தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

+7
yarlpavanan
அ.இராமநாதன்
RAJABTHEEN
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஆளுங்க
கவியருவி ம. ரமேஷ்
சதாசிவம்
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sat May 19, 2012 1:34 pm

First topic message reminder :

தமிழ் இலக்கண முன்னூல் ஆன தொல்காப்பியம் நூல்கள் எழுதும் முறையை நான்கு வகையாக பிரித்து உள்ளது. அவை

  1. தொகுத்தல் - பல் வேறு விஷயங்களைத் தொகுத்து ஒருவர் எழுதுதல்
  2. விரித்தல் - இது ஏற்கனவே எழுதிய புத்தகத்திற்கு விளக்க உரை எழுதுதல்
  3. தொகை - பல் வேறு கால கட்டங்களில் பல புலவர்களால் எழுதப்பட்ட பாடல்களை தொகுத்து ஒரு நூலாக வெளியிடல்.
  4. மொழி பெயர்ப்பு - இது வேறு மொழியில் உள்ள நூல்களில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து எழுதுதல்.

தமிழ் நூல்களில் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்குத் தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் என்பது எட்டுத்தொகை, பத்து பாட்டு என்று கூறப்படும் நூல்கள் ஆகும். இப்படி மேற் சொன்ன நூல் முறையில், பதினெண் மேல் கணக்கு நூல்களுள் தொகுக்கப்பட்ட தொகை நூல்கள் எட்டு. அவை எட்டுத்தொகை நூல்கள் என்று வழங்கப்படுகிறது. எட்டுத்தொகை நூல்கள் அகம், புறம் ஆகிய இரண்டு பிரிவுகளைப் பற்றி மிகச்சிறப்பான பாடல்கள் கொண்ட தொகுப்பு ஆகும். இவை

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பற்று ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை"


புறநானூறு
புறம் + நானூறு =
புறநானூறு. இப்பாடல்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த புலவர்களால் பாடப்பட்டவையாகும். இதன் மூலம் மூவேந்தர்களின் சிறப்பு, தமிழ்நாட்டின் சிறப்பு, கடை ஏழு வள்ளற்களின் சிறப்பு, வீரம் என பல தரப்பட்ட விவரங்களும், பலருடைய வரலாற்று குறிப்புகளும் அறியலாம். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், மன்னனின் பெருமை, வீரம் போன்ற புற வாழ்க்கைப் பற்றி கூறும் மொத்தம் நானூறு பாடல்களை கொண்ட நூல் தான் புற நானூறு
.

புறநானூறில் நான் படித்து ரசித்த பாடல்களை இனி வரும் நாட்களில் காண்போம்.
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down


நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jun 30, 2012 4:21 pm

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 548321 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Sat Jun 30, 2012 10:48 pm

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 548321
நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Baby_ganesha_MA03_l
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by yarlpavanan Sun Jul 01, 2012 6:45 am


நற்றமிழ் கூறும் வேளை
நல்வழிகாட்டலையும் தந்த பெரியவரே

"
"பெருமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற " - திருக்குறள் 61

விளக்கம் :எனக்கு தெரிந்த வரை அறிவார்ந்த பிள்ளைகளைப் பெறுவதை விட சிறந்த செல்வம் ஏதும் இல்லை.
"
என்பது
சிறந்த வழிகாட்டலே!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 02, 2012 4:04 pm

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 548321 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Mon Jul 02, 2012 9:28 pm

நன்றி தோழர்களே

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 35578
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 03, 2012 8:02 am

உண்மைதான். சிறந்த செல்வம் மற்றும் செல்லம்... குழந்தைகள்தான்.

பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Fri Jul 06, 2012 7:22 pm

நன்றி நண்பர்களே ,
நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 35578
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Fri Jul 06, 2012 7:23 pm

தமிழக குழந்தையின் வீரம்
அகமும் புறமும் தமிழின் இரு கண்கள், இவற்றின் வெளிப்பாடு தான் காதலும், வீரமும். வீரத்தை பறை சாற்றும் புறப்பாடல்கள் நிறைந்தது புறநானூறு. வளரும் குழந்தையும் விளையாட போர்க்களம் செல்கிறது என்று இந்த புறப்பாடல் கூறுகிறது.

பாடல் 15 : கல்லளை போல் வயிறு (புறம் : 86)
(தமிழக குழந்தையின் வீரத்தின் சிறப்பை கூறும் பாடல்)
பாடியவர்: காவற் பெண்டு
பாடப்பட்டோர் : யாரும் இல்லை (பொதுவாக பாடியது)
திணை : வாகை துறை: ஏறான் முல்லை

சிற்றில் நல் தூண் பற்றி, 'நின் மகன்
யாண்டு உளனோ?' என வினவுதி; என் மகன்
யாண்டு உளன்ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!


பொருள் விளக்கம்
உங்கள் வீட்டில் உள்ள சிறிய கல் துணைப் பற்றி அங்கும் இங்கும் விளையாடும் உன் மகன் எங்கே? என்று கேட்கிறாயோ! புலி வாழும் கல்லால் ஆன குகைப்போல் அந்த வீர மகனைப் பெற்ற வயிறு இதோ இங்கே இருக்கிறது, அவனை காண வேண்டுமா ? போர்க்களத்தில் காணலாம்.

புறம் வளரும் ..........
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by கலைநிலா Fri Jul 06, 2012 10:07 pm

நன்றி நன்றி தொடருங்கள்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 07, 2012 3:38 pm

வீரம்...

தொடர் பதிவிற்குப் பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 09, 2012 2:56 pm

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Thu Jul 12, 2012 9:09 pm

நன்றி நண்பர்களே
நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 868492
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Thu Jul 12, 2012 9:11 pm

ஆற்றாமையும் போற்றாமையும் (எண் பேர் அச்சம்)


மழலைச்செல்வம் மகிழ்வானது, மனிதப்பிறவியும் இனிதானது, இப்படி அரிதாக கிடைக்கும் மனிதப்பிறவியில் குறை இல்லாமல் பிறப்பது அரிது. அப்படி குறை இல்லாமல் பிறந்த பிறப்பின் பயன் என்ன என்று இந்த புறப்பாடல் கூறுகிறது.
பாடல் 16: ஆற்றாமையும் பொற்றாமையும்
பாடியவர் : உறையூர் முது கண்ண சாத்தனார்
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி
திணை : பொதுவியல் துறை : முதுமொழிக்காஞ்சி

சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும்,
கூனும், குறளும், ஊமும், செவிடும்,
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல்' என,
முன்னும், அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது
வட்ட வரிய செம் பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
கானத்தோர், நின் தெவ்வர்; நீயே,
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர்
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப்
பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர்
ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே;
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும், பெரும! நின் செல்வம்;


பொருள் விளக்கம்:


மனிதப்பிறவி அரிதானது, அதிலும் குருடு, தசைப்பிண்டம், கூன், குள்ளம், ஊமை, செவிடு, விலங்கு வடிவம், மனவளர்ச்சி இல்லாமல் பிறப்பது ஆகிய எட்டு குறைகள் இல்லாமல் பிறப்பது அரிதானது. இப்படி கூறும் பேதமை நீங்கி பிறக்கும் பிறப்பு தான் உயர் பிறப்பு ஆகும், மற்ற பிறப்புக்கு ஊதியம் இல்லை. இப்படி பிறந்தாலும், அறிவுள்ளவனாக வளர்வது சிறந்தது என்று பல விஷயங்களை முழுவதும் அறிந்த சான்றோர் உரைத்தனர்.

இப்படி உள்ள மனிதப்பிறவியின் சிறப்பாக நான் கூறுவது, உன் பகை நாட்டினர் சேவல் கூவி எழுப்பும் வளம் இல்லாத திணை நிலத்தை உடையவர்கள். வீட்டு வேலிக்கு வெளியே நின்று ஒருவர் கேட்டால், கை எட்டும் தூரத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில், கரும்பை பிய்த்து கொடுக்கும் வளம் மிக்க வயல்களும், கரும்பை புடுங்குவதால் சிதைவு தாமரை நிறைந்த தடாகமும் உடையது உன் நாடு , இது கூத்தர் ஆடும் ஆட்டத்தில் உள்ள செந்நிறம் போல் இருக்கிறது. நல்ல வளமை மிக்க மக்களும் உன் நாட்டில் நிறைந்துள்ளனர்.

அறம் செய்து மேன்மை அடைய உன் நாட்டில் வளம் இருக்கிறது, உன்னிடம் நல்ல குணம் இருக்கிறது, ஆதலால் உன் செல்வத்தைக் கொண்டு அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பேறுகளை படைத்துக்கொள். இவற்றை அடைய முடியாவிட்டால் நீ பெற்ற செல்வம் வீணாகிவிடும்...இதை நீ ஆற்றாவிட்டால் அது உன்னை போற்றாமை ஆகிவிடும்.
புறம் தொடரும் ......
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jul 13, 2012 2:15 pm

பகிர்வுக்கு நன்றி தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by கலைவேந்தன் Sat Jul 14, 2012 3:11 pm

தங்களின் அரிய முயற்சியினை அங்கிங்கென எங்கும் கண்டுள்ளேன். சிறந்த தமிழைப் பகிரும் தங்கள் உழைப்பினைக் கண்டு வியக்கிறேன்.

தொடருங்கள் சதாசிவம்..! நான் கண்டிப்பாக தொடர்ந்துவருகிறேன்..!!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Tue Jul 17, 2012 5:40 pm

நன்றி யூஜின்,

நன்றி கலைவேந்தன் சார்...

தங்களைப் போன்றோரின் ஆசியும், நம் தோட்டத்து நண்பர்களின் உற்சாகம் தொடர்ந்து இருப்பதால் தொடர்கிறேன்....
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Tue Jul 17, 2012 5:41 pm

குழந்தைகளின் வியப்பான குணம்

ஒவ்வொருவரும் அவர்கள் குழந்தை செய்யும் குறும்புகளைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்வர். குழந்தைகள் வளரும் போது அவர்களின் குறும்புகள் தானாகவே குறைந்து விடும். இப்படி குறும்பு செய்து அடம் பிடிக்கும் குழந்தையை கட்டுப்படுத்த தாய் பல்வேறு உபாயங்களை செய்கிறாள். கோகுலகண்ணனின் குறும்பை அடக்க அவனை உரலில் கட்டி வைத்த கதை நம் அனைவருக்கும் தெரியும். இப்படி இருக்கும் வளர்ந்த குழந்தையின் குறும்பை அடக்க நாம் சிறு பயம் காட்டினாலும் குழந்தை நம் சொல்லுக்கு கட்டுப்படுகிறது,, ஆனால் இப்படி நமக்கு கட்டுப்பட்ட, சிறு விஷயதிற்கும் பயம் கொண்ட குழந்தை வளர்ந்தவுடன் நம்மை வியக்கச் செய்கிறது. இப்படி ஆச்சரியமான மாற்றம் குழந்தைகளிடம் (மனிதர்களிடம்) ஏற்படுகிறது. இப்படி தன் குழந்தையின் மாற்றத்தைக் கண்ட, தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு தாய் பாடும் அழகான பாடல் இது.

பாடல் 17: உரவோர் மகனே (புறம் : 310)
பாடியவர்: பொன்முடியார்
பாடப்பட்டோர் : யாரும் இல்லை (பொதுவாக பாடியது)
திணை: தும்பை துறை : நூழிலாட்டு

பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே,
உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்பு_
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே
.

பொருள் விளக்கம்:

என் மகன் சிறுவன், அவன் குடிக்க கிண்ணத்தில் பால் ஊற்றி கொடுப்பேன், அவனோ அதை குடிக்காமல் குறும்பு செய்வான், அவன் பால் குடிக்க அவனை பயமுறுத்த ஒரு சிறு குச்சியை எடுத்து அவனை அடிப்பது போல் மிரட்டுவேன், அப்படி ஒரு சிறு குச்சிக்கு பயந்து பால் குடிப்பான் . ஆனால் அந்த சிறுவன் இன்று போற்களம் செல்கிறான், பெரிய புகைப் போல் கரிய யானையை எதிர்த்து வேலை எறிந்து அதை விழ்த்தினான். தன் மார்பில் பட்ட அம்பு கூட அவனுக்கு தெரியவில்லை, தோளில் சாய்ந்து விழுப்புண் பட்டு கிடக்கிறான்.

என்ன ஆச்சரியம்!!!!!!!!, சிறிய குச்சிக்கு பயந்த என் மகனா இவன் ? நினைத்து பார்த்தால் வியப்பாக இருக்கிறது , பெருமையாக இருக்கிறது. மறக்குடியில் பிறந்த மகன், அவன் செயல் வியப்புக்குரியது.

புறம் வளரும் ......
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 17, 2012 7:56 pm

குழந்தை செய்யும் குறும்புகளைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்வர்.
குழந்தை... இன்று போர் மறவனாகி இருக்கிறான்... பாடல் அருமை... தொடர் பதிவுக்குப் பாராட்டுகள் நண்பரே மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jul 19, 2012 1:33 pm

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 548321 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sun Jul 22, 2012 2:39 pm

தமிழனின் வீரமும் மானமும்


"மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்" என்று நாம் படித்ததுண்டு, தமிழர்களிடம் பணம், பொருள், பதவியை விட மானம் பெரிதான விஷயமாக கருதப்படுகிறது, தவறு செய்து விட்டு அடுத்தவர் முன் நாணி நிற்கும் சூழல் நேரா வண்ணம், நம்முடைய குணங்கள் இருக்க வேண்டும் என்று வள்ளுவம் உரைக்கிறது. எதிரியிடம் உயிர்ப்பிச்சை கேட்காமல் வீரத்தோடு சண்டையிட்டு வீரமரணம் அடையும் போக்கு தமிழக வீரனிடம் இருந்தது. புறமுதுகு காட்டி மரணம் அடைவது இழுக்காக கருதப்பட்டது.
சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கண்ணோடு போர் புரிந்து குடவாயில் கேட்டை சிறையில் சிறைப்பட்டு இருக்கும் நிலையில் தண்ணீர் தா என்று இரந்து கேட்டுப் பெறாமல் தவிக்கும் நிலையில் எழுந்த பாடல் இது, பகைவனிடம் போரிடும் வீரமும், தன்னிலை இழக்காத தன்மானமும் நிறைந்தது தமிழனின் வாழ்க்கை என்று இந்த பாடல் மூலம் அறியலாம். குழந்தை இறந்து பிறந்தாலும், வெறும் சதைப்பிண்டம் பிறந்தாலும் அதன் உடலில் வாளால் கீறி வீர மரணம் அடைந்ததாக கருதி புதைக்கும் பழக்கம் இருந்ததையும் இந்த பாடல் மூலம் அறிய முடிகிறது
.
பாடல் 18: குழவி இறப்பினும் (புறம் 74)
பாடியவர் : சேரமான் கணைக்கால் இரும்பொறை
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்;
தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ, இவ் உலகத்தானே?


பொருள் விளக்கம்:
குழந்தை இறந்து பிறந்தாலும், வெறும் சதைப்பிண்டம் பிறப்பினும், வயது முதிர்ந்து நோயால் இறந்தாலும் அப்படியே புதைத்தால் வீரம் இல்லை, ஆண்மைக்கு அழகில்லை என்று கருதி அந்த இறந்த உடலை வாளால் கீறி புதைப்பது மறவர் குல வழக்கம். பசி தனிய நாயின் கீழ் நடத்தும் கேளிர் அல்லாத இந்த பகைவரிடம் தண்ணீர் தா என்று கேட்டுப் பெரும் இழிவு நிலை நேர்ந்தது. இது சரியில்லை. இந்த இழிவு நிலை உள்ளவரை உலகம் ஏற்காது.

புறம் தொடரும் .....


Last edited by சதாசிவம் on Sun Aug 05, 2012 7:32 pm; edited 1 time in total
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jul 23, 2012 7:18 am

வீர உலகம்... வியப்பாகவே இருக்கிறது. சண்டை சண்டை என்று உணவு ஊட்டும்போது சொல்லிச் சொல்லியே வளர்த்திருப்பார்கள் போல...

தொடர்பதிவுக்குப் பாராட்டுகள் நண்பரே மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 23, 2012 2:35 pm

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 548321 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sun Aug 05, 2012 7:20 pm

தமிழனின் வீரம்
குழந்தை இறந்து பிறந்தாலும் வாளால் கீறி புதைக்கும் வீரம் விளைந்த பூமி இந்த தமிழ்பூமி. பகைவரை கண்டு அஞ்சாத, புறமுதுகு காட்டாத வீரம் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு உண்டு. அப்படி உள்ள ஒரு தமிழக வீரனின் வீரத்தை புலப்படுத்தும் பாடல் இது.

பாடல் 19
: பெயர் புற நகுமே (புறம் பாடல் எண் : 284)
பாடியவர் : ஓரம் போகியார்
திணை : தும்பை துறை : பண்பாட்டு

'வருகதில் வல்லே; வருகதில் வல்' என,
வேந்து விடு விழுத் தூது ஆங்கு ஆங்கு இசைப்ப,
நூலரி மாலை சூடி, காலின்,
தமியன் வந்த மூதிலாளன்
அருஞ் சமம் தாங்கி, முன் நின்று எறிந்த
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறையாகத்
திரிந்த வாய் வாள் திருத்தா,
தனக்கு இரிந்தானைப் பெயர் புறம் நகுமே.


பொருள் விளக்கம்
திறமையான வல்லமை பொருந்தியவனே வீரனே வருக வருக என்று தூதுவர்கள் உன்னை போருக்கு அழைப்பார்கள். நூலால் கட்டிய மாலையை கழுத்தில் சூடி, காலால் நடந்து போருக்கு செல்கிறான் வீரம் விளைந்த மூத்த குடியில் பிறந்த வீரன். தன்னை எதிர்க்க வரும் யானையை வேல் கொண்டு தாக்கி வீழ்த்துகிறான். யானையை வீழ்த்தியதால் வேல் வளைந்துவிட்டது. வளைந்த வேலை யானையின் உடம்பில் வைத்து நிமிர்த்துகிறான். மறுபடி வேலைக் கையில் ஏந்தி தாங்க தோற்றவன் நோக்கிப்பாய அவன் புறமுதுகு இட்டு ஓடுகிறான். அஞ்சி ஓடும் அவனைப் பார்த்து நகைக்கும் இவனின் வீரம் பாராட்டுக்குரியது.


தமிழக ஆணின் வீரம் இப்படி என்றால், பெண்கள் எப்படி இருப்பார்கள், அடுத்த பாடலில் தமீழக பெண்ணின் வீரத்தைக் இதைக் காண்போம்.
புறம் வளரும்


Last edited by சதாசிவம் on Sun Aug 05, 2012 7:27 pm; edited 2 times in total
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by சதாசிவம் Sun Aug 05, 2012 7:22 pm

தமிழ் முதியவளின் வீரம்
தமிழ்நாட்டில் ஆண்கள் மட்டுமா வீரத்தில் சிறந்தவர்கள் ?, வீரத்தில் பங்கு அளிப்பவர்கள் அவர்கள் மட்டுமா?. வீரமகனைப் பெற்று அவனை போருக்கு அனுப்பும் தாயும் கூட சிறந்தவள் தான். அப்படி ஒரு சிறந்த தாயின் வீர மரபை பற்றிக் கூறும் அழகான பாடல் இந்தப் புறப்பாடல். அந்த காலத்தில் போருக்கு செல்வதில் சில மரபுகள் இருந்தது. போருக்கு ஆள் தேர்ந்தெடுப்பதிலும், அவர்களை போர் முனையில் நிறுத்தி வைக்கும் முறையிலும் தமிழன் மனிதத்தன்மையுடன் தான் இருந்தான். அதாவது திருமணம் ஆகி குழந்தை பெறாதவர், வீட்டுக்கு ஒரேப் பிள்ளையாக

இருப்பவர்கள், வயது முதிர்தோர் ஆகியவர்களை போரில் முதல் வரிசையில் நிற்க வைக்காமல், அல்லது முதல் நாள் போரில் கலந்து கொள்ளச் செய்யாமல், போர் தொடர்ந்து நடைபெற்று மற்ற ஆட்கள் இறந்து மேலும் ஆட்கள் தேவைப்படும் சூழ்நிலையில் மட்டுமே அவர்கள் போரில் நிறுத்தப்பட்டனர். இது தான் தமிழ் மண்ணின் மரபு. அப்படி ஒரு பாடலின் சிறப்பைக் காண்போம்.
பாடல் 20: பெரிது உவந்தனளே (புறம் : 278)
பாடியவர் : காக்கைப்பாடினார் நச்செள்ளையார்
திணை : தும்பை துறை : உவகைக் கலுழ்ச்சி

'நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்,
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படை அழிந்து, மாறினன்' என்று பலர் கூற,
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என்
முலை அறுத்திடுவென், யான்' எனச் சினைஇ,
கொண்ட வாளொடு படு பிணம் பெயரா,
செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய
படு மகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே!


பொருள் விளக்கம்


நரம்பு தெரியும் அளவுக்கு மெலிந்த தோள்கள், தாமரை இலை போல் மெலிந்த ஒட்டிய வயிறை உடைய முதியவளின் சிறு மகன், போரில் தோற்றுப் போனான், புற முதுகு காட்டி ஓடி இறந்தான் என்று பலர் கூற, அப்படி அவன் இறந்திருந்தால் அவனுக்கு பால் கொடுத்த இந்த மார்பகத்தை அறுத்து எறிவேன் என்று கையில் வாளைக் ஏந்திக் கொண்டு மகன் இறந்து இருக்கும் இடம் சென்றாள். இரத்தம் சிதறி சிகப்பு கம்பளம் விரித்தது போல் சிவந்து கிடந்த போர்க்களத்தில் மகனின் உடலைத் தேடுகிறாள். தன் மகன் சிதைந்து இரு துண்டுகளாய் ஆன உடலைக் கண்டு பதறுகிறாள், அந்த உடல் மார்பில் பாய்ந்த வேலால் சிதைந்து அந்த வேல் முதுகை கிழித்து தான் உடலை இரண்டு துண்டாக்கி உள்ளது. என் மகன் புறமுதுகு காட்டி இறக்கவில்லை. அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட இப்பொழுது தான் நான் பெரிது மகிழ்கிறேன்.
பாடலின் சிறப்பு.
பல நாட்கள் குழந்தை இல்லாமல் வயது முதிர்ந்த நிலையில் பிறந்த மகன் என்று இந்த பாடல் இலைமறை காயாக கூறுகிறது. தாயை தோள் மெலிந்த வெள்ளை முடி உள்ளவளாகவும், மகனை சிறுவனாகவும் கூறுவதால் வயதான பெண்ணின் இளம் வயது மகன் என்று பொருள் படுகிறது. இப்படி வீட்டுக்கு ஒரே பிள்ளையாக இருக்கும் மகனையும் போரில் இழந்ததை நினைத்து வருத்தப்படாமல் அவன் புறமுதுகு காட்டி இறந்து விட்டான் என்று பிறர் கூறுவதை கேட்டுப் பொறுக்க முடியாமல், என் மகன் அப்படி இறக்க மாட்டான், அவனுக்கு நான் வீர்ப்பால் அல்லவா ஊட்டினேன்.அப்படி இறந்திருந்தால் அவனுக்கு பாலூட்டிய என் தனங்களை அறுத்து எறிவேன் என்று சூளுரைத்து அவன் இறந்த உடலை கண்டு மார்பில் பாய்ந்த வேல் தான் அவன் நெஞ்சைக் கிழித்து முதுகில் வெளி வந்து இருக்கிறது. என் மகன் புறமுதுகு காட்டவில்லை என்று பெருமைப்படும் கூறும் தமிழ் நாட்டுத் தாயின் பாடல் இது.

வயது முதிர்ந்தவள் இப்படி என்றாள், தமிழ் இளையவள் எப்படி இருப்பாள். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு ஆண்மகனையும் போருக்கு அனுப்பும் பெண்ணின் வீரத்தை அடுத்த பாடலில் காண்போம்.
புறம் வளரும்
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Aug 06, 2012 12:27 pm

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 548321 நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு  - Page 3 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum