தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

+3
கவிக்காதலன்
தங்கை கலை
ஆளுங்க
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by ஆளுங்க Fri Dec 16, 2011 1:23 am

First topic message reminder :

தமிழா!!! "இதை நீ படிக்கணும்"... "KOLAVERI song" மாதிரி "PROMOTE" செய்ய வேண்டும்!!! PLEASE!!!

[You must be registered and logged in to see this link.]

முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.
மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள்!

116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ?
தங்கள் இடத்திலேயே - தங்கள் செலவிலேயே - புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ? இது என்ன பைத்தியக்காரத்தனம் ?

இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது.

கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய
உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் - இவை எதுவுமே வெளி உலகுக்குத்
தெரியவில்லை. ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள்
பலருக்கு கூட தெரியவில்லை !

புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே என்று தமிழர்களே கேட்கிறார்கள்.
தமிழ்
நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும் தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை
தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான் சொல்ல வேண்டும்.
இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

முல்லைப்
பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல். அப்போது
இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில்
இருந்ததாக கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின் வரையரைக்குள் தான்
இருந்தது). எனவே, பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும்,
மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 999
ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய் 40,000/- குத்தகைப்
பணம் ) இந்த அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது
தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது. அதை
நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.
அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152
அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் – சுமார் 2,08,000 ஏக்கர். மதுரை,
தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம்
விவசாயிகள் பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை
நம்பி இருக்கிறார்கள். இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும்
பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள்
ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?

கேரளா,
இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்
மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான் ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.
பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10
டிஎம்சியை தான் பயன்படுத்த முடியும். (104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)

ஆனால்
இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி. பெரிய அணையைக்
கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள்
பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம் நிரம்பிக் கொண்டு
இருந்தது. ஆனால் இடுக்கி நிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்ட
சதித்திட்டம் தான் - பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் -கூக்குரல்.
சுண்ணாம்பு அணை உடைந்து விடும். அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம்
மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !

புதிய
அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ? மேலே இருக்கும் பழைய அணையை
இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக இடுக்கிக்கு
வந்து அதை நிரப்பும்.

' சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !
அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே?' என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே
தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம். பெரியாறு அணை இருப்பது கடல்
மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக்
குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு
வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.இந்த அணை
கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட
முடியாது. நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும் பாதை இதை விட
உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி
நீளமுள்ள - மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி வந்து பின்னர் கீழே
வைகையில் கலக்கிறது.

அணையைக் கட்டிய பிறகு, இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது.
மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.எனவே அணை எப்போதுமே
முழுவதுமாக நிரம்பி இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக
கிடைக்காது.

புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை - புரிகிறது. ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை - எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.

35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே - பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?

அயோக்கியத்தனம்!!! வடிகட்டிய அயோக்கியத்தனம்!!

முதலாவதாக
- பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் - மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப்
பாய்ந்து - நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும்.
பெரியாறு
அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில்
வெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத்
தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.

[You must be registered and logged in to see this link.]

வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் – வெளியேறும் நீர்
பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக
இடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !
எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக
- 1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது
என்று குரல் எழுப்பினார்கள். பயத்தைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் வரை
போனார்கள்.

2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை
அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும்
பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை
அல்ல. ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில்
துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட் உள்
செலுத்தப்பட்டது.

2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -
நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி - லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,
கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது.
வெளிப்புறமாக - ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட்
போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

கீழே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப் புரியும்.
[You must be registered and logged in to see this link.]

இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம்
கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம்
உறுதி செய்துகொண்டு - 156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று
அனுமதியே கொடுத்தது.

விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ?
மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக, கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி விட்டார்கள். வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான். மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.
இப்போது,
இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும்போதே -
தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும்
நாடகம் ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை கட்ட வேண்டும் என்று
பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள்
குரல் தான் பலமாகக் கேட்கிறது.
வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாடு ஏமாந்தது போதும்...

பொங்கி எழு தமிழா!!

பி.கு:
* எனக்கு முகநூலில் வந்த கட்டுரை இது. தகுந்த நேரத்தில் பகிர்கிறேன் என்று நினைக்கிறேன்.

* வந்தே மாதரம் சசி அவர்கள் மத்திய அரசின் கவனத்திற்கு இந்த பிரச்சனையைக்
கொண்டு செல்லும் நோக்கில், ஒரு படிவம் ஏற்படுத்தி உள்ளார். அதில் சென்று
அனைவரும் பதிவு செய்யும் படி அனைவரையும் வேண்டுகிறேன்.

படிவம் இருக்கும் இடம்: [You must be registered and logged in to see this link.]

அவரது கட்டுரையை படிக்க: [You must be registered and logged in to see this link.]

என் வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது.. பார்க்க:
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by கவிக்காதலன் Wed Dec 21, 2011 1:06 am

ஆளுங்க wrote:
நானும் வன்முறையை ஆதரிக்கவில்லை..
அதே நேரம் அமர்ந்து பேசினாலும் தீர்வு கிடைக்காது.. (எத்தனை வருடங்களாக பேச்சு வார்த்தை அடக்குது????? )
தீர்வு மக்கள் போராடுவது தான்... அரசியல் வியாதிகளை நம்பி பயனில்லை...
ஆனால், நான் சொல்வது அறவழிப்போராட்டம்!!

பையன் இந்த கட்டுரையைப் படித்து தான் தீக்குளித்தானா?
நீங்க எந்த பிரச்சனைக்காக இந்த கட்டுரை எழுதினீங்களோ, அதே பிரச்சனைக்காக தான் அந்த பையன் தீக்குளித்தானாம்...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by ஆளுங்க Wed Dec 21, 2011 7:21 pm

கவிக்காதலன் wrote:
ஆளுங்க wrote:
பையன் இந்த கட்டுரையைப் படித்து தான் தீக்குளித்தானா?
நீங்க எந்த பிரச்சனைக்காக இந்த கட்டுரை எழுதினீங்களோ, அதே பிரச்சனைக்காக தான் அந்த பையன் தீக்குளித்தானாம்...

ஏங்க... அது தெரியாமலா இருக்கேன்?
தங்கை கலை "நான் அப்பவே சொன்னேன்.. வேண்டாம்னு.. யாராவது கேட்டீங்களா?" என்று கேட்டார்.. ஒருவேளை தோட்டத்து உறவு தான் அப்படி தவறான முடிவை எடுத்துவிட்டாரோ என்ற வருத்தத்தில் கேட்டேன்!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Wed Dec 21, 2011 8:10 pm

ஆளுங்க wrote:
கவிக்காதலன் wrote:
ஆளுங்க wrote:
பையன் இந்த கட்டுரையைப் படித்து தான் தீக்குளித்தானா?
நீங்க எந்த பிரச்சனைக்காக இந்த கட்டுரை எழுதினீங்களோ, அதே பிரச்சனைக்காக தான் அந்த பையன் தீக்குளித்தானாம்...

ஏங்க... அது தெரியாமலா இருக்கேன்?
தங்கை கலை "நான் அப்பவே சொன்னேன்.. வேண்டாம்னு.. யாராவது கேட்டீங்களா?" என்று கேட்டார்.. ஒருவேளை தோட்டத்து உறவு தான் அப்படி தவறான முடிவை எடுத்துவிட்டாரோ என்ற வருத்தத்தில் கேட்டேன்!
ஏங்க... இப்புடி <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> எதிர்ப்பு
வன்முறை தீர்வாகாதுன்னு தான் நான் எப்போதும் சொல்லுறேன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தமிழன் Wed Dec 21, 2011 8:16 pm

தங்கை கலை wrote:

நாங்க மட்டும் இப்போ வன்முறையை ஆதரிக்கிறோம் என்றா சொல்கிறோம்? நீங்கள் ஏன் வன்முறையை பிடித்துக் கொண்டு இந்த கட்டுரையின் நோக்கத்தை திசை திருப்புகிறீர்கள்?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Wed Dec 21, 2011 8:48 pm

[quote="தமிழன்"]
தங்கை கலை wrote:
ஆளுங்க wrote:
கவிக்காதலன் wrote:
ஆளுங்க wrote:
பையன் இந்த கட்டுரையைப் படித்து தான் தீக்குளித்தானா?
நீங்க எந்த பிரச்சனைக்காக இந்த கட்டுரை எழுதினீங்களோ, அதே பிரச்சனைக்காக தான் அந்த பையன் தீக்குளித்தானாம்...
ன்

நாங்க மட்டும் இப்போ வன்முறையை ஆதரிக்கிறோம் என்றா சொல்கிறோம்? நீங்கள் ஏன் வன்முறையை பிடித்துக் கொண்டு இந்த கட்டுரையின் நோக்கத்தை திசை திருப்புகிறீர்கள்?
கட்டுரையின் நோக்கத்தை திசை திருப்புவதா <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> ஒருப் பையன் தீக்குழிச்சி இருக்கான் அதுக்கு என்ன பதில் சொல்லுரிங்க ன்னு தான் கேக்குறேன் ..,
பிரச்சனையா புத்திசாலியா இருந்து தீர்க்கணும் ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தமிழன் Thu Dec 22, 2011 3:41 pm

[quote="தங்கை கலை"]
தமிழன் wrote:

ஆளுங்க ஐயா, என்னால் முடிந்தவரை இவங்களுக்கு விளக்கிப் பார்த்தேன். இனிமேல் நீங்கள்தான் விளக்க வேண்டும்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Thu Dec 22, 2011 4:21 pm

தமிழன் அவர்களுக்கு ,

நீங்கள் விளக்க விரும்புவதை நான் புரிந்து கொள்கிறேன்.

நான் சொல்ல வருவதை நீங்களும் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள்.

தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தமிழன் Thu Dec 22, 2011 4:22 pm

தங்கை கலை wrote:தமிழன் அவர்களுக்கு ,

நீங்கள் விளக்க விரும்புவதை நான் புரிந்து கொள்கிறேன்.

நான் சொல்ல வருவதை நீங்களும் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள்.

நீங்கள் வன்முறை என்ற வாதத்தை மட்டுமே வைத்துக் கொண்டு விவாதிக்கிறீர்கள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Thu Dec 22, 2011 4:24 pm

வன்முறை மட்டும் நான் சொல்லவில்லை ...மற்றவர்களின் உணர்ச்சியையும் புரிஞ்சிக் கொள்ள வேணும் என்று தான் சொல்லுறேன் அது கேரளாவுக்கும் சரி தமிழ் நாட்டுக்கும் சரி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தமிழன் Thu Dec 22, 2011 4:29 pm

தங்கை கலை wrote:வன்முறை மட்டும் நான் சொல்லவில்லை ...மற்றவர்களின் உணர்ச்சியையும் புரிஞ்சிக் கொள்ள வேணும் என்று தான் சொல்லுறேன் அது கேரளாவுக்கும் சரி தமிழ் நாட்டுக்கும் சரி

இப்ப நீங்க என்னதான் சொல்ல விரும்புகிறீர்கள்? நீங்கள் கேரள அரசியல்வாதிகளின் நியாமற்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Thu Dec 22, 2011 4:38 pm

தமிழன் wrote:
தங்கை கலை wrote:வன்முறை மட்டும் நான் சொல்லவில்லை ...மற்றவர்களின் உணர்ச்சியையும் புரிஞ்சிக் கொள்ள வேணும் என்று தான் சொல்லுறேன் அது கேரளாவுக்கும் சரி தமிழ் நாட்டுக்கும் சரி

இப்ப நீங்க என்னதான் சொல்ல விரும்புகிறீர்கள்? நீங்கள் கேரள அரசியல்வாதிகளின் நியாமற்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களா?
நான் ஒண்ணும் கேரளவிர்க்கு ஆதரவு தெரிவிக்க வில்லை ....
தமிழ் நாட்டுக்கு தன்ன்ர் வேண்டும் ...
அணையோட பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ளனும் ன்னு சொல்லுறேன் ..
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தமிழன் Thu Dec 22, 2011 4:44 pm

எத்தனையோ முறை பாதுகாப்பை உறுதி செய்துவிட்டார்கள். கேரள அரசுதான் ஏற்றுக் கொள்ளவில்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Thu Dec 22, 2011 4:48 pm

நமக்கு கூட தான் கூடங்குளம் பாதுகப்பனது ன்னு எத்தனையோ தடவை அரசு சொல்லுது அதை ஏற்ற்றுக் கொள்ள முடியவில்லையே ..
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தமிழன் Thu Dec 22, 2011 4:56 pm

அணையை பலமுறை பலப்படுத்தியிருக்கிறார்கள். மேலே அவை விளக்கப்பட்டுள்ளது. அதன்பிறகுதான் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்கள். கூடங்குளத்தில் அப்படி என்ன பாதுகாப்பை உறுதி செய்தார்கள்? நிபுணர் குழு பாதுகாப்பாக இருக்கிறது என்று மட்டுமே சொல்கிறது. அது எவ்வாறு பாதுகாப்பாக உள்ளது மக்களிடம் ஏன் விளக்கவில்லை? இந்தக் கட்டுரையின் நோக்கம் முல்லைப் பெரியாறின் உண்மை நிலையை எடுத்துரைப்பதே. கட்டுரையை திசை திருப்ப விரும்பவில்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Thu Dec 22, 2011 7:14 pm

தமிழன் wrote:

எத்தனையோ முறை பாதுகாப்பை உறுதி செய்துவிட்டார்கள். கேரள அரசுதான் ஏற்றுக் கொள்ளவில்லை.
நமக்கு கூட தான் கூடங்குளம் பாதுகப்பனது ன்னு எத்தனையோ தடவை அரசு சொல்லுது அதை ஏற்ற்றுக் கொள்ள முடியவில்லையே ..[/quote]

அணையை பலமுறை பலப்படுத்தியிருக்கிறார்கள். மேலே அவை விளக்கப்பட்டுள்ளது. அதன்பிறகுதான் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்கள். [/quote]

அணைப் பாதுகாப்பானது என்றால் ஏன் பலமுறை பலப்படுத்துனாங்க
தமிழன் wrote:கூடங்குளத்தில் அப்படி என்ன பாதுகாப்பை உறுதி செய்தார்கள்? நிபுணர் குழு பாதுகாப்பாக இருக்கிறது என்று மட்டுமே சொல்கிறது. அது எவ்வாறு பாதுகாப்பாக உள்ளது மக்களிடம் ஏன் விளக்கவில்லை?
முன்பே மக்களிடம் பாதுகாப்பு விளக்கி இருக்காங்க டமில் ...அத்ற்க்கன சேஃப்டி பற்றியும் சொல்லி இருக்காங்க ..அப்போ எல்லாரும் அமைதியாதான இருந்தோம் ..
தமிழன் wrote:இந்தக் கட்டுரையின் நோக்கம் முல்லைப் பெரியாறின் உண்மை நிலையை எடுத்துரைப்பதே. கட்டுரையை திசை திருப்ப விரும்பவில்லை.
நானும் கட்டுரையை திசை திருப்ப விரும்பவில்லை..ரெண்டு பக்க நியாமும் பார்க்க சொல்லுறேன் ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தமிழன் Thu Dec 22, 2011 10:19 pm

சரி விடுங்கள். இனிமேல் ஆளுங்க ஐயா வந்து விளக்கம் தருவார்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Thu Dec 22, 2011 10:22 pm

தங்கை கலை wrote:
தமிழன் wrote:

எத்தனையோ முறை பாதுகாப்பை உறுதி செய்துவிட்டார்கள். கேரள அரசுதான் ஏற்றுக் கொள்ளவில்லை.
நமக்கு கூட தான் கூடங்குளம் பாதுகப்பனது ன்னு எத்தனையோ தடவை அரசு சொல்லுது அதை ஏற்ற்றுக் கொள்ள முடியவில்லையே ..

அணையை பலமுறை பலப்படுத்தியிருக்கிறார்கள். மேலே அவை விளக்கப்பட்டுள்ளது. அதன்பிறகுதான் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்கள். [/quote]

அணைப் பாதுகாப்பானது என்றால் ஏன் பலமுறை பலப்படுத்துனாங்க
தமிழன் wrote:கூடங்குளத்தில் அப்படி என்ன பாதுகாப்பை உறுதி செய்தார்கள்? நிபுணர் குழு பாதுகாப்பாக இருக்கிறது என்று மட்டுமே சொல்கிறது. அது எவ்வாறு பாதுகாப்பாக உள்ளது மக்களிடம் ஏன் விளக்கவில்லை?
முன்பே மக்களிடம் பாதுகாப்பு விளக்கி இருக்காங்க டமில் ...அத்ற்க்கன சேஃப்டி பற்றியும் சொல்லி இருக்காங்க ..அப்போ எல்லாரும் அமைதியாதான இருந்தோம் ..
தமிழன் wrote:இந்தக் கட்டுரையின் நோக்கம் முல்லைப் பெரியாறின் உண்மை நிலையை எடுத்துரைப்பதே. கட்டுரையை திசை திருப்ப விரும்பவில்லை.
நானும் கட்டுரையை திசை திருப்ப விரும்பவில்லை..ரெண்டு பக்க நியாமும் பார்க்க சொல்லுறேன் ... [/quote]
நீங்கள் விளக்கம் கொடுங்கள் அய்யா இதற்க்கு நீங்க தானே கேட்டீங்க
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தமிழன் Thu Dec 22, 2011 10:25 pm

என்னால் இதற்கு மேல் விளக்கி உங்களுக்கு புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. இனிமேல் ஆளுங்க ஐயா வந்து புரிய வைக்க முயற்சிப்பார் என்று நம்புகிறேன்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Fri Dec 23, 2011 1:28 pm

தமிழன் wrote:என்னால் இதற்கு மேல் விளக்கி உங்களுக்கு புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. இனிமேல் ஆளுங்க ஐயா வந்து புரிய வைக்க முயற்சிப்பார் என்று நம்புகிறேன்.
தமிழன் annaa நீங்கள் விளக்க வருவதை நான் தெளிவாக புரிந்து கொண்டேன் ....நான் விளக்க வருவாத்ஜையும் நீங்கள் புரிஞ்சிக்கொள்ளுங்கள் ..உங்களுக்கு எந்த ஐயா விளக்கினால் புரியும் என்று எனக்குத் தெரியல <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தமிழன் Fri Dec 23, 2011 1:54 pm

கூல் கூல் கூல்

நன்றி.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by தங்கை கலை Fri Dec 23, 2011 6:38 pm

தமிழன் wrote:
தங்கை கலை wrote:
தமிழன் wrote:என்னால் இதற்கு மேல் விளக்கி உங்களுக்கு புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. இனிமேல் ஆளுங்க ஐயா வந்து புரிய வைக்க முயற்சிப்பார் என்று நம்புகிறேன்.
தமிழன் annaa நீங்கள் விளக்க வருவதை நான் தெளிவாக புரிந்து கொண்டேன் ....நான் விளக்க வருவாத்ஜையும் நீங்கள் புரிஞ்சிக்கொள்ளுங்கள் ..உங்களுக்கு எந்த ஐயா விளக்கினால் புரியும் என்று எனக்குத் தெரியல <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

கூல் கூல் கூல்

நன்றி.
நன்றிக்கு நன்றி அய்யா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  - Page 2 Empty Re: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum