தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

+7
yarlpavanan
அ.இராமநாதன்
RAJABTHEEN
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஆளுங்க
கவியருவி ம. ரமேஷ்
சதாசிவம்
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sat May 19, 2012 1:34 pm

தமிழ் இலக்கண முன்னூல் ஆன தொல்காப்பியம் நூல்கள் எழுதும் முறையை நான்கு வகையாக பிரித்து உள்ளது. அவை

  1. தொகுத்தல் - பல் வேறு விஷயங்களைத் தொகுத்து ஒருவர் எழுதுதல்
  2. விரித்தல் - இது ஏற்கனவே எழுதிய புத்தகத்திற்கு விளக்க உரை எழுதுதல்
  3. தொகை - பல் வேறு கால கட்டங்களில் பல புலவர்களால் எழுதப்பட்ட பாடல்களை தொகுத்து ஒரு நூலாக வெளியிடல்.
  4. மொழி பெயர்ப்பு - இது வேறு மொழியில் உள்ள நூல்களில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து எழுதுதல்.

தமிழ் நூல்களில் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்குத் தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் என்பது எட்டுத்தொகை, பத்து பாட்டு என்று கூறப்படும் நூல்கள் ஆகும். இப்படி மேற் சொன்ன நூல் முறையில், பதினெண் மேல் கணக்கு நூல்களுள் தொகுக்கப்பட்ட தொகை நூல்கள் எட்டு. அவை எட்டுத்தொகை நூல்கள் என்று வழங்கப்படுகிறது. எட்டுத்தொகை நூல்கள் அகம், புறம் ஆகிய இரண்டு பிரிவுகளைப் பற்றி மிகச்சிறப்பான பாடல்கள் கொண்ட தொகுப்பு ஆகும். இவை

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பற்று ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை"


புறநானூறு
புறம் + நானூறு =
புறநானூறு. இப்பாடல்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த புலவர்களால் பாடப்பட்டவையாகும். இதன் மூலம் மூவேந்தர்களின் சிறப்பு, தமிழ்நாட்டின் சிறப்பு, கடை ஏழு வள்ளற்களின் சிறப்பு, வீரம் என பல தரப்பட்ட விவரங்களும், பலருடைய வரலாற்று குறிப்புகளும் அறியலாம். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், மன்னனின் பெருமை, வீரம் போன்ற புற வாழ்க்கைப் பற்றி கூறும் மொத்தம் நானூறு பாடல்களை கொண்ட நூல் தான் புற நானூறு
.

புறநானூறில் நான் படித்து ரசித்த பாடல்களை இனி வரும் நாட்களில் காண்போம்.
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sat May 19, 2012 1:39 pm

தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.

பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்

ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று,
அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே


பொருளுரை:

பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும் தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால் பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள் தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர். அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும் அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள், நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும் பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல் அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய், ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே, நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை, எங்களின் நேரம் சரியில்லை. கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க.

புறம் வளரும்
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 19, 2012 8:44 pm

புது முயற்சி்க்குத் தோட்டம் சார்பாக வாழ்த்துகள் நண்பரே... தொடர்ந்து பதிவு செய்யுங்கள்... உங்களுக்குப் பிடித்தது என்றில்லாமல் 1 முதல் 400 வரை உள்ள எல்லா பாடல்களையும் அறிமுகப்படுத்துங்கள்...

எதிர்பார்த்திருக்கிறோம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sat May 19, 2012 9:58 pm

தங்களில் ஊக்கத்துக்கு நன்றி ரமேஷ்,
கண்டிப்பாக என்னால் இயலும் அனைத்தும் பதிவு செய்கிறேன்...
நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  35578
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by ஆளுங்க Sat May 19, 2012 10:01 pm

வணக்கம் ஐயா..
தங்கள் பதிவுகளால் தோட்டம் புது பொலிவு என்று நினைக்கிறேன்
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 20, 2012 8:13 am

sadasivam wrote:தங்களில் ஊக்கத்துக்கு நன்றி ரமேஷ்,
கண்டிப்பாக என்னால் இயலும் அனைத்தும் பதிவு செய்கிறேன்...
நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  35578
நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  1956175960 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  1956175960 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  1956175960
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sun May 20, 2012 12:07 pm

அதியமானும் , ஔவையாறும்
அதியமான், ஔவையாருக்கு சிறந்த நண்பர். ஒரு முறை ஔவையார் அதியமானிடம் பாடி பரிசில் பெற சென்றார். பரிசில் உடனே வழங்கி விட்டால் ஔவையார் சென்று விடுவார் என்ற எண்ணத்தில் பரிசில் தராமல் காலம் கடத்தினார் அதியமான், அந்த சூழலில் எழுந்த பாடல் இது. விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்பர் நம் பெரியோர், மூன்று நாட்கள் மேல் ஒரு வீட்டில் இருந்தால் முதல் நாள் உள்ள உபசரிப்பு போல் இருக்காமல் அடுத்தடுத்த நாட்களில் உபசரிப்பு குறையும். ஆனால் இந்த பாடல் கூறும் அதியமானின் சிறப்பை பாருங்கள்.

பாடல் 2: பல நாளும் தலை நாளும்
பாடியவர் : ஔவையார் (பாடல்: புறம் : 101)
பாடப்பட்டோன் : அதியமான் நெடுமான் அஞ்சி
திணை : பாடாண் துறை : பரிசில் கடா நிலை

" ஒரு நாள் செல்லலம்: இருநாட் செல்லலம்
பன்னாள் பயின்று, பலரோடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ:
அணிபூண் அணிந்த யானை இயல் தேர்
அதியமான்; பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும், நீட்டா தாயினும், யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது அது: பொய்யா காதே;
அருந்தே மாந்த நெஞ்சம்!
வருந்த வேண்டா; வாழ்க அவன் தாளே! "


பொருளுரை:
ஒரு நாள் செல்லலாம், பல நாள் செல்லலாம் ஒருவராக செல்லலாம், பலருடன் செல்லலாம் முதல் நாள் விருந்து உபசரிக்கும் மங்கையை போல் அழகிய நகைகள் அணிந்த யானையை உடைய அதியமான் நம்மை உபசரிப்பான்.
பரிசு உடனடியாக கொடுத்தாலும், கொடுக்கா விட்டாலும் பெரிய யானையின் கொம்புகளுக்கு இடையே வைத்த உணவு
அதன் வாய்க்குள் தப்பாமல் செல்வது போல், நம்மை வந்து சேரும், அது பொய் ஆகாது ஆதலால், கலங்காதே மனமே, வருந்த வேண்டாம் வாழ்க அவன் தோள்கள், வாழ்க அதியமான்.

இப்படிச் சொன்ன ஔவையார், பல நாள் ஆகியும் பரிசு கிடைக்காததால் ஒரு பாடல் பாடினார், அப்பாடலை பின்பு காண்போம்.

புறம் வளரும்
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon May 21, 2012 8:47 am

தமிழ்ப்பண்பாட்டை பறைச்சாற்றும் பாடல்... தமிழுக்கும் பெண் கவிஞருக்கும் பெருமை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 21, 2012 2:36 pm

நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி நண்பரே, தொடரட்டும் உங்களின் பகிர்வு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Thu May 24, 2012 10:57 am

நட்பின் யதார்த்தம்

நட்பு காதலை விட சிறந்தது, ரத்த பாசத்தை விட பெரியது என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனாலும் நட்பில் தன் நிலை இழப்பதை யாரும் விரும்புவதில்லை. என்ன தான் சிறந்த நட்பு என்று நாம் உணர்ந்தாலும், உரைத்தாலும் நம்மை உதாசீனப் படுத்தும், நம் உணர்வுக்கு சரியான அங்கிகாரம் கிடைக்காத நட்பை நாம் தொடருவதில்லை. இது தான் நட்பின் யதார்த்தம், ஆனாலும் இப்படி விலகி பின்பு உணர்ந்து ஒன்று சேரும் போது வரும் ஆனந்தம் அளவிலாதது.

பாடலின் பின்புலம்:

பலநாள் அதியமான் வீட்டில் இருந்த ஔவையாருக்கு அவனிடம் இருந்து பரிசு கிடைக்கவில்லை. அதியமான் வேண்டுமென்றே பரிசில் தருவதை காலம் தாழ்த்துகிறான், தன்னை உதாசீனம் செய்கிறான் என்று தவறாக உணர்ந்து அவன் அரண்மனையில் இருந்து வெளியேறும் பொழுது அரண்மனை வாயில்காப்பவனை பார்த்து எழுந்த பாடல் இது. நட்பில் விரிசல், கருத்து வேறுபாடு வந்து விலகும் பொழுது, நம்மால் நண்பர்களின் முகத்தை பார்த்து கூறி விலக முடியாது, குறிப்பாக பெண்கள் நட்பில் விலகும் போது எதையும் கூறாமலே விலகுகின்றனர். ஔவை சற்று வித்தியாசமானவள்,

இந்த பாடலில் வெளிப்படும் ஔவையின் கோவத்தை பாருங்கள். "மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்" &
"கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்று இதன் பிறகு தான் கூறி இருப்பாரோ?

பாடலின் சிறப்பு

கல்வியின் சிறப்பையும், அந்த காலத்தில் தமிழ் பாடும் புலவர்கள், புரவலர்களின் தயவில் வாழ்ந்து வருந்துவதையும் இந்த பாடல் இலை மறை காயாக உணர்த்துகிறது.

பாடல் 3 : எத்திசைச் செலினும் சோறே (புறம் : 206)
பாடியவர் : ஔவையார்
பாடப்பட்டோன் : அதியமான்
திணை: பாடாண் துறை : பரிசில்

வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவி முதல் வயங்குமொழி வித்தித் தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன் அறி யலன் கோல்? என்னறி யலன் கோல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வருந்தலை உலகமும் அன்றே; அதனால்
காவினெம் கலனே; சுருக்கினென் கலப்பை;
மரங்கொல் தச்சன் மைவல் சிறா அர்
மழுவுடைக் கட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே"


பொருள் விளக்கம்

வாயில் காப்பவனே, வாயில் காப்பவனே, மன்னனின் காது குளிர பாடல் பாடி தன் உள்ளத்தில் எண்ணியதை
முடிக்கும் பொருட்டு, அவன் தரும் பரிசுக்காக மனம் வருந்தி வரிசையில் ஏங்கி நிற்கும் நிலையை புலவர்களுக்கு தராத அரண்மனை வாயில் காப்பவனே. அதியமான் தன்னை அறியாதவனா? அல்லது என்னை அறியாதவனா?
அறிவும் புகழும் உடையவர்கள் பிழைக்க வழியில்லாமல் இறந்தனர் என்ற அவநிலை இந்த உலகத்திருக்கு இன்னும் வரவில்லை. அதனால், என்னுடைய பொருட்களை எடுத்து கொண்டேன் இங்கிருந்து செல்கிறேன், நல்ல மர வேலை தெரிந்த தச்சன் காட்டில் எந்த திசை சென்றாலும், அங்கு கிடைக்கும் மரத்தை வைத்து தனக்கு வேண்டியதை செய்து கொள்வான். அது போல் திறமை உள்ளவன் எந்த திசை சென்றாலும் அவனுக்கு தேவையான உணவை பெற முடியும், வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளமுடியும். இங்கிருந்து செல்கிறேன், மறக்காமல் இதை உன் மன்னனிடம் கூறு.

ஒவ்வொருவரின் கடமை என்ன என்று அடுத்த பாடலில் காண்போம்.
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by RAJABTHEEN Thu May 24, 2012 11:01 am

அவசியம் தேவையான பதிவிது ரொம்ப சந்தோசமாக உள்ளது தொடர்நது தாருங்கள் பாராட்டுக்கள் என்றும் நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  548321
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 24, 2012 12:49 pm

அருமையான பகிர்வு தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Thu May 24, 2012 8:20 pm

நன்றி ரமேஷ்,
நன்றி ராஜ்
நன்றி யூஜின்,

தங்களின் ஊக்கத்துக்கு நன்றி.
என் பெயரையும் தமிழில் மாற்ற விரும்புகிறேன்.
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by ஆளுங்க Thu May 24, 2012 11:14 pm

நல்ல பாடல் ஐயா...

இதற்கு பிராயச்சித்தமாகத் தான் அதியமான் நெல்லிக்கனியைக் கொடுத்தானோ??
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Fri May 25, 2012 7:03 am

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by yarlpavanan Fri May 25, 2012 8:12 pm

இலக்கியம் இனிக்கும் என்பார்கள்
பதிவரின்
பதிவும் விளக்கமும்
இதற்குச் சான்று...
மகிழ்வூட்டும்
இப்பதிவைத் தொடருங்கள்
அதற்கு
என் வாழ்த்துகள்...
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sun May 27, 2012 9:14 am

நன்றி உறவுகளே,
நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  35578
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sun May 27, 2012 9:15 am

ஒவ்வொருவரின் கடமை

இன்றைய சூழலில் ஒரு அலுவலத்தில் நாம் சேர்ந்த உடனேயே நமக்கு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் தகுதி, வேலை பொறுத்து கடமைகள் மாறுபடுகின்றன. அதுபோல் பண்டைய தமிழ் முறையில் புறநானூறு ஒரு சில கடமைகளை வகுத்து இருக்கிறது. அது என்ன என்று இப்பாடல்கள் மூலம் அறியலாம்.

பாடல் 4 : காளைக்குக் கடனே (புறம் 312)
பாடியவர் : பொன்முடியார்
திணை : வாகை துறை :முதில் முல்லை
பாடப்பட்டவர் : யாருமில்லை (பொதுவாக பாடியது)

"ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே ;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே ;
வேல்வடித்துக் கொடுப்பது கொல்லற்குக் கடனே ;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக் ,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
"

பொருள் விளக்கம்:
குழந்தையை பத்திரமாக பெற்றுத் தருவது தாயின் கடமை பெற்ற குழந்தைக்கு தேவையான கல்வி, அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் ஆகியவை சொல்லித் தந்து நான்கு பேர் புகழும் வண்ணம் சான்றோன் ஆக்குதல் தந்தையின்
கடமை, போரில் பங்கு பெரும் வீரர்களுக்கு உறுதியான கூரான வேல், வாள் செய்து கொடுப்பது கொல்லனின் கடமை. குடிமகனுக்கு நல்ல நடத்தை நிலை பெற செய்யுதல் மன்னனின் கடமை, கூரிய ஒளி பொருந்திய வாளை கையில் ஏந்தி யானையைக் கண்டு அஞ்சாமல், அதை போரில் வெல்வது ஆண்களின் கடமை.

மக்கள் நல்ல நடத்தையில் இருப்பது மன்னனின் கையில் இருக்கிறது, இன்று போர் நடைபெறும் நாடுகளில் முக்கிய காரணம் ஆட்சி சரியில்லை, மன்னன் சரியில்லை என்ற காரணம் தான். மன்னனின் கடமை என்ன, இந்த பாடலில் காண்போம்.

பாடல் 5 : வேந்தர்க்குக் கடனே (புறம் 186)
பாடியவர் : மோசிகீரனார்
திணை : பொதுவியல் துறை : பொருண் மொழிக் காஞ்சி
பாடப்பட்டவர் : யாருமில்லை (பொதுவாக பாடியது)
(ஆட்சியாளர்கள் மனதில் ஆழமாக பதிய வேண்டிய பாடல்)

"நெல்லும் உயிர் அன்றே ; நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்தே மலர்தலை உலகம்;
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே"


பொருள் விளக்கம்:
ஒரு நாட்டின் வளத்திற்க்கு உண்ணும் உணவான நெல், அதை விளைவிக்கும் பூமி முக்கியம் இல்லை, நெல்லை விளைவிக்க பயன்படும் நீரும், அது வரும் ஆறும் முக்கியம் இல்லை. அந்த நாட்டின் மன்னனே முக்கியமானவன். அவனை பொறுத்தே நாட்டின் வளமை நிர்ணயம் ஆகிறது. "யதா ராஜா ததா பிரஜா". மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி". அதனால் யானே நாட்டின் உயிர் என்பதை அரச பதவியில் இருப்பவர்கள் உணர்ந்து ஒவ்வொரு காரியங்களையும் மக்கள் நலனுக்கு செய்வது மன்னனின் கடமை.

இப்படி கடமை செய்யும் ஒவ்வொருவரும் விரும்புவது என்ன? அடுத்த பாடலில் காண்போம்
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by ஆளுங்க Sun May 27, 2012 11:03 am

ஆகா.. மிகவும் அருமையான விளக்கம்...

இன்றைய ஆட்சியாளர்கள் நினைக்காததால் தான் இன்று நெல்லுக்கும் நீருக்கும் அல்லாடுகிறோம்!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by yarlpavanan Sun May 27, 2012 8:48 pm

தங்கள் நல்ல தமிழ் விளக்கம் தொடரட்டும்
இலக்கியம் எம்மவரில் இனிக்கட்டும்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by RAJABTHEEN Mon May 28, 2012 1:13 am

yarlpavanan wrote:தங்கள் நல்ல தமிழ் விளக்கம் தொடரட்டும்
இலக்கியம் எம்மவரில் இனிக்கட்டும்.
நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  446419 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  446419 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  868492 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  868492 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  868492 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  868492 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  868492
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Tue May 29, 2012 8:11 pm

ராமநாதன் சார், ஆளுங்க, யாழ்பாவாணன், ராஜ் அவர்களுக்கு நன்றி

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  35578
உறவுகளின் ஊக்கத்துக்கு நன்றி
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Tue May 29, 2012 8:15 pm

எல்லாரும் விரும்புவது :

இன்றைய இயந்திரமான வாழ்க்கை சூழலில் நாம் வெகு வேகமாக இயங்கி கொண்டிருக்கிறோம். ஒருவரை பற்றி மற்றொருவர் கவலைப் படக்கூட நேரம் இல்லாமல் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. பலநாள் வாழ்கிறோம், இப்படி வாழ்ந்து வாழ்க்கையில் இறுதியில் இருக்கும் போது அடடா நாம் வாழ்நாள் வீணாக கழிந்து விட்டதே, உருப்படியாக நல்ல காரியங்கள் ஒன்றும் செய்ய வில்லையே என்று வருத்தப்படுகிறோம். இப்படி வருத்தப்படும் பெரியவர்களுக்கு கூறுவது போல் அமைந்த இந்த பாடல் இன்றைய தலைமுறையினர் அனைவருக்கும் பொருந்தும் பாடல் ஆகும். உலகம் விரும்புவது என்ன, பெரியவர்கள் கூறும் நன்னெறி எது என்று இப்பாடல் கூறுகிறது.

பாடல் 6: எல்லாரும் உவப்பது (புறம் : 195)
பாடியவர்: நரிவெருஉத் தலையார்
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

பல் சான்றீரே ! பல் சான்றீரே !
கயல்முள் அன்ன நரைமுதிர் திரை கவுள்
பயனில் மூப்பின், பல் சான்றீரே !
கணிச்சிக் கூர்ம்படை கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவீர் மாதோ;
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமீன்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படு உம் நெறியுமார் அதுவே


பொருள் விளக்கம்:
சால்பு மிக்க பெரியவர்களே, சால்பு மிக்க பெரியவர்களே, மீனின் முள் போல் வெண்மை நிறம் அடைந்த முடியை உடைய , முதிர்ந்த தேகத்தை உடைய, பயன் இல்லாதவாழ்க்கை வாழ்ந்த சால்பு மிக்க பெரியவர்களே, இரக்கம் இல்லாத கூரான ஆயுதம் உடைய கருமையான எமதர்மன் என்ற ஒருவன் உங்களை பாசக் கயிற்றால் பிணிக்கும் வேலை வரும் போது வருத்தப்படுவதால் என்ன லாபம்? மூப்பு வந்து விட்டதே இனி நாம் என்ன செய்ய இயலும் என்று எண்ண வேண்டாம்.

நல்லது செய்ய முடியவில்லை என்றாலும், கெட்டது செய்யாமல் இருங்கள், அதைத் தான் அனைவரும் விரும்புகின்றனர், அது மட்டுமல்லாமல் மூத்தோர் கூறும் நல்ல நெறியும் அதுவே. வயது முதிந்தோருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் கூறும் அறிவுரையும் இது தான்.

அனைவருக்கும் பொதுவானது எது, செல்வம் உடையவர் செய்யும் செயல் என்ன என்று அடுத்த பாடலில் காண்போம்

தொடரும்
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by thaliranna Tue May 29, 2012 9:45 pm

நல்ல விளக்கம்! வாழ்த்துக்கள்! நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  548321 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  548321 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  548321
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sat Jun 02, 2012 4:27 pm

thaliranna wrote:நல்ல விளக்கம்! வாழ்த்துக்கள்! நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  548321 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  548321 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  548321

நன்றி நண்பரே நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  35578
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum