தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 23. தமிழ் , சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1

சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com
23. தமிழ்
தமிழ் மீது பற்று இல்லாத தமிழ்க் கவிஞன் இருக்க முடியாது. ஆனால் எத்தனை பேர் தமிழைப் பாடியிருக்கிறார்கள்? மதுரைச் சொக்கநாதப் பெருமானுக்குத் தூதனுப்ப விழையும் ஒருத்தி, வழக்கமாகத் தூதனுப்பும் பொருள்களை எல்லாம் ஒவ்வொரு குறையாகக் காட்டி ஒதுக்கித் தள்ளுகிறாள். இறுதியில் தமிழ் ஒன்று தான் சொக்கநாதப் பெருமாளிடம் தூது செல்லத் தகுதி உடையது என்று முடிவு செய்கிறாள். தமிழின் சிறப்புக்கள் எல்லாம் அதுவரை சொல்லப்படாத அளவில், இனியும் சொல்லப்பட முடியாத அளவில் புவலர் -- யாரென்றே பெயர் தெரியாத புவலர் ஒருவர் பாடி முடிக்கிறார். அத்தகைய சிறப்புடைய தமிழைப் பாட வேண்டுமானால் பொருத்தமாகப் பாட வேண்டுமே. அப்படிப் பாடிய கவிஞர் -- புலவர்களிலே வைரமுத்துவும் ஒருவர்.
மொழியாகிய கதவு திறக்கிறது. ஆம், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய தமிழன் முன் முதலில் பேசத் தொடங்குகிறான். இன்றைக்கு உலக மொழிகள் அனைத்தையும் ஆய்வு செய்து, அனைத்து மொழிகளுக்கும் தாய் தமிழ் மொழி தான் என்று பல நாடுகளுக்கும் சென்று தன் ஆய்வை எடுத்தியம்பி, நிலை நாட்டிவரும் ‘சாத்தூர் சேகரனார்’ தமிழ் நாட்டின் ஆய்வுக் கதிரவன். அவருடைய கருத்தை அறிந்தோ அறியாமலோ நம் கவிஞரும் எடுத்துக் காட்டுவது தான்! மொழியின் கதவு திறந்தது. அங்கே அமுதம் பொழிந்ததால் விளைந்த தமிழ் என்று பாடுவார். விளைவது மழை நீரால் தான். வள்ளுவர் கூடத் ‘தானமிழ்தம் என்றுரைற் பாற்று’ என்று கூறுவார். ஆனால் தமிழ் விளைந்தது மழை நீராகிய அமுதத்தால் அன்று. மூத்த குடியின் உணர்வு பொழிந்த இனிமை எனும் அமிழ்தால். அதனால் தான் அமிழ்தமே தமிழாயிற்று. அதனால் தான் தமிழுக்கு இனிமை எனப் பொருள் காரணப் பொருளாக அமைந்ததது. இந்தச் செய்தியைத் தான் வைரமுத்து சுருக்கமாக ஆணித்தரமாக எடுத்துக் காட்டுவார். அத்தகைய இனிய தமிழில் தான் புலமை பிறந்தது. ஆகவே புலமையும் இனிமையானதே.
மொழியின் கதவு திறந்தது.
விழியில் விடியல் புலர்ந்தது
அமுதம் பொழிந்து விளைந்த தமிழில்
புலமை பிறந்தது. (1 - 68)
கவிஞரின் மொழிப் பற்றுக்கும் மொழிப் புலமைக்கும் வேறென்ன சான்று வேண்டும்?
தன் காதலியின் பெயரோடு தன் பெயரையும் சேர்த்து எழுத ஆசைப்படுகிறான், காதலன். அதற்குப் பொருத்தமான இடமோ இயற்கை எழில் கொஞ்சும் இலைகளும் கிளைகளுமே. அவன் எழுதுவது எந்த மொழி தெரியுமா? கொஞ்சும் தமிழ். கொஞ்சுதற்கும் ஏற்ற தமிழாயிற்றே.
இலைகளின் மீதும்
கிளைகளின் மீதும்
கொஞ்சம் தமிழால்
உனது பெயரும் எனது பெயரும்
எழுதப் போகிறேன். (1 - 68)
கொஞ்சுவதற்குரிய தமிழ், எழில் கொஞ்சும் தமிழ் - வேறு எதுவும் விஞ்ச இயலாத தமிழ் - கவிஞரின் பாசம் நமக்குப் புரிகிறது.
சங்கு ஒளிப்பது. அழகிய தமிழ்ச் சொல். எனவே தான் அழகு எனும் பொருள் தரும் ‘அம்’ எனும் சாரியை கொடுத்தச் சங்கம் என்றான் தமிழன். அது தான் தமிழ்ச் சங்கம். அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தன் தமிழ்ப்பாடலை - தண்டமிழ்ப் பாடலைக் கேட்க அவன் வரவில்லையே என்று அவள் ஏங்குகிறாள். தமிழ்ச் சங்கமே ஏங்குகிறது.
நீ வந்து கேளாமல்
ஏங்கும் தமிழ்ச் சங்கம். (1 - 174)
தமிழால் வளர்ந்த சங்கம், தமிழுக்காக வளர்ந்த சங்கம் இன்று இல்லையே என்ற கவிஞரின் ஏக்கம் தான் இப்பாடலில் வெளிபட்டதோ?
தன் காதலியைச் செல்வங்களையெல்லாம் தன்னுள் கொண்டுள்ள ஆழம் காண இயலாத கடலாக, இன்பம் தரும் மென்மையான கட்டிலாக, அழகு வடியும் பொருளாகக் காண்கிறான் அவன். எல்லாவற்றையும் விடத் தமிழ் மன்றமாகக் காண்கிறான். எனவே புதிய சந்தமும் பிறக்கறிது.
மஞ்சமே தமிழின் மன்றமே - புதிய
சந்தமே சிந்தினேன். (1 - 201)
கவிஞனின் உள்ளக் கிடக்கை மஞ்சம் என்ற பல பொருள் ஒரு சொல்லைக் கையாண்டு அதனோடு தமிழ் மன்றத்தையும் சேர்த்திருப்பது, தமிழிலே பல பொருள் ஒரு சொல் மிகுதியும் உண்டு என்ற குறிப்பை உணர்த்துகிறது. எனவே தமிழில் சந்தங்களுக்குக் குறைவே இல்லை என்பதும் அறியலாம்.
பொருள் தெரிந்து பாடும்போது முழுமையான இரசனை அனுபவப்படும். புரியாத மொழிகளுக்குத் தலையாட்டும் வெற்றுக் கூட்டங்கள் புரிந்த மொழியில் இசை கேட்கும்போது எழுந்தோடி வருவாரன்றோ. அதுவும் தமிழாக இருந்துவிட்டால், தமிழ் இசையாக இருந்துவிட்டால் இன்பப் பெருக்குத் தானே. அதனால் தான்.
தங்கமே நீயும் தமிழ்ப்பாட்டும் பாடு (2 - 13)
என்று பாடினாரோ.
சில இடங்களிலே கோடிட்டுக் காட்டிய கவிஞரின் எழுத்தோவியங்கள் அவரின் ஆழ்ந்த தமிழ்ப்பற்றையும் தமிழ்ப்புலமையையும் காட்டுகின்ற அவர் தம் தமிழோடு இணைந்தவராயிற்றே. புலமைக்கும் இனிமைக்கும் தமிழ்ப் பற்றுக்கும் பின் குறை நேர்ந்து விடுமோ?

Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – சொல்வளம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 7. உவமை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு- 8. உருவகம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -24. வரலாறு, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum