தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
+3
ஹிஷாலீ
ramkumark5
கவியருவி ம. ரமேஷ்
7 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஜூன்
Page 1 of 1
மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி அனைவரும் பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Jun 30, 2012 10:41 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
மழை நண்பன்
மழை நண்பன்
ஆனந்த் பொறியியல் படிக்கும் மாணவன். மிகவும் கலகலா துறுதுறு வகையறாவை சேர்ந்தவன். எல்லோரிடமும் மிக எளிதில் நட்பாகி விடுவான். தன் வகுப்பில் படிக்கும் ரம்யாவை ஒரு தலையாக காதலிக்கிறான்.
அன்று தன் நண்பர்களுடன் திரைப்படத்திற்கு செல்ல கிளம்பியிருந்தான். வானம் சற்று மேகமூட்டமாக இருந்தது. சிறுவயது முதலே ஆனந்துக்கு மழை என்றால் பிடிக்காது. இயற்கையையும், மனிதர்களையும் மிகவும் ரசிக்கும் ஆனந்திற்கு மழை என்றாலே பயத்துடன் கூடிய ஒரு வெறுப்பு.
பள்ளி காலங்களில் தன் நண்பர்கள் மழையில் நனைந்து விளையாடும் போது கூட ஆனந்த் தன் வீட்டு பூஜை அறையில் மழை நிற்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கொண்டிருப்பான்.
அன்றும் மழை தூறல் விழ ஆரம்பிக்க எப்போதும் போல் ஆனந்த் மட்டும் தன் விடுதி அறையிலேயே முடங்கினான். நாளை தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்ததும் தன் தேவதை ரம்யாவிடம் காதலை வெளிப்படுத்துவது என்று முடிவு செய்திருந்தான்.
மறுநாள் தன் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும் ரம்யாவிடம் தன் காதலை கூறினான். அதை கேட்ட ரம்யாவின் முகத்தில் அதிர்ச்சி. தான் பள்ளி காலத்தில் தன்னுடன் படித்த மாணவன் ஒருவனை காதலிப்பதாக கூறினாள். இதை கேட்டதும் ஆனந்துக்கு மனம் கலங்கியது.
மிகவும் சோகத்துடன் வகுப்பறையில் இருந்து வெளியேறினான். அவன் கல்லூரி கட்டிடத்தில் இருந்து வெளியே வர மழையும் பொழிய தொடங்கியது.
ஆனந்துக்காக மேகங்கள் கூடி அழ தொடங்கின. வாழ்வில் முதன் முறையாக மழையில் நனைய ஆரம்பித்தான். சில நொடிகள் மழைத்துளி அவன் மீது விழுவது வெறுப்பை ஏற்படுத்தினாலும் நேரம் செல்ல செல்ல அவன் மழையை ரசிக்க ஆரம்பித்தான்.
முதல் முறை மழையில் நனைவது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. தன் மனதிற்குள் இருக்கும் கவலையை மறந்து மழையில் நனைந்து, ஆட ஆரம்பித்தான். அன்று முதல் மழை அவனின் நண்பன் ஆனது.
இப்படிதாங்க நம்ம வாழ்க்கை’ல பல விஷயங்களை காரணமே இல்லாம வெறுத்து அந்த விஷயங்களை கடைசி வரைக்கும் அனுபவிக்காமலே விட்டுறோம். ஆக கடைசியா என்ன சொல்ல வர்றேன்னா “காரணமின்றி எதையும் வெறுக்காதீங்க. எந்தவொரு விஷயத்தையும் வெறுக்குறதுக்காகவே காரணம் தேடாதீங்க”.
ramkumark5- மல்லிகை
- Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 39
Location : Surat
சிவ! சிவா!!
சிவ! சிவா!!
சிறு வயது முதலே மழை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் மழையில் நனைவது என்றால் ரொம்ப ரொம்ப இஷ்டம். பள்ளி நாட்களில் நனைந்து கொண்டே கிரிக்கெட் விளையாடிய ஞாபகங்கள் இன்னும் மனதிலே பசுமையான நினைவுகளாய் உள்ளன.
மழை என்றால் எவ்வளவு இஷ்டமோ அந்த அளவு இடி என்றால் பயந்திடுவேன். இடி விழுந்தால் அடுத்த நொடி வீட்டுக்குள் ஓடி வந்து காதுகளை மூடிக் கொள்வேன். இந்த பயம் சில நேரங்களில் காய்ச்சல், ஜுரம் போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தியது. எனது இந்த பயத்தை கவனித்த என் தந்தை இடி விழும் நேரங்களில் சிவ! சிவா!! என்று சொல்லுமாறு கூறினார். அப்படி சொன்னால், இடி நம்மை பார்த்து பயந்து ஓடி விடும் என்றார்.
இடி பயந்து ஓடியதா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால் சிவ! சிவா!! என்று சொல்லும் போது மனதிற்குள் பயம் குறைந்து ஒரு விதமான நம்பிக்கை ஏற்படும்.
பின் ஒரு நாள் இரவு வீட்டு திண்ணையில் விளையாடி கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று பலத்த இடி சத்தம் கேட்க நான் சிவ! சிவா!! என்று கூறி மனதை சாந்தபடுத்தினேன் அப்போது ஒரு குட்டி பெண் என்னிடம் ஓடி வந்து “என்னைய கூப்பிட்டீங்களா அண்ணா?” என்றாள்.
அந்த பெண் என் வீட்டிற்கு எதிர் வீட்டில் புதிதாய் கூடி வந்திருக்கும் கனகராஜ் வாத்தியாரின் மகள் சிவானி. என்னை விட நான்கைந்து வயது இளையவள். அவளின் குரல் மழலை தனம் நிரம்பியதாய் இருந்தது. அக்கா, தங்கை என்று யாரும் இல்லாத காரணத்தினாலோ என்னவோ அவள் என்னை அண்ணா என்று அழைக்கவும் ஒரு விதமான ஈர்ப்பும், பாசமும் அவள் மீது தோன்றியது.
அவளை தூக்கி திண்ணையில் அமர வைத்து அவளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் மழை ஆரம்பிக்கவே இருவரும் மழையில் நனைந்து விளையாட ஆரம்பித்தோம். என்னை போன்றே அவளுக்கும் மழையில் நனைவது என்றால் ரொம்ப பிரியம்.
அன்று முதல் இருவரும் ரொம்ப நெருக்கமாகி விட்டோம். தினம் தினம் மாலை என் வீட்டிற்கு “அண்ணா நானும் வந்துட்டேன்” என்று ஓடி வந்துருவாள். தன் மழலை பேச்சாலும் சுட்டி செயல்களாலும் என் வீட்டில் எல்லோருக்கும் செல்லம் ஆனாள். என் பொம்மைகளும் விளையாட்டு உபகரணங்களும் அவளுக்கும் செல்லம் ஆனது.
அவள் குடும்பத்தில் எங்காவது ஊருக்கு கிளம்பினார்கள் என்றால் ‘அண்ணனை விட்டு வர மாட்டேன்’ என்று அடம் பிடிப்பாள். பல நேரங்களில் அவள் அம்மா வேறு வழியில்லாமல் சிவானியை அடித்து அழைத்து செல்வாள். அதை பார்க்கும் போது மனதிற்கு வருத்தமாய் இருக்கும்.
என் குடும்பத்தினர் கோவில், சுற்றுலா என்று வெளியூர் செல்லும் நேரங்களில், சிவானியை பிரிய மனமில்லாமல் நான் மட்டும் வீட்டிலேயே தங்கி விடுவேன். சில நேரம் சிவானியின் பெற்றோர் அனுமதியுடன் அவளையும் எங்களுடன் வெளியூருக்கு கூட்டி செல்வதுண்டு.
சிவானியின் அன்பும் பாசமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சில வருடங்களுக்கு பின் மீண்டும் அவள் தந்தைக்கு இட மாறுதலாகி விட அவர்கள் குடும்பம் வேறு ஊருக்கு புலம் பெயர்ந்தது. என் குடும்பமும் தந்தையின் தொழில் சம்பந்தமாக வெளி நாட்டில் குடியேற அதன் பின்னர் சிவானியை பார்க்கவோ, பேசவோ முடியவில்லை. அவள் நினைவுகள் மட்டும் இன்னும் என்னுள் நீங்காமல் நிற்கிறது.
இன்றுடன் பதினைந்து வருடங்கள் ஆகிறது அவள் என்னை விட்டு சென்று. இன்று இடி இடித்த போது கூட சிவ! சிவா!! என்று கூறி விட்டு கதவுகளை நோக்கினேன், சிவானி அண்ணா என்று ஓடி வருவாள் என்ற எண்ணத்தில். சிவ! சிவா!!

Re: மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்
ஓர் அழகிய கிராமம் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேர் என்று வயல்வெளிகள் பார்ப்பவர்கள் எல்லாம் வியப்புடன் தான் செல்வார்கள். அப்படி இருக்கையில் சில வருடங்கள் கழித்து தன் விவசாய ஆராச்சியை முடித்து வருகிறாள் ராணி.
அங்கே ஒரே மாடி வீடுகள் கூரை வீடே இல்லை அதைக் கண்டு ஆச்சிரியத்தில் மகிழ்ந்தாலும் அங்குள்ள அழிவைக் கண்டு கண்ணீர் வடித்தாள் காரணம் .....
படிப்பறிவில்லா மக்கள் எல்லாம் நாகரீகத்தில் மாறினாலும் விவசாயத்தில் கோட்டை விட்டார்கள் அதானால் மும்மாரிப் பேய வேண்டிய "மழை" பேயாமலே போனதால் விவசாய நிலங்கள் எல்லாம் தருசு நிலமாய் கிடந்தது. இந்த நிலை வரக் காரணம் எது என்றால் நம் பழக்க வழக்கங்கள் தான்
நாம் ஒரு நாயை வளர்த்தாலும் அதை எந்த முறையில் பழக்க படுத்துகிறோமோ அந்த முறைக்கே அதன் பண்பு மாறிவிடுகிறது. இன்னும் சொல்லப் போனால் ஆடு மாடு கழுதை குதிரை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் குழந்தைகள் கூட இன்றைய இயற்கைக்கு மாறாகவே வளர்கிறார்கள் வாழ்கிறார்கள் இது தான் உண்மை.
இதே போல் தான் இன்றைய பூமியும் மாறிவிட்டது எப்படி தெரியுமா....?
நெற்பயிர் விளைய வேண்டிய இடத்தில் வீட்டு மனைகள் பெருகியதால் அந்த கிராம மக்கள் விவசாயத்தை மறந்து விடுகிறார்கள். அதனால் மழையும் அவர்களை மறந்து விடுகிறது.
அதே போல் ஒவ்வொரு காய் கரிகளுக்கு ஏற்ப காற்றின் மணத்தில் வானம் காதல் கொள்ளும் அப்போது அந்த "வாசத்தில் மயங்கி மழையாக பொழியும்" என்பது நம் முன்னோர்கள் சொன்ன வேதம். ஆனால் இந்த கிராம மக்கள் மற்றப் பயிர்கள் விளைய வேண்டிய காலத்தில் வெறும் தருசு நிலமாய் விட்டு விடுகிறார்கள்.
இப்படியே ஆண்டு தோறும் செய்வதால் காற்றின் வரப்பு குறைகிறது இயற்கை சுழல்கள் தன் பண்பை மாற்றிக்கொண்டு அவர்கள் சூழலுக்கேற்ப தன் பருவ மழையை மாற்றிவிட்டது மேலும் அவர்கள் எப்போது பயிர்கள் விளைவிக்கிறார்களோ அப்போதைக்கு மழை பொழியும் பண்பு அந்த மண்ணில் மாறிவிட்டது.
இதனால் தன் தேவைக்கு மேல் பயிரிடுவதை நிறுத்திக்கொண்டு மற்ற நேரங்களில் அங்கே கிரிக்கெட் கபடி, கொட்டங்குச்சி இப்படி பல ரக விளையாட்டுகள் விளையாடும் இடமாகவே பயன் படுத்த தொடங்கினார்கள். இதனால் மழை வரத்து குறைந்து அந்த கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக அழிய தொடங்கியது இதைக் கண்ட ராணி அவர்கள் செய்யும் தவறுகளை அவர்களுக்கு விலக்கினாள் அவர்களும் தன் தவறை உணர்ந்து விவசாயம் செய்ய முடிவு செய்தார்கள்.
ஆனால் வீடுகளை அழித்து மீண்டும் விவசாயம் செய்தால் விவசாயம் வருமா....? இல்லை மழை தான் பொழியுமா...? என்ற கேள்விகள் அவர்களுக்குள்ளே வந்தது. உடனே தன் தவறுகளை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டவேண்டும் என்றும் முடிவு செய்தார்கள். அப்போது தான் முன் போல் வான் மகள் மாறி மும்மாரி பருவ மழை பொழிவாள் என்று நம்பினார்கள்.
உடனே தங்கள் ஊர் போல் மற்ற ஊர்களும் மாறிவிட்டால் அடுத்து வரும் ஜென்மங்களில் சோறும்,தண்ணி இல்லாமல் உலகமே அழியும் தருவாய் வந்துவிடும் என்று உணர்ந்தார்கள். மற்றவர்களையும் தன் தவறை உணரும்படி ஊர் ஊராய் சென்று விழிப்புணர்வு செய்தார்கள்.
இறுதியில் ஊர் மக்கள் அனைவரும் நல்லவேளை இந்த ராணி விவசாயத்தை கற்று வந்ததாள் எங்கள் ஜென்மங்கள் இன்னும் பசி பட்டினி மழை என்ற பஞ்சம் இல்லாமல் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை வந்தது மேலும் எங்கள் பிள்ளைகளையும் விவசாய படிப்புக்கே அனுப்புவோம் என்று சபதம் செய்ததுடன் ராணிக்கு நன்றி கூறினார்கள். அவளும் நான் என் கடமையை தான் செய்தேன் என்றும் தான் கற்ற கல்விக்கு நன்றி கூறினாள்.

ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
முதல் இடம்
ramkumark5 on Fri Jun 15, 2012 1:04 pm
சிவ! சிவா!!
இரண்டாம் இடம்
ஹிஷாலீ on Mon Jun 18, 2012 2:42 pm
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்...
நண்பர்களுக்குப் பாராட்டுகள்.
முதல் இடம்
ramkumark5 on Fri Jun 15, 2012 1:04 pm
சிவ! சிவா!!
இரண்டாம் இடம்
ஹிஷாலீ on Mon Jun 18, 2012 2:42 pm
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்...
நண்பர்களுக்குப் பாராட்டுகள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்...
-
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31823
Points : 70075
Join date : 26/01/2011
Age : 80
Re: மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
வெற்றி பெற்ற (ராம், ஹிஷாலீ) கு வாழ்த்துக்கள்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 37
Location : சூரத்
Re: மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ramkumark5- மல்லிகை
- Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 39
Location : Surat
Re: மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் பங்குபற்றியோருக்கும் எனது பாராட்டுகள்...
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்..
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» திருமணம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» திருமணம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஜூன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum