தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு- 8. உருவகம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Go down

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு- 8. உருவகம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு- 8. உருவகம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Wed Feb 16, 2011 11:27 am

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு- 8. உருவகம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com

8. உருவகம்
உவமையை மாற்றிச் சொன்னால் உருவகம். உவமையில் உவமை முன்னும் பொருள் பின்னுமாக வரும். அதை மாற்றி பொருள் முன்னும் உவமை பின்னுமாகச் சொன்னால் உருவகம் எனப்படும். உவமையில் உவமையும் பொருளுமாக இருவேறு பொருள்கள் கூறப்படும். உருவகத்தில் இரு பொருள்கள் ஒன்றாகவே இருக்குமாறு கூறப்படும்.
உவமையைப் போலவே உருவகமும் கவிஞர்களின் திறமைக்கேற்பவே அமையும். போலவே உருவகங்களையும் மிகுதியாகக் கையாண்டிருக்கிறார்.
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும். (1 - 1)
வானத்தைக் கவிஞர் இரவின் வாசல் என உருவகிக்கிறார்.
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்.
(1 -2)
தாவணி விசிறிகள் வீசுகிறேன். (1 -2)
முன்னதில் மோகம் தீயாகவும் பின்னதில் தாவணி விசிறியாகவும் உருவகிக்கப்படுகின்றன.
தினம் கனவு
எனதுணவு (1 - 5)
கனவு உணவாக உருவகிக்கப்படுகிறது.
நான் பெத்த தங்கரதம்
இடுப்பிலுள்ள நந்தவனம். (1 - 6)
குழந்தை தங்கரதமாகவும் நந்தவனமாகவும் உருவகிக்கப்படுகிறது.
விண்வெளியில் விதைத்தது யார்
நவமணிகள். (1 - 10)
விண்மீன்கள் நவமணிகளாக உருவகம் செய்யப்பட்டன.
அலையில் மிதக்கும் மாதுளை (1 - 17)
ஒரு விளக்கு வழித்துப் பார்க்குமே (1 - 17)
முன்னதில் நதியில் குளிக்கும் பெண் மாதுளையாகவும் பின்னதில் கண் விளக்காகவும் உருவகிக்கப்படுகின்றன.
இசை எனும் மழை வரும் இனி எந்தன் மயில்
வரும். (1 - 20)
இசை மழையாகவும் காதலி மயிலாகவும் உருவகம் செய்யப்படுகின்றன.
ஆசை நாகம் வந்து தீண்டுதே (1 - 27)
ஆசை நாகமாக உருவகிக்கப்படுகின்றன.
காதலெனும் தேன் குடங்கள் கண்ணில் சுமப்பேன். (1 - 29)
காதல் உணர்வு தேன் குடங்களாயின.
வெள்ளைப்புறா ஒன்று போனது (1 - 32)
வெள்ளைடை அணிந்த ஒருத்தி வெள்ளை புறாவாக உருவகம் செய்யப்படுகிறாள்.
பத்துமாதப் பூ வரட்டும் (1 - 36)
பிறக்கும் குழந்தை பத்துமாதப் பூவாக உருவகம் செய்யப்படுகிறது.
ஒரு வாய் அமுதம் மெதுவாய்ப் பருகியபடி
(1 - 39)
வாய்முத்தம் அமுதமாக உருவகிக்கப்படுகிறது.
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும். (1 - 41)
இருபது நலவுகளும் நகங்களாக உருவகிக்கப்படுகின்றன.
உன் ஆடை மிதிக்கின்ற பாவாடை (1 - 42)
ஆடை பாலின் மீது மிதக்கும் பாலாடையாக உருவகம் செய்யப்படுகிறது.
குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே. (1 - 50)
குழல் அலையாகவும் இரவாகவும் உருவகம் செய்யப்படுகிறது.
பருவநெலம் வெளஞ்சிருக்கு (1 - 56)
பருவப் பெண் நிலமாகவும் அவள் பக்குவம் விளைச்சலாகவும் உருவகம் செய்யப்பட்டுள்ளன.
விரக வேதனையில்
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை. (1 - 59)
காதல் கொண்ட ஒரு பருவப் பெண் தாமரையாகவும் மாதுளையாகவும் உருவகமாகிறாள்.
இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி (1 - 65)
விரக வேதனையில் ஏமாற்றம் கலக்கின்ற ஒருவன் தேய்ந்துவரும் நாள் காட்டியாக உருவகம் செய்யப்படுகிறான்.
--அவன
இடுப்பொழஞ்ச நாத்து. (1 - 69)
வீணாகிப் போன பெண் ஒடிந்த நாற்றாக உருவகம் செய்யப்படுகிறாள்.
காமன் தோட்டம் பூத்த நேரம்
நாணம் வந்து வேலிபோடும். (1 - 74)
காதல் உணர்வு கொண்ட ஒருத்தி பூத்த பூந்தோட்டமாகவும் நாணம் வேலியாகவும் உருவகிக்கப்படுகின்றன.
இவள் விழிகள்
மலர் வலைகள்
.....
தாவும் கிளிக்குத்
தாவணி சிறகு ஆனது.
.....
கனவலையில்
இமை நனையும். (1 - 77)
விழிகள் மலர் வலைகளாகவும் தாவும் பெண் கிளியாகவும் தாவணி சிறகாகவும் கனவு அலையாகவும் உருவகம் செய்யப்படுகின்றன. அனைத்தும் உருவகம் செய்யப்பட்டதால் இப்பாடலில் முற்றுருவம் அமைந்துள்ளது.
தேனாற்றிலே ஓடங்கள் கூடின. (1 - 79)
காதல் உணர்வு தேனாறாகவும் காதலர் இருவரும் ஓடங்களாகவும் உருவகம் செய்யப்படுகின்றனர்.
அள்ளிவச்ச மல்லிகையே
புள்ளிவச்ச பொன்மயிலே. (1 - 80)
காதலி மல்லிகையாகவும் பொன்மயிலாகவும் உருவகிக்கப்படுகின்றன.
மொட்டு விட்ட முல்லைக்கொடி
மச்சான் தொட்ட மஞ்சக் கிளி
.....
அல்லித்தண்டு என்னைக் கண்டு
.....
ரோசாப் பூவு மஞ்சப் பூசும்
.....
உனக்கும் ஒரு கிளி வந்து பொறக்கும். (1 - 82)
பருவமடைந்த பெண் முல்லைக் கொடியாகவும் மஞ்சட்கிளையாகவும் அல்லித்தண்டாகவும் ரோசாப்பூவாகவும் பிறக்கப் போகும் குழந்தை கிளியாகவும் உருவகம் செய்யப்படுகின்றன.
மழைப் பூக்களே
.....
மலர் அம்புகள்
.....
தங்கத் தாமரை
.....
புட்டுப் பூங்கொடி
.....
மலர்க்கணையாகாதோ?
.....
மதுக்கடம் சாயாதோ?
மழைத் துளிகள் பூக்களாகவும் காதல் உணர்வு மலர் அம்புகளாகவும் காதலி தங்கத்தாமரையாகவும் பட்டுப்பூங்கொடியாகவும் மீண்டும் காதல் உணர்வு மலர்க்கணையாகவும் - இன்பம் மதுக்குடமாகவும் உருவகிக்கப்படுகின்றன.
தேவி கூந்தலோ
பிருந்தாவனம். (1 - 87)
கூந்தல் மணம் வீசும் பிருந்தாவனமாகிறது.
தளும்பாதிரு தேன் கொடமே. (1 - 88)
காதலி தேன் குடமாகிறாள்.
இவள் வேர்வைத் துளிகூடச் செந்தேனே. (1 - 90)
வேர்வைத் துளி செந்தேனாகிறது.
இது ஒருவேடந்தாங்கல்
கலைகிறோம் இன்று நாங்கள். (1 - 113)
கல்லூரி வேந்தாங்கலாக உருவகிக்கப்படுகிறது.
புகுந்துவிட்டது புலிப்படை
.....
-- நாம்
கந்தகம் சுமந்து காற்று. (1 - 126)
எழுச்சி கொண்ட மக்கள் புலிப்படையாகவும் கந்தகம் சுமந்த ஆபத்தான காற்றாகவும் உருவகிக்கப்படுகின்றன.
உள்ளங்கைத் தேனே
உன்மேனி தானே
நான் ஊதும் புல்லாங்குழல். (1 - 148)
காதலி உள்ளகைத் தேனாகவும் அவள் உடல் காதலன் ஊதி இசை எழுப்புகின்ற புல்லாங்குழலாகவும் உருவகிக்கப்படுகின்றன.
என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய். (1 - 152)
காதல் தேராக உருவகிக்கப்படுகிறத.
பொன்மானே செந்தேனே
வந்தேனே. (1 - 154)
காதலி பொன்மானாகவும் செந்தேனாகவும் உருவகிக்கப்படுகிறாள்.
கைவீசும் தாமரை
கல்யாண தேவதை (1 - 164)
காதலி தாமரையாகவும் தேவதையாகவும் உருவகிக்கப்படுகிறாள்.
உயிர்ப்பூவெடுத்து - ஒரு
மாலையிட்டேன்.
.....
பாறை ஒன்றின் மேலே - ஒரு
பூவாய் முளைத்தாயே. (1 - 189)
முன்னதில் காதல் உயிர்ப்பூவாகவும் பின்னதில் காதலி பூவாகவும் அவன் மனம் பாறையாகவும் உருவகம் செய்யப்படுகின்றன.
தாண்ட முடிந்தால் தாண்டு - இது உன்
சீதை கிழிந்த கோடு தான். (1 - 190)
அந்தப் பெண் சீதையாகவும் அவள் ஆணை சீதை இட்ட கோடாகவும் உருவகம் செய்யப்படுள்ளன.
குளிக்குது ரோசா நாத்து
.....
அடி செல்வாழையே
.....
வா முல்லையே
.....
இளம் பூஞ்சோலையே
.....
உன்மேனி நான் பார்க்கும்
கண்ணாடி ஆகாதோ? (1 - 191)
காதலி ரோசா நாற்றாகவும் செவ்வாழையாகவும் முல்லையாகவும் இளம் பூஞ்சோலையாகவும் அவள் மேனி முகம் பார்க்கும் கண்ணாடியாகவும் உருவகம் செய்யப்படுகின்றன.
அடைகாக்க சேவலும் வந்தது வீட்டுக்குள்ள.
(1 - 192)
காதலன் சேவலாக உருவகம் செய்யப்படுகிறான்.
போர்வைச் சிறையை விட்டு
வெளியே வா. வா. (1 - 208)
போர்வை சிறையாக உருவகம் செய்யப்படுகின்றது.
பூவு ஒண்ணு கண்ணடிச்சா
வண்டு வரும் பின்னால (2 - 1)
பெண் பூவாகவும் ஆண் வண்டாகவும் உருவகம் செய்யப்பட்டுள்ளன.
நானொரு சிந்து
காவடிச் சிந்து (2 - 14)
ஒருத்தி தன்னைக் காவடிச் சிந்தாக உருவகிக்கிறாள்.
மோகம் என்னும் தீயில் என் மனம்
.....
மோகம் என்னும் மாயப் பேயை (2 - 15)
மோகம் தீயாகவும் மாயப் பேயாகவும் உருவகம் வெய்யப்பட்டுள்ளன.
அடுத்த வீட்டு மாடிக்கு
ஆரியபட்டா அனுப்பட்டா. (2 - 21)
மடித்து வீசப்படுகின்ற கடிதம் ஆரியபட்டாவாக உருவகம் செய்யப்படுகிறது.
-- இனி
வயிற்றுக்கு வளர்பிறைதானே? (2 - 28)
வளர்நது வரும் கருப்பம் வளர்பிறையாக உருவகம் செய்யப்படுகிறது.
சேலை கொண்ட சோலை ஒன்று. (2 - 66)
பெண் சோலையாக உருவகிக்கப்படுகிறாள்.
நிலவென்னும் கிண்ணத்தை
நான் கொண்டு வருவேனே (2 - 67)
நிலவு கிண்ணமாக உருவகிக்கப்படுகிறது.
இவ ஆளில்லாம நூ லில்லாம
ஆடும் பட்டமா? (2 - 70)
குழந்தை ஆடும் பட்டமாக உருவகிக்கப்படுகிறது.
தொட்டாச் சிணுங்கி வந்தா குலுங்கி
.....
நான் புடிச்சது புளியங் கொம்பு. (2 - 73)
முன்னதில் பெண் தொட்டாச் சிணுங்கியாகவும் பின்னதில் ஆண் புளியங்கொம்பாகவும் உருவகம் செய்யப்படுகின்றன.
ஏழை முல்லை பெண் பிள்ளை (2 - 83)
பெண் மாப்பிள்ளை ஏழை முல்லையாகிறாள்.
காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன். (2 - 85)
காதலி காதற்கிளியாக உருவகம் செய்யப்படுகிறாள்.
உன் வார்த்தை செந்தேனோ? (2 - 86)
காதலனின் பேச்சு செந்தேனாகிறது.
ஐயம் தீர்ந்து போனதால்
அன்பு நீரை வார்த்தது. (2 - 87)
அன்பு நீராக உருவகம் செய்யப்படுகிறத.
புடவை அணிந்து வந்த பூவே வருக. (2 - 88)
பெண் பூவாக உருவகம் செய்யப்படுகிறாள்.
நந்தவனம் கொலுசு அணிந்து
அசைந்து நடந்ததே. (2 - 94)
காதலி நந்தவனமாக உருவகம் செய்யப்படுகிறாள்.
இதுவிதி வழி போகின்ற ஓடம் - உந்தன்
முகம் கண்டு கரையென்று ஆடும். (2 - 97)
பெண் தன்னை ஓடமாகவும் காதலனைக் கரையாகவும் உருவகம் செய்கிறாள்.
பந்தம் எல்லாம் கானல் நீரோ? (2 - 112)
உறவு கானல் நீராக உருவகிக்கப்படுகிறது.
உந்தன் பாதம்
பூக்கம்போடும் கோயில் (2 - 122) காதலியின் பாதம் கோயிலாக உருவகிக்கப்படுகிறது.
அந்த ஓடை - அது
மண்ணின் மேலாடை
இங்கு ஆடி வரும் கேமம்
அதுதானே பாவாடை (2 - மகிழ்ச்சி)
ஓடை மேலாடையாகவும் மேகம் பாவாடையாகவும் உருவகம் செய்யப்படுகின்றன.
கன்னம் என்ன கன்னம் தங்கப் பாளமா?
கண்கள் என்ன கண்கள் காதல் பாலமா? (2 - 131)
கன்னம் தங்கப் பாளமாகவும் கண்கள் காதற்பாலமாகவும் உருவகிக்கப்படுகின்றன.
தேன் விட்டை தீம்பாலே
நான் உன்னை விடமாட்டேன். (2 - 138)
காதலி தூம்பாலமாக உருவகம் செய்யப்படுகிறாள்.
முத்து ஒண்ணு இப்போது
சிப்பிக்குள்ளே வித்தாகும். (2 - 144)
கருப்பை சிப்பியாகவும் கழந்தை விதையாகவும் உருவகம் செய்யப்படுகின்றன.
இந்தக் காட்டுக்கு நான் மகராணி
அணில் தீண்டிவிடாத கனி. (2 - 154)
பெண் தன்னைக் கனியாகவும் ஆணினை அணிலாகவும் உருவகிக்கிறாள்.
அழகிய பொன் வீணையே. (2 - 157)
பெண் பொன் வீணையாக உருவகிக்கப்படுகிறாள்.
உள்ளத்தால் இவள் ஊமைக் கண்ணகி. (2 - 162)
கணவனை விட்டுப் பிரிந்த பெண் ஊமைக் கண்ணகியாக உருவகம் செய்யப்படுகிறாள்.
நீ ஒரு குங்குமக்குளம்
அதில் நான் குளிக்கலாமா?
நீ பிறக்கும் போதே பிருந்தாவனம்
அதில் பூப்பறிக்கலாமா? (2 - 173)
காதலி குங்குமக் குளமாகவும் பிருந்தாவனமாகவும் உருவகிக்கப்படுகிறாள்.
விழியோரச் சிறுபார்வை போதும் - நான்
விளையாடும் மைதானமாகும்.
இதழோரச் சிரிப்பொன்று போதும் - நான்
இளைப்பாறும் மலர்ப்பந்தகலாகும்.
..... (2 - 176)
பெண்ணின் பார்வை விளையாட்டு மைதானமாகவும் சிரிப்பு மலர்ப்பந்தலாகவும் உருவகம் செய்யப்படுகின்றன.
ஆம் மகளே!
நீ கண் திறந்தால்
அவள் கண் மறைந்தாள்
என் வானத்தில்
விடி வெள்ளி எழுந்தது
வெண்ணிலலவு விழுந்தது. (2 - 179)
பிறந்த பெண் குழந்தையை விடி வெள்ளியாகவும் இறந்த தன் மனைவியை நிலவாகவும் உருவகம் செய்கிறார்.
கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன். (2 - 184)
கன்னிப்பெண் வெண்ணிலாவாக உருவகிக்கப்படுகிறாள்.
கூட்டு வண்டி உள்ளுக்குள்ளே
கூண்டுகிளி வாடுதம்மா (2 - 191)
பெண் கூண்டுக்கிளியாக உருவகம் செய்யப்படுகிறாள்.
உருவகங்கள் பாடற்கருவுக்குச் சுவை கட்டவன. அந்த வகையில் கவிஞர் அவர்கள் பாடலில் சுவையை மிகுதியாகவே அளித்துள்ளார். அச்சவை காதலை, இன்பத்தை, சோகத்தினை, தாய்மையை, தந்தைமையை சுவை மிக்க வருவாக மாற்றிவிட்டது.
(விளக்கம் எழுதினால் மிகவும் பெருகும் எனக் கருதிக் குறிப்புகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன.)




Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -24. வரலாறு, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 9. இயற்கை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -29. ஏழ்மை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 30. அலர், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum