தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அம்மா அப்பாயெனும் வானமும் பூமியும் - வாழ்வியல் கட்டுரைகள் - வித்யாசாகர்!

Go down

அம்மா அப்பாயெனும் வானமும் பூமியும் - வாழ்வியல் கட்டுரைகள் - வித்யாசாகர்! Empty அம்மா அப்பாயெனும் வானமும் பூமியும் - வாழ்வியல் கட்டுரைகள் - வித்யாசாகர்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 10, 2011 3:18 pm

ஆயிரம் கண்ணாடிகளில் பிரதிபலித்து கண்ணைப்பறிக்கும் வெளிச்சமாகவே இருக்கிறது வாழ்க்கை. நாம் தான் அதில் பொய்யையும் புரட்டையும் கலந்து வளத்தையும் நலத்தையும் இழந்து நம்பிக்கைக்கு அப்பாற்ப்பட் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து சோகத்தையும் சரிவையுமேக் கொண்டு ஒளியிழந்தும் மகிழ்விழந்தும் வாழ்கிறோம். சற்று சரிவரப் பார்த்தால் நமக்கான அனைத்தும் நம்மைச் சுற்றியே இருக்கிறது. அதை எடுத்துக் கொள்ளும் தெளிவில்தான் ஒருவரில் ஒருவர் நாம் மாறுபட்டுப் போகிறோம்.

உதாரணத்திற்கு நம்மோடுள்ள பெரியவர்களின் பெரும்பான்மையான நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அவர்கள் நமக்கு நல்ல வழிகாட்டி மட்டுமல்ல நல்ல தோழமையையும் அன்பையும் மனதில் சுமந்துத் திரிபவர்கள். அவர்களின் நெருக்கம் நமை எத்தனை வளர்க்கிறதோ அதே அளவு அவர்களைவிட்டுத் தள்ளிநிற்கும் இடைவெளியும் நமக்கான பெருங்குறைதான் என்பதை நாம் உணரவேண்டும்.

பிறந்து வளர்ந்து உலகை அறியும் அறிவுணர்ந்து, கைப்பட்ட இடத்திலெல்லாம் இருக்கும் தடைகளைக் களைந்து, முட்டிமோதி தன்னை நிலைபடுத்தி, வாழ்க்கைத் துணையோடு ஒன்றி, பிள்ளைகள் பெற்று, வளர்த்து, தனக்கும் தன் குடும்பத்திற்குமான தேவைகளை நிறைவுசெய்து, சமுதாய நிலைபாட்டில் தனக்கானதொரு தனி மரியாதையினைத் தக்கவைத்து, தன் பிள்ளைகளின் தம்பித் தங்கைகளின் பேரக் குழந்தைகளின் மற்றும் தன்னோடுள்ள உறவுகளின் வளர்ச்சியினை தனது தலைமுறையின் வளர்சியினை தனது வளர்ச்சியாகவும் லட்சியமாகவும் வெற்றியாகவும் மகிழ்வாகவும் கொண்டு அதைக் காண கண்கள் கோடி பூத்து நிற்கும் அப்பெரியவர்களை; நம் தாத்தாப் பாட்டிகளை அப்பா அம்மாக்களை எல்லோரும் நாம் எங்கு வைத்திருக்கிறோம்?

நமக்கென்று எண்ணற்ற ஆசைகளும் லட்சியங்களும் தீர்மானங்களும் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கென்று இருக்கும் ஒரே லட்சியம் மகிழ்ச்சி ஆசை அன்பு எல்லாமே நாம் மட்டுமாகத் தானேயிருப்போம்? ஒவ்வொரு நாள் நாம் வேலைக்கு செல்லும் முன் நம் வீட்டை' வீட்டுக் குழந்தைகளைவிட்டு பிரிந்துச்செல்லும் வலிகளை உணராமலா இருக்கிறோம்? சிறுவயதுள்ள நம் மகனையோ மகளையோ நாம் பள்ளியின் வாசலில் கண்ணீர் ததும்பிக் கதறக் கதற விட்டுவந்த அந்த முதல்நாட்களின் வலி' நம்மை விட்டு நெடுந்தூரம் விலகியிருக்கும் அந்த நம்மைப் பெற்றவர்களுக்கும் இருக்காதா?

பார்த்து பார்த்து ஆடைகளை தேர்வு செய்கிறோம் நம் பிள்ளைகளுக்கு. இது பிடிக்கும் இது பிடிக்காதோ என்றெல்லாம் அஞ்சி ஆராய்ந்து உணவளிக்கிறோம். நாளை அவர்கள் வளர இருப்பதுப் பற்றி இன்றே கனவு காண்கிறோம், எங்கு அவர்கள் தடம் மாறி போவார்களோ மதிக் கெட்டுவிடுவார்களோ என்றெல்லாம் பயம் கொள்கிறோம், உன் நன்மைக்கு தானேடா சொல்கிறோம் என்று நித்தம் நித்தம் சொல்லி அவர்களின் வளர்ச்சியை தனக்கு முளைத்த சிறகென்றே எண்ணி வளர்க்கிறோம். அப்படி நம்மை வளர்த்தவர்கள் தானே நம் அப்பாம்மாக்களும்?

பொதுவாக ஒரு குழந்தைக்கு தன் வளரும் பருவத்தில் எண்ண ஆசை பெரிதாக இருந்துவிடும்? நான் வளர்ந்து பெரியவனாக அல்லது பெரியவளாக ஆனதும் என் அப்பாம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்வேன். என் அம்மாவிற்கு நிறைய புடவையும் அப்பாவிற்கு நிறைய வேட்டிச் சட்டையும் எடுத்துத் தருவேன் என்று எண்ணிய நம் நன்றி உணர்வை எங்கு சென்று எப்படி தொலைத்தோம் நாம்?

ஒரு ஆண் எப்படி நான் வளர்ந்தால் என் தாயையும் தந்தையையும் நன்றாக பாதுகாத்து, கண்கலங்காமல் பார்த்துக் கொள்வேன்' என்று எண்ணுகிறானோ அதே எண்ணத்தைத் தானே ஒரு பெண் தான் குழந்தையாக இருக்கும்போதும் எண்ணியிருப்பாள்? தன் தந்தை தன் இயலாமையினால் சோர்வுறும் போதெல்லாம் தனது கொடுக்கத் துடிக்கும் தோள்களைத் தானே அவள் கொடுக்க இயலாமல் மனதால் ஈரப் படுத்தி வைத்திருக்கிறாள்? பிறகு ஒரு ஆணுக்கெப்படி தன் பெற்றோரைப் பற்றிய அக்கறையும் அன்பும் தவிப்பும் இருக்கிறதோ அதே அக்கறையும் தவிப்பும் வலிகளையும் கொண்டுதானே பெண்கள் தன் கட்டப் பட்ட கைகளோடு நம்மோடு நின்றுக் கொண்டுள்ளனர், எனில் ஒரு ஆணுக்கு தன் தாய்தந்தை குடும்பம் எப்படி முக்கியமோ அப்படி தனைச் சார்ந்து அமைத்துக் கொண்ட பெண்ணிற்கும் அத் தாய்தந்தையும் குடும்பமும் முக்கியம் என்பதை நிச்சயம் நாம் உணரவேண்டும். ஒரு பெண்ணின்' அதாவது தன் மனைவியின் தாய் தந்தையின் குடும்பத்தின் நலனில் நமக்கும் மெத்த பொருப்பிருப்பதை சுயமாய் நாம் ஏற்கவேண்டும்.

தனக்கான அதே தவிப்பும் ஆசையும் பெற்றோரை பாதுகாக்கும் நோக்கும் தன் தங்கைக்கும் இருப்பதுபோல், அது தன் மனைவிக்கும் இயல்பாக இருப்பதொன்றே’ எனும் புரிதல் வேண்டும். ஒருவேளை சிலர், அப்புரிதல் நம் அனைவரிடையே தற்போது உண்டென்று எண்ணுவரெனில், பிறகெப்படி நிறைய வீட்டில் மாமனாரோ மாமியாரோ அந்நியப் பட்டுவிட இயலும்? நிறையப்பேருக்கு அவர்களைப் பற்றி கவலையின்றி வருத்தமின்றி எப்படிப் போகும்? என்பதைப் பற்றியும் சிந்திக்கவேண்டும். எனினும், இது சில இடத்தில் எதிர்மறையாகக் கூட நடப்பதுண்டு, பெண் குடும்பத்தில் சற்று வலிமையானவளாக இருந்தால் அங்கே அவள் தாய்தந்தை மட்டுமே இருப்பார்கள், அல்லது அவள் தன் கணவனோடு தன் தாய்வீட்டில் இருப்பாள், கணவனைப் பெற்றோர் எங்கோ எப்படியோ அவதியுற்றுக் கிடப்பர்.

அல்லது ஆண் தன் பெற்றோரை உடன் வைத்து மனைவியின் பெற்றோரைப் பற்றிய வருத்தமே இன்றி இருப்பான்' ஏனென்றுக் கேட்டால் அவளுக்குத் தான் இது வீடு அவர்களுக்கல்ல; அவர்களுக்குத் தான் அவளின் அண்ணன் அல்லது தம்பியின் வீட்டில் யாரோ இருப்பார்களே' என்கிறான். உண்மையில் இந்த எண்ணம் இந்த நிலை முற்றாக மாறவேண்டும். அப்படி தன் மனைவிக்கு இரண்டு அண்ணன்தம்பிகள் இருந்தால் அதையும் நாம் நான்கு அண்ணன் தம்பிகளோடு பிறக்கையில் நம் பெற்றோரை எப்படி நடத்துவோமோ அப்படி எண்ணி அவர்களையும் நடத்தவேண்டும்.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தன்னை ,மனதாலும் உடலாலும் இணைத்துக் கொண்ட போதே அவர்களின் குடும்பத்தாலும் இணைந்துக் கொண்ட பண்பினை மையப் படுத்தியே நம் உறவுமுறைகள் அமைந்திருக்கும் பட்சத்தில் பெற்றோர் மட்டும் அந்நியம் ஆகிறார்களே அதெப்படியென நாம் எல்லோருமே சிந்திக்கவேண்டும். அவர்கள் யார், நம் வாழ்வின் மகிழ்வின் இந்த உயிர்ப்பான தருணத்தின் மூலாதாரம் இல்லையா? அவர்களை முழுக்க முழுக்க நம்கூட வைத்து அவர்களின் இயலாத பொழுதுகளில் அவர்களுக்கு உதவி, அவர்களோடு உரையாடி, நம் வாழ்வின் விடையிலா தருங்களுக்கு காரணம் கேட்டு, வழி கேட்டு, மனம்விட்டுப் பேசவைத்து, மனது நல்லுணர்வினால் நிறையச் செய்து, மரியாதை படுத்தி, அன்பு காட்டி, தன் நன்றியுணர்வைப் பட்டக் கடனை' அவர்களின் உடனிருந்து தீர்ப்பது நம் கடமையில்லையா?

கடமை தான். அது நம் கடன் தான். நம் பெற்றோரை நாம் காப்பது, நம் வீட்டுப் பெரியோரை நாம் காப்பது, நம் வீட்டின் வெளிச்சங்களை மகிழ்ச்சியை ஆசிர்வாதத்தை நாம் காத்து தக்கவைத்துக் கொள்வது நம் கடமை தான். இதை அனுபவப் பூர்வமாகவே நீங்கள் தன் சுற்றியிருப்போர் மூலம் பார்க்கலாம், எந்த வீடுகளில் பெற்றோர் பெரியோர் மதிப்போடும் அன்போடும் காக்கப் படுகிறார்களோ அந்த வீடு மென்மேலும் சிறக்கிறது. எந்த மனிதன் பெரியோரை மதிக்கிறானோ அவன் சிறக்கிறான். எனவே நாமும் சிறக்க பெரியோரை மதிப்போம், பெற்றோரை உயிரெனக் காப்போம்' என்றுக் கேட்டு ஒரு சின்ன சம்பவம் சொல்லி நிறைவு செய்கிறேன்.

ஒரு ஊர். அந்த ஊரின் ஒரு வீட்டைப் பற்றிய பார்வை இது. அன்று தீபாவளி. தீபாவளி வானவேடிக்கையோடும், தெரு நிறைந்த பட்டாசுகளோடும் மனதில் மழலைகளின் சிரிப்பாக அமர்ந்துக் கொண்டுள்ளது. தெரு நிறைந்த ஆர்பாட்டமாக எல்லோராலும் தீபாவளி குதூகளிக்க்ப் படுகிறது. அதற்கு நடுவே ஒரு நடுத்தரக் குடும்பம் தன் உடைந்த வீடுகளை மொழுகி, கிழிந்த ஆடைகளுக்கு பதிலாக புதிது வாங்கி, கடன்பட்ட துன்பத்தை தின்பண்டங்களாய் செய்து' எஞ்சிக் கிடைத்த காசில் பட்டாசும் வெடித்து மகிழுமொரு காட்சி அங்கே நிலவுகிறது.

அக்காட்சியின் இடையே நேரும் வருத்தம் என்னவெனில், அந்த வீட்டின் திண்ணையில் அன்றைக்கும் பெருக்கப் படாத அந்த திண்ணையின் ஓரத்தில் ஒரு பழைய ஒலைப்பாய் விரித்து, அதன்மீது பழைய ஒன்றிரண்டு புடவைகளை விரித்து, அதன்மீது பல் கொட்டயிருக்கும்பருவத்து பாட்டியொருவர் படுத்துக் கிடக்கிறார். அவர் தன் அகலத் திறந்த கண்களோடு தன் அழுக்குச் சேலைக் கூட மாற்றப்படாமல், பிள்ளைகளும் பேரப் பிள்ளைளும் கூடி மகிழும் இடம் விட்டு விலகி சற்று தூரத்தில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மனசு எதற்கோ ஏங்கி, எதை எதையோ எண்ணி அழுது, யாருமே தன்னை ஒரு பொருட்டாகக் கொண்டிடாத வருத்தத்தில் விம்மி, தன் பசி பற்றியோ' தன் இயலாமை பற்றியோ' தன் நோய்வாய்ப் பற்றியோ' எழுந்தமரக் கூட இயலாத முதுமைப் பற்றியோ யாருமே ஏனென்றும் கேட்டிதாத' அக்கறை கொள்ளாதத் தன் வாழ்க்கையை நொந்து வலித்துக் கிடக்கிறது.

பாவியின் உயிரேனும் நின்றுத் தொலையவில்லேயே என்றொரு சலிப்பு உடம்பெல்லாம் பரவி அந்த பழுத்த இலையின் உடைந்த மனதிலிருந்து ஒரு ஒரு சொட்டாக தன் பிறந்த பலனெல்லாம் கண்ணீராய் வழிந்து அவரின் கன்னத்தை நனைத்து அந்த அழுக்குத் தலையனையை நனைக்கிறது. அங்கே இப்படி பிறக்கிறதொரு கவிதை –

மௌனம் உடையா பொழுதொன்று நிலவும்
முகமெல்லாம் ஒரு சோகம் படரும்
நகரும் நிமிடத்தில் மகிழ்ச்சி மின்னலாய் கீறிச்செல்லும்
அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்;

உடை கூட ஆசை களையும்
உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும்
உறக்கமது உச்சி வானம் தேடும்
உறவுகளின் விசாரிப்பு காதில் எங்கோ என்றோ கேட்கும்;

பகலெல்லாம் பொழுது கணக்கும்
சட்டைப்பை சில்லறைத் தடவும்
முந்தானை ஓரத்தில் ஒரு கல்லேனும் முடியும்
படுக்க அன்றாடம் சுடுகாடே தேடும்;

காதில் தனது பிள்ளை பேசினால் இனிக்கும்
வார்த்தை தடுமாறி பேரனின் ஒன்றோயிரண்டோ கேட்கும்
போகும்வரும் வாசலில் கண்கள் யாருக்கோ காத்திருக்கும்
போகாத உயிரை விட்டுவிட்டுப் பிடித்துவைக்கும்;

வாழ்நாள் கனவுகள் வந்துவந்து மறையும்
வாழ்ந்த நாட்களை அசைப் போட்டுத் திரியும்
வந்த துணையின் பிரிவதை எண்ணி -
பழுத்த மனசது பாவம் கண்ணீராய் கரையும்;

காலத்தை மனதால் கணமும் நொந்தே; நொந்தே; சாகும்!!
————————————————————————————–
வித்யாசாகர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum