தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm

» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) -    கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm

» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm

» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm

» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm

» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm

» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm

» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm

» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm

» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm

» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm

» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm

» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm

» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm

» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm

» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am

» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am

» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am

» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am

» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm

» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm

» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm

» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am

» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm

» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm

» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm

» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm

» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சொற்கோவையைப் பெருக்கும் வழிமுறைகளைக் கற்பித்தல் -டாகடர் மா.தியாகராசன்

3 posters

Go down

 உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சொற்கோவையைப் பெருக்கும் வழிமுறைகளைக் கற்பித்தல் -டாகடர் மா.தியாகராசன் Empty உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சொற்கோவையைப் பெருக்கும் வழிமுறைகளைக் கற்பித்தல் -டாகடர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Tue Jan 22, 2013 10:24 am

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சொற்கோவையைப் பெருக்கும்
வழிமுறைகளைக் கற்பித்தல் -டாகடர் மா.தியாகராசன்

எழுத்து
டாகடர் மா.தியாகராசன்
சிங்கப்பூர் 558286

முன்னுரை
தமிழ்மொழிக் கற்பித்தல் என்று கூறும்போது மாணவர்களின் மொழியறிவை மேம்படுத்துதல், சமூகவாழ்வில் அவர்கள் தம் தாய்மொழியின் உதவியுடன் கருத்துப்பரிமாற்றத்தை நிகழ்த்துதல், நற்குடிமக்களாக்குதல் முதலியன முக்கிய நோக்கங்களாக அமைந்துள்ளன எனலாம்.
மொழியறிவை மேம்படுத்துதல் என்று கூறும்போது, மொழியில் இலக்கணப்பிழையின்றி எழுதுதல், பொருள் பிழையின்றிப் பேசுதல், எழுதுதல் ஆகியன முக்கிய இடம்பெறுகின்றன. இவற்றை மேம்படுத்தும் வகையில் இலக்கணப் பாடல்களும், சொற்கோவைத் தொடர்பான வகுப்புகளும் தற்போது பள்ளிகளில் தமிழாசிரியர்களால் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன.

சொற்கோவை - அறிமுகம்
சொற்கோவை என்றால், சொற்களைப் பொருளறிந்து பயன்படுத்துதல், என்று கூறலாம். சொற்கள், அவற்றின் பொருள், அந்தச் சொற்களை எந்த இடத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுக் கொடுப்பது சொற்கோவை. இந்த மூன்றையும் பொருத்துதான் சொற்கோவையின் பெருக்கமே அமையும்.
சொற்கோவை என்னும்போது, நம் மொழியில் உள்ள அடிப்படைச் சொற்கோவையை அறிந்துகொள்வது அவசியம். அதை அறியாத நிலையில் தமிழ் மொழியில் நாம் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வது கடினமான ஒன்றாகிவிடும்.
அடிப்படைச் சொற்கோவை என்றால் நம் உடலில் உள்ள உறுப்புகள், நிறங்கள், உணவு வகைகள், போக்குவரவு வசதிகள், உடைகள் ஆகியவற்றைப் பற்றிய சொற்களை அறிந்திருத்தல் என்று பொருள்படும்.

' சொல் ‘ என்பதை அறிவது அவசியமா?
கற்பவர் ஒரு ' சொல் ‘ என்பதை ஏன் அறிய வேண்டும்? சொல் என்ற ஒன்றைப் பற்றி அறியாமல் சொற்கோவையைப் பெருக்க இயலாதா? என்றால் இயலாது எனலாம். சொல் என்பதைப் பற்றி அவர் அறிந்திருத்தல் அவசியம் என்பதற்கு இரு கருத்துக்களைச் சொல்லலாம்.
சொல் என்பதைக் கேட்பதற்கும், வாசிப்பதற்கும் ஒருவர் பயன்படுத்துகையில் ஒரு சொல்லை, அதன் ஒலி, பொருள் ஆகியவற்றின் அடிப்படையில் மற்றவற்றினின்று பிரித்துப் பார்க்க, வேறுபடுத்திப் பார்க்க இயலும். அதே நேரம் ஒரு சொல்லை ஆக்கல் திறனுக்காகவும் சேர்த்துப் பார்க்கும் போது ( பேசுதல், எழுதுதல் ) முன்கூறிய காரணங்களுடன் ஒரு சொல்லை எப்படி உச்சரிப்பது, எழுதுவது, அதில் உள்ள எழுத்துக்கள் யாவை, அது தொடர்பான இலக்கணம். செய்திகள் ஆகியவற்றையும் அறிய வேண்டி இருக்கிறது. அதனால் தான் சொல் என்பதை அறிந்து, ஒரு சொல் தொடரபான செய்திகளைப் படிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுவர்.
ஒரு சொல்லைப் படிக்கும் போது அதில் சில சிரமங்கள் தென்படுகின்றன. இந்தச் சிரமங்கள் மூன்று செய்திகளின் அடிப்படையில் நிகழ்கின்றன. அவை,
1) தாய்மொழியில், ஆங்கிலத்தில் கற்பவருக்கு, உள்ள முந்திய அறிவு, அல்லது அனுபவம்.
2) குறிப்பிட்ட சொல் கற்பிக்கப்படும் விதம்.
3) குறிப்பிட்ட சொல்லின் பொருளாழம், பயன்பாட்டு வழிகள்.

1) மாணவரின் முந்திய அறிவு
ஒரு சொல்லின் பல தன்மைகளை முன்பே அறிந்த சில மாணவர்களுக்குச் சொற்கவையைப் பெருக்குவது எளிது. அதாவது ' சுத்தம் ‘ என்ற ஒரு சொல்லைப் பற்றி முன்பே அறிந்த மாணவருக்கு, ' அ ‘ என்பதைச் சேர்த்து ' அசுத்தம் ‘, ' அநியாயம் ‘, அருவம் போன்ற முன்னொட்டு உடைய சொற்களைக் கற்பது எளிது. சு¢ல நேரம் எதிர்பொருளைக் குறிக்க ' அ ‘ உதவுவதும் அவருக்கு நன்கு தெரிந்த ஒன்றாகிவிடும்.
மாணவர்களின் இரண்டாம் மொழி கற்றலில், அவர்களது முதலாம் மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. இதை உணர்ந்து, மொழியாசிரியர் இரண்டாம் மொழியில் உள்ள சொல்லை விளக்குவதற்கு நேரடியாக முதல் மொழி மூலம் மொழிபெயர்ப்பைக் கூறாது, அந்தச் சொல்லுக்குப் பின்னால் உள்ள பொருளை ஓர் உதா¡ரண வாக்கியம் மூலம் கூறி, புலப்படுத்தலாம். இது ஒரு வகை.
ஏனெனில், சொற்களின் பொருள்கள் அனுபவத்தின் மூலம் நம்மால் அறியப்படுகின்றன. எனவே சூழலை வைத்து ஆசிரியர் மொழியில் சொற்கோவையை மேம்படுத்த முயல வேண்டும்.
ஒரு சொல்லை மாணவர்கள் அறிய வேண்டுமெனில் அவர்களுக்கு அது உணர்த்தும் பொருளை எடுத்துக் கூறவேண்டும்.
ஒரு சொல்லின் பொருளை விளக்குவதற்கு ஆசிரியர் பின்வரும் முறைகளைக் கையாளலாம்.

சொல்வளத்தைப் பெருக்கும் வழிமுறைகள்

எந்த ஒரு மொழியையும் திறம்படப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் அம்மொழியில் ‘சொல்வளம்’ பெற்றிருத்தல் மிக மிக அவசியம். தமிழ்மொழி சொல்வளம் நிறைந்த மொழியாகும். சிங்கப்பூர் மாணவர்கள் தமிழை ‏இரண்டாம் மொழியாகக் கற்கின்றனர். வீட்டைச் சுற்றிலும் பிற மொழிபேசும் மக்களே ‏இருப்பதால், மாணவர்கள் மொழியைக் கேட்பதும், பேசுவதும் குறைந்து விடுகிறது. பெரும்பாலான வீடுகளில் தமிழ்பேசும் சூழலே ‏‏இல்லை. ‏இத்தகைய காரணங்களால் சிங்கப்பூர் மாணவர்களிடையே சொல்வளம் குறைந்து காணப்படுகின்றது. வகுப்பறையில் ‏இம்மாணவர்களின் சொல்வளத்தை எவ்வாறெல்லாம் பெருக்கலாம் என்பதுபற்றிச் சில குறிப்புகளைக் காணலாம்.
1. இரண்டோ அல்லது ‏இரண்டிற்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்ட சொல்லைக் கொண்டு, முழுமையான பொருள் தரக்கூடிய பல சொற்களை உருவாக்கிக் காட்டச் சொல்லல்.

2. குறுக்கெழுத்துப் புதிர் போன்ற பயிற்சிகளைக் கொடுக்கலாம்.

3. விடுபட்ட எழுத்துக்களைக் கொண்ட சொற்களைக் கொடுத்து மாணவர்களை
நிரப்பச் சொல்லலாம்.

4. ஒரே மாதிரியான ஓசையில் முடியக்கூடிய சொற்களை எழுதச் சொல்லலாம்.

5. ஒரே பொருள் தரக்கூடிய பல சொற்களை மாணவர்களுக்கு
அறிமுகப்படுத்தலாம்.

6. பல பொருள் தரக்கூடிய ஒரே சொல்லைக் கற்றுக் கொடுக்கலாம்.

7. சிங்கப்பூர் மாணவர்களுக்குப் பழக்கம் ‏இல்லாத கிராமங்கள், விவசாயம்
சம்பந்தமான பொருட்கள் போன்றவற்றின் படங்களைத் திரையில் காண்பித்து,
அவற்றின் பெயர்களைக் கற்றுக் கொடுக்கலாம்.

8. ஏதேனும் ஒரு காட்சியைத் திரையில் குறிப்பிட்ட வினாடிகள் மட்டுமே
காண்பித்து, மாணவர்கள் அதில் கண்ட பொருட்களின் பெயர்களை எழுதச்
சொல்லலாம்.

9. ஆசிரியர் கடினமான சொற்களைக் கொண்ட சொற்பட்டியலைத் தயாரித்து
மாணவர்களுக்கு வழங்கலாம்.

10. ஒவ்வொரு நாளும் ஐந்து முதல் பத்து வரையிலான ஆங்கிலச் சொற்களைக்
கொடுத்து, அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல்லை எழுதி
வரச்சொல்லலாம்.

11. சைகை மூலம் நடித்துக்காட்டுதல்.

12. வண்ணப்படங்களின் வாயிலாக விளக்குதல்.

13. ஒரு சொல்லின் முன்னும் பின்னும் எழுத்துக்களை ‏இணைத்துப்
புதிய சொற்களை உருவாக்குதல்.

14. எதுகை, மோனைச் சொற்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தல்.

15. ஆசிரியர்கள் குழந்தைகளைப் பல ‏இடங்களுக்கு அழைத்துச் சென்று, பல
பொருள்களைப் பற்றிய அனுபவங்கள் கிட்டும்படி செய்யலாம். பல ‏
இடங்களுக்குச் சென்று பல பொருள்களைக் காண்பதால் புலன்காட்சியும்
(perception), பல பொருள்களைப்பற்றி வினாக்கள் மூலமும் நேரிலும்
அறிவதால் கருத்துக்கோடலும் (conception) வளர்ந்து உறுதியடைகின்றன.

16. குறில் நெடிலில் தொடங்கும் சொற்களையும், ஒரே முடிபுடைய
சொற்களையும் ‏இனப்படுத்திக் கற்பிக்கலாம்.

17. ர,ற,ல,ள,ண,ந,ன முதலிய ஒத்த ஓசைகளால் பொருள்படும் சொற்களை ‏‏
இணை ‏இணையாகத் தொகுத்துக் கற்பிக்கலாம்.

18. மாணவர்களுக்கு அகராதியைப் புரட்டும் பழக்கத்தை ஏற்படுத்துதல்.

19. ஒரு சொல்லை முன்னிருந்து பின்னோக்கி வரிசைப்பட எழுதினாலும்,
பின்னிருந்து முன்னோக்கி வரிசைப்பட எழுதினாலும் அச்சொல் மாறாது.
அம்மாதிரியான சொற்களைக் கண்டுபிடிக்கச் சொல்லல். எ.கா. ‘விகடகவி’

20. ஒரு தொடரில் உள்ள சொற்களை முன்பி‎ன்னாக மாற்றிக் கொடுத்து, சரியாக
அமைக்கும்படி சொல்லல்.

21. எழுத்துப் பெருக்கம் : ஒரு குறிப்பிட்ட எழுத்தில் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட
எழுத்தில் மட்டுமே முடியும் பல சொற்களை உருவாக்கல்.

22. எழுத்து மாற்றம் : ஒரு சொல்லில் ஒரு எழுத்தை மட்டும் மாற்றி வேறு
சொல்லாக்குதல்.

23. ஒரு சொல்லில் உள்ள எழுத்துக்களை மாற்‏றி மாற்றிக் கொடுத்துச் சரியான
சொல் அமைக்கும்படி கூறல்.

24. ஒரு வேர்ச்சொல்லைக் கொடுத்து அதிலிருந்து பிறக்கும் பல சொற்களை
எழுதச் சொல்லல்.

25. ஒரே ‏இனமுள்ள பல சொற்களோடு பொருத்தமில்லாத சொல்லையும் கலந்து
கொடுத்து, கண்டுபிடிக்கச் சொல்லல்.

26. Word Building : ‏ ஒரு மாணவன் ஒரு எழுத்தில் ஆரம்பிக்க, அடுத்த
மாணவன் அதோடு ‏இன்னொரு எழுத்தைச் சொல்லி புதிய சொல்லை
உருவாக்கல். ‏இவ்வாறே ஒவ்வொரு மாணவனும் ஒரு எழுத்தைச் சேர்த்துப்
விதவிதமான சொற்களை உருவாக்கலாம்.

27. பிழையான தொடரைக் கொடுத்து, திருத்தி எழுதச் சொல்லல்.

28. சொல்லேணிகளை அமைத்தல்.

மேற்கண்ட பயிற்சிமுறைகளின் மூலம் மாணவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் சொல்வளத்தைப் பெருக்கலாம். உயர்நிலை 1,2,3,4, மாணவர்களுக்கான ஒரு சில பயிற்சிகளைப் பின்வருமாறு செய்ய ஊக்குவிக்கலாம்.


உயர்நிலை 1

பயிற்சி 1

அந்நியனைக் கண்டுபிடி :

கீழ்வரும் ஒவ்வொரு வரிசையிலும் உள்ள சொற்களோடு பொருத்தமில்லாத சொல் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அந்நிய சொல்லைக் கண்டுபிடித்து எழுதுக.

1. காது, கண், மூக்கு, நாக்கு, பாக்கு, கை, கால்.

2. கருமை, செம்மை, எருமை, மஞ்சள், ஊதா, நீலம், பச்சை

3. பசு, எருது, கழுதை, காக்கை, நாய், சிங்கம், பன்றி,

4. சட்டி, பானை, அகப்பை, கோப்பை, சைக்கிள், செம்பு, கரண்டி

5. காலை, மதியம், சாமம், நேற்று, மாலை

விடைகள்

1. பாக்கு
2. எருமை
3. காக்கை
4. சைக்கிள்
5. நேற்று

பயிற்சி 2

ஒருபொருட் பல சொல் அமைத்தல் :

கீழ்வரும் சொற்களின் பொருளைத் தரக்கூடிய பல்வேறு சொற்களை கண்டுபிடித்து எழுதுக.

1. யானை

2. சூரியன்

3. நிலா

4. நீர்

5. கடல்
விடைகள்

1. யானை - கரி, வேழம், தந்தி, தும்பி, களிறு, பிடி, கஜம்.

2. சூரியன் - கதிரவன், பகலவன், ஞாயிறு, பரிதி, வெய்யோன்.

3. நிலா - மதி, சந்திரன்.

4. நீர் - தண்ணீர், ஜலம், வெள்ளம், தீர்த்தம்

5. கடல் - ஆழி, சமுத்திரம், முந்நீர், வரிபயிற்சி 3

கட்டத்திற்குள் ஒளிந்திருக்கும் மிருகங்களைக் கண்டுபிடித்து வட்டமிடுக.


க ழு தை ரா த று உ ஆ கு
ஊ ர த் ர சி றா சி பா ஒ
ஏ று டி ல் எ மு ங் ம் ட்
சி க் யி யா ஓ ய க பு ட

ம Á கீ ரி னை ல் ம் ப் க
பு ஏ நீ ல ந ரி ஓ ட ம்
ரு ள் பு று கு மு பு நா ய்
ல் லு ளி த சி ர லி கி ய்
பா லு ப் மா ன் ட் ங் கு டி

விடைகள் :க ழு தை ரா த று உ ஆ கு
ஊ ர த் ர சி றா சி பா ஒ
ஏ று டி ல் எ மு ங் ம் ட்
சி க் யி யா ஓ ய க பு ட

ம Á கீ ரி னை ல் ம் ப் க
பு ஏ நீ ல ந ரி ஓ ட ம்
ரு ள் பு று கு மு பு நா ய்
ல் லு ளி த சி ர லி கி ய்
பா லு ப் மா ன் ட் ங் கு டி


உயர்நிலை 2

பயிற்சி 1


கீழே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான விடைகளை கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களைப் பூர்த்தி செய்து தெரிந்து கொள்.
ர் க்

1. ‏இது சிங்கப்பூரின் தேசிய மலர்

று
2. ‏இது ‏இல்லாமல் உயிர் வாழ முடியாது.
டை

3. கர்ணன் புகழ்பெற்றது ‏இதனால்

வே த
4. ‏இது பாரதிதாசனின் சிறப்புப்பெயர்
ல்

5. ஒரு பழத்தின் பெயர் கொண்ட ‏இலக்கியம்
விடைகள்

ஆ ர் க் கி ட்
1

கா ற் று
2
கொ டை

3

பா வே ந் த ர்
4

நா வ ல்
5பயிற்சி 2

எழுத்துப் பெருக்கம் :

1. ‘த’ எனத் தொடங்கி ‘ம்’ என முடியும் சொற்களையும், 2. ‘ப’ எனத் தொடங்கி ‘ம்’ என முடியும் சொற்களையும் உண்டாக்குக. ‏இதில் முறையே ஒன்று, ‏இரண்டு, மூன்று....... என எழுத்துக்களை உருவாக்கிச் சொல்லாக்குக.

விடைகள்

த - ம் = 1. தரம், 2. தங்கம், 3. தந்திரம், 4. தசாவதாரம், 5. தன்னடக்கம்
6. தர்மசங்கடம் 7. தங்கப்பதக்கம்

ப - ம் = 1. படம் 2. பவழம் 3. பரவசம் 4. பந்தாட்டம் 5. பழத்தோட்டம்


பயிற்சி 3

கீழே கொடுக்கப்பட்டுள்ள வேர்ச்சொல்லிலிருந்து ‏பிறக்கக்கூடிய பிற சொற்களை எடுத்து எழுதுக.

1. ‘கண்’

2. ‘குதி’

விடைகள்

1. கண் - கண்டு, கண்டான், காண், காட்சி,, காணல்.

2. குதி - குதிரை, குதிர், குதித்தல், குதித்தான்.உயர்நிலை 3

பயிற்சி 1

எழுத்து ‏இடமாற்றம்:

மாறி மாறி ‏இருக்கும் எழுத்துக்களை ‏இடம் மாற்றிச் சரியான சொல்லாக்குக:

1. த ம் ப சி ர ம் -

2. சுமந்த சோரம் -

3. ம்வருள -

4. னழஅகா -

5. டுள்கோக -

6. ளிராச்திசிள்ப்ருப -

7. ள்சமஞ் -

8. ரம்தோண -

9. ய்வம்தெ -

10. ம்பரவேம்ப -

விடைகள்

1. சிதம்பரம்
2. சோமசுந்தரம்
3. வளரும்
4. அழகான
5. கோடுகள்
6. திருச்சிராப்பள்ளி
7. மஞ்சள்
8. தோரணம்
9. தெய்வம்
10.வேப்பமரம்.

பயிற்சி 2

கீழ்வரும் தொடர்களில் முறை மாறி ‏இருக்கும் சொற்களை முறைப்படுத்தி சரியான சொற்றொடர் அமைக்க :

1. என்று ஓர் ‏இருக்கின்றது ஊர் காரைக்குடி

2. வாழை தொங்குகிறது குலை மரத்தில்

3. ‏இட்டிலி குடித்தான் நீர் மோர் தின்று

4. புல் பசித்தால் புலி தின்னுமா

5. ‏இந்த ‏இருக்கிறது கிளை நீளமாக மரத்தின்

விடைகள்

1. காரைக்குடி என்று ஓர் ஊர் ‏இருக்கின்றது.
2. வாழை மரத்தில் குலை தொங்குகிறது.
3. ‏இட்டிலி தின்று நீர்மோர் குடித்தான்.
4. புலி பசித்தால் புல் தின்னுமா
5. ‏இந்த மரத்தின் கிளை நீளமாக ‏இருக்கிறது.

பயிற்சி 3

குறுக்கெழுத்துப் புதிர் :


1 2 3 4 5

6
7 8
9
10 11
12 13
14


இடமிருந்து வலம் :

1. அந்தக்கால முரசு (3)
4. சிரி / ஆபரணம் (2)
6. அமெரிக்க ராணுவம் ‏இந்த நாட்டுடன் தொடர்ந்து போரிட்டது. (5)
7. அளிக்கும் (3)
8. பெற்றுக் கொள் / பெண் யானை (2)
9. மீன் / தோலில் கரும்புள்ளி (4)
10. ‏இதன் காதுக்குள் ஒட்டகம் போனாலும் காசாசை போகாதாம் (4)
11. மேலேற உதவும் (‏இரு அர்த்தங்களில்) (2)
12. விரிவான தகவல் (4)
14. ஒருவகை நடனம் (3)

மேலிருந்து கீழ்:

1. எழுத உதவும் (2)
2. சிவபெருமான் உறையுமிடம் (4)
3. கூட்டமாகத் தாக்கும் கொடிய மீன்வகை (3)
5. மூப்படைந்தவர்களின் மூன்றாவது கால் (4)
6. கொட்டும் ராசி (6)
8. உருவம் (4)
9. அமைவது ‏இறைவன் கொடுத்த வரம் (3)
13. துப்பாக்கியில் போடலாம் / உப்புமாவும் செய்யலாம் (2)

விடைகள்

1பே ரி 2கை 3பி 4ந 5கை
னா லா ரா த்
6வி ய ட் னா ம் த
7த ரு ம் 8பி டி
ச் 9ம ச் ச ம்
10ஊ சி மு னை 11ப டி
க 12வி ப 13ர ம்
14கு ம் மி வை

உயர்நிலை 4

பயிற்சி 1

ஒரு சொல்லிலிருந்து பொருள் தரக்கூடிய பல சொற்களை உருவாக்கிக் காட்டுக

1. “திருவிளையாடல்”

2. “அருங்காட்சியகம்”

3. “சிதம்பரம்”

4. “வீரசுதந்திரம்”

5. “தொலைக்காட்சி “

விடைகள்

1. திருவிளையாடல் - திரு விளையாடல் விளை
விடல் திடல் திளை
திருடல் வில் வியாதி
விதி

2. அருங்காட்சியகம் -காசி கா காட்சி
காகம் அகம் காயம்
கயம் கட்சி அருகம்

3. சிதம்பரம் - பரம் சிரம் பசி
பதம் தம் ரதம்
தரம் தம்பம் பரதம்

4. வீரசுதந்திரம் - வீரம் சுரம் தரம்
திரம் ரதம் ரதி
வீதி சுதி சுதந்திரம்
சுந்தரம் வீசு வீசும்
வீதம் தந்திரம்

5. தொலைக்காட்சி - தொலை சிலை காசி
காட்சி காலை கா

பயிற்சி 2

பல பொருள்களைத் தரக்கூடிய ஒரு சொல்

1. ‘மறை’

2. ‘மணம்’

3. ‘மதி’

4. ‘கரி’

5. ‘வரி’

விடைகள்

1. மறை 2. மணம்

நூல் ஒளித்து வை வாசனை திருமணம்


3. மதி 4. கரி
நிலா அறிவு யானை அடுப்புக்கரி5. வரி
கோடு ‏இசைப்பாட்டுகுறுக்கெழுத்துப்புதிர்


1
2 3
4
5 6 7
8 9
10 11
12 13
14 15
16
17
‏இடமிருந்து வலம் :

1. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ‏இவர்
2. நாட்டிய மாதர்களி‎ன் கால்களில் ‏இது ஒலிக்கும்
5. கண்ணபிரானுக்கு உகந்த ‏இடங்களில் ‏இதுவும் ஒன்று
8. ராஜாவுக்குத் தேவை ஒரு.......
9. நாடகங்கள் நடக்கும் ‏இடம்
12. .......சரணம் கச்சாமி
14. திக்கு என்பதைத்........ என்றும் கூறலாம்.
15. வெள்ளைக் கொடி காட்டினால்
16. ‘உம்’ என்று ‏இருக்காதே கொஞ்சம் .......!
17. பந்தல் போட ‏இந்த மரம் உதவும்


மேலிருந்து கீழ் :

1. அழகிய க‎ன்னத்தை ‏இப்பழத்திற்கு ஒப்பிடுவர்.
4. சேலை கட்டும் பருவத்திற்கு முன் இதை அணிவர்
6. பணம் படைத்தவர்கள் செலவு விஷயத்தில்..........காட்டுவார்கள்
7. மலேசிய மாநிலங்களில் ஒன்று
9. மணக்கும் பொருள் - திருடுபோவதிலும் ‏இந்த மரம் முதலிடம் பெறுகிறது.
10. தொலைக்காட்சி வந்தபிறகு ‏இது படிப்பது குறைந்துவிட்டது.
11. காரணம் எதுவும் கூற முடியாதபோது ‏இந்த வார்த்தை கை கொடுக்கும்.
13. தன்னை அடைக்கலம் தேடி வந்த புறாவைக் காப்பாற்ற சிபி சக்கரவர்த்தி ‏‏
இதை எடைக்கு எடை கொடுத்தான்.
15. உற்பத்தி பெருகினால் விலையில்.........ஏற்படும்.

விடைகள்

1ஆ
ண் டா ள் 2ச 3த ங் கை
ப் 4தா ன
5பி ரு ந் 6தா வ ன ம் 7சா
ள் 8ரா ணி 9ச பா
10ப ள 11சு ந்
12பு த் 13த ம் ம் த
14தி சை 15ச மா தா ன ம்
16சி ரி ரி ம்
கை 17ச வு க் கு

முடிவுரை

மேற்கூறியுள்ளதைப் போன்று பல பயிற்சிகளைக் கொடுத்து உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் சொற்கோவையை மேம்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, அவர்கள் தம் மனதில் எழும் எண்ணங்களைச் சுவைபட, கூறியது கூறல் போல் இருக்காது. பல வகையான அழகு தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்திப் பேச முடியும், எழுதவும் முடியும். அதோடு தமிழ்மொழி நீண்டகாலம் நிலைத்து வாழவும் வழி செய்ய இயலும். இப்படிப் புதிய ‘அடை’வுகள் பய‎ன்படுத்திச் சொற்கோவையைப் பெருக்குதல் வேண்டும். ‏இது மாணவர்களைச் சலிப்பின்றிக் கற்கத் தூண்டுகிறது. ‏இதனால் மாணவர்கள் புதிய சொற்களைத் தாங்களாகவே கண்டுபிடித்து மகிழ்வார்கள்.


மேற்கோள் நூல்கள்
• க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) ஜூன் 1992,
எண் 268, ராயப்பேட்டை சாலை, சென்னை 6000014
• உயர்நிலைப்பள்ளிப் பாடத்திட்டங்கள் 2002, தமிழ் இரண்டாம் மொழி, கல்வி
அமைச்சு, சிங்கப்பூர்
• தமிழ் பயிற்றும் முறை , டாக்டர் ந.சுப்பு ரெட்டியார், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, சிதம்பம், டிசம்பர்2000

• நற்றமிழ் கற்பிக்கும் முறைகள், வி.கணபதி, சந்திரிகா ராஜமோகன் சாந்தா
பப்ளிஷ்ர், சென்னை, 2002

• கார்த்திகேயன் கம்பெனி, (1970), கற்பித்தல் பொது முறைகள், ஏசியன் பிரிண்டர்ஸ் சென்னை


******* முற்றும் ********
துணைநூற்பட்டியல்

1. தமிழ் பயிற்றும் முறை , டாக்டர் ந.சுப்பு ரெட்டியார், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, சிதம்பம், டிசம்பர்2000

2. நற்றமிழ் கற்பிக்கும் முறைகள், வி.கணபதி, சந்திரிகா ராஜமோகன் சாந்தா பப்ளிஷ்ர், சென்னை, 2002

3. Gloria Lesser Rothsten, (1980), Vocabulary Skills, U.S.A, Scholastic Book Services.

4. Lesley P. Gingell, (1973), The ABC’s of the Open Classroom, An ETC Publication.

5. Sim, D.D., B. Laufer – Dvorskin, (1981), Vocabulary Development, London, Collins.

6. Nation, I.S.P., (1980 -1983), Teaching and Learning Vocabulary, Victoria University of Wellington.

7. கார்த்திகேயன் கம்பெனி, (1970), கற்பித்தல் பொது முறைகள், ஏசியன் பிரிண்டர்ஸ் சென்னை.
%%%%%%%%%%%%%%%%%%% முற்றும் %%%%%%%%%%%%%%%%%
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

 உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சொற்கோவையைப் பெருக்கும் வழிமுறைகளைக் கற்பித்தல் -டாகடர் மா.தியாகராசன் Empty Re: உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சொற்கோவையைப் பெருக்கும் வழிமுறைகளைக் கற்பித்தல் -டாகடர் மா.தியாகராசன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 22, 2013 1:22 pm

 உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சொற்கோவையைப் பெருக்கும் வழிமுறைகளைக் கற்பித்தல் -டாகடர் மா.தியாகராசன் 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சொற்கோவையைப் பெருக்கும் வழிமுறைகளைக் கற்பித்தல் -டாகடர் மா.தியாகராசன் Empty Re: உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சொற்கோவையைப் பெருக்கும் வழிமுறைகளைக் கற்பித்தல் -டாகடர் மா.தியாகராசன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 24, 2013 12:52 pm

விரிவான விளக்கம்... பயனுள்ளது... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

 உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சொற்கோவையைப் பெருக்கும் வழிமுறைகளைக் கற்பித்தல் -டாகடர் மா.தியாகராசன் Empty Re: உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சொற்கோவையைப் பெருக்கும் வழிமுறைகளைக் கற்பித்தல் -டாகடர் மா.தியாகராசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாட்டுப்புறப் பாடல்களில் பேச்சுத் தமிழின் செல்வாக்கு எழுத்து டாகடர் மா.தியாகராசன் சிங்கப்பூர் 677616
» புன்னகைப் பூக்கள் - டாகடர் மாத்ருபூதம் சொன்னவை
» ஆண்மை பெருக்கும் உணவுகள்
» ஆண்மை வீர்யம் பெருக்கும் ,காதல் வளர்க்கும் மூலிகைகள் -நில பனை கிழங்கு (படங்களுடன் )
» விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum