தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
யாரும் யாராகவும் ! நூல் ஆசிரியர் ஏர்வாடி எஸ் . ராதாகிருஷ்ணன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
2 posters
Page 1 of 1
யாரும் யாராகவும் ! நூல் ஆசிரியர் ஏர்வாடி எஸ் . ராதாகிருஷ்ணன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
யாரும் யாராகவும் ...
நூல் ஆசிரியர் புரட்சிக் கவிஞர் விருதாளர் ஏர்வாடி எஸ் . ராதாகிருஷ்ணன் ervadiar@yahoo.co.in
விலை ரூபாய் 70 கவிதை உறவு 420E .மலர்க் காலனி ,அண்ணா நகர் மேற்கு ,சென்னை .40
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நூல் ஆசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் கலைமாமணி விருது பெற்றவர் .அவர்கள் கவிதை உறவு என்ற மாத இதழை 25 வருடங்களுக்கு மேலாக தொய்வின்றி நடத்தி
வருபவர் . கணினி உலகில் இன்று மாத இதழை நடத்தி வருவதே பெரிய சாதனை தான் .கவிதை உறவு இதழின் 7ஆம் பக்கத்தில்
எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .பல்வேறு இதழ்களிலும்
பிரசுரமாகி உள்ளது .கவிஞர் கல்யாண்ஜி அவர்களின்அணிந்துரை நூலிற்கு மேலும்
அழகு சேர்ப்பதாக உள்ளது .நூல் ஆசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் வழங்கப் பட்ட புரட்சிக் கவிஞர் விருதைப் பெற்றவர் .பாரத மாநில வங்கியில் அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர் .இலக்கியத்தை, கவிதையை மூச்சாகக் கொண்டு வாழ்பவர் .கவிஞர் என்பதைத் தாண்டி
சிறந்த மனிதர் .பழகுவதற்கு இனிமையானவர் .மென்மையானவர் ,இவர் சினம் கொண்டு
நான் பார்த்ததே இல்லை .கவிதை மட்டுமல்ல கட்டுரை ,கதை எழுதும் பன்முக ஆற்றல்
பெற்றவர் .மிகச் சிறப்பாக நூல் விமர்சனம் கவிதை உறவு இதழில் எழுதி வருபவர்
.உலகில் பிறந்த மனிதர்கள் அனைவருக்கும் பிறந்த மண் பற்று இருக்க
வேண்டும் .கலைமாமணி எஸ் ராதா கிருஷ்ணன் அவர்கள் தான் பிறந்த ஊரான ஏர்வாடி
என்பதை தன் பெயரோடு இணைத்துக் கொண்டவர் .இவரை பலருக்கு எஸ் . ராதா
கிருஷ்ணன் என்றால் தெரியாது ஆனால் ஏர்வாடியார் என்றால் எலோருக்கும்
தெரியும் .
,
கவிதை வாழ்க்கை !
எழுதுகின்ற திறனெல்லாம்
எவருக்குமிங்கே வரக்கூடும்
எழுதுகிற தகுதிமட்டும்
இருப்பவர்கள் மிகக்குறைவு !
சிலர் நகைச்சுவையாக சொல்வதுண்டு மக்கள் தொகையை விட கவிஞர்கள் எண்ணிக்கை
அதிகம் என்று .இன்று பலர் முற்போக்காகக் கவிதை எழுதுகின்றனர் எத்தனைபேர்
எழுதியபடி வாழ்கின்றனர் .மகாகவி பாரதி குறிப்பிட்டதுப் போல கவிதை
எழுதுவோர் கவிஞர் அன்று.
கவிதையாக வாழ்பவரே கவிஞர் என்ற கருத்தை வழி மொழிவதுப் போன்ற கவிதை !பாராட்டுக்கள் .
கவிதை சிலருக்கு !
கவிதை பலருக்கு
விதையாக இருக்கிறது
விளைவிக்கிறார்கள் .
கவிதை சிலருக்குதான்
கவிதையாக இருக்கிறது
காலத்தை வெல்கிறார்கள் .
எர்வாடியார் எழுதியது உண்மைதான் .பலர் பணத்திற்காக கவிதை எழுதி பணம்
சேர்க்கிறார்கள்.ஆனால் பணத்தை பெரிதாய் எண்ணாத மகா கவியும் ,புரட்சி
கவிஞரும் எழுதிய கவிதைகள் காலத்தை வென்று நிற்பதைக் காண்கிறோம் .
நூல் முழுவதும் கவிதைகள் தெளிந்த நீரோடை போன்ற நடையில் செல்கின்றது
.நூலை வாசிக்கும் வாசகர்களின் மனதை மயில் இறகுப் போல சுகமாக வருடுகின்றது
.தென்றலைப் போல இதமாக உள்ளது கவிதைகள் .
உலகில் உறவுகள் பல உண்டு ஆனால் அம்மா என்று உறவுக்கு ஈடு இணை எது ?நூல்
ஆசிரியர் அம்மா பற்றி மிக உருக்கமான கவிதை எழுதி உள்ளார் .
அம்மாவின் சேலை !
அது பருத்தியால் மட்டுமன்று
பாசத்தாலும் நெய்யப்பட்டது
தான் அழுத கண்ணீரை
அந்த முந்தாணையில்தான்
அவள் துடைத்திருப்பாள் .
அவள் உடுத்திய
சேலைகள் கிழிந்திருக்கலாம்
அவளைப் பற்றிய நினைவுகள் மட்டும்
இன்னும் அப்படியே !
மனைவி பற்றியும் மறக்காமல் கவிதை வடித்துள்ளார் .கவிதையின் தலைப்பே மனைவியை உச்சத்தில் வைத்து மகிழும் விதமாக உள்ளது .
என் இரண்டாம் தாய் !
நீ ...
அணைக்க மட்டுமே
அறிந்திருக்கிற ஆண்களை
அணையாதிருக்க
அருள்கிறவர்கள் பெண்கள் !
உண்மைதான் மனைவி மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ளா விட்டால் கணவன் என்ற
ஜோதி என்றோ மறைத்திருக்கும் .கணவனின் வாழ்நாள் நீடிப்பே மனைவியின்
நேசத்தில் ,பாசத்தில் உள்ளது .
பகுத்தறிவு சிந்தனை விதைக்கும் விதமாக உள்ள கவிதை !
இல்லாமலே இரு இறைவா !
ஏழைகளின் சிரிப்பில்
இறைவன் இருப்பதாக
எல்லோரும் சொல்கிறார்கள்
ஏழைகளைச் சிரிக்கவிடு
நீ ...இருப்பதை ஒப்புக்கொள்கிறோம் !
இன்று புதிதாக அந்த தினம் இந்த தினம் என்று தினம் தினம் ஒரு கொண்டாட்டம் வந்து விடுகின்றது .அது பற்றி ஒரு கவிதை இதோ !
தினந்தோறும் தினம் தான் !
தினந்தோறும் ஏதாவது
தினம் வந்து போகிறது .
அந்த தினம் பற்றி
அன்றைய தினம் மட்டுமே பேச்சு
அடுத்த நாள் அது
மறுதினமாகி விடுகிறது ! சிந்திக்க வைக்கும் சிறந்த கவிதைகள் நூல் முழுவதும் உள்ளது .பாராட்டுக்கள் .ஜென் தத்துவம் போன்ற நல்ல கவிதை இதோ !
அது மட்டும் ...
அந்தந்த நொடிச்சுகம்
அடைய வேண்டுமா
அடுத்த நொடியை மறுந்துவிடு !
தொல்லைக்காட்சியாகி விட்ட தொலைக்காட்சி வருகையின் காரணமாக இப்போது இலக்கியக் கூட்டங்களுக்கு கூட்டம் வருவது இல்லை .கூட்டம் இல்லாமலே பல கூட்டம் முடிந்து விடுகின்றது .
கூட்டத்தோடு கூட்டம் !
கூட்டம் இல்லாமல்தான்
கூட்டங்கள் நடக்கின்றன
ஆயிரம் அழைப்பிதழ்கள்
அனுப்பியபோதும்
அதில் பாதிகூட
அரங்கத்தில் சேர்வதில்லை .
இயற்கை நேசத்துடன் ஆலைகள் மட்டும் போதாது .இனிய சோலைகள் வேண்டும்,சாலையில் வேண்டும் கவனம் . என்று குரல் தரும் கவிதை
சோலைகள் செய்வீர் !
வேகம் வேண்டியதுதான்
வேகமாகவே உங்கள் வாழ்க்கை
முடிந்துவிட வேண்டாம் .
சாலைச் சந்தடிகளை விடுத்து
இனி சோலைகளின் சங்கீதத்தைச்
செவிமடுக்கப் பாருங்கள் .
கவிதை உறவு மாத இதழில் மாதா மாதம் படித்த கவிதைகள் என்றாலும் மறு
வாசிப்பு சலிப்பு வர வில்லை. மாறாக திரும்பத் திரும்ப வாசித்து சுவைக்கும்
விதமாக இருந்தது .படிக்கும் வாசகர்களின் உள்ளதை நெறிப் படுத்தும் விதமாக
,மனித நேயம் கற்பிக்கும் விதமாக , மனிதன் மனிதனாக வாழ வைக்கும் வாழ்வியல்
கருத்துக் கூறும் விதமாக நூல் உள்ளது . பாராட்டுக்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யாரும் யாராகவும் ! நூல் ஆசிரியர் ஏர்வாடி எஸ் . ராதாகிருஷ்ணன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எப்போதும் போல் இல்லை எப்போதும் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! --
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum