தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தாயுமானவரின் பரிபூரணானந்தத்தில் பிரபஞ்சக்கோட்பாடு ( ஆய்வு : முனைவர் ச.சந்திரா )

2 posters

Go down

தாயுமானவரின்  பரிபூரணானந்தத்தில்    பிரபஞ்சக்கோட்பாடு               ( ஆய்வு : முனைவர் ச.சந்திரா ) Empty தாயுமானவரின் பரிபூரணானந்தத்தில் பிரபஞ்சக்கோட்பாடு ( ஆய்வு : முனைவர் ச.சந்திரா )

Post by eraeravi Fri Dec 17, 2010 10:46 pm

தாயுமானவரின் பரிபூரணானந்தத்தில் பிரபஞ்சக்கோட்பாடு

( ஆய்வு : முனைவர் ச.சந்திரா )

முகவுரை :

அண்டத்தின்கண் ஞானிகள் பலர் அவதரித்து நல்மார்க்கங்களைப் போதித்துச் சென்றிருக்கின்றனர்.அவர்களுள் ஒருவரே பிரபஞ்சத் தத்துவத்தை ஆன்மீகத்தின் வழி தெளிவுறச் செய்த ஞான பண்டிதரான தாயுமான சுவாமிகள் ஆவார்.ஆன்மீக உணர்வை வெகுவாக விரவிக் கலக்காமல், அறிவாற்றலின் அடிப்படையில் படைக்கப்பட்ட நூலே பரிபூரணானந்தம் ஆகும்.பிரபஞ்சக்கோட்பாடு தாயுமானவரால் விரித்துரைக்கப்படும் தன்மையை ஆய்வுக்கட்டுரை பகர்கின்றது.

பிரபஞ்சக்கோட்பாடு :

இயற்கையின் கூறுகளான நிலம் ,நீர் ,தீ ,காற்று ,வான் ஐந்திற்கும் அப்பால் அவற்றை ஆட்டுவிக்கும் ஒன்றே கடவுள்.இந்தக் கொள்கைக்கு நிலைக்களனாக அமைவது பிரபஞ்சமும் அதில் வசிக்கும் ஜீவன்களும் ஆகும்.உயிர்வாழ் ஜீவன்களும் பிரபஞ்சமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. பிரபஞ்சம் பல்வேறு நட்சத்திரக் குடும்பங்களாக இருப்பினும் அதன் தலைமையான சூரியன் தனித்தியங்குவதோடு மட்டுமல்லாமல் , இதர கோள்களுடனும் இணைந்து இயங்கிவருகிறது.இதைப்போலவே மனிதனும் தனித்தும் கூட்டாகவும் இயங்கிவருகின்றான்.பிரபஞ்சம் -மனிதகுல ஒற்றுமைச் செயல்பாடு இவ்விதமாய் தாயுமானவரால் உணர்த்தப்படுகிறது.

ஆத்ம சொரூபமும் பிரகாசமும் :

ஆழியிலிருந்து, நீர் கண்ணுக்கு தெரியாத நிலையில் ஆவியாகி ,பின் மேகமாக உருமாறுகின்றது.பகலில் சூரியனையும் இரவில் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களையும் மறைத்துவிடுகிற இயல்பு அந்த மேகத்திற்கு வந்துவிடுகின்றது.நீர் தூய ஆவியாக இருந்த வேளையில் சூரிய சந்திரரை மறைக்கவில்லை.மேகமாக உருவெடுத்த போதுதான் பிரகாசம் நிறைந்த கோள்களையெல்லாம் மறைக்கின்றது.இந்த மேகத்திற்கு ஒப்பானதுதான் விருப்பு வெறுப்பு மிகுந்த மானிட மனம்.ஆத்ம சொரூபத்தில் தோன்றுகின்ற இம்மனித மனம் ஆத்மபிரகசத்தை அழித்துவிடுகின்றது.மனிதமனத்தையும் பிரபஞ்சத்தையும் ஒப்பிட்டு ' மனதற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் ' (பரி.10: 7) என்று பாடுகின்றார் தாயுமானவர். பஞ்சபூதங்களுள் ஒன்றான ஆகாயத்தையும் மனித ஜீவனையும் ஒப்பிட்டு இக்கருத்து அமைந்துள்ளது.

வெப்பமும் வேதனையும் :

உயிர்வாழ் ஜீவன்களுக்கு வெப்பம் இன்றியமையாதது என்பது வெளிப்படை.உயிரை ஓம்புதலும் உடல் வெப்பத்தைக் காத்தலும் இணைபிரியா ஒன்றாகவே இருந்து வருகின்றது.மிகைப்பட்ட வெப்பம் காய்ச்சலாக உருமாறி மனித உயிரையே போக்கிவிடும்.அதுபோலவே மிகைப்பட்ட ஆசைகளை மானிடர் கொள்ளின் வெப்ப நோயைப்பொல அவை பொருந்தாததாகி அவனைச்சீரழித்துவிடும்.இதனையே ' ஆசைக்கோர் அளவில்லை ' (பரி.10:1) என தாயுமானவர் உரைக்கின்றார்.பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பையும் மனிதனையும் இணைத்து இக்கருத்து சொல்லப்பட்டிருக்கின்றது.

வளர்ச்சியும் ஒடுக்கமும் :

உலகச் செயல்பாடுகள் அனைத்தும் ஆதர்ஷண சக்தியே !இப்பிரபஞ்சத்தில் வீசுகின்ற காற்றானது நெருப்பை வளர்க்கின்றது ;ஒடுக்கவும் செய்கின்றது.பிரபஞ்சத்தில் வசிக்கும் ஜீவன்களும் . ஜடப்பொருட்களும் இயங்குவதும் ஒடுங்குவதும் கடவுளின் செயல்பாட்டினாலேயாகும் .உயிர்கள் அறிந்து செய்கின்ற செயலும் ,அறியாமல் செய்கின்ற செயலும் முறையே வளர்ச்சிக்கும் ,ஒடுக்கத்திற்கும் காரணமாக அமைகின்றது.இதனையே ‘சந்ததமும் எனது செயல்’ (பரி .5:1 ) என்று பாடுகின்றார் தாயுமானவர்.இதில் பஞ்ச பூதங்க

ளுள் ஒன்றான காற்றையும் மனித செயல்பாடுகளையும் ஒப்புமைப்படுத்தி தாயுமானவர் உரைக்கின்றார்.

இயற்கையும் ஓசையும் :

இயற்கையினின்று இடைவிடாது ஓசை உருவாகிக் கொண்டேயிருக்கின்றது.ஓயாமல் இயங்குவதற்கே இயற்கை எனப் பெயர். ஓசையும் இயற்கையும் ஒருபொழுதும் பிரிக்க இயலாத அளவிற்கு ஒற்றுமையினையுடையவை.பிரபஞ்சம் முழுமைக்கும் அடிப்படையாய் இருக்கின்ற ஓசைக்கு ' நாதப் பிரம்மம் ' என்ற பெயருள்ளது.ஜடப்பொருட்கள் எல்லாம் சப்த சொரூபமே ! மனித ஜீவன்களின் செயல்பாடுகள் அனைத்தும் ஓசையுடனே நடக்கின்றன.உயிர்வாழ் மனித ஜீவன்கள் 'தெய்வ நாமா ' போன்ற நாதங்களை உச்சரித்து அவரவர் ஆத்ம சொரூபங்களை புதுப்பித்துக் கொள்கின்றனர்.இதனையே தாயுமானவர்

' நாதவடிவென்பர் ' ( பரி.6:3 ) என்கின்றார்.இதில் பஞ்ச பூதங்களுள் ஒன்றான நிலத்தையும் ஜீவன்களையும் இயைபுப்படுத்திக் கூறுகின்றார் தாயுமானவர்.

சிற்றலையும் பேரலையும் :

பிரபஞ்சத்தின் மேற்பரப்பில் நிலத்தைவிட நீர் மிகுதியாக உள்ளது.மேலும் அதிஆழமான பகுதியும் நீரிலுண்டு.இந்த விரிந்த நீர்ப்பரப்பு பேரலையாக உருவெடுத்து நிலத்தின்மீது , நெடுந்தூரத்திலிருந்து பயணிக்கத் தொடங்கி நிலத்தின்மீது வந்து விளையாட இயலும்.ஆயினும் அது பேரலையாக உருவெடுத்தும் சிரமம் அளிக்காது சிற்றலையாக கரையோடு விளையாடிக் கொண்டிருக்கின்றது.இறைவனும் இதைப்போல் ஆத்ம பக்தர்களுடன் சிறு சிறுவிளையாடல்களை வைத்துக் கொள்கின்றான்.இதனையே தாயுமானவர் 'ஆழாழி கரையின்றி நிற்கவில்லையோ ?' ( பரி.9 ; 1 ) என வினவுகின்றார்.இதில் பஞ்சபூதங்களுள் ஒன்றான நீரையும் மனிதகுலத்தையும் இணைத்துப் பாடுகின்றார் தாயுமானவர்.

ஜனனமும் மரணமும் :

பிரபஞ்ச நிகழ்வை 'ஒரு நாள் ' என்று குறிக்கின்ற வேளையில் அதில் பகலும் இரவும் அடங்கியிருக்கின்றன. அதேபோல் மனித உயிர்களின் 'ஜென்மம்' என்று சொல்லுகின்ற வேளையில் அதில் ஜனனமும் மரணமும் அடங்கிக் கிடக்கின்றன.எந்த ஜீவன் கர்மம் செய்யாமல் வாழ்வை நடத்துகின்றதோ அதற்கு அடுத்த ஜென்மம் என்பதில்லை.எந்த ஜீவனுக்கு 'கர்மா' இருக்கிறதோ அதற்கு ஜனன மரணம் இடைவிடாது நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.இந்நிகழ்வு பகல்-இரவு மாறி மாறி தொடர்வதைப் போன்றது என்கிறார் தாயுமானவர்.இதையே 'தொடு வழக்காய் ஜென்மம் வருமோ' ( பரி .5 ;-6 ) என்னும் அடிகள் உணர்த்துகின்றன.இதில் பிரபஞ்சத்தின் தொடர் நிகழ்வும் மனித வாழ்வின் இருவேறு பெரு நிலைகளும் இணைத்துப் பேசப்படுகின்றது.

அண்டமும் பகிரண்டமும் :

நமக்கு கட்புலனாகும் சூரியன் ,சந்திரன் ,பூமி போன்ற இயற்கை உருவாக்கங்கள் அகன்று பரந்து விரிந்துள்ளன.ஓர் உள்ளங்கை அளவு

நீர் போன்றது பிரபஞ்சம்.நம் அறிவுக்கு எட்டாத பகுதி கடல்நீர் அளவானதாகும்.உள்ளங்கை நீரைத் தெரிந்து கொண்டால் கடல்நீர் முழுமையும் தெரிந்து கொண்டதற்கு ஒப்பானதாகும்.அதேபோல் பிரபஞ்சத்திற்கு கட்புலனாகும் பகுதியெல்லாம் தெரிந்து கொண்டால் ,நமக்கு கட்புலனாகாத பெருந்தொகுதி பற்றி அறிந்து கொள்ள இயலும்.பிரபஞ்சத்தின் தொகைக்கு 'அண்டம்' என்று பெயர்.இதற்கு அப்பாலிருக்கின்ற அனந்தகோடி பகுதிகள் கணக்கிட இயலா நிலையில் உள்ளன.இவற்றிற்கு 'பகிரண்டம் ' எனப் பெயர்.இவையனைத்தும் மாயா விகாரமே என்பதனையே 'அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே ' (பரி.4;1 ) என்னும் அடி விளக்குகின்றது.ஒருசிலவற்றை தெரிந்து கொள்வதன் மூலம் மனித குலம் பலவற்றை அறிய இயலும் என்பதனை பிரபஞ்சத்தோடு ஒப்புமைப் படுத்திப் பாடியுள்ளார் தாயுமானவர்.

ஸ்தூலமும் சூட்சுமமும் :

பிரபஞ்சத்திலிருக்கும் ஐம்பூதஙகளும் ஒன்று மற்றொன்றை பரிணமிக்கவல்லது.அவ்விதம் பரிணமித்தபின் மீண்டும் தன் முந்திய நிலைக்கு ஒடுங்கிப் போவதுண்டு. பூதங்களுள் மிக சூட்சுமமமான ஆகாயவெளி எங்கும் வியாபகமாயிருக்கின்றது ; அந்த வெளியிலிருந்து வாயு உருவாகின்றது ; நெருப்பானது வாயுவிலிருந்து வருகின்றது ; நீர் உண்டாக நெருப்பு துணையாகின்றது.இவையனைத்தும் நிலத்திலே நிகழ்கின்றது.சூரியனிடத்திலிருந்து சிதறிய பூமி நீராகவும் ,நிலமாகவும் அமைகின்றது. அது விரிந்தபின் வெப்பத்தில் ஒடுங்குகின்றது.வெப்பம் காற்றில் ஒடுங்குகின்றது.காற்று வெட்டவெளியில் மறைகின்றது.ஸ்தூலமாயிருக்கும் பூதம் இவ்வாறு சூட்சுமமாக மாறுகின்றது.மனித வாழ்வும் இது போன்றதுதான்.நிலையானது என்று எண்ணுகின்ற மனித வாழ்க்கை நிலையற்றதாக மாறிவிடுகின்றது.இதனையே தாயுமானவர் 'பூதலயமாகின்ற மாயை ' (பரி.6 ; 1 ) எனக்கூறுகின்றார்.ஐம்பூதங்கள் ஒன்றுக்குள் ஒன்று அடங்கி ஒடுங்குவது போல்தான் மனித வாழ்வும் அடங்கியொடுங்கும் என்ற கருத்தே இதன்வழி உரைக்கப்பட்டுள்ளது.

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் :

பஞ்சபூதங்கள் பரம்பொருளிடத்து தோன்றி வந்தவைகளே ! ஜீவன் தன்னை , அறிவுப் பொருளாக உணர அவனுடைய அறிவுக்கு மூலமாயிருப்பது பரம்பொருளின் பேரறிவாகும். ஓருயிர் மற்றோர் உயிருக்கு அந்நியமானது என மனிதன் எண்ணுகின்றான்.அந்த எண்ணத்திற்கு மாறாக 'எந்த நிலையிலும் ஜீவன் பரமாத்மாவிற்கு அந்நியமானவன் அல்லன் ' என்பது குறித்தே தாயுமானவரின் பரிபூரணாந்தத்தில் சொல்லப்பட்டுள்ளது.தாயுமானவர் தான் சொல்லவந்த கருத்தை பிரபஞ்சத்தோடு ஒப்பிட்டு சொன்ன தன்மை சிறப்புடையதாகும். 'யான் எனும் தன்மை நின்னையன்றி இல்லாத தன்மையால் வேறு அல்லேன். ' (பரி.5;1 -2 ) என்னும் அடிகள் மேற்குறிப்பிட்டனவற்றை விளக்குகின்றன.

நிறைவுரை :

பிரபஞ்சம் எவ்விதமாக சமநிலையில் இயங்கி ஒன்றுக்கொன்று மாறுபடாமல் எப்பொழுதும் செயல்பாட்டு நிலையில் உலகை இயக்குகின்றதோ அதுபோல் மானிட ஜீவன்கள் வாழ்வில் நேரிடும் இன்பதுன்பங்களை ஒன்றாக பாவித்து சமமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.பிரபஞ்சத்தையும் மனிதகுல வாழ்வையும் ஒப்பிட்டு பரிபூரணானந்தத்தை அருளிய தாயுமான சுவாமிகளின் மார்க்கத்தை பின்பற்றிச் செல்லும் வேளையில் நம்மோடு நம் சார்ந்தோரும் நலம் பெறுவர் என்பதில் ஏதேனும் ஐயமுண்டோ ?
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

தாயுமானவரின்  பரிபூரணானந்தத்தில்    பிரபஞ்சக்கோட்பாடு               ( ஆய்வு : முனைவர் ச.சந்திரா ) Empty Re: தாயுமானவரின் பரிபூரணானந்தத்தில் பிரபஞ்சக்கோட்பாடு ( ஆய்வு : முனைவர் ச.சந்திரா )

Post by siva1984 Fri Dec 17, 2010 11:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
siva1984
siva1984
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 221
Join date : 14/11/2010
Age : 40
Location : காரைதீவு.இலங்கை

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் ஹைக்கூ ஆயிரம்-தொகுப்பாசிரியர் முனைவர் இரா.மோகன்.மதிப்புரை: முனைவர் ச.சந்திரா
» நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன் திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
» சேலை - முனைவர் சந்திரா
» ஹைக்கூவிற்குள் ஹைக்கூ - முனைவர் .ச.சந்திரா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum