தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நாட்டுப்புறப் பாடல்களில் பேச்சுத் தமிழின் செல்வாக்கு எழுத்து டாகடர் மா.தியாகராசன் சிங்கப்பூர் 677616
2 posters
Page 1 of 1

நாட்டுப்புறப் பாடல்களில் பேச்சுத் தமிழின் செல்வாக்கு
எழுத்து
டாகடர் மா.தியாகராசன்
சிங்கப்பூர் 677616
நாட்டுப்புறப்பாடல்கள் மக்களின் நாகரீகக் கலாச்சாரத்தோடு தொடர்புடையது. அதிகாலத்தில் தோன்றிய மனிதர்கள கருத்துப் பரிமாற்றத்திற்காக மொழியை உருவாக்கினார்கள். மொழி உருவான காலத்திலிருந்தே மனிதனின் உணர்வுகள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் முதலிய அனைத்தும் மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மண்ணோடு பிறந்தது
நாட்டுப்புறப்பாடல்கள் உலகம் முழுவதும் அந்தந்ந மொழிகளில், அந்தந்த நாடுகளில், அவரவர்கள் சொந்த மண்ணில், அந்தந்த மக்களின் வாழ்க்கை முறைக்கேற்றவாறு வளர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் பெரும்பாலும் மக்கள் பேசுகின்ற மொழியில் உருவாகியிருப்பதால் நாட்டப்புறப்பாடல்களில் பேச்சுத்தமிழின் செல்வாக்கு மிகுதியாக ஆதிக்கம் பெற்றறுள்ளத.
மனித சமுதாயம்
மனித சமதாயம் தனக்காகப் பல்வேறு கோட்பாடுகளை வகுத்துள்ளது. அவற்றுள்ள எத்தனையோ கால வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இன்னும் சில புதிய மாற்றங்களைப் பெற்றுள்ளன புரட்சியையும் ஏற்படுத்தியுள்ளன. இவையனைத்தையும் நாட்டுப்புற இலக்கியங்கள் தன் பங்கிற்கு இயன்ற அளவு செய்துள்ளதோடு அதன் அடிப்படைத் தன்மையையும் இழந்து விடாமல் இருக்கிறது.
''மக்களை விலக்கிய தத்துவமோ, தத்துவத்தை விலக்கிய மக்களோ நீடு வாழ்வோ, நிறை வாழ்வோ உடையன அல்ல. சிந்தனையில் தெளிவு, செயல்பாட்டில் உறுதி, பயன்துய்ப்பில் சுயநலம் சிறிதுமற்ற பொது நலப் பேருணர்வு‘‘ இதுவே இலக்கியம் என்று கூறலாம் கிராமப்புற மக்கள் தம் (வாழ்வுமுறை இயக்கத்தின் அனுபவத்திற்கூடாகத் தம்) உணர்வுகளை, வாழ்வு முறைகளை , ஏக்கங்களை, எதிர்பார்ப்புகளை இசையுடன் வெளிப்படுத்தும் சாதனமாகக் கைக் கொள்வன நாட்டப்புறப்பாடல்கள். அதனால் தான் மனித சமுதாயத்திற்கு உடன்பட்ட மொழியில் , வழக்கில் கருத்துக்கள் அமந்துள்ளன. ~உணவே மருந்து மருந்தே உணவு| என்ற கோட்பாடு போலவே பேச்சு வழக்கில் சொல்லப்படுவதே நாட்டுப்புறப் பாடல்கள். நாடடுப்புறப் பாடல்களில் மிகுதியாய் உள்ளது பேச்சு மொழியே என உறுதியாகக் கூறலாம்.
நாட்டுப்புறப் பாடல்களின் அமைப்பு
நாட்டப்புறப்பாடல்களில் அன்றாட மக்களின் வாழ்க்கை முறைகளில் ஏற்படும் நிகழ்வுகளே பதிவாகி இருக்கும் என்பதைப் பார்த்தோம். திருமணம், குழந்தை பிறத்தல், இறப்பு நிழ்ச்சிகள், சடங்குகள், திருவிழாக்கள், விளையாட்டுக்கள் முதலிய நிகழ்வுகள் நாட்டுப் புறப் பாடல்களில் பாடு பொருளாக அமைந்திருக்கும். மனித வாழ்வோடு இணைக்கப்பட்டுள்ள அனைத்துச் செயல்பாடுகளும் நாட்டப்புறப் பாடல் தொடர்பு கொண்டுள்ளன என்பதை இனிவரும் செய்திகள் மூலம் அறியலாம்.
சுற்றுச் சூழல் சிந்தனை
மரங்களை வளர்க்க வேண்டும் என்பது மனித இனத்தின் தலையாயக் கடமை. சுற்றுச் சூழல் விழிப்புணர்வுர்வாளர்களும், அரசும் இதனையே வலியுறுத்தி வருகின்றன. இதையே நாட்டுப்புறப் பாடல் சாமியின் பெயரைச் சொல்லி மரங்களை வெட்டக் கூடாது என்று தடைபோடுகிறது. தமிழ்நாடு புதுச்சேரி மக்களின் மனதில் எழுந்த இந்தப் பாடலில் உள்ள சொற்களே பேச்சுத் தமிழைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.
சாமிக்குப் பக்கத்திலே
காத்தடிக்கும் வேப்ப மரம்
சாமிக்கு வேணுமின்னு
சாக்குச் சொல்லி வெட்டலாமா?............... ஏலேலம்படி ஏலோ
கோயிலுக்குப் பக்கத்திலே
கொடிகளிட்ட ஆலமரம்
குறிப்பு வைச்சு வெட்டலாமா? ............... ஏலேலம்படி ஏலோ
இப்பாடலில் ~வேண்டும்| என்று வார்த்தை பேச்சுத் தமிழில் ~வேணுமின்னு| என்றும் ~குறிப்பு வைத்து| என்ற சொல் ~குறிப்பு வச்சி ‘‘ என்றும் பேச்சுத் தமிழில் சொல்லப்பட்டிருக்கிறது.
பண்பாட்டு ஆய்வுகளுக்கு நாட்டுப்புறப் பாடல்களின் துணை
ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை பண்பாட்டை வரலாற்றுக் கூறுகளை விளக்குவதற்கு நாட்டப்புற இலக்கியங்கள் பெரிதும் துணை நிற்கின்றன. நாட்டப்புறப்பாடல்கள் தன்னையும் அறியாமலேயே சமகால வரலாற்று
நிகழ்வுகளை வருங்காலத்தின் பார்வைக்குப் பதிவு செய்து விடுகிறத. இது எதிர்காலச் சந்ததியினருக்கு அரிய பொக்கிஷமாகப் பயன்படகிறது. இதன் மூலம் ஒரு சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை ஆய்வு செய்வதற்கு நாட்டப்புறப் பாடல்கள் தரவுகளை வழங்கும் தகுதி பெற்றுள்ளத.
நாட்டுப்புறப் பாடல்களின் வடிவங்கள்
நாட்டுப்புறப் பாடல்கள் தாலாட்டுப்பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள் நலுங்குப்பாடல்கள், ஏற்றப்பாடல்கள், உழவுப்பாடல்கள், கும்மிப்பாடல்கள், என ஏராளமான வடிவங்களில் நாட்டப்புற இலக்கியங்கள் உலா வருகின்றன. அந்நதந்த நிகழ்வுகளில் ஏற்படும் உணர்ச்சியை அந்தந்த மக்களின் மனநிலைக்கு ஏற்பச் சொல் வழக்கில் தாங்கி வருகின்றன. “நாட்டுப்புறம்” என்றாலே கல்வியறிவில் பெரிய அளவு கற்காத மக்கள் வாழுகின்ற பகுதியாகவே கருதப்படுகிறது. பட்டிக்காட்டான் , நாட்டுப்புறத்தான் என்றும் பாமரன் என்றும் அழைக்கப்படும் அந்த மக்களின் பேச்சு வழக்கில் உருவானது தான் நாட்டுப்புறக் கலையாகும். நாட்டுப்புற இயலை 1846-ஆம் அண்டில் வில்லியம் தாமஸ்என்பவர் முதன் முதலில் Folklore என்னும் சொல்லில் அழைத்தார். அதற்குமுன் Popular Literature என்ற சொல்லால் அழைக்கப்பட்டது.
நாட்டுப்புறப்பாடல்கள்
மண்ணும் விண்ணும் தோன்றிய காலந்தொட்டே நாட்டுப்புற இலக்கியம் உலவுகிறது எனலாம். நாட்டப்புற இலக்கியம் என்று? எவரால்? தோன்றியது என்று கூறிவிட முடியாத அளவு பழமையானது. தென்னிந்தியாவில் முதன்முதலாக "சார்லஸ்கோவர்" தென்னிந்திய நாட்டப்புறப்பாடல்களை மொழிபெயர்த்துள்ளார். முதல் நாட்டப்புறப்பாடல் தொகுதி சாற்றிலே மிதந்த கவிதை என்ற பெயரில் மு.அருணாசலம் அவர்கள் வெளியிட்டார். நாடோடிஇலக்கியம் என்ற நாட்டுப்புறப்பாடல் ஆய்வு நூலினை கி.வா.ஜெகநாதன் அவர்கள் வெளியிட்டார். மு.அருணாசலம் என்பவர் தாலாட்டு இலக்கியம் என்ற நூலில் தாலாட்டின் தோற்றம் வளர்ச்சி பற்றி சங்ககாலம் முதற்கொண்டு இன்று வரை அலசி ஆராய்ந்துள்ளார்.த.ந.சுப்பிரமணியன் அவர்கள் காட்ட மல்லிகை என்ற பெயரில் நாட்டப்புறப்பாடல்களை வெளியிட்டுள்ளார். நாட்டப்புற இலக்கியத்தை அறிவியல் முறையில் ஒரு துறையாக வளர்த்தவர் தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை நா.வானமாமலை ஆவார். செ.அன்னகாமு என்பவர் ஏட்டில் எழுதாக் கவிதை என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார்.
நாட்டுப்புறக்கதைகள
கதா மஞ்சரி, தராவிட மத்தியக் காலக் கவிதைகள், வினோதரசமஞ்சரி, பூலோக வினோதக் கதைகள், பஞ்சதந்திரக்கதைகள், நாட்டுப்புறக் கதைகள், டெக்காமரான் கதைகள், தெனாலிராமன் கதைகள், பழங்கதைகள், பாரதநாட்டப் பாட்டிக் கதைகள், தமிழ்நாட்டுப்பழங்கதைகள் முதலிய பெயரில் வெளிவந்துள்ளன.
நாட்டப்புறக் கதைப்பாடல்கள்
கதைப்பாடல் பதிப்பில் முதன்மையாக விளங்குபவர்ஆறுமுகப்பெருமாள் ஆவார். நா.வானமாமலை அவர்கள் மதுரைப்பல்கலைக்கழகத்திற்காக ஐந்து கதைப்பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். கேசவன் அவர்கள் கதைப்பாடல்கள் காட்டம் சமூகத்தைச் சமூகவியல் நோக்கில் ஆராய்ந்துள்ளார்.
பழமொழிகள் (Proverbs)
பழமொழிகள் என்னும் சொல்லில் உள்ள மொழி என்பதை வைத்தே இது மிகவும் முந்தைய காலத்திலேயே உருவாக்கப்பட்டது என்பதோடு மட்டுமல்லாது, நினைவிற்கும் எட்டாத காலத்தே உருவாக்கப்ட்டது என்பதை உணரமுடிகிறது.ஆனால் மனித இன வரலாற்றுடன் தொடர்புடைய பழமொழிகள் நமது நாட்டில் 19-ஆம் நூற்றாண்டில் தான் சேகரித்து அய்வு செய்யப்பட்டன என்பதை நாம் உணர்தல் வேண்டும். பழமொழி என்பதற்கான வித்த தொல்காப்பியத்திலேயே இருந்தது என்றாலும், இதுபற்றிய முழுமையான ஆய்வு தொடங்கியது 19-ஆம் நூற்றாண்டில் தான் என்பது தெளிவாகும். 1888-ஆம் ஆண்டு
சிறுவர் விளையாட்டுப் பாடல்கள்
இளமைக்காலத் தோழியைச் சந்திக்கப் பல அண்டுகள் கழிந்த பின் ப் பல அண்டுகள் கழிந்த பின் பழைய இனிய நினைவுகளுடன்5செல்லும் இளைஞனின் கதையை இயல்பான போக்கிலிருந்து வாய் மொழி மரபின் கூறு வேறுபடுத்துகிறது.
மேலும் கீழும் அசைந்து கீழும் அசைகிறது மாட்டுவண்டியின் நுகத்தடி அதன் இருபக்க முனைகளிலும் அதன் இருபக்க முனைகளிலும் அவனும் அவளும் அமரந்திருக்க ஏத்தலாந்தொட்டி விளையாட்டு ஆரம்பமாகிறது சிறுவன் மேலே போகக் கீழே வருகிறாள் சிறுமி. அவன் மேலே வர அவன் கீழே
``ஏலேலாந் தொட்டி ஏத்தலாந் தொட்டி
ஏலேலாந் தொட்டி எறக்கலாந் தொட்டி
எம்பக்கம் ஒசந்தா எம்பொழுது ஓடுது
உம்பக்கம் ஒசந்தா உம்பொழுது ஓடுது"
என அவ்விளையாட்டைப் போலவே அவனது நினைவுகளும் இளம் பருவத்திற்கும் பால்யகாலத் தோழியின் விளையாட்டிற்கும் இன்றைய நிலைக்கும் மேலும் கீழுமாய்ச் செல்கிறது.
இப்பாடல் அடிகளில் வரும்
`` ஏலேலாந் தொட்டி எறக்கலாந் தொட்டி
உம்பக்கம் ஒசந்தா எம்பொழுது ஓடுது
உம்பக்கம் ஒசந்தா உம்பொழுது ஓடுது"
என்ற அடிகளில் இறக்கலாம் என்ற சொல் எறக்கலாம் என்றும், என் பக்கம் உயர்ந்தா என் பொழுது என்பது எம்பக்கம் ஒசந்தா எம்பொழுது என்றும் உன் பக்கம் உயர்ந்தா உன் பொழுது என்பது உம்பக்கம் ஒசந்தா உம்பொழுது என்றும் பேச்சு வழக்குச் சொற்கள் கலந்து வருவதை நாம் காணலாம்.
மேற்கோள் நூல்கள்
• தமிழ் பயிற்றும் முறை , டாக்டர் ந.சுப்பு ரெட்டியார், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, சிதம்பம், டிசம்பர்2000
• நற்றமிழ் கற்பிக்கும் முறைகள், வி.கணபதி, சந்திரிகா ராஜமோகன் சாந்தா
பப்ளிஷ்ர், சென்னை, 2002
• கார்த்திகேயன் கம்பெனி, (1970), கற்பித்தல் பொது முறைகள், ஏசியன் பிரிண்டர்ஸ் சென்னை
• க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) ஜூன் 1992,
எண் 268, ராயப்பேட்டை சாலை, சென்னை 6000014
• உயர்நிலைப்பள்ளிப் பாடத்திட்டங்கள் 2002, தமிழ் இரண்டாம் மொழி, கல்வி
அமைச்சு, சிங்கப்பூர்
• நாட்டுப்புறவியல் கட்டுரைகள் - சா.வளவன்
• நாட்டுப்புற நிகழ் மரபுகள் - அரு.மருததுரை
• குமரி நாட்டுப்புறவியல் - தன்னானே பதிப்பகம்
• புதுவை நாட்டுப்புறக் கதைகள் - ஆ.நாகலிங்கம்
• புதுவை நாட்டுப்புறவியல் - தன்னானே பதிப்பகம்
• Bright Ideas – Teacher Handbooks – Developing Children’s Writing , Scholastic Publications.
******* முற்றும் ********

Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பேச்சுத் தமிழை வளர்ப்பதில் பள்ளிகளின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சொற்கோவையைப் பெருக்கும் வழிமுறைகளைக் கற்பித்தல் -டாகடர் மா.தியாகராசன்
» திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» பொங்கல் - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» அதுவரை பொறுத்திரு - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum