியாபாரம் – இஸ்லாத்தின் பார்வையில்...  Empty Re: கட்டுரை (3): வியாபாரம் – இஸ்லாத்தின் பார்வையில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum