தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மனதைக் கொன்று வாழ்வதா?
4 posters
Page 1 of 1
மனதைக் கொன்று வாழ்வதா?
தேடிவந்து அறிவு ஒட்டிக் கொள்வோருமுண்டு
தேடிச்சென்று அறிவு பெற்றுக் கொள்வோருமுண்டு
கற்பூரமன்ன மூளை கொண்டோரும் உண்டு
கடைந்தெடுத்த நெய் யொப்ப அறிவு கொண்டோருமுண்டு
ஆற்றொழுக்கன்ன அறிவு பாய்ந்தோடுவோரும் உண்டு
தேக்கிவைத்த கிணற்று நீரன்ன அறிவாளிகளுமுண்டு
இவள் தேடிச்சென்று அறிவு சேர்த்தெடுக்கும் பெண். வலிந்து கற்று வாழத்துடிக்கும் ஒருத்தி. கல்வி மேல் கொண்ட காதலால் கல்யாண வலையில் சிக்காது கல்லூரி கண்டு பல்கலைக்கழகம் புகுந்தாள். கல்விக்காந்தம் தேடிச் செல்ல காதல் காந்தம் தேடி வந்தது. ஒறுப்பதும் மறுப்பதும் அவள் குணமாக தன்னை வருத்துவதும் வலுக்கட்டாயமாய்த் தன்னிடம் இழுப்பதும் அவன் குணமானது. விடியலில் வதிவிடத்தில் வருந்தி இறையிடம் வணங்குவாள். இன்று அவன் முகத்தைக் காணவே கூடாது. சற்றும் என் குடும்பத்திற்கும் மதத்திற்கும் இனத்திற்கும் பொருத்தமில்லாத அவன் என் குடும்பத்தில் இணைந்தால் குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பாவேன். தலைநிமிர்ந்த என் தந்தை போக்கிற்கு தலை குனிவை ஏற்படுத்திவிடுவேன். ஆனாலும் அவனைக் காணும் போதெல்லாம் மனம் தடுமாறுகின்றதே? என் மனதிற்கு உறுதியைத் தா இறைவா! எனக் கண் கலங்குவாள். வெளியே செல்வாள். 1 நிமிடம் பேச அநுமதி கேட்டு விரைந்து முன்னே வந்து இறைஞ்சி நிற்பான். ஆண்டவனிடம் கேட்ட 30 நிமிட வேண்டுதல் விடைபெறும். எங்கே இந்தக் கடவுள். தவிர்ப்பதற்கான தன் பக்க நியாயங்களை எடுத்துரைப்பாள். தன் கையைக் கீறி இரத்தம் காட்டுவதும், புதிதாகச் சிகரெட் புகைத்து இழுப்பதுவும் அவன் செயல்களாகின. இவ்வாறான செய்கைகளின் போது அவள் மனதில் அவன் மேல் வெறுப்பு அதிகமாகியது. நடித்தாள், அவனைக் காணும் போதெல்லாம் காதலிப்பதாய் நடித்தாள். கல்விக்காலம் முடியும் வரை இரட்டை வேடம் போட்டாள். கற்கைக் காலம் முடிந்தது அவன் தொடர்பை அறுத்தாள். வேறு திருமணம் ஏற்றாள். இனிதாய் வாழுகின்றாள். இது சம்பவம். ஆராயத் தொடங்கியது இப்படைப்பு.
அவள் பக்கப் பார்வையில் அவள் செய்தது நியாயம். அவன் பக்கப்பார்வையில் அவள் செய்தது துரோகம். அவள் இன்று கேட்கும் கேள்வியானது. இந்த இறைவன் ஏன் என் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை. இதுதான் நடக்கும் என்பது விதியானால், இந்த வேண்டாத இடையூறுகள் வில்லங்கமாய் இடைச்செருகலாய் வாழ்க்கையில் நுழைகின்றன. இது அவள் வாழ்க்கையில் ஒரு சம்பவம். சரித்திரமல்ல.
காதலென்று தன் மனதிற்கு அவள் துரோகம் செய்ய விரும்பவில்லை. காதல் பறவைக்கும் வரும். விலங்குகளுக்கும் வரும். உயிரினங்கள் அனைத்திற்கும் வரும். தன் இன்பத்திற்காகத் தன்னைப் பெற்றவர்கள் மனம் புண்பட அவள் இடம் தரவில்லை. பாசம், அன்பு என்பவை எல்லாம் உடலுள் ஊறிக் கொண்டிருக்கும் ஓமோன்களின் தொழிற்பாடே அவ்வக் காலங்களில் தோன்றுகின்ற உடலுள் மனதுள் ஏற்படும் மாற்றங்களைக் கட்டுப்படுத்திவிட்டால், உலகம் சிறக்க வாழலாம் என்னும் உண்மையை உணர்ந்தவள். பறவையும் தன் பிள்ளைக்கு தேடி உணவூட்டும். சிறகு முளைக்க தன்னிச்சையாய் வாழத் தகுதியுண்டென்று அநுமதி தந்துவிடும். குரங்கு தன் குட்டியை தூக்கி வளக்கும். கொப்பிழக்கப் பாயும் போது தன் கைவிட்டு விட்டால் தனியே வாழ அநுமதி தந்துவிடும். இழந்த கன்றுகளைத் தேடிப் பசுவும் கண்ணீர் விடும். படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிடமும் பாசம் உண்டு. காதல் உண்டு. கடலுக்குள் கணக்கிடமுடியாத உயிரினங்கள் அற்புதமான உடல் வனப்புக்கள் தொழிற்பாடுகள் உண்டு. அவை சிலவற்றிற்கு உயிருண்டு குடல் இல்லை. அவையும் உயிர் வாழ்கின்றன. நண்டு, சிப்பி, வேய், கதலி நாசமுறும் காலம் கொண்ட கருவழிக்கும். உலகுக்குப் பிள்ளையை ஈன்றுவிட்டுத் தம் உயிர் இழக்கும். இவற்றின் பாசத்திற்கு ஈடாக எதைச் சொல்வது. இப்பாசம் பற்றி எண்ணிப் பார்ப்பார் யாருண்டு.
பாசமோ, நேசமோ, காதலோ காலங்கடந்திட துன்பம் மறைந்திட நினைவுகள் மாத்திரம் திரையாக அவ்வப்போது வந்துபோகும். அவை கூட நீண்ட இடைவெளியின் பின் மறைந்து போகும். தன் மனம் அன்று எது சரியென்று எண்ணுகின்றதோ அதைச் சரியாகச் செய்ய வேண்டியதுதான் சிறப்பு. உயிருள்ள தாவரங்களையும் மிருகங்களையும் கறியாக்கி விடுகின்றோம். மனிதர்களுக்கு மட்டும் ஈமக்கிரிகைகள் செய்கின்றோம். அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்பதனாலேயோ மற்றைய உயிரினங்களைவிடத் தமக்கு அன்பின் வலிமை அதிகம் என்று மனிதர்கள் கருதுகின்றார்களோ. மனிதர்களே தாவரங்கள், மிருகங்கள் அனைத்தின் கலங்களையும் தம்முள் அடக்கிய உருவமாகத்தான் காணப்படுகின்றார்கள். ஜேர்மனியிலே ஒரு பன்றி ஒரு இறைச்சிக்கடையினுள் புகுந்து கண்ணாடிகளை உடைத்து பெரிய அட்டகாசம் பண்ணியிருக்கின்றது. அதன் உணர்வுப் பிரபாகத்தை எண்ணி ஜேர்மனியர்கள் வியந்திருக்கின்றார்கள். அப்பன்றியானது தன் இனம் கொல்லப்படுவதைக் கண்டு துடித்திருக்கின்றது. நாய் பன்றிக்குப் பாலூட்டியதும். தான் வளர்த்த ஆட்டுக்குட்டிக்குத் தன் முலைப்பாலை ஒரு பெண் ஊட்டியதும் பாசத்திற்கு எடுத்துக்காட்டுக்களே. உணர்வுகள் உள்ளங்களில் வெளிப்படுதல் உறுதியே. அதே உள்ளங்கள் உணர்வுகளை தேவை நிமித்தம் உள்ளடக்கலும் தேவையே. மனதைக் கொன்று வாழ்தலை விட மனதுக்கும், எம்மைச் சார்ந்து நிற்போர் ஆசாபாசங்களுக்கும், சூழல் சுற்றங்கள் விருப்புகளுக்கும் ஏற்ப ஆசைகளை கட்டுப்படுத்தும்போது எதிர்கால வாழ்க்கையில் இன்பத்தை அநுபவிக்கலாம். மனதைக் கொன்று வாழ்வதா? மனதுக்கேற்ப வாழ்வதா?.....
[You must be registered and logged in to see this image.]
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: மனதைக் கொன்று வாழ்வதா?
பாசமோ, நேசமோ, காதலோ காலங்கடந்திட துன்பம் மறைந்திட நினைவுகள் மாத்திரம் திரையாக அவ்வப்போது வந்துபோகும். அவை கூட நீண்ட இடைவெளியின் பின் மறைந்து போகும்.
---
என்ற கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை
காதலுக்கு மறக்கும் - மறைக்க வைக்கும் சக்தி கிடையாது. அதுதான் காதலின் தனிச் சிறப்பே
---
என்ற கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை
காதலுக்கு மறக்கும் - மறைக்க வைக்கும் சக்தி கிடையாது. அதுதான் காதலின் தனிச் சிறப்பே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மனதைக் கொன்று வாழ்வதா?
மனிதனுக்கு மறதி என்ற சக்தி இருப்பதனால்தான் அவன் வாழ்கின்றான் . இல்லையென்றால்.உலகத்தில் பைத்தியங்கள்தான் அதிகரித்திருக்கும். காதலில் விழுந்தவர்கள் அது நிறைவேறாது போக வேறு கல்யாணம் செய்து வாழவில்லையா ? இப்படி உலகத்தில் எத்தனைபேர் மனைவியுடன் சந்தோஷமாக வாழுகின்றார்கள். காதல் நினைவுகள் வரலாம்.ஆனால் மூளை இருக்கிறதே . அடிக்கடி நினைவு படுத்துகின்ற விடயங்களைத்தான் நினைவில் வைத்திருக்கும் . மற்றவற்றை ஒரு மூலையில் போட்டுவிடும். நாள் செல்ல கரும்பலகையில் எழுத்துக்களை அழிப்பதைப் போல் அழித்திவிடும். நாம் படிக்கின்ற காலத்தில் படித்த அத்தனை விடயங்களும் ஞாபகத்தில் இருக்கின்றனவா . சிந்தனைக்கே ......
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: மனதைக் கொன்று வாழ்வதா?
அருமையான கதை பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனதைக் கொன்று வாழ்வதா?
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» மனதைக் கவரும் பசுமையான வீடுகள்
» மனதைக் கொள்ளை கொள்ளும் மாலை சூரியன்
» இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்?
» ரஷியாவில் 30 பேரை கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட கணவன்-மனைவி கைது
» 4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது
» மனதைக் கொள்ளை கொள்ளும் மாலை சூரியன்
» இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்?
» ரஷியாவில் 30 பேரை கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட கணவன்-மனைவி கைது
» 4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum