தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
நெல்லிக்கனி
3 posters
Page 1 of 1
நெல்லிக்கனி
இதய நோய் தீர்க்கும் நெல்லிக்கனி!
சிறியதாக இருந்தாலும் இதயத்துக்கு நன்மை பயக்கக்கூடியது நெல்லிக் கனி. அதியமான் இதை உணர்ந்தே நீண்டநாள் வாழத் தனக்கு அற்புத மான நெல்லிக்கனி கிடைத்தும், பெருந்தன்மையோடு அதை அவ்வைப் பிராட்டிக்கு அளித்து அவரை உண்ணச் செய்தான். இதயத்துக்கு இனிய அமுதமாக விளங்கும் நெல்லிக்கனியைப் பற்றி பல உண்மைகள் மறைந்துள்ளன.
நெல்லிக்கனியை இந்தியில் `ஆம்லா’ என்கிறார்கள். இதன் தாவரவியல் பெயர் `எம்பிலிகா அபிசினாலிஸ்’.(emblica officinalis)
முதிர்ந்த நெல்லிக்கனி பச்சை, மஞ்சள் கலந்த நிறத்தில் பளபளப்போடு ஆறு அழகிய துண்டுகள் அடங்கிய உருண்டைக் கனியாகக் காட்சியளிக் கும். சற்றுத் துவர்ப்பாக இருந்தாலும் இதன் சதைப்பற்றைச் சுவைத்துச் சாப்பிட்டதும் ஒரு குவளை தண்ணீர் அருந்தினால் இதன் இன்சுவையை உணரலாம்.
இதயக் கோளாறு உள்ளவர்கள் அலோபதி இதயநோய் நிபுணர்கள் கூறும் அறிவுரைகளைக் கவனிக்க வேண்டும். நெல்லிக்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் கூறும் உண்மைகள் நமக்கு வியப்பை அளிக்கும்.
நெல்லிக்கனிச் சாற்றில் `வைட்டமின் சி’ சத்து அதிகம். அதாவது, ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட 20 மடங்கு. ஒரு சிறு நெல்லிக்கனியை உண்பது இரண்டு ஆரஞ்சுப் பழங்களைச் சாப்பிடுவதற்குச் சமம். தொற்று நோய் தடுப்புச் சக்தியைப் பெற நெல்லிக்கனிச் சாற்றைப் பருகலாம். கொழுப்புப் பொருளைக் கரைக்கும் தனித்தன்மையும் இதற்கு உண்டு என்று தெரிவிக்கப்படுகிறது. ரத்தம் சீராகப் பாய்வதைத் தடுக்கும் கொழுப்புப் பொருளை நெல்லிக்கனிச் சாறு கரைத்துவிடுவதால் இதயத்துக்குப் பலம் சேர்ப்பதாக இது அமைகிறது.
ரத்த சோகையைக் குணப்படுத்தும் அருங்கனியான நெல்லி, ஆறாத ரணத்தை ஆற்றுவதுடன், எலும்பு முறிவைச் சீராக்கி, குடல் ரணத் தையும் குணப்படுத்தும்.
தாய்ப்பால் சுரக்க நெல்லிக்கனி வகை செய்கிறது. அதன் அமிலச்சத்து மலச்சிக்கலை நீக்கும். `ஹெமரேஜ்’ என்ற ரத்தப் போக்குக்கும், அஜீ ரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்குக்கும் ஏற்ற கனி இது.
ரத்த சோகை, மஞ்சள் காமாலை, உணவில் வெறுப்பு நிலை, தீராத இருமல் ஆகியவற்றுக்கு நெல்லிக்கனி விடை கொடுக்கும்.
திரிபலா சூரணத்துக்கு நெல்லிக்கனியை அவசியம் உபயோகிக்க வேண் டும். கல்லீரலைப் பலப்படுத்திச் சரிவர இயங்கச் செய்யும் சக்தி பெற்றது நெல்லி.
ஆசியாவில் அதிகம் விளையும் நெல்லிக்கனியின் மகத்துவத்தை மேலை நாட்டினரும் உணர்ந்து மருத்துவத் துறையில் பயன்படுத்து கிறார்கள்.
இளநரையைக் குணப்படுத்தும் அற்புத சக்தி நெல்லிக்கனிக்கு இருக் கிறது. கூந்தல் தைலம், ஷாம்பூ ஆகியவற்றைத் தயாரிப்பதற்கும் இது பயன்படுகிறது. அச்சுத் துறைக்கான மை வகைகள் தயாரிக்கவும், `ஹேர் டை’ தயாரிக்கவும் நெல்லி ஏற்றது.
மருத்துவர்கள் ஆஸ்துமா நோயைக் குணப்படுத்த இதன் விதைகளைப் பொடி செய்து உண்ணச் சொல்கிறார்கள்.
நெல்லியின் கனியும், கொட்டையும் பயன்படுவதோடு, பட்டையையும், இலையையும் தோலைப் பதனிடும் தொழிற்சாலைகளும் அதிகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
நெல்லிக்கனியை இந்து மதத்தினர் மிகவும் போற்றுகிறார்கள். நெல்லி மரத்தை வழிபடுவதும் உண்டு. அக்சய நவமி அன்று வன போஜனம் செய்பவர்கள் நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து கூட்டமாக உணவு உண்பதைப் புனிதமாகக் கருதுகிறார்கள்.
இதற்கும் மேலாக, முதல்நாள் உண்ணா நோன்பு இருந்தவர்கள், மறுநாள் விரதம் முடித்து உணவு உண்ணத் தொடங்கும்போது முதலாவதாக நெல்லிக்கனியையோ அல்லது உலர்ந்த நெல்லிக்கனியையோ அரைத்து மோரில் சேர்த்துப் பருகிய பின்பே சாப்பிடத் தொடங்குகிறார்கள்.
நெல்லிக்கனி உடல் ஆரோக்கியம் தரும் ஊறுகாயாகவும், உலர்த்தி வைத்தும் பயன்படுத்த ஏற்றது.
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: நெல்லிக்கனி
நெல்கனிக்கு இவ்வளவு மருத்துவக்குணம் உள்ளதா மிக்க நன்றிக்கா அறியத்தந்தமைக்கு
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நெல்லிக்கனி
தேவையான நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நெல்லிக்கனி!
» மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி
» மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி
» மாணவர்கள் நினைவாற்றல் அதிகரிக்க நெல்லிக்கனி!!
» முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ நெல்லிக்கனி..!
» மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி
» மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி
» மாணவர்கள் நினைவாற்றல் அதிகரிக்க நெல்லிக்கனி!!
» முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ நெல்லிக்கனி..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum