தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 5. கற்பனை சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Go down

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 5. கற்பனை சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 5. கற்பனை சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Wed Feb 16, 2011 11:21 am

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 5. கற்பனை சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com

5. கற்பனை
சிறு குழந்தை முதல் முதியவர் கற்பனை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று தான். அவரவர் வயதிற்கு ஏற்ப, மனப்பக்கவத்திற்கு ஏற்ப மாறுபட்ட நிற்கும். ஆயினும் கற்பனை கற்பனையே தான். ஆனால் கற்பனை செய்வதில் வேறொரு இனம் உண்டு. அது தான் கவிஞர் என்ற இனம். அவர்கள் கற்பனை பாமரர் அளவிலோ படிப்பாளி அளவிலோ எட்டப் படுவதொன்று அன்று. அவர்கள் கற்பனை தனிப்பட்டு நிற்பது. உலகியல் நிலையில் நின்று அமைவதும் உண்டு; அதற்கு அப்பாற்பட்ட நிலையிலும் அமைவதும் உண்டு. கவிஞர் தம் தாகம் கொண்ட கற்பனையிலும் தனித்தன்மை கொண்ட கற்பனைகளும் உண்டு. அத்தகு தனித்தன்மையினைக் கவிஞர் வைரமுத்து அவர்களின் திரைப்படப் பாடல்களில் காணலாம்.
புத்தனுக்கு ஞானம் பாதிக்கப்பட்டதன்று. குரு என்ற ஒருவர் இருந்ததில்லை. அதே நிலையில் தான் நம் கவிஞர் இருக்கிறார். அவருக்குக் குரு என்ற ஒருவர் இல்லையோ. புத்தனுக்குப் போதி மரம் போல இவருக்கு வானமே அமைந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் பகலும் இரவும் புதுப்புதுத் தத்துவங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. கவிஞனுக்கு வானத்தைவிடச் சிறந்த போதி மரம் வேறென்ன இருக்க முடியும். வானம் ஞானம் புகட்டும் ஆசிரியர். கற்பனையானாலும் ஒரு கவிஞனைப் பொருத்தவரை அது உண்மை தானே.
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும். (1 - 1)
அவனுடைய காதலி மல்லிகைப் பூவைக் குடிக்கொண்டாள். அதைக் கண்ட ரோஜாவுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. தன்னை அவள் குடிக்கொள்ளவில்லையே என்ற ஏக்கம். பூக்களுக்கள் இப்படி ஒரு பொறாமையா? எல்லாம் அந்தக் காதலனின் கற்பனை தான்.
நீ மல்லிகைப் பூவைச்
சூடிக்கொண்டால்
ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும். (1 - 4)
காய்ச்சல் என்ற சொல்லுக்கு உடலில் வரும் வெப்பு நோய் பொருள். ஆனால் ‘பொறாமை’ என்ற பொருளும் உண்டு. கற்பனையிலும் அற்புதமான சொல்லைக் கையாண்டு கவிஞர் சொல் விளையாட்டும் நடத்தியிருக்கிறார்.
வானம் கவிஞனுக்குப் போதிமரம் அல்லவா. வானத்தையே பார்த்திருக்கும் கவிஞனுக்கு அங்கு அலையும் மேகக் கூட்டங்கள் தென்படுகின்றன. அவைகள் அலைந்து கொண்டே இருக்கின்றனவே. யாரைத் தேடி அலைகின்றன? எதைத் தேடி அலைகின்றன? அவைகள் முகவரியைத் தொலைத்து விட்டனவோ? அதனால் தான் அவைகள் செய்வதறியாது கண்ணீர் விடுகின்றனவோ? அம்மழைத் துளிகள் மேகங்களின் கண்ணீராகக் காட்சியளிக்கின்றன. ஐயோ பாவம் என்று மனம் துன்பப்படுகிறதே.
முகிலினங்கள் அலைகின்றதே
முகவரிகள் தொலைந்தனவோ?
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ - அது மழையோ? (1 - 10)
காதலனுக்கு எப்போதும் தன் காதலியின் ஒவ்வொர் அசையும் கற்பனை உணர்வைத்தானே ஊட்டும். அன்னப் பறவைக்கு நடக்கத் தெரியவில்லை. அவளிடம் வந்து நடக்கக் கற்றுக் கொள்கின்றன. இது எல்லாக் கவிஞர்களுக்கும் தோன்றும் கற்பனை தான். ஆனால் நம் கவிஞர் அத்துடன் நிறுத்தியிருந்தால் பத்தோடு பதினொன்றாயிருப்பார்.இங்கே தான் அவருடைய தனித்தன்மை பளிச்சிடுகிறது. அவள் நடக்கும் போது ஏற்படும் ஓசை இலக்கணம் பொருந்திய இசையாகப் பிறக்கிறது. சங்கீதம் என்றால் நல்ல பாட்டு என்பது பொருள். எனவே தாளக்கட்டுக்க உட்பட்டது. அவள் அசைவில் சங்கீதம் பிறப்பது காதலனுக்கு மட்டும் தெரியும். அருவிகள் சலசலத்து ஓடும். மாறாத சந்தம் பொருந்தி நிற்கும். அது இசையாகத் தோன்றுவதில் விந்தையில்லை. ஆனால் அருவியில் குளித்தால் உடல் வெப்பம் குறையும். தாகம் மறையும். ஆனால் அவனுக்கோ அருவியில் நனைந்த போது தாகம் ஏற்பட்டுவிடுகிறது. இது என்ன தாகம்? கற்பனைத் தாகமோ?
அன்னமும் இவளிடம் நடைபழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்.
......
அருவிக்ளோ ராகம் தரும்
அதில் நனைந்தால் தாகம் வரும். (1 - 12)
ரோஜாப்பூப் போன்ற அவள் பாதங்கள் மண்ணிலே நடை பயில்கின்றன. இந்த மண்ணுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. அவள் பாதம் பட்ட மண்ணெல்லாம் ரோஜாப் பூவாய் மணக்கின்றதே. அம்மண்ணை ஏலம் விட்டால் நல்ல விலை போகுமே. அவள் கண்களை நீரிலாடும் மீன்கள் பார்த்தன. தன் இனம் - அழகு பொருந்திய இனம் - அலைகின்றனவே. நாம் அவைகளோடு சேர்ந்து மகிழ்ச்சிக் கடலில் நீந்துவோம். இந்த எண்ணம் வந்ததும் அம்மீன்கள் கரை ஏறி வரத் தொடங்கிவிட்டன. கவிஞன் கற்பனை விந்தையே.
உன் பாதம் பட்ட மண்ணை
ஏலம் போடலாம்
உன்னைப் பார்த்தால்
கரை ஏறும் மீன்கள் (1 - 13)
கல்லுருகப் பாடுவான் அவன். அவன் பாடல் அவளை ஆட வைத்தது. அவன் விலகிவிட்டால் அவள் உணர்வுகள் ஒடுங்கிவிடும். ஆட்டம் நின்று விடும். இதைச் சொல்லுகின்ற கவிஞர் நேரடியாகக் கூறாமல் தன் கற்பனைக் குதிரையை ஓடவிட்டு அதன் ஓசையில் கூறுவார். சலங்கை விதவையாகி விடும். இப்படி ஒரு கற்பனையை இதுவரையில் யாரும் சொல்லியதாகத் தெரியவில்லை. அவள் கண்ணகளில் சோகக் கண்ணீர் ஊற்றெடுத்து விடும். தாமரை போன்ற அவள் கண்கள் வெந்நீரில் நீராடுமாம்.
விலகிப் போனால் எனது சதங்கை
விதவையாகிப் போகுமே.
......
வெந்நீரில் நீராடும் கமலம். (1 - 15)
ஒருத்திக்குத் திருமணம் நிச்சியமாகி விட்டது. மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்? அந்த மகிழ்ச்சியில் கவிஞரின் கற்பனை நம்மையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்து வியப்படைய வைக்கிறது.
தென்னம்பாளை போன்ற இவள் முறுவலில் அவன் கலந்து விடுவான். அங்கே தேன் சிதறும் நேரம் வரும். இதை நினைத்து மகிழ்கின்ற அவள் திருமண நாளைத் தன் விரல்களால் தொட்டுத் தொட்டு எண்ணி பார்க்கிறாள். எத்தனை முறை எண்ணிப் பார்த்தாளோ, பாவம் அவள் பத்து விரலும் தேய்ந்து போகின்றனவாம். ‘அவர் சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்’ என்று கூறிய வள்ளுவன் கூட ஒரு விரல் தேய்ந்ததாகத் தான் கூறுவான். நம் கவிஞனின் கற்பனை பத்து விரல்களையும் தேய வைக்கிறது. அப்படியும் இடைவெளி நீண்டதாக அவளுக்குத் தெரிகிறது. விரகம் விரிவடைகிறது. நெஞ்சின் வெப்பம் பெருமூச்சாக வெளிப்படுகிறது. அவளின் ஈரச் சேலை கூட அந்த வெப்பத்தில் காய்ந்து போகிறது.
தென்னம் பாளையில்
தேன்சிதறும் வேளைவரும்
மாலை சூடும் தேதி எண்ணிப்
பத்துவிரலும் தேயும் - இவ
இழுத்துவிடும் பெருமூச்சில்
ஈரச் வேலை காயும். (1 - 23)
திருமண நாள் நெருங்கிவிட்டது. திருமண வீட்டை அலங்கரிக்க வேண்டுமே. ஆணைகள் பறக்கின்றன. வெங்கைக் கற்கொடியினால் தான் கோலம் இடுவார்கள். ஆனால் இங்கே வைரப் பொடியினால் கோலமிட வேண்டும். ‘வாசலெல்லாம் விண் மீன்கள் பரவி விட்டதாக வல்லவா தோன்றும்’. இனி தோரணம் கட்ட வேண்டுமே. இலைகளும் மலர்களும் வாடிவிடும். எனவே வானவில்லையே எடுத்துத் தோரணமாக ஆங்காங்கே ஆடவிட வேண்டுமாம். பந்தவிட வேண்டுமே. தென்னங் கீற்றுகளாலா? இல்லையில்லை. மின்னலாகிய கீற்றுகளால் பந்தவிட வேண்டும். வெள்ளியினால் ஆன பூக்களைப் பறித்து வீதிகளிலெல்லாம் அலங்காரமாகச் சிதறிவிட வேண்டும்.
வைரப்பொடி யெடுத்து
வாசலெல்லாம் கோலமிடு
வான வில்லெடுத்துத்
தோரணமாய் ஆடவிடு
மின்னல் கீத்தெடுத்து
மேகம் வரைப் பந்தவிடு
வெள்ளிப் பூப் பறிச்சு
வீதியெல்லாம் சிந்திவிடு. (1 - 23)
இக்கற்பனை பெண் வீட்டாரின் வளம் பொருந்திய வாழ்க்கையை நமக்கு விளக்குகிறது. அதே நேரத்தில் நாடோடிப் பாடல்களில் நாம் கண்டு சுவைக்கும் கற்பனையிலும் நம் கவிஞரின் கற்பனை விண்முட்டி நிற்கிறது என்பதே உண்மை.
வாழ்வு சிதைந்து போன ஒருத்தி, அவள் அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது. அவள் கண்கள் ஏழையாகி விட்டன. பணத்தாலே ஏழை பணக்காரன் என அளவிடுவது உண்டு. கண்ணீராலே ஏழை பணக்காரி என்று அளவிட்டுப் பாடிய பாடல் ஒரு புதுமையான கற்பனை.
நாளும் அழுது தீர்த்தாலே
கண்கள் ஏழை ஆனதே. (1 - 32)
அந்தக் காதலன் மலருக்கு மலர் தாவும் வண்டு அல்ல. காதலித்தவனைக் கைப்பிடித்து இனிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று கருதுபவன். எனவே தன் இல்லற வாழ்க்கையைக் கற்பனையிலேயே நடத்துகிறான். அவனுக்குப் பிறக்கப் போகும் குழந்தை கதிரவனைப் போல் ஒளி வீசுகிறது. அக்குழந்தைக்குத் தொட்டில் கட்டித் தாலாட்ட வேண்டுமே. வெறும் கயிறும் துணியும் கொண்டா தொட்டில் கட்டுவது? இல்லை. இல்லை. மின்னலாகிய கயிற்றை எடுத்து மேகமாகிய துணியால் தொட்டில் கட்ட வேண்டுமாம். துணியால் தொட்டில் கட்டினால் உடல் நோகுமென்றுதானோ மேகத்தால் தொட்டில் கட்ட விழைகிறான்.
மின்னலிலே ஒரு கயிறு எடு
மேகங்களால் ஒரு தூளியிடு
கதிரோ தளிரோ
இளம் மகனது திருமுகம். (1 - 58)
கற்பனையிலும் கவிஞர் ஆண் குழந்தைக்காகத் தான் கனவு காண்கிறார் என்பதும் நமக்கு விளங்ககிறது.
வானத்தைப் பார்த்துச் சேதி அறியும் அக்கவிஞர் இரவெல்லாம் வானத்தைப் பார்த்து மகிழ்ந்தவன். விடிந்த போது விண்மீன்ளைக் காணாது திகைத்தான். அவை எல்லாம் எங்கே போயின? அதோ, கண்டுபிடித்து விட்டான். அந்த விண்மீன்களெல்லாம் காலையில் புல்வெளியில் பனித்தளிகளாய் வீழ்ந்து கிடக்கின்றன. அவற்றை அள்ளிச் செல்வோமா?
இரவிலே நட்சித்திரம்
இருந்ததே எங்கே? - பனித்
துளிகளாய்ப் புல்வெளியில்
விழுந்ததோ இங்கே. (1 - 203)
பொருள் தேடிப் பிரிகிறான் கணவன். அவன் மனைவியும் மகளும் கலங்கினாலும் அவன் கலங்கிடவில்லை. கற்பனையிலே மிதக்கிறான். ‘ஏன் கலங்குகிறீர்கள்? அழகுமிக்க அந்த நிலவை நான் விலை பேசி வாங்கி வரப் போகிறேன். வான் வெளியில் கொட்டி வைத்துள்ள விண்மீன்களை எல்லாம் கொண்டு வந்து தருவேன். திரை கடல் ஓடித் திரவியம் தேடுவதோடு, அந்தக் கடலுக்குள் ஒரு வீடு கட்டித் தருவேன்’ என்று ஆறுதல் கற்பனைகளை அளக்கிறான்.
வண்ண நிலவு என்ன விலை விலை என்று
வாங்கி வருவேன் கண்ணே கண்ணே
வானவெளியில் நட்டு வைத்த நட்சித்திரம்
கொட்டித் தருவேன் பெண்ணே பெண்ணே
திரைகடல் பலஓடித் திரவியம் எடுப்பேன்
கடலுக்குள் ஒரு வீடு கட்டித் தர நினைப்பேன்.
(2 - 104)
தங்கை பற்றி அண்ணன் ஒருவன் சூடம்பரக் கனவு காண்கிறான். அவன் பாசம் அளவற்றது. அவளுக்குத் திருமண நாள் என ஒன்று வரத்தானே வேண்டும். அண்ணன் அவளை ஊர்வலம் அழைத்தச் செல்லத் தங்கத்தினால் ஆன தேர் கொண்டு வரப் போகிறானாம். இந்தப் பூவுலகையே அவளுக்குச் சீதனமாகக் கொடுக்கப் போகிறோம். அவள் செல்ல வாகனம் ஒன்று வேண்டுமே. அதோ வெண்ணிலா இருக்கிறதே. அதுவே அவளுக்கு வாகனம்.
தங்கத்தில் ஒரு தேர் வரும்
தங்கமே கண்ணில் நீர் வரும்
பூமியே உந்தன் சீதனம்
வெண்ணிலா உந்தன் வாகனம். (2 - 152)
ஆசைக் கற்பனைக்கும் பாசக் கற்பனைக்கம் எவ்வளவு வேறுபாடு.
மின்னலில் கீற்றெடத்து மேகம் வரைப்பந்தவிடச் சொன்ன கவிஞர் தாயாக மாறியபோது வானவில்லில் மின்னல்களினால் தொட்டில் கட்டக் கற்பனை செய்கிறார். பூப்போன்ற அடிவயிற்றில் சின்னச் சின்னத் தேரோட்டம் நடைபெறுவதை உணர்கிறார். சின்னச் சின்னக் கைகால்களும் பூப் போன்ற தலையும் ஆங்காங்கே மென்மையாக முட்டி மோதுவதைத் தான் சின்னச் சின்னத் தேரோட்டமாக உணர்கிறார்.
வானவில்லிலே மின்னலிகளினால்
தொட்டில் கட்ட மாட்டேனா - இந்தப்
பூவுக்குள்ளே போராட்டம் - அடிவயிற்றில்
சின்னச் சின்னத் தேரோட்டம். (2 - 163)
பிறந்த குழந்தை ஆண் குழந்தை தான். புலிக்குப் பிறந்தாலும் பூப்போல வளர்கிறாள். அவனைத் தாலாட்டும் தாய் உள்ளம் மென்மையாகத் தாலாட்டிக் கனவுக்கும் வலிக்காமல் கண்ணுறங்கச் சொல்கிறாள். அந்தத் தாயின் உள்ளம் தான் எத்துனை மென்மையானது.
புலிக்குப் பிறந்தவனே
பூப்போல வளர்ந்தவனே
கனவுக்கும் வலிக்காமல்
கண்ணுறங்கு பொன்மகனே. (2 - 197)
கற்பனை கவிஞர்களின் தனிச் சொத்து. எனினும் நீர் நிலத்துக்கு ஏற்றார்போல் தன் தன்மையில் மாறுபட்டு நிற்பது போல கவிஞர் தம் மனவளர்ச்சிக்கும் பொருளறிவுக்கும் ஏற்றார் போல் கற்பனை வளம் மாறுபடும். நம் கவிஞர் வைரமுத்து அவர்களின் கற்பனை அவரது மன வளத்தையும், அங்கு பரவிக் கிடக்கும் அன்பு, பாசம், தாய்மை ஆகிய தெய்வீக உணர்வுகளை நமக்குச் சுவைப்பட ஊட்டுகின்றன.

Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 30. அலர், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -15. சோகம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 16. அரசியல், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு 32. பிற காவியங்கள், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum