தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கண்ணன் மனம் என்னவோ...
2 posters
Page 1 of 1
கண்ணன் மனம் என்னவோ...
கண்ணன் மனம் என்னவோ....
தனியார் வங்கி ஒன்றிலிருந்து பணி நேரம் முடிந்து வெளியேறிய ரதியைக் காணும் போது மலரொன்று தான் பெண்ணாக உருமாறி வந்து விட்டதோ என எண்ணத் தோன்றும். மலரவள் முகம் ஏனோ வாடித் தெரிந்தது. பத்து நிமிட நடையில் சாலை வந்திருக்க, அவளுடன் கொட்டும் அருவியாய் சலசலத்துக் கொண்டிருந்த ப்ரீத்தி, தன் தோழியின் கவனம் தனது பேச்சினில் இல்லாமல் சாலையில் பதிந்து நாற்புறங்களையும் அலசி ஏமாற்றத்துடன் சோர்வுறுவதைக் கண்டு தானும் வருந்தினாள்.
விதி தனது தோழியின் வாழ்க்கையில் அவளுடைய அண்ணியின் ரூபத்தில் விளையாடுகிறதோ? மனிதர்களின் துர்குணங்களுக்கு விதி மீது பழி போடுவதா? தன் வீட்டு பெண் நன்றாக வாழ்வதைப் பார்த்து மகிழ்ச்சி அடையாமல் பொறாமை கொள்பவர்களை என்னவென்று சொல்வது? தன் மீது அளவு கடந்த பிரியமும், மரியாதையும் வைத்திருக்கும் சிறு பெண்ணை ஏமாற்ற எவ்வாறு மனம் வருகிறது? இளம் உள்ளத்தை சஞ்சலப்படுத்தி அதில் குளிர்காயும் இவர்களுக்கு குற்றவுணர்வு என்பது சிறிதும் இருக்காதோ? பொறாமையும், சுயநலமும் மனசாட்சியின் கண்களை மூடிவிட்டது போலும்!! பலவாறாய் எண்ணி உள்ளுக்குள் பொருமியபடி நடந்தாள் ப்ரீத்தி.
தனிமையில் உழல்பவளைக் கண்டு ஏற்படும் குரூர திருப்தியோடு, சம்பாத்தியமும் கிடைக்கும் என திட்டமிட்டு காய் நகர்த்திய ரதியுடைய அண்ணியின் சதி வெல்லுமா? மெய்யான அன்பில் வீழுமோ? உண்மையான அன்பிற்கும், போலியான அக்கறைக்கும் உள்ள வேறுபாடு புரியாமல் வாழ்வின் இனிமையை இழந்து வெறுமையில் வாடுபவர்கள் கதை எத்தனை எத்தனை? சுற்றங்கள் ஏற்படுத்தும் மாய வலையில் சிறைபட்டு, மூச்சுக் காற்றுக்காக திணறும் போது வசந்தம் விலகி பாலை பாதை வகுத்திருக்கும். காலம் கடந்த பின் வருந்துவதில் பயனேது, கொடுமையான தனிமைதானே துணையாயிருக்கும்? ப்ரீத்தியின் சிந்தனையை தடை செய்வது போல் அவர்களை ஒட்டி நின்றது சாம்பல் வண்ண சான்ட்ரோ.
கார் கதவினைத் திறந்து இறங்கிய சியாமைக் கண்டு ரதியின் உலகம் ஸ்தம்பித்து நின்றது. மை விழிகளில் திரண்டிருந்த முத்துக்கள் கன்னம் தொட்டுச் சிதற, கற்றறிந்த மொழிகள் எல்லாம் கண்ணாமூச்சி ஆட, மனதின் வார்த்தைகள் புரியாதோ என தன் கணவன் முகம் பார்த்து நின்றிருந்தாள் பேதைப் பெண் ரதி. தனது ரதியின் உள்ளப் போராட்டம் கண்டு சியாமின் உள்ளமெங்கும் ஓர் வலி ஊடுருவிச் செல்ல, மெதுவே தன் கரத்தினை அவள் புறம் நீட்டினான் சியாம். நீண்ட கரத்தினை இறுகப் பற்றிய ரதியின் முகம் தாமரையாய் மலர, ப்ரீத்தியிடம் சியாம் ஒரு தலை அசைப்புடன் விடை பெற, தன்னை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சென்ற ரதியினைக் கண்டு ப்ரீத்தியின் முகத்தில் புன்முறுவல் படர்ந்தது.
தாய்மடி சேர்ந்த கன்றைப் போல் தன் மடி சாய்ந்து அழுபவளைக் கண்டு சியாமின் விழிகளிலும் கண்ணீர் திரையிட்டது. பொங்கி வழியும் கண்ணீரோடு, "சி...யாம்!! சாரி சியாம்!! நான் உங்களை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். யாரோ பேச்சைக் கேட்டு காரணமே இல்லாம உங்க கூட சண்டை போட்டிருக்கேன். நீங்க எனக்காக எவ்வளவு விட்டுக் கொடுத்து போயிருக்கீங்க. அதை எல்லாம் மறந்துட்டு, ஐயம் சாரி சியாம்!! உங்களுக்கு கோபம் வரலையா சியாம், சின்ன விஷயங்களுக்கு கூட மனைவியை அடிக்கற மடையர்கள் இருக்கும் போது, நான் முட்டாள்தனமாக நடந்துட்டதை எப்படி பொறுத்துட்டீங்க சியாம்" எனக் கேவியவளின் பேச்சில் இடையிட்டு "உளறக் கூடாது ரதி" என அவள் பேச்சிற்கு அணையிட்டான் சியாம்.
"உண்மைக்கும், பொய்மைக்கும் வேறுபாடு புரியாம, யார் எடுத்து சொன்னாலும் கேட்காம கோபப்படறதை பார்க்கறப்ப எனக்கும் கோபம் வரும் ரதி. நானும் கோபப்பட்டு பதில் பேசியிருந்தால் நம்மோட இந்த ஆறு மாத மணவாழ்க்கையில் கசப்பு மட்டுமே எஞ்சியிருக்கும். அடிக்கிறது!! தன்னில் பாதியை அடிப்பவன் கணவனாக மட்டுமில்ல, மனுஷனாக இருக்கவும் தகுதி இல்லாதவன் ரதி. நீ ஏமாறுவது பிடிக்காம, நீ மனிதர்களோட உண்மையான முகத்தை உணரத்தான் நான் ஹைத்ராபாத் போனப்ப உன்னை அம்மா வீட்டில் விட்டுட்டுப் போனேன் ரதி, வந்தவுடனே உன்னைத் தேடி ஓடி வந்துட்டேன்டா" என தன் ஒரு மாத மௌன நாடகத்திற்கான காரணத்தை பகிர்ந்தான் ரதியின் உள்ளம் கொண்டவன்.
"நான் உண்மையை உணர்ந்துட்டேன் சியாம். ஒருவர் காட்டும் அன்பையும், அக்கறையையும் கண்மூடித்தனமா நம்பாம அதுக்கு பின்னாடி இருக்கிற உண்மையான நோக்கத்தை புரிஞ்சுக்க கத்துக்கிட்டேன் சியாம். அன்பான கணவனை விட ஒரு பெண்ணிற்கு வேற எந்த உறவும் பெரிசு கிடையாதுங்கிறதை அம்மா அடிக்கடி சொல்லுவாங்க சியாம். எனக்கு இப்பதான் அதோட அர்த்தம் புரியுது சியாம். என்னுடைய முட்டாள்தனத்தால் உங்க அன்பை இழந்துட்டதா நினைச்சேன். உங்க மனசில் என் நினைவு இருக்குமா இல்லை என்னோட குணத்தால என் பிம்பம் அழிஞ்சிருக்குமோ" என்றவளின் பேச்சை இடைவெட்டிய சியாம்,
"உன் அன்பு அந்த வானம் மாதிரி ரதி, அந்த வானத்தில் சில நேரம் தோன்ற வானவில் மாதிரிதான் உன்னோட கோபம், பிடிவாதமெல்லாம். வானவில் நான் ரசிக்கிறது, வானம் நான் சுவாசிக்கறது ரதி!!" சியாமின் உள்ளத்தை உணர்ந்த நொடியே பாய்ந்து வந்தன ரதியின் "சி...யாம்!!!சாரி,சாரி....."
"அச்சச்சோ!!" என்ற சியாமின் அலறலில் அவனது மடியிலிருந்து துள்ளி எழுந்த ரதி, "என்னாச்சு சியாம்"எனப் பதறவும்
"நீ இதுவரைக்கும் கேட்ட சாரி வாங்கவே, என் பேங்க் பேலன்ஸ் பத்தாதுடா! போதும் ரதி, உன் சியாம் பாவமில்ல"
"என்ன சியாம்!! நான் எவ்வளவு பீல் பண்ணி சொல்லிட்டிருக்கேன்"
"ம்ம், பீலிங்ஸோட வேற எதாவது ஸ்வீட்டா சொல்லு கேட்கறேன்!!
"நான் உங்களை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா சியாம்"
"இது அழகு!! நானும் தான் கண்ணம்மா" எனக் கூறிய சியாமின் கரங்கள் ரதியின் கரத்தோடு இணைய, இனி என்றும் பிரிவில்லை என்று இருவர் உள்ளமும் நிறைந்தது. வேர்கள் ஆழமாய் இருக்கும் போது எத்தனை புயல்கள் வந்தாலும் காதல் விருட்சம் தழைத்தோங்கும்.
உறவு தொடர்ந்தது.
[img][url="http://pzy.be/v/144/114.jpg"][You must be registered and logged in to see this image.][/url][/img]

udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay
Re: கண்ணன் மனம் என்னவோ...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» காரணம் என்னவோ............
» என்னவோ மாயம் செய்து விட்டாய்
» பிரிக்க முடியாதது என்னவோ? ஊழலும் லஞ்சமும்!
» கண்ணன் - என் காதலன்
» கண்ணன் செய்த நகை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum