தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1

சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com
14. இசை
இசை பற்றிய குறிப்புக்களையும் கவிஞர் ஆங்காங்கே தருகிறார். அவையெல்லாம் அவரது இசையறிவை எடுத்துக் காட்டுவனவே. இசையில் மீதிருந்த பற்று என்று சொன்னாலும் பொருந்தும்.
வண்டுகள் பறக்கும் போது ஓசை எழுவது இயற்கை. அவ்வோசை அவருக்குச் சங்கீதமாகவே தெரிகிறது.
பூவின்ம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும். (1 - 14)
நல்ல சங்கீதத்தில் மனம் ஈடுபடும்போது கல்மனமும் இளகும். ஆனால் கல்வியிலும் பால் ஊறிவருமாறு செய்துவிடும் என்பார் கவிஞர்.
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலூறுதே. (1 - 15)
சாதகம் என்றொரு பறவை உண்டு. அது நீர் நிலைகளின் அருகில் வசித்தாலும் அவற்றிலுள்ள நீரை அருந்துவது இல்லை. வானத்திலிருந்து பொழியும் மழை நீரைத்தான் வாய்திறந்து ஏற்று விழுங்கும். ஆனால் கவிஞர் சாதகப் பறவை இசையை அருந்தும் எனப்பாடி இருப்பது பொருட்குற்றம் போலத் தோன்றலாம். அவர் சரியாகத் தான் பாடியிருக்கிறார். மழை தோன்றும்போதே இராக தாளத்தோடு தானே தோன்றி வருகிறது. மண்ணில் சங்கமம் ஆகும் வரை இசையோடு தானே வருகிறது. அது இசையுடன் வரவில்லை, இசையாகவே வருகிறது என்பது கவிஞரின் கற்பனை. அதனால் தான் இசையை இசைமழை எனக் கூறினார் போலும். எனவே, இசையாகவே வருகின்ற மழையே உண்கின்ற சாதகப் பறவை இசையையே அருந்தும் என்று கூறியது இசை மீது அவர் கொண்ட மோகம்.
இசையை அருந்தும் சாதகப் பறவை. (1 - 15)
இராகங்களில் விடியற்காலையில் பாடப்படும் ஐந்து ராகங்களில் பூபாளமும் ஒன்று. இதனை இராகங்களில் உயர்ந்த சாதியாகக் கூறுவார்கள். இந்தோளம், இராமகவி, தேசாட்சரி, நாட்டை ஆகிய வேறு இராகங்களும் விடியற்காலையில் பாடப்படுவன. ஆயினும் அவற்றுள் பூபாளமே உயர்ந்து நிற்பது மட்டும் அல்லாமல் நம் உணர்வுகளைத் தெயிவிகப் படுத்திவிடும். எனவே தான் கவிஞர் பல பாடல்களிலும் பூபாளத்தைக் குறிப்பிட்டுக் கூறுவார்.
நானொரு பூபாளம் நீயொரு பொய்ராகம். (1 - 29)
பொய் ராகம் என்னும் போது பூபாளம் என்பது தான் உண்மை ராகம் எனக் கவிஞர் கருதுகிறார் என அறியலாம்.
இனி நான் பாடும் பூபாளம்
பாதாளம் வரையில் போகும். (1 - 30)
இராகம் பாதாளம் வரையில் போகும் என்பது ஒரு புதிய செய்தி.
காதல் ஒன்றே இளமையின் பூபாளம். (1 - 48)
வானவில்லைப் போன்ற இளமைக்குப் பூபாளம் தூய்மையைச் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.
இவள் சிரித்தால் பூபாளம் (1 - 77)
அச்சிரிப்பு பூபாளத்தைப் போல உள்ளத்தைக் குளிர்விக்கிறது எனக் குறிப்பிடுகிறார்.
பூபாளம் கேளாதோ?
ஒரு காதல் கங்கை
ஏழை வயலின் பாயாதோ? (1 - 81)
பூபாளத்தை எளிதில் பெற முடியாத காதல் கங்கை என்று உருவகிப்பது சிறப்பே.
உன் பேரே நான் பாடும் பூபாளமே. (1 - 87)
அவள் பெயரைச் சொல்லும் போதெல்லாம் பூபாளத்தைப் பாடுவது போன்ற பேரின்பம் சொல்லும் போதெல்லாம் பூபாளத்தைப் பாடவது போன்ற பேரின்பம் தோன்றுகிறது எனச் சொல்லுவார்.
பாடும் பூபாளங்கள் யாவும்
பொய் ராகங்கள். (1 - 94)
வாழ்வில் துன்பத்தையே அனுபவித்து அழுது வாழும் பெண் பூபாளத்தைப் பாடும்போது அதுவும் பொய்யாகி விடுகிறதே என ஏங்குகிறார்.
நாளை ஒரு பூபாளம்
நீ பாட வேண்டும். (2 - 156)
தன் குழந்தை கூட எதிர்காலத்தில் பூபாளம் பாட வேண்டும் என விரும்பும் ஒரு தந்தையின் பாடலாகும் இது.
தில்லானா என்பது ஒரு சந்தக் குறிப்பு. இதையும் தன் இதயத்தின் உணர்வுகளோடு பொருத்திப் பாடுவார். சுதியும் லயமும் ஒன்று சேர வேண்டும் என்பதில் அவருடைய நியாயமான ஆசை தெரிகிறது.
தகிட தமிமி தகிட ததிமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
.....
சுதியும் லயமும் ஒன்று சேர (1 - 103)
சுதியும் லயமும் ஒன்று சேர வேண்டுமென்பதால் அவனும் அவளும் ஒன்று சேர வேண்டும் என்பதைத் தான் இசையொடு பொருத்திச் சொல்லுகிறார்.
விடியற்காலையில் பாடப்படும் இராகங்களில் இந்தோளமும் ஒன்று என்பதை முன்னரே பார்த்தோம். இந்த இராகம் பெண் இராகம் என்பர். பெண்ணோடு சேரத்தகாதது சேர்ந்து விட்டால் வீணாகி விடுமல்லவா? ராகங்கள் சுர பேதங்களால் மாறுபடும். அதாவது வெவ்வேறு இராகங்களுக்கு வெவ்வேறு சுரங்கள் அமையும். அவற்றில் இந்தோளத்துக்கு ஐந்து சுரங்கள் அமையும் எனக் குறிப்பிடவார் கவிஞர். ஐந்து சுரங்களில் இடையில் பஞ்சமும் கலந்தால் இந்தோளம் மாறுபட்டுப் போய்விடும் என்ற நுணுக்கத்தினைக் கவிஞர் பாடுவார்.
பஞ்ச சுரங்களே
இந்தோளம் - அதில்
பஞ்சமம் கலந்தால்
சுர பேதம். (1 - 110)
இயற்கையோடு இணைந்து போகிறவர் கவிஞர். எனவே தான் குயில்கள் மரக்கிளைகளில் உட்கார்ந்து சுரங்கள் சேர்ப்பதாகக் கூறுகிறார்.
குயில்கள் மரக்கிளையில்
சுரங்கள் சேர்க்கும். (1 - 203)
தலைமை பற்றிய இராகங்கள் மொத்தம் முப்பத்திரண்டு. இவற்றில் சேராத கீரவாணி என்ற இராகத்தையும் கவிஞர் குறிப்பிடுகிறார். இரவில் கனவில் வந்து அவள் பாடினால் - கீரவாணி பாடினால் இதயமே உருகும் எனக் காதலன் மேல் ஏற்றிப் பாடுவார்.
கீரவாணி
இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே. (2 - 156)
எந்த இராகமாயினும் அது பொருந்திய பாடலை மொழி தெரிந்து, பொருள் புரிந்து பாடும் போதும் கேட்கும் போதும் அதன் பயன் மிகுதி அப்படியில்லாமல் வெறுமனே தலையாட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. புரியாமலே தலையை ஆட்டும் கூட்டமும் இருந்து கொண்டு தானே இருக்கிறது என்கிறார் கவிஞர்.
என்னமோ ராகம் என்னென்னமோ தாளம்
தலையை ஆட்டும் புரியாத கூட்டம். (2 - 13)
ஓசையில் பிறப்பது தான் சங்கீதம். ஆனால் பாமரனுக்கு அது முதலில் போய்ச் சேர வேண்டும். இசைக்கு மொழி இல்லை என்பார்கள். பொருள் புரியாத இசையால் என்ன பயன்?
எல்லாமே சங்கீதந்தான்
சத்தத்தில் பொறந்த சங்கதிதான்
பஞ்சமம் என்பதும் சட்ஜமம் என்பதும்
பஞ்சப் பரம்பரைக் கப்பறந்தான். (2 - 13)
கவலை ஏதுமில்லாத மேட்டுக்குடி மக்கள் இரசிக்கும் சங்கீதம் சேரிப்பகுதி மக்களும் இரசிக்கும்படிப் போய்ச் சேர வேண்டும் என்று கூறும் கவிஞர் இசையிலும் பொதுவுடைமை வேண்டும் என்று கூறுகிறார். ஏனெனில் புலன்களுக்கு இசையும் ஓர் உணவு தானே. அதற்கேற்ற பாடலையும் பாட வேண்டுமென்கிறார் கவிஞர். எனவே புரியாத பிற மொழிகளில் பாடுவதை விடத் தமிழில் பாட வேண்டும்.
கவல ஏதமில்ல ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேர வேணும் அதுக்கும் பாட்டுப்படி.
.....
தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு. (2 - 13)
இசையின் பல நுணுக்கங்களை உள்ளடங்கிக் கவிஞர் பாடிய பாடல்கள் இசையில் அவர் தம் ஈடுபாட்டையும் இராகங்களின் வேறுபாடுகளை உணர்நதவர் என்பதையும் நமக்குத் தெரிவித்தாலும் நாம் வியப்படையும் மற்றொரு செய்தியையும் எடுத்துக் காட்டுகிறார். இசை என்பது மொழியும் பொருளும் புரிந்து பாடும்போது பாமர மக்களுக்கும் இசை சென்று சேர வேண்டும் என்று இசையிலும் பொதுவுடைமையைப் புகுத்தியுள்ளார் என்பதே அவ்வியப்புக்குரிய செய்தியாகும்.

Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -29. ஏழ்மை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 30. அலர், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -15. சோகம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 16. அரசியல், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு 32. பிற காவியங்கள், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum