தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சின்ன கடி சிரிப்புகள் ...

+6
Muthumohamed
அச்சலா
muthupandian87
பட்டாம்பூச்சி
vinitha
கவிப்புயல் இனியவன்
10 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 23, 2013 6:41 pm

First topic message reminder :

நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.

வேலு : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.


நன்றி ;தமிழ் களஞ்சியம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 8:53 pm

ஓலை கொண்டுவரும்போதே புறாக்களின் மொத்த எடையையும் நிகர எடையையும் கணினி மூலமாகக் கணித்துச் சொல்கிறாரே . யாரவர் ?

அவர்தான் அரசவை புறாகிராம் மேனேஜராம் !

நன்றி ;பனித்துளி சங்கர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 6:12 pm

டி.டி.ஆர்: ஏன்யா, வித்தவுட்லே போறே... இதிலே ஏ.சி கேக்குதா?

பயணி: எதிலேயும் நான் கொஞ்சம் கௌரவமா நடந்துக்குவேன் சார்!

************

நண்பர் - 1: பொண்ணுக்கு 30 லட்ச ரூபாய் செலவு பண்ணிக் 
கல்யாணம் பண்ணீங்களே… பொண்ணு எப்படி இருக்கா?

நண்பர் - 2: அவ நல்லாத்தான் இருக்கா. மாப்பிள்ளைதான், “50 
லட்ச ரூபாய் தர்றேன். எப்பிடியாவது என்னைக் காப்பாத்துங்க 
மாமா!”ன்னு கெஞ்சறார்.

*************

பயணி - 1: ஏன் சார், பிளேன்ல முதல் முதலா நாடகம் நடக்குது. எல்லோரும் சிரிச்சிக்கிட்டு இருக்காங்க. நீங்க மட்டும் சீரியஸா இருக்கீங்களே!

பயணி - 2: விஷயம் தெரிஞ்சா நீங்களும் சிரிப்பை நிறுத்திடுவீங்க!

பயணி - 1: ஏன், என்ன?

பயணி - 2: ஹீரோ வேஷத்துல நடிச்சிக்கிட்டு இருக்கறது நம்ம பைலட்!

************

திருடன்: அம்மா! இந்தப் பக்கம் போலீஸ்காரர் யாரையாவது பார்த்தீங்களா?

பெண்: இல்லையே!

திருடன்: அப்பிடீன்னா, மரியாதையா நகையெல்லாம் கழட்டிக் குடுங்க!

************

நண்பன் - 1: டெய்லி இந்த ஓட்டலுக்கு வந்து, கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு, எதுவுமே சாப்பிடாம போயிடுறியாமே ஏன்?

நண்பன் - 2: ஒரு மாசத்துக்கு, ஓட்டலுக்குப் போய் எதுவுமே சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரே!


நன்றி நிலாசாரல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 6:13 pm

ஒருவர்: காய்ச்சல்னுதானே ஆஸ்பத்திரிக்குப் போனே? அதுக்கா ஆபரேஷன் செய்தாங்க?

மற்றவர்: இல்ல. ஆஸ்பத்திரியில வாயிலே வெச்ச தர்மா மீட்டரை முழுங்கிட்டேன். அப்புறம் ஆபரேஷன் பண்ணிதான் வெளிய எடுத்தாங்க.

************

நண்பர் - 1: நல்லா கலகலப்பா இருந்த உங்க பையன் திடீர்னு இப்படி ஊமை மாதிரி ஆயிட்டானே ஏன்?

நண்பர் - 2: ஒண்ணுமில்லை. போன மாசம்தான் அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சேன்.

************

நோயாளி: எனக்கு வயிற்றெரிச்சல் அதிகமாயிருச்சு டாக்டர்!

டாக்டர்: எப்ப இருந்து…?

நோயாளி: உங்க நர்ஸ் பக்கத்து பெட்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேச ஆரம்பிச்சதிலிருந்து.

************

இரண்டு பேர் காரில் வெடிகுண்டை வைத்துக்கொண்டிருந்தார்கள்.

முதலாமவன்: நாம வைக்கும்போதே இந்த பாம் வெடிச்சுட்டா என்னடா செய்யறது?

அடுத்தவன்: கவலைப்படாதே! என்கிட்டே இன்னொண்ணு இருக்கு.

************

கணவன்: என்ன, இவ்ளோ வெய்ட்டான புடவையை வாங்கிட்டு வந்துருக்க?

மனைவி: உங்களுக்கென்ன? கட்டிக்கப் போறது நான்தானே!

கணவன்: ஆனா துவைக்கப் போறது நானாச்சே!

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 6:13 pm

ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்.

மாணவர்கள்: நீங்க சொன்னது எங்களுக்குப் புரியலை சார்!

************

நீதிபதி: நீ செய்த தப்புக்கு, பத்தாயிரம் அல்லது ஒரு மாத ஜெயில் தண்டனை. இதுல எது வேணும் உனக்கு?

குற்றவாளி: ஹி... ஹி... பத்தாயிரமே போதும் சாமி! பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.

************

தொண்டன் - 1: ஆஸ்பத்திரி திறப்பு விழாவுக்குப் போன நம்ம தலைவர் ஏன் டென்ஷனாயிட்டாரு?

தொண்டன் - 2: பன்றிக்காய்ச்சல் வார்டுக்கு அவர் பேரை வச்சிருக்காங்களாம்!

***********

மனைவி: ஏங்க நீங்க இப்பெல்லாம் என்னைய தூக்குறதே இல்லை?

கணவன்: நான் உன்னைய தூக்குனா, என்னைய தூக்கிட்டு போக நாலு பேரு வந்துருவாங்களே!

************

கடத்தல்காரன்: ஹலோ! உன் பொண்டாட்டியை நாங்கதான் கடத்தி வெச்சிருக்கோம். பத்து லட்ச ரூபாய் கொடுத்தாதான் விடுவோம்!

கணவன்: என்னது பத்து லட்சமா? அவ இம்சை தாங்க முடியாம 'சனியன் தொலையட்டும்'னு கொஞ்ச நேரத்துல நீங்களே விடப் போறீங்க பாருங்க! 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 6:14 pm

ஒரு துணிக்கடையில் மனைவியரைத் தொலைத்துவிட்ட இரு கணவன்மார்…

கணவன் – 1: உங்க பொண்டாட்டி எப்படி இருப்பாங்க?

கணவன் - 2: சிவப்பா, உயரமா, திரிஷா மாதிரி இருப்பாங்க. ஆமா, உங்க வீட்டம்மா எப்படி இருப்பாங்க?

கணவன் – 1: அந்தக் கழுதை எப்படி இருந்தா என்ன? வாங்க… உங்க பொண்டாட்டியைத் தேடுவோம்!

************

கணவன்: என்னைப் பார்த்த உடனே கண்ணாடிய எடுத்துப் போட்டுக்கிறியே, ஏன்?

மனைவி: டாக்டர்தான் தலைவலி வர்றப்பல்லாம் கண்ணாடி போடச் சொன்னார்.

************

மனைவி: நம்ம பையன்கிட்ட என்ன சொன்னீங்க? திடீர்னு இப்படி மிரண்டு அழறானே!

கணவன்: பேய்க் கதை சொல்ல சொன்னான். நான் உன்னைப் பத்திச் சொன்னேன். அதான் மிரண்டு போய்ட்டான்.

************

நண்பன் - 1: புருஷனுங்கல்லாம் ஸ்பிளிட் ஏசி மாதிரி மச்சான்!

நண்பன் - 2: ஏன்?

நண்பன் - 1: வெளியிலதான் சவுண்டு ஜாஸ்தியா இருக்கும். ஆனா வீட்டுக்குள்ள படு கூலா, அமைதியா, கன்ட்ரோலா இருப்பாங்க!

************

நண்பர் - 1: உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே?

நண்பர் - 2 : ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்! 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 6:15 pm

மனைவி: டாக்டர்! என் புருஷன் தலையிலிருந்து ரத்தமா வருது. கொஞ்சம் பாருங்களேன்!

டாக்டர்: என்னங்க இது, உங்க புருஷன் மண்டை ஒடஞ்சிருக்கு! இவ்வளவு ரத்தம் வர வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?

மனைவி: அடிச்சுகிட்டே இருந்தேன் டாக்டர்!

*********

நண்பர் - 1: நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா!

நண்பர் - 2: அப்படீன்னா கார் ஓட்டிப் பாரேன்!

************

நண்பன் - 1: ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும்தானா மச்சீ?

நண்பன் - 2: வேற என்ன வேணும்?

நண்பன் - 1: கடிக்க ஏதாவது…?

நண்பன் - 2: நாய் இருக்கு... அவுத்துவிடவா?

*********

நண்பன் - 1: என் ஒசத்தியான நாய் எங்கேயோ காணாமப் போயிருச்சு.

நண்பன் - 2: பேப்பர்ல விளம்பரம் கொடுத்துப் பார்க்கறதுதானே?

நண்பன் - 1: மடத்தனமா பேசாதே! அதுக்குப் படிக்கத் தெரியாது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 6:15 pm

நண்பன் - 1: டேய் மச்சான்! நேத்து உங்க வீட்டுக்குப் போய் உன்ன எங்கனு கேட்டேன். அதுக்கு உங்க அப்பா "அந்த மாடு எங்கயாச்சும் மேயப் போய் இருக்கும்னு சொன்னாரு". எனக்கு ரொம்பக் கஷ்டமாப் போச்சுடா!

நண்பன் - 2: அது கூடப் பரவாயில்லை மாப்பிள! நான் திரும்பிப் போனதும் "உன்னைத் தேடி ஒரு எருமை வந்துச்சு"ன்னு சொன்னாருடா!

************

நோயாளி: டாக்டர்! நீங்க எழுதிக் குடுத்த மருந்து எந்தக் கடையிலுமே கிடைக்கலை.

மருத்துவர்:
 பேனா ஒழுங்கா எழுதலைன்னு கிறுக்கிப் பார்த்த பேப்பரை எடுத்துட்டுப் போனவர் நீங்கதானா?

************

காதலி:
 நீங்க எனக்கு லவ் லெட்டர் கொடுத்த விஷயம் எங்க வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.

காதலன்: 
ஐயையோ! உன் தங்கச்சிக்குமா?!

************

மனைவி: ஏங்க, வண்டியைக் கொஞ்சம் மெதுவாதான் ஓட்டுங்களேன்! எனக்கு பயம்மா இருக்கு!

கணவன்:
 பயமா இருந்துச்சுன்னா என்னை மாதிரி கண்ண மூடிக்கோ!

************

நண்பன் - 1: நேத்து பொண்ணு பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா!

நண்பன் - 2: 
பொண்ணு அவ்ளோ அழகா?

நண்பன் - 1:
 இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் பொண்டாட்டியும் அங்கே வந்துட்டா! 


[You must be registered and logged in to see this link.]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 04, 2013 11:24 am

ரொம்பவே சிரித்தேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 4:22 pm

செந்தில்: அண்ணே...அண்ணே.... சாப்ட்வேர்னா என்ன...? ஹார்ட்வேர்னா என்னன்னே....?
கவுண்டமணி: அடே ப்ளூடூத் மண்டையா.......'செடி'ய புடுங்குனா வருமே அது சாப்ட்வேரு... 'மரத்த' புடுங்குனா வருமே அது ஹார்ட்வேரு.... இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு 'ஆல் இன் ஆல்' அழகு ராஜா தேவைங்குறது......


-------------------------------------------------------------------------------------------------------------------------------------


ராப்பிச்சை.., இது என்ன பத்திரிகை?"
"என் நகைக்கடை திறப்புவிழா பத்திரிகைம்மா அவசியம் வந்திருங்க".-------------------------------------------------------------------------------------------------------------------------------------


தந்தை : நான் உன்னை அடிச்சுட்டா உன் கோபத்தை நீ எப்படி கண்ட்ரோல் பண்ணுவே?
மகன் : டூத் ப்ரஷினால டாய்லெட் சுத்தம் செய்வேன்.
தந்தை : அதனால எப்படி கோபம் கட்டுப்படும்!!!
மகன் : அந்த ப்ரஷ் உங்க ப்ரஷ் ஆச்சே. ஹி..ஹி.-------------------------------------------------------------------------------------------------------------------------------------


காதலி: ஒரு அழகான கவிதை சொல்லுடா.
காதலன்: உன்னை கண்டதும் என்னை மறந்தேன்.
காதலி: அப்புறம்?
காதலன்: உன் தங்கையை கண்டதும் உன்னையே மறந்தேன்...


--------------------------------------------------------------------------------------------------------------------------------------


மாமனார்: மாப்பிள்ளைக்கு குழந்தை மனசுன்னு சொன்னீங்க.. அதுக்காக இப்படியா..?
தரகர்: ஏன் என்ன பண்ணினாரு?
மாமனார்: பொண்ணு பார்க்கும் போது 'மாமா பிஸ்கோத்து" வேணும் என்று தட்டுல வச்சிருந்த பிஸ்கட் பாக்கெட்ட கேட்குறாரு...


--------------------------------------------------------------------------------------------------------------------------------------


"ஆரம்பத்துலே படத்துக்கு பத்துக்கோடிதானே பட்ஜெட் சொன்னீங்க, இப்போ இருபதுன்னு சொன்னா எப்படி? எதற்கு?"
"ஒருவேளை படம் ஓடாட்டி படத்தை வாங்கினவங்களுக்கு திருப்பிக் கொடுக்கறதுக்காகதான் பட்ஜெட்டுல ரீஃபண்ட் திட்டம் வச்சிருக்கோம்!"--------------------------------------------------------------------------------------------------------------------------------------


"வேலை எல்லாம் முடிச்சிட்டுப் போன உங்க வீட்டு வேலைக்காரி, திடீர்னு திரும்பவும் வந்துட்டுப் போறாளே...  ஏன்?"
"பக்கத்து வீட்டைப் பத்தி ஏதாவது ஃபிளாஷ் நியூஸ் இருக்கும்...."--------------------------------------------------------------------------------------------------------------------------------------                                வக்கீல்: "உங்க கணவரை டைவர்ஸ் பண்ண என்ன காரணம் சொல்லப்போறீங்க மேடம்!"
கிளையண்ட்: "போலி கணவர்னு கேஸ் போட்டா கேட்சிங்கா இருக்குமே!"


--------------------------------------------------------------------------------------------------------------------------------------


"கபாலி திரும்பவும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறானாம் ஏட்டய்யா..."
"அவன்கிட்ட வாங்கற மாமூல் பணம், அவனுக்கு மொய் வைக்கவே சரியாப் போயிடும் போலிருக்கே...!"--------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
"என்னுடைய கல்யாண நாள் வரும் போதெல்லாம் உங்க ஞாபகம் தான் சார் வரும்.."
"எதனால?"
"நீங்க ரெண்டு பந்தியில் சாப்பிட்டும் மொய் எழுதாம போனீங்கல்ல.. அதனால!"----------------------------------------------------------------------------------------------------------------------------------------


பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------- "சே.. அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு.."
"பேசட்டுமே சார்... நம்ம கட்சி பிரமுகர்தானே.."
"நீங்க வேற... அந்த ஆள் மைக் டெஸ்ட் பண்றவன் சார்.."
----------------------------------------------------------------------------------------------------

[You must be registered and logged in to see this link.] .blogspot.in/


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 4:23 pm

நடுவர் சிட்டிபாபு அவர்களே, என்னதான் உங்கப் பேர் சிட்டி பாபுன்னு இருந்தாலும் அந்த சிட்டில ஒரு சின்ன பெட்டி கடைகூட வைக்க முடியாது.

மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் பிடிக்கரவனை மாணவன்னு சொல்ல முடியாது.

தங்கச்சியோட ஃப்ரெண்ட, ஆசையா தங்கச்சின்னு சொல்ல முடியும், ஆனா நம்ம பொண்டாட்டியோட ஃப்ரெண்ட ...?

என்னதான் பெரிய கராத்தே மாஸ்டரா இருந்தாலும், வெறிநாய் தொரத்தினா ஓடித்தான் ஆகனும்.

புள்ளிமானுக்கு உடம்பெல்லாம் புள்ளியிருக்கும், ஆனா கன்னுக்குட்டிக்கு உடம்பெல்லாம் கண்ணு இருக்காது.

என்னதான் பெரிய டான்ஸ் மாஸ்டரா இருந்தாலும், அவருடைய சாவுக்கு அவரால டான்ஸ் ஆட முடியாது.

நீங்க ஆம்பிளையா இருந்தாலும் உங்க செல் நம்பர் (இந்தியாவில) '9′ ல தான் ஆரம்பிக்கும்.

ஆயிரம் ரூபா கொடுத்து ஜீன்ஸ் வாங்கினாலும், அதுல இருக்கர 10 ரூபா ஜிப்புதான் உங்க மானத்தைக் காப்பாத்தும்.

அந்த மேஜை ரொம்ப வெட்க படுத்து?
ஏன்னா?
'அதுக்கு டிராயர் இல்லையே '.



ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

கரண் : கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?
கிரண் : தெரியலியே?
கரண் : சுவரொட்டி - தான்.
கிரண் : ??? 

பாமா : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
ராமு : சொத்தையோட போகணும்

உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!

விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?
அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 4:23 pm

[You must be registered and logged in to see this link.]
மொபைல்ல பண்ண முடியாதுங்க சிம் கார்டுல தான் பண்ண முடியும்...


கழுதைக்கும், மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்...
கழுதை பேப்பரை சாப்பிடுது...
மனுஷன் பேப்பர் ரோஸ்டை சாப்பிடுறான்.


அறிவாளிகள்  என்று யாரைச் சொல்லலாம்...
யாரெல்லாம் பொண்டாட்டி திட்டும் போது சிரிச்சுக்கிட்டே இருக்காங்களோ அவங்க எல்லோரும் தான்..


நான் இருமல் வந்தா உடனே டாக்டர்கிட்டே போய்டுவேன். நீங்க எப்படி?
நான் இருமல் வந்தால், முதல்ல இருமிட்டு அப்புறம் தான் போவேன்.


என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.
அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...


பிள்ளையாரும் முருகனும் கம்ப்யூட்டர் கிளாசுக்கு போனாங்க
பிள்ளையாருக்கும், முருகனுக்கும் மார்க்ஸ் குறைஞ்சு போச்சு
என்னாச்சு...
ஏனென்றால்,முருகனோட கம்ப்யூட்டர் மௌஸ் பிள்ளையாரோட மௌஸ் ரெண்டும் சேர்ந்து விளையாடப் போயிட்டுதுகள்...

அவன் எதுக்கு சுடுகாட்டுக்குப் போகும் போது சோப்பு எடுத்திட்டுப் போறான்..
ஹமாம் இருக்கப் பயமேன்..


நான் எப்போதுமே பணம் எதுவும் கையில் அதிகமாக வெச்சிருக்க மாட்டேன்...
அதெப்படி..வெச்சிருக்கணும் என்று ஆசைப்பட்டாலும் கூட வைஃப்கிட்டே கேட்டு வாங்கிக்கட்டிக்கிறதுக்கு உங்க உடம்புல தான் பலம் கிடையாதே...

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 4:23 pm

"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"
**************
"என்னங்க இது... கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க..."
"நான்தான் அப்பவே சொன்னேனே... பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!"
***************
நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்..."
"அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க..
****************
படிப்புக்கும் உனக்கும் ரொம்பதூரம்னு பையங்கிட்ட சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டான்.

ஏன் என்னாச்சு..?
அமெரிக்கா போய்தான் படிப்பேன்னு அடம் பிடிக்கிறான்.
*****************
"என்னது உங்க பேர் "நல்ல காலமா?"

"ஆமாம்.... எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு "நல்லகாலம் பொறக்குது"ன்னு சொன்னப்போ நான் பிறந்தேனாம். அதான் இப்படி வச்சுட்டாங்க!"
*****************
மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.
*****************
தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...?
ஆபீஸ்லியா வீட்டிலியா...?
*****************
ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சிட்டு தூங்கறான். ஏன்?
ஏன்னா... அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்.
*****************
தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாப் போச்சு...?
ஏன்?
டுட்டோரியல் காலேஜ் பீஸூக்கு பணத்தை ரெடி பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு பரீட்சைக்குப் போறான்.
**************
தலைவரே மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க... வாங்க ஓடிடலாம்...!
இருய்யா.. எனக்கு ஒரு செருப்புதான் கிடைச்சிருக்கு...!
**************
ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !
அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !
***************
இந்திய ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறதே, எதனால் தெரியுமா?
ஏனாம்?
தீப கர்ப்பமா இருக்கிறதுனால.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 4:23 pm

உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?
அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்.
*****************
தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.
******************
எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க?
என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.
இந்நேரம் விழுந்திருக்குமே சார்?
இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!
************
மானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்?
டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான்.
மானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக வந்திருக்க வேண்டியது தானே?
டைப்பிஸ்ட்: அவன் மெதுவாத்தானே வந்தான்!
**************
"ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப் பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க...?"
"இன்னைக்கு "ஷூட்டிங்" இருக்குன்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...!"
***************
நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.

டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.
***************
முன்னவர் : ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
பின்னவர் : எப்படி?
முன்னவர் : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
******************
வைத்தியர்: - நான் சீக்கிரம் கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்...!

ஜோதிடர்: - அது தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்...?
******************
நாளைக்கு வரும்போது வெறும் வயித்தோட வாங்க..."
"போகும் போது டாக்டர் ...?"
"வெறும் பாக்கெட்டோட போகலாம்!"
*****************
"என் மாமியாரு சரியான பச்சைக்கிளி மாதிரி..."
"அவ்வளவு அழகா?."
"இல்ல. அவங்க சொன்னதையே சொல்லிக்கிட்டு இருப்பாங்க."

[You must be registered and logged in to see this link.]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 4:32 pm

"டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?"

"ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்."
-----------------------------------------------------------------------------------------------------------
"அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..."
"ஏன்...?"
"அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!"
-----------------------------------------------------------------------------------------------------------
"மன்னர் புறமுதுகிட்டு ஓடிவரும்போது அவருக்குப் பின்னால் நிறைய பேர் ஓடி வருகிறார்களே... யார் அவர்கள்?" 
"அது மன்னரின் புறமுதுகுக்குப் பாதுகாப்பு தரும், பிறர் முதுகிட்ட படையாம்!"
-----------------------------------------------------------------------------------------------------------
"எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"
"அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!"
------------------------------------------------------------------------------------------------------------
"மாப்பிள்ளைப் பையனுக்கு மாத வருமானம் ஐயாயிரம். வீட்டை விட்டு எங்கேயும் போக வேண்டியதில்லை." 
"என்ன வேலை?" "ரிட்டயர்டு ஆகிப் பென்சன் வாங்குறார்!"
------------------------------------------------------------------------------------------------------------
"எதுக்குய்யா ஒவ்வொரு ரீல்லயும் படத்தோட டைரக்டர் நடுவுல வந்து ஏதாவது ஒரு கேரக்டரை தொட்டுட்டுப் போறாரு?"
"அவரோட போன படத்துல, டைரக்டறோட "டச்"சே இல்லைன்னு விமர்சனம் எழுதிட்டாங்களாம்.... அதான்....!"
------------------------------------------------------------------------------------------------------------


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 4:33 pm

"என்னய்யா இது... படத்தோட கதையை சிலேட்டுல எழுதிட்டு வந்திருக்கே..."
"அடுத்த படத்துக்காவது வித்தியாசமா கதை எழுதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க!"
-------------------------------------------------------------------------------------------------------------
"பாட வந்தவங்க, எதுக்கு கையில கிளவுஸ் எடுத்து மாட்டிக்கறாங்க...?"
"குத்துப்பாட்டு பாடப் போறாங்களாம்!"
-------------------------------------------------------------------------------------------------------------
"தினமும் கீரையே வாங்கிட்டுப் போறீங்களே... உங்க வீட்டுக்காரர் ஒண்ணும் சொல்ல மாட்டாரா?"
"அவர் ஒரு வாயில்லாப் "பூச்சி"ங்க... அதான்!"
--------------------------------------------------------------------------------------------------------------
"டாக்டருக்கும், ஆக்டருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.... எப்படின்னு சொல்லு?"
"ரெண்டுபேருமே தியேட்டருக்கு வரவச்சுதான் கொல்லுவாங்க!"
------------------------------------------------------------------------------------------------------------
"போலீஸா இருந்த நான் சாமியாரா ஆகியிருக்கக் கூடாது!"
"ஏன் சாமி?"
"எல்லாரும் போலீஸாமியார்"னு சொல்றாங்களே!"
------------------------------------------------------------------------------------------------------------
"கோடை விடுமுறையைக் கொண்டாட கபாலிக்கிட்ட ஐடியா கேட்டது தப்பாப் போச்சா... ஏன்?"
"ஜெயிலை சுத்திப் பார்க்கலாம்... வாங்கன்னு கூப்பிடறான்!"
------------------------------------------------------------------------------------------------------------
"இவர் மெகா சீரியல் தயாரிப்பாளரான்னு சந்தேகமா இருக்கு..."
"ஏன் சார்..?"
"கதையை ரெண்டு வரியில சொல்லச் சொல்றாரே!"
------------------------------------------------------------------------------------------------------------
"இளவரசர் தோற்றத்தில் மன்னர் போலவே உள்ளார்..."
"தோற்றத்திலா... அல்லது தோற்றதிலா"
-------------------------------------------------------------------------------------------------------------
"அவர் சீலிங் ஃபேன் ரிப்பேர் பண்றவர்னு எப்படிச் சொல்றே..?"
"எப்போ கேட்டாலும், "தலைக்கு மேல வேலை இருக்கு"ன்னு சொல்றாரே!"


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 05, 2013 11:08 am

நல்லா இருக்கு கடிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 5:44 pm

ஜோதிடர்: நீங்க இப்ப ரொம்பப் பெரிய கண்டத்துல இருக்கீங்க...
நபர்: ஆமா! நானும் படிச்சிருக்கேன், ஆசியாதான் உலகத்துலயே பெரிய கண்டம்னு!

**********

காவலர்: சார்! செத்தவன் பாடியையும் காணோம், கொலைகாரனும் தலைமறைவாகிட்டான். இப்ப என்ன சார் பண்றது?
ஆய்வாளர்: 'கொலையானவனும் கொலையாளியும் சமாதானமாகிவிட்டனர்'னு ஃபைலை க்ளோஸ் பண்ணிடு!

**********

டாக்டர்: எதுக்கு உங்க பையனோட பிராக்ரஸ் ரிப்போர்ட்டோட வந்திருக்கீங்க?
நபர்: நீங்கதானே டாக்டர் எல்லா ரிப்போர்ட்சும் எடுத்துக்கிட்டு ட்ரீட்மென்டுக்கு வரச் சொன்னீங்க!

**********

டாக்டர்: உங்க கிட்னி டோட்டலா டேமேஜ் ஆகிடுச்சு.
நபர்: சரி... சரி... ஆஃப் ரேட்டுக்காவது எடுத்துக்கங்க டாக்டர்!

**********

வங்கி அதிகாரி: ஒர்க் ஷாப் வைக்க பேங்க்ல லோன் கேக்கறீங்களே... முன் அனுபவம் இருக்கா?
நபர்: இருக்கு சார்... இதே மாதிரி பல பேங்க்ல லோன் கேட்டிருக்கேன்!


_________________________________________________
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 5:44 pm

கணவன்: மண்டபத்துக்குள்ளே போகாதே! உள்ளே போனா அவ்வளவுதான். உன் வாழ்க்கையே முடிஞ்சுது.

மனைவி: என்னங்க ஆச்சு? என்ன பார்த்துட்டு இருக்கீங்க?

கணவன்: நம்மோட கல்யாண சி.டி-யை பார்த்துட்டு இருக்கேன்.

***********

விமான நிலையத்துக்குத் தொலைபேசிய ஒருவர்,

நபர்: சென்னையில இருந்து பெங்களூரு போக எவ்வளவு நேரம் ஆகும்?

பணியாளர்: ஒரு மணி நேரம் ஆகும் சார்!

நபர்: அவ்வளவுதானா? அதுக்கு எதுக்கு நான் இவ்வளவு செலவு செய்யணும்? நான் நடந்தே பெங்களூரு போயிடறேன்.

***********

மகன்: அப்பா! இந்த வடையில இருக்குற ஓட்டை எனக்கு வேண்டாம்பா!

அப்பா: சரிடா! ஒண்ணும் பிரச்சினையில்ல. ஓட்டையைத் தூக்கிப் போட்டுட்டு மத்ததெல்லாம் சாப்பிடு!

***********

மேஜிக் செய்பவர்: இப்போ இந்தப் பொண்ண நான் ரெண்டா வெட்டப் போறேன்.

நபர்: ஒரு பிரச்சினைய ரெண்டு பிரச்சினையா மாத்தறதுக்குப் பேரு மாஜிக்கா?

***********

நண்பன் - 1: நான் என்னோட பி.ஏ-வைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது ரொம்பப் பெரிய தப்பு.

நண்பன் - 2: பின்ன ஏன் பண்ணிக்கிட்ட?

நண்பன் - 1: என்ன செய்யறது? கல்யாணத்துக்கு அப்புறமும் அவ என் பேச்சைக் கேப்பான்னு நெனைச்சேன். 

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 5:44 pm

நபர் - 1: என் பொண்டாட்டி என்கிட்டே 1 வருஷமா பேசறதேயில்லை.

நபர் - 2: சரி, நீயாவது அவங்ககிட்டே சமாதானம் செஞ்சிக்கிட்டு பேச வேண்டியதுதானே.

நபர் - 1 : ஏன் நான் சந்தோஷமா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா?

***********

நோயாளி: என்னோட கை ரொம்ப நடுங்குது டாக்டர்.

டாக்டர்: நீங்க நிறைய குடிப்பீங்களோ?

நபர்: எங்க டாக்டர், இந்த நடுக்கத்திலேயே பாதிக்கும் மேலே கொட்டிடுதே!

***********

நபர்: எனக்கு ஒரு ஆம்பளை ஃபேனும், ஒரு பொம்பளை ஃபேனும் குடுங்க!

கடைக்காரர்: அப்படீன்னா?

நபர்: அட, ஒரு பஜாஜ் ஃபேனும், ஒரு உஷா ஃபேனும் குடுங்க!

***********

ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்.

மாணவர்கள்: நீங்க சொன்னது புரியலை சார்!

************

நீதிபதி: நீ செஞ்ச தப்புக்கு பத்தாயிரம் அல்லது ஒரு மாத ஜெயில் தண்டனை. இதுல எது வேணும் உனக்கு?

குற்றவாளி: ஹி... ஹி... பத்தாயிரமே போதும் சாமி! பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 5:45 pm

நண்பன் - 1 : பயம்கிற வார்த்தையே என் அகராதியில கிடையாது.

நண்பன் - 2 : அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. நீ கடையில அகராதிய வாங்கும்போதே எல்லா வார்த்தையும் இருக்கான்னு சரியாப் பார்த்திருக்கணும்.

**********

நண்பன் - 1 : கண் டெஸ்ட் பண்ண டாக்டர்கிட்ட போயிருந்தியே, என்னாச்சு?

நண்பன் - 2 : போடா! எனக்காவது கண்ல பிரச்சனைதான். ஆனா அந்த டாக்டருக்கு கண்ணே தெரியாது போலிருக்கு.

நண்பன் - 1 : எப்படி சொல்றே?

நண்பன் - 2 : பின்ன, கண்ணையே டார்ச் அடிச்சு பார்க்கறாரே!

**********

வாடிக்கையாளர் : இந்தக் கண்ணாடிக்கு கியாரண்டி உண்டா?

கடைக்காரன் : ஓ! இந்தக் கண்ணாடிய 100 அடி உயரத்தில இருந்து போட்டாக்கூட 99 அடி வரைக்கும் உடையாது. அதுக்கு நான் கியாரண்டி!

நபர் : சூப்பர்! நான் வாங்கிக்கிறேன்.

*********

நபர் - 1 : அறிவிச்சதைக் கேட்டீங்களா? இன்னும் ரெண்டு நிமிஷத்துல ரயில் வந்திடுமாம். தண்டவாளத்துல நிக்காதீங்க, மேலே ஏறி வாங்க!

நபர் -2 : நீங்கதான் அதை சரியா கேக்கல. இன்னும் ரெண்டு நிமிஷத்துல இந்த ப்ளாட்ஃபார்முக்கு ரயில் வந்திடும்னுதான் சொன்னாங்க. அதனால நீங்க வந்திடுங்க கீழ!

***********

ஆசிரியர் : கிருஷ்ணர், ஜீஸஸ், காந்தி இவங்க மூணு பேருக்கும் இருக்குற ஒத்துமை என்ன தெரியுமா?

பப்பு : இவங்க எல்லோருமே லீவு நாள்லே பிறந்தவங்க டீச்சர்!


[You must be registered and logged in to see this link.] .com

நன்றி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by muthupandian87 Thu Sep 05, 2013 8:36 pm

அருமை
muthupandian87
muthupandian87
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 10
Join date : 08/03/2013
Age : 36
Location : chennai

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 9:29 pm

நன்றி நன்றி முத்துபாண்டியன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 8:35 pm

மனைவி: (கணவனிடம்) ஏங்க, ரொம்பவும் சோகமா இருக்கீங்க?

கணவன்: என் மேனேஜர் என்னை அரை லூஸ் என்று திட்டிவிட்டார்.

மனைவி: இதுக்குப் போய் ஏன் கவலைப்படறீங்க? எனக்குத்தான் உங்களைப் பற்றி முழுசாக தெரியுமே?

***
[color][font]


டிக்கெட் பரிசோதகர் : (திருச்சி செல்லும் ரயிலில்) என்ன இது ஃப்ளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிக் கொண்டு ட்ரைன்லே ஏறிட்டீங்க? இறங்குங்க!

பயணி: என்னை திருச்சி ஃப்ளாட்ஃபாரத்திலே இறக்கி விட்டுடுங்க.

[/font][/color]
***
[color][font]


ஒரு தந்தை (நண்பரிடம்) : என் பையன் செய்த காரியத்தால் வெளியில் தலை காட்ட முடியவில்லை.

நண்பர் : அப்படி என்ன செய்தான்?

தந்தை: என் 'விக்' (wig) கை எங்கேயோ தொலைத்து விட்டான்.

[/font][/color]
***
[color][font]


ஆசிரியர்: "ஹோம் வொர்க்கை செய்து விட்டேன் என்கிறாய். எங்கே காணவே காணோம்?"

மாணவன்: [You must be registered and logged in to see this link.] என்ற சைட்டில் பாருங்க சார்

[/font][/color]
***
[color][font]


ஒரு மன நல மருத்துவ மனையில்:

"ஏன், ஐம்பது பைத்தியங்களுக்கே உள்ள இடத்தில் நூறு பேரை அட்மிட் செய்திருக்கீங்க?"

எல்லோருமே அரைப் பைத்தியங்க தானே!!


நன்றி ;நிலாசாரல் [/font][/color]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 8:36 pm

பத்திரிகை அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார்.

"இறந்து போனவர் ஒருவரைப் பற்றி விளம்பரம் தர வேண்டும். எவ்வளவு சார்ஜ் ஆகும்?"

"ஒரு அங்குலத்திற்கு இருபது ரூபாய்"

"இறந்து போனவர் ஆறடி உயரம். அவ்வளவு செலவு செய்ய எனக்குக் கட்டாது."

***
[color][font]


அவள் : உங்க வீட்டில் வாஷிங்மெஷின் இருக்கா?

மற்றவள் : இருக்கார்.

[/font][/color]
***
[color][font]


நண்பர் (சினிமா தயாரிப்பாளரிடம்) : உங்க அஸிஸ்டண்ட் பொய்க் கணக்கு எழுதுவதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?

தயாரிப்பாளர்: கவர்ச்சி நடிகைக்கு புடவை வாங்கியதாக செலவு காட்டியிருந்தானே!

[/font][/color]
***
[color][font]


அவள்: இந்த ஆஸ்பத்திரியிலேதான் என் கணவரைப் பறி கொடுத்தேன்.

மற்றவள்: அடப்பாவமே! என்ன ஆச்சு? ஆபரேஷனில் இறந்து விட்டாரா?

அவள்: இல்லை. ஆஸ்பத்திரி நர்சோடு ஓடிப்போயிட்டார்.

[/font][/color]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 2:06 pm

திருடன்-1: ஒரு பெண் போலீஸ் என்னைக் கைது பண்ணிட்டாளேன்னு எனக்கு அவமானமா இருக்குடா...!
திருடன்-2:  இதிலென்னடா அவமானம்...?
திருடன்-1:  அவ என் மனைவிடா....

நன்றி லினோஜ் .டூ .
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சின்ன கடி சிரிப்புகள் ... - Page 3 Empty Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum