தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Today at 1:20 pm

» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:38 pm

» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:37 pm

» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:36 pm

» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm

» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 pm

» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm

» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm

» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm

» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm

» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm

» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm

» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm

» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm

» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm

» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm

» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm

» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm

» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm

» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm

» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm

» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm

» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm

» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm

» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm

» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm

» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm

» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm

» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm

» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி

+6
dhilipdsp
ருக்மணி
ramkumark5
kishore1490
nadinarayanan
கவியருவி ம. ரமேஷ்
10 posters

Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 02, 2012 11:48 am

பூ (பூக்கள்) - அரை நிமிடக் கதை

பூவின் வருத்தம் - கவியருவி ம. ரமேஷ்


சிறுவயது முதலே ரமேஷிக்கு வீட்டுத்தோட்டம் பிடித்துப்போனதாய் இருந்தது. அந்தப் பருவத்தில் களையெடுப்பதாய் நினைத்து உண்மையான செடிகளையே பிடிங்கி எரிந்ததால் வீட்டில் அடி வாங்கிய சம்பவங்கள் நிறைய உண்டு. வீட்டிற்கு யாராவது வந்தால் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று காட்டுவான். அவர்கள் ரசிப்பதாய் நினைத்து மகிழ்வான். அவர்களோ “கொஞ்ச நேரமாச்சும் டீவில சீரியல் பாத்திருக்கலாம். பெரிசா இதப் பாக்க கூட்டியந்துட்டான்” என்று மனத்துள் சாடுவார்கள். வளர்ந்தான். பள்ளியில் படிக்கும்போது கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றால் பூவைப்பற்றியே எழுதுவான். பேசுவான். படிப்பை முடித்தான் ஆசிரியர்களின்மேல் பற்றோடும், ஆசிரியைகளின் மேல் வருத்தத்தோடும்.

குறிப்பு:
(வாசகர்களின் கடைசியாக வரும் “ஆசிரியைகளின் மேல் வருத்தத்தோடும்” என்ற தொடருக்கு ஏன் அவன் வருத்தத்தோடு முடித்தான்? என்பதற்காகக் குழம்பிப்போனால், அவர்களுக்கான என் பதில் இது. ஆசிரியைகள் பூக்கள் சூடி வருவார்கள் என்பதால்தான்.)

---
பூ (பூக்கள்) என்ற இம்மாத கதையும் கதை சார்ந்ததும் போட்டிக்கு கதை, நிமிட கதை, சிறுகதை, கதை சார்ந்த பிறவகைமையும்... இந்த இழையில் பதியவும். அதாவது மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி போட்டிப் படைப்புகளைப் பதிய வேண்டும். புதிய பதிவிட என்பதனைப் பயன்படுத்திப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty Re: பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி

Post by nadinarayanan Thu May 03, 2012 5:34 pm

ஒரு வரி கதை

தலைப்பு : பூ

கதை : "யார் காதுல பூ சுத்துற" என்றான் வெற்றி பெற்றவன்
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 31
Location : மதுரை

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty "பூக்கள் பூக்கும் தருணம்"

Post by kishore1490 Thu May 03, 2012 9:49 pm

"பூக்கள் பூக்கும் தருணம்"

"பூக்கள் பூக்கும் தருணம், ஆருயிரே........." ரிங் டோன் சத்தம் கேட்டதும் ஒரு வித சந்தோஷத்துடன் அட்டென்ட் செய்து ஹலோ என்றேன் மறுமுணயில் ஹலோ நா இன்னிக்கு office வரமாட்டேன், ஆபிஸ் பாய் கிட்ட என்னோட டேபிள்ல ஒரு புளு கலர் ஃபைல் இருக்கும் அத குடுதுட்றீங்களானு கேட்டா.. நா சரினு சொன்னேன்.. ஏன் வரலனு கேக்களானு மனசுக்குள்ள தோணுச்சு ஆனா கேட்க தெய்ரியம் இல்ல.. OK thanksnu சொல்லிட்டு அவ ஃபோன் கட் பண்ணிட்டா..

அவ office இன்னிக்கு வரமாட்டானு தெருஞ்சபுறம் எனக்கு ஆபீஸ் போறதுக்கான இண்டரெஸ்ட்டே போயிடுச்சு. இன்னிக்கு நாள் எனக்கு வாழ்க்கைல எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்ல.. ஒவ்வொரு முறை அவ ஃபோன் பண்ணும்போதும் அவ என்ன love பன்றேனு சொல்லுவானு நினைப்பேன் ஆனா அவ ஒரு நாலு வார்த்தை office பத்தி பேசிட்டு கட் பண்ணிடுவா..

officela அவ எனக்கு பக்கத்து சீட்தான், தினமும் காலைல பார்த்த உடனே சிரித்தபடி good morningnu சொல்லுவா நானும் பதிளுக்கு சிரித்தபடி good morningnu சொல்லுவேன் அந்த சில நொடிகள் எனக்குள்ள வர சந்தோஷத வார்தைல சொல்ல முடியாது.

officela சேர்ந்த ஒரு வாரத்துலயே கல்யாணம் பண்ணா அவளத்தான் பண்ணணும்னு முடிவு பண்ணிட்டேன் .. நா அவள love பன்றேனு அவல தவிர officela இருக்க முக்கால்வாசி பேருக்கு தெரியும்.. எப்பாதானடா அவ கிட்ட சொல்ல போரணு தினமும் என்னோட நண்பர்கள் கேட்டுகிட்டே இருப்பாங்க.. ஆனா அவ என்கிட்ட ஒரு ஃப்ரெண்ட் கிட்ட பேசுற அளவுக்கு கூட பேச மாட்டிக்கிறா , இதுல நா எங்க லவ் பன்றேனு சொல்றது.. நா லவ் பன்றேன் சொல்லி அவ கோவம் வந்து மேனேஜர் கிட்ட சொல்லி என்ன வேலைய விட்டு தூக்கிட்டானா அதுக்கப்புறம் நா பிச்சதான் எடுக்கணும் இந்த வேலை எப்படியோ லக்குல கிடசிருச்சு, நா படிச்ச படிப்புக்கு வேற வேலைலாம் கிடைக்கும்னு எனக்கு துளி கூட நம்பிக்கை இல்ல..

officeku போகி வழக்கம்போல வேலைய பாத்துட்டு இருந்தேன்.. அன்னக்கி office boya மேனேஜர் வேற வேலைக்காக வெளிய அனுப்பி இருந்தனால அந்த file அவன்கிட்ட குடுக்க முடியல .. மதியம் ஒரு ரெண்டு மணிக்கு அவ கிட்ட இருந்து எனக்கு போன் வந்துச்சு.. இந்த வாடியாசு அவ போன்ல லவ் பண்றேன்னு சொல்ல மாட்டாளான்னு எதிர்பார்புல அட்டென்ட் பண்ணேன் , எடுத்தவுடன் ஆபீஸ் பாய் இல்லாத விஷயத்த அவ கிட்ட சொன்னேன்.. அவ கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு OK byeநு சொல்லிட்டு கட் பண்ணிட்டா..

நா ஏமாற்றத்தோட மறுபடியும் என்னோட வேலைய பாத்துகிட்டு இருந்தேன்.. ஒரு மணி நேரம் கழித்து அவளிடமிருந்து மறுபடியும் போன் வந்தது.. அட்டென்ட் செய்து ஹலோ என்றேன் ,அவ உங்களுக்கு பிரச்சனை இல்லேனா கொஞ்சம் அம்பத்தூர் வரைக்கும் வந்து அந்த file குடுக்க முடியுமான்னு கேட்டா அடுத்த நொடியே நோ ப்ரோப்லேம் நிச்சயமா வரேன் எங்க வரணும்னு கேட்டேன்.. அம்பத்தூர் பஸ் ஸ்டோப்கு வந்துடுங்க நானும் வந்துடுறேன் என்றால்.. ஆபீஸ் முடிந்ததும் சந்தோஷமாக அந்த file எடுத்துகொண்டு கிளம்பினேன்..

ஆபீஸ் அருகில் இருந்த பஸ் ஸ்டோபிற்கு சென்ற உடன் அவளுக்கு போன் செய்து எந்த பஸ்ஸில் ஏறனும்னு கேட்டேன் அவ 47D நு சொன்னா , ஏற்கனவே அது எனக்கு தெரிந்த பதில்தான் இருந்தாலும் அவகிட்ட பேசுரத்துகாகவே போன் செய்து கேட்டேன். சரின்னு சொல்லிட்டு பஸ்ல ஏறி உட்காந்தேன்.. பஸ் புறப்பட்டது அவளை பார்க்க போகின்ற சந்தோஷத்தில் பல கனவுகள கண்டு கொண்டிருந்தேன்.

அவளை பார்த்தும் என்ன சொல்ல வேண்டும் என்றும் அவள் பதிலுக்கு என்ன சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தேன். அவளிடம் காதலை சொல்ல இதை விட நல்ல சந்தர்பம் கிடைக்காது எப்படியாச்சு சொல்லிடுடா என்று மன சாட்சி உள்ளே இருந்து சொல்லி கொண்டே இருந்தது.. அவளுக்கு போன் செய்து பஸ் ஏறிவிட்டேன் என்று சொன்னேன் , அவள் அம்பத்தூர் எஸ்டேட் வந்ததும் போன் பண்ண சொன்னால் நானும் சரி என்று சொல்லி விட்டு போனை வைத்தேன்.. மாலை நேரம் என்பதால் பஸ்ஸில் கூட்டம் அதிகமாகி கொண்டே போனது..

அடுத்து வந்த ஸ்டாப்பில் ஒரு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒரு கூடையை தூக்கி கொண்டு ஏறினாள்.. என் சீட்டில் அருகில் நின்றபடி அந்த கூடையில் இருந்த பூக்களை எடுத்து நூலில் கட்டி கொண்டே அவளுடன் ஏறிய இன்னொருவளுடன் பேசி கொண்டே இருந்தால்.. ரோட்டில் இருந்த மேடு பள்ளங்களை தாண்டி போகும்போதெல்லாம் அந்த கூடை என்னுடைய பந்தில் பட்டு கொண்டே இருந்தது, அந்த கூடையில் இருந்து என்னுடைய வெள்ளை நிற pantil கரை ஒட்டி கொண்டது.. அவர்கள் இருவரும் பேசி கண்டே பூ கட்டி கொண்டிருந்தனர்.

வண்டி ஆடி கொண்டே இருந்ததால் அந்த பெண்மணியால் பூ கட்ட முடியவில்லை , கூடையும் என் pantil பட்டு கொண்டே இருந்ததால் எழுந்துகொண்டே சீட்டில் அந்த பெண்மணியை உட்கார சொன்னேன்.. ரொம்ப நன்றி தம்பி என்று கூறிவிட்டு உட்காந்துகொண்டு கூடையை மடியில் எடுத்து வைத்து கொண்டு வேகமாக பூ கட்டினால்.. சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து மறுபடியும் போன் வந்தது .. எங்க வரிங்கன்னு கேட்டா ? நா வெளிய எதாச்சு கடைய பாத்து சொல்லலாம்னு பாத்தேன் ஆனா எந்த கடையும் இல்ல, நான் பார்பதை பார்த்து விட்டு அந்த பூ கட்டி கொண்டிருந்த பெண்மணி இது அண்ணா நகர் தம்பி என்றால்.. நானும் அண்ணா நகர்நு அவ கிட்ட சொன்னேன் . ok நு சொல்லிட்டு கட் பண்ணிட்டா .. நா அந்த பூ கட்டிகிட்டு இருந்தவங்கட thanksmaa என்றேன்.. அவங்க பதிலுக்கு சிரிச்சிட்டு என போகணும் தம்பின்னு கேட்டாங்க ,? அம்பதூர்னு சொன்னேன் .. இன்னும் அரை மணி நேராம் ஆகும்பா என்றார்.. கூட்டம் அதிகமாகி கொண்டே போனது .. அந்த பெண்மணி பேசிக்கொண்டே இரண்டு இரண்டு மல்லிகை பூவை எடுத்து நூலில் வைத்து கட்டிக்கொண்டு இருந்தார்..

நான் அவர்கள் கட்டுவதையே பார்த்து கொண்டு வந்தேன்.. அவர்கள் வேகமாக அத்தனை பூக்களை கட்டுவதை பார்க்கும்போது வியப்பாக இருந்தது , இன்னிக்கு கூட்டம் ஓவரா இருக்கு , நல்ல வேளைப்பா நீ மட்டும் இன்னிக்கு இடம் குடுகலேனா நா பூகட்டிருக்கவே முடியாது என்றால் , நான் எதுவும் சொல்லாமல் சிரித்தேன் .. அவளிடமிருந்து மறுபடியும் போன் வந்தது , எங்க இருகிங்கனு கேட்டா ? நா பூ கட்டிட்டு இருந்தவங்ககிட்ட எங்க இருக்கோம்னு கேட்டேன் , அம்பத்தூர் எஸ்டேட் வர போகுது தம்பி என்றார்.. நானும் அதையே அவளிடம் சொன்னேன். சரி நா அம்பத்தூர் O.T. பஸ் ஸ்டாப்ல நிக்கிறேன் வாங்கனு சொன்னா , ம்ம்ம் ok நு சொல்லிட்டு வச்சுட்டேன்..

அம்பத்தூர் O.T பஸ் stop வந்தா சொல்லுங்கமா என்று பூ கட்டி கொண்டிருந்தவரிடம் சொன்னேன் .. சரி தம்பி.. கூடையில் இருந்த எல்லா பூக்களையும் கட்டி முடித்து விட்டார் .. பூவில் ஒரு முளத்தை கட் செய்து ஒரு பேப்பரில் சுற்றி என்னிடம் குடுத்தார்.. இல்ல வேணாம்மா என்றேன், பரவா இல்ல வாங்கிக்கப்பா நீ சீட்டு குடுகலேனா எனக்கு நஷ்டமாகி இருக்கும் வாங்கிக்கப்பா ஒரு முலம் freeyaa குடுத்தா எனக்கு நஷ்டமாகிடாது என்றார்.. இல்லமா எனக்கு இன்னும் கல்யாணமாகல , இங்க தனியா ரூம்ல இருக்கேன் அதனால தேவை படாதுமா என்றேன்.. பரவா இல்ல பைக்குகாவது போடுப்பா என்கிட்டே பூ வாங்குனா சீக்கிரமே உனக்கு கல்யாணம் ஆகிடும் பாரு என்றால்..

நான் சிரித்து கொண்டே வாங்கி கொண்டேன்.. அடுத்த ஸ்டாப் அம்பத்தூர் O .T என்றார்.. நான் இறங்குவதற்கு வசதியாக கதவினருகில் சென்று நின்றேன்.. பஸ் ஸ்டாப்பில் இறங்கி அவளுக்கு போன் செய்தேன் .. அவள் போனை எடுத்த உடன் வந்துட்டேன் leftla திரும்பி பாருங்க நா உங்கள பாத்துட்டேன்னு சொன்னா.

அவ தூரத்துல மஞ்ச கலர் சுடிதார்ல என்ன பாத்து சிருச்சுகிட்டே ஸ்கூட்டர்ல வந்தா , நானும் அவள பாத்து சிருச்சேன் எப்பவும் பாக்குறத விட இன்னிக்கு அவ ரொம்ப அழகா இருந்தா.. திடீர்னு என் மனசுக்குள்ள ஒரு தெய்ரியம் இவள வாழ்க்கைல எதுக்காகவும் மிஸ் பண்ண கூடாதுன்னு மனசுக்குள்ள தோனுச்சு.. இன்னிக்கு நிச்சயம் அவ கிட்ட லவ் சொல்லிடணும்னு தோனுச்சு ..அவ கிட்ட வந்தா.. சிரித்தபடி ரொம்ப thanks , இந்த file ல சில modifications பண்ணி நாளைக்கு மேனேஜர் கிட்ட குடுக்கணும் அதனாலதான் உங்களுக்கு கஷ்டம் குடுத்துட்டேன் என்றால்..

அதலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல என்றேன்.. ஏன் officeku வரலேன்னு கேட்கலாம்னு தோனுச்சு ஆனா இருந்தாலும் மனசுல ஏதோ தயகத்துல கேட்கல , வாங்க கூல் ட்ரிங்க்ஸ் குடுச்சிட்டு போலாம்னு சொல்லிவிட்டு முன்னே நடந்து சென்றால் .. நானும் அவள் பின்னாலே சென்றேன்,, ஒரு கடைக்குள் சென்று உட்கார்ந்தோம்.. அவளோட இந்த மாதிரி தனியா ஹோடேல்கு போனும்னு எவ்ளோவோ நாட்கள் கனவு கண்டிருக்கேன் , எல்லாமே இன்னிக்குதான் நடக்கணும்னு எழுதி இருக்கு போல, உங்களுக்கு என்ன ஜூஸ் வேணும்னு கேட்டா , ஆரஞ்சு ஜூஸ்நு சொன்னேன் , அவ ரெண்டு ஆரஞ்சு ஜூஸ் நு ஆர்டர் பண்ணா , enakkum ஆரஞ்சு தான் பிடிக்கும்னு சொன்னா , அவளுக்கும் ஆரஞ்சு ஜூஸ்தான் பிடிக்கும்னு தெரிஞ்சதும் எனக்கு இன்னும் சந்தோஷாகிடுச்சு ..

இப்ப கொஞ்சம் தெய்ரியம் வந்து ஏன் officeku வரலேன்னு கேட்டேன் .. வீட்டுக்கு பொண்ணு பாக்க வந்திருந்தாங்க அதான் வர முடியலன்னு சொன்னா சிறிய வெட்கத்துடன் சொன்னா .. இது வரைக்கும் என்னோட மனசுக்குள்ளா இருந்த சந்தோஷம் எல்லாம் ஒரு செகண்ட்ல காணாபோகிடுச்சு.. நா அதுக்கப்புறம் அவக்கிட்ட எதுவும் பேசாம ஆரஞ்சு ஜூஸ் குடுச்சிட்டு கிளம்புறேன்னு சொன்னேன்.. அவ எதிர்பக்கம் இருக்க பஸ் ஸ்டாப்ல 47D போகணும்னு சொன்னா, ம்ம் சரின்னு சொல்லிட்டு கிளம்புனேன் .. file குடுக்கவே இல்லையேன்னு கேட்டா, சாரி மறந்துட்டேனு சொல்லிட்டு bagla இருந்து file எடுத்து குடுத்தேன் .

அவ ஸ்கூட்டில அந்த file எங்க வைக்கிறதுனு பாத்தா , கவர் எடுத்துட்டு வர மறந்துட்டேனு சொன்னா , உங்ககிட்ட எதாச்சு கவர் இருக்கானு கேட்டா , எனக்கு எப்ப இந்த இடத்தைவிட்டு போவோம்னு இருந்துச்சு , இவ்ளோவ்னால் பைதியகாரதனமா அவளும் என்ன லவ் பண்ணுவான்னு நெனச்சிட்டு இருந்தோமேன்னு வெறுப்பா இருந்துச்சு, என்னோட bagல இருந்த கவரை எடுத்து குடுத்தேன்.. வாங்கி கொண்டு OK bye and thank you nu சிருச்சுகிடே சொன்னா எப்பவும் அவ அப்படி சிரிக்கும்போது எனக்கு சொர்கமாதிரி இருக்கும் இன்னிக்கு நரகமாதிரி இருக்கு, ஸ்கூட்டர்லே ஏறி போய்ட்டா.....

நா பஸ் ஏறி என்னோட ரூம்க்கு வந்தேன் , மனசு வழிகிறத அன்னிக்குதான் உணர்ந்தேன் .. இவ்ளோவ் நாள் லூசு மாதிரி இருந்திருகொமேனு நெனச்சேன்.. நா அவல லவ் பண்றேன்னு office
முக்கால்வாசி பேருக்கு புருஞ்சிரிச்சு ஆனா இவளுக்கு மட்டும் எப்படி புரியாம போச்சு.. என்ன செய்வது என்று புரியாமல் ரூமில் உட்காந்திருந்தேன்.. பூக்கள் பூக்கும் தருணம் என்று ring tone கேட்டது , அவ தான் போன் செய்திருந்தா .. எப்பவும் அவ போன் பண்ணா சந்தோஷமா இருக்கும் ஆனா இன்னிக்கு அவ எதுக்கு போன் பண்ணான்னு தோனுச்சு.. எடுத்த உடன் ஹலோ என்றேன்..

உங்களுக்கு இத சொல்றதுக்கு இவ்ளோவ் நாள் ஆச்சா , ஆனா பரவா இல்லை நீங்க கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டிங்கனு நெனச்சேன் என்றால்.. எனக்கு எதுவும் புரியவில்லை ,புரியலங்க என்னதுநு கேட்டேன்.. நீங்க என்ன நிஜமாவே லவ் பன்றின்களா இல்லையான்னு கேட்டா , எனக்கு அதிர்ச்சியாக இருந்துச்சு ஆமான்னு மெல்லமா சொன்னேன் .. நானும் உங்கள லவ் பண்றேன்னு சொன்னா.. என்னால கொஞ்சம்கூட நம்ப முடியல.. வேற யாராச்சு கலைகராங்கலோனு கூட தோனுச்சு ஆனா அது அவ குரல்தான்நு என்னோட உல் மனசு சொல்லுச்சு.. உனக்கு எப்படி தெருஞ்சுச்சுனு கேட்டேன்.. அதான் தெளிவா எழுதி இருந்துச்சே.. இருந்தாலும் பூ சுத்தி இருந்த கவர்ல i love u நு எழுதி இருக்கறத நா பாக்காம விட்டிருந்தா என்ன பன்னிருப்பனு கேட்டா .. எனக்கு அப்பதான் அந்த பெண்மணி பேப்பரில் சுற்றி குடுத்த பூ ஞாபகத்துக்கு வந்தது அதை அந்த கவர்ல இருந்து எடுக்காம file அதுல வச்சு குடுத்ததும் அப்பதான் புரிந்தது .. என்னதான் பூ குடுத்து லவ் சொல்றது பழைய காலத்து ஸ்டைலாக இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சுன்னு சொன்னா.. நானும் நான் வேணுமென்று செய்ததுபோல் உனக்கு பிடிக்கும்னு தெரியும் அதான் அப்படி குடுத்தேன் என்று சொல்லி சமாளித்தேன்..

உன்ன இன்னிக்கு பொண்ணு பாக்க வந்தாங்கனு சொன்னயேநு கேட்டேன் .. அப்படி சொன்னாவாச்சு நீ லவ் பண்றேன்னு சொல்லுவியானுதான் அப்படி சொன்னேன் என்றால் . நீ என்ன லவ் பண்றேன்னு நீ வேலைக்கு சேர்ந்த முதல் மாசமே எனக்கு தெரியும் நீ எப்ப சொல்லுவேனுதான் வெயிட் பண்ணேன் என்றால் . எனக்கு சந்தோஷத்தில் என்ன பேசுவதென்றே தோணவில்லை.. சரி என்னோட அப்பா வந்தாரு நாளைக்கு officeல பாக்கலாம்னு சொல்லிட்டு போன் வச்சுட்டா........

அவள் போனை வைத்த பிறகுதான் அவளிடம் இன்னும் நிறைய பேச வேண்டும் என்று தோன்றியது .. ஒரு வருஷத்த வேஸ்ட் பண்ணிட்டமேனு தோனுச்சு .. மறுபடியும் அவளுக்கு போன் செய்தேன் , ஆனால் அவள் எடுக்கவில்லை .. இத்தன மாசம் காத்துகிட்டு இருந்த நாளைக்கு காலைல வரைக்கும் வெயிட் பண்ண முடியாதான்னு மெசேஜ் அமுட்சா , நான் பதிலுக்கு ஏற்கனவே பல மாசம் வேஸ்ட் பண்ணிட்டேன் இனிமே ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ண மாட்டேனு மெசேஜ் செய்தேன் . அப்படியே நைட் முழுவதும் மெசேஜ் அமுச்சிகிட்டே இருந்தோம் ....


வாழ்கை எவ்ளோவ் சுவாரசியமா இருக்குனு தோனுச்சு .. அன்னிக்கு அந்த பூ விற்கும் பெண்மணி மட்டும் எனக்கு அந்த ஒரு முளம் மல்லிகை பூவை குடுக்காமல் இருந்திருந்தால் , அவள் சுற்றி குடுத்த அந்த பேப்பரில் ஏதோ ஒரு காதலன் யாருக்கோ எழுதிய அந்த i
love u பேப்பரை எனக்கு சுற்றி குடுக்காமல் இருந்திருந்தால் அந்த பூவை நா மறக்காமல் என்னுடனே எடுத்து வந்திருந்தால் என்னோட வாழ்க்கை இவ்ளோவ் சந்தோஷமா மாறி இருக்குமான்னு எனக்கு தெரியல ... என்னோட வாழ்க்கைல அந்த ஒரு முளம் மல்லிக பூவ மட்டும் என்னால மறக்கவே முடியாது ...

-கிஷோர் குமார்
kishore1490
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 32
Location : ambathur

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty பூவே பூச்சூடி வா

Post by ramkumark5 Fri May 04, 2012 11:45 pm

பூவே பூச்சூடி வா

மாலை 5 மணி, வானம் மேகம் சூழ்ந்து இருந்தது. சாலை சற்று வெறிச்சோடியே கிடந்தது. அடுத்த ஒரு வார காலத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அப்போது ஒரு ஆட்டோ பெரிய ஒலி பெருக்கி குழாயினை சுமந்து கொண்டு தெருவுக்குள் நுழைந்தது.

வீட்டு பெண்கள் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது அந்த ஆட்டோவில் இருந்து வந்த அறிவிப்பு. “திருப்பத்தூர் பூ மார்க்கெட் சங்கத்தின் சார்பாக இரவு 8 மணிக்கு கலைவாணர் கலையரங்கத்தில் ஒரு மாபெரும் அழகு போட்டி. மிக அழகாக தலையில் பூக்கள் சூடி வரும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூபாய் 50,000 ரொக்க தொகை” என்பது தான் அந்த அறிவிப்பு.

மாலை 6 மணி, லேசான மழை சாரல் இருந்தாலும் சாலை முழுவதும் பெண்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. பூ மார்க்கெட் சாலை திருவிழா கூட்டம் போல் நிரம்பி வழிந்தது. கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லி பூவின் விலை ஒரு மணி நேரத்தில் 1000 ரூபாயாக உயர்ந்தது. ரோஜாப்பூக்கள் அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.

மாலை 7.30 மணி, கலைவாணர் கலையரங்கத்தை மக்கள் வெள்ளம் தாக்கியது. மழை சாரலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் தலையில் விதவிதமாக பூக்களை சூடிக்கொண்டு வந்திருந்தனர்.

“செடியில் பூத்திருந்த வேளையிலே
இத்தனை அழகாய் தோன்றவில்லை
இன்று என்னவளின் கூந்தலிலே
எப்படி வந்தது மயக்கும் அழகு”


என்று கணவன்மார்கள் கவிதை பாடும் அளவிற்கு பல பெண்கள் அழகழகாய் பூக்களை சூடி கொண்டு வந்திருந்தனர்.

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Chithra-033

இரவு 8.30 மணி, போட்டிகள் ஆரம்பிக்கப் படுவதற்கான அறிகுறியே தெரியவில்லை. கலையரங்கத்தில் அன்று விளக்குகள் கூட போடப்படவில்லை. பெண்கள் பலரும் எப்போது போட்டி ஆரம்பமாகும் என்று ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இரவு 9.30 மணி, அப்போது தான் உண்மை மெதுவாக கசிய தொடங்கியது. அழகு போட்டி, 50000 பரிசு என்பதெல்லாம் பூ மார்க்கெட் கடைக்காரர்கள் சிலர் ஏற்பாடு செய்த நாடகம் என்பது. மழை காலம் என்பதால் பூக்கள் விற்பனை குறைவாக இருந்ததால் அவர்கள் செய்த சூழ்ச்சி வேலை தான் இது என்பதை அறிந்த பலரும் அதிர்ந்தனர். கூந்தலில் சூடியிருந்த பூக்களை காதில் சூடிக் கொண்டு கூட்டம் கலைந்தது ஏமாற்றத்துடன், இல்ல இல்ல ஏமாற்றப்பட்டு.
ramkumark5
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 37
Location : Surat

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty Re: பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி

Post by ருக்மணி Sat May 05, 2012 12:49 pm

உரையாடல் வடிவ கதை


கதாபாத்திரங்கள்: மல்லிகை, ரோஜா, துளசி, கனகாம்பரம், முல்லை, பிச்சி, உலக அழகி.

உரையாடல் கரு: தங்களுக்குள் சிறந்தவர், அழகானவர், உயர்ந்தவர் யார் என்ற போட்டி ஏற்படுகிறது.

ரோஜா: ஊட்டியோட ராணி நான் தான். எனக்கு எத்தனை வண்ணம் தெரியுமா? என்னை பார்க்கிறதுக்காகவே எத்தனை பேர் ஊட்டி வராங்க தெரியுமா? மலர் கண்காட்சியில எனக்கு எப்பவுமே தனி இடம் தான். எத்தனை வாசனை திரவியங்கள் என்னால் உண்டானது தெரியுமா? இத்தனை சிறப்பையும் பெற்ற நானே சிறந்தவள்!.

மல்லிகை: ஊட்டியோட உன் ஆட்டம் எல்லாம் முடிந்தது. கோவில் மாநகரம் மதுரை மாநகரத்தின் இளவரசி நான். நான் இல்லாத ஒரு கல்யாணம், காதுகுத்து, வளைக்காப்பாவது உண்டா!!! என்னால் உண்டான வாசனை திரவியங்களே மிகுந்த மணம் உடையது.

கனகாம்பரம்: வெள்ளை நிறமான நீ என்ன அவ்வளவு அழகா? என்னையும் உன்கூட சேர்த்து வைக்கிறதால தான் நீ கொஞ்சமாவது அழகா இருக்க!!! மத்தபடி கல்யாணமோ, காதுக்குத்தோ எனக்கு தான் முதலிடம்.

பிச்சி: இவங்க எல்லாம் அழகை பேச வந்துட்டாங்கப்பா. வெள்ளை நிற பூக்களிலேயே நான் தனியான இடத்தை பிடிச்சுருக்கேன். மலர்ந்ததும் நான் கொடுக்கிற வாசனையோ வாசனை தான். இந்த கழுதைகளுக்கெல்லாம் எங்க என் வாசனை தெரிய போகுது?

முல்லை: இந்த பொண்ணுங்க எல்லாம் உடம்பை கட்டுக்கோப்பா வைக்க எவ்வளவு சிரம படுறாங்க!! ஆனால் எனக்கு அந்த கஷ்டமே இல்லை. இயற்கையிலே நான் அப்படி தான். நான் இதை சொல்லியே ஆகணும். நான் அவ்வளோ அழகு. யாரும் இங்க என்னை விட அழகான பூவை பார்த்திருக்க மாட்டாங்க!!!

துளசி: இவங்க எல்லாம் ஏன் இப்படி சண்டை போட்டுகிறாங்க? என்னை தானே கோவில்ல சாமிக்கு மாலையா போட்டு பிரசாதமா கொடுக்கிறாங்க. வீட்டுல துளசி மாடம் வைத்து என்னை தானே வழிபடுறாங்க!!! அப்பவே தெரிய வேணாம்!! நான் தான் சிறந்தவள்.

ரோஜா: என்னை கூட தான் சாமிக்கு மாலையா போடுறாங்க.
மல்லிகை உட்பட பிற பூக்கள்: எங்களையும் தான் சாமிக்கு சமர்ப்பிக்கிறாங்க.

ரோஜா: சரி. சரி. நமக்குள்ளேயே பேசி ஒரு முடிவுக்கு வரமுடியாது. இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு சிறந்த
நடுவர் வேணும்.

மல்லிகை: ரோஜா சொல்றது சரி தான். நம்மை எல்லாம் உபயோகப்படுத்தி அழகுப்படுத்திக்கிறது பெண்கள் தான். அதனால உலகத்திலே சிறந்த அழகிக்கிட்ட போய் யார் சிறந்தவர்கள்னு முடிவு பண்ணுவோம்.

பிற பூக்கள்: சரி வாங்க. போகலாம்!!!

உலக அழகி: என்ன எல்லா பூவும் ஒன்றாக சேர்ந்து வந்துருக்கீங்க?

துளசி: எங்களுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்.

உலக அழகி: அப்படி என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?

ரோஜா: யார் சிறந்தவள் என்ற போட்டி எங்களுக்குள்ள? முடிவை தெரிஞ்சுக்க தான் உங்கக்கிட்ட வந்தோம்.

உலக அழகி: [(மனக்குரல்) என்ன சொல்றது. எல்லா பூவுமே அழகு தான். இருந்தாலும்.... நாம தானா சிறந்தவள்]

துளசி: என்ன யோசிக்கிறீங்க. பதில் சொல்லுங்க...

உலக அழகி: ஓ. சொல்லுறேன். உங்க எல்லோரையும் அணிந்து கொள்கிற தகுதியும், திறமையும் உள்ள நான் தான் சிறந்தவள்.

மலர்கள் அனைத்தும் ஏமாற்றத்துடன் தோட்டம் திரும்பின.

பிச்சி: இதுக்கு தான் நாம மனிதர்களிடத்தில் நியாயம் எதிர்பார்க்கக் கூடாது.

முல்லை: நம்மை பயன்படுத்தி அழகுப் படுத்தி கொள்கிற அவளுக்கே அவ்வளவு கர்வமா? அப்போ நமக்கு எவ்வளவு இருக்கும்?

ரோஜா: உலக அழகி, பிரபஞ்ச அழகி, இந்திய அழகி, மாநில அழகி, உள்ளூர் அழகினு போட்டி அதிகமா இருக்கிற காலத்தில நாம வேற போட்டிக்கு வரோம்னு தெரிஞ்சா இந்த பொண்ணுங்க சும்மா இருக்க மாட்டாங்க.

மல்லிகை: நமக்குள்ள போட்டி,, பொறாமை எதற்கு? இயற்கையோட படைப்பில் நாம எல்லோருமே ஒவ்வொரு வகையில் அழகானவர்கள், மணமானவர்கள், சிறந்தவர்கள் தான்.

பிற மலர்கள்: நாட்டாமை!!! தீர்ப்பை மாத்திடாத!!!
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 35
Location : சூரத்

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty பொன் மலர்

Post by ramkumark5 Mon May 07, 2012 12:26 am

பொன் மலர்


திமூன்றாம் நூற்றாண்டு, தர்கூர் மாகாணத்தை போகாலன் என்ற அரசன் ஆட்சி செய்தான். அப்போது அவன் மாகாணத்திற்கு சொந்தமான கோமாதா ஒன்று ஒரே நேரத்தில் பத்து கன்றுகளை ஈன்றிருந்தது. இந்த செய்தி உலகம் முழுவதும் பரவ பாரசீகத்தின் அரசரும் இந்த செய்தியை அறிந்து வியப்படைந்தார்.

தன் சிப்பாய் ஒருவனை அழைத்து இந்த அதிசய நிகழ்வை பாராட்டி தர்கூரின் அரசருக்கு பனிரெண்டு பொன் மலர்களை பரிசாக கொடுத்து வரும்படி கூறினார். தன் அரசரின் கட்டளைப்படி பாரசீக சிப்பாய் தர்கூர் மாகாணத்தை அடைந்தான். அரசவைக்கு சென்று மன்னரின் கட்டளைப்படி போகாலனுக்கு அந்த பரிசை கொடுத்தான்.

போகாலன் அந்த பொன் மலர்களை பார்த்து மிகவும் ஆச்சர்யமும், மகிழ்வும் அடைந்தான். பாரசீக மன்னருக்கு தன் நன்றியை தெரிவித்து கொண்டான்.

இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்கு சொல்ல வேண்டும். முட்டாள்களின் முட்டாள் என்ற ஒரு போட்டி வைத்தால் அதில் போகாலன் தான் வெற்றி பெறுவான். அந்தளவு ஒரு மிக பெரிய முட்டாள். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி பிறப்பதற்கு முன் இந்த உலகிற்கு இம்சை அரசனாக விளங்கியவன் போகாலன் தான் என்றால் அது மிகையல்ல.

பொன் மலரை பார்த்த நாள் முதல் தலை கால் புரியாமல் யோசித்து கொண்டிருந்தான் போகாலன். எப்படியாவது அந்த பொன் மலர் வளரும் செடியை தன் நாட்டிலும் பயிரிட வேண்டும் என்று முடிவெடுத்தான்.

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Images?q=tbn:ANd9GcRto4d7L_jp6XHAnTP-2qNr393BoVm-tAgZmatNgOAsiVkVM0GuOQ

தன் மந்திரி ஆயுர்வேதனை அழைத்து இந்த பொன் மலர் செடி அல்லது அதன் விதை பற்றிய விவரங்களை அறிந்து வரும்படி கூறினான். ஆயுர்வேதன் தன் மன்னனிடம் “அப்படியெல்லாம் ஒரு செடி இல்லவே இல்லை, பொன்மலர் என்பது செயற்கையானதே” என்று கூறினான். இதை கேட்ட போகாலன் மிக கோபமடைந்தான். “நான் கண்ணால் பார்த்ததையே பொய் என்கிறாயா? இன்னும் 10 நாட்களுக்குள் பொன் மலர் பற்றிய செய்தியை கொண்டு வரவில்லை என்றால் உன் தலை துண்டிக்கப்படும்” என்று கட்டளையிட்டான்.

ஆயுர்வேதனுக்கு இந்த முட்டாள் மன்னனை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பத்து நாட்களும் அரசவைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கினான். பத்தாவது நாள் காலை எதையோ யோசித்தவனாய் பனை சுவடியை எடுத்து எதையோ எழுத ஆரம்பித்தான். பின் அந்த பனை சுவடியை எடுத்துக் கொண்டு அரசவைக்கு புறப்பட்டான்.

போகலனிடம் சென்று தான் பொன் மலரை பற்றி சித்தர் ஒருவர் எழுதிய குறிப்பை எடுத்து வந்துள்ளதாக கூறினான். இதைக் கேட்ட போகாலன் மகிழ்ச்சியடைந்தான். அந்த குறிப்பை வாங்கி படித்த போகாலன் அதிர்ச்சி அடைந்தான். மூன்று தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே பொன் மலர் பூக்கும் என்று அந்த குறிப்பில் எழுதி இருந்தது.

தலை தப்பித்ததால் சந்தோசத்துடன் வீட்டிற்கு கிளம்பினான் ஆயுர்வேதன். பல நாட்கள் அந்த பனை சுவடியை திருப்பி திருப்பி பார்த்து கொண்டிருந்தான் போகாலன். தான் சாகும் தருவாயில், அந்த சுவடியுடன் இன்னொரு சுவடியையும் வைத்து அரசவை பொக்கிஷங்களுடன் வைக்கும்படி கூறினான். அந்த இன்னொரு சுவடியில் “என் பரம்பரையில் வரும் அரசர்கள் எப்படியாவது அந்த பொன் மலர் செடியினை நம் தர்கூர் மாகாணத்தில் பயிரிட்டு வளர வைக்க வேண்டும். இது தான் இந்த போகாலனின் இறுதி ஆசை” என்று எழுதி வைத்திருந்தான்.

பொன் மலருக்கான தேடல் தொடரும், இல்லை இல்லை போகாலனின் இம்சை தொடரும்.
ramkumark5
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 37
Location : Surat

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty அன்றைய ரோஜா..

Post by dhilipdsp Mon May 07, 2012 9:19 am

உனக்காக தினமும் என் கரத்தில் ரோஜாவை
வைத்து காத்து கொண்டு இருப்பேன்
உன்னிடத்தில் என் காதலை சொல்ல
என் கரத்தை தாண்டி உன் கரத்தை தீண்ட
துடித்து கொண்டு இருக்கும் ரோஜாவை
உன்னை கண்டதும் மறைத்து விடுவேன் .
இன்றாவது பூவை தந்து காதலை சொல்ல
தயங்கும் என் மனதை கண்டு சிரிக்கும்
கடவுளுக்கு அதை கணிக்கை தந்து விடுவேன் தினமும் அதை ...
கடவுளுக்கு கண்ணீர் விட்டு தன் குடும்ப கஷ்டத்தை
சொல்லும் கருபாயி பாட்டி. பாட்டிக்கு பூக்கடையில்
எனது ரோஜாதான் அன்றைய வருமானம் ...உன்னிடத்தில்
என் காதலை சொல்ல வில்லை என்று சிறு வருத்தம் என் மனதுக்கு ...
சோகத்தை கூறும் கருப்பாயி பாட்டியை கண்டு வருந்தும்
கடவுளுக்கு உன் வருகை புது வரவு தான்
உன்னை கண்டவுடன் கத்தி ஆர்பரிக்கும் மணியை
அடித்து அடக்கும் அய்யரின் பனி வியப்புக்குரியது
உன் கரத்தில் நான் கணிக்கையிட்ட ரோஜாவை
தரும் அய்யரை பார்த்தும் என்னை பார்த்தும்
ஒன்றும் தெரியாமல் சிரிக்கும் கடவுள்..
உன் தலையில் அமர்ந்ததாள் என்னை மறந்து
ஆணவம் கொண்டு சென்றது ரோஜா ........
கலை வேலையில் கையில் ரோஜவை வைத்து
காத்து கொண்டு இருந்தேன் உன் வருகைக்காக
குப்பை தொட்டியில் ஆணவத்தில் என்னை மறந்து
சென்ற ரோஜாவின் வாடிய பாரிதாப நிலையை கண்டு
சிரித்தபடி என் கரத்தில் இருந்து உன் கரத்தை தீண்ட
காத்து கொண்டு இருந்தது அன்றைய ரோஜா ..............
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 33
Location : கோவை

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty Re: பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி

Post by சரவணன் Mon May 07, 2012 1:20 pm

ரவிக்கும் மல்லிகாவிற்கும் இன்று தான் திருமணம் முடிந்தது..ஒரு தனியார் நிறுவனத்தில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவன்.. மனைவி மல்லிகா கொஞ்சம் வசதியான குடும்பத்து பெண்.ரவியின் குறைவான வருமானத்திற்காகவே மல்லிகாவின் பெற்றோர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.. எனவே பெற்றோர்களை விடுத்து ரவி மேல் கொண்ட காதலுக்காக வீட்டை விட்டு வந்துவிட்டாள்.பதிவாளர் அலுவலகத்தில் மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்..இன்று முதல் இரவு..ஆசையாக காத்திருந்தான் ரவி..அறையினுள் வெட்கத்துடன் நுழைந்தாள் மல்லிகா..அவள் அவனருகில் அமர்ந்து தோள் சாய்ந்தாள் .பொழுது விடிந்தது.ரவி அவசரமாக அலுவகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.இன்னைக்கே வேலைக்கு போகனுமா? இப்பதானே கல்யானமாயிருக்குது? இன்னும் ரெண்டு நாள் லீவ் போடுங்க..ரெண்டு நாள் கழிச்சி போனா போதும் என்று கொஞ்சலாக சினுங்கினாள் மல்லிகா..இல்லைமா எனக்கு திருமணம் ஆனதையே நான் இனிமேல் தான் போய் சொல்லணும் எங்க முதலாளிகிட்ட..அவருகிட்ட கூட சொல்லிக்காம கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு அவரு என்ன சொல்வாருன்னும் தெரியலை.அதனால கண்டிப்பா இன்னைக்கு போயாகனும் என்று கிளம்பி சென்றான்..சென்றவனை இடைமறித்து வரும் போது மல்லிகை பூ ரெண்டு முழம் வாங்கிவாங்க என சொல்லி கண்ணடித்தாள்.சரி என்று சிரித்தவாறே சென்றான் ரவி..அலுவலகத்தில் அவனது முதலாளி சிறிது கோபித்தாலும் பிறகு ஒன்றும் சொல்லவில்லை..வழக்கம் போலே வேலையை பார்க்க சென்று விட்டான் விடுமுறை கேட்கவில்லை..வீட்டிற்கு திரும்ப இரவு 9 மணியாகிவிட்டது.வீட்டிற்கு வந்ததுமே என்னாச்சுங்க? ரொம்ப சோகமா வரிங்க?என அக்கறையுடன் விசாரித்தாள் நடந்தவற்றை எல்லாம் கூறினான்..சரி கவலைப்படாதிங்க இன்னும் ரெண்டு நாளுல அவரே பழையபடி நல்லா பேசுவார்..கை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம் என்று கூறியவளுக்கு சட்டென்று தான் கலையில் பூ வாங்கிவர சொன்னது நினைவுக்கு வந்தது..ஏங்க நா கேட்ட மல்லிகை பூ?வாங்கிட்டு வரலையா? என்று கேட்டாள்..இல்ல அதிகமான வேலை இருந்துச்சு அதுமில்லாம நேரமாயிருச்சி நீ தனியா இருப்பியேனு அவசரமா கிளம்பி வந்ததில வாங்க மறந்துட்டேன்மா.சாரி நாளைக்கு கண்டிப்பா வாங்கிட்டு வாறன் செல்லம் என்று குழைந்ததும் சரி சரி..என்று உணவு பரிமாற சென்று விட்டாள்..அதற்கடுத்த நாளிலிருந்து தொடங்கியது சண்டை..ஒவ்வொரு நாளும் மல்லிகா பூ கேட்பதும் அதை ரவி வாங்கிவராமல் சாக்கு போக்கு சொல்லி சமாளித்து பார்த்து இறுதியில் சண்டையில் தான் முடிவையும் அந்த நாள்.திருமணமாகி இந்த ஒருமாசத்தில என்னைக்காச்சும் ஒருநாளாவது பூ வாங்கிட்டு வந்திருப்பிங்களா?? ஒவ்வொருத்தனும் தான் பொண்டாட்டி கேக்காமலேயே தினம் பூ வாங்கிட்டு வந்து குடுக்குறாங்க..இங்க நான் தினம் கேட்டு கேட்டு பாத்து சலிச்சி போயிட்டேன் ஒருநாளுகூட வாங்கிட்டு வந்ததில்லை இந்த மனுஷன் இன்னைக்கு வரட்டும் வச்சிக்கிறேன் என்று இன்றைய கச்சேரியை துவங்கியிருந்தாள் மல்லிகா..ஆனால் ரவியோ இன்று எப்படியோ நியாபகமா மல்லிகை பூவை வாங்கியிருந்தான். அதனோடு சேர்த்து அல்வாவும் வாங்கியிருந்தான்..மாச சம்பளம் வாங்கிய மகிழ்ச்சியோடு நியாபகமாக பூ வாங்கி செல்லும் சந்தோசமும் அவனுக்குள் ஒருவித கற்பனையை உருவாக்க தொடங்கியது.வீட்டிற்கு சென்றவுடன் மல்லிகாவிடம் முதலில் சம்பளத்தை கொடுக்கணும்,அப்புறம் அவ சண்டை போட வாய திறக்கும் போது மறைச்சி வசிருந்த அல்வாவ அவ வாய்ல திணிக்கனும் அவ அந்த நேரத்தில எப்படியான முகபாவத்தோடு இருப்பாள்?டக்குனு அவளை இடுப்ப சுத்தி கட்டிபிடிச்சி இந்த பூவை அவ தலைல வச்சிவிடனும்..அப்ப அவ என்ன பேசுவா?என்ற பலவிதமான கற்பனைகளோடு வண்டியில் என்று கொண்டிருந்த ரவிக்கோ காத்திருந்தது அதிர்ச்சி..கற்பனைகளில் வாழ்ந்தவனாய் வண்டியில் சென்றவனை எதிரில் வந்த மினி பஸ் மோதி கீழ சாய்த்தது..மோதிய வேகத்தில் ரவி ஒரு புறமும் அவன் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் ஒரு புறமும் தூக்கி எறியப்பட்டார்கள்.தலையில் பலத்த காயத்தோடு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தான்..செய்தி கேள்விப்பட்டு துடித்தோடி வந்தாள் மல்லிகா.. தன் கணவனுக்கு ஒன்றுமாக கூடாது என குல தெய்வத்தை வேண்டியபடி அழுதுகொண்டே ஆட்டோவில் ஏறி சம்பவ இடத்திற்கு சென்றாள். அடிபட்டவரை ஆம்புலன்சில் வைத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாக அங்கிருந்தவர்கள் கூறியதும் வேகமாக ஆட்டோவில் ஏறி அரசு மருத்துவனைக்கு சென்றாள்.மருத்துவமனையில் முன்புறமிருந்த செவிலியரிடம் இப்ப விபத்துல அடிபட்ட ஒருவரை கொண்டு வந்தாங்களே அவர எங்க அட்மிட் பண்ணிருக்காங்க என பதட்டத்துடன் விசாரித்தாள்..அவர் மருத்துவனைக்கு கொண்டு வரதுக்கு முன்னாடியே இறந்துட்டாருமா..பிணவறையில வச்சிருக்காங்க போய் பாருங்க..அவரோட உடமைகள அந்த வார்ட் பாய்கிட்ட குடுத்துருக்கோம். போய் வாங்கிகோங்க என கூறி பிணவறைக்கு செல்லும் வழியை காண்பித்தாள். கணவனை காலன் கொண்டு சென்ற செய்தி அவள் தலையில் இடி போல் ஒலித்தது..கதறி அழுதவாறு பிணவறை நோக்கி ஓடினாள்..ரவியை கட்டிபிடித்து கண்ணீர் சிந்தினாள்.இப்படி என்னை தனியா விட்டுட்டு போகவா கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திங்க?ஐயோ ரவி என அவள் போட்ட அலறல் சத்தம் மருத்துவமனை எங்கும் அதிரும்படியாக இருந்தது..அந்த நேரத்தில் அங்கு வந்த வார்ட் பாய் அம்மா உங்க கணவர் அடிபட்டு கிடந்த இடத்தில இந்த பையும் கிடந்துச்சு,அவரோட தொலைபேசி,எல்லாம் அதுலயே இருக்குது..சரிபாத்துக்கோங்க என குடுத்து சென்றான்..வாங்கி பார்த்தவளால் தன் அழுகையை கட்டுபடுத்தவே முடியவில்லை..அந்த பையில் ரத்த கரையுடன் மல்லிகை பூ சிவப்பாக காட்சியளித்தது..இந்த ஒரு நாள் வாங்கி வந்தது இனி காலத்துக்கும் நீ வைக்கமுடியாதுன்னு காட்றதுக்கு தானா? என கதறி அழுது கொண்டிருந்தாள்..பின்னர் சகல சடங்களுடன் ரவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.. இன்று மல்லிகா தினம் ரவியின் புகைப்படத்திற்கு மல்லிகை பூ வாங்கி சூடி கொண்டிருக்கிறாள்..ரவின் நினைவாக....
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 33
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty பூ மலர்ந்து கெட்டுச்சாம். வாய் விரிந்து கெட்டுச்சாம்

Post by ramkumark5 Fri May 18, 2012 10:05 pm

பூ மலர்ந்து கெட்டுச்சாம். வாய் விரிந்து கெட்டுச்சாம்


சௌந்தர்யா ஒரு டென்ஷன் பார்ட்டி. எப்பவும் எதையாவது பத்தி யோசிச்சு டென்ஷன் ஆகுறது தான் அவளோட தனித்துவம். அன்று அவளின் திருமண நாள்.

எப்படியாவது தன் கணவருக்கு பிடித்த மாதிரி சமையல் செய்து கொடுக்க வேண்டும், அவருக்கு பிடித்த மாதிரி அலங்காரம் செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாள்.

கணவருக்கு மல்லி பூ வைத்துக் கொண்டால் பிடிக்கும் என்பதால் காலை கோவிலில் இருந்து வரும் போதே பூவினை வாங்கி வந்திருந்தாள். அதே போல் கணவருக்கு பிடித்த பால்கோவா செய்ய வேண்டும் என்பதற்காக பாலும் வாங்கி வந்திருந்தாள். கணவரை அசத்த வேண்டும் என்று டென்ஷனாகவே இருந்தாள்.

பாலை காய வைக்க பாத்திரத்தில் பாலை ஊத்தியவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பால் திரிந்து போயிருந்தது. இதை பார்த்ததும் அவள் டென்ஷன் எகிறியது. அவள் மாமியார் வந்து பார்த்து விட்டு, “பரவாயில்லை. விடு!! இந்த விஷயத்தை என் பையன் ட சொல்லாத. அவன் கஷ்ட படுவான்” என்று சௌந்தர்யாவை சமாதானப்படுத்தி விட்டு சென்றாள்.

ஆனால் கணவன் வந்ததும் முதல் வேலையாக பால் திரிந்த விஷயத்தை அவனிடம் கூறினாள். இதை கேட்ட அவன் மிகவும் மனம் வருந்தினான்.

தன் பையன் சோகமாக இருப்பதை கண்ட அவன் அம்மா அவனிடம் சென்று விசாரிக்க அவன் பால் திரிந்த விஷயத்தை தன் அம்மாவிடம் கூறினான்.

நேராக சௌந்தர்யாவிடம் சென்ற அவன் மாமியார் சௌந்தர்யாவை வெளுத்து வாங்க ஆரம்பித்தார். “ஏண்டி!! நான் தான் சொல்ல வேணாம்னு சொன்னேன்ல. நான் சொன்னதை செய்ய கூடாதுனு இருக்கியா. ஏன் தான் இப்பிடி இருக்கியோ” என்று திட்டி விட்டு சென்றாள். மறுபடியும் சௌந்தர்யாவுக்கு டென்ஷன். பால்கோவா தான் சொதப்பி விட்டது. மல்லி பூவாவது கணவரின் மன வருத்தத்தை போக்கும் என்று மல்லி பூவை எடுத்தாள். ஆனால் காலையில் வாங்கியதும் குளிர் சாதன பெட்டிக்குள் வைக்க மறந்ததால் அதுவும் கெட்டு விட்டது.

இதை பார்த்த அவள் மாமியார் “பூ மலர்ந்து கெட்டுச்சாம். வாய் விரிந்து கெட்டுச்சாம்.” என்று கூறி விட்டு தன் வேலைகளை பார்க்க சென்றாள். சௌந்தர்யாவுக்கு எப்பவும் போல மறுபடியும் டென்ஷன்... லெவன்சன்.... டுவல்ஷன்...........
ramkumark5
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 37
Location : Surat

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty Re: பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி

Post by ஹிஷாலீ Sat May 19, 2012 5:27 pm

பூக்களும் அதன் குணங்களும் : கட்டுரை

நான் தான் உங்கள் பூ பேசுகிறேன்

எனக்கு பூ என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா...?

தெரியாதே...

ம்ம் சொல்கிறேன் நான் பூமியிலே பிறந்து பூமியிலே இறப்பதால் எனக்கு பூ என்று பெயர் வைத்தார்கள் நம் முன்னோர்கள்

ஒ அப்படியா... ஒகே மற்ற பூக்களும் அடை மொழி உள்ளதே அது எப்படி வந்தது ....

அதுவா சொல்கிறேன் கேள்

கனகாம்பரம்: என் இதயம் கனமானது நான் இரண்டு மூன்று நாள் உயிர் வாழ்கிறேன், என் அறிவியற் பெயர் க்ராசோண்ட்ரா இன்ஃபண்டிபிலிபார்மிசு காலம் முழுவதும் பூப்பதால் கனகாம்பரம் என்று பெயர் வந்ததுரோஜா :ரோமியோ ஜூலியட் மாதிரி காதல் கொள்ளும் இதயங்களுக்கு அழகை கொடுத்து அமைதியை பெறுகிறேன் அதனால் ரோஜா என்று பெயர் வந்தது


முல்லை : பிள்ளை உள்ளம்போல் பேசும் வாசத்தில் மூளை முடுக்கெல்லாம் மூக்கை துளைத்து மணம் வீசுகிறேன் மேலும் பெண்களின் பால் நோயை விடுத்து வாழ்வதால் எனக்கு முல்லை என்று பெயரும்


அல்லி : ஒரு நாள் அழகு ராணி நான் இரவில் மலர்ந்து காலையில் குவிந்திருப்பேன் எண்ணில் 50 வகைகள் இருப்பதால் நான் அள்ளி என்ற பெயர் கொண்டேன்


சாமந்தி: அந்திப் பொழுதில் காதல் கொண்டு சாந்திகொள்ளும் இறைவனுக்கு சந்தன மாலையாய் சூடுவதால் என் பெயர் சாமந்தி
சாமந்தி பூவிலிருந்து கிடைக்கும் பைரித்ரம் பூச்சிக்கொல்லி யாகவும் கிரைசாந்திமம் சினரேரி போலியம் தயாரிக்கப்படுகிறது.
மேலும் வியாபாரிகளுக்கு நான் இலாபம் ஈட்டு தரும் நல் மலராய் பூக்கிறேன்மல்லி :மயக்கும் இல்லறத்தில் துள்ளி விளையாடி சொல்லி பேசும் காதலில் கள்ளி கள்ளி என்று அணைக்கு அன்பு உள்ளங்களுக்கு ஆசையை தூண்டும் அமிர்த ரசமாய் மேலும் எண்ணை கொண்டு அர்ச்சனை செய்தால். எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுவீர்கள் அதற்க்கு மேலும் நான் உங்களின் குடற்புழுக்களை அழிப்பதற்கும் தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி ஏற்படும் ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல் போன்ற தொல்லைகளிலிருந்து மீளலாம் உதவி செய்கிறேன்


மரிக்கொழுந்து: நாங்கள் வாடினாலும் வாசம் தந்து வாழும் வரை வாசத்துடன் வீழ்கிறோம் அதுமட்டுமா செம்பட்டை முடி நிறம் மாற என் இலைகள் உதவுகிறது. மலைகளையே மணக்க வைப்பதால் மரிக்கொழுந்து என்ற பெயர் கொண்டோம்


குறிஞ்சிப்பூ: பருவப் பெண்கள் போல் நான் பன்னிரெண்டில் பருவமடைந்து உலகின் அதிசய மலராய் காதல் கொண்டு குறிஞ்சி நிலமாய் வளம் கொளிக்கிறேன்.


வேப்பம்பூ: நான் அனைத்து வகையான நோயிகளுக்கும் வேர் முதல் நுனிவரை மருந்தாய் பூப்பதால் என் பெயர் வேப்பம்பூ
எண்ணை பற்றி அறியாதோர் இவ்வுலகில் யாரும் இல்லை.

அரளி பூ: நான் மிக அழகான அற்புத வடிவம் கொண்ட பூ எண்ணை பூஜைக்கும் பயன் படுத்துவார்கள் மேலும் நான் ஆட்களை கொள்ளும் விஷத்தன்மை கொண்டதால் அரளிபூ என்று பெயருடன் வாழ்கிறேன்.


வாழைப்பூ : நான் எண்ணற்ற நார்ச் சத்துக்களை கொண்டும் கொழுப்பு அமிலங்களும் போக்கும் நல் மருந்தாகவும் பழங்களை உருவாக்கும் ஊன்று கோலாய் நிலைத்து நிற்கிறேன்...!


இப்போது அறிந்தாயா நீ நாங்கள் அழகுக்கு பயன் படுகிறோம் மருத்துவ குணங்களுக்கும் பயன்படுகிறோம் மேலும் கவிஞர் களுக்கும் காற்றுக்கும் வானுக்கும் பேர் உதவியாகவும் ஓர் நாள் வாழ்ந்தாலும் உலகையே ஆண்டு வெற்றி பெறுகிறோம். அதே போல் மனிதர்களும் மனிதில் அழகும் ஈகை திறனும் கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை என்றுமே சிறக்கும்.


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty Re: பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 26, 2012 5:25 pm

போட்டி நடுவர்களுக்கு (நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) களுக்குத் தமிழ்த்தோட்டம் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

நடுவர்கள் தாங்கள் முதல் மூன்று இ்டத்துக்காக முன்னிருத்தும் தகுதியான படைப்புகளை 29 ஆம் தேதிக்குள் அனைத்துப் போட்டிப் பிரிவுகளிலும் (அந்தந்தப் பிரிவிலேயே மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி) வரிசைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty Re: பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி

Post by சரவணன் Tue May 29, 2012 10:54 am

1. பொன்மலர்
2. பூக்கள் பூக்கும் தருணம் (எழுத்து பிழைகளை கால அவகாசமிருந்தும் திருத்திக் கொள்ள மனம் வரவில்லாத காரணத்தால் இதற்கு முதல் இடம் கொடுக்க மனம் வரவில்லை)
3.பூவே பூச்சூடி வா
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 33
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty Re: பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 31, 2012 7:23 am

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

முதல் இடம்
by kishore1490 on Thu May 03, 2012 8:19 pm
"பூக்கள் பூக்கும் தருணம்"
பூக்கள் பூக்கும் தருணம், ஆருயிரே...

இரண்டாம் இடம்
by ramkumark5 on Sun May 06, 2012 10:56 pm
பொன் மலர்
பதிமூன்றாம் நூற்றாண்டு, தர்கூர் மாகாணத்தை போகாலன் என்ற அரசன் ஆட்சி செய்தான்...

மூன்றாம் இடம்
by சரவணன் on Mon May 07, 2012 11:50 am
ரவிக்கும் மல்லிகாவிற்கும் இன்று தான் திருமணம் முடிந்தது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty Re: பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி

Post by nadinarayanan Thu May 31, 2012 11:45 am

மிக்க மகிழ்ச்சி பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி 69767 மகிழ்ச்சி
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 31
Location : மதுரை

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty Re: பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி

Post by ருக்மணி Thu May 31, 2012 12:06 pm

பரிசு பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 35
Location : சூரத்

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty Re: பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி

Post by ஹிஷாலீ Thu May 31, 2012 12:28 pm

மூவருக்கும் என் அன்பு வாழ்த்துகளும் பாராட்டுக்களும். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty Re: பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி

Post by சரவணன் Thu May 31, 2012 12:58 pm

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 33
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty Re: பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி

Post by பார்த்திபன் Thu May 31, 2012 2:11 pm

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்! மிக்க மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 46
Location : பெங்களூரு

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty Re: பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி

Post by yarlpavanan Thu May 31, 2012 6:05 pm

வெற்றியாளருக்கு எனது வாழ்த்துகள்
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 53
Location : sri lanka

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty Re: பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி

Post by kishore1490 Fri Jun 01, 2012 12:16 am

நன்றி நண்பர்களே
kishore1490
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 32
Location : ambathur

Back to top Go down

பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி Empty Re: பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum