தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் ! நாள் ஒரு சிந்தனை :வாழ்வியல் ! வா .செ.குழந்தைசாமி ! தொகுப்பு பேரா .இரா .மோகன் !! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

2 posters

Go down

குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் !  நாள் ஒரு சிந்தனை :வாழ்வியல் !  வா .செ.குழந்தைசாமி !  தொகுப்பு பேரா .இரா .மோகன் !!  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் ! நாள் ஒரு சிந்தனை :வாழ்வியல் ! வா .செ.குழந்தைசாமி ! தொகுப்பு பேரா .இரா .மோகன் !! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Mon Jun 25, 2012 4:52 pm

குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் !

நாள் ஒரு சிந்தனை :வாழ்வியல் !

வா .செ.குழந்தைசாமி !

தொகுப்பு பேரா .இரா .மோகன் !!

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நூலின் தொகுப்பு ஆசிரியர் தமிழ்த்தேனீ பேரா .இரா .மோகன்அவர்கள் தமிழ்த்தேனீ என்ற படத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பதை மெய்ப்பிக்கும் நூல் இது . தமிழறிஞர் வா .செ.குழந்தைசாமி அவர்கள், குலோத்துங்கன் என்ற புனைப்பெயரில் கவிதை படைத்தது வரும் சிறந்த கவிஞர்.பன்முக ஆற்றலாளர் .அவரது படைப்புகளிலிருந்து தேனீ மலர்களிலிருந்து தேன் எடுப்பது போல் எடுத்து ,தொகுத்து வழங்கி உள்ளார்கள் . குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் -அறிவுப்பசி போக்கும் கதிர் -தானியமாகவும் உள்ளது .அறியாமை இருள் போக்கும் ஒளிக்கதிராகவும் உள்ளது .


தமிழறிஞர் தமிண்ணல் அவர்களின் அணிந்துரை நூலிற்கு அணி சேர்ப்பதாக உள்ளது . தமிழறிஞர் வா .செ.குழந்தைசாமி அவர்களின் படைப்புகளான - உள்ளத்தில் ணியுளர் உயர்வர் ,குலோத்துங்கன்கவிதைகள் ,மானுட யாத்திரை 3 பாகங்கள் ஆகியவை .இயந்திர மயமான இன்றைய உலகில் வாசிக்கும் பழக்கம் வழக்கொழிந்து
தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் பெருகி வரும் காலத்தில் அய்ந்து நூல்களும்
படிக்க நேரமும் ,வாய்ப்பும் இல்லாதவர்கள் இந்த ஒரு நூலைப் படித்தால் போதும்
.
தமிழறிஞர் வா .செ.குழந்தைசாமி அவர்களின்படைப்பாற்றலை குன்றத்து விளக்கென ஒளிர்ந்திடும் வண்ணம் மிகச் சிறப்பாக தொகுத்து உள்ளார் . தொகுப்புஆசிரியர் பேரா .இரா .மோகன் அவர்கள் .
இந்த நூலில்ஒரு வரி கூட தேவையற்ற வரி இல்லை ..அனைத்தும்
வைர வரிகள் .நூல் விமர்சனத்தில் எல்லா வரிகளையும் எழுதி விட முடியாது
.எனக்குப் பிடித்த சில வரிகளை உங்கள் ரசனைக்கு பதச் சோறாகக் காண்க .
இந்த வரிகளை படிப்பதோடு நின்று விடாமல் வாழ்வில் கடைப் பிடிக்கத்
தொடங்கினால் வாழ்வு வளம் பெறும் . இன்ப ஒளி வீசும் .துன்ப இருள் நீங்கும்
.

ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் புத்தர்.அறிஞர்
வா .செ.கு. அவர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார் .

ஆசை எனும் பசி
ஆசை போல் பசி
யொன்றில்லை .

பசி என்ப
து வாழ்க்கை முழுவதும் தொடரும் .அது போலவே பலருக்கும் ஆசையும் தொடர்கின்றது என்பதை நன்கு உணர்த்துகின்றார் .

தாழ்ந்த இனம் உயர்ந்த மொழி சமைத்ததில்லை !
தானாக எம்மொழியும் வளர்ந்ததில்லை !

இந்த வரிகளைப் படித்ததும் தமிழர்கள் தமிழ் மொழியை வளர்க்கா விட்டாலும் ,சிதைக்காமல் இருந்தால் சரி என்று எண்ணத் தோன்றியது . அச்சம் என்பது மடமையடா !
என்ற கவி அரசு கண்ணதாசன் வைர வரிகளை வலி மொழிவது போல் உள்ள வைர வரிகள் .

அச்சம்நின் று
வும் நெஞ்சில்
ஆளுமை செழித்தல் இல்லை .

நிமிர்ந்து நின்று
முயல்வது மனிதம் !

ஆறிலும் சாவு நூறிலும் சாவு கேள்விப்பட்டு இருக்கிறோம் . எதிர்முக சிந்தனையை நேர்முக சிந்தனையாக சிந்தித்து உள்ளார் வா . செ.கு .
ஆறிலும் கல்வி ,
நூறிலும் கல்வி
இன்றைய பணி
இன்றைய கருவி !
இன்றைய பணியை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும் .இன்றைய பணியை நேற்றைய கருவி கொண்டு செய்யும் மக்களின் நாளைய வாழ்வு நலியும் .

அறிவியல் முன்னேற்றத்திற்கு வலி மொழியும் வைர வரிகள் .


மூடரால் சமுதாயம் நைந்தது !

தான் கண்ட பாதை தான்
சரியென்ற
மூடரால்
சமுதாயம் நைந்த தம்மா !

மானுடத்தின் ஏணி !

தரமுடையோர் தாழ்வதில்லை
நிமிர்ந்து நிற்கும்
ஏற்புடையார் மானிடத்தின்
ஏணி வாழ்வில்
ஏறுநடை பொது அங்கு
ஏழை இல்லை .


நூல் ஆசிரியர் .தொகுப்பு ஆசிரியர் இரண்டு பேரின் ஆளுமையைப் பறைசாற்றும் விதமாக நூல் உள்ளது .தொகுப்பு ஆசிரியர் உழைப்பைக் கண்டு வியந்து போனேன் .

எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டு ,அந்த ஊ
ர் செல்லும் பேருந்தில் பயணிக்க வேண்டும் .அதுபோல் மனிதனுக்கு குறிக்கோள் வேண்டும் .அதனை உணர்த்தும் வரிகள் .

தேவை ! உயந்த
குறிக்கோள்
ஓர் உயர்வு ,நீண்ட காலக்
குறிக்கோள் என்பது ஒரு நாட்டுக்கும் தேவை .தனி மனிதனுக்கும் தேவை .அது நம் பாதைக்கு ஒளி காட்டும் .பயணத்திற்குத் திசை காட்டும் .

மூடநம்பிக்கையில் மூழ்கித் தத்தளிக்கும் மனிதர்களுக்கான அற்புத வரிகள் இதோ !

பகுத்தறிவே சமுதாயத்தின் நந்தாத தீப்பந்தம்
விழிப்புணர்வே சமுதாயத்தின்
நந்தாத தீப்பந்தம்
வய்ய
வாழ்வின் நங்கூரம்!

வித்தியாசமான முயற்சி
தொகுப்பு ஆசிரியர் பேரா .இரா .மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .நாள் ஒரு சிந்தனை என்று 365 நாட்களுக்கு 365 சிந்தனை நூலில் உள்ளது .வா .செ.குழந்தைசாமி என்ற படைப்பாளியின் படைப்பிலிருந்து படைப்பாளியே
வியக்கும் வண்ணம் மிகச் சிறப்பாக தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .




--

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் !  நாள் ஒரு சிந்தனை :வாழ்வியல் !  வா .செ.குழந்தைசாமி !  தொகுப்பு பேரா .இரா .மோகன் !!  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் ! நாள் ஒரு சிந்தனை :வாழ்வியல் ! வா .செ.குழந்தைசாமி ! தொகுப்பு பேரா .இரா .மோகன் !! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by கலைநிலா Mon Jun 25, 2012 6:45 pm

நன்றி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் !  நாள் ஒரு சிந்தனை :வாழ்வியல் !  வா .செ.குழந்தைசாமி !  தொகுப்பு பேரா .இரா .மோகன் !!  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் ! நாள் ஒரு சிந்தனை :வாழ்வியல் ! வா .செ.குழந்தைசாமி ! தொகுப்பு பேரா .இரா .மோகன் !! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Mon Jun 25, 2012 10:17 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலக்கிய இணையர் படைப்புலகம்! நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி ! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்,
» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு
» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் முதுகலைத் தமிழாசிரியர் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, மதுரை
» தமிழ் இலக்கியத்தில் உடன்பாட்டுச் சிந்தனை! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» இலக்கிய மாலை ! ( அணிந்துரைகளின் தொகுப்பு ) நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum