தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலைby அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
இயல் – நான்கு கனவுத் தொட்டிலின் மொழிநடையும் உத்தியும்
3 posters
Page 1 of 1
இயல் – நான்கு கனவுத் தொட்டிலின் மொழிநடையும் உத்தியும்
இயல் – நான்கு
கனவுத் தொட்டிலின் மொழிநடையும் உத்தியும்
கனவுத் தொட்டிலின் மொழிநடையும் உத்தியும்
மொழிநடை
மொழியியல் என்பது மொழியை விளக்கி அது செயல்படும் வகையினை வெளியிடும் ஓர் அறிவியல் சார்புடையாதாக வளர்ந்து வருகிறது. மொழியியலின் ஒரு கூறே மொழிநடையியல் என்று கூறப்படும். “எழுத்துகள் கருத்துகளோடு இணைந்து எழுதப்படுவதே நடையாகும். இந்நடை எல்லா ஆசிரியர்களுக்கும் ஒன்றுபோல் அமைவதில்லை. அவரவர் திறமைக்கும், சிந்தனைத் திறத்திற்கும், கற்பனை வளத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது”1 என்பர்.
ஆசிரியர் தான் தெரிவிக்க விரும்பிய கருத்துகளைத் தகுந்த இடங்களில் பயன்படுத்தித் தேர்ந்த சொற்களாலும், தொடரமைப்பாலும் விளங்க வைத்துத்தான் மொழிநடையை வெளிப்படுத்துவர்.2 “கற்பனை கலவாது தனது உண்மையான உணர்வுகளோடு எழுதப்படும் நடையானது அப்படைப்பாளனை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கும்”3 நல்ல நடையினால் விளையும் பயனை, தொல்காப்பியர் கூறும் கருத்துவழி நோக்கும் போது...“பொருட்குத் திரிபில்லை யுணர்த்த வல்லின்”4 எனக் குறிப்பிடுகின்றார்.
“ஒருவர் தான் எழுதத் தொடங்குமுன் தனது எண்ணங்களை ஒழுங்குபடுத்தும் முறையைப் பொறுத்தே அவர் நடை அமைகிறது.”5 நடை என்பது ஆசிரியருடைய உள்ளத்தின் சொல்லோவியம், நடையை ஆராய்வதால் ஆசிரியரைப் பற்றி அறிய முடிகிறது. படிப்பவர்க்குச் சலிப்பூட்டாவண்ணம் வாசகரைக் கவரும் வகையில், இயல்பான எளிய, இனிய நடை அமையும் போதுதான் நடை சிறக்கிறது என்பது பெறப்பட்ட கருத்தாகிறது.
“ஒருவரின் மொழிநடை போன்றே இன்னொருவரின் மொழி நடையும் அமைவதில்லை. இன்றைய திறனாய்வுலகில் இலக்கியப் படைப்பாளிகளை இனங்கண்டு கொள்வதற்குரிய உத்தியாகவே நடையியல் மதிப்பீடுகள் அமைகின்றன”6 என்கிறார் இ.சுந்தரமூர்த்தி. “ஒரு நல்ல படைப்பாளரின் நடையினைச் சிறுசிறு சொற்களாலான தொடரமைப்பு, தனிச் சொற்களாட்சி, குறியீடுகள மிகுதியாக ஆளப்படல், கருத்துத் தெளிவு, எளிமை, முன்னோர் மொழி போற்றல், கிளைக்கதை கூறல் பிறமொழிச் சொற்களை எடுத்தாளும் பாங்கு, வினாக்களை அடுக்கி வரல், புதிய சொல்லாக்கம் போன்ற பல்வேறு கூறுகளைக் கொண்டிருத்தலைக் கொண்டு நிறுவலாம்.”7 என்கிறார் பா.வளன் அரசு.
எண்ணிய கருத்துகளைப் பிறருக்கு எடுத்துரைக்கும் அரிய சுவையான உணர்த்தும் கலையில் ஒவ்வொருவரும் வேறுபடுகின்றனர். சிலர் எளிமையாக உரைப்பர், கேட்போர் உளங்கொளக் கூறுவர் சிலர். நுட்பமாகவும் செறிவாகவும் எடுத்துரைப்பார் சிலர்... எண்ண ஓவியத்தினைச் சொற்களால் அழகுபடுத்தும் வல்லமை நடைக்கு உண்டு. எனவே “மொழி நடை என்பது உணர்த்தும திறனை அடிப்படையாகக் கொண்டது. நடை ஒருவருடைய உணர்திறனையும் உணர்த்தும் திறனையும் உள்ளத் திறனையும் நன்கு புலப்படுத்துகிறது.”8 என்பர்.
ஒரு நல்ல படைப்பாளியை இனங்கண்டு கொள்ளல் என்பது அவருடைய நோக்கு, நடை, பாணி போன்றவற்றை வைத்தே என்பது பெறப்பட்ட கருத்தாகிறது. அழகிய செம்மையான சொற்களால் இனிமையாகவும், எளிமையாகவும், நுட்பமாகவும் கருத்தினை உணர்த்துவதே ஒரு நல்ல படைப்பாளியின் நோக்கு என்றுணரலாம்.
ஒரு படைப்பாளன் தம் படைப்பை வெளிப்படுத்தப் பின்பற்றப்படும் நடை அமைப்பே மொழி நடை ஆகும். மொழி நடையே படைப்புகளுக்கு உயிர் கொடுப்பதாகவும் அமைகிறது. கதை இலக்கியத்தின் கருத்து வெளிப்பாட்டிற்கும் இம் மொழிநடையே இன்றியமையாத தேவையாகும்.
ஒருவன் மொழியைக் கொண்டு தன் உள்ளத்தில் உண்டான உணர்ச்சிகளைப் பிறர் உள்ளத்திலும் உண்டாகுமாறு செய்விக்கும் நூல் இலக்கியமாகும். அவன் தன் அனுபவத்தைக் கற்பனை மூலம் எண்ணிப் பார்த்து, செய்யுள் நடையினாலோ, உரை நடையினாலோ பிறர் உள்ளத்திலும் எழுமாறு அழகுபடச் செய்வதே இலக்கியமாகும்.9 அவ்விலக்கியத்தின் உயிர் நாடியாகத் திகழ்வது நடையாகும். இக் கருத்தை வலியுறுத்தும் வகையில் இ.சுந்தரமூர்த்தி,
“எண்ணங்களையும் மனதில் எழும் உணர்வுகளையும் உரிய சொற்களால் வடித்துக்கொடுக்கும் கலைத்திறனையே நடை எனலாம்.”10
என்று விளக்குவது இவண் சுட்டிக்காட்டத்தக்கது. படைப்பாளர் தாம் மேற்கொள்ளும் நடை அமைப்பில் தம்முடைய தனித்துவத்தை வெளிப்படுத்த முடிகிறது.
நடை என்பதற்குத் தமிழ்ப் பேரகராதி இருபத்திரண்டு பொருளைத் தருகிறது11 இவற்றுள் பாஷையின் போக்கு, வாசிப்பினோட்டம் என்னும் இரண்டு பொருள்கள் மட்டுமே மொழிநடையோடு தொடர்பு உடையவனவாகத் தென்படுகின்றன.
ஓர் எழுத்தாளன் தான் படைக்கின்ற இலக்கியம் மக்கள் மனத்தை எட்டிப்படிக்கின்ற வகையில் அமைந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறான். எனவே, தான் கூறுகின்ற கருத்தை மக்களுடைய உள்ளத்தில் பதிய வைப்பதற்கு அவன் தன்னுடைய இலக்கியத்தில் சில எளிய வடிவங்களை மேற்கொள்கிறான். அப்படிப்பட்ட வடிவங்களுள், உணர்த்தும் முறைகளுள் ஒன்றே நடை ஆகும்.
மொழி நடை என்பது படைப்பாளன் திறமை, பின்னணி, சிந்தனை, மொழிப்பற்று போன்றவற்றின் காரணமாக மொழிநடை மாறுபட்டுக் காணப்படும். படைப்பாளன் எந்த வகையான உள்ளடக்கத்தை அமைத்துக்காட்ட நினைத்தாலும் மொழிநடை சிறக்கவில்லையெனில் அந்தப்படைப்பு வெற்றிப் பெறாமல் போய்விடும்; வேகமும் விறுவிறுப்பும் இன்றி, கதையில் நிகழ்ச்சி ஓட்டம் மட்டுமின்றி உயிரோட்டமும் அற்றே காணப்படும்.
“நடையழகு அதைப் பயன்படுத்தும் ஆசிரியரின் தனிச் சொத்து என்று நாம் கருதினாலும், ஆசிரியர் அவர் வாழ்ந்த காலத்தின் செல்வாக்குக்கு உட்பட்டிருப்பதை நம்மால் மறக்க முடியாது. காலத்தில் கீர்த்தனைகள், எண்ணங்கள் அவற்றை வெளியிடும் பேச்சு மொழி, எழுத்து மொழி இவ்வளவையும் அவர் ஜீரணித்துக் கொண்டுதான் பிறகு தம்முடைய அழகு நடையில் அப்படைப்பை வெளியிடுகிறார். ஆகவே படைப்பு நடைக்கு ஆசிரியர் மட்டுமே காரணமாவதில்லை. அவர் வாழும் காலமும் ஒரு காரணம் ஆகின்றது.”12
என்பார் அகிலன். ஓர் இலக்கியத்தின் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் காரணமாய் அமைவது மொழிநடை. அதுவே படைப்போனுக்கும் வாசகனுக்கும் இடையே உறவு பாலமாக அமைகிறது. எனவே அந்த நடையில் ஒலிநயமிக்கச் சொற்கள், நுவலும் பொருளுக்கேற்ப உணர்ச்சி வெளிப்பாட்டு நிலை, தொடர் அமைப்பின் முக்கியத்துவம் என்பன போன்ற சிறப்புக் கூறுகளையுடைய மொழிநடையே பயில வேண்டும்.
“செவிக்கினிமை தரும் ஒழுங்குபட்ட ஒலிநயம், கையாளும் சொற்களில் ஒருவகையான செறிவாற்றல், வேறொருவரிடம் எளிதில் காண முடியாத அரிய தொடராக்கங்கள், நுவல் பொருளுக்கும் உணர்ச்சி நிலைக்கும் ஏற்ற வண்ணம் அமைந்த தொனி, முத்திரைப்பதித்தாற் போன்ற வாக்கிய அமைப்பு முதலியன தனிநடையின் பண்புகளாகும்.”13
என்று நடையின் உத்தி முறையைப் பற்றி மா.இராமலிங்கம் கருத்துரைப்பார். இதனை நோக்கும்போது, எந்த ஒரு படைப்பிற்கும் சிறந்த மொழிநடை மிக அவசியம் என்பதை உணர முடிகிறது.
எளிய நடை
எளிய நடை என்பது படித்தவுடன் அதன் அர்த்தம் புரிந்து கொள்ளும்படி அமைவதாகும், இது நீண்ட நெடியத் தொடராக அல்லாது சிறுசிறு வாக்கியங் களாகவும் அமைவது ஆகும்.
“வெண்மதி கண்களை அசைத்துச் சிரித்தான். அவளையும் சிரி என்றான். அவள் சிரித்துக்கொண்டே அவன் தோள் மீது சாய்ந்தாள்”14
“மன்னிக்கனும். அதையும் நான் சொல்லக்கூடாது. யாரையும் இப்படி இருன்னு என்னால் சொல்ல முடியாது. இது… இப்படின்னு எடுத்துக் காட்டுவது தான் என் வேலை. சிந்தித்து முடிவுக்கு வருவது உன் பொறுப்பு! அதுவும் கடவுள் என்பது உணரும் விஷயம்! அது எப்படி இருக்கிறதென்பதை நான் உணர்ந்ததை மட்டுமே உனக்குச் சொல்லணும்.”15
இவ்வாறான எளிய நடை கனவுத் தொட்டிலில் நிரம்பக் காணப்படுகின்றன. இதற்குக் காரணம், எந்த ஒரு நாவலும் அதிகப் பக்கங்களைக் கொண்டிருப்பதால் எளிய மொழிநடை இயல்பாகவே நிறைய அமைய வாய்ப்பிருக்கிறது.
தூயத் தமிழ் நடை
பிற மொழிக் கலப்பின்றித் தமிழ்ச்சொற்களை மட்டும் கையாண்டு படைக்கப்படும் படைப்புகளின் நடை அமைப்பைத் ‘தூய தமிழ் நடை’ எனலாம்.
“என் எழுத்துக்கு இன்னும் ஓர் அங்கீகாரம் கிடைக்கலையே பூஜா. கிடைத்தால்தானே அது கவிதை ஆகும். கிடைக்கும் வரை அது கிறுக்கல் தானே?”16
என்று வரும் பகுதி தூய நடைக்குச் சான்றாகின்றன. நாவலில் ஆசிரியரே கதையை எடுத்துரைத்துச் செல்லும்போது இவ்வாறான தூய நடை பொதுவாகவே அமைவது உண்டு. இந்தத் தூய நடையும் நாவலில் விரவியே வருகின்றது.
விளக்க நடை
கதையில் சொல்லப்போகும் மையக் கருத்தை முதன்மைப்படுத்தி எளிய சொற்களைக் கொண்டு விளக்க முற்படும் நடையமைப்பை ‘விளக்க நடை’ எனலாம். கதைகளில் மையக் கருத்தை விளக்க முற்படும்போது அவ்வாறான மொழிநடை பயின்று வரக் காணலாம்.
“போடா பைத்தியக்காரா, உலகத்திலேயே உயிர் போறவரைத் திருந்தாத ஒரே ஜென்மம் உன்னை மாதிரி ஆளுங்க தான்டா – நம்ம நாட்டு விஞ்ஞானி அப்துல் கலாம்ல இருந்து, முன்னால் விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத் தலைவர் கஸ்தூரி ரங்கன் வரை கடவுள் பக்தர்கள்றா. அவங்களை விடவா நீ புத்திசாலி? ஏண்டா உனக்கிந்த பிடிவாதம்? இல்லைன்னு சொல்லியே வாழ்ந்துட்டோமே… அதை எப்படி ஆமான்னு ஒத்துக்கறதுன்ற வறட்டுக் கர்வம் தானே?”17
என்று வருவது விளக்க நடைக்கு எடுத்துக் காட்டாக அமைகிறது. வித்யாசாகருக்குக் கடவுள் பற்றிய நம்பிக்கை அதிகம் இருப்பதால், அந்த உண்மையைக் கனவுத் தொட்டிலில் வலியுறுத்திப் பேச முனைந்துள்ளார். அதனால் கடவுளைப் பற்றி – உண்மையான கடவுளை - பக்தியைப் பற்றி விளக்க முற்படுகிறார்.
“நான் உன்னைக் குத்தம் சொல்லலை பிரபா… எனக்குத் தெரியுது. நான் உணர்ரேன். நீயும் உணர். பார்… தெரிஞ்சுக்கோன்றேன். கடவுள்ல இருக்குற ஒரே குறை இது தான் பிரபா – எங்கே காட்டுன்னு பட்டுனு கேட்டா… இங்கன்னு எல்லோராலையும் காட்ட முடியலை… ஆனா உணர முடியுதுடா. ஒரு வெள்ளைத் தாளில் ஒரு கருப்பு புள்ளி வச்சா – ஆம் தெரியுதுன்ற நீ, அந்தப் புள்ளியை விடுத்துள்ள விசாலமான வெள்ளைத் தாளைப் பார்க்க மாட்டேன்றியே?”18
என்று எடுத்துரைத்து உண்மையான கடவுட் கொள்கையையும் பக்திக்கான வரைமுறையினையும் எடுத்துரைக்க முயற்சித்துள்ளார்.
பிறமொழி கலப்பு நடை
படைப்பிலக்கியங்களில் இன்று, ஆங்கில வார்த்தைகள் பல தமிழ் வார்த்தைகளாகி விட்டதைக் காணமுடிகிறது. அவை தமிழ் வார்த்தைகளா? ஆங்கில வார்த்தைகளா? என்று சாதாரண மக்கள் அறிய முடியாதபடி ஆங்கிலம், தமிழ்மொழிச் சொற்களாக அர்த்தப் படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. இக்கால இலக்கியங்களில் பொதுவாக, படித்தவர்களாகப் படைக்கப்படும் பாத்திரங்கள் ஆங்கிலம் கலந்து பேசுவது போன்று நடையமைப்பு தவிர்க்க முடியாததாய் அமைந்துவிடுகிறது.
“ஸ்டேடிஸ்டிக்ஸ் சப்ஜெக்டு, என்ன இருந்து என்ன செய்ய”19
“ஒன் ஃபோர் த்ரி!!! ஐ லவ் யூ – வா!!!”20
“ஷாத்… ஷாத்… வைஷ்ணவியைப் போலவே அதாவது பூமித்தாயைப் போலவே”21
“எல்லோரும் குடும்பமாக வராண்டாவில் அமர்கிறார்கள்”22
போன்ற வாக்கிய அமைப்புகளில் ஆங்கிலச் சொற்கள் தவிர்க்க முடியாததாய் அமைந்துள்ளது. நாவலில் மேற்கண்ட பிறமொழிச் சொற்களே காணமுடிகிறது. வித்யாசாகர் மேலைநாட்டில் வேலை பார்த்து வரும்போதும் தேவையில்லாமல், தனக்கு ஆங்கிலப் புலமை இருக்கிறது என்று காட்டிக் கொள்ளவோ, கல்லூரி மாணவர்கள், நீதிபதிகள், செய்தி சேகரிப்பாளர்கள் உரையாடும்போதும்கூட ஆங்கில நடையைத் தவிர்த்துச் செந்தமிழ் நடையிலேயே உரையாட விட்டு இருப்பது, தமிழ் மொழியின் தனித்துவத்தை அடையாளப்படுத்துவதாய் அமைந்துள்ளது.
“படைப்பிலக்கிய நடை, எழுதப் படிக்கத் தெரிந்த சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய எளிய இனிய வழக்கிலுள்ள மொழியில் அமைவது என்று கூறலாம். தவிர்க்க முடியாத சில இடங்களில் பொது மக்களுக்குத் தெரிந்த பிறமொழிச் சொற்கள் சில கலக்கலாம்.”23
என்பது, இக்கால மொழிநடைக்கும் இலக்கிய மொழிநடைக்கும் பொருந்தியே வருகின்றது என்றாலும் நாவலாசிரியர் வித்யாசாகர் பிறமொழி நடையைத் தவிர்த்திருப்பது போற்றுதலுக்குரியது.
வட்டார நடை
மக்கள் தாங்கள் வாழும் வட்டாரத்தின் வாழ்க்கைச் சூழ்நிலைக்கு ஏற்பவும், செய்யும் தொழில்களுக்கு ஏற்பவும், பழக்கவழக்கங்களுக்கு ஏற்பவும் சொற்களை அமைத்துக்கொண்டு அச்சொற்களின் உச்சரிப்பு அளவைக் குறைத்தும், நீட்டியும், கொச்சையாகவும் பயன்படுத்தும் சொற்களை நாவலில் காணமுடிகிறது. இத்தகைய நடை அமைப்பை ‘வட்டாரமொழிநடை’ எனலாம்.
“சரி… ஏதோ… கவிதையெல்லாம் எடுதுறியாம்… ம்! எப்பனா… எழுதுவேன். எங்க ஒரு கவிதை சொல்லேன்… எதைப் பத்தி… எதனாச் சொல்லுப்பா… (இ)தப்பாரு எம்பொண்டாட்டி என்கிட்டே பாசமாவே இருக்கமாட்டேன்றா… அதைப் பத்தி தான் சொல்லேன்.”24
என்று வரும் நடையமைப்பு வட்டார மொழிநடை அமைப்பைக் கொண்டுள்ளது. தமிழ் நாட்டில் மாவட்டங்களுக்கு ஏற்ப தமிழ்மொழி நடையே; உச்சரிப்பே மாற்றம் கொண்டுள்ளதைக் காணலாம்.
வருணனை நடை
நாவலில் ஆசிரியர் விரும்பும் அளவு வருணனை இடம்பெறும். கதை மாந்தர்களின் தோற்றத்தையும், இயற்கை காட்சியையும், குறிப்பிட்ட ஓர் இடத்தையும் நிகழ்ச்சியையும் வருணித்தும் விவரித்தும் எழுதுவது வருணனை எனலாம். கனவுத் தொட்டிலில் சில இடங்களில்25 மட்டுமே வருணனை நடை பயின்று வந்துள்ளதைக் காண முடிகிறது.
“புலன்களால் உணர்வனவற்றை அல்லது புலன்களின் வழியாக உணரும் புதுக் காட்சிகளைச் சொற்களால் மொழிபெயர்த்துக் காட்டுவதே வருணனை ஆகும். எழுதுவார் ஒரு பொருளையோ, மனிதரையோ, இடத்தையோ, வருணிக்கும் நிலையில் அவ்வகை உரைநடையை வருணனை உரைநடை என அறிஞர்கள் பாகுபாடு செய்வர்.”26
என்பார் மா. இராமலிங்கம். நாவலில் பல இடங்களிலும் சூழ்நிலைகளிலும் வருணனை நடை இயல்பாகவே பயின்று வரும். அவ்வாறே வலிந்து புகுத்தாத வருணனைகள் கனவுத் தொட்டிலில் காணப்படுகின்றன.
“கண்களைக் கவரும் அழகானப் பூந்தோட்டம்! தென்றலாய் வீசும் சில்லென்றக் காற்று…! அழகழகாய்… தாவணிப் பறக்க நடந்து போகும் பாடசாலைப் பெண்கள்…! ஆங்காங்கே கூட்டங் கூட்டமாய் அமர்ந்து, சிரித்து பேசிக் கும்மாளமிடும் இளைஞர் பட்டாளம்…!”27
என்று வரும் வருணனைப் பகுதி, பூங்காவில் நடைபெறும் காட்சிப் பதிவை விவரிக்கிறது.
உரையாடல் நடை
உரையாடல் இல்லாத நாவல்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம். நாவலாசிரியரோ, பாத்திரப் படைப்புகளோ ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வது போன்ற நடையமைப்பு எதார்த்தமாகவே நாவல்களில் இடம்பெறும். நாவலில் உரையாடலை வலிந்து உட்புகுத்த வேண்டிய தேவையில்லை எனலாம். ‘கதைப் பாத்திரத்தின் பண்பை விளக்குவதற்கோ, கதையின் நிகழ்ச்சியைப் புலப்படுத்துவதற்கோ உரையாடல்கள் அமைதல் உண்டு.’28 என்பார் மு.வரதராசனார்
“மென்மையான உணர்வுகளை நுட்பமாக உணர்த்துவதில் உரையாடலுக்கு ஈடு இணையே கிடையாது”29
என்பார் டாக்டர் இரா.தண்டாயுதம்.
புனைகதையுள் வரும் பாத்திரங்களைப் பார்க்கும்போது அவற்றின் சிறப்பிற்கு அடித்தளமாக அமைவது உள்ளத்தைத் தொடும் உரையாடல் என்றும் அவ்வாறு அமையும் உரையாடல்கள் பாத்திரங்களின் பண்பை விளக்குவதோடு அன்றிக் கதை நடக்கவும் உதவியாக இருக்க வேண்டும் என்று கருதுவதுண்டு.30 எனவே, உரையாடல் பாத்திரப் பண்பையும், கதையின் நிகழ்ச்சியையும், மென்மையான உணர்வுகளையும், இயக்கத்தையும் புலப்படுத்தி நடத்திச் செல்வது புலனாகிறது.
கதை இலக்கியங்களில் ஆசிரியர் தாமே கதை சொல்வது போலவும், கதை மாந்தர்களே உரையாடி கதையை நகர்த்துவது போலவும் படைக்கிறார்கள். உரையாடல்கள் கதைக்குப் பக்கபலமாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் அமைகின்றன.
“உரையாடல்... பாத்திரங்களினுடைய மனம், பண்பு, குறிக்கோள், உணர்ச்சிகள் முதலியவற்றை நமக்கு எடுத்துக்காட்டும் கண்ணாடி. ஆசிரியன் உரையாடலை அமைக்கும்போது பேசுபவன், பேசும் சந்தர்ப்பம், வெளிப்படுத்தப்படும் உணர்ச்சி, நிலைக்களம், சூழ்நிலை முதலியவற்றை மனத்துட்கொண்டுதான் அமைத்தல் வேண்டும்.”31
என்று உரையாடல் பயில வேண்டிய சூழலைச் சுட்டிக்காட்டுவார் அ.ச.ஞானசம்பந்தன். மேற்சுட்டிக் காட்டப் பட்ட சூழ்நிலைகளிலேயே கனவுத் தொட்டிலில் உரையாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. கனவுத் தொட்டிலில் உரையாடல்கள் நிறைந்து காணப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு,
“ஏன்?
இன்னும் உனக்கு ஆசைகள் போகலையே
என்ன ஆசை?
எல்லா ஆசையும்
எப்படிச் சொல்ற?
உன் கண்ணு சொல்லுது
கண்ணு சொல்லுமா?
நிறையச் சொல்லும்
மனசுல இருக்கறதைச் சொல்லுமா?
அப்பட்டமாய்ச் சொல்லும்.
எங்க, என் மனசுல என்ன இருக்கு சொல்லு…
கிட்ட வா… சொல்றேன்.”32
என்ற உரையாடல் காதலர்கள் இருவருக்குமிடையே நடைபெறுகிறது. இந்த உரையாடலால், காதலர்களின் உண்மையான புரிதலையும் அன்பையும் ஒருசேர சித்திரித்துக்காட்டுவது உரையாடல் நடைக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இரட்டைக் கிளவி
நாம் பேசுகின்ற மொழியில் காணப்படும் ஒலியழகு மொழிக்குரிய சிறந்த அழகாகும். ஒலியழகைச் சிறப்பாகக் கொண்ட தொடரே இரட்டைச் சொற்றொடர்; இரட்டைக்கிளவி என்று பெயர் பெறுகின்றது. இதுவும் ஒலிக் குறிப்புச் சொல்லாகப் பயன்படுகிறது, இரட்டைக்கிளவி என்பது இரண்டு சொற்களாகத் தொடர்ந்து வரும்போதுதான் பொருள் தரும். தனியே பிரிந்து வரும்போது பொருள் உணர்ச்சியை உண்டாக்காது. இடத்துக்கும் பொருளுக்கும் ஏற்ப இவற்றைக் கையாளுவதில் நமது மொழிநடை தெளிவும், வனப்பும் கொண்டு அமையும்.33
“சட்டை படபடக்க உதடு ததும்ப”34
“சலசலவென… சிரித்தது”35
“ஜாம்…ஜாம்…ஜாமென்று இனிதே முடிகிறது”36
“மலமலவென்று மனது உடைந்து கரைந்தது”37
“கண்ணீர் சாரைசாரையாக வழிகிறது”38
என்பன போன்று பயின்று வந்துள்ள இரட்டைக்கிளவிச் சொற்கள் நாவலை சலிப்பின்றிப் படிக்கத்தூண்டிவதாக அமைந்துள்ளன.
அடுக்குத்தொடர்
ஒரு பொருள் குறிக்கும் சொற்கள் இரண்டுமுறை அடுக்கி வருவது அடுக்குத் தொடராகும். ஒரு கருத்தை அழுத்திக் கூறும்போதும், வலியுறுத்திச் சொல்லும்போதும் படைப்பாளர்கள் அடுக்குத் தொடரைப் பயன்படுத்துவர்.
“இதமான உணர்வு மேலோங்க மெல்ல… மெல்ல வலுப்பெற்றது”39
“வேண்டாம்… வேண்டாம் நானே படிக்கிறேன்.”40
“சரி… சரி நீங்க புத்திசாலி தான்”41
“மீண்டும்… மீண்டும்… மீண்டும்… வணங்கி… வணங்கி… வணங்கி”42
என்பன போன்று வரும் அடுக்குத் தொடர் சொற்கள் குறைவாகவே மொழிநடையில் பயின்று வந்தாலும், அடுக்குத் தொடர்களாகப் பயின்றுவரும் வாக்கியங்கள் சிறப்பிடம் பெறுகின்றன.
மரபுத் தொடர்
ஒரு காலத்து ஓரிடத்து ஒரு பொருள் குறித்து வழங்கிய சொற்கள் பிறிதொரு காலத்தும் அதே பொருளில் வழங்குவன மரபுத் தொடர் எனலாம். மரபு வழி வந்த சொற்கள் இணைந்து சொல்லுக்கு அழகையும் பொருளுக்கு ஒரு புது மெருகையும் கொடுக்க முடியும்பொழுது அச்சொற்கள் ஒரு தொடராக நிலைபெற்று விடுகின்றன. இத்தொடரானது சொல்ல வேண்டிய கருத்தினை அழகுபடச் சுருங்கிய முறையில் சொல்லுகின்றது என்னும் காரணத்தால் இது காலம் காலமாகப் பயன்படுத்தப்பெறுகிறது.43 வழக்காற்றில் நிலை பெற்றுவிட்ட இத்தொடரை மரபுத் தொடர் எனலாம்.
“கண்டவர் விண்டிலர்… விண்டவர் கண்டிலர்…”44
“கண்கெட்டபின் சூர்ய நமஸ்காரம் செய்து என்ன பயன்”45
என்பன போன்று வரும் மரபுத் தொடர்கள் மொழிநடைக்கு மெருகேற்றும் வண்ணமாக அமைந்துள்ளன.
உவமை
அணிகளுள் உவமை அணியே தாய் அணி என்பர். உவமை இல்லாமல் கவிதை மெருகுடன் திகழ வாய்ப்பில்லை. கவிஞனின் கற்பனைக்கு, வாசகனின் புரிதலுக்கு உவமையே உறுதுணை. “ஒன்றை அறியாதார்க்கு அதனை அறிவிக்க விரும்பும் புலவர், அறிந்த ஒன்றோடு ஒப்பிட்டு அறிவிக்க முயல்கின்றார். ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டுக்காணுதலே உவமை அணியாகும்.”46
“வளர்த்த அன்னை முகம் மறக்காத குழந்தை போல…”47
“தலையில் இடி விழுந்தது போல இருந்தது”48
“அந்த வீடு புயலில் அழிந்துவிட்ட ஊரைப்போல வெறுமனே சிரிப்பற்றுக் கிடந்தது.”49
“காலைச் சுற்றிய குழந்தை போல நம்மையே சுற்றி வருவார்கள்”50
என்று வித்யாசாகர் எளிமையான உவமைகள் மூலம் வாசகர் உள்ளத்தைக் கவர்கிறார். வித்யாசகரின் இந்நாவலில் கனவு உத்தியே முதல்பாதியாக அமைந்துள்ளதும், அடுத்தப் பாதி, பாத்திரத்தின் உண்மை வாழ்க்கையைப் படம்பிடித்தும் காட்டும் மொழிநடை தனித்துவம் வாய்ந்ததாகக் காண முடிகிறது.
சான்றெண் விளக்கம்
1. இ.சுந்தரமூர்த்தி, நடையியல் சிந்தனைகள், ப.1.2. சோ.கலாவதி, புதினக் கோட்பாடுகள், ப.49.
3. பா.பானுமதி, திரு.வி.க.வின் நடைத்திறன், ப.23.
4. தொல்காப்பியர், தொல்காப்பியம், உரிச்சொல், ப.94.
5. Editted by Howard S.Balf. Essays in stylistic Analysis, P.11.
6. இ.சுந்தரமூர்த்தி, பாரதி நடையியல், ப.7.
7. பா.வளன் அரசு, துறைதோறும் திரு.வி.க., ப.10.
8. இ.சுந்தரமூர்த்தி, முன்னூல், ப.22.
9. கலைக் களஞ்சியம், தொகுதி.2, ப.101.
10. இ.சுந்தரமூர்த்தி, நடையியல் ஓர் அறிமுகம். ப.15.
11. தமிழ்ப் பேரகராதி, தொகுதி.4, பகுதி ஒன்று, ப.21.
12. அகிலன், கதைக் கலை, ப.114.
13. மா.இராமலிங்கம், புதிய உரைநடை, ப.61.
14. வித்யாசாகர், கனவுத் தொட்டில், ப.103.
15. மே.கு.நூ., ப.71.
16. மே.கு.நூ., ப.19.
17. மே.கு.நூ., ப.56.
18. மே.கு.நூ., ப.64.
19. மே.கு.நூ., ப.84.
20. மே.கு.நூ., ப.121.
21. மே.கு.நூ., ப.122.
22. மே.கு.நூ., ப..
23. ந.பிச்சமுத்து, படைப்பிலக்கியம், ப.58.
24. வித்யாசாகர், கனவுத் தொட்டில், ப.11.
25. மே.கு.நூ., பக்.17, 93, 107, 124.
26. மா.இராமலிங்கம், புதிய உரைநடை, ப.116.
27. வித்யாசாகர், கனவுத் தொட்டில், பக்.17-18.
28. மு.வரதராசன், இலக்கிய மரபு, ப.132.
29. இரா.தண்டாயும், நாவல் வளம், ப.134.
30. தி.பாக்கியமுத்து, விடுதலைக்குப் பின் தமிழ் நாவல்கள், ப.30.
31. அ.ச.ஞானசம்பந்தன், இலக்கியக் கலை, பக்.356-357.
32. வித்யாசாகர், கனவுத் தொட்டில், ப.24.
33. வ.விவேகானந்தன், பார்வதியம்மன் வழிபாடு, ப.31.
34. வித்யாசாகர், கனவுத் தொட்டில், ப.110.
35. மே.கு.நூ., ப.111.
36. மே.கு.நூ., ப.121.
37. மே.கு.நூ., ப.170.
38. மே.கு.நூ., ப.196.
39. மே.கு.நூ., ப.17.
40. மே.கு.நூ., ப.19.
41. மே.கு.நூ., ப.27.
42. மே.கு.நூ., ப.68.
43. சிவ.விவேகானந்தன், பார்வதியம்மன் வழிபாடு, ப.37.
44. வித்யாசாகர், கனவுத் தொட்டில், ப.44.
45. மே.கு.நூ., ப.167.
46. சி.இலக்குவனார், தொல்காப்பிய ஆராய்ச்சி, ப.241.
47. வித்யாசாகர், கனவுத் தொட்டில், ப.67.
48. மே.கு.நூ., ப.105.
49. மே.கு.நூ., ப.148.
50. மே.கு.நூ., ப.156.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இயல் – நான்கு கனவுத் தொட்டிலின் மொழிநடையும் உத்தியும்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இயல் – நான்கு கனவுத் தொட்டிலின் மொழிநடையும் உத்தியும்
மகிழ்ச்சி நண்பரே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» (இயல் – இரண்டு) கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்கள்
» (இயல் – மூன்று) கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்களின் தீர்வுகள்
» கனவுத் தொழிற்சாலைகள்
» வித்யாசாகரின் கனவுத் தொட்டில் (நாவல்) - ஓர் ஆய்வு - சான்றிதழ்
» TET - தமிழ் - II ஆறாம் வகுப்பு - இயல் 2
» (இயல் – மூன்று) கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்களின் தீர்வுகள்
» கனவுத் தொழிற்சாலைகள்
» வித்யாசாகரின் கனவுத் தொட்டில் (நாவல்) - ஓர் ஆய்வு - சான்றிதழ்
» TET - தமிழ் - II ஆறாம் வகுப்பு - இயல் 2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum