தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உதிர்ந்த ரோஜா

5 posters

Go down

உதிர்ந்த ரோஜா Empty உதிர்ந்த ரோஜா

Post by kowsy2010 Fri Dec 16, 2011 3:33 am

சொர்க்கம் என்று தேடிவரும் அயல்நாடு சுமக்க வைக்கும் மனச்சுமைகளோ கோடி அவற்றிலே சில சுமைகள் உன் பேனாவிற்குள் அழுகின்றன. அவற்றில் ஒன்று இந்த

உதிர்ந்த ரோஜா


பவளமல்லிகை வீட்டுமுற்றத்தில் காற்றோடு கலந்து வந்து தன் சுகந்தத்தைப் பரவ விட்டிருந்தது. மலர்கள் மொட்டவிழ்ந்து தேனீக்களுடன் உறவாடி மகிழ்ந்திருந்தன. வண்ணாத்திப் பூச்சிகள் வண்ணம் வண்ணமாய் வட்டமிட்டிருந்தன. கூந்தலைத் துவாயினால் உலர்த்தியவண்ணம் புத்தம் புதிய நாளின் வருகையை ரசித்த வண்ணம் சுபா முற்றத்திற்கு வந்தாள்;. ஒரு ரோஜாவை முகர்ந்து பார்க்கக் குனிந்தவளின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த தாலியானது அம்மலரின் மேல் பட்டதும் அம்மலரின் இதழ்கள் உதிர்ந்து கீழே மண்படுக்கையில் தஞ்சமடைந்தன. தன்னை உருக்குலைத்த தாலியை ஒரு கணம் உற்று நோக்கினாள், சுபா. அந்த நாளின் இனிமை எங்கோ பறந்து போயின. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பெரியோர் வாழ்த்த அவள் கழுத்தில் ஏறிய அந்த மாங்கல்யம், சாத்திரம் சம்பிரதாயங்களைக் கேலி செய்வதுபோல் அவள் கண்களுக்குத் தோன்றியது.

அறிந்த குடும்பம், கௌரவமான குடும்பம், அருமையான பெற்றோர் பெற்றெடுத்த ரவி, கனடாவிலிருந்து சாவகச்சேரி வந்தடைந்தான். வாலிப்பான அவன் உடற்கட்டு அவன் வாழ்க்கை பற்றி ஆராயாது சுபா மனதுக்கு வேலி போட்டது. மூத்தோர் பெரியோர் வாழ்த்த ரவி கட்டிய மாங்கல்யம் சுபா மார்பிலே தவழ்ந்தது . கல்யாணம் முடிந்தது ரவி கனடா திரும்ப வேண்டிய நாளும் வந்தது. ''எங்களுடைய கல்யாணப்படத்தைக் காட்டித்தான் உங்களுக்கு விசா எடுக்க வேண்டும். எடுத்த பிறகு அறிவிக்கின்றேன். ரிக்கட் போட்டு கனடா வாருங்கள்'' என்று ரவி அழகாகக் கூறி விமானமேறிப் போனவன்தான். கழுத்தில் ஏறிய தாலியும் வயிற்றில் ஏறிய குழந்தையையும் சுமந்து அவன் விசா எப்போது பெறுவான் என்று தவமிருந்தாள், சுபா. மனதில் கவலை கவ்விக் கொண்டால் வயிற்றில் பிள்iளையும் தாக்கத்தை நோக்கும் என்னும் துயர் அறிந்தும் அறியாதவளாய்ச் சுபா பிள்ளையைப் பெற்றெடுத்தாள். ஆறுமாத காலங்களே ஆசையோடு வளர்த்த பிள்ளை அப்பா யாரென்று அறியாமலே ஆண்டவன் காலடியை நாடிச் சென்று விட்டது. இவஈவாறான சோகத்தில் இருந்தவளுக்கு அன்றொரு நாள் சுகமான செய்தியொன்று வந்தது.

விசா கிடைத்துவிட்டதாகவும் கடவைச் சீட்டு எடுத்துக் கொண்டு கனடா வரும்படியும் அனைத்து விபரங்களும் அடங்கிய தபால் கிடைத்த சந்தோஷத்தில் தலைகால் தெரியாது குதித்தாள், சுபா. தன்னை வாழவைக்கும் என நம்பிய கனடா மண்ணை அவள் பாதங்கள் தொட்டது. ரவியைக் கண்டவுடன் தன் மனதுள் அடக்கி வைத்திருந்த சோகங்களையெல்லாம் கொட்டி அழுதாள். அவளுக்கு ஆறதல் கூறிய ரவி, கனடாவில் வாழும் தனது அக்கா வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்றான். அன்று இரவு ''ஏன் எங்களுக்கென்று தனியாக வீடு எடுக்கவில்லையா'' என்று சுபா கேட்டாள். '' இந்த நாட்டில் வீடு எடுப்பது ஒன்றும்; சின்ன விஷயமில்லை. இந்த வீட்டில் சமாளிப்போம். வசதியாக ஏதாவது வீடு கிடைத்தால், தனியாகப் போகலாம்'' என்று கூறிச் சமாளித்தான். சுபாவும் தனிக்குடித்தனம் போகும் நாளை எண்ணிக் காத்திருந்தாள் அதுவரை இவ்வீடு அவளுக்குச் சிறையாகவே பட்டது. சுதந்திரம் என்பது சொல்லிக் கொள்ளாமலே அவளிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டது. கட்டுப்பாடு என்பது கணக்கு வழக்கின்றி அவ்வீட்டில் ஆட்சி புரிந்தது.

ஒருநாள் தொலைபேசி அலறியது. அதை எடுப்பதற்காக அவள் ஓடியபோது ' சுபா எதற்காக நீ ஓடுகின்றாய்? இங்க வரும் ரெலிபோன் அழைப்பெல்லாம் உனக்குத்தானா வருகின்றது? அதை அக்கா எடுப்பா|| என்று தடுத்துவிட்டான் ரவி. ஆனால், ஜேர்மனியிலிருந்து சுபாவினுடைய அக்காதான் தொலைபேசி எடுத்துள்ளார் என்று தெரிந்ததும் ' சரிசரி போய்க் கதை. ஆனால், இங்கத்தைய கதை ஒன்றையும் உளறித் தள்ளாதே|| என்று கட்டளையாகக் கூறிப் பக்கத்தில் இருந்துவிட்டான். அந்நியநாட்டில் பேச்சுச்சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், எல்லாம் கிடைக்கும் என்றுதான் இலங்கையில் இருக்கும்போது நினைத்திருந்தாள். ஆனால், வாழ்க்கைச் சுதந்திரத்தையே கனடாவில் சுபா இழந்து நின்றாள். ரவி இரவு வேலை என்று மாதத்தில் சில நாள்களே வீட்டில் தங்குவான். எதற்கெடுத்தாலும் சுபாவில் எரிந்து விழுவான். வேலைக் கஷ்டத்தில் இவ்வாறான போக்கில் ரவி இருக்கின்றான் என நினைத்து எதுவுமே பேசாது காலத்தைக் கடத்தினாள், சுபா. தன்னுடைய துயரை வெளியில் வெளிப்படுத்த முடியாத கட்டுப்பாட்டினுள் சுபா அடைக்கப்பட்டாள்.

திடீரென ஒருநாள் ரவி, '' சுபா! இங்கு அக்காவினுடைய வீட்டில் தங்குவது பிரச்சினை போல இருக்கிறது. அடுத்த கிழமை நீ இலங்கைக்குப் போவதற்கு ரிக்கட் போட்டிருக்கிறேன். ஊருக்குப் போ. வீடு எடுத்ததன் பிறகு அறிவிக்கின்றேன். திரும்பி வா. என்ன சரிதானே?'' என்றான், ரவி. முடிவை எடுத்ததன் பின் வினா அவசியம்தான? இதற்குமேல் எதுவும் கதைப்பதற்கு சுபா மனம் இடம் தரவில்லை. கட்டுப்பாடான சூழலில் இருந்து நாட்டுக்குப் போவதே அவளுக்குச் சரியெனப்பட்டது. நகை போட்டு, உடை உடுத்து கண்ணாடி அலுமாரியில் அழகுக்கு வைக்கும் பொம்மையல்லவே அவள். ''சரி அம்மாவையும் பார்க்க வேண்டும் போல்த்தான் இருக்கின்றது. நான் போகின்றேன்'' என்றாள்.

நாடு திரும்பும் வேளை வந்தது. விமானநிலையம் வந்தடைந்தாள். சந்தர்ப்ப வசமாக சுபா தனது பழைய சிநேகிதியை கண்டாள். விமானத்தினுள் அருகருகே இருப்பதற்காகப் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியை நாடித் தனது சிநேகிதியின் அருகே அமர்ந்து விட்டாள். அவள் சிநேகிதியும் '' என்னடி சுபா எப்படி கனடா வந்த நீ ? எனக்கு ஒரு ரெலிபோன் எடுத்திருக்கலாமே? ரவியோட நின்றாயே? என வினாவுக்கு மேல் வினா எழுப்பினாள். '' அவரை உனக்குத் தெரியுமா? என்று கேட்டாள் சுபா. ''இதென்ன என்னுடைய மகளோடதானே ரவியின்ர மகளும் Kindergarden இலே படிக்கின்றா. நான் அடிக்கடி கதைக்கிறனான்'' என்றாள் சிநேகிதி. சுபாவுக்கு நெஞ்சமே வெடித்துவிடும் போல் இருந்தது. அவளது முகமாற்றத்தை உற்றுநோக்கிய சிநேகிதியும் '' ஏன் சுபா ஒருமாதிரியாய் இருக்கின்றாய்? என்று கேட்டாள். ''இல்லை. அவர்தான் இலங்கைக்கு வந்து என்னைக் கல்யாணம் செய்து இங்கே என்னை எடுத்தவர். அவருடைய அக்கா வீட்டில்த்தான் இவ்வளவு நாள்களும் நின்றேன். வேறு வீடு எடுத்ததன் பின் என்னைக் கூப்பிடுவதாகச் சொல்லி இலங்கைக்கு அனுப்புகின்றார். என்று கலங்கிய கண்களுடன் விபரத்தை விம்மிவிம்மி வெளிப்படுத்தினாள். ''ரவியைப் பற்றிய விபரம் முன்னமே நீ அறியவில்லையா சுபா. ஒன்றும் விசாரிக்காமலேயா இந்தக் கல்யாணம் செய்தாய்? எதற்காக இப்போது ஊருக்குப் போகின்றாய். கனடாவிலேயே நின்றிருக்கலாமே என்று கேட்ட சிநேகிதியிடம் ''இல்லை இங்கே இருப்பதைவிட ஊருக்குப் போய் என் அம்மாவின் மடியில் விழுந்து ஓ..... என்று அழுதால்த்தான் என்னுடைய மனப்பாரம் குறையும். என் ஜீவனும் நிம்மதியடையும். என்று கூறி இலங்கை வந்தடைந்தாள். காலம் கடக்கின்றது. கனடா செல்லும் காரியம் நடைபெறவில்லை. அப்படியென்றால் ரவிக்கு இவள் யார்? வைப்பாட்டியா? மனைவியா? அவளைக் கனடாவிற்கு அழைத்ததன் காரணம்தான் யாது? புரியாத புதிருக்கு இன்னும்தான் சுபா விளக்கம் தேடுகின்றாள்.

தன்னை உருக்குலைத்த தாலியினால், இப்போது உருக்குலைந்து கிடக்கும் ரோஜா இதழ்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்தாள், சுபா. ஒரு கல்லாடிக் குவளையினுள் நீரிட்டு அந்த இதழ்களை அதனுள் இட்டாள். உதிர்ந்த இதழ்கள் வாடிச் சருகாகும் வரை அதற்கு வாழ்வளிக்கும் முனைப்பில் இறங்கினாள்.


Last edited by kowsy2010 on Fri Dec 16, 2011 4:01 pm; edited 3 times in total
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

உதிர்ந்த ரோஜா Empty Re: உதிர்ந்த ரோஜா

Post by நிலாமதி Fri Dec 16, 2011 4:35 am

கதை அருமை ............இது கற்பனை தானே
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உதிர்ந்த ரோஜா Empty Re: உதிர்ந்த ரோஜா

Post by அ.இராமநாதன் Fri Dec 16, 2011 8:04 am

அப்பா யரென்று...
மார்பிலே தவள்ந்தது....
அவள் சநேகிதியும்..
முiனெநசபயசனநn இலே படிக்கின்றா..
-
நிறைய எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றன.
மீண்டும் படித்து பிழைகளை நீக்கினால் நலம்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உதிர்ந்த ரோஜா Empty Re: உதிர்ந்த ரோஜா

Post by kowsy2010 Fri Dec 16, 2011 4:03 pm

மிக்க நன்றி திருத்திவிட்டேன். இப்போது கதையைப் பாருங்கள்.
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

உதிர்ந்த ரோஜா Empty Re: உதிர்ந்த ரோஜா

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 16, 2011 4:53 pm

உதிர்ந்த ரோஜா 589351068 உதிர்ந்த ரோஜா 589351068 உதிர்ந்த ரோஜா 589351068
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

உதிர்ந்த ரோஜா Empty Re: உதிர்ந்த ரோஜா

Post by அ.இராமநாதன் Fri Dec 16, 2011 5:41 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உதிர்ந்த ரோஜா Empty Re: உதிர்ந்த ரோஜா

Post by thaliranna Fri Dec 16, 2011 6:12 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

உதிர்ந்த ரோஜா Empty Re: உதிர்ந்த ரோஜா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum