தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ! நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1

கல்விப் பூங்காவில்
சிந்தனைப் பூக்கள் !
நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
குமரன் பதிப்பகம் ,19 கண்ணதாசன் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .600017. விலை ரூபாய் 100.
நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .அவர்கள்
அரசுப்பணியில் செயலராக இருந்து கொண்டே இலக்கியப்பணியும் செய்து வருபவர் .முகத்தில் புன்னகையை எப்போதும் அணிந்திருக்கும் பண்பாளர் .அன்பாகப் பேசிடும் நல்லவர் .வல்லவர்.
இவரது முந்தைய நூல் உலகப்பொதுமறையான திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கமும் ஆங்கிலத்தில் எழுதி . ( முன்னாள் ) இந்தியாவின் முதற் குடிமகன் மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்றது .
நூல் ஆசிரியர் சுற்றுலாத்துறையின் ஆணையாளராக இருந்தபோது, மிகச் சிறந்த சிந்தனையாளர் வெ .இறையன்பு இ.ஆ .ப .அவர்கள் சுற்றுலாத்துறையின் செயலராக இருந்தார்கள் .இந்த இருவரின் காலம் சுற்றுலாத்துறையின் பொற்க்காலம் என்று சொல்லும்அளவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க பணிகள் செய்தார்கள் .தற்போது தமிழ் வளர்ச்சித் துறையின் செயலராக இருந்து தனி முத்திரை பதித்து வருகிறார்கள் .
இந்த நூலை ஆசிரியர் இனத்திற்கு காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம் .காரணம் இது கல்வி தொடர்பான விளக்க நூல் .
காணிக்கை !
"தியாக உணர்வுடன் உன்னதமான உலகை நிர்மாணிக்கும் சமுதாய சிற்பிகள் ஆசிரிய பெருமக்களுக்கு எனது ' சிந்தனைப் பூக்கள் ' காணிக்கை ."
இதனைப் படித்ததும் எனக்கு ஆசிரியர் இனத்திற்கு பெருமை சேர்த்து அவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் டாக்டர் இராதா கிருஷ்ணனும் ,எனது ஆசிரியர்களும் நினைவிற்கு வந்தார்கள் .
.
மதுரை காமராஜ் - அண்ணாமலை பல்கலைக் கழகங்களின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் எஸ் .வி .சிட்டிபாபு அவர்களின் அணிந்துரை கல்விப் பூங்காவின் வரவேற்பு தோரண வாயிலாக உள்ளது .
" கல்வியாளர்களுக்கும் மாணவச் செல்வங்களும் இந்நூலின் வழியாக நடந்தால் வெற்றி நிச்சயம் ."
இந்த நூலின் பயனைப் பறை சாற்றுவதாக உள்ளது .
நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .அவர்கள் என்னுரையில் மிகவும் தன்னடக்கமாக குறிப்பிட்டுள்ள வரிகள் மிக நன்று .
" இப்போதும் ஒரு மாணவன் நிலையிலிருந்துதான் இந்நூலை எழுதி யிருக்கிறேன் .'கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ' உங்கள் மீது வீசப்படும் அறிவுரைகள் அல்ல .. உங்களோடு பகிர்ந்து கொள்ளும் யதார்த்தமான ஆலோசனைகள் உங்கள் கருத்துகளையும் நான் வரவேற்கிறேன் ."
திருடர்களால் திருட முடியாதது .கொடுத்தாலும் குறையாதது என்ற சிறப்பை உடைய கல்வியின் மேன்மையை , நன்மையை விளக்கிடும் அற்புத நூல் . உலகப்பொதுமறையான திருக்குறள் , அவ்வையின் வரிகள் , மகாகவி பாரதியின் கவிதை வரிகள் ,புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதை வரிகள் ,ஜி .டி .நாயுடு சொன்னது வரை மேற்கோள் காட்டி மிக நன்றாக எழுதி உள்ளார்கள் .
5 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன .முதல் கட்டுரையை திருக்குறளுடன் தொடங்கி மாற்றுத் திறனாளிகளின் திறமையை எழுதி முடித்துள்ளார் . கல்வியின் சிறப்பை மிகச் சிறப்பாக உணர்த்தி உள்ளார் . பெரிய கட்டுரையில் பொருத்தமான மேற்கோள்கள் காட்டி எல்லோருக்கும் எளிதில் புரியும் வண்ணம் மிக எளிமையாகவும் இனிமையாகவும் எழுதி உள்ளார் .
" கல்வி என்பது அறிவை வளர்த்துக் கொள்வது மட்டுமல்ல மக்களின்
விழிப்புணர்வைத் தூண்டி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடையச் செய்து நற்பண்புகளை ஊட்டுவதாக அமைய வேண்டும் ."
உண்மைதான் .இன்றைய கல்வி மருத்துவர்களையும், பொறியாளர்களையும் தருகின்றது .ஆனால் நல்ல மனிதர்களைத் தரவில்லை .நற்பண்பு மிக்கவர்களாக கல்வியாளர்கள் திகழ வேண்டும். அதுதான் கல்வியின் பயன் .
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன கணியன் பூங்குன்றனாரின் கருத்தை வழி மொழிந்து எழுதியுள்ள கருத்துக்கள் மிக நன்று .
" சாதிப் பாகுபாடுகளால் சரிந்து விடாமல்
இன வேறுபாடுகளால் சிதறி விடாமல்
மத வேறுபாடுகளால் சிதைந்து விடாமல்
மொழிகளுக்கு அப்பாற்ப்பட்டு -எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்டு 'ஒரே மைந்த இனம் '- ' உலகம் ' ஒரு வீடு ' என்கிற உணர்வுகளால் ."
கல்விக்கூடத்தில் எந்தவித வேறுபாடும் காட்டாமல் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
இன்றைக்கு ஆசிரியர் மாணவர் உறவு சரியில்லை .தினந்தோறும்
செய்தித்தாளில் விரும்பத்தகாத செய்திகள் வந்த வண்ணமுள்ளன .
பள்ளி மாணவன் ஆசிரியைக் கொன்ற செய்தி . பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வரைக் கொன்ற செய்தி ,ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து மாணவ மாணவியர் தற்கொலை .இந்த நூல் படித்தால் இது பொன்ற செயல்கள் நடைபெறாது .ஆசிரியர்கள் மாணவர்கள் இருவரும் படிக்க வேண்டிய நூல் இது .ஆற்றுப்படுத்தும் நூல் .
கல்வி கற்றல் என்பது பதவி கிடைத்ததும் நேர்மையான வழியில் ஊதியமாக மாதாமாதம் வரும் .வருமானம் வரும் .வருமான தரும் அட்சயப் பாத்திரம்தான் கல்வி என்பதை, நூல் ஆசிரியர் முனைவர்
மூ .இராசாராம் இ .ஆ .ப அவர்களுக்கு ஆங்கிலப் புலமையும் இருப்பதால் சொல் விளையாட்டில் விளக்கி உள்ளார் .
" LEARNING - என்ற கற்றல் எனும் பொருள்படும் சொல்லில் உள்ள
' L' என்ற எழுத்தை நீக்கி விட்டால் , EARNING என்ற சொல் கிடைக்கும் .ஆம் ! ஒன்றைப் பற்றி நன்றாகக் கற்று விட்டால் , ஏற்ற ஊதியம் கிடைக்கும் அல்லவா ! "
குடியால் இன்றைக்கு சமுதாயம் சீரழிந்து வருவதை மனித நேய ஆர்வலர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை .குடியால் வன்முறை நிகழ்கின்றது .ஒழுக்கம் சிதைகின்றது .அதனைக் கண்டித்து குடி குடி கெடுக்கும் என்பதையும் நன்கு உணர்த்தி உள்ளார் .
போதை பழக்கம் !
போதை பழக்கம் சமுதாயத்தை சீரழிக்கும் தொற்று நோயாகப் பற்றிப் படர்ந்து வருகிறது .ஒழுக்கமும் பண்பாடும் உருக்குலையச் செய்கிறது. வயோதிகர்களை - வாலிபர்களை மட்டுமல்ல குமரப் பருவத்தையும் இந்தக் கொள்ளை நோய் தாக்கத் தொடங்கி விட்டது .மது அரக்கன் மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை .
போதைப் பழக்கத்தின் தீங்கை எழுதி மாணவர்களை நல் வழிப்படுத்தும் அறநெறிக் கருத்துக்களை எழுதி உள்ளார் .
'கல்வித் தத்துவங்கள் ' என்ற கட்டுரையில் பல்வேறு மலர்களில் தேன் சேகரிக்கும் தேனீயைப் போல பல்வேறு நூல்களில் இருந்து கல்வி தொடர்பான கருத்துக்களை சேகரித்து தொகுத்து வழங்கி உள்ளார். காந்தியடிகள் ,அறிஞர் அண்ணா ,கவியரசு கண்ணதாசன் ஆகியோர் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள் .தமிழ் இலக்கியத்தில் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள்.மேல் நாட்டு அறிஞர்கள் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள் யாவும் நூலில் உள்ளது .
கல்வியால் சிறப்படைந்த நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம்
இ .ஆ .ப அவர்கள் கல்விக்கு சிறப்பு செய்துள்ள நூல் .கல்வியாளர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் .
மிகச் சிறப்பாக, நேர்த்தியாக அச்சிட்ட குமரன் பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» TOWARDS QUALITY IN EDUCATINAL ADMINISTRATION ! DR.M.RAJARAM I.A.S. கல்வி நிர்வாகம் தரம் நோக்கி ! நூல் ஆசிரியர் முனைவர் மூ. இராசாராம் இ .ஆ .ப நூல் விமர்சனம், தமிழாக்கம் கவிஞர் இரா .இரவி !
» வெற்றிப் பூக்கள்! நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
» விற்பனைப் பூக்கள்! பாகம் 2. நூல் ஆசிரியர் : கவிஞர் எழில்வேந்தன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் !நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum