தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 9. இயற்கை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 9. இயற்கை,
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன
drthyagarajan2010@gmail.com
9. இயற்கை
கவிஞர் என்பவன் உருவாக்கப்படுவதில்லை. இயற்கையாகப் பிறவியிலேயே கவிஞனாகத் தோன்ற வேண்டும். ஆகவே தான் கவிஞன் எனப்படுபவனுக்கு இயற்கையோடு நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது. அவன் அவனை அறியாமலேயே இயற்கையைக் கூர்ந்து கவனிக்கிறான். சில நேரங்களில் தன்னை அறியாமலேயே இயற்கையோடு ஒன்றிவிடுகிறான். இதை ஒரு மனநிலை என்று கூற இயலாது. அது ஓர் இயற்கையான நிலை என்று தான் கூற வேண்டும். எனவே கவிஞர் வைரமுத்து அவர்களும் இயற்கையில் ஈடுபாடு கொண்டவர் என்பதில் வியப்பில்லை.
தேன் மணக்கும் தாமரையின் படிந்த வண்டு, தேன் உண்ட மயக்கத்தில் இருக்கும்போதே மாலை நேரமானதால் இயல்பாகத் தாமரையின் இதழ்கள் மூடிக்கொள்ளச் சிறைவண்டு சிறைப்பட்டது. காலையில் கதிரவனைக் கண்ட தாமரை மலர, விடுதலை பெற்ற வண்டு விரைந்தெழுந்து பாடத் தொடங்குகிறது. இத்தகைய இயற்கைக் காட்சியை நக்கீரப் பெருமான் திருமுருக்காற்றுப்படையில் எடுத்துக் காட்டுவது நினைத்து இன்புறத்தக்கது.
அதே போன்று அழகு பொருந்திய காட்சியினை நம் கவிஞரும் கண்டு இன்புற்றவர் போலும். பூவில் வண்டுகள் கூடும்போது அவை கண்களை மூடும் என்பார். அதுமட்டுமில்லாமல் மற்றுமொரு காட்சியையும் காட்டுவார். மலர்கள் மிகுதியாகப் பூத்துள்ள நிலை, அவைகள் மாநாடு கூட்டியிருப்பது போலாம்.
பூவில் வண்டு கூடும் - கண்டு -
பூவும் கண்கள் மூடும்.
பூவினம் மாநாடு போடும். (1 - 14)
பூவோடு வண்டு கூடிய காட்சியைக் கண்டு பிற பூக்களெல்லாம் வெட்கத்தால் கண்களை மூடிக்கொண்டன என்றும் பொருள் கொள்ளுமாறு பாடியிருக்கிறார்.
காலையில் தென்றல் வீசுகிறது. ஒரு இராகத்தைப் பாடிக்கொண்டே வீசுகிறது. அந்தச் சூழ்நிலையில் நாமும் தென்றலோடு சேர்ந்து பறக்கத் தோன்றும். சிறகுகள் வேண்டுமே. பனித்துளியின் கண்ணாடிக் காட்சியிலே மலர்கள் தம் பிம்பங்கள் தெரிகின்றன. இல்லை, இல்லை அம்மலர்கள் அப்பனிக் கண்ணாடியில் தங்கள் முகங்களின் அழகைப் பார்த்து மகிழ்கின்றன. வானம் தினந்தோறும் புதுப்புதுக் கோலம் தீட்டுகிறது. இந்த இன்பங்களை மனிதன் அறிய மாட்டான். இயணு கையின் மொழி அவனுக்குப் புரியவே இல்லை. இங்கு இன்பம் கொட்டிக் கிடக்கிறத. இத்த்தான் ‘எத்தனை இன்பம் பார்த்தாய்’ என்று பாரதி இறைவனைப் போற்றுவானோ. அவர் வழிவந்த நம் கவிஞரும் அதைத்தான் சொன்னாரோ,
காலைத் தென்றல்
பாடிவரும்
ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும்
சிறகுகள் வேண்டும்
.....
மலர்கள் பனித்துளியில்
முகங்கள் பார்க்கும்
தினந்தொறும் புதுக்கோலம்
எழுதும் வானம்
.....
காலையின் பூதுமைகள்
அறியவே இல்லை
இயற்கையின் பாஷைகள்
புரியவே இல்லை.
இங்கு இன்பம் கொள்ளை கொள்ளை
நெஞ்சில் ஒரே பூமழை. (1 - 203)
ஓடம் கூட ஏப்பம் விடுகிறதாமே. அதன் உருண்டோடும் ஓசை கவிஞருக்கு அப்படித்தான் கேட்கிறது. மைனாக்கருக்கென்று ஒரு மொழி உண்டு போலும். இந்த இயற்கைக் காட்சிகள் பிருந்தாவனமே.
ஏப்பம் விடும் ஓடையை
இப்போது தான் பார்க்கிறேன்
மைனாக்களின் பாஷையை
இப்போது தான் கேட்கிறேன்
பிருந்தாவனம் இங்கே பார்த்தேனே. (2 - 20)
இயற்கைச் சூழ்நிலை அமைந்த பூமி புத்தம் புதியாகக் காட்சி தருகிறது. மலர்ந்துள்ள பூக்கள், மணம் வீசும் மலர்கள். அவைளுக்குள்ளேயே வாசம் செய்யப் போகிறேன் என்று பாடுகிறார். மலரின் மென்மை - புதுமை - மணம் இவையெல்லாம் அம்மலரிலேயே வாழ வேண்டும் என்னும் எண்ணத்தைக் கவிஞருக்கு ஊட்டிவிட்டன.
ஆகா இந்த பூமி
புத்தம் புதுசு
இனி வாசம் வீசும் பூவின் உள்ளே
வாசம் செய்வேனே. (2 - 20)
இவ்வாறு ஆசைப்பட்ட கவிஞர் பூவனங்கள் எங்கிலும் பூசை செய்யப் புறப்பட்டுவிட்டார். சோலையில் அவரும் ஒரு பூவாவார்.
பூவனங்கள் எங்கிலும்
பூஜை செய்யப் போகிறேன்
என் சோலையில் நானும் பூவாவேன். (2 - 20)
மழை என்பது ஒரு அதிசயமான இயற்கையின் விளைவு தான். வான்மேகங்கள் பூக்களைத் தூவுவது போல மழைத்துளிகளைத் தூவுகிறத. உடல் மீது படும்போது இன்பமாகத் தான் வலி எடுகிறது.
வான் மேகம்
பூப் பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும்
இன்பமாக நோகும். (2 - 25)
வானத்தில் நீரால் தோரணங்கள் அமைத்துள்ளார்களா? மழை நீர் கவிஞருக்கத் தோரணமாகத்தான் தொன்றுகிறது.
வானிலே வானிலே
நீரின் தோரணங்களோ (2 - 25)
பூமியின் மீது விழுகின்ற சாரல் எல்லாம் கவியரங்கம் நடத்தும் போலும். இல்லை இல்லை, ஜலதரங்கம் நடத்துகின்றவோ?
பூமி எங்கும் கவியரங்கம்
சாரல்பாடும் ஜலதரங்கம் (2 - 25)
துள்ளித் துள்ளி நடைபோட்டுச் செல்லும் நதியொன்று கவிஞரிடத்தில் சொல்லிக் கொள்ளாமல் போகிறது. கவிஞருக்கு ஏக்கம் தான்.
துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக்கொண்டு போனால் என்ன? (2 - 62)
‘இயற்கையை ஆராதிக்க முடியாத சமூகம் இன்னும் வாழ்க்கைக்குப் பக்கத்தில் வரவே இல்லை என்று அர்த்தம்’ என்பார் கவிஞர். எனவே அவர் இயற்கையை ஆராதிக்கத் தெரிந்தவர். ஒவ்வொரு விடியலும் அவருக்குப் புதுப்புதுச் செய்திகளை வழங்குகின்றன. கதிரவன் எழும்போது உவகையெல்லாம் தங்கம் கொண்டு மெழுகி விடுகிறதே.
ஆகா உலகம் அழகியது
தங்கம் கொண்டு மெழுகியது. (2 - 64)
இயற்கையில் எல்லாத் தத்துவங்களும் அடங்கிக் கிடக்கின்றன. இயற்கைதானே அனைத்துக்கும் இன்பம் இங்கே கொட்டிக் கிடக்கிறதே. காலைச் சூரியன் உலகத்துக்குத் தங்கத்தைப் பூசுகிறதென்றால் மாலைச் சூரியன் மஞ்சள் பூசுகிறதே. இந்த இயற்கை அழகில், இன்பத்தில் தோயா மனித மனம் இல்லையே. பூமியும் தென்றலும் தன் அழகில் என்றைக்கும் குறைவதில்லையே இயற்கை எழில் பொங்கச் சிரிக்கிறதே.
இயற்கைக்கு மேலே
தத்துவங்கள் இல்லை
இன்பம் இங்கு கொள்ள
என்ன இங்கு இல்லை?
அந்திச் சூரியன் மஞ்சள் பூசுதே - அட
மனிதனுக்கு இதில் ருசி இல்லையே
அழகில் கரையும் மனமே இல்லையே
பூமியும் தென்றலும் ஓய்வதில்லையே
இயற்கையெல்லாம் சிரிக்கிறதே.
இயற்கையில் தோயாத மனித மனங்களை எண்ணிக் கவிஞர் வேதனைப்படுவதும் தெரிகிறது.
துள்ளிச் செல்கின்ற ஓடையின் ஓசையெல்லாம் விடுகதை போடுவது போலவும் மெல்ல வரும் தென்றல் அதற்கு விடை சொல்லிப் போவது போலவும் தெரிகிறது. இயற்கையில் நாம் காணும் ஒவ்வொன்றும் நமக்குப் பாடல்களைக் கற்பித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு சிறு பனித்துளியில் உலகமெல்லாம் அடங்கியிருக்கும் விந்தை. இது அழகின் சுரங்கம் அல்லவா. ஆனால் இங்கே வாழும் வாழ்க்கையில் ஆழம் இல்லையே. ஏன்? கவிஞரின் மனம் வேதனைப்படுகிறது.
துள்ளிச் செல்லும் ஓடை
விடுகதை போடும்
மெல்ல வரும் தென்றல்
விடைசொல்லிப் போகும்.
பார்க்கும் யாவுமே பள்ளிக்கூடமா? ஒரு
பனித்துளியில் - இந்த ஜெயம் அடங்கும்
அடடா உலகம் அழகின் சுரங்கம்
வாழும் வாழ்வின் ஆழம் இல்லையே. (2 - 64)
மனிதன் அமைதியான வாழ்க்கை வழவேண்டுமானால் அவன் இயற்கையில் மனம் பறி கொடுத்தால் தான் இயலும் என்பது கவிஞரின் முடிவு.
ஆற்று நீரில் அயிரை மீன்கள் இருக்கும். ஆற்றில் குளிக்கும்போது அம்மீன்கள் குளிப்போரைக் கடிப்பது இயற்கை. ஆற்று நீரில் குளிக்கும் சுகத்தில் அயிரை மீன்களை கடிக்கும் குறு குறுப்பும் அனுபவப்பட்டவர்களுக்கே தெரியும். அதை கவிஞர் காட்டுகிறார்.
ஆத்து நீரில் குளிக்கும்போதும்
ஆயிர மீனு கடிக்கும்போதும் (2 - 68)
கிராமியச் சூழலை அனுபவித்த கவிஞர் தென்றலோடும் ஓடை நீரோடும் நெருங்கியே உறவாடியிருக்கிறார் போலும்.
எனவே தான் தென்றல் பாட்டெழுதுவதாகவும் வண்டு அதற்கு இசை அமைப்பதாகவும் ஊடைகள் தாளஞ்சொல்லுவதாகவும் உணர்கிறார்.
தென்றல் ஒரு பாட்டுக்கட்டும்
வண்டு வந்து மெட்டுக்கட்டும்
ஓடையெல்லாம் தாளஞ்சொல்லும் - அதக்
கேட்டுக்கிட்டே காலஞ்செல்லும். (2 - 81)
இத்தகைய இயற்கைச் சூழலில் மன அமைதிக்குக் குறைவிருக்காது.
இப்பாடல் வரிகளை நன்கு கவனித்தால் மற்றுமொரு உண்மை வெளிப்படும். தென்றல் பாட்டுக் கட்டிய பின் தான் வண்டு வந்து மெட்டுக் கட்டுகிறது. ஓடைகள் தாளத்தை உடன் வழங்குகிறது. ஆனால் இன்றைய சினிமா இசையமைப்பாளர்கள் இசைக் குறிப்புகளை முதலில் அமைத்து அதற்கேற்பப் பாடல் எழுதச் சொல்லுவார்கள் -- இன்றைய கட்டடங்கள் கான்க்ரீட் தூண்களை அமைத்து அதற்கு இடைப்பட்ட பகுதியைக் கற்கள் அமைத்து மறைப்பது போல, அது இயற்கைக்கு மாறுபட்டது, பயனற்றது; என்று கவிஞர் கருதுகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
கிழக்கு வெளுப்பதிலே கவிஞர் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தவர் போலும்.
கிழக்கு வெளுத்திருச்சு
கீழ்வானம் செவந்திருச்சு
பொழுது விடிச்சிருச்சு
பூலெவ்வாம் மலர்ந்திருச்சு. (2 - 82)
தென்னந்தோப்பு கண்ணுக்கு மட்டுமல்ல; கருத்துக்கும் இன்பம் அளிப்பது. பாரதி கூடப் பத்துப்பண்ணிரெண்டு தென்னை மரம் கீற்றும் இள நீருமாய் நிறைந்திருக்க வேண்டும் என்றாரே. நம் கவிஞரும் அப்படித்தான் உள்ளம் பறி கொடுத்தவரோ? தென்னை இளங்கீற்றும் தென்றற் காற்றும் இணைந்து பாடும் ஓசையைக் கும்மியடிப்பதாகவே உணர்ந்து மகிழ்கிறார்.
தென்னையிளங் கீத்தும் தெக்கத்திக் காத்தும்
குலவிக் கொஞ்சிக்கிட்டும்
கும்மியடிக்குதம்மா. (2 - 99)
மேகத்தின் நிகழ் பூக்களின் மீது படிந்தபோது அவைகளுக்குப் பொன்னாடை போர்த்துவது போலுள்ளது. காலை வெய்யில் ஏறும்போது ஒடைகள் எல்லாம் பொன்னோடையாகக் காட்சியளிக்கிறது.
மேகம் வந்துபோர்த்துவதென்ன
பூக்களுக்கெல்லாம் பொன்னாடையா
காலை நேரம் வெய்யில் ஏறும்
ஒடைகள் எல்லாம் பொன்னோடையா? (2 - 113)
ஆற்றின் மணல் மேடுகள், அவற்றில் அழகு கொஞ்சம் கோடுகள் அமைந்திருக்கும். அதன் அருகே கோயில், தென்னந்தோப்பு, சோலைகள் இவையெல்லாம் இயற்கையும் கோயிலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றல்லவா தெரிகிறது. பழந்தமிழகத்தில் ‘கா’வில் (சோலையில்) இறைவனை வைத்து வணங்கும் வழக்கமிருந்துது என்பதை அறிகிறோம். ஆரியங்காவு, அச்சங்காவு போன்ற பெயர்கள் எல்லாம் இந்த அடிப்படையில் அமைந்தவை தாம். கவிஞர் பாடலும் அதையே நமக்குச் சுட்டுகின்றது.
ஆற்று மணல் மேடுகளே
அதனருகே ஆவயமே
தென்னை இளங்தோப்புகளே
தேன் கொடுத்த சோலைகளே. (2 - 191)
இயற்கையை அனுபவிக்கத் தெரியாத மனிதப் பிறவி, மனித இனத்தோடு சேர்க்கப்பட முடியாதது. இதையே கவிஞர் பாடல்களில் இயற்கை பற்றிய கருத்து நமக்குக் கற்றுத் தருகிறது. இயற்கையோடு ஒன்றி வாழுங்கள். மனிதராக மாறுங்கள்.

Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -29. ஏழ்மை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 30. அலர், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -15. சோகம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 16. அரசியல், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum