தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில ரெசிபீஸ்
Page 1 of 1
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில ரெசிபீஸ்
ப்ரூட்- நட்ஸ் சாலட்
-
தேவையானவை:
வாழைப்பழம் - 1, ஆப்பிள் - 1, மாம்பழம் - அரைபாகம், பலாச்சுளை - 2, பைனாப்பிள் - 1 துண்டு, ஆரஞ்சு - 1, சாத்துக்குடி - 1, கறுப்பு திராட்சி - 10, பச்சை திராட்சை - 10, பேரீச்சம்பழம் - 2, கிஸ்மிஸ் பழம் - 20, வறுத்த முந்திரி - 10, பாதாம் - 5, பிஸ்தா - 10, சாரைப்பருப்பு - 1 டீஸ்பூன், செம்மாதுளை முத்துக்கள் - 1 டேபிள் ஸ்பூன், பால் - 1 லிட்டர், கஸ்டர்ட் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன், பழ எசன்ஸ் (தேவைப்பட்டால்) - 3 சொட்டு, ஐஸ்க்ரீம் - 2 ஸ்கூப் (வனிலா/பட்டர் ஸ்காட்ச்), செர்ரி - 10 (அலங்கரிக்க). ஃப்ரூட் டின் மற்றும் மில்க் மெய்ட் கிடைத்தால் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
-
செய்முறை:
பாலைக் காய்ச்சவும். அதில் ஒரு கப் எடுத்து ஆற வைத்து கஸ்டர்ட் பவுடரைக் கலந்து திரும்ப கொதிக்கும் பாலில் ஊற்றிக் கிண்டவும், சர்க்கரையையும் சேர்த்துக் கரைத்து திக்காகிக் கொதிக்கும்போது இறக்கி வைத்து ஆற விடவும்.
-
கலவை 1:
பேரீச்சம்பழங்களைப் பொடியாக நறுக்கவும். முந்திரியை நான்காக ஒடிக்கவும், பாதாம் பருப்புக்களை வெந்நீரில் ஊற வைத்துத் தோல் உரித்து சீய்த்துக் கொள்ளவும். பிஸ்தாக்களின் தோலை உரித்துக் கொள்ளவும், பேரீச்சை, கிஸ்மிஸ், பிஸ்தா, பாதாம், முந்திரி, சாரைப் பருப்பு, செம்மாதுளை முத்துக்கள் இவைகளைக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
-
கலவை 2:
ஆரஞ்சு, சாத்துக்குடி தோல், விதை நீக்கி சுளைகளாக எடுத்துக் கொள்ளவும், திராட்சிகளின் விதைகளை நீக்கவும், பைனாப்பிளை சின்னத் துண்டுகள் செய்யவும். ஐந்தையும் சிறிது சர்க்கரை தூவிப் புரட்டி வைத்துக் கொள்ளவும்.
கலவை 3: இதை சாப்பிடுவதற்கு சிறிது முன்னால் தயார் செய்யவும். வாழைப்பழத்தைத் தோலுரித்து சிறிது துண்டுகளாக வெட்டவும். ஆப்பிளைத் தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும். மாம்பழத்தை பெரிய துண்டுகளாக வெட்டவும். பாலச்சுளையை கொட்டை நீக்கி சதுரங்களாக வெட்டவும். அனைத்தையும் கலந்து கொள்ளவும்.
-
சாப்பிட ஒரு மணி நேரம் முன்பு காய்ச்சி வைத்திருக்கும் கஸ்டர்டில் கலவை 3யை சேர்க்கவும். கலந்து ஃபிரிட்ஜில் வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்து கலவை 2யை சேர்க்கவும். நன்கு கலந்து ஃபிரிட்ஜில் வைக்கவும். தேவைப்பட்டால் பழ எசன்ஸ் சேர்க்கவும்.
-
பரிமாறும் முன்பு கப்புகளில் இந்தப் பழக்கலவை ஒரு பெரிய கரண்டி வைத்து அதன் மேல் கலவை 1 இல் உள்ளதை ஒரு ஸ்பூன் தூவவும். ஐஸ்கிரீம் ஒரு ஸ்பூன் வைத்து செர்ரியை அதன் மேல் வைத்து அலங்கரித்துக் கொடுக்கவும்.
-
-----------------------------------------
முளைவிட்ட பயிறு சாலட்
தேவையானவை: முளை விட்ட பச்சைப் பயிறு - 1 கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 1, தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லி - 1 கைப்பிடி, மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன, உப்பு 1/3 டீஸ்பூன், (தேவைப்பட்டால் ருசிக்கு பொரி - 2 கைப்பிடி மற்றும் காராபூந்தி அல்லது ஓமப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்)
செய்முறை: பச்சைப் பயிறை ஆவியில் 3 நிமிடம் வேகவிடவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். தேவையான உப்பு, தக்காளி சாஸ், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்துமல்லியைத் தூவிப் பரிமாறவும்.
ருசிக்கு பொரியும் ஓமப்பொடி/காராபூந்தியும் கலந்து கொடுக்கலாம். பரிமாறும் முன்புதான் இவற்றைச் சேர்க்க வேண்டும்.
ஃப்ரூட் சாலட்
தேவையானவை: தர்ப்பூசணி - 1 துண்டு, மஞ்சள் கிர்ணி - 1, பப்பாளி - பாதி, கொய்யா - 1, வாழைப்பழம் - 2, சாட் மசாலா - 1 டீஸ்பூன்.
செய்முறை: தர்ப்பூசணி, கிர்ணி, பப்பாளி, வாழைப்பழத்தின் தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கொய்யாவையும், நறுக்கி, அனைத்தையும் சாட் மசாலாவைத் தூவிக் கொடுக்கவும்.
குக்னி சாலட்
தேவையானவை: குக்னி (பெரிய வெள்ளரிக்காய்) - 1, காரட் - 1 சிறிது, வெங்காயம் - 1/2, தக்காளி - 1/2 (விதையில்லாமல்), பச்சை மிளகாய் - 1, கொத்துமல்லி - 1 கைப்பிடி, தயிர் - 2 கப், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: குக்னியைத்தோலுரித்துப பொடியாக அரியவும். காரட், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயையும் பொடியாக அரியவும். இதில் தயிரையும் உப்பையும் கலந்து ஊறவைத்துக் கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.
மின்ட் மிக்ஸட் சாலட்
-
தேவையானவை: வேகவைத்த உருளைக்கிழங்கு - 1, வேகவைத்த காலிஃப்ளவர் பூக்கள் - 15 துண்டுகள், தயிர் - 1 கப், (புளிப்பில்லாதது), புதினா - 1 கைப்பிடி, கொத்துமல்லி - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, உப்பு - தேவைக்கேற்ப, எலுமிச்சை சாறு - சில துளிகள்.
செய்முறை: புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாயை உப்பு சேர்த்து தயிரோடு அரைத்து எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
உருளைக்கிழங்கை சதுரத் துண்டுகளாக்கவும். ஒரு பவுலில் உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் பூக்களை மாற்றி மாற்றி அடுக்கி மிண்ட் மிக்ஸை ஊற்றிப் பரிமாறவும்.
-
----------------------------------
- தேனம்மை லெட்சுமணன்
நன்றி: குமுதம் பக்தி செய்திகள்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» தினசரி ஆர்கசம்-உடலுக்கு ஆரோக்கியம்
» உடலுக்கு ஆரோக்கியம் தரும் மன ஓய்வு!
» ஆரோக்கியம் தரும் பச்சடிகள்
» படிப்பினைகள் தரக்கூடிய குர்ஆன்,ஹதீ்ஸ்கள்
» தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்! – தேனம்மை லட்சுமணன்
» உடலுக்கு ஆரோக்கியம் தரும் மன ஓய்வு!
» ஆரோக்கியம் தரும் பச்சடிகள்
» படிப்பினைகள் தரக்கூடிய குர்ஆன்,ஹதீ்ஸ்கள்
» தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்! – தேனம்மை லட்சுமணன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum