தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Yesterday at 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Yesterday at 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Yesterday at 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Yesterday at 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Yesterday at 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Yesterday at 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Yesterday at 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
அவ்வுலகம்
2 posters
Page 1 of 1
அவ்வுலகம்
நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப .
உயிர்மை பதிப்பகம் விலை ரூ 140
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் பிட்டி தியாகராயர் அரங்கில் அரங்கு நிறைந்து ,வாசகர்கள் வெளியில் நின்று கேட்டு
மகிழ்ந்தார்கள். விழாவிற்காக நானும் சென்னை சென்று இருந்தேன் . இ.ஆ .ப . அதிகாரிகள் 40 பேருக்கு மேல் கலந்து
கொண்டனர் .குறிப்பாக நிதித் துறை செயலர் சண்முகம் , திருவாளர்கள் ஜவகர் ,மோகன்தாஸ் , உதயச் சந்திரன் கலந்து கொண்டனர் .
எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணன் குட்டிக் கதைகள் சொல்லி , மிகச் சிறப்பாக உரையாற்றினார் .நூல் வெளியீட்டு விழாவிற்கு இவ்வளவு
கூ ட்டம் சென்னையில் கூடியதே இல்லை என்றார்கள் .நாவல் ஆசிரியர்
முனைவர் .வெ. இறையன்பு, வாசகர்கள் அனைவரையும் வாசலில் நின்று
இன்முகத்துடன் வரவேற்றார் .வந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது .37
நூல்கள் எழுதியிருந்த போதும் இந்த நான்கு நூல்களுக்குதான் முதல் முறையாக
வெளியீட்டு விழா நடத்தப்பட்டது .
.
முனைவர் .வெ. இறையன்பு அவர்களின் வாசகர்கள் பெருமளவில் கலந்து
கொண்டனர் .இந்த விழா பற்றி ஒரு கட்டுரையே எழுதலாம் அவ்வளவு சிறப்பாக
நடைப்பெற்றது .
உயிர்மை பதிப்பகத்தின் சார்பாக வரும் இறைஅன்பு அவர்களின் முதல்
நூல் இது .இந்த நாவலுக்காக வந்த தொகையை ,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக
இருந்தபோது தொடங்கி இன்றும் நடைபெற்று வரும் நிலவொளி பள்ளிக்கும், மற்றொரு
நூலின் கையை எய்ட்ஸ் தொண்டு நிறுவனத்திற்கும் நன்கொடையாக மேடையில்
வழங்கப்பட்டது .எழுதுகிறபடியும் ,பேசுகிறபடியும் வாழ்கிறார் என்பதற்கு
எடுத்துக்காட்டு இந்த நிகழ்வு .
நூலில் பதிப்பாளர் உரையாக கவிஞர் மானுஷ்ய புத்திரன் முத்தாய்ப்பாக
எழுதி உள்ளார் .நாவல் ஆசிரியர் முனைவர் வெ. இறையன்பு அவர்கள் முதலில்
கவிஞர் பிறகுதான் எழுத்தாளர் என்பதால் நாவலில், நாவல் தொடங்குமுன்
தன்னுரையைக் கவிதையாக எழுதி உள்ளார். மிகச் சிறப்பாக உள்ளது .நாவலின் முதல்
வரியே மூட நம்பிக்கையை உடைக்கும்
விதமாகத் தொடங்குகின்றார் .
மனிதன் வாழும்போதுதான் பணத்தாசைப் பிடித்து அலைகின்றான் .இறந்த பின்னும் ஆசைப் போவதில்லை .
இறந்தவர்களின் நெற்றியில் காசு வைத்து வீண டிக்கும் மூடப் பழக்கத்தை எள்ளல் சுவையுடன் தனக்கே உரிய பாணியில் சாடுகின்றார் .
நெற்றியின் மீது அய்ந்து ரூபாய் நாணயம்.
அய்ந்து ரூபாக்கு எவ்ளோ தேன் மிட்டாய் வாகி சாப்பிடலாம் .இப்படி வீண் பண்றாங்களே நினைத்துக் கொண்டான் .
உண்மைதான் வெட்டியான் கூட எடுப்பதில்லை இந்த நாணயத்தை .வீணாக தீயிலிட்டு வீணடித்து வருவதை நாவலில் சாடுகின்றார் .
சாவைப் பற்றி நினைக்கவும் ,பேசவும் தயங்கும்அஞ்சும் மனிதர்கள் பலர் உண்டு .
அவர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது இந்த நாவல் .இவரது முந்தைய நாவலான
சாகாவரத்தையும் விஞ்சும் விதமாக வந்துள்ளது . தெளிந்த நீரோடை போன்ற மிகச் சிறந்த நடை .படிக்க
ஆர்வமாக உள்ளது .பாராட்டுக்கள் .நாவல் எப்படி ?எழுத வேண்டும் என்று இலக்கணம் கூறும் விதமாக உள்ளது .நாவலைப் படிக்கும் போது
நடக்கும் நிகழ்வுகள் நம் மனக்கண் முன் காட்சிப் படுத்தி வெற்றிப்
பெறுகின்றார் .அப்படியே காட்சிப் படுத்தும் அற்புதமான நடை பகுத்தறிவூட்டும்
கருத்துக்களும் நாவலில் உள்ளது .இதோ !
சத்தமாய் என்னமா சாமி சாமின்னு சொன்னே !
வெறும் சிலைதான் இருக்குது என்றான் .
எல்லோரும் திரும்பிப் பார்க்க
அம்மா வாய் மீது ஒன்று போட்டாள்.அவன் கும்பிட நினைத்ததெல்லாம் மறந்து போனது .
எல்லாக் கற்பனைகளுமே பொடிப் பொடியாகிற நிகழ்வுகளின் தொகுப்புதான் வாழ்க்கை என்பது புரியத் தொடங்கியது .
வாழ்வியல் கருத்துக்களை நாவல் முழுவதும் விதைப் போல விதைத்துச் செல்கிறார் .
நாத்திகர்கள் நேர்மையாக இருப்பது கடினம் என்ற மேம்போக்கு ஆத்திகர்களின் வாதங்கள் உடைக்குபடி வாழ்பவர் .
உண்மைதான் நாத்திகர்கள் நேர்மையாகத்தான் வாழ்கிறார்கள் .ஆனால்
நேர்மை தவறி சிறையில் இருப்பவர்கள்தான் பெரும்பாலும் ஆத்திகர்களாக
இருக்கிறார்கள்.
எனக்கு சாவு வந்து விடுமோ ! என தினம் தினம் செத்துப் பிழைப்பவர்கள் அவசியம் படித்துத் தெளிவுப் பெற வேண்டிய நாவல் .
மரணம் பற்றிய பயம் போக்கும் அற்புத நாவல் இது .இந்த மண்ணில் பிறந்த
மனிதர்கள் யாவரும் ஒரு நாள் இறப்பது உறுதி .எல்லோருக்கும் உண்டு இறுதி
.வாழ்நாளை நீட்டிக்க அறிவியல் வளர்ந்து விட்டது .ஆனால் வாழ்நாளை
நிரந்தரமாக்கும் அளவிற்கு அறிவியல் இன்னும் வளர வில்லை .மனிதன் ஒரு நாள்
அதையும் கண்டுப்பிடிப்பான- என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .
முதுமை அடைந்த பின் இயற்கையாக வரும் மரணத்தை சந்தோசமாக ஏற்கும் மன
நிலையை கற்றுத் தரும் நாவல் எனவே முதியவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய
நாவல் .நாவலின் கதையை நான் எழுத வில்லை. காரணம் .நீங்கள் நூல் படிக்கும்
போது
சுவை குறைந்து விடும் என்பதற்காக .மரணம் வருவதற்கு முதல் நிமிடம் வரை வாழ்க்கையை மகிழ்வாகக் கழியுங்கள்.என்று போதிக்கும்
நாவல் .வாழ்வியல் கருத்துக்களைப் போதிக்கும் நாவல் .
அவ்வுலகக் கவலையை விட்டு இவ்வுலக வாழ்கையை செம்மையாக வாழுங்கள் என்று போதிக்கின்றது .நாவல் . இறந்தைக் கூட
பலருக்கும் தகவல் தந்து சிரமப்படுத்த வேண்டாம் .அவர்கள் வந்து விட்டு குளிக்க வேண்டுமே என வருத்தப்படுவார்க- ் .என்று நாவலில்
பதிவு செய்துள்ளார் .போகிற போக்கில் பல்வேறு தகவல்களை எழுதிச் செல்கிறார் .சிறந்த நாவல் ஆசிரியர் என்பதை மீண்டும்
நிருபித்துள்ளார் .
குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட அன்பு செலுத்துவதே
முக்கியம் என்கிறார் .சிலர் பணம் ,பணம் என்று அலைந்து கொண்டு
குழந்தைகளிடம் அன்பு செலுத்த மீண்டும் இல்லை .என்று சொல்லும் மனிதர்கள்
இந்த நாவல் திருத்த வாய்ப்பு உண்டு .கடித இலக்கியம்
நாவலில் உள்ளது. கேள்வி பதில் வடிவில் பல செய்திகள் உள்ளது .படித்து விட்டு தூக்கிப் போடும் சராசரி நாவல் அல்ல இது .
படித்து விட்டு பாதுகாத்து ,நேரம் கிடைக்கும் போதெல்லாம் மறு
வாசிப்பு செய்து நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள உதவும் நாவல்.
ஆசிரியர் முனைவர் வெ. இறையன்பு அவர்களின் படைப்புகளில் ஆகச்சிறந்த
படைப்பாக வந்துள்ளது பாராட்டுக்கள் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum