தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உறவுகள் (சிறுகதை )
3 posters
Page 1 of 1
உறவுகள் (சிறுகதை )
உறவுகள் (சிறுகதை )
சூரியன் அதிகாலையில் பூமியை எட்டிப்பார்க்க அவசரபட்டுகொண்டிருந்தான் .
ஜீவா ,தம்பி ஜீவா ''எதிர் வீட்டிலிருந்து மாமி குரல் கேட்டு ஜீவா கண்விழித்தான் .
''என்ன மாமி ? கொஞ்சம் இங்க வாப்பா ,இங்க பார் இந்த கிரைண்டர் கம்பி அறுந்துடுச்சி கொஞ்சம் சரி
பண்ணி தரனும் .''அதுகென்ன ,பண்ணிட்டா போச்சு ''
இந்த நேரத்தில் ஜீவாவை பற்றி .ஜீவா பார்பதற்க்கு எந்த பெண்ணையும்
கவரும் ஒரு கலையான முகம்.அப்பா,அம்மா கார் விபத்தில் போய்
சேர்ந்து விட அவர்கள் கொடுத்து விட்டு சென்ற டிகிரி கை கொடுக்க
அசாத்திய திறமையால் தனியார் நிறுவனத்தில் எக்சிக்யுட்டிவ்
மேனஜராக கை நிறைய சம்பளத்தில் இருக்கிறான் .
அவசரமாக மாமியிடம் விடைபெற்று ரெடி யாகி இதோ கிளம்பி விட்டான் .
''சார் ''
என்ன சார் சீக்கிரம் சொல்லுங்க என்ன வேணும் இது ஜீவா .இந்த
அட்ரெஸ் கொஞ்சம் எங்க இருக்கு சொல்லுங்க சார் ''
அடடே இந்த வீட்டுக்கே வந்து அட்ரெஸ் கேக்குறிங்கலே..இந்த வீடு தான் .
''மாமி கொஞ்சம் ஒட்டடை குச்சி இருந்தா கொடுங்களேன் .என்ற குரல் புதிதாக இருக்க.ஜீவா எட்டி
பார்த்தான் .
விளக்கு வச்சாச்சு காலைல வாங்கிக்கமா! ஹலோ ஒட்டடை குச்சி
தானே தரக்கூடாது என்னிடம்
வாக்கம் கிளினர் இருக்கிறது வந்து வாங்கிகங்க .''ஜீவா தரும் பொழுது
அவள் கண்களில் நன்றி .
விஜய் ,ஷாலினியுடன் டூயட் பாடிகொண்டிருக்க .ஜீவா அதை பார்த்து
கொண்டிருக்கும் போது வாசலில் நிழலாட!ஹலோ வணக்கங்க காலைல
இந்த மாடி வீட்டுக்கு நாங்க புதுசா குடி வந்திருகோம்,
ப்ளீஸ் உள்ள வந்து உட்காருங்க .!ஜீவா அழைக்க ஹாய் ஐ ம் தினேஷ் !
இது என்னோட மனைவி காயத்திரி !வணக்கம் .இந்தாங்க காபி
கொஞ்சம் சாப்பிடுங்க .உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க மிஸ்டர்
தினேஷ் .
எங்களோடது லவ் மேரஜ் வீட்ல எதிர்த்து கல்யாணம்
பண்ணிகிட்டோம்.அதனால இப்ப இங்க தனியா குடித்தனம்
வந்திருக்கோம் .
உங்களபத்தி.! சொல்லுங்க ஜீவா ?
அப்பா ,அம்மா காலமாயிட்டாங்க,கல்யாணம் இன்னும் ஆகல .சீக்கிரம்
நல்ல பொண்ணா பார்த்து
கல்யாணம் பண்ணிக்குங்க ஜீவா .
நீங்க அநாதை இல்லை தோள் கொடுக்க நாங்க இருக்கோம் கவலை படாதீங்க .
நீங்களும் எங்க வீட்டுக்கு அடிக்கடி வரணும் .நாங்க கிளம்பறோம் ஜீவா .!குட் நைட் .
புற்களின் மேல் இருந்த பனித்துளிகள் சூரியனின் வருகையால்
பிரசங்கமாகிகொண்டிருந்த காலை நேரம்.
வாங்க காயத்திரி .!ஜீவா மரியாதை எல்லாம் வேண்டாம் .நீங்க என்ன
ஒருமையிலே கூப்பிடலாம்
எனக்கு உங்கள போலவே ஒரு அண்ணன் இருக்கிறார் .அவரோட பேச
முடியாத சூழ்நிலை இப்போது .!
கவலை படாத காயத்திரி நான் இருக்கிறேன் உனக்கு .
இந்தாங்க பால் நேற்று வீட்ல பால் காசும் பொழுது நீங்கள் இல்லை .
அதற்காகத்தான் இப்போ கொண்டு வந்து வந்தேன் ,சரி நான் வர்றேன் .
அவள் போனவுடன் அந்த இடம் வெறுமை ஆனது ,ஜீவாவிற்கு ,அவன்
தாயின் ஞாபகம் வந்து கண்கள் குளமாகியது .ஓரிரு துளி தரையில்
விழுந்து தெரித்தது.
வசந்த காலம் வந்து விட்டதை குயில் கூவி தெரிவித்தது .
காயத்திரியும் ,அவள் கணவனும் இங்கு குடிவந்து ஏறக்குறைய ஆறு
மாதம் ஓடி விட்டது .!
என்ன இனிமையான தம்பதிகள் நான் மிகவும் கொடுத்து வைத்தவன்
என ஜீவா நினைத்து கொண்டான் .
என்ன காயத்திரி, வீட்ல வேலைய விட்டுவிட்டு இங்க என்ன ஜீவாவிடம்
பேச்சு .!வேலை எல்லாம் முடிஞ்சாச்சி மாமி .
என்ன ஜீவா நீ சமைக்கலியா .?இல்ல மாமி கொஞ்சம் உடம்பு சரி
இல்லாத மாதிரி இருந்தது அதான் சமைக்கல.காயத்திரி வீட்ல இருந்து
சாப்பாடு எடுத்துட்டு வந்து கொடுத்துட்டா .
ஏம்ப்பா என்னாண்ட சொல்லி இருந்தா நான் செஞ்சி கொடுத்திருக்க
மாட்டேனா என்ன ?.
ஜீவா நான் கிளம்புறேன் அவர் வந்துட்டார் .வர்றேன் மாமி .என
காயத்திரி சென்று விட்டாள் .
இங்க பாரு ஜீவா அவளும் நீயும் இப்படி அடிக்கடி சந்திச்சி,உங்க வீட்டுக்கு
அவளும் ,அவ வீட்டுக்கு நீயும் போறது எனக்கு அவ்வளவு நல்லா இல்லே
நான் அவ்வளவுதான் சொல்லுவேன் .சரி நான் கிளம்புறேன் .
ஒரு நாள் ஞாயிற்று கிழமை மதியம் .
என்ன ஜீவா நோட் புக் வச்சிட்டு கதையா எழுதுறீங்க?.இல்ல காயத்திரி
சும்மா எப்பவாச்சும் டைம் கிடைக்கும் பொழுது கவிதை எழுதுவேன் .
எங்க குடுங்க பார்க்கிறேன் .!
இது இப்போ எழுதுன கவிதையா .?நான் படிக்கவா .?
காயத்திரி ஜீவாவிடம் இருந்து கவிதையை படிக்க ஆரம்பித்தாள்
''உழைத்தால் உயரலாம் என்றார்கள்
உயர்ந்தது நான் அல்ல முதலாளிதான் !
கேட்டேன் கிடைக்கும் என்றார்கள்
கிடைத்தது தடி அடியும் சிறை வாசமும் !
முயன்றால் முடியும் என்றார்கள்
முயற்சித்தேன் மதம் மாறி
முடிந்தது என்னவளுக்கு வேறிடத்தில் திருமணம்
உழைத்தும் உயரவில்லை ,கேட்டும் கிடைக்க வில்லை ,
முயன்றும் முடியவில்லை .அட !
இதுதான் ஜனநாயக நாடோ .!
கவிதை ரொம்ப அழகா இருக்கு ஜீவா .இதை பத்திரிகைக்கு
அனுப்பலாமே ..கிண்டலா அதுக்கெல்லாம் ராசி வேணும் காயத்திரி
என்ன பெரிய ராசி இதை நான் அனுப்புறேன் .
ஒரு வாரம் ஓடி விட்டிருந்தது .
ஜீவா !ஜீவா ..இங்க பாருங்க உங்க கவிதைக்கு முதல் பரிசா ஆயிரம்
ருபாய் கிடைச்சிருக்கு கங்க்ராட்ஸ்.
தேங்க்ஸ் காயத்திரி .எனக்கு ட்ரீட் உண்டா ?
இந்த பரிசு கிடைச்சதே உன்னாலதானே காயத்திரி என்ன வேணும்
உனக்கு ?
அது உங்க இஷ்டம் ஜீவா சரி நான் கிளம்புறேன் ..
காயத்திரி! காயத்திரி,,இங்க பாரு இந்த புடவை உனக்கு பிடிச்சிருக்கா?
உனக்கு த்தான் வாங்கிட்டு வந்தேன் ஹ்ம் பிடிச்சிருக்கு ஜீவா .
என்ன ஜீவா எனக்கு ஒன்னும் இல்லையா என கேட்டுகொண்டே தினேஷ்
வந்தான் ,இருக்கு இந்தாங்க இந்த டி-ஷர்ட் உங்களுக்குத்தான்
வாங்கிகோங்க உங்க ரெண்டு பேருக்கும் வெட்டிங் டே வர போகுதுல்ல
அதான் என்னால முடிஞ்சா சின்ன அன்பளிப்பு .
என்ன ஜீவா நான் விளையாட்டுக்கு கேட்டேன் .நீங்க உண்மையாகவே
வாங்கிட்டு வந்துடீங்க ரொம்ப தேங்க்ஸ் ஜீவா .இதுக்கெல்லாம் எதுக்கு
தினேஷ் நன்றி .சரி வாங்க ஜீவா சாப்பிடலாம் ,இல்ல தினேஷ்
வேண்டாம் உடம்பு ஒரு மாதிரியா இருக்கு வீட்ல பிரட் ,ஜாம் இருக்கு
நான் போய் சாப்பிடுறேன் .
அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நான் ரசம் சாப்பாடு எடுத்துகிட்டு
வரேன் கொஞ்சமாவது சாப்பிடுங்க .போய் கை கழுவிகிட்டு வந்து
உட்காருங்க நான் போய் எடுத்துவரேன் .
தினேஷ் சாப்பிட்டாச்சா காயத்திரி ?ம்ம் சாப்பிடாச்சி நீங்க சாப்பிடுங்க
ஜீவா .ஜீவா ஏன் கண் கலங்குறீங்க .இல்ல காயத்திரி என் அம்மாபோல்
என்னிடம் நீ எவ்வளவு பரிவாக நடந்து கொள்கிறாய் .நோ நோ ''
அப்படியெல்லாம் பேசாதிங்க .ஒரு அண்ணனுக்கு ஒரு தங்கை
செய்வதை தான் நானும் செய்தேன் இது என் கடமை ஜீவான்னா .!
ஜீவாவால் கண்ணை திறக்க முடியவில்லை ,அப்படியே படுக்கையிலே
படுத்துவிட்டான் ,ஜீவா !ஜீவா !நீ வாங்கி தந்த புடைவை தான் நல்லா
இருக்கா?காயத்திரியின் தலையில் மல்லிகை பந்து உட்கார்ந்து இருந்தது
ஜீவாவை உற்று பார்த்து என்ன ஜீவா முகமெல்லாம் வாடி இருக்கு .என்ற
படி தலையில் கைவைக்க ஐயோ ஒடம்ப பார் அனலா கொதிக்குது ,என்ன
கூப்பிட்டு இருந்தா நான் வந்திருக்க மாட்டேனா என்ன ?என்று
வருந்தினாள்.பரவால்ல காயத்திரி அந்த தைலம் பாட்டிலை கொஞ்சம்
எடுத்து கொடுத்துட்டு நீ போ .
எங்க தேய்க்கணும் சொல்லு நான் தேய்குறேன்,வேண்டாம் நானே
தேச்சிகுறேன்,தாங்க ஜீவா இதுல என்ன இருக்கு நானே தேய்கிறேன் .
என்ன ஜீவா ?வேலைக்கு போகலியா என்று மாமியின் குரல் கேட்க
ஒண்ணும் இல்ல மாமி .காய்ச்சல் அடிக்கிதாம் ,தலை வலிக்கிதாம்
அதான் தைலம் தேய்ச்சுவிட்டேன் .
ஏண்டா உனக்கு தலை வலிச்சா நீயே தைலம் தேய்ச்சிக முடியாதா ,அவ
தான் தேய்கணுமா?
''என்ன மாமி என்ன பேசுறீங்க நீங்க ''காயத்திரிக்கு கோபம் வந்து விட்டது
ஒருத்தருக்கு உடம்பு சரி இல்லனா உதவி செய்றது தப்பா ?போங்க மாமி
போய் உங்க வேலையை பாருங்க .எதையும் நல்ல எண்ணத்தோட பாக்க
கத்துகோங்க ..
ஏண்டா ஜீவா .நான் உன் நல்லதுக்குதான் சொல்றேன் .எது நல்லது மாமி
காய்ச்சல் அடிக்குது அதபத்தி ஒரு வார்த்தை கேட்காம இப்ப வந்து
நல்லது கெட்டது பத்தி பேசுறீங்க போங்க மாமி என மறுபடியும்
கத்தினாள்.
விடு காயத்திரி அவங்க குணம் அப்படி நீ ஒண்ணும் கவலை படாத ..
அதை விடுங்க ஜீவா !நான் இடியாப்பம் எடுத்துகிட்டு வந்திருக்கிறேன்
கொஞ்சம் சாப்ட்டு மாத்திரை போடுங்க .
ஒரு வாய் எடுத்து வைப்பதற்குள் ஜீவாவிற்கு வாந்தி வந்தது அது
காயத்திரி புடவைமேல் எல்லாம் பட்டு தெரித்தது.சுதாரித்து
கொள்வதற்குள் இன்னொரு முறை வாந்தி வர அதை அப்படியே
காயத்திரி கையில் பிடித்து வெளியே கொண்டு போய் கொட்டிவிட்டு
வந்து எந்திரி ஜீவா ஆஸ்பிட்டல் போகலாம் என்று ஜீவாவின் இடுப்பில்
கை கொடுத்து தூக்கினாள்.
வேண்டாம் காயத்திரி நானே நடந்து வரேன் நீ போய் புடைவை
மாற்றிக்கொண்டு வா ,காயத்திரி வருவதற்குள் ஜீவாவால் நிற்க
முடியவில்லை காயத்திரி ஓடி வந்து தாங்கி பிடித்தாள்,மெல்ல வெளியே
கூட்டிக்கொண்டு வந்தாள்,மாமி சடாரென கதவை சாத்தும் சத்தம்
கேட்டது,
டாக்டர் காயத்திரியிடம் இது விஷ காய்ச்சல் ஒரு வாரத்துக்கு ரெஸ்ட்
எடுக்கணும் ,தினமும் வந்து ஊசி போட்டுக்குங்க ,மருந்து ,மாத்திரை
தவறாம கொடுங்க ...
ஒருவாரம் கழிந்திருந்தது
என்ன ஜீவா ?வேலைக்கு கிளம்பிட்டியா ?இந்தா இந்த திருநீறு ,இறு இறு
நானே வச்சி விடுறேன்
என்ன ஜீவா உடம்பு பரவாலையா?என்ற படியே தினேஷ் வந்தான் என்ன
தினேஷ் நீங்க வேலைக்கு போகலையா ஜீவா கேட்க .என்ன காயத்திரி
உன்கிட்ட எதையும் சொல்லலியா எங்களுடைய முதல் திருமண நாள்
இன்னைக்கு .ஜீவா காயத்திரியை பார்க்க அவள் முகம் வெட்கத்தால்
சிவந்திருந்தது .
ஜீவா ஆபிஸ் போய் வரும்பொழுது தினேஷ் கத்தும் சத்தம் வர ஜீவா
அவர்கள் வீட்டில் நுழைந்து தினேஷ் என்ன ஆச்சு ?என்ன பிரச்சன ?
இங்க பாருங்க ஜீவா .இது எங்க சொந்த பிரச்சன இதுல நீ தலையிடாத.
என்ன காயத்திரி ?தினேஷ் என்னன்னமோ பேசுறார் ,காயத்திரியின்
முகம் அழுதழுது வீங்கி இருந்தது .
அந்த நேரத்தில் அம்புஜம் மாமியும் ,மாமாவும் உள்ளே வந்தார்கள்
மாமா ஜீவா அருகில் வந்து நீயும் ,காயத்திரியும் பழகியதை மாமி
தினேஷிடம் தவறாக கூறிவிட்டாள்,அப்பொழுதுதான் எனக்கே தெரிந்தது
இது மாமியின் வேலையென்று .
ஜீவா தினேஷிடம் சென்று தினேஷ் யார் யாரோ ஏதோ சொல்றாங்கனு நீ
வீணா ,காயத்திரி மேல சந்தேகம் படாத ஆனால் அதை அவன் காதில்
வாங்கவில்லை .
யே காயத்திரி நீ உன் அம்மா வீட்டிற்கே சென்று விடு எப்போ என் வீட்டை
எதிர்த்து உன்ன கல்யாணம் பண்ணேனோ எனக்கு இதுவும் வேணும்.
இதுக்கு மேலயும் வேணும் ,
ஜீவா தினேஷ் அருகில் வந்து இப்படி பெரிய வார்த்தை எல்லாம்
பேசாதிங்க தினேஷ் நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்க ..அதற்குள்
மாமி பின்ன என்னடா அவன் பொண்டாட்டிக்கு நீ பொடவ வாங்கி கொடுத்தா என்ன அர்த்தம் .?
''நிறுத்துங்க மாமி'' உங்க மகள் இந்துவுக்கு பிறந்த நாளுக்கு புடவை
வாங்கிகொடுத்தத கூட மத்தவங்க தப்பா பேசினாங்க அதுக்கு நீங்க
என்ன சொன்னிங்க ?''ஜீவாவும் ,இந்துவும் அண்ணன் ,தங்கச்சி மாதிரி
உங்க பொண்ணுனா அண்ணன் ,தங்கச்சி உறவு மத்த பொண்ணுனா
தப்பான உறவா ?.
நாக்கு எதுகெடுத்தாலும் வளையுதே என்பதற்காக எதுவேணும்னாலும்
பேசலாம் ன்னு பேசாதிங்க மாமி .
பெண்ணாசை இருந்துச்சுனா நான் பணம் கொடுத்து எங்கவேனுனாலும்
போவேன் மாமி .
இந்த மாதிரி ஒரு நல்ல குடும்பத்தை கெடுத்துத்தான் ஆசையை
தீர்க்கனும்னு அவசியம் இல்ல மாமி .
அதுக்கு ஏண்டா அவ உனக்கு தைலம் தேச்சி விட்டா ?சாப்பாடு
கொடுத்தா ,உனக்கு ஓடி ,ஓடி வந்து பணிவிடை செஞ்சா ?
நிறுத்துங்க மாமி எனக்கு காயத்திரி தைலம் தேச்சி நான் எடுத்த
வாந்தியை அவ கைல பிடிச்சா பாருங்க அப்ப எனக்கு அவ காயத்திரியா
தெரியல மாமி ''என் அம்மாவா த்தான் தெரிஞ்சா ''உடனே தினேஷ்
மாமி சொல்வதை வச்சி மட்டும் நான் சந்தேகம் படல என் கண் எதிரிலே
பல முறை பார்த்திருக்கேன் .போதும் தினேஷ் '' அடுத்தவங்க முதுக
பார்த்து குறை சொல்ற நீங்க உங்களுக்கும் ஒரு முதுகு இருக்கிறத
மறந்துடுறீங்க .
தினேஷ் நீ அடுத்தவங்க பேச்சை கேட்டு காயத்திரி மேல சந்தேகம்
பட்டியே அது தப்பு இல்ல ..ஏன்னா நாமா விரும்புறவங்க அடுத்தவங்க
மேல அன்பு செலுத்துறாங்களே என்ற பொறாமை வருவது தான்
சந்தேகம் .
காயத்திரி நீ வாம்மா நான் இருக்கேன் .நீ கவலை படாதே.
தினேஷ் நான் காயத்திரியை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்
என்னைக்காவது ஒருநாள் எங்கள உறவை புரிந்து கொண்டு
காயத்திரியை நீ தேடி வருவ,அதுவரைக்கும் காயத்திரி எனக்கு
அம்மாவா இருப்பாள் ,ஜீவா காயத்திரியை அழைத்துக்கொண்டு தன்
வீட்டை நோக்கி நடக்க தொடங்கினான் ..
முற்றும் -பா ;சண்முகம்

shanmugam- புதிய மொட்டு
- Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 36
Location : Chennai
Re: உறவுகள் (சிறுகதை )
படிக்கவே ரொம்ப அருமையா இருக்கு, அருமை பாராட்டுக்கள்...
தொடர்ந்து எழுதுங்கள்...
தொடர்ந்து எழுதுங்கள்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உறவுகள் (சிறுகதை )
நன்றிங்க ...
shanmugam- புதிய மொட்டு
- Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 36
Location : Chennai
Re: உறவுகள் (சிறுகதை )
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:படிக்கவே ரொம்ப அருமையா இருக்கு, அருமை பாராட்டுக்கள்...
தொடர்ந்து எழுதுங்கள்...
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum