தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விளக்குகள் எரியாத வீதி* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
2 posters
Page 1 of 1
விளக்குகள் எரியாத வீதி* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
* நூல் ஆசிரியர் : கவிஞர் கோவை பழநிசாமி
இரணியன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு பெருமை சேர்க்கின்றது.”விளக்குகள் எரியாத வீதி” தலைப்பைப் படித்ததும் நம் நினைவிற்கு வருவது நாம் பார்த்த விளக்குகள் எரியாத வீதி.இருளாக இருக்கும் அந்த வீதி.ஆனால் இந்த வீதி அறிவு ஒளியாக உள்ளது.”கடவுள்” என்ற முதல் கவிதையிலேயே படிப்போரின் உள்ளம் கவர்ந்து விடுகிறார்.
கடவுள்
கல்வி கடவுள் கடமை கடவுள்
நல்லவை கடவுள் நன்றி கடவுள்
நன்மை கடவுள் நன்னெறி கடவுள்
அன்பு கடவுள் அறிவு கடவுள்
பண்பு கடவுள் பணிவு கடவுள்
உண்மை கடவுள் உழைப்பு கடவுள்
சமத்துவம் கடவுள் சகோதரத்துவம் கடவுள்
இவை இல்லாமல் ஏதோ கடவுள்?
இந்தக் கவிதையில் எனக்கு மிகவும் பிடித்தது கடைசி வரி தான்.
“எப்படி”
மெல்ல மெல்ல நான் உனக்குள் கரைந்து
உனக்குள் காணாமல் போனது எப்படி? இப்படி காதலையும் பாடுகின்றார்
நூலில் காதல் கவிதைக்கு பஞ்சம் இல்லை.கொஞ்சம் சமுதாயச் சாடல்களும் உள்ளது.இன்றைக்கு பெண்களை போகப் பொருளாகக் காட்டி பணம் குவித்து வரும் ஊடகங்கள் கவனிக்க வேண்டிய கவிதை இது.
“பெண்மையே” காட்சிப் பொருளில்லை பெண்மை-வெறும்
கவர்ச்சிப் புயலில்லை பெண்மை
சூரியனாய்ச் சுட்டெரித்தும் தாக்கும் – சுடர்
விழியிரண்டில் அன்பும் விளையாடும்.
பெண்ணின் பெருமையை நன்கு பதிவு செய்துள்ளார்.
விளைநிலங்கள் எல்லாம் உலகமயம் என்ற பெயரில் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு போட்டி போட்டு தாரை வார்த்து வருகின்றனர்.இந்நிலை தொடர்ந்தால் மனித இனம் உண்ண உணவின்றி வாடும் நிலை வரும்.
படிப்பினை
காடுக ளெல்லாம் வீடானால்
கழனி களின் கதியென்ன?
கானகம் எல்லாம் வீணானால்
காட்டு விலங்குகள் வாழ்வேது?
இப்படிக் கேள்விக் கணைகள் தொடுத்து நம்மை சிந்திக்க வைக்கிறார்.
இயக்குனர்கள்
அய் பூதங்களின் அய்க்கிய நடனம்
பிரபஞ்சத்தின் சஞ்சாரிகள்
நீங்கள் இயக்குனர்கள் நாங்கள் இயக்குபவர்கள்
இப்படி அய்பூதங்கள் பற்றி மிகச் சிறப்பாக கவிதை பாடி உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் கோவை பழநிசாமி.நூலாசிரியர் பெயரிலேயே கோவை என்ற தன் ஊரின் பெயரையும் தாங்கி நிற்பதால் கோவைக்காரர்களுக்கு உரிய குறும்பு,கவிதைகளில் மிளிர்கின்றது.மொத்தத்தில் காதல்,பாசம்,இயற்கை,நேசம் என பல்வேறு தலைப்புகளில் கவிதையை பதிவு செய்துள்ளார்.
விளக்குகள் எரியாத வீதி என்ற இந்த கவிதை நூலைப் படித்து முடித்தவுடன் நம்முள் ஒரு விளக்கு எரிகின்றது.உள்ளத்து உணர்வுகளை ஒளிவு மறைவின்றி புதுக் கவிதையாக வடித்து உள்ளார்.
“துணிக்கடையில்”என்ற கவிதையில்,பெண் குழந்தைத் தொழிலாளியின் உள்ளக் குமுறலைப் பாடி வக்கிர குணம் படைத்த மனிதர்களை அல்ல,விலங்குகளை சாடி உள்ளார்.
“போராடு தோழா” என்ற கவிதையில்,
வாழ்ந்து தான் ஆக வேண்டும்-இந்த
வாழ்க்கை நமக்காகத் தானடா
வெற்றி கண்டாக வேண்டும்-அந்த
வெற்றியுடன் போராடு தோழா
முனைந்து முன்னேறு நீயடா-மூளை முனையும்
மழுங்காது நில்லடா
கனத்த நெஞ்சமே எதற்கடா அது
காரியத்திற்காகாது போங்கடா
சகல சக்தியைத் திரட்டடா-இங்கு
சகலமும் உனதாகும் விரட்டடா
இப்படி படிக்கும் போது உரம் ஏற்றி, தன்னம்பிக்கை விதைக்கும் சிறந்த கவிதை நூலிற்கு சிறப்பு சேர்க்கின்றது.நூலைப் படித்து முடித்த பின்பும் கவிதை வரிகள் நம் நினைவிற்கு வருகின்றன.இது தான் நூலின் வெற்றி.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: விளக்குகள் எரியாத வீதி* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
மதிப்புரைக்க நல்லதோர் தேர்வு, அருமை வாழ்த்துக்கள்
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: விளக்குகள் எரியாத வீதி* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
வணக்கம் மிக்க நன்றி
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» தமிழ்க்களஞ்சியம் 10000 * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» மரப்பாச்சி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» கில்லாடி* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» ராஜாங்கம்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» ஆதிக்குடி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» மரப்பாச்சி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» கில்லாடி* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» ராஜாங்கம்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» ஆதிக்குடி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum