தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிரிந்து போகும் உரிமை ஒரு (தமிழ்) இனத்திற்கு உள்ளதா? : ஆய்வு
2 posters
Page 1 of 1
பிரிந்து போகும் உரிமை ஒரு (தமிழ்) இனத்திற்கு உள்ளதா? : ஆய்வு
பிரிந்து போகும் உரிமை ஒரு (தமிழ்) இனத்திற்கு உள்ளதா? : ஆய்வு
சோவியத் யூனியனைக் (ருசியா) கட்டியமைத்த ஜோசப் ஸ்டாலின் இனப்பிரச்சினை பற்றி தான் எழுதியுள்ள "தேசிய இனப்பிரச்சினை குறித்து" என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை ஓர் இனத்திற்கு உள்ளதா என்பது கீழ்க்காணும் காரணங்களால் தீர்மானிக்கப்படும் என்று வரையறுத்துக் கூறியுள்ளார்.
1) ஒரு சிறுபான்மை இனம், பேரினவாதத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்க்ப்பட்டிருக்கவேண்டும்.
2) பிரிவினை கோரும் இனமக்கள் தொடர்ச்சியான நிலப்பரப்பில் இருக்கவேண்டும்.
3) மொழி மட்டுமே ஓர் இனத்தின் முக்கிய அடையாளமாகும். ஜாதி, மதம் போன்றவற்றால் ஓர் இனத்தினை அடையாளப்படுத்த முடியாது.
What is Nation? - A nation is a stable community of people historically constituted through a lengthy course of systematic intercourse. This community of people shares a common language, a common territory, a common economic life, and a common psychological makeup manifested in a common culture. - Joseph Vissarionovich Stalin, Russia
ஜோசப் ஸ்டாலின் வரையறுத்துள்ள இந்த மூன்று காரணிகளும் "ஈழ்த்தமிழர்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியவை"
ஏனென்றால், இலங்கை விடுதலை பெற்ற நாளிலிருந்து இன்றுவரை சிங்கள பேரினவாதத்தின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு ஈழத்தமிழர்கள் ஆட்பட்டு வருகின்றனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகம் என்பதாகும். ஆனால் கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களை வலுக்கட்டாயமாக குடியமர்த்தியதன் மூலம் இலங்கை அரசு அத்துமீறியது. அடக்குமுறையை கையாண்டுள்ளது. (பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இஸ்ரேல் இதைத்தான் செய்தது).
இலங்கை இராணுவம், இராணுவத்தின் துணைப்படைகள், மத்திய காவல்துறை ஆகிய படைப்பிரிவுகளில் மருந்துக்கும்கூட ஒரு தமிழர் இல்லை.(ஹிட்லரின் நாஜிப்படையில் ஒரு யூதன்கூட இல்லை). இந்த அளவிற்கு அவநம்பிக்கையும், பிளவும் உறுதியாகக் கெட்டிப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் எவ்வாறு கூடிவாழ முடியும்?
ஒழுக்கமில்லா இரக்கமில்லா சிங்கள இராணுவம்
தமிழ்ப் பெண்களைத் திட்டமிட்டு, கூட்டுப் பாலியல் அத்துமீறல்களுக்கு உட்படுத்துவது சிங்கள ராணுவத்திற்கு அன்றாட கடமையாக வலியுறுத்த்ப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள்கூட சிங்கள ராணுவத்தினரின் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்துள்ளார்கள் என்ற செய்தி இடியாய் இறங்குகிறது. "உங்கள் வயிற்றில் புலி அல்ல, சிங்கள சிங்கம்தான் வளரவேண்டும்" என்று சொல்லி சொல்லி தமிழ் பெண்களை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை ஒழுக்கமில்லாத, கோழைத்தனமான சிங்கள ராணுவம் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளது.(கொடுங்கோலன் ஹிட்லர் படைகள்கூட இந்த ஈனச் செயலில் ஈடுபட்டதாக வரலாறு இல்லை).
தமிழர்களின் அடையாளங்களையும், பண்பாட்டு சின்னங்களையும் சிதைப்பதை சிங்கள பேரினவாதம் திட்டமிட்டு நடத்தி வருகிறது.(யாழ்பாணத்தில் இருந்த மிகப்பெரிய நூலகத்தை எரித்து சாம்பலாக்கியது மற்றும் பாடசாலைகள் எரிக்கப்பட்டது (இதனால் ஒரு தலைமுறை தமிழ்க் குழந்தைகள் எழுத்தறிவற்றவர்களாக ஆக்கப்பட்டது) கொயில்கள், புனித ஆலயங்கள் சிதைக்கப்பட்டு அவ்விடங்களில் புத்த விகாரங்களை நிறுவுவது.
தமிழ் ஊர் பெயர்கள் மாற்றம்
மட்டக்களப்பு இலுப்படிச்சேனைப் பகுதியில் செங்கலடி - பதுளை வீதியில் இலுப்படிச்சேனைச் சந்தியிலிருந்து வெப்பவெட்டுவான் ஊடாகச் செல்லும் "வேப்பவெட்டுவான் வீதி" யை 'சார்ஜன்ட் பத்திரண மாவத்தை' எனப் பெயர் மாற்றம் செய்து புதிய பெயர்ப்பலகை ஒன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் திரை நீக்கம் செய்யப்பட்டது.
வீதிக்குப் பெயரிடும் போது அல்லது பெயரை மாற்றம் செய்யும் போது அப்பகுதி பிரதேச சபையின் பூரண அனுமதி பெறப்படுவதுடன், அப்பகுதி மக்களின் ஒப்புல் பெறப்பட வேண்டும் என்பது இலங்கை அரசின் சட்டமாகும். இந்த விதிகளுக்கு முரணாக இந்த வீதிக்கு சார்ஜன்ட் பத்திரண மாவத்தை எனப் பெயரிட்டிருப்பது முழுத் தமிழ்ச் சமூகத்தையும் கொச்சைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும்.
வேறு வழியின்றிப் போராடுகிறார்கள்!
எல்லா வழிகளிலும் பேச்சு சுதந்திரம் மட்டுமல்ல, மூச்சு சுதந்திரமும் மறுக்கப்பட்ட ஈழ மக்கள் வேறு வழியின்றிப் போராடுகிறார்கள்.
அதே போல்தான் இஸ்ரேல் நாட்டின் அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து பாலஸ்தீனிய மக்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு தலைமை ஏற்றிருப்பது ‘ஹமாஸ்' என்ற விடுதலை இயக்கம். அந்த இயக்கத்தை இந்தியா அங்கீகரிக்கிறது.
ஆனால் இலங்கையில் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று பறைசாற்றுகிறது. பாலஸ்தீனிய ‘ஹமாஸ்' இயக்கத்தை அமெரிக்க, பிரிட்டன், கனடா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருக்கின்றன. ஆனால் அந்த இயக்கம்தான் தங்கள் தலைமை என்று வாக்கெடுப்பின் மூலமே பாலஸ்தீனிய மக்கள் அறிவித்திருக்கிறார்கள்.
அந்த அரசை நாமும் மதிக்கிறோம். ஈழத்தில் அப்படி ஒரு வாக்கெடுப்பு நடந்தால் ஈழமும் இன்னொரு பாலஸ்தீனமாகும். அதற்கு சிங்கள இனவாத அரசு தயாரா? ‘கிளி' வேண்டுமானால் வீழும் ஆனால் ‘புலி' வீழாது என்பதனை அவர்கள் விரைவிலேயே அறிந்து கொள்வார்கள்.
காடுகளையும் மலைகளையும் நடந்தே கடந்து சீனத்தை விடுதலை செய்த ‘மாவோ' அவர்களும் சில தேக்கங்களைச் சந்தித்தார். சில தடைகளை எதிர்கொண்டார். சில இடங்களில் தாற்காலிகமாகப் பின்வாங்கவும் செய்தார். அப்போது தமக்கு பின்னே அணிவகுத்து வரும் செஞ்சேனையைப் பார்த்துச் சொன்னார்.
‘இப்போது நிலத்தை இழ. போராளிகளை காப்பாற்று. இப்போதைக்கு நிலத்தை இழக்கத் தயங்கினால் பின்னர் நிலத்தையும் இழந்துவிடுவாய், போராளிகளையும் இழந்துவிடுவாய்' என்றார் மாவோ.
இன்றைக்கு வன்னி காடுகளில் ஈழப் போராளிகள் நிலங்களை இழக்கலாம். ஆனால் நாளை கொழும்பிலேயே மையம் கொள்ளும். இலங்கையில் சம உரிமை மறுக்கப்பட்டதால் அரசுக்கு எதிராக விடுதலைப்புலிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். சம உரிமை என்பது நியாயமான கோரிக்கையாகும். இதற்காக அறவழியில் போராடிப் பார்த்தனர். எந்த முடிவும் ஏற்படவில்லை. மனித நேயத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு வரும் அரசுக்கு எதிராக வேறு வழியின்றி ஆயுதப்போராட்டம் நடத்தும் அளவிற்கு ஈழத்தமிழர்கள் தள்ளப்படிருக்கிறார்கள்.
இலங்கையில் தமிழினத்தை முற்றிலுமாகத் துடைத்தெறியும் நோக்கத்தை ராச்பக்சே-வின் பாசிச இனவெறி அரசு தடையேதுமில்லாமல் அரங்கேற்றி வருகிறது. விடுதலைப் புலிகளை அழித்த பின்பு மீதமுள்ள தமிழர்களைப் பாதுகாப்பு முகாம்கள் என்ற பெயரில் திறந்தவெளி சிறைச்சாலைகளில் நிரந்தரமாய் அடைத்து வைக்க வெட்டவெளி மைதானங்களை தற்போது தாயர் நிலையில் வைத்துள்ளது ராசபக்சே-வின் கொலைவெறி பிடித்த சிங்கள அரசும், ஒழுக்கமில்லாத சிங்கள ராணுவமும்.
உலக சரித்திரத்தில் எந்த இனமும் இந்த அளவு ஆதரவற்ற, பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டதில்லை.
எத்தனை எத்தனை கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், சித்ரவதைகள், ஓலங்கள் மற்றும் அலங்கோலங்களைக் கொண்டது ஈழ மண். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என்று ஒருவரையாவது விட்டதுண்டா?.
மனிதன் மிருகங்களோடுகூட வாழ்ந்துவிடலாம். இவ்வளவு கொடுமைகள் நடந்துள்ள நிலையில் சிங்கள் அரக்கர்களோடு எப்படி ஒன்றாக வாழமுடியும்?...
இவ்வளவு தூரத்திற்கு வந்த பின்பு, தனி ஈழம்தான் தீர்வு என்று அரசியல் தலைவர்களும், மக்களும் கூறிவருகின்றனர். (இலங்கைத் தமிழர்கள் பல தேர்தல்களிலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இக்க்ருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்).
இப்போது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. வட-கிழக்கு தமிழர் பகுதிகளில் பெரும்பான்மையான சிங்களவர்கள் குடியெற்றப்பட்டுகொண்டிருக்கிறார்கள். இதன்மூலம் படிப்படியாக தமிழ் நாடாளூமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பது. தமிழர்களின் குரல்களை அடக்கும் வகையில் என்று சிங்கள இனவாத அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
எனவே இலங்கையில் இருந்து பிரிந்து போகும் உரிமை தமிழர்களுக்கு நூறு விழுக்காடு உண்டு. அரசியல் தீர்வு என்பது தற்காலிக தீர்வாக இருக்குமே தவிர நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்காது. தனி நாடு ஒன்றே தமிழர்களுக்கு முழுமையான சுதந்திரத்தையும், அமைதியையும் பெற்று தரும்.
தொடர்ந்து போராடுவோம். காலம் ஒருநாள் கனியும். அப்போது
வரலாறு நம்மை விடுதலை செய்யும்!
முத்தமிழ்வேந்தன்
சென்னை
[You must be registered and logged in to see this link.]
3tamil78- புதிய மொட்டு
- Posts : 50
Points : 150
Join date : 07/10/2010
Re: பிரிந்து போகும் உரிமை ஒரு (தமிழ்) இனத்திற்கு உள்ளதா? : ஆய்வு
தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!
» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 23. தமிழ் , சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» பிரிந்து போன உன் நினைவுகள்
» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 23. தமிழ் , சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» பிரிந்து போன உன் நினைவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum