தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உதை‌த்து‌ ‌விளையாட ம‌க்க‌ள் நல‌ப்‌ப‌ணியாள‌ர்க‌ள் கா‌ல்ப‌ந்த‌ல்ல - அர‌சி‌ன் மே‌ல்முறை‌யீ‌ட்டு மனுவை ‌‌நிராக‌ரி‌த்தது ஐகோ‌‌ர்‌ட்

2 posters

Go down

உதை‌த்து‌ ‌விளையாட ம‌க்க‌ள் நல‌ப்‌ப‌ணியாள‌ர்க‌ள் கா‌ல்ப‌ந்த‌ல்ல - அர‌சி‌ன் மே‌ல்முறை‌யீ‌ட்டு மனுவை ‌‌நிராக‌ரி‌த்தது ஐகோ‌‌ர்‌ட் Empty உதை‌த்து‌ ‌விளையாட ம‌க்க‌ள் நல‌ப்‌ப‌ணியாள‌ர்க‌ள் கா‌ல்ப‌ந்த‌ல்ல - அர‌சி‌ன் மே‌ல்முறை‌யீ‌ட்டு மனுவை ‌‌நிராக‌ரி‌த்தது ஐகோ‌‌ர்‌ட்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 23, 2011 4:30 pm

பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை பணியில் சேர்க்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி த‌மிழக அரசு தா‌க்க‌ல் செ‌ய்த மே‌‌ல்முறை‌யீ‌ட்டு மனுவை ‌நிராக‌ரி‌த்த சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், ஒ‌வ்வொரு முறையு‌ம் உதை‌த்து‌ ‌விளையாட ம‌க்க‌ள் ந‌ல‌ப் ப‌ணியாள‌ர்க‌ள் கா‌ல்ப‌ந்து அ‌ல்ல எ‌ன்று கூ‌றியு‌ள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் எம்.பழனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்கள் நல பணியாளர்கள் நல சங்கத்தலைவர் என்.செல்லபாண்டியன் ஆகியோர் கடந்த வாரம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

அ‌தி‌ல், ''13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்து கடந்த 8ஆ‌ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த வழக்கை கடந்த 11ஆ‌ம் தேதி விசாரித்த நீதிபதி கே.சுகுணா, மக்கள் நலப்பணியாளர்களுக்கு 31.5.12 வரை பணி நியமனம் செய்யப்பட்டு இருப்பதாலும், இந்த விவகாரத்தின் உண்மை நிலையை கருதியும், அவர்களை பணிநீக்கம் செய்து அரசு பிறப்பித்த ஆணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு மீண்டும் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை செயலாளர் என்.எஸ்.பழனியப்பன் பதில் மனு தாக்கல் செய்தார்.

அ‌தி‌ல், ''இந்த சங்கங்களில் சுமார் 13 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருப்பதாக மனுதாரர்கள் கூறுவதில் உண்மை இல்லை. அவற்றில் உறுப்பினராக சேருவதற்கு 14.11.11. வரை முறையே 14 மற்றும் 15 நபர்களே விண்ணப்பம் தாக்கல் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த சங்கங்கள் எதுவுமே செயல்பாட்டில் இல்லை. எனவே அந்த சங்கங்களின் மனுக்களை விசாரணைக்கு எடுக்கக்கூடாது. சட்டவிரோதமாகவும், விதிமுறைகளுக்கு முரணாகவும் நியமனம் செய்யப்பட்டதால்தான் அவர்களை பணிநீக்கம் செய்தோம்'' என்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

அதைத்தொடர்ந்து, ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவுப்படி, உய‌ர் ‌நீ‌திம‌ன்ற பதிவகத்தில் 12ஆ‌ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில் சங்க உறுப்பினர்கள் யார்-யார்? பெயர் உள்ளதோ, அனைவருக்கும் உடனடியாக மக்கள் நலப்பணியாளர் என்ற பணியை வழங்க வேண்டும் என்று நீதிபதி கே.சுகுணா உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜரானார்.

2 சங்கத்திலும் மொத்தம் 29 பேர்தான் உறுப்பினராக இருக்கும்போது, 13 ஆயிரம் பேரை மக்கள் நலப் பணியாளராக சேர்க்க வேண்டும் என்று நீதிபதி கே.சுகுணா பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்வதாகவும், அதை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். மேல்முறையீட்டு வழக்கை 23ஆ‌ம் தேதி (இன்று) முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி கூறினார்.

தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், இந்த பிரச்சனையில் கடந்த 11, 22ஆ‌ம் தேதிகளில் நீதிபதி கே.சுகுணா பிறப்பித்த உத்தரவுகள் சட்ட விரோதமானவை. இந்த சங்கங்கள் கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான் பதிவு செய்யப்பட்டன. இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல், சங்க பதிவகத்துக்கு அனுப்பப்படவில்லை.

எனவே இந்த உறுப்பினர் பட்டியலில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இதையெல்லாம் தனி நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார். பணியாளர் பிரச்சனையை ரிட் மனுவாக தாக்கல் செய்ய முடியாது. அவர்கள் தற்காலிகமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் நியமனம் செய்யப்பட்டனர். இதையும் தனி நீதிபதி கவனிக்க தவறிவிட்டார். விதிமுறைகளை சங்கங்கள் சரிவர பின்பற்றாத நிலையில்கூட, தனது உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று தனி நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பணிநீக்க உத்தரவு தரப்பட்டுள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்ய முறையிடவில்லை. அதற்கு மாறாக சங்கமாக ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தாக்கல் செய்துள்ளனர், அதை ஏற்கக்கூடாது. ஆனால் தனி நீதிபதி அவற்றையெல்லாம் கவனிக்கவில்லை. எனவே தனி நீதிபதி பிறப்பித்த 2 உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தது.

இ‌ந்த மனுவை இ‌ன்று ‌விசா‌ரி‌த்த தலைமை ‌‌நீ‌திப‌தி இ‌‌க்பா‌ல் கொ‌ண்ட அம‌ர்வு, த‌மிழக அர‌சி‌ன் ம‌ே‌ல்முறை‌யீ‌ட்டு மனுவை ‌நிராக‌ரி‌த்தது. ''ஒ‌வ்வொரு முறையு‌ம் உதை‌த்து‌ ‌விளையாட ம‌க்க‌ள் நல‌ப்‌ப‌ணியாள‌ர்க‌ள் கா‌ல்ப‌ந்து அ‌ல்ல'' எ‌ன்று‌ம் ‌‌‌நீ‌திப‌திக‌ள் த‌ங்க‌ள் ‌தீ‌‌ர்‌ப்‌பி‌ல் கூ‌றியு‌ள்ளன‌ர்.

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இ‌ன்று அ‌திரடி உ‌த்தர‌வா‌ல் 13,500 ம‌க்க‌ள் நல‌ப் ப‌‌ணியாள‌ர்க‌ள் மீ‌ண்டு‌ம் அம‌ர்‌த்த‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள். ஆன‌ா‌ல் த‌மிழக அர‌சி‌ன் ‌‌வீ‌ண்‌பிடிவாத‌த்தா‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் செ‌ல்ல வா‌ய்‌ப்பு இரு‌ப்பதாக தெ‌ரி‌‌கிறது.

நன்றி வெப்துனியா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உதை‌த்து‌ ‌விளையாட ம‌க்க‌ள் நல‌ப்‌ப‌ணியாள‌ர்க‌ள் கா‌ல்ப‌ந்த‌ல்ல - அர‌சி‌ன் மே‌ல்முறை‌யீ‌ட்டு மனுவை ‌‌நிராக‌ரி‌த்தது ஐகோ‌‌ர்‌ட் Empty Re: உதை‌த்து‌ ‌விளையாட ம‌க்க‌ள் நல‌ப்‌ப‌ணியாள‌ர்க‌ள் கா‌ல்ப‌ந்த‌ல்ல - அர‌சி‌ன் மே‌ல்முறை‌யீ‌ட்டு மனுவை ‌‌நிராக‌ரி‌த்தது ஐகோ‌‌ர்‌ட்

Post by thaliranna Wed Nov 23, 2011 5:38 pm

நல்லா வேணும் தமிழக அரசுக்கு! ஒவ்வொருமுறையும் ஆட்சி மாற்றத்தில் உதைபட மக்கள் நல பணியாளர்கள்தானா கிடைத்தார்கள்?
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum