தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பாறையின் கதவுகள் ! நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
2 posters
Page 1 of 1
பாறையின் கதவுகள் ! நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
பாறையின் கதவுகள் !
நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் !செல் 9894058651
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
உலா பதிப்பகம் ,30/23,ஜெ .எம் .வளாகம் ,சின்னக் கடை வீதி ,திருச்சி .620002
விலை ரூபாய் 40.மின்னஞ்சல் ulapathippagam@gmail.com
நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் குறுந் தகவல் இதழ் ஆசிரியர் .தினந்தோரும் மாற கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகளை பலருக்கும் அனுப்பி வருபவர் .தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .பல்வேறு சிற்றிதழ்களிலும் எழுதி வருபவர் .
.பாறையின் கதவு ! நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது .நூலாசிரியரின் நண்பரும் ,திரையிசைக் கவிஞருமான வசந்த ராஜாவின் அணிந்துரை தோரண வாயிலாக உள்ளது .
நம் நாட்டில் அரசியல்வாதிகள் மக்கள் வறுமையை ஒழிப்பதாக சொல்லிக் கொண்டு தொடர்ந்து அய்ந்தாண்டு திட்டங்கள் தீட்டி வருகின்றனர் .அரசியல்வாதிகள் தங்கள் குடும்ப வறுமையை ஒழித்து வளமாகி விட்டனர் .ஆனால் மக்கள் வறுமையும் கொசுவும் அப்படியே உள்ளது ஒழியவில்லை அதனை உணர்த்தும் ஹைக்கூ மிக நன்று .
குடிசை வீடு
கிழிந்த போர்வை
கொசுக்களுக்கு ரத்ததானம் !
ஏழ்மையை காட்சிப் படுத்தி சிந்திக்க உள்ளார் .
கிணறு ,நிலா பற்றி பல கவிஞர்கள் பல ஹைக்கூ கவிதைகள் எழுதினாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகவே இருக்கும் .நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் அவர்களின் ஹைக்கூ .
எட்டிப்பார்த்தேன்
தூக்கிவிடச் சொன்னது
கிணற்றில் விழுந்த நிலா !
கோடிகளை ஊதியமாகப் பெரும் கோடம்பாக்கத்து நடிகர்களின் கட் அவுட்டிற்கு பெற்றோரிடம் பெற்ற பணத்தில் பாலபிசேகம் செய்யும் ரசிகனின் அறியாமையை உணர்த்தும் ஹைக்கூ .
கன்றிற்கில்லா பால்
போனது
கட் -அவுட்டிற்கு !
தந்தை பெரியார் சொன்னார் .பெண்ணே பட்டுச் சேலை ,தங்க நகை ஆசையை ஒழி என்றார் .ஆனால் பெண்களுக்கு பட்டுச் சேலை மீதும் தங்க நகை மீதும் ஆசை மட்டும் குறைவதே இல்லை .பல படித்த பெண்களும் கூட சராசரிப் பெண்ணாகவே ஆசைப்படுகின்றனர் .படிக்காத ஏழைப் பெண்ணும் ஆசைப்படுகிறாள் .
பருத்தி எடுப்பவளை
படுத்தியெடுத்தது
பட்டுச்சேலை கனவு !
நினைத்தாலே இனிக்கும் உன்னத பலா பற்றி சுவையான ஹைக்கூ .
அறுத்து கூறு போட்டாலும்
இனிப்பைத் தருகிறது
பலா !
இன்னா செய்தாரை என்ற திருக்குறளை வழிமொழிந்து ,மரத்தின் மேன்மையை உணர்த்தி ஒரு ஹைக்கூ .
கல்லெறிந்தேன்
கனி கொடுத்தது
மரம் !
சித்தர்கள் போல வாழ்வியல் தத்துவம் ,நிலையாமையை உணர்த்தும் விதமாக உள்ள ஹைக்கூ .
ஆயிரம் பிணங்கள் விழுங்கியும்
பசியுடன் கிடக்கிறது
இடுகாடு !
ஹைக்கூ கவிதையில் மூன்றாவது வரியில் விடை இருக்க வேண்டும் .அந்த விடை வாசகன் எதிர்பார்க்காத விடையாக இருக்கும் .இது ஹைக்கூ நுட்பம் .
எந்த தப்பும் பண்ணாமல்
உதைபட்டுக் கொண்டேயிருக்கிறது
கால்பந்து !
அதே நுட்பத்துடன் மற்றும் ஒரு ஹைக்கூ இதோ .
அதிகாரமிருந்தும்
ஆட்சிக்கு வரவில்லை
திருக்குறள் !
ஆட்சியாளர்களுக்கு எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை உணர்த்தியது திருக்குறள் .
சூரியன் ஒரு நிமிடம் கூட ஒய்வு எடுப்பதில்லை .சூரியன் ஒய்வு எடுத்தால் நமக்கு விடியாமல் போய் விடும் ..நாம் பிரகாசிக்க தூண்டுகோள் வேண்டும் .
யார் தூண்டுவது
எரிந்து கொண்டேயிருக்கிறது
சூரிய தீபம் !
புத்தர் ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் .ஆனால் புத்தரை கடவுளாக வணங்கும் சிங்களர் சிலர் இலங்கையில் பேராசைப்பட்ட காரணத்தால் இன்று அவமானத்தையும், அழிவையும் சந்தித்து வருகின்றனர் .மனிதன் ஆசையை ஒழித்தால்தான் நாட்டில் அமைதி நிலவும் .
புரட்டிக் கொண்டேயிருக்கிறேன்
தீராமலிருக்கிறது
ஆசைப் புத்தகத்தின் பக்கங்கள் !
இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் நிறைய உள்ளது .நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள்.காவிரி ஆறு போல உங்களிடமிருந்து ஹைக்கூ ஆறு பெருகட்டும் .
ஹைக்கூ கவிதைகள் மூன்று வரிகள் இருப்பதுதான் சரி .சில கவிதைகள் நான்கு வரிகள் உள்ளது .அடுத்த பதிப்பில் மூன்று வரிகளாக செதுக்கி விடுங்கள் .இன்னும் சுவை கூடும் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: பாறையின் கதவுகள் ! நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
சிறப்பு... பார்வையின் ஆழம் அழகு...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பாறையின் கதவுகள் ! நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum