தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எப்போதும் போல் இல்லை எப்போதும் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்  !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Go down

எப்போதும் போல் இல்லை எப்போதும் !  நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்   !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Empty எப்போதும் போல் இல்லை எப்போதும் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்  !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Wed Nov 11, 2020 10:13 pm

எப்போதும் போல் இல்லை எப்போதும் !

நூல் ஆசிரியர் : கலைமாமணி 
ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் 


!நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி





வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராயர் நகர், சென்னை-600 017. பக்கங்கள் : 208, விலை : ரூ.250. பேச : 044 24342810

******
‘கவிதை உறவு' மாத இதழின் ஆசிரியர் நாடறிந்த நல்ல மனிதர், சிறந்த கவிஞர், கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் ஏர்வாடியார் என்றால் இலக்கிய உலகம் நன்கு அறியும்.

கவிதை உறவு மாத இதழில் ஏழாம் பக்கத்தில் இடம்பெற்ற கவிதைகளின் தொகுப்பு மேலும் அமுதசுரபி, கலைமகள், ஓம்சக்தி, மங்கையர் மலர் போன்ற இதழ்களில் இடம்பெற்ற கவிதைகளையும், சென்னை வானொலியில் ஒளிபரப்பான கவிதைகளும் தொகுத்து கவிதை விருந்து வைத்துள்ளார்கள். 118 தலைப்புகளில் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

கவிதை உறவு மாத இதழ் வந்தவுடன் ஏழாம் பக்கத்தின் கவிதையை முதலில் படிக்கும் ரசிக்கும் ரசிகன் நான். நான் மட்டுமல்ல கவிதை உறவு வாசகர்கள் பலரும் இதையே வழிமொழிந்தனர். கவிதை உறவு இதழின் சிறப்புகளில் ஒன்று ஏழாம் பக்கம். சிந்திக்க வைக்கும் நல்ல கருத்துக்களை எளிமையான சொற்களின் மூலம் சிற்பி சிலை செதுக்கும் கவனத்துடன் சொற்களைச் செதுக்கி கவிச் சிற்பத்தை சிறப்பாக வழங்கி வருபவர் ஏர்வாடியார்.

இதழாசிரியர் கவிஞராக இருந்தால் இதழில் பக்கம் பக்கமாக அவர்கள் கவிதையே எழுதுவார்கள். ஆனால் ஏர்வாடியார் ஏழாம் பக்கம் தவிர வேறு எந்தப்பக்கத்திலும் அவர் கவிதையே எழுதுவதில்லை. இப்பண்பே சிறந்த பண்பாகும். திரைப்பட இயக்குனர் பிருந்தா சாரதி அவர்கள் நீண்ட நெடிய அணிந்துரையை 18 பக்கங்களில் வழங்கி உள்ளார். 

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் ‘பார்கூடிப் பாராட்டும் எங்கள் ஏர்வாடியார்’ என்று வாழ்த்துக் கவிதையை முத்தாய்ப்பாக வழங்கி உள்ளார். இந்த நூலை இலண்டன் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றும் இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். சிறப்பு.

பதச்சோறாக நூலிலிருந்து சில வைர வரிகள் உங்கள் பார்வைக்கு. முத்தாய்ப்பான முதல் கவிதை. எழுத்தே வாழ்க்கையாய் ...

உழுத நிலம் என உளத்தை / மாற்று தற்கும்
      விழும் விதையாய் எழுத்தையதில் / விதைப்பதற்கும்
      எழுதுகிறேன் அன்றிவேறு / எண்ணமில்லை
      எழுத்தை விட எனக்கெதுவும் / சிறந்ததில்லை.


எழுத்தை தவமாகக் கொண்டு தொடர்ந்து எழுதி வருபவர். இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களான கவிதை, கதை, கட்டுரை, நாடகம் என எல்லாத் துறையிலும் முத்திரைப் பதித்தாலும் கவிதையில் மட்டும் தனக்கென தனி பாணி அமைத்து கவிதை வளர்த்து வருபவர் ஏர்வாடியார்.

ஏழாம் பக்கத்து கவிதைகளை மொத்தமாக நூலாகப் பார்த்த்தில் மட்டற்ற மகிழ்ச்சி, ஏர்வாடியாரிடம் பேசும்போது ஏழாம்பக்கக் கவிதைகளை நூலாக்குங்கள் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறேன். வேண்டுகோளை நிறைவேற்றியதற்கு நன்றி அய்யா.

புகழ்பெற்ற வானதி பதிப்பகம் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர்.

‘எப்போதும் போல் இல்லை எப்போதும்’ தலைப்பே சிந்திக்க வைத்தது உண்மை தான். இப்போது போல நாம் எப்போதும் முகமூடி அணிந்து இருந்தது இல்லை. இப்போது எப்போதும் போல் இல்லை என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.

கொடிய கொரோனா காலத்திலும் ஓய்வின்றி உழைத்து நூலாக்கி விட்டார்கள். முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் குறிப்பிடுவது போல எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும். சுறுசுறுப்புத் தேனீ ஏர்வாடியார். அவரது நூல்கள் இந்த நூல் நல்ல மைல்கல்லாக மட்டுமல்ல சிறந்த கவிதைகள் மிக்க வைரவரிகள் உள்ள வைரக்கல்லாக ஒளிர்கின்றது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடி விட்டு
      விநாயகரைக் காப்பது போல்
      தேர்தலைக் கொண்டாடி விட்டு
      ஜனநாயகத்தைக் கரைத்து விடுகிறோம்


நாட்டுநடப்பை குறைந்த சொற்களின் மூலம் படம்பிடித்துக் காட்டி வெற்றி பெறுகின்றார் ஏர்வாடியார்.

நாலாவது வீட்டில்!

நல்ல விஷயங்களை / நாள்தோறும் பேசுகிறோம்
      நம்மில் சிலர் / நன்றாகவும் எழுதுகிறோம்
      எங்கிருந்தோ / எத்தனையோ / எடுத்துகாட்டுகளை
      எடுத்துக்காட்டுகிறோம் / ஆனால் / நாலாவது
      வீட்டிலிருக்கிற / நல்ல மனிதர் / நாராயண
      சாமி / மட்டும் / நமக்கு தெரிவதே இல்லை.


உண்மை தான். அவரை, இவரை என்று எங்கு இருப்பவரை மேற்கொள் காட்டுவோம். ஆனால் நம் தெருவில் நம்மோடு வசிக்கும் நல்லவரை மேற்கோள் காட்டிட மனம் வருவதில்லை. இன்னும் சிலர் ‘லியோ டால்ஸ்டாயை’ மேற்கொள் காட்டுவார்கள். ஆனால் அவரே வழிகாட்டியாக நினைத்த நம் திருவள்ளுவரை மறந்து விடுவார்கள்.

முரண்பாடு !

காடுகளை அழித்து மரக் / கன்றுகளை நடுகிறோம்
      கொள்ளாதிரும் அடித்து விட்டு / கொடைவள்ளல் ஆகிறோம்
      கொலைசெய்து பின்இரங்கல் / கூட்டங்கள் நடத்துவோம்
      வன்முறைகள் செய்துவிட்டு / வரைமுறைகள் பேசுவோம்!


நாட்டில் நடக்கும் முரண்பாடுகளை கவிதைகளின் மூலம் உணர்த்தி நாட்டை சீர்படுத்த செய்திட்ட முயற்சி நன்று.

சுழலும் காலச் சக்கர வேகத்தில்
      வாழ்க்கை என்பது / வெவ்வேறாவதால்
      எப்போதும் போல் இல்லை / 
எப்போதும் என்பது தான் உண்மை
      எப்போதும் இதுவே தான் / இவ்வுலகின் தன்மை.


இவ்வுலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று மாறாத தத்துவத்தை கவிதையின் மூலம் உணர்த்தியது சிறப்பு. எல்லாப் பொருளிலும் பாடி உள்ளார். பாராட்டுக்கள்.
--
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! --
» நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» யாரும் யாராகவும் ! நூல் ஆசிரியர் ஏர்வாடி எஸ் . ராதாகிருஷ்ணன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum