தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 16. அரசியல், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Go down

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 16. அரசியல், சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 16. அரசியல், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Wed Feb 16, 2011 11:49 am

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 16. அரசியல், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com

16. அரசியல்
உலகில் மிகப் பெரிய சனநாயக நாடு இந்தியா. அப்படித்தான் சொல்லப்படுகிறது. ஆனால் சிலர் பலரை ஏமாற்றும் - கொள்ளையடிக்கும் - தந்திரம் தான் சனநாயகம் - இப்படித்தான் சிந்திக்கத் தோன்றுகிறது நம்முடைய அரசியல் நடைமுறை. தத்துவங்களெல்லாம் ஏட்டில் எழுதப்பட்டதேன்? நடைமுறையில் அரசியல் தத்துவங்கள் ஒவ்வொரு வீட்டிலும் புகுந்துவிட்ட பெருந்தேளாகத் தான் இருக்கிறது. நமக்கு நாமே கொடுத்துக் கொண்ட கொடுந்தண்டனை. இத்தகைய அரசியல் நிலைகளைப் பற்றி அஞ்சாமல் எடுத்துப் பாடி மக்கள் உள்ளத்தில் எழுச்சியை ஊட்டுபவனே இன்றைய காலத்தில் நம் நாட்டிற்குத் தேவையான கவிஞன். எந்த ஒரு கட்சியையும் சாராமல் பொதுவில் நடமாட வேண்டும். ஏனெனில் கட்சிகள் எல்லாம் எரிகின்ற கொள்ளிக் கட்டைகள். எரிகின்ற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? அவற்றை அகலாது அணுகாது தீக்காய வேண்டும். இந்தச் சூழ்நிலையில் கவிஞர் என்ன பாடுகிறார் என்பதை நாம் அவசியம் கவனித்தே ஆக வேண்டும்.
கோவிலில் உள்ள சாமி அடியார்கள் அளிக்கும் பொங்கலை வாங்கித் தின்று விட்டு எங்கோ மறைந்து போய்விட்டால் அப்பாமர மக்கள் நிலை என்ன? அவர்களுக்கு அருள்வது யார்? அதே போலத்தான் அரசியல் வாதிகளும். ஓட்டு வாங்குவதற்கு வீட்டுக்கு வீடு குனிந்து சென்றவன் இப்போது எங்கே சென்றுவிட்டான். வீட்டுக்குள்ளேயே தூங்கிவிட்டானா?
ஓட்டு வாங்கிப் போன ஆளு
வீட்டுக்குள்ளே தூங்கி யாச்சு
பொங்கல் வாங்கித் தின்னுபுட்டு
சாமி எங்கு போனதோ? (1 - 7)
தின்பதற்காக வந்தவன் தொண்டு செய்யமாட்டான்.
சுதந்திரம் வந்து நாற்பத்தேழு ஆண்டுகள் - அதாவது அரை நூற்றாண்டு - ஏறத்தாழ - ஆன பின்னும் மேட்டுக்குடி மக்களுக்கும் சேரி வாழ் மக்களுக்கும் இன்னும் பகைமை தீர்ந்தபாடில்லையே. எதற்காகச் சுதந்திரம் வந்தது? எத்தனையோ முறை ஏழைகள் ஓட்டுப் போட்டும் என்ன கண்டார்கள்? ஓட்டுப்போட்ட துணியைத் தான் கண்டார்கள். தேர்தலில் மக்களுக்கு நம்பிக்கை ஏறத்தாழப் போய்விட்டது. தெய்வத்தின் மீதும் தான். இரண்டுமே பொய்யாகிப் போய்விடுமோ என்று கவிஞர் வேதனைப்படுவது தெரிகிறது.
மாடிக்கும் அந்தச் சேரிக்கும்
இங்குப் பரம்பர வழக்கு
மாறணும் நன்மை சேரனும்
வந்த சுதந்திரம் எதுக்கு?
.....
ஏழுதரம் நீயும் ஓட்டுப் போட்ட
என்ன கண்ட? துணி ஓட்டுப் போட்ட
.....
தேர்தல் தெய்வம் ரெண்டும் மெய்யாகுமா?
போகப் போக ரெண்டும் பொய்யாகுமா? (2 - 42)
கவிஞர் கூறுவது போல, இங்கே சுவர்கள் சுவரொட்டிகளுக்கே அதிகம் பயன்பட்டன. லட்சியங்கள் கேளிக்கைகளுக்கே அதிகம் பயன்பட்டு விட்டன. ஓட்டுக்காக வேண்டி முடிந்தததும் சுவர்களிலே ஒட்டப்பட்ட வண்ண வண்ண வெளிச்சங்களெல்லாம் வெறும் அவமானச் சின்னங்களாகவே உள்ளன. கவிஞர் இங்கே பயன்படுத்தியிருக்கம் ‘அவமானச் சின்னங்கள்’ என்ற சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் அவை பயனற்ற சொற்களாகவே ¨மந்திருக்கும்.
ஓட்டுக்காக என்னென்ன ஜாலங்கள்
ஓடும் நீரில் போட்டார்கள் கோலங்கள்
வண்ணங்கள் சுவரெங்கும் வண்ணங்கள்
சின்னங்கள் அவமானச் சின்னங்கள்.
ஓட்டுப் போட்டவர்கள் நிலை என்ன? அவர்கள் தங்களுக்கே ஓட்டை போட்டுக் கொண்டார்கள் எனப்பரதேசி ஒருவன் பாடுகின்ற நிலையில் கவிஞர் பாடிய காடல் சிரிப்பை வரவழைத்தாலும் சிந்திக்க வேண்டிய செய்தியாகும் -- சிரிக்கக் கூடியதல்ல. சோம்பேறிகள் உட்கார்ந்து ஊர் வம்பளக்கும் சாவடிகள் குறைந்து போய் விட்டன. ஏன் தெரியுமா? அவர்கள் எல்லாரும் சட்டமனறத்திற்குப் போய்விட்டார்களே, அதனால் தான்.
சாவடிகள் கொறஞ்சு போச்சு
தாண்டவக்கோனே - பதிலுக்குச்
சட்டசபை பெருகிப் போச்சு
தாண்டவக் கோனே.
ஓட்டுப் போட்டு ஓட்டுப் போட்டுத்
தாண்டவக்கோனே - பலபேர்
ஓட்டையைத் தான் போட்டாண்டா
தாண்டவன் கோனே. (2 - 172)
தெய்வத்தை மட்டுமே நம்பிய மக்கள் இப்போது தேர்தலையும் நம்புகிறதே. எம்.எல்ஏ.வும் கடவுள் தான். ஏனெனில் இருவருமே கண்ணுக்குத் தெரிவதில்லையே. என்ன பொருத்தம்.
தெய்வத்தையே நம்பிய சனம்
தாண்டவக்கோனே - இப்ப
தேர்தலையும் நம்புதடா
எம்.எல்.ஏ.யும் கடவுள்தானா
தாண்டவக்கோனே - கண்ணுக்கு
ரெண்டு பேரும் தெரிவதில்லை
தாண்டவக் கோனே. (2 - 172)
பேய் ஆட்சி செய்தால் சாத்திரங்களெல்லாம் பிணம் தானே தின்னும். நாட்டை ஆள்வதற்குக் கூடுகின்றவர்கள் உண்மை முகங்கள் இல்லை, பொய் முகங்களே. இவர்கள் கூடி நியாயத்தைப் பேசுகிறார்களா? இங்கே தர்மம் தூங்கிப் போகுமோ? நீதிக்கு வெற்றி உண்டா? என ஐயப்படுகிறார் கவிஞர்.
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ? - இன்னும்
நேரமாகுமோ? (1 - 179)
காதலியின் இதழைப் புகழும் போது கூட நம் கவிஞர் தமிழ் நாட்டின் அரசியலை விட்டு வைக்கவில்லை. தமிழ்நாட்டில் எப்போதோ மது விலக்கு இருந்ததாம். இப்போது எங்கும் ஆறாய்ப் பெருக்கெடுத்தோடுகிறது. காதலியின் இதழுக்கு மட்டும் அந்த ‘எப்போதோ’ என்பது இல்லை. எப்போதும் மது ஊறிக்கொண்டே இருக்கும்.
தமிழ் நாட்டில் எப்போதோ
மதுவிளக்கு - உன்
இதழ்மட்டும் எப்போதும்
விதி விலக்கு. (1 - 185)
இந்த தேசம் காந்தி தேசமாகத் தான் கருதப்பட்டது. பின்னால் காந்திகள் தேசமாகிச் சீரழிந்ததும் உண்டு. இந்த நாட்டில் காவல் நீதிமன்றம் நியாயம் இவைகள் இல்லாமற் போய்விட்டனவா?
காந்திதேசமே காவல் இல்லையா?
நீதிமன்றமே நியாயம் இல்லையா? (1 - 200)
அரசியல் வாதிகள் பதவிப் பித்தம் பிடித்து வெறியாட்டம் போட்டுகிறார்கள். சுதந்திர தேவி அவர்களின் வீட்டிலே துணி துவைத்துத் தான் வாழ வேண்டி இருக்கிறது.
பதவியின் சிறைகளில் பாரதமாதா பரிதவிக்கிறாள்
சுதந்திர தேவி சுயநலப் புலிகளின்
துணி துவைக்கிறாள்; துணி துவைக்கிறாள்.
(1 - 200)
இந்த நாட்டில் ஏழைகள் எல்லாக் கொடுமைகளையும் அனுபவிக்கிறார்கள். விடுதலைக்காக அன்று நாம் கொடுத்த விலைகள் குறைவானவை அல்ல. இன்று வேலியாக இருக்க வேண்டிய அரசியல்லாதிகள் மக்களாகிய பயிரை மேய்கிறார்களே. இந்த நிலை மாறுமா? எனக் கவிஞர் ஐயுறுகிறார்.
ஏழையின் கூரையில் ஏற்றிய தீக்கனல்
வான்வரை ஏறுதடா; வான்வரை ஏறுதடா
விடுதலை வாங்க அன்று நாம் தந்த விலைகள்
தான் கொஞ்சமா?
வேலியே இங்கப் பயிரை மேய்கின்ற
நிலைமைதான் மாறுமா?
(1 - 200)
கடந்த காலத்தில் பெண்ணாலே ஆட்சிகள் சிதறுண்டுப் போன வரலாற்றை நாம் அறிகிறோம். இந்தக் காலத்திலும் அப்படித்தானே. பெண்ணால் தான் கட்சிகள் உடைந்து சீரழிகின்றன. பெண்ணை நோக்கியோ, பொன்னை நோக்கியோ கை நீட்ட மறுத்த நேர்மையானவர்கள் எல்லாம், அந்தப் பெண்ணின் சூழ்ச்சியாலேயே நிலை குலைந்து கவிழ்ந்து போனார்கள். இது தான் இந்த நாட்டின் அரசியல் தர்மம் போலும்.
இந்தக் காலக் கட்சியெல்லாம்
இரண்டாச்சு பெண்ணாலே
கை நீட்ட மறுத்த பய
கவுந்தாண்டி உன்னாலே. (2 - 77)
ஆங்காங்கே நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளங்களைப் போலக் கட்சிக் கொடிகள் வானில் ஏறிப் பறக்கின்றன. ஆனால் இங்கே தாலிக் கொடிகள் ஏறுவதில்லையே. இதில் யாருக்கும் வெட்கமென்பது இல்லையே.
கட்சிக் கொடி ஏறிச்சு
தாலிக் கொடி ஏறல. (2 - 100)
பாட்டி பேரனுக்கு அறிவு புகட்டுகிறாள். பினாமியாக நிலத்தைச் சேர்த்துக் கொள். சுவிஸ் வங்கியில் கள்ளத்தனமாக இந்த நாட்டுப் பணத்தைப் பதுக்கி வைத்துக்கொள். பாட்டி சொல்லைத் தட்டிவிடாதே. அப்போது தான் உனக்கு நல்வாழ்வு.
பினாமி பேரில் நிலமிருந்தாலும்
சுவிஸ் பேங்கில் பணமிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே. (2 - 162)
குறிப்பாகப் பாட்டி சொல்லும் அறிவுரை அவ்வளவு தானா? தெளிவாகவே கூறுகிறாள். எவனையோ தலைவன் என்று சொல்லிக் கொண்டு கட்சிக் கொடிகளைக் கட்டும்போதும் சட்டமன்றத்தில் காலித்தனம் செய்து அடிப்பட்ட போதும் சுடப் பயந்து பின் வாங்கி விடாதே. என் பேச்சைக் கேட்டுக்கொள் என்று சொல்வதன் மூலம் இந்த நாட்டில் அரவியல் அவரங்கள் எந்த அளவுக்க வேரூன்றிப் போய்கிட்டன என்பதைத் தான் கவிஞர் எடுத்துக் கூறுகிறார்.
தலைவன் என்று கொடிகட்டும் போலும்
சட்டசபையில் அடிப்பட்டபோகும்
பாட்டி சொல்லைத் தட்டாதே. (2 - 169)
வெறும் கற்பனையிலேயே ஊறிப்போய் வெறும் சிருங்கார ரசத்தையே பாடிக்கொண்டிராமல் இந்த நாட்டு மக்கள் படும் அவலங்களைக் கண்டு மனம் நொந்த நிலையில் அவற்றுக்குக் காரணமான அரசியல் வாதிகளின் வெற்றித்தனம், ஏமாற்று வேலைகள் இவைகளை எல்லாம் சாடுகிறார் கவிஞர். சுதந்திரம் வந்ததனால் இந்த நாட்டுக்க என்ன பயன் என்று கேட்டும் கவிஞர் இந்நாட்டின் சனநாயகம் கேலிக் கூத்தாகிவிட்டதையும் சாடுகிறார். இரவிலே பெற்ற சுதந்திரம் தானே. இனி எப்போது விடியப் போகிறாதோ?























Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு- 19.சட்டம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -35. பலதாரம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு 36. பெருந்திணை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 5. கற்பனை சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum