தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

2 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 4:59 pm

"காதல்' என்ற பெயரில் சமீபநாட்களாக தமிழகத்தில் அங்குமிங்குமாக நிகழும் கொலைவெறிகள், ரத்தத்தை ஒரு கணம் உறைய வைப்பதாக உள்ளன. கோவை புறநகரில் வீடு புகுந்து, கல்லூரி மாணவியை கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்று, "ஆசிட்' ஊற்றி எரித்து, அந்த நெருப்பிலேயே தானும் விழுந்து தற்கொலை செய்துகொண்டான் காதலன்.

இக்கொடூர சம்பவத்தை தடுக்க முயன்ற, மாணவியின் தாய்க்கும் கத்திக்குத்து விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். சினிமாவையும் மிஞ்சும் வகையில் அரங்கேறிய இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார், "எங்களாலேயே அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை, இதுபோன்ற கொடூர சம்பவ வழக்கை இதற்குமுன் நாங்கள் விசாரித்ததில்லை,' என்கின்றனர்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 5:00 pm

தினமலர் செய்தி

கோவை, காளப்பட்டி, பள்ளி வீதியைச் சேர்ந்தவர் அசீம்(22). பீளமேடு ஜி.ஆர்.டி., அறிவியல் கல்லூரியில் எம்.ஐ.பி., (மாஸ்டர் ஆப் இன்டர்நேஷனல் பிசினஸ்) முதலாமாண்டு படித்து வந்தார். வடவள்ளி, தோப்பில் நகர், வீரமாத்தியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த தொழிலதிபர் சஜீவ்மேனன் மகள் ஸ்ருதி(22). இருவரும் இளங்கலை படித்தபோதிருந்தே காதலித்துள்ளனர். முதுகலை படிப்பை துவக்கிய நிலையில் இருவரிடையே மோதல் ஏற்பட்டது. காதலனை சந்திப்பதை ஸ்ருதி தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அசீம், நேற்று முன்தினம் மாலை, வடவள்ளியிலுள்ள ஸ்ருதியின் வீட்டுக்கு தனது காரில் சென்றுள்ளார். காம்பவுண்டுக்கு வெளியே சாலையில் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த இவரை, ஸ்ருதியின் தாயார் லதா தடுத்து வாக்குவாதம் செய்துள் ளார்.

அடுத்தகணமே அசீம், கத்தியால் சரமாரியாக குத்த, ரத்த வெள் ளத்தில் சரிந்தார் லதா; கை, கால், வயிறு, மார்பு என 12 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. தொடர்ந்து, காதலி ஸ்ருதி இருந்த அறைக்குள் நுழைந்து, அவரையும் சரமாரியாக 9 இடங்களில் குத்தினார்.கொலைவெறி அத்துடன் அடங்கவில்லை. தான் கொண்டு வந்திருந்த "ஆசிட்'டை ஸ்ருதியின் மீது ஊற்றி தீ வைத்தார். ஏற்கனவே கத்தி குத்துகளால் குற்றுயிராய் கிடந்த ஸ்ருதியின் உடலெங்கும் நெருப்பு பற்றி எரிய, தன் மீதும் "ஆசிட்'டை ஊற்றியவாறு, காதலியின் உடல் மீது விழுந்தார். அடுத்த வினாடியே காதலனையும் எரித்தது நெருப்பு. அந்த அறையில் இருந்த "சோபா செட்' உள்ளிட்ட பொருட்களும் எரிந்ததால், ஜன்னல் வழியே வெளியேறிய புகையை பார்த்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். வாசலில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த லதாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். இன்னும் சிலர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, நெஞ்சத்தை உறைய வைத்த காட்சி அரங்கேறியிருந்தது. ஸ்ருதியும், ஒரு வாலிபரும் கரிக்கட்டையாக நெருப்பில் கிடந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பேரூர் டி.எஸ். பி., சண்முகம், வடவள்ளி இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். டில்லியிலுள்ள ஸ்ருதியின் தந்தை சஜீவ்மேனனுக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஸ்ருதியின் தாயார் லதா, சுய நினைவு திரும்பி, நடந்த சம்பவத்தை விவரித்தால் மட்டுமே நடந்த சம்பவம் குறித்த மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்கின்றனர், போலீசார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 5:00 pm

"காதலின் நினைவாக ஏதாவது கொடு...!' வடவள்ளி போலீசார் கூறியதாவது:அசீம், ஸ்ருதி இருவரும் பி. ஐ.எம்., (பேச்சுலர் ஆப் இன்டர்நேஷனல் பிசினஸ்) படிக்கும்போதிருந்தே காதலித்துள்ளனர்.
இருவரும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, எம்.ஐ.பி., (முதுகலை) ஒன்றாக படித்துள்ளனர். இருவரது காதலுக்கு ஸ்ருதியின் அம்மா லதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து காதலனை விட்டு கொஞ்சம், கொஞ்சமாக ஸ்ருதி விலகத்துவங்கியுள்ளார். இருப்பினும், அசீம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், தான் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, பெங்களூருக்கு வேலைக்கு செல்வதாகவும், தனக்கு ஏதாவது ஒரு பொருளை காதல் நினைவாக தரவேண்டுமென காதலியிடம் அசீம் கேட்டாராம். இதற்கு ஸ்ருதி மறுத்ததால் ஆவேசமடைந்து, அதன் பிறகே இச்சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

ஸ்டீல் வியாபாரி மகன்: கோவை, காளப்பட்டியில் ஸ்டீல் வியாபாரம் செய்துவரும் அயூப் என்பவரின் மகன்தான் அசீம். அசீமுக்கு, ஒரு அண்ணன், ஒரு சகோதரி உள்ளனர். இத்துயர சம்பவம் நிகழ்ந்தபின், போலீசார் அசீம் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, "மகனின் காதல் விவகாரம் எங்களுக்கே தெரியாது' என, போலீசிடம் தெரிவித்துள்ளனர்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 5:01 pm

"மகளின் காதல் பற்றி தெரியாது': ஸ்ருதியின் தந்தை சஜீவ்மேனன் டில்லியில் தங்கி, ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். மாதம் ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்வதால், பெரும்பாலும் ஸ்ருதி தனது அம்மா லதா, தாத்தா விபிமேனனுடன் வசித்துள்ளார். ஸ்ருதியின் அக்கா ஷீத்தல் பல்டாக்டராக உள்ளார். இவருக்கு திருமணமாகி விட்டது. தனது மகளின் காதல் விவகாரம் குறித்து தனக்கு எதுவுமே தெரியாதென, வடவள்ளி போலீசிடம் தந்தை சஜீவ்மேனன் தெரிவித்து, கதறியுள்ளார்.

பெற்றோரே... பிள்ளைகள் பத்திரம்! அபாயமணி அடிக்கிறார் டாக்டர்: ஒருதலைக்காதல், காதலித்த பெண் திருமணம் செய்துகொள்ள மறுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக, கடந்த 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை, தமிழகத்தில் மூன்று பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். ஒன்று சென்னை, மற்ற இரு சம்பவங்கள் கோவையில் நிகழ்ந்துள்ளன.

சென்னை, திருவொற்றியூர், மாணிக்கம் நகரைச் சேர்ந்த செந்தமிழ்செல்வன் - அக்னெஸ் தம்பதியினரின் ஒரே மகள், பி.எஸ்சி., பட்டதாரி கார்த்திகா, 21, கடந்த 11ம் தேதி, காலை 8.30 மணியளவில், பாரிமுனை பஸ் ஸ்டாப்பில் காதலர் ராஜரத்தினத்தால் கழுத்தறுத்து கொல்லப்பட்டார். பின்னர், ராஜரத்தினமும் தனக்குத்தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார். மது, மாது உள்ளிட்ட தீய பழக்கங்கள் கொண்ட ராஜரத்தினத்தை, திருமணம் செய்ய கார்த்திகா மறுத்ததே, இச்சம்பவத்துக்கான முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டது.

அடுத்த சம்பவம் கோவையில் நடந்தது. கணபதி, கணேஷ் "லே-அவுட்'டில் வசிக்கும் அய்யப்பன்- அஜிதா தம்பதியினரின் மகள் அபிநயா, 14, கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் வேணுகோபால் 21, அபிநயாவை காதலித்துள்ளார். கடந்த 21ம் தேதி, மாலை வீட்டில் தனியாக இருந்த அபிநயாவிடம், வேணுகோபால் காதலிப்பதாக கூறியுள்ளார். அவர் அதை ஏற்க மறுக்கவே, அபிநயாவை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, வேணுகோபாலும் தற்கொலைக்கு முயன்றார். இவர் தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
மூன்றாவது சம்பவம் கோவை, வடவள்ளியில் நடந்துள்ளது. சஜீஸ்மேனன், லதா தம்பதியினரின் இளைய மகள் ஸ்ருதியை கொடூரமாக கொன்று,

Advertisement
அவரது தாயையும் கத்தியால் குத்திய காதலன் அசீம், தானும் தற்கொலை செய்து கொண்டார். மேற்குறிப்பிட்ட மூன்று சம்பவங்களு எழை, நடுத்தர மற்றும் வசதி படைத்த குடும்பங்களில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை, கே.எம்.சி.எச்., மருத்துவமனை மனநல மருத்துவர் சீனிவாசன் கூறியதாவது:சமூக, கலாசார சீரழிவுகளால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன; "டிவி', "சினிமா'க்கள் முக்கிய காரணம். காதலை ஏற்க மறுக்கும் பெண்ணிடம், மீண்டும், மீண்டும் வற்புறுத்துவது என்பது அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவதாகவே கருதப்படுகிறது. முதலில், சினிமா கதாநாயகன் போல் எண்ணி இளைஞர்கள் செயல்படுகின்றனர். முடிவில், நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாக வருவதை, ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் இல்லை. பெண்ணின் அழகை ரசிப்பது ஏற்புடையது; அதை அடைய நினைத்து செயல்படுபவர்கள் மனித நிலையிலிருந்து அரக்ககுண நிலைக்கு மாறிவிடுகின்றனர்.அவர்களிடம் மூர்க்கத்தனம் காணப்படும்;உயிரின் மதிப்பு குறித்து புரியாது. அந்நிலையில் நான்தான் முக்கியம், என் விருப்பம் தான் முக்கியம் என்றும், அதை அடையும் வழி எதுவாக இருந்தாலும், எனக்கு கவலையில்லை என்று செயல்படுவார்கள். உளவியலில் இதற்கு, "ஆத்திர உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத நிலை' (Impulsive Behaviour) என்று பெயர். பெற்றோர், குழந்தை வளர்ப்பில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், கண்காணிக்க வேண்டியது அவசியம். வளர்இளம் பருவத்தில் நன்னெறிகளை, அழுத்தமாய், ஆழமாய் அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும். இவ்வாறு, சீனிவாசன் தெரிவித்தார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 5:01 pm

கோவையில் அடுத்த கத்திக்குத்து காதலை மறைத்து, தன்னை ஒதுக்கிய மாமன் மகளை வழிமறித்து, கத்தியால் குத்திய வாலிபர், கைது செய்யப்பட்டார்.
கோவை, சுந்தராபுரம், வெங்கடசாமிலேஅவுட்டைச் சேர்ந்தவர் ரம்யா, 24. எம்.சி.ஏ.,பட்டதாரி. தனியார் நிறுவன ஊழியர். இவரும், சுந்தராபுரம், பகுதியைச் சேர்ந்த மதன்குமாரும் நெருங்கிய உறவினர்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.சில மாதங்களுக்கு முன், ரம்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதன்பின், மதன்குமாரைவிட்டு, ஒதுங்கினாராம் ரம்யா. இவரது நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த மதன்குமார், ரம்யா தன்னை புறக்கணித்து விட்டாளே என ஆத்திரம் அடைந்தார்.நேற்று முன்தினம் காலை, ரம்யா அலுவலகம் செல்வதற்காக, காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இறங்கி, ராம்நகருக்குள் நடந்து சென்றார். அப்போது, வழிமறித்த மதன்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியால், குத்தினார். படுகாயமடைந்த ரம்யா கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள், ரம்யாவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். காட்டூர் போலீசார், மதன் குமாரை கைது செய்தனர். கோவையில் நடந்த காதல் தகராறுகளில், ஏற் கனவே இருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நடந்த கொலை முயற்சி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நிருபர் குழு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 5:02 pm

தினமலர் வாசகர் கருத்துகள் பின்னர் வரும்... காத்திருங்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 5:04 pm

venkat - singapore,சிங்கப்பூர்
09-அக்-201207:18:53 IST Report Abuse
உண்மையான காதல் என்பது பிரிந்தாலும் விட்டுக்கொடுத்து சந்தோசபடுவது, இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்வது இல்லை. இதற்கு பெயர் காதல் அல்ல காமம் .
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 5:04 pm


saravanan - chennai,இந்தியா
05-அக்-201209:27:32 IST Report Abuse
அழகை ரசிக்கலாம், ஆனால் அதை அடையனும்னு நினைக்கும்போது தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 5:05 pm


Karthik@sivakasi - sivakasi,இந்தியா
02-அக்-201200:31:24 IST Report Abuse
பொதுவா இந்த மாதிரி பிரச்சினைகளுக்கு காரணம் எல்லோரும் சொல்வது போல் சினிமா மட்டும் இல்லை, நம் சமுகம் மிக முக்கிய காரணம், முதல்ல நம்ம எஜுகேசன் சிஸ்டத்தை மாத்தனும், பசங்களுக்கு நல்ல விசயங்களா சொல்லி தரனும், குறிப்பிட்ட வயசு வரை கண்டிப்பு அவசியம். இதை பெற்றோரும் புரிஞ்சிக்கணும் ஸ்கூல்ல பசங்கள அடிக்கறத நல்லா விசாரிக்கணும், பசங்க மேல தப்பு இருந்தா தண்டனை ஏத்துக்கற பக்குவம் வேணும். படிக்கற வயசுல செல்போன் எதற்கு, டிவில நல்ல நல்ல ப்ரோக்ராம் நிறைய இருக்கு அத பார்க்க சொல்லுங்க ( HISTORY, DISCOVERY, புதிய தலைமுறை ) கத்துக்கற தன்மையும் அதிகரிக்கும் மனசும் நல்லதா யோசிக்கும், பெற்றோர்கள் தான் பள்ளிகள் மூலம் பிள்ளைகளை ஒழுக்கமா வளர்க்கணும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 5:06 pm

Sriram - edison,யூ.எஸ்.ஏ
29-செப்-201200:27:55 IST Report Abuse
நானும் காதலித்து திருமணம் செய்தவன்தான் ஏழு வருடங்கள் ஓடி விட்டது ... எனது வாழ்க்கையில் நடந்த காதல் போரட்டங்களையும் ,என் மனைவி மற்றும் என் மன உருதியையும் நினைத்து பார்க்கிறேன். எத்தனையோ எதிர்ப்புகளை மீறி பணம் படைத்த குடும்பத்தில் இருந்த என் மனைவி பரம ஏழையான என்னை கை பிடித்தால். என் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கை இன்று அவள் வீட்டாரும் நினைக்க முடியாத உயர்த்தில் அவளை கொண்டு வைத்திருக்கிறேன்.இ தை நான் என் சொல்கிறேன் என்றால் காதல் புனிதமானது ஒருவனை /ஒருவளை எப்படி வேண்டுமானாலும் மாற்றும்.ஆனால் இப்பொழுது காதல் செய்பவர்கள் மன உறுதி இல்லாமல் ,ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்.அவசறபடுகிரார்கள்,பொறுமை இழக்கிறார்கள்,எதிர்கால சிந்தனை இல்லாமல் இருக்கிறார்கள். காதலால் மட்டுமே ஒரு ஆணை எந்த நிலையில் இருந்து வாழ்க்கையின் உச்சிக்கு கொண்டு செல்ல முடியும். அதே காதலால் அவனை கொலைகாரணகவும் ஆக்க முடியும் .அதுதான் இங்கு நடந்திருகிறது . பெண்களே காதல் மிகவும் உண்மையான விஷயம் அதை ஆடை மாற்றுவது போல மாற்ற முடியாது .உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஆரம்ப நிலையிலேயே உங்கள் மன நிலையை அந்த ஆணிடம் விலகி கூறி விடுங்கள் .கண்டிப்பாக எந்த ஒருவராலும் பிடிக்காத பெண்ணை கொலை செய்யவோ அல்லது தன உயிரை மாய்துகொல்லவோ முடியாது . காதல் வாழ்க
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 5:59 pm


Balamurugesan Sivaperumal - london,யுனைடெட் கிங்டம்
28-செப்-201216:21:17 IST Report Abuse
காதலிக்கும் ஆரம்ப கட்டத்தில் பெரிதாக தெரியாத மத வேறுபாடு திருமண பேச்சு எடுத்தவுடன் தெரிய ஆரம்பிக்கும். அப்போது யாரும் மதம் மாறாமல் இருக்க ஒரே வழி பிரிந்து விடுவதே என்ற நிலைமை வரும். ஏனெனில் அதில் ஒருவர் மத வெறியராக இருப்பதுதான்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 6:00 pm


Prasanna Bala - chennai,இந்தியா
28-செப்-201213:15:25 IST Report Abuse
காதல் என்பது மட்டும் வாழ்கை அல்ல . வாழ்கையின் ஒரு பகுதி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 6:01 pm


Seetharaman - chennai,இந்தியா
27-செப்-201209:29:27 IST Report Abuse
யாருடைய உயிரையும் யாரும் எடுக்க உரிமை கிடையாது. எனக்கு தெரிந்து பெண்கள் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தவுடன் பாய்ஸ் அதை புர்ந்துகொண்டு விலக வேண்டும். என் நண்பனுக்கு நேர்ந்த ஒரு கொடுமை இது. இந்தப் பெண் ஒரு Lecturer ஆக ஒரு பல்கலைகழகம் மாலை நேர முதுநிலை பட்டப் படிப்பு computer மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து கொண்டிருந்தார். என் நண்பர் அவள் மேல் உயிரையே வைத்திருந்தார். இருவரும் எல்லாமுமாக இருந்தார்கள். ஓரிரு முறை இவர்களது நட்பு clinic வரை கூட சென்றது உண்டு. என் அப்பா அம்மா வெளியூர் சென்றிருந்த நாட்களில் எங்கள் வீட்டை அவர்களுக்காக கொடுத்து விட்டு நண்பர்கள் வீட்டுக்கு சென்ற மடையன் நான். தீடிரென்று ஒரு நாள் என் நண்பன் வெறி வந்தவன் போல கோபமாக போன் செய்தான், விஷயம் என்னெவெனில் அவள் தங்கியருந்த அவளுடைய அக்காள் வீட்டிற்கு போன நேரத்தில் வீடு உள் பக்கமாக பூட்டியிருக்க நண்பன் சைடு window வழியாக எட்டிப் பார்த்திருக்கிறான். இந்த lecturer பெண் வேறு ஒருவனுடன் படுக்கையில். நண்பனுக்கு வந்தது கோபம். ஒன்றும் சொல்லாமல் கிளம்பி வந்துவிட்டான். அடுத்தநாள் அவளே அவனை அழைக்க இவன் போயிருக்கிறான். அவளோ சிரித்த முகத்துடன் அவனை வரவேற்க இவனுக்கு நாம் தான் யாரையோ தவறாக பார்த்துவிட்டோம் என்று எண்ணிவிட்டான். அவளிடம் இவன் நேற்று எங்கு சென்றிருந்தாய் என்று கேட்க அவள் நேற்று என்னுடன் படித்த ஒருவன் வந்திருந்தான். அவனுடன் பேசிக் கொண்டிருந்தேன் என்று சொல்லி விட்டு கிளம்பி குளிக்க சென்றுவிட்டாள். அந்நேரம் ஒரு தொலை பேசி அழைப்பு வர இவன் சந்தேகத்துடன் தொலைபேசியை எடுக்க மறு முனையில் ஒரு ஆண் குரல் கிசுகிசுப்பாக "நேற்று வாங்கி வந்த உரையையே வாங்கி வந்துவிடவா" என்று கேட்க இவன் பத்தி சொல்லாமல் வைத்து விட்டன. அவள் வெளியில் வந்தவுடன் இவனை அனுப்புவதிலே மட்டுமே அவள் கவனமிருக்க இவனுக்கு எல்லாம் விளங்கிவிட்டது. சிறிது நேரம் கழித்து என் நண்பன் நேற்றைய காட்சியே பார்க்க நேர, மனம் நொந்து வீட்டிற்க்கு வந்தவன் என்னை தொலை பேசியில் அழைத்து எல்லாவற்றையும் என்னிடம் கொட்டிவிட்டான். நான் சமாதானம் சொல்லிவிட்டு வீட்டிற்க்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போகு முன்பாக அவன் தூக்கு மாட்டி கொண்டான். அவன் சடலைத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. நொந்தே போனேன். கடிதத்தில் என்னுடைய காதலை அவளிடம் சொல்லி விடு என்று ஒரு request வேறு. மிகவும் ஆத்திரமாக வந்தது. அவள் மீதல்ல... என் நண்பன் மீது. ஓரிரு மாதம் கழித்து என் மனசு கேட்காமல் அவளுடைய வீட்டில் அன்று அவளுக்கு அவர்கள் மதப்படி திருமண நிச்சயதார்த்தம். மணமகன் US மாப்பிள்ளையாம். வளந்த அரசர் போல மாப்பிள்ளை. ஒன்றுமே நடக்காதது போல என்னை எதிர்கொண்டாள். நொந்து போய் வெளியே வந்தேன். கடிதத்தை கிழித்து எரிந்து விட்டு வீட்டிற்க்கு சென்று விட்டேன். இன்று குழந்தை குட்டி என்று US ல் செட்டில் ஆகி விட்டாள். அவ்வபோது என் நண்பனின் அப்பா அம்மாவை பார்க்கும் போது எனக்கு என் நண்பனின் மேல் தன வெறுப்பை வரும். உங்களை பிடிக்கவில்லை என்று சொல்பவர் அவர் ஒருவர் தான். இந்த உலகமே உங்களை நேசிக்கிறது என்று என்ன வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 8:40 pm


Krishnan (Sarvam Krishnaarpanam....) - chennai,இந்தியா
26-செப்-201222:24:30 IST Report Abuse
இஸ்லாத்தின் படி, பிற மத பெண்களை காதலிப்பது தவறு. இறைவன் இவனுக்கு கொடுத்த தண்டனை இது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 8:41 pm


Rajesh Ramu - chennai,இந்தியா
26-செப்-201217:17:23 IST Report Abuse
தொலைகாட்சி மெகா சீரியல்களில் காட்டும் வன்மம், திரைப்படங்களில் காட்டும் வன்முறை, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது அதிக பாசம் வைப்தாக நினைத்து கட்டுபாடின்றி வளர்ப்பது போன்றவை தான் இதற்க்கு காரணம். போற போக்கை பார்த்தால் பள்ளி மாணவர்களுக்கு கூட கவுன்சலிங் தேவை படும் போல இருக்கிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 8:41 pm


ratthakatteri_modi - மோடி இல்லா தேசம் ,இந்தியா
26-செப்-201216:48:03 IST Report Abuse
பெண்கள் காதலித்து பிரிந்தாலும் கொல்றிங்க, காதலிக்க மறுத்தாலும் கொல்றிங்க. என்னதான் செய்வது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 8:42 pm


pasupathi - muscat,ஓமன்
26-செப்-201215:00:13 IST Report Abuse
இதற்குதான் குஷ்பூ சொன்னதை பின்பற்றவேண்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 8:42 pm


Meignani Perumal - chennai,இந்தியா
26-செப்-201214:31:27 IST Report Abuse
மனிதனை மதம் பிடிகவைக்கும் சினிமா ஒழிய வேண்டும். இந்த சினிமா வரும்கால சந்ததிகளை சீரழிக்கும் வைரஸ்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 8:43 pm


Gnanasekar.V - chennai,இந்தியா
26-செப்-201210:26:49 IST Report Abuse
மொதல பசங்க பொண்ணுங்கள குறை சொல்றதும்,பொண்ணுங்க பசங்கள குறை சொல்றதும் நிறுத்துங்க.இந்த உலகத்துல யாருமே பெர்பெக்ட் கிடையாது.இந்த காலத்து யூத் சினிமாவ பாத்து ரொம்பவே கெட்டு போயிருகாங்க.படிக்கற வயசுல எதுக்கு பசங்களுக்கு லவ்.அதே போல வேளைக்கு போகாத ஒருத்தன லவ் பண்ற பொண்ணுக்கு அறிவு இல்ல.நான் பார்த்த வரைக்கும் என்னோட fris லவ் எதுவுமே ஒழுங்கா செட் ஆனது இல்ல.இப்போ எல்லாம் லவ் பண்றது ஒரு பேஷன் ஆகிடு போகுது.படிக்கற வயசுல படிக்காம சும்மா லவ் னு சொல்லிக்கிட்டு டைம் வேஸ்ட் பண்றாங்க.ஒரு வேளைக்கு பொய் செட்டில் ஆனா பிறகு ஒரு பொண்ண பாத்து பிடிச்சிருந்த அந்த பொண்ணுகிட பொய் சொல்லு.அவ புடிச்சிருந்த ஓகே சொல்லுவா.அப்புறம் வீட்ல பேசி ஓகே சொல்ல வை.அத விட்டுட்டு ஒருத்தங்க privacy ல தலையிட்டு அவங்கள கொல்லர வரைக்கும் போறது முட்டாள்தனம்.அந்த பொண்ணு லவ் பண்ணினா.அது தப்பு இல்ல.ஆனா அவங்க வீட்ல accept பண்ணாததால அவ வேண்டாம்னு சொல்லிருப்பா.அதுல ஒன்னும் தப்பு கிடையாது.நமக்கு வேனும்ன வீட்ல சொல்லி accept பண்ண வெக்கலாம்.பட் முடியலனா விட்டுட்டு போக வேண்டியதுதான்.22 years பாத்துகிட்ட parents a விட 3 years பண்ணுன லவ் ஒன்னும் விடறது பெரிய விஷயம் கிடையாது.சும்மா சினிமா பாத்து கெட்டு போகாதீங்க.மொதல்ல இந்த மியூசிக் சேனல்ஸ் ல வர லவ் சம்பந்தப்பட்ட programs கு தடை போடணும்.சும்மா கால் பண்ணி நீங்க இந்த songa யாருக்கு dedicate பண்றீங்கன்னு பள்ள இழிகரத நிறுத்தனும்.அப்போதான் இந்த மாதிரி லவ் பண்றவங்க கொஞ்சமாவது future பத்தி think பண்ணுவாங்க.நான் என்னோட ரெண்டு fris லவ் பாத்திருக்கேன்.ரெண்டுமே புட்டுகிச்சி.ஒருத்தன் வீட்ல சொன்னான் நான் அந்த பொன்னதன் marriage பண்ணிகுவேணு.அவனோட அப்பா அத think பண்ணியே ஹார்ட் அட்டாக் ல இறந்துட்டாரு.இன்னொருத்தன் லவ் பண்ணினா பொண்ணு நடுவுல வேற ஒருத்தன் suicide பண்ண ட்ரை பண்ணினான்னு பொய் சொல்லி இவன விட்டுட்டு அவன லவ் பண்ண ஆரம்பிச்சிட்ட.இப்படி parents எ கஷ்டபடுத்தி பண்ற லவ் தேவைதானா.முடிஞ்ச புரிய வைங்க.இல்லன மூடிகிட்டு உங்க வேலைய பாருங்க.தேவையல்லாத ஹீரோயசம் எதுவும் பண்ணாதீங்க.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 8:43 pm


noor - dammam,சவுதி அரேபியா
26-செப்-201201:26:32 IST Report Abuse
இதில் வருத்தப்படுபவர்கள் பெண் வீட்டாரை பற்றியே யோசிக்கிறார்கள் அந்த ஆணை இழந்த பெற்றோர் என்ன பாடுபடுவார்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 8:44 pm


Samuel Christopher - sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
25-செப்-201218:30:37 IST Report Abuse
பெண் பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்படிந்து, தேவை இல்லாதா(காதல்) காரியங்களில் தலையிடாதீர்கள்,பின் நாட்களில் பாதிக்க படுவிர்கள்,பெற்றோர்களுக்கும் கஷ்டம். எனவே வாலிப நாட்களில் கவனமாக இருங்கள் இந்த மாதிரியான நிகழ்வுகள் ஒரு பாடமாக எடுத்து கொண்டு பிரச்சனை,வருத்தம் ஏற்படாத வகையில் நடந்து கொள்ளுங்கள்,பெண்கள் சம்மதம் இல்லாமல் காதல் எல்லாம் நடக்காது அதனால் தான் பெண் பிள்ளைகளுக்கு சொல்கிறேன் ,ஊரில் ஆயிரம் காகம் அலையத்தான் செய்யும் அது வந்து ஒன்னோட தலையில வந்து கூடு வைக்காம பார்த்து கொள்ளுவது உன்னோட கடமை இல்லையா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 8:45 pm


Arulanthu Swakkinraj - ang mo kio,சிங்கப்பூர்
25-செப்-201209:58:42 IST Report Abuse
இதில் பெற்றோர் பங்கு அதிகம் இருக்கிறது .....பிள்ளைகளை மிகவும் கவனத்துடன் பார்க்கவேண்டும் .......அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்புகொடுக்க வேணும் ..... பணம் சேர்ப்பதே குறிக்கோளாக இருந்து யாருக்காக சேர்தொமோ அவர்களை இழந்து நிற்பதில் என்ன இருக்கிறது ........பெற்றோர் இருவரும் அருகிலேயே இருந்து ஆண் பிள்ளைகள் நடவடிக்கையும் .... பெண் பிள்ளைகள் பாதுகாப்பையும் உறுதிசெய்யவேண்டும் ......மாதம் ஒரு நாள் வரும் தந்தையால் பணம் மட்டுமே தரமுடியும் ......
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 8:45 pm


a.mohamed - bangalore,இந்தியா
25-செப்-201209:47:04 IST Report Abuse
தனிமனித சீர்திருத்தம் நடந்தால்தான் இதுபோன்ற பிரச்சினைகள் தீர்க்கப் பட முடியும். மனிதன் பண்புள்ளவனாக வளர்வதற்கு தன்னைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வும் அவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன் என்ற உணர்வும் மிகமிக அவசியம். இப்படிப்பட்ட இறையச்சத்தை மாணவ இதயங்களில் கட்டாயமாக விதைக்க வேண்டும். அதற்கு முக்கியமாக முன்னோர்களின் வழக்கம் அல்லது நாட்டுநடப்பு என்றெல்லாம் சொல்லி உயிரற்ற உணர்வற்ற பொருட்களைக் காட்டி அவற்றைக் கடவுள் என்று கற்பிப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும். கடவுளைப் பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் முரண்பாடுகள் இல்லாத மூடநம்பிக்கைகள் இல்லாத தெளிவான கொள்கை போதிக்கப்பட்டால் மட்டுமே மனிதன் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருப்பான். பாவங்களில் இருந்து விலகியும் இருப்பான். இந்த அடிப்படைக் கல்வியை மக்களிடையே , குறிப்பாக இளைஞர்களிடையே போதிப்பதற்கு ஊடகங்களும் கல்வி நிறுவனங்களும் முன்வரவேண்டும். இல்லையேல் இது தொடரவே செய்யும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 8:46 pm


மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
25-செப்-201202:57:04 IST Report Abuse
ச்சே... நல்ல முகப் பொருத்தம்... ப்ச் ..மனம் என்பது ஒரு மர்மமான விஷயம்... இந்த கொடிய முடிவில் இவர்களுடன், இவர்களின் பெற்றோரின் பங்கு நிறையவே இருக்கும்... கண்ணுக்கு தெரிவது கால் பங்கு, மூடி மறைச்சது முக்கால் பங்கு... கால் பங்கு காலாவதி ஆகிப் போச்சி... இப்போ மீதமுள்ள முக்காப் பங்கு அதுகள் கண் மூடும் காலம் முச்சூடும் வெந்து கொண்டே இருக்கோணும்.. யோசிங்க பெற்றோரே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 8:46 pm


மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
25-செப்-201202:47:58 IST Report Abuse
பருவக் கோளாறை காதல் என்று மாணவ மாணவியர் தவறாக புரிந்து கொண்டு கண்மூடித் தனமாக பொழுதைக் கழிக்கிறார்கள்.... இது ஒரு பக்கம் இருக்க, காதலை வெறும் வயசுக் கோளாறு மட்டும் தான் என்று பெற்றோர் கண்மூடித் தனமாக வெறுக்கிறார்கள்.. அந்த வயசில், வயசுக் கோளாறு, படிப்பு, பெற்றோர், காதல், கோபம் என்று ஏகப்பட்ட குழப்பம்.. படிக்கும் காலத்தில் இப்படி தேவை இல்லாமல் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைத்துக் கொண்டு பாவம்..., சேற்றில் வழுக்கி விழுந்தவர்கள் லட்சம் பேர், ஆத்திலே அடிச்சிக் கிட்டு போனவங்க பல்லாயிரம் பேர்.... சேற்றில் சிக்கி புரண்டு, அப்புறம் ஆத்து நீரில் கால் கழுவி விட்டு கமுக்கமாக போனவர்கள் மீதி பேர்.. "கடவுள், அப்பன் ஆத்தா பண்ண புண்ணியத்திலே", இதிலே சிக்காம ஒழுக்கமா நின்னு படிச்சு கரையேறினவங்க மிகச் சில பேர்... இதெல்லாம் இல்லாம இப்படி சிக்கி சின்னா பின்னமானவர்களும் இருக்கிறார்கள்... வாங்க, பிள்ளைகளே, கரையேறுங்க.. மருத்துவம் முன்னேறி விட்டது.. தொண்ணூறு வயசு வரைக்கும் ரெண்டு மூணு கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக்கலாமாம்... அப்புறம் எதுக்கு படிக்கும் போதே இந்த அவசரம் ? அது என்ன ஓடி விடவா போகுது ?? நான் சொல்ல வந்தது சந்தோஷமும், வயசும், காதலும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது! Empty Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum