தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப .
Page 1 of 1
'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப .
'ஆயிரம் ஹைக்கூ'
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப .
------------------------------------------------------------------------------------------
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
இதயத்தில் சிந்தனையோட்டத்தை ஏற்படுத்தும் கவிதைகள் !*****
எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பவர் இரா. இரவி. அவரிடம் எந்தப் பணியைக் கொடுத்தாலும் அதை உடனே செய்து முடிக்கும் தகைமை பெற்றவர். அவரை நாங்கள் 'புலிப்பால் இரவி' என்று அழைப்பதுண்டு. சமூக அக்கறையும் தாய்மொழிப்பற்றும் நிரம்பப் பெற்றவர். பகுத்தறிவுவாதி. ஹைக்கூ என்னும் வடிவத்தைக் கொண்டு பல விதங்களில் பங்களிப்பைச் செலுத்தி வருகிறார்.
அவருடைய 'ஆயிரம் ஹைக்கூ' என்கிற நூல் பலவிதமான காலங்களில் இருக்கும் நுட்பங்களை வகுத்துத் தந்திருக்கிறது. அந்நிய மொழியின் மோகம் அதிகம் நிரம்பப் பெற்றவனும் அடிபடுகிறபோது 'அம்மா' என்றே அலறுகிறான். காரணம் தாய்மொழி ஆழ்மனத்திலிருந்து வருகிறது. ஆங்கிலம் மேல் மனத்திலிருந்து முளைக்கிறது. அதை இரவி அழகாக சுட்டிக் காட்டுகிறார்.
தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
'அம்மா' !
அதைப் போலவே சிலேடையாக எதார்த்தங்களை அவருடைய கவிதை சுட்டிக் காட்டுகிறது.
காசு கரியானது தீபாவளி
கரி காசானது
நெய்வேலி !
சுற்றுலாவைப் பற்றி அத்துறையில் அமிழ்ந்து பணியாற்றும் இரவியின் ஹைக்கூ. இதில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்கல்ல. அது பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கும் அறிய வாய்ப்பு. நம்மிடம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் உயரிய அனுபவம். அதிக நாடுகள் பயனப்பட்டவன் முதிர்ச்சி அடைகிறான். பட்டறிவால் பக்குவப்படுத்திக் கொள்கிறான். தொடர்ந்து கற்கிறான். உலக மனிதர்கள் அனைவரும் நம்மைப் போன்றவர்கள் என்கிற பரந்த மனப்பான்மையைப் பற்று வைக்கிறான்.
முட்டாளை அறிவாளியாக்கும்
அறிவாளியை மேதையக்கும்
சுற்றுலா !
குற்ற உணர்வுள்ளவர்கள் தங்கள் பாவத்திற்குப் பரிகாரம் தேட கோயில்களுக்குத் திருப்பணி செய்வதையும், உண்டியல்களில் திருட்டுத்தனமாகச் சேர்த்த பணத்தைப் போட்டு கடவுளையும் பங்குதாரராகச் சேர்ப்பதையும் இரவி நையாண்டி செய்கிறார்.
கறுப்புப் பணம்
வெள்ளையானது
உண்டியல் வசூல் !
வீடு மாறும்போதே எதையோ இழந்தது போன்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. பழகிய வீட்டை விட்டுப் பிரிகிற போது நமக்குள் உள்ள எதோ ஒன்று கொஞ்சம் இழந்து போவதைப் போன்ற எண்ணம் ஏற்படுகிறது. அந்த அனுபவத்தைப் புலம் பெயர்ந்தோருடைய வலியோடு ஒப்பிட்டு இரவி நமக்கு உணர்த்துகிறார்.
வீடு மாறிய போது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி !
தூக்குத் தண்டனைக்கு எதிராக இரவியின் பார்வை ஆழமாகப் பதிகிறது. அவை பற்றிய கருத்துக்கள் பல்வேறாக இருப்பினும் அவருடைய பார்வை சிந்திக்கத்தக்கதாக இருப்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு சிந்தனையைத் தூண்டுவது தான் ஒரு நல்ல கவிதையின் வேலை.
கொலை செய்தவனை
கொலை செய்தது அரசு
தூக்குத்தண்டனை !
இயற்கை குறித்த இரவியின் பார்வைகளும் நேசிப்புக்குரியன. பனித்துளிக்காகவும் அவருடைய நெஞ்சம் பரிதாபப்படுகிறது.
விடிய விடியத் தவம்
விடிந்ததும் மரணம்
மலரில் பனித்துளி !
அவருடைய கவிதைகள் தத்துவை பார்வையையும் உள்ளடக்கியதாக மலர்ந்திருக்கின்றன. இயற்கையின் எல்லா பிரிவுகளும் ஐக்கியத்தை அடையாளப்படுத்துவனவாக இருக்கின்றன. இலைகள் மரத்தின் பாதத்திலேயே விழுந்து அது செழிக்க உரமாகி உதவுகின்றன.
மரத்திற்கு
உரமானது
உதிர்ந்த இலை !
மென்மையான உணர்வுகளும் இரவியின் குரும்பாக்களில் தெறிக்கின்றன. காதலைப் பற்றியும் அவர் கணிசமான கவிதைகளை எழுதித் தள்ளுகிறார்.
புவிஈர்ப்புச் சக்தியை
விஞ்சிடும் அவள்
விழிஈர்ப்புச் சக்தி !
வாழைஇலையில் உண்பது உணவின் சுவையை அதிகப்படுத்துகிறது. இயற்கை பாழ்படாத சுற்றுச்சூழலுக்கு உகந்த தட்டாய் இருப்பது வாழையிலை. தண்ணீரின் தேவையையும் குறைக்கிறது. மக்கி மண்ணுக்கு எருவாகவும் மாறுகிறது. வாழைஇலையைப் பற்றி இரவி எழுதியிருக்கிறார்.
கூடியது சுவை
இலையில் இட்ட
உணவு !
இரவியின் பேனா மையை மட்டுமல்ல. கோபத்தையும் சில இடங்களில் கக்கியிருக்கிறது.
கட்டைவிரல் கேட்ட
நாக்கை வெட்டினான்
நவீன ஏகலைவன் !
கவிதை நூல் முழுவதும் சமூக அக்கறையும் சகோதரத்துவமும், எளியவர்களுக்கான குரலும் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நூல் அனைவராலும் வாசிக்கப்படும். அவர்கள் இதயத்தில் மிகப் பெரிய சிந்தனையோட்டத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். கவிஞர் இரா. இரவிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» 'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர் கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் !
» எனது ஹைக்கூ... நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ச. தமிழரசன் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் !
» ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !
» ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,
» எனது ஹைக்கூ... நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ச. தமிழரசன் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் !
» ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !
» ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum