தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு

3 posters

Go down

நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  Empty நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு

Post by சதாசிவம் Mon Dec 19, 2011 8:24 pm

மூதுரை

சங்க
கால பாடல்களில் ஔவையார் எழுதிய நீதி நூல்கள் எளிமையானவை, சுருக்கமானவை
& சிறப்பானவை. இன்று child specialist என்று கூறுவது போல், சங்க
பாடல்களில் குழந்தைகளுக்காக உள்ள பாடல் வரிசைகளில் ஔவையின் பாடல்கள்
பிரபலமானவை ஆகும். சங்கப் பாடல்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க
விரும்பும் பெற்றோருக்கு ஏற்ற எளிமையான பாடல்கள் உடையவை கொன்றை வேந்தன்,
ஆத்திச்சூடி, நல்வழி , மற்றும் மூதுரை.

மூதுரை வெண்பா வகையைச்
சார்ந்த நான்கு வரிகள் கொண்ட நீதி நூல் ஆகும். ஒரு கடவுள் வாழ்த்து &
30 பாடல்கள் கொண்ட சிறிய நூல் மூதுரை . மூத்தோர் + உரை = மூதுரை என்ற
பொருள் படும். அறிவில் சிறந்த மூத்த சான்றோர்கள் தங்கள் வாழ்க்கையில்
அனுபவப்பட்ட கருத்துகளை கூறுவது போல், எளிமையான உதாரணங்களை கொண்டு மிகப்
பெரிய கருத்தைகளை கூறும் சிறப்பான நூல் மூதுரை ஆகும். அதில் உள்ள
பாடல்களும் அவற்றின் பொருளும் இனி காண்போம்.
.
1.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

பொருள் விளக்கம்
தும்பிக்கை
உடைய கணபதியை நாள்தோறும் பூவினால் அர்ச்சனை செய்பவர்களுக்கு நல்ல
சொல்வளம், நல்ல மனம், செந்தாமரை பூவில் அமர்ந்து அருள் பாலிக்கும்
லக்ஷ்மியின் பார்வை, நோய் இல்லாத உடல் உண்டாகும்.

2.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால அந்நன்றி
என்று தருங்கோல் எனவேண்டா -நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

பொருள் விளக்கம்

ஒருவருக்கு
செய்யும் உதவியினால் நமக்கு என்ன பலன் வரும் என்று யோசிக்க வேண்டாம்.
வேரில் ஊற்றும் சாதாரண நீரை உறிஞ்சிக் கொண்டு, காலம் வரும் போது நமக்கு
சுவையான இளநீரைத் தென்னை மரம் தருவதைப் போல் தானாக திரும்பி வரும். ஆதலால்
நம்மால் முடிந்த உதவியை பிறருக்கு செய்ய வேண்டும்.

3.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.

பொருள் விளக்கம்

உதவி
செய்யும் போது நாம் மனிதர்களின் குணம் அறிந்து உதவி செய்ய வேண்டும். நல்ல
மனிதருக்கு செய்யும் உதவியானது கல்லின் மேல் எழுதிய எழுத்துப்போல் நிலையாக
இருக்கும், ஆனால் நெஞ்சில் ஈரம் இல்லாத கல் நெஞ்சம் படைத்தவருக்கு செய்யும்
உதவி நீரில் எழுதிய எழுத்துப்போல் நிலையில்லாமல் அழிந்து விடும்.
மேல
உள்ள பாடலில் சொல்லும் உதாரணம் தென்னை மரம், சில மரங்கள் நீரை உறிஞ்சுமே
தவிர பலன் ஒன்றும் கொடுக்காது, அது போல் உதவி செய்யும் போது மனிதர்களின்
குணம் அறிந்து உதவி செய்ய வேண்டும்.

4.
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு.

பொருள் விளக்கம்

தேவை
இல்லாத நேரத்தில் பூக்கும் நல்ல மலர் பயன் இல்லாமல் போவது போல்,
முதுமையில் வரும் செல்வம் பயன் படுத்த முடியாமல், நமக்கு இன்னலைத்தரும்.
கணவன் இல்லாத மங்கையின் அழகைப் போல், இளமையில் உள்ள வறுமை இன்னலைத் தரும்.


5.
அட்டாலும் பால்சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் - கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

பொருள் விளக்கம்

பால்
பலமுறை சூடு படுத்தினாலும் அதன் சுவை மாறாது, அது போல் நம்முடன் உண்மையான
நட்புடன் பழகாதவர்கள் பலநாள் பழகினாலும் அவர்கள் நண்பர்கள் ஆக மாட்டார்கள்,
சங்கு எத்தனை தான் சூடு படுத்தினாலும் அதன் வெண்மை மாறாது, அதுபோல்
மேன்மக்கள் குணம் வறுமை வந்தாலும் மாறாது.

6.
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா .

பொருள் விளக்கம்

ஒரு
மரம் உயர்ந்து, நீண்டு வளர்ந்தாலும் , அது பழம் தரும் காலத்தில் தான் பழம்
கொடுக்கும். அது போல் நாம் என்னதான் முயற்சி செய்தாலும், ஒரு காரியம்
நிறைவேறும் வேலை வரை அந்த காரியம் நிறை வேறாது.


தொடரும் .........
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 19, 2011 10:40 pm

நல்ல முயற்சி பாராட்டுக்கள் தொடருங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு

Post by சதாசிவம் Tue Dec 20, 2011 5:22 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்ல முயற்சி பாராட்டுக்கள் தொடருங்க



நன்றி யுஜின்,

நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  35578
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Dec 20, 2011 5:26 pm

நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  548321

கணவன் இல்லாத மங்கையின் அழகைப் போல், இளமையில் உள்ள வறுமை இன்னலைத் தரும்
-
கணவனை இழந்த மனைவி அமங்கலமாக பூவும்
பொட்டுமின்றி இருக்க வேண்டும் என்ற பழங்கால
கருத்து, மெல்ல மெல்ல மாறி வருகிறது...
-
வரவேற்கத்தக்க மாற்றம்..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு

Post by சதாசிவம் Tue Dec 20, 2011 5:29 pm

7.
உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.

பொருள் விளக்கம்:

பெரும் பாரத்தை தாங்கும் போது கல்லால் செய்யப்பட்ட தூண் உடைந்து போகுமே தவிர, வளைந்து கொடுக்காது, அது போல் பிறருக்கு உதவும் குணம் உள்ள, நல்ல பல குணங்களை உடைய சான்றோர் தீய செயல்கள் செய்வோரிடம் செயல்களை எதிர்த்து உயிர் துறப்பார்கள் ஆனால் பணிந்து போக மாட்டார்கள்.

8.
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம் .

பொருள் விளக்கம்:

குளத்தில் உள்ள நீரின் அளவைப் பொறுத்துத்தான் அதில் வளரும் தாமரை, ஆம்பல் தண்டின் உயரம் அமையும், அது போல் ஒரு மனிதனின் அறிவு அவன் கற்கும் நூல்களின் அளவைப் பொறுத்து அமையும், ஒருவனுக்கு வரும் செல்வமானது அவன் முன் பிறவியில் செய்த நல்ல செயல் களின் மூலமே அமையும், ஒருவனின் குணம் அவன் பிறந்த குலத்தைப் பொறுத்து அமையும்.


9.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

பொருள் விளக்கம்:

நல்ல செயல்கள் செய்யும் நல்லவர்களை காண்பது நன்று, அவர்களுடைய நல்ல சொல் கேட்பது நன்று, அவர்களுடைய குணங்களை பற்றி பேசுவதும் நன்று, அவரோடு இணைந்து இருப்பதுவும் நன்று.

10.
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

பொருள் விளக்கம்

தீயச் செயல்களைச் செய்பவர்களை காண்பது தீமையை தரும். இனிய சொல் இல்லாத கடுமையான சொற்களை கூறும் தீயோர் சொல் கேட்பதும் தீமையை தரும். தீயாரைப் பற்றி பேசுவதும், அவரோடு இணைந்து இருப்பதும் தீமையை தரும்.

11.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

பொருள் விளக்கம்

உலகத்தில் உள்ள மக்களின் பசியார உதவும் நெல்லுக்கு இறைக்கும் நீர், வாய்க்கால் வழியாக ஓடி பயன் தராத புல்லுக்கும் பாயும், அதுபோல் இந்த பழமையான உலகத்தில் நல்ல செயல்கள் செய்யும் ஒருவர் உள்ளவரை அவருக்காக அனைவருக்கும் மழை பெய்யும்.

12.
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.

பொருள் விளக்கம்

உமி நீங்கி செடியாக முளைப்பது அரிசியே ஆனாலும், அந்த அரிசி, உமியுடன் சேர்ந்த நெல்லாக விதைத்தால் தான் முளைக்கும். அதுபோல் எத்தனை ஆற்றல் உடையவருக்கும் தக்க துணை இருந்தால் தான் எடுத்த காரியம் நடைபெறும்.

13.
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீ ருமாகி விடும்.

பொருள் விளக்கம்
கற்றாழை மடல்கள் மிகவும் பெரியது, ஆனால் மணம் வீசாது. ஆனால் தாழம்பூவின் மடல்கள் சிறியதாக இருந்தாலும் மிகுந்த மணத்துடன் மணம் வீசும். கடல் பெரியது, ஆனால் ஒருவரின் தாகத்தை தீர்க்க உதவாது, அதன் அருகில் இருக்கும் சிறிய ஊற்று நீர் மக்களின் தாகத்தை தீர்க்க உதவும். ஆதலால் உருவத்தை கொண்டு, அவர்கள் இருக்கும் வசதி வாய்ப்பை வைத்து ஒருவரை எடை போடக்கூடாது. எளிமையாக இருக்கும் ஒருவர் நமக்கு செய்யும் உதவி போல் பெரியவர்கள் செய்யமாட்டார்கள்.


14.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்.

பொருள் விளக்கம்
இலை கிளைகளுடன் நீண்டு உயர்ந்து காட்டில் வளர்ந்த மரங்கள், மரங்கள் ஆகாது. தேவையான நூல்களை கற்காமல் படித்தவர்கள் சபையில் அவர்கள் பேசும் விஷயத்தை புரிந்து கொள்ளாமல் மரம் போல் நிற்கும் மனிதன் தான் சிறந்த மரம்.

தொடரும்......
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 20, 2011 5:35 pm

ரொம்ப நல்ல முயற்சி அழகிய எளிமையான விளக்கம் தொடரட்டும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு

Post by சதாசிவம் Sat Dec 24, 2011 4:49 pm

15.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

பொருள் விளக்கம்
அழகான மயில் ஆடுவதை பார்த்து, வான்கோழியும் தன்னை மயில் போல் பாவித்து தன்
சிறிய சிறகுகளை விரித்து ஆடும். அது போல் தான் திறமை இல்லாதவன் திறமை
இருப்பது போல் நடிப்பது, கல்வி கற்காதவன் சொல்லும் கவி எப்படி இருக்குமே
அது போல் இருக்கும்.

16.
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.

பொருள் விளக்கம்

புலிக்கு இரக்கப்பட்டு அதன் காயத்திற்கு மருந்து போட்டால், அது குணம் ஆன உடன்
மருந்து போட்ட மருத்துவனை தின்னப் போகும், அது போல் தான், முட்டாளுக்கு
நாம் செய்யும் உபகாரம், அவர்கள் நம்மிடமே கற்று நன்றி இல்லாமல் நமக்கு பகை
ஆவார்கள். அவர்களுக்கு செய்யும் உதவி கல்லின் மேல் வேகமாக பானை வைத்தால்,
பானை உடைந்து விடுவதைப் போல் வீணாக போகும்.

17.
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

பொருள் விளக்கம்

ஒருவர் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பதால் அவரை நாம் முட்டாள் என்று எண்ணக்
கூடாது. குளத்தில் சிறிய மீன்களை விட்டு விட்டு பெரிய மீனுக்காக
காத்திருக்கும் கொக்கைப் போல் அவர்கள் வேண்டிய நேரத்தில் அவர்களின் திறமையை
நிரூபிப்பார்.

18.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.


பொருள் விளக்கம்


குளத்தில் நீர் இருக்கும் போது தான் அதில் பலன் பெறும் கொக்கு, நாரை அதன் அருகில்
இருக்கும். அந்த குளத்தில் நீர் வற்றி விட்டால் அது நீர் உள்ள குளத்தை
நோக்கி பறந்து சென்று விடும். ஆனால் அந்த குளம் வற்றி போனாலும் அங்கு
இருந்த ஆம்பல், தாமரை போன்ற செடிகள் அங்கு இருந்து, மழை பெய்த பின்பு
குளத்துடன் தழைத்து வளரும். அது போல் நமக்கு வறுமை, பிரச்சனை வந்தவுடன்
நம்மை விட்டு விலகி விடுபவர்கள் நமக்கு உறவினர், நண்பர்கள் இல்லை. கஷ்டம்
வந்த காலத்தில் நம்முடன் இருப்பவரே சிறந்த உறவினர் /நண்பர்.

19.
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டாலங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால்.

பொருள் விளக்கம்

தங்கத்தால் செய்யப்பட்ட குடம் உடைந்தால் அது திரும்ப குடமாக செய்து விடலாம், அதன்
மதிப்பு மாறாது, அது போல் நல்ல குணம் உடையவர்கள் வறுமை வந்தாலும்,
தங்களுக்கு கஷ்டம் வந்தாலும், தங்களின் குணம் இழக்க மாட்டார்கள், அவர்களின்
மதிப்பு மாறாது. ஆனால் தீய குணம் உடைய சிறியவர்கள், மண்ணால் செய்யப்பட்ட
குடத்தை போன்றவர்கள், ஒரு முறை உடைந்தால் ஒட்ட முடியாது. அவர்களின் குணம்
காலத்திற்கு தகுந்தது போல் மாறும்.

20.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.

பொருள் விளக்கம்

நடுக்கடலில் ஆழமான பகுதில் சென்று ஒரு பாத்திரத்தை நன்றாக மூழ்கி நீரை எடுத்தாலும்,
பாத்திரத்தின் அளவே தான் நீரை அள்ள முடியும், மிகப் பெரிய அளவில் நீர்
இருந்தாலும் நாம் விரும்பும் அளவு நீரை அள்ள முடியாது. அது போல் தான் ஒரு
பெண்ணுக்கு பணம், கணவன் நல்லபடியாக அமைந்தாலும் என்ன அனுபவிக்க வேண்டுமோ
அதை மட்டும் தான் அனுபவிக்க முடியும்.

21.
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.

பொருள் விளக்கம்

நம்முடன் பிறந்தோர் மட்டுமே உதவி செய்வார் என்று எண்ணக்கூடாது. நம்மை
துன்புறுத்தும் வியாதி நாம் பிறக்கும் போது நம் கூடத் தான் பிறக்கிறது.
ஆனால் அதைக் குணமாக்கும் மருந்து எங்கோ ஒரு மலையில் இருந்து கிடைக்கிறது.
அது போல் எங்கோ இருந்து வரும் நண்பர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.

தொடரும்......


Last edited by sadasivam on Sat Jan 14, 2012 9:53 pm; edited 1 time in total
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 24, 2011 5:34 pm

சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்,புரிந்துக்கொள்ளும் படி எளிமையாக உள்ளது விளக்கங்கள்.... தொடரட்டும் எதிர்பார்த்துக் காத்திருகிரோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு

Post by சதாசிவம் Mon Dec 26, 2011 9:07 pm

நன்றி யுஜின் நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  868492 நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  868492 நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  868492

22.
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

பொருள் விளக்கம்

நல்ல மனைவி வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் இல்லாதது என்ற ஒன்று இல்லை. மனைவி
துன்பம் செய்பவளாயின், வலியை ஏற்படுத்தும் கடுஞ்சொல் பேசுபவளாக இருப்பின்
அந்த வீடு புலி வசிக்கும் குகைப்போல் மாறிவிடும் (அந்த வீட்டிற்கு யாரும்
வர மாட்டார்கள்)

23.
எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.

பொருள் விளக்கம்


நாம் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லையே என்று வருந்தும் மடைமை பொருந்திய
நெஞ்சமே, எதை கேட்டாலும் கொடுக்கும் கற்பக மரத்தின் கீழே இருந்து பழம்
கேட்டு, அது தின்ன முடியாத எட்டிக்காயை கொடுத்தால் அது யார் குற்றம்,
அனைத்தும் முன் பிறவியில் நாம் செய்த செயல்கள் மூலமே, நம் தலையில் எழுதி
வைத்தபடி நடக்கிறது . ஆதலால் நன்மையை வேண்டின் நன்மையை செய்.

24.
கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்.

பொருள் விளக்கம்


தீய குணம் உடைய கடைநிலை நண்பர்களோடு ஏற்படும் பிரிவு, கல் பிளந்ததுப் போல்
மீண்டும் ஒட்டாது. இடைநிலை நண்பர்களிடம் ஏற்படும் பிரிவு ஒருவர் வலிய வந்து
பேசினால் , பொன் பிளந்த பிறகு சூடாக்கினால் மீண்டும் ஒட்டுவதுப் போல்
ஒட்டிக்கொள்ளும். ஆனால் மேண்மை குணம் உள்ள முதல் நிலை நண்பர்களிடம்
ஏற்படும் பிரிவு ஓடும் நீரில் ஒரு அம்பை வைத்து ஒரு கோடு போட்டால், அது சில
நொடிகளில் மறைந்து போவதைப்போல் உடனடியாக மறைந்து மீண்டும் இணைந்து விடும்.


25.
நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

பொருள் விளக்கம்


நல்ல தாமரை இருக்கும் குளத்தில் நல்ல அன்னம் வந்து சேரும், அது போல் கல்வி
கற்றோரை கல்வி கற்றவர் மதித்து அவருடன் இணங்கி வாழ்வார்கள். ஆனால் பிணத்தை
தேடிப் போய் தின்னும் காக்கைப்போல் மூர்க்க குணம் உடைய முட்டாள்கள்
முட்டாள்களுடன் தான் சேர்ந்து வாழ்வார்கள்.

தொடரும்......


Last edited by sadasivam on Sat Jan 14, 2012 9:55 pm; edited 1 time in total
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 27, 2011 10:42 am

சிறப்பாக உள்ளது பாராட்டுகளும் வாழ்த்துகளும் நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  548321 நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு

Post by சதாசிவம் Sat Jan 14, 2012 9:50 pm

26.
நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

பொருள் விளக்கம்

ஒருவர் நம்மிடம் பழகுவதை வைத்து அவர் நல்லவரா கெட்டவரா என்று நாம் கண்டறிய
முடியும். பல்லில் விஷம் இல்லாத தண்ணீர் பாம்பு அனைவரும் உலவும் பகல்
வேளையில் அங்கும் இங்கும் உலவும். அது நஞ்சு இல்லாதது என்று அறிந்த மக்கள்
அதை ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஆனால் பல்லில் விஷம் உள்ள நல்ல பாம்பு,
மக்கள் நடமாடும் பகல் வேளையில் வெளியில் வராது, யாரும் இல்லாத இருட்டு
வேளையில் தான் அது வெளிவரும். அது போல் நெஞ்சில் தவறு, குற்றம், களவு
இல்லாதவர்கள் எப்போதும் வெளிப்படையாக பேசுவார்கள், அனைவரிடம் சகஜமாக
பழகுவார்கள். அவர்களின் செயல்கள் அனைவருக்கும் தெளிவாக இருக்கும். ஆனால்
மிகக்குறைவாக பேசுபவர்கள், அனைவரையும் தவிர்த்து ஒரு சிலரிடம் மட்டுமே
பழுகுபவர்கள், தன் செயலை அடுத்தவருக்கு மறைத்து செய்பவர்கள் என்றும்
நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை, ஒருவருக்கும் உண்மை ஆக மாட்டார்கள்
அவர்கள் நெஞ்சில் வஞ்சம் நிறைந்து இருக்கும். இது போல் உள்ளவர்களிடம் நல்ல
பாம்பை கண்டு நாம் விலகுவதைப் போல் விலகி இருக்க வேண்டும்.

27.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.

பொருள் விளக்கம்

ஒரு நாட்டை ஆளும் மன்னனையும் கல்வி கற்றவனையும் ஒப்பு நோக்கினால் (compare
செய்தால்), மன்னனை விட கல்வி கற்றவனே சிறந்தவன், ஏனெனில் மன்னனுக்கு அவன்
வாழும் நாட்டில் மட்டுமே சிறப்பு, ஆனால் கல்வி கற்றவனுக்கு சென்ற
இடமெல்லாம் சிறப்பு.

28.
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.

பொருள் விளக்கம்

கல்வி கற்காத மனிதர்களுக்கு கல்வி கற்றவர் சொல்லும் அறிவுரை எமனைப் போல்
கொல்லும். தவறு செய்யும் கெட்ட மனிதர்களுக்கு அறம் எமனைப் போல் கொல்லும்.
மென்மையான வாழைக்கு அது ஈன்ற கன்று எமனைப் போல் கொல்லும், அது போல்
இல்வாழ்க்கைக்கு ஒத்து வராத பெண் , வீட்டிற்கு எமனைப் போல் இருந்து அந்த
வீட்டின் மகிழ்ச்சியை கொல்லுவாள்.

29.
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று.

பொருள் விளக்கம்
சந்தன மரத்துண்டு சிறியதாக இருந்தாலும்/ ஆனாலும் அதன் மணம் குறையாது, அதுபோல்
அடுத்தவருக்கு கொடுத்து உதவும் வள்ளல் குணம் உடைய, மன்னர்கள் தங்கள் தனம்
குறைந்து வறுமை வந்த போதிலும் அடுத்தவர் கேட்டால் அவர்களுக்கு இல்லை என்று
கூற மாட்டார்கள்.

30.
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம்.

பொருள் விளக்கம்

ஒருவனுக்கு பணம் வரும் போது, உறவுகள் கூட வரும், சாதாரண மனிதனுக்கு கிட்டாது என்று
நினைக்கும் சிறந்த பொருளும் கிடைக்கும், கம்பீரமான உருவம் வரும், உயர் குல
தொடர்பும் ஏற்படும், ஆனால் பணம் அவனை விட்டு சென்று விட்டால் அது கொண்டு
வந்து சேர்த்த அனைத்தையும் எடுத்துச் செல்லும்.

31.
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.

பொருள் விளக்கம்

மரத்தை வெட்ட வருபவனுக்கும் அவன் தங்க குளிர்ந்த நிழல் கொடுக்கும் மரத்தைப் போல் ,
நல்ல குணம் உடைய அறிவுடையோர், தங்களுக்கு துன்பம் செய்பவனுக்கும் உதவி
செய்வார்.


முற்றும்...


ஊக்கம் அளித்த அனைத்து தோழர்களுக்கும் நன்றி
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 14, 2012 11:43 pm

அனைத்துமே சிறப்பாக் உள்ளது பகிந்துக்கொண்டமைக்கு மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum